எஸ்ஸார்சி/கவியுளம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
கடலூரில் இலக்கியப்பெருமன்றக்
கவிதைமாலைப்பெரு விழா
ஞானக்கூத்தன் தலைமை
பெருமன்றச் சிவப்பு மேடையில் ஞானக்கூத்தன்
எப்படிச்சாத்தியம் எல்லோர்க்கும் ஆச்சரியம்
கவிதைகள் படித்தனர்
கடலூர்க் கவிஞர்கள்.
கவி ஜி.ஜெ வாசித்தார்’ நண்டு’ கவிதை
உழவர்க்குத்தோழனாம் நண்டு அதுவே
சிறப்பென்றார் ஞானக்கூத்தன்
இவர்க்கு நண்டு பிடித்ததெப்படி?
பேசிக்கொண்டனர் கவியரங்கக் கவிஞர்கள்
கவிஞர் ’கவிதை வான்’ பற்றிப் பேசினார்
‘வடமொழி அறியத் தமிழ்க்கவிதை சிறக்கும்
கம்பனை பாரதியை விஞ்சினார் உண்டோ?
முடித்துக்கொண்டார் ஞானக்கூத்தன்.
கூட்டம் கலைந்து போனது அமைதியாய்.
கவிஞர் உரைத்ததுதான்
கரைய மறுக்கிறது இன்னும்.
No comments:
Post a Comment