Tuesday, December 5, 2023

கவிதை- வெர்டிகோ

 

வெர்டிகோ/எஸ்ஸார்சி

இணையக் கால கவியரங்கம்2/12/2023

அது அதுவும் பட்டால்தான்
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
நடந்தால் தள்ளுகிறது
வாய் உமட்டுகிறது
ஏன் வருகிறது வெர்டிகோ
எப்போது போகுமிது
எதுவும் யாருக்கும் தெரியாது
மனிதனைச்சித்திரவதைக்கு
உள்ளாக்கி
கட்டிப்போடு
ம்
நோய்
வெர்டிகோ அன்றிவேறில்லை.
தமிழில் இதற்கு என்னபெயரோ
எந்த மொழி ஆனால் என்ன
வலிக்கும் நோவுக்கும்
ஒரேபாஷை
ஆளுக்கொன்றாய் வைத்தியம் சொல்கிறார்கள்
பாடாய்ப் படுகிறேன் நான்.

No comments:

Post a Comment