Monday, February 8, 2021

திரு நாடு

 


 

திரு நாடு     

 

 

காசு வேண்டுமென்றோ

கவுரவம் வேண்டுமென்றோ

காட்சிகள்  காணத்தான் வேண்டுமென்றோ

விமானமேறி

வெளி நாடு போனவர்கள்

நொந்து கிடக்கிறார்களங்கே

உலகெங்கும் பெருந்தொற்று

பிணைக்கைதியாய்க்கிடக்கிறான்

மனிதன் அங்கங்கு

பாரத நாடு தடுப்பூசியை

உலகெங்கும் அனுப்பி அனுப்பி

புகழ் மலையெனக்கூடுகிறது

விரல்விட்டெண்ண

உலக அரங்கில்

வேறு நாடேது

இலவசமாய் மருந்தனுப்பி

தானே மனித இனக்காவலன்

அறிவிக்கிறது பாரதம்

காட்டு மிராண்டிகளென தூற்றியவர்கள்

திரும்பிப்பார்க்கிறார்கள்

இப்படியுமா ஒரு திருநாடு.

-----------------------------------

 

 


No comments:

Post a Comment