கலீல் ஜிப்ரான் - ஆத்மஞானம் -விருட்சம் இதழ் 15/11/25
14/11/25 அன்று இணையக்கவியரங்கில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை 1
மனிதன் கேட்கிறான்
ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்
அவர் சொன்ன விடை
பகல் இரவின் அந்தரங்கங்களை
உங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்
ஆத்ம ஞானம் பற்றிக் கேட்க
உங்கள் செவி விடாய்
பெற்றிருக்கும்
சிந்தனை செறிந்த
அச்சொற்களை நீங்கள்
அறிவீர்கள் அக்கனவின்
நிர்வாணக் கனவுகளை
உங்கள் விரல்கள் ஸ்பரிசிக்கலாம் நிச்சயமாக
ஆன்ம ஊற்று எழ விழையும் சிற்றுருமல்
சாதிக்கும் கடல் நோக்கி
ஓடும் ஆழம் காணமுடியா ஆன்மக்கருவூலம்
கண்களே அறியும்.
அறியமுடியாச் செல்வத்தை எது கொண்டு அளப்பது
கம்போ அல்லது வேறு ஒரு கருவி கொண்டோ
அளவிட விழைவாயோ
கங்கு கரை காண முடியா அளப்பரியா
ஆன்மக்கடல்
உண்மையை அறிந்தேன்
சொல்லாதே அப்படி
உண்மையொன்று தெரிந்ததாய்ச்சொல்
ஆன்மாவின் பாதையைக்கண்டதாய்ச்
சொல்லாதே ஆன்மா
நின்வழி நடை பயில்வது
கண்டதாய்ச்சொல்
ஆன்மா எத்தடத்திலும்
பயணிக்கும்
ஆன்மா கோடுவரைந்து
பயணிக்காது
ஒரு செடியின் தண்டென
நீட்டமாய் வளராது
எண்ணிலடங்கா இதழ்கள் போர்த்திய
ஓர் தாமரைப்பூ
தன்னில் மலர்வதே ஆன்மா.