Monday, July 23, 2018
Thursday, May 31, 2018
PARUVAM -PAAVANNAN 9
9 பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்.
எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன்
.மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்குக்கொண்டு தந்தவர்.
ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம் இன்னும் இப்படி எத்தனையோ.
பைரப்பாவின் 'பருவம்' பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில் அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, இவை இவை பருவத்தில் வாசகனுக்கு ஒருங்கே அனுபவமாகிறது.
பைரப்பாவின் பருவம் மகாபாரதப்பெரும்போரை மையமாகவைத்துக்கற்பனையாகப்புனையப்பட்டது..
பைரப்பா மகாபாரததின் அரிய நிகழ்வுகளை தனக்கே உரிய கண்ணோட்டத்துடன் தொட்டுப்பேசுகிறார்.மகாபாரத்தின் நிகழ்விடங்களுக்கு எல்லாம் தானே நேராகச்சென்று பார்வையிட்டு,அங்கு வாழ்கின்ற மக்களோடு பேசி உறவாடி,அங்கு நிலவும் பூகோள அமைப்போடு ஒன்றிப்பயணித்து த்தன் அனுபவ சாகசங்களைப் 'பருவம்' வழி நம்மோடு பைரப்பா பகிர்ந்துகொள்கிறார்.மாபாரதத்தின் கால விதானத்திற்கே வாசகனை அழைத்துச்சென்று அந்தப்பாத்திரங்களிடையே அமர வைத்து அலாதி பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
சாகித்ய அக்காதெமி இதன் தமிழ் வடிவத்தை பாவண்ணன் என்னும் மொழித்திறனாளியின் கடுமையான உழைப்பில் நேர்த்தியாகக்கொண்டுவந்திருக்கிறது. இந்நூல் 'பருவம்' குறித்து இப்படிப்பேசித்தொடங்கி வைக்கிறது.
'மகாபாரதக்கதையில் காணப்படும் போர்-அமைதி,அன்பு-இறப்பு,மனிதன்-கடவுள் ஆகியவற்றை மையமாகக்கொண்ட புகழ்பெற்ற கன்னட நாவல்'.
பைரப்பா இப்படைப்பை இளம் வயதிலேயே மறைந்துபோன தன் தாயுக்கு சமர்ப்பித்துப்பெருமை சேர்க்கிறார்.ஜைமினியின் காவியத்தை, குமார வியாசத்தை ஆழ்ந்து கற்ற அந்தத்தாய் 'கௌரம்மா'கேழ்வரகுக்களியோடு குழந்தை பைரப்பாவுக்கு இலக்கிய ரசனையையும் சேர்த்து ஊட்டி வளர்த்திருப்பதை சமர்ப்பணம் என்னும் பகுதியில் குறிப்பிட்டு அந்த ஞானப்பெண்மைக்கு ப்பெருமை கூட்டுகிறார்.வீர சிவாஜியின் தாயொடு வைத்து எண்ணத்தக்கவர் பைரப்பாவின் அன்னை கௌரம்மா.
'மூல நூலான வியாசபாரதத்தை ஒருமுறை முழுக்கவும் படித்தபிறகு வேதகாலத்தின் இறுதிபகுதியில் நிலவிய பொருளாதார,சமூக,அரசியல் நிளைகளைப்பற்றியும் சமய நிலைகளைப்பற்றியும் தீவிரமாக ஆய்வுசெய்தேன்'
'மகாபாரததோடு தொடர்புடைய இமயமலைப்பகுதியில் சில காலம் தங்கி இருந்தேன்'
'துவாரகை,ஆரவல்லி மலைத்தொடர்கள்,விராட நகரம்,மதுரா,தில்லி,குருக்ஷேத்ரம்,அஸ்தினாவதி,பர்நாவம்,சக்கர நகரம்,ராஜகிரி ஆகிய இடங்களில் மேலும் பயணம் மேற்கொண்டேன்.ஆய்வுகள் நிகழ்த்தினேன்.'
இப்படிப் பாரதக்கதை நிகழ்ந்த மண்ணோடும் மக்களோடும் நேராகச்சென்றுப்பழகி அனேகவிஷயங்கள் கற்றுக்கொண்டதாக பைரப்பா தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஒரு முக்கியமான செய்தி. பைரப்பா அவர் ஒன்றும் மகாபாரதக்கதையை மீண்டும் எழுதிட 'பர்வம்' என்னும் புதினத்தைத்தொடங்கவில்லை.பைரப்பாவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் இப்படிச்சொல்லலாம்.
'மகாபாரதப்பாத்திரங்களின் கதையை நான் எழுதவில்லை.மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள்,உணர்வுகள்,உறவுகள்,முரண்கள் பற்றிய பிரக்ஞை,இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை இருந்தது.
சிற்சில இடங்களில் ஒன்றிரெண்டு புதிய பாத்திரங்களைச்சேர்க்கும்போதும்,சிற்சில சம்பவங்களைச்சேர்க்கும்போதும் நாவலின் பரிமாணம் பெருகியது.....'
தூதனாக வந்த கிருஷ்ணனிடம் துரியோதனன் பேசியவார்த்தைகள் விதைகளாக வெடித்துச்சிதறி குந்தியின் மனக்கனலை வளர்த்து நிற்கின்றது.குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாதுரியும் பெற்ற பிள்ளைகள் யார்?துர்யோதனன் சொல்கிறான்.'பாண்டவர்களில் யாருமேஅவர்களுடைய அப்பாவுக்குப்பிறந்தவர்கள் அல்லர்.அவர்களைப்பாண்டவர்கள் என்று கூப்பிடக்கூட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.இந்த வம்சத்தையே சேராதாவர்களுக்கு அநியாயமாக இந்த ராஜ்யத்தில் பங்கு கொடுத்தீர்கள்.அந்த அநியாயத்தை,அவர்களைச்சூதில் வென்று சரிசெய்தேன்.'
பாண்டவர்கள் ஐவருமே நியோக முறையில் பிறந்தவர்கள்.நியோக முறையில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை அங்கீகாரம் செய்த சமுதாயம் அன்றிருந்தது.அதனை பைரப்பா அழகாகச்சொல்லிப்போகிறார்.'கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது அல்லது குழந்தைகள் இல்லாமலேயே அவன் இறந்துபோகும்போது அவனுடையவம்சம் வளர்வதற்காக,அவன் மனைவிக்கு இன்னொரு ஆண்மகனுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். அவள் தான் கருவுற்றது உறுதிப்படும் வரை அந்த ஆடவனோடு சேர்ந்து இருக்கவேண்டும்.பிறகு அந்த ஆண்மகனைத் தன் தந்தையாக பாவித்துக்கொள்ளவேண்டும். அவனோடு சம்போகிக்கின்ற தருணம் அவள் தன் உண்மையான கணவணைப்பற்றிய நினைவோடு மட்டுமே இருக்கவேண்டும்.இச்சம்போகம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே என்கிற.இந்த எண்ணமே அவள் மனதில் நிறைவாக இருத்தல் வேண்டும்.இதுவே நியோக முறை
மா.பாரதத்து குந்தியும் மாதுரியும் இப்படித்தான் குழந்தைகளைப்பெற்றுக்கொள்கிறார்கள்.
குந்திதேவி தேவர்(ஒரு இனம்)களின் தர்மராஜனோடு புணர்ந்து ஒரு குழந்தைக்குத்தாயாகிறாள். குந்தியின் கணவன் பாண்டு இதற்கான சகல ஏற்பாடுகளையும் சிரத்தையோடு செய்து நிற்கிறான்.விதைத்துவிட்டு ச்செல்பவன் விடைபெற்றுக்கொள்கிறான்.பாண்டு தன் மனைவி குந்தியை அழைத்து அந்த தர்மராஜனுக்கு வணங்கச்சொல்கிறான்.குந்தி தான் ஒரு மகள் என இப்போது அதே விருந்தாளியிடம் ஆசி பெறுகிறாள். அப்படி குந்திக்குப்பிறந்தஅந்தக்குழந்தையே பாண்டவர்களில் தருமனாக பின்னாளில் உலாவருபவன்.
வீரமுள்ள ஒரு குழந்தைக்கு ஆசைபட்டான் அந்தப் பாண்டு.பிறகு அந்த தேவர்களின் பராக்கிரம சேனைத்தலைவன் வந்தான்.அவனோடு குந்தி பாயைப்பகிர்ந்து கொண்டாள்.பாண்டு வெறும் ஆசி மட்டுமே வ்ழங்க பீமன் பிறக்கிறான்.
பைரப்பா குந்தியின் உடல் அமைப்பு பற்றி அழகாகப்பேசுகிறார்.
'ஒரு புலியையே கொன்று தோளில் சுமந்துவரும் ஒரு மாவீரனுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. என் தோளா? என் மார்பா?என் உடற்கட்டா?' குந்தியின் வார்த்தைகள் இவை.பைரப்பா குந்திதேவியின் பாத்திரப்படைப்பில் உச்சத்தை எட்டுகிறார். ஒவ்வொரு ஆண்மகனும் குந்தியின் முன்னால் சிறுத்துப்போகவே படைக்கப்பட்டிருபதாக வாசகனுமிங்கே எண்ணிப்பார்க்கிறான்.
தேவர் இன இந்திரன் வருகிறான். அவனுக்கு பாண்டுவும் சம்மதம் சொல் கிறான். குந்தி தேவி நியோகமுறையில் மீண்டும் ஒரு ஆண்மகவைப்பெறுகிறாள்.அவனே அர்ஜுனன்.அர்ஜுனனுக்கு இந்திரனின் தேக உரு அமைப்பு.கூர்மையான கண்கள்.நீல நிறத்தன.. கூர்மையான மூக்கு.அழகான கன்னம்.வடிவான முக அமைப்பு.அவன் சுபாவமும் அப்படியே.வேகம்,சுறு சுறுப்பு,உல்லாசம்,அன்பு செய்தல் எல்லாவற்றிலும் கூட அப்படியே.பைரப்பா அடுக்கிக்கொண்டே போகிறார்.
தேவரின மருத்துவ இரட்டையர்கள் பாண்டுவின் வேறொரு மனைவி மாதுரியைப்புணர்ந்தார்கள் அந்தப்.பாண்டுவின் நியோக ஏற்பாடு.நகுலனும் சகாதேவனும் மாதுரிக்குப் பிறந்தார்கள். அந்த நியோக முறை குந்தியின் மாதுரியின் வாழ்வில் நல்ல விளைச்சல் தந்தது.
மக்கள் வயல்காட்டில் விவசாயத்தைச் செய்து வாழ்வதைவிட போரில் வீரனாக வாழ்வதைப்பெரிதெனக்கருதியதாக பைரப்பா சொல்கிறார்.'விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தால் நம்மால் எப்படி வீரர்களாக முடியும்?அதனால்தான் யுத்தம் வரும்படி செய்யவேண்டும்.இல்லையென்றால் நமக்கு எந்தவித சுகமும் இல்லை.இன்னொரு முக்கிய விஷயம் இதில் இருக்கிறது.எந்த யுத்தமும் இல்லாமல் வெகுகாலம் கழித்துவிட்டால் அரசர்கள் எப்படி நம்மை வைத்துக்கொண்டிருப்பார்கள்?நீங்களும் சென்று விவசாயம் பாருங்கள் என்று அனுப்பிவிடுவார்கள்.அப்புறம் சேற்றில் இறங்கித்தான் நாம் வேலை செய்யவேண்டும்.அது மட்டுமல்ல வீரன் என்கிற கௌரவமும் போய்விடும்'. இப்படிபோகிறது விஷயம்.
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி என் கிற செய்தி அங்கு பேசப்படவில்லை.ஜெய் ஜவான் ஜெய் கிசான் சமாசாரம் கிடையாது. விவசாயம் தாழ்ந்த நிலையிலேயே வைத்து பேசப்படுவதாக பைரப்பா வாசகனுக்கு ச்சொல்லிவிடுகிறார்.
க்ஷத்திரிய குணம் பற்றி ஒருவிளக்கம் ருக்மரதனால் கொடுக்கப்படுகிறது.அழகான விளக்கம் அது.'நண்பனாகவும் இல்லாமல் பகைவனாகவும் இல்லாமல் உறவுவைத்துக்கொள்வது ஒரு க்ஷத்ரியனால் முடியாத காரியம்'.
குந்தி பாண்டுவின் ஆண்மையற்ற நிலையால் பாதிக்கப்பட்டவள்.பாண்டு குந்தியோடு இல்லாமல் மாதுரியையும் மணந்து குழந்தை பிறக்குமா என்று தப்புக்கணக்கு போடுகிறான். மாதுரியும் மாதவிலக்காகி நிற்கிறாள்.குழந்தைக்கனவு சிதைந்து போகிறது.பாண்டு தன்னை ஏமாற்றி விட்டான் என்பது குந்திக்கு மனதில் ரணத்தை உண்டாக்குகிறது.பாண்டு குந்தியிடம் பொய் சொல்லி நாட்களைக்கடத்திக்கொண்டே போகிறான்.அவனிடம் ஆண்மை இல்லை. இருப்பதாய் ப்பொய் பேசுகிறான். அவனைக்குந்தி தன் கூர்ந்த கண்களால் நோக்குகிறாள்.பாண்டு இப்போது சுருங்கிப்போகிறான்.'உண்மை அறிந்தவன் பொய்சொல்பவனை வெறும் பார்வையாலேயே தாக்கி இல்லாமல் ஆக்கமுடியும்' என்று குந்தி விளக்கம் தருகிறாள்.பொய் பேசுபவன் எத்தனை பலவானாக இருந்தாலும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது நமக்கு சொல்லப்படுகிறது.சத்யமேவ ஜெயதே என்பது தூக்கிப்பிடிக்கப்படுகிறது.
தர்மபத்தினி என்பவள் யார் என்பதை பைரப்பா வாசகனுக்கு வேறு ஒரு இடத்தில் வரையறை செய்து சொல்கிறார்.'முதல் மனைவிதான் தர்ம பத்தினி' அவள்தான் அதிகாரம் பெற்றவள் என்று குந்திதேவியை வைத்து வாசகனுக்குச் செய்தி சொல்கிறார்.
பைரப்பா இமயமலை ப்பகுதிகளில் வாழும் மலையக மனிதர்களின் வாழ்க்கைமுறைகள அவைகளில் கிடைக்கும் சில புதிய அனுபவங்கள் பற்றி புதினத்தில் சொல்லிப்போகிறார்.குடும்பத்தில் எல்லாச்சகோதரர்களுக்குமாக ஒரு பெண்ணை அல்லது ஒன்றிரெண்டு பெண்களை த்திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் அவர்களிடையே நிலவிவந்தது.பெற்ற குழந்தைகள் எல்லோருமே மூத்தவனின் பெயராலே அழைக்கப்படுவர்.ஒருவன் தனக்கு நான்கு மனைவி என்பான் இன்னொருத்தி தனக்கு ஆறு கணவன்கள் என்பாள்.இப்படிப்போகிறது குடும்ப விஷயம். இந்தப்பிறவிக்கு இன்னொரு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்னும் ராமகாவிய விஷயத்தை இங்கே நினைத்துப்பார்க்கிறோம்.
தமிழ்க்கலாசாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மட்டுமே சங்ககாலந்தொட்டுப்பார்க்கமுடிகிறது.பரத்தையர்மீது காதல்கொண்டு ஆண்மகன் செல்வது நடைமுறையில் இருந்து இருக்கிறது.கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான விஷயமாகப்பேசப்படுகிறது.மாதவியோடு புழங்கி வந்த தன் மனாளன் கோவலனை கண்ணகி தூக்கி எறிந்துவிடவில்லை.அது அக்கால நடைமுறையாக அனுபவமாயிற்று.
மாதுரியின் வயிற்றில் பிறந்தாலும் நகுலனும் சகாதேவனும் குந்தியிடமே கூடுதலாக அன்பு பாராட்டினர்கள்.குந்தியை பைரப்பா அப்படி உச்சத்தில் வைத்து புதினத்தை கொண்டுபோகிறார்.பாண்டுவைப்புணர்ந்து தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மாதுரி விழைகிறாள்.பாண்டுவும் தான் ஆண்தன்மை பெற்றுவிட்டதாக மலட்டுதன்மையிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைக்கிறான்.ஆனந்தத்தின் முதல்படியில் மாதுரி கால் வைக்கிறாள்.ஆனால் பாண்டுவின் முகம் திடீரென சுருங்குகிறது.இதயம் நின்றுபோகிறது.பாண்டுவோடு உடன் கட்டை ஏறித்தன் உயிரை மாதுரி மாய்த்துக்கொள்கிறாள்.குந்தி இப்படியாக ஐந்து ஆண்பிள்ளைகளோடு தனிமரமாகிறாள்.உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்த மண்ணில் இருந்ததை நாம் அறிவோம்.இன்றைக்கும் அது எங்கேனும் ஒரு மூலையில் இந்திய மண்ணில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.சட்டங்களும் தண்டனைகளும் மனித மனங்களை முற்றாக பக்குவபடுத்திவிடுமா என்ன?என்பதே எஞ்சுகிறது.
மதஸ்ய தேசத்தில் பயணிக்கும் பாண்டவரின் குதிரைகளுக்கு தண்ணீர் தாகம். ஆக ஒரு நீர் நிலையில் குதிரைகளுக்குத்தண்ணீர் காட்டுகிறார்கள்.பாவண்ணன் இங்கே 'குதிரைகளுக்கு நீர் குடிப்பாட்டித்தாமும் குடித்தார்கள்' என்று மொழி பெயர்க்கிறார்.குடிப்பாட்டுதல் என்பது புதிய சொல்லாக அனுபவமாகிறது.குளிப்பாட்டுதல் அறிவோம்.ஆனால் குடிப்பாட்டுதல் என்பதை புதியதாக க்கேள்வியுறுகிறோம்.பாவண்ணன் இந்த ப்புதிய வினைசொல் ஆக்கத்தை த்தமிழுக்குக்கொண்டு தந்தாலும் பாராட்டுதலுக்குரியதே. மீண்டும் பிறிதொரு இடத்தில் கூட பீமனே குதிரைக்கு த்தண்ணீர் குடிப்பாட்டினான் என்று பாவண்ணன் எழுதிப்போகிறார்.
சதாகாலமும் காட்டில் இருக்கும் ராட்சதர்களுக்கு மிருகங்களின் குணங்கள் வந்துவிடும் என்கிறார் பைரப்பா.சாதாரணமாக நீ யாரை எதிர்த்துச்சண்டை இடுகிறாயோ அவர்களின் குணம் உனக்கும் வருவதில்லையா? அதுபோலத்தான் புலியின் குணமும் கரடியின் குணமும் ராட்சதர்களுக்குண்டு.இங்கே நமக்கு ஒரு விஷயம் மனத்திரையில் எட்டிப்பார்க்கிறது.சுரண்டும் முதலாளித்துவ அமைப்பை எதிர்த்துப்போராடும் சில தொழிலாளர் அமைப்புக்கள் தாமே காலப்போக்கில் சுரண்டும் முதலாளித்துவ குணத்தைப்பெற்றுவிடுதலில் முடிந்துபோவதை நாம் பார்த்திருப்போம்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் படைப்புதானே பைரப்பாவின் 'பருவம்'. பீமன் சொல்கிறான்.''அண்ணனின் ரத்தம் ஒழுகும் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காட்டில் இருக்கிற மரம் செடி கொடிகள் கூட கலங்கும்படி உருக்கமாய் அழுதவள் தன் அண்ணனைக்கொன்றவனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய அந்தப்பெண்ணின்அன்பு'.
குந்தி தன் மகன் பீமனிடம் பேசுகிறாள்,'பெண்களின் மனசையும் அன்பையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.நீ இன்னும் விளையாட்டுப்பிள்ளையாய் இருக்கிறாய்.உன் புரிதல் போதாது.பெண் தன் மனத்தை உனக்கு அர்ப்பணிக்க வரும்போது வேண்டாம் என்று சொல்வது பெரிய பாவம்.இவர்கள் ராட்சதர்கள்,இவர்கள் நாகர்கள்,இவர்கள் நிஷாதர்கள்,இவர்கள் கிராதர்கள்,இவர்கள் ஆரியர்கள்,இவர்கள் தேவர்கள் என்கிற வேறுபாடு அன்புக்கு இல்லை.அவள் உன்னை நேசிக்கிறாள் கூடுதலாக அவள் உன்னை நேசிக்கிறாள்.அவள் விருப்பத்தை நிறைவேற்றுவது உனது கடமை.எழுந்திரு.'.
பீமன் சொல்கிறான்.'சாலகடங்கடியின் அன்பை நான் புரிந்துகொள்ளுமுன்பு அம்மா புரிந்து கொண்டாள்'. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்விதலைப்படுவார் என்பார் திருவள்ளுவர்.பெண்களின் அன்பை விளங்கிக்கொள்ள ஒரு பக்குவம் வேண்டியிருக்கிறது.ஷேக்ஸ்பியர்' frailty thy name is woman' என்று வித்தியாசமாகச்சொல்வதை இந்த இடத்தில் வாசகன் ஒரு முறை அசை போட்டுப்பார்க்கலாம்.லேடி மாக்பெத்தையும் அந்த ஷேக்ஸ்பியர் தான் நமக்குக்கொடுத்தவர்.
பாவண்ணன், தனது மொழிபெயர்ப்பில் பீமனின் சின்னம்மா அந்த மாதுரி தன் கணவன் பாண்டுவோடு உடன் கட்டை ஏறுதலை உடன்படுக்கை ஏறுதல் என்று குறிப்பிடுகிறார்.அது அந்த அவ்வளவுக்குப்பொறுந்திவருமா என்று நம்மால் சொல்லமுடியவில்லை.
கிராமப்புறங்களில் நாம் பார்த்து இருப்போம்.நம்மூருக்கு வாக்குப்பட்டு வந்த பெண்களை அவர்களின் பிறந்த ஊர் பெயர்கொண்டே அழைப்போம்.நம்மூருக்கு மாப்பிள்ளையாய் வந்தவர்கள் இங்கேயே வசிக்க நேர்ந்துவிட்டாலும் அந்த ஆண்மக்களை அவர்களின் பிறந்த ஊர்பெயர் கொண்டுமே அழைப்போம்.அதுபோலவே பாஞ்சால தேசம் சேர்ந்தவளை கதையில் பாஞ்சாலி என்று குறிப்பிடுகின்றனர்.அவளுக்கு க்கிருஷ்ணை என்ற பெயர் உண்டு. அதைவைத்துத்தான் பீமன் அவளை அழைக்கிறான்.வேறு ஊர்க்காரி என்றபெயரிலழைத்தால் அவள் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப்போய்விடுவாள் என்று பீமன் விளக்கம் சொல்கிறான்.
ராமாயணமும் பாரதமும் க்ஷத்ரியனின் பெருமை பேசுவன.பெண்ணைக் 'கன்னிகாதானம்' என்று சொல்லிப்பெறுவது அந்த ராமனுக்கும் இல்லை அர்ஜுனனுக்கும் இல்லை.பராக்கிரமத்தைக்காட்டியே அதற்குப்பரிசாக பெண்கள் வந்து சேருகின்றனர்.பைரப்பா அழகாகச்சொல்கிறார்.எதிரியே ஆனாலும் வீரமிக்க ஒரு புருஷனுக்கு மரியாதை செய்பவன் க்ஷத்ரியன்.'க்ஷத்ரியன் ஒரு பெண்ணை வெற்றி கொள்கிறான்.எப்போதும் தானமாகப்பெறுவதில்லை'.
ஒரு நாளுக்கு ஒருவன் என்பதுபோய் ஒரு ஆண்டுக்கு ஒருவன் என்று மாமியார் குந்தி தன் மருமகளுக்கு ஆணை தருகிறாள்.தருமன் முறையிலே ஒரு நாள் அர்ஜுனன் கிருஷ்ணையிடம் வருகிறான்.அவள் சொல்லிப்பார்க்கிறாள்.அவன் எல்லை மீறிவிடுகிறான். கிருஷ்ணை அர்ஜுனனிடம் பேசுகிறாள்.'நீ வில் முறித்து இருக்கலாம். உன் அன்னைக்குக்கொடுத்த வாக்கு காப்பாற்றப்படவேண்டும்' என்கிறாள்
கிருஷ்ணை பேசுகிறாள்.'அர்ஜுனா,நீ புத்திசாலி அழகன்.உன் வார்த்தைகளால் எந்தப்பெண்ணையும் வசப்படுத்திவிடுவாய். அர்ஜுனா, நீ என்னை மயக்கமுற வைத்துவிட்டாய்.இதற்குப்பிறகு மேலும் மூன்று பேரைமயக்கி மணந்துகொண்டுவிட்டாய்.இது போதாதென்று எத்தனை பெண்களை மய்க்கினாய்? அர்ஜுனா,நீ அகங்காரம் நிறைந்தவன்.பெண்களை உன் அகங்காரத்துக்குப்பலியாக்கினாய்.இந்தப்பாஞ்சாலி மட்டுமுன் அகங்காரத்துக்குப்பலியாக விரும்பவில்லை.அர்ஜுனா, நீ சமீபத்தில் தோற்றாய்.குருட்டுத்தனமான உனது மிருகப்பசிக்கு இந்தப்பாஞ்சாலி இடம் தரவில்லை என்கிற ஒரே காரணத்தால் அவளை உன் இடது காலால் உதைத்துச்சென்றுவிட்டாய்.' கொட்டித்தீர்க்கிறாள் பாஞ்சாலி.பாரில் யார்க்கும் அஞ்சாத வில்லாளி அவள் முன் அற்பமாய்ச்சிறுத்துப்போகிறான்.
திரௌபதியை என் மடியில் வந்து உட்காரடி என்று ஒங்கி அழைத்தான் துரியோதனன்.பீஷ்மனோ விதுரனோ சகோதரன் மனைவியை இப்படிப்பேசலாமா இது தருமமில்லை என்கிறார்கள்.துரியோதனன் சொல்கிறான்.பாண்டவர்கள் ஐவருக்கும் இவள் மனைவி. நானும் அவர்களுடைய சகோதரன் தானே.ஆக எனக்கும் இவள் மனைவி ஆகிறாள் என்று குருட்டு நியாயம் பேசுகிறான். ஆங்கிலக்கவி மில்டனின் இழந்த சொர்க்கத்தில் சாத்தா ன்கள் இந்தப்படிக்கு நியாயம்பேசுவதை நாம் இவ்விடத்தே எண்ணிப்பார்க்கலாம். சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டு, ஒரு சர்ப்பம் ஆகிய என்னால் உன்னோடு பேசவும்முடிகிறது. மனிதர்கள் ஆயிற்றே நீங்கள். இந்த பழத்தை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை உங்களுக்கு வரும் அது வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இறைவன் அந்த சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தை த்தொடாதே, என்று ஒரு தீய எண்ணத்தோடு உங்களுக்கு கட்டளை தந்திருக்கிறார். வழக்குரைஞரைப்போல நன்றாக எடுத்து வைப்பார் கவி மில்டன்.
பந்தயமோ இல்லை விளையாட்டோ அதனில் தோற்றுப்போன ஒருவனின் மனைவி போட்டிருக்கும் ஆடை அணிகலன்களை மற்ற சூதாடிகள் பிடித்து இழுப்பார்கள் எனற செய்தி புனிதமான வேதவரிகளில் காணப்படுவதாக பைரப்பா குறிப்பிடுகிறார்.துச்சாதனன் செய்த அந்த இழிச்செயல் சரியே என்கிறான் துரியோதனன்.சூதாட்டத்தில் தோற்றவனை விட்டு பெற்றோர்களும் சகோதரர்களும் விலகிப்போய்விடுவார்கள். இதுவும் வேதம் சொல்லும் விஷயமே.
சூதாட்டத்தில் வெற்றி பெறும்போது பித்தேறும் என்றும் தோற்கும்போது வெறிபிடிக்கும் என்றும் சொல்லும் கிருஷ்ணனின் வார்த்தைகள் உண்மையானவை என்று நகர்ந்துபோகிறது கதை.
ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்டவனைக்காதலிக்கவேண்டும் என்று தெரிவதில்லை.மனம் பக்குவம் அடைகிறவரைக்கும் அவளுக்கு இந்த அறியாமை தொடர்கிறது.அதற்குள்ளாகவே எங்கேனும் காதல் எனும் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்வளவே.பைரப்பா நன்றாக எடுத்து வைக்கிறார்.நாமும் நிறைய வாழும் உதாரணங்களை பார்த்து இருப்போம்.எத்தனையோ காதல் கோணல்கள் கண் முன்னேபளிச்சிடும்.
பாஞ்சாலியின் மானம் பங்கப்பட நேர்ந்துவிட்ட அந்த சோகம் பீமனைப்போல் அந்த அளவுக்கு வேறுயாரயும் பாதிக்கவில்லை. ஜயத்ரதனும் கீசகனும் பாஞ்சாலியை அனுபவிக்க க்கெஞ்சி நிற்கிறார்கள்.பீமனுக்குத்தான் ஆத்திரம் பீறி எழுந்தது.எம். டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருப்பார்.அது பாண்டவர்களில் அந்த பீமனின் பெருமை பேசும்.அந்த நாவலை குறிஞ்சிவேலன் அழ்குதமிழில் தந்து இருக்கிறார்.
கிருஷ்ணனைத்தவிர எந்த ஆண்மகன்தான் என்னைப்பார்த்ததுமே சஞ்சலப்படவில்லை? என்கிறாள் பாஞ்சாலி. துர்யோதனன், துச்சாதனன்,ஜயத்ரதன்,கர்ணன்,கீசகன்,எல்லோரும்தான் மயங்கிப்போனார்கள்.ஆனால் கிருஷ்ணன் மட்டுமே கட்டுப்பாடு உள்ளவன்.பாஞ்சாலியை மணக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத க்ஷத்ரியன்.வில்லை எடுத்து அர்ஜுனனனுக்கு இணையாக அல்லது விஞ்சி கிருஷ்ணனால் சாகசம் செய்ய முடியாதா என்ன? என்று கதை சொல்லிக்கொண்டு நகர்ந்து போகிறது.
சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும்,விபச்சாரிகளுக்கும் தேச எல்லைகள் எல்லாம் கிடையாது.தம்மையொத்தவர்களை அடையாளம் காண்பதில் நட்பு கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.பருவம் இந்த யதார்த்தத்தை அழகாக எடுத்து இயம்புகிறது.
இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையே எத்தனை தேசங்கள்.பைரப்பா தேசங்களின் பெயர்களை அடுக்குகிறார்.சிந்து,பாலிகம்,வாததானம்,காந்தாரம்,கேகயம்,திரிகர்த்தம்,உத்தரகுரு,ஹேமகூடம்,குரு,பாஞ்சாலம்,கோஜம்,கோசலம்,குந்தலம்,புளிந்திரம்,கலிங்கம்,சேதி, அவந்தி,விதர்பம்,ஒவ்வொன்றிற்குள்ளுமெத்தனையோ துணைதேசங்கள்.கிருஷ்ணன் யாவும் அறிந்தவன் என்கிறார் பைரப்பா.
இது மொழியாக்க நூலா என்று வாசகனுக்கு இடையில் ஒரு எண்ணமே வராதபடிக்கு பாவண்ணன் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பைக்கொண்டு செல்கிரார்.
'வர வர க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பதே குறைந்து கொண்டுவருகிறது.பீஷ்மா,நீ பிரம்மசரிய விரதம் பூண்டிருப்பவன்தானே .பேசாமல் நீ பிராம்ணனாக மாறிவிடு' என்கிற வாசகம் பராசரர் சொன்னதாக பைரப்பா எடுத்து வைக்கிறார்.க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.க்ஷத்திரியர்கள் பிராம்ணர்களாக மாறுவதும் நிகழ்ந்து இருக்கிறது என்பதை பைரப்பா சொல்லிப்போகிறார்.வேதம் பிராம்ணர்கள் மட்டுமே பயில்வது என்கிற விஷயம் பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும்.பிறகு காலம் செல்லச்செல்லக் கல்வி என்பது பிராம்ணர்களுக்கு மட்டுமே என்கிற சமாச்சரமாகி இருக்கக்கூடும்.வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே என்கிற தமிழ் இலக்கியச்சான்று ஒரு ஆரோக்கியமான செய்தியைச் சொல்கிறது.
சொந்த பந்தங்களைக்கொன்று நமக்கு என்ன இந்த மண்ணாசை என்று அர்ஜுனன் குழம்பிப்போகிறான்.ஆசிரமம் கட்டிக்கொள்வோம் அது போதும். வேதம் ஓதி சொச்ச வாழ்க்கை முடிக்கலாம் என அர்ஜுனன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான். 'நான் யுத்தம் செய்ய மாட்டேன்.யுத்தம் வேண்டாம்'என்று புலம்புகிறான். தருமனும் அவனோடு இணைந்து கொள்கிறான்.
'யார் என்னதான் சொன்னாலும் அர்ஜுனன் ஓரளவுக்கு நல்லவன்தான் இல்லையா விதுரா? என்கிறான் திருதராஷ்டிரன் என்று சுவாரசியமாகக் கதையை பைரப்பா எழுதிக்கொண்டு போகிறார். விதுரன் எந்த ப்பதிலையும் திருதராஷ்டிரனுக்குச் சொல்லவில்லை. அமைதி காக்கிறான்.அற்புதமான இடம் இது.அந்த விதுரனின் அமைதிக்குத்தான் எத்தனை கனமான பொருள். விதுரனின் அந்த அமைதிக்கு என்ன பொருள் என்பதை திருத்ராஷ்டிரன் உணர்ந்துகொள்கிறான். பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் இங்கே அழகாக நகர்கிறது பருவம்.
'நான் சொல்வது தரும நெறி பற்றி.இது கோழைத்தனமோ பயமோ அல்ல' என்கிறான் அர்ஜுனன்.பீமனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது.கோழையின் மனம் எப்போதும் தருமத்தின் உருவத்தை தனதாக்கிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடும் என்கிறான் பீமன்.சோர்ந்துவிட்ட அர்ஜுனனை தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன்.உபதேசம் சொல்கிறான் கிருஷ்ணன்.தருமம் வெல்ல வேண்டும் என்கிறான்.அறம் நிலை பெற வேண்டும் எத்தனை இழப்புக்கள் வந்தாலும் அதனை நீ எதிர்கொள்.அறம் வென்றாக மட்டுமே உழைக்கவேண்டும் என்கிறான் கிருஷ்ணன்.அதுவே கீதா உபதேசம்.உங்களுக்கும் எனக்குமெல்லோருக்கும் இனி வருகின்ற அத்தனை பிரஜைகளுக்கும் உபதேசம் என்றாகிறது. இங்கே பருவம் சொல்லும் செய்தி' முயற்சித்திருவினையாக்கும்' என்பதாக நாம் கொள்ளலாம்.
குந்திக்கு இந்தப்போரில் மகிழ்ச்சி உண்டா என்றால் இல்லை.அவள் சுமக்கும் சோகம் அவள் மட்டுமே அறிவாள்.கிருஷ்ணனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எந்த ஒரு செய்தியும் இருக்கமுடியாது.எல்லாம் அறிந்தவன். சிறுபிள்ளை போல் விளையாடுவான்.பார்த்தனுக்கு த்தேரோட்டி.கோபியர்களோடு கொஞ்சி மகிழும் கோபாலன். நட்புபோற்றத்தெரிந்த பண்பாளன்.கீதை உபதேசிப்பான். மன்னரிடம் தூது போவான்.செய்யாத வேலை என்று எதுவும் இல்லை.பாரதி கண்ணனை இப்படி எல்லாமாகப்பார்த்து பாடிய மாகவியல்லவா.
'என் பிள்ளைகள் வெல்லப்போவது நிச்சயம்.அவர்கள் வெல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட.ஆனால் என்னைப்பொருத்தவரை நான் தோற்றுவிட்டேன் என்றே எண்னுகிறேன்.சரியாகத்தெரியவில்லை. அவர்கள் வெற்றியில் என்னால் பங்கெடுத்துக்கொள்ள இயலாது' இது குந்தி சொல்வது.குந்தி நினைத்து இருந்தால் இந்த்ப்போரே நிகழ்ந்து இருக்காதுதான்.பெற்ற ஐவரும் தாய்ச்சொல்லை மீறப்போகிறார்களா என்ன? எப்போது மீறினார்கள்.பாஞ்சாலியும் ஐவருக்கும் மனைவி என்றுதானே வாழ்ந்து முடித்தாள்.கர்ணனை வலுவிழக்கச்செய்ததில் குந்திக்கும் கிருஷ்ணனுக்கும் பெரும்பங்குண்டு.பிறகு வெற்றி என்ன வெற்றி.எல்லாம் இவை போர்த்தந்திரங்கள் என்று நிம்மதி பெறலாம்.ஆனால் நேர்மையான நியாயமான மனசாட்சி உறங்கிவிடுமா என்ன?.
காந்தார தேசத்து காந்தாரி திருதுராஷ்டிரனை மணக்கிறாள்.திருதுராஷ்டிரன் குருடன்.பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து வரண்டுபோன காந்தாரதேசத்தில் குருடன் கொட்டுகிறான்.அந்தக்குருடனைப்பார்க்கச்சகிக்காத காந்தாரி அவனை வேறு வழியின்றி மணம்முடிக்கிறாள்.அழகின் உச்சம் காந்தாரி.அவள் கண்களைக்கட்டிக்கொண்டு வாழ்ந்தாள்.ஊர்ரர் காந்தாரி கண்ணைக்கட்டிக்கொன்டு வாழ்ந்ததற்கு நல்லதொரு கதைகட்டிவிட்டார்கள்.கணவன் குருடன் தானும் அப்படியே வாழவேண்டும் என்கிற பதிவிரதா அறம் என்றார்கள்.காந்தாரி புகழ்ச்சிக்கு இரையானாள்.அப்படியே வாழ்ந்து முடித்தாள்.பெற்ற மக்களை அவள் எங்கே கண்களால் பார்த்தாள்.எல்லோரும் போரில் இறந்துபோனார்கள்.கிருஷ்ணன் அவளை கண்கட்டை அவிழ்க்க வேண்டுகிறான்.எல்லாம் அழிந்துபோன சமயம் அவள் கண் திறந்து பார்க்கிறாள்.கண்கள் கூசுகின்றன.குருட்டுக்கணவனை மிச்சமிருந்த மனிதர்களைப்பார்க்கிறாள்.வெறுப்பு மேலிடுகிறது.மீண்டும் தன் கண்களை க்கட்டிக்கொண்டு வாழவே ஆசைப்படுகிறாள்.
கிருஷ்ணனிடம் வினா வைக்கிறாள் காந்தாரி.'நான் ஒரு புண்யவதி என்றால் என்னைச்சுற்றி ஏன் இத்தனை இறப்புக்கள் நிகழ்கின்றன. குந்தி நியோக முறையில் உயர்ந்த குழந்தைகளை ப்பெற்றுக்கொண்டதை மிக ச்சரி என்கிறது அவள் மனம். திருதுராஷ்டிரனை மணந்து அவன் மூலம் திறமையற்ற குழந்தைகளை ஏன் பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் தோல்வியுற வேண்டும்.இப்படி எண்ணிப்பார்க்கிறாள் காந்தாரி.அவளின் வினா நியாயமானதே.பைரப்பா இப்படி ஒரு புதிய விஷயத்தை வாசகனுக்கு எட்டவைக்கிறார்.
'என் பிள்ளைகளின் பிணங்களையாவது குறைந்த பட்சம் பார்க்க விரும்பிகிறேன்' கிருஷ்ணனிடம் மீண்டும் கெஞ்சி நிற்கிறாள் காந்தாரி.
காந்தாரி பக்கத்தில் ஒரு ஆடவர் கூட பாக்கி இல்லை. எல்லோரும் மடிந்துபோயினர்.குந்தியின் மைந்தர்களிடம் இது விஷயம் கேடக மனம் இடம்தரவில்லை. ஆக கிருஷ்ணனிடம் கேட்கிறாள் அவள்.
'கழுகுகளும் நாய் நரிகளும் அரசன் சாமான்யன் என்கிற வித்தியாசம் இன்றி எல்லாப்பிணங்களையும்கொத்திச்சிதைத்து அடையாளத்தை அழித்திருக்கும்' கிருஷ்ணன் காந்தாரிக்குப்பதில் சொல்கிறான்.
போர்முனைக்கு ச்சென்ற சாமான்யப்பெண்கள் அங்கே யுத்தத்தின்போது காமம் தேவைப்படும் வீரர்களுக்கு அது வழங்கி பின்கருவுற்று நிற்கிறார்கள். விதை தந்த வீரர்களோ களத்தில் மடிந்துபோகிறார்கள்.. ' எங்கள் வயிற்றில் இருக்கும் இந்தக்குழந்தைகளுக்கு 'அப்பா' என்று யாரைக்காட்டுவது? அந்த கர்ப்பிணிப்பெண்கள் புலம்பித்தீர்க்கிறார்கள் அவர்கள் முன்னே. ஐவரில் மூத்த தருமன் நிர்க்கதியாகி நிற்கிறான்.அய்யோ பாவம் அந்த தருமன்.
அரண்மனைக்கு முன்பாக எங்கு பெருமழை. வெள்ளம் எங்கும் ஒரே வெள்ளம். எங்கும் அழிவின் முற்றுகை.கோர முற்றுகை.
பைரப்பா ஆழ்ந்த வினாவைத்து பெருங்கதையை முடித்து வைக்கிறார்.
பெண்களைச்சுற்றியே 'பர்வம்' கதை கொடியெனப்பின்னிக்கொண்டுபோகிறது.பெண்களே சாதிக்கிறார்கள்.வினா வைக்கிறார்கள்.விடை சொல்கிறார்கள்.சமூகச்சிக்கலில் சிக்குண்டு வதைபடுகிறார்கள்.வாழ்வை மீட்டும்எடுக்கிறார்கள்.பெண்களின் பிபஞ்சம் அல்லவா இது.
கன்னடக்காரர் பைரப்பாவின் இலக்கிய ஆளுமையைத் தமிழ் இலக்கிய தளத்திற்கு பர்வம் என்னும் புதினம் வழி அற்புதமாக கொண்டு தருகிறார் பாவண்ணன்.
பாவண்ணனின் ஈடில்லா மொழியாக்க உழைப்பு போற்றுதலுக்குரியது.தமிழுக்குத்தொண்டு செய்வோன் என்றும் வணக்கத்திற்கு உரியவன்.
--------------------------------------------------------------------
.
Tuesday, May 29, 2018
the sons of camus-review
Issue 13, A review -essarci
At first I
poke in to the poems by Rowland Hughes, ‘A church some where’ that touches my
heart when I read the line ‘I had forgotten the value of the silence’.
Observing silence is not an easy task. One
requires more wisdom and fortitude to keep silence. Keeping silence does not
mean that he has nothing to speak with but it conveys some answer to the issue
under discussion but in a different form, at times silence will be more
pregnant than words poured that will confuse.
‘After the
storm’ by the same poet takes to you to the stage where you can experience the
after effects of a disaster. Night is suns’ thief is a beautiful and enjoyable
expression.
In ‘A
Rhondda Man’s funeral’ we painfully read the line, the coffin is carried by
young men not yet affected by the coal dust disease, which coveys that people
here are deprived of their health by the ego of the mining industry that pours
the coal dust.
Men’s desire
to be wealthy and powerful makes him vulnerable, to rotten air to breathe and
polluted water to drink. We conveniently ignore the holes that appear in the
ozone layer but enjoy the company of young woman in a comfortable warm chamber.
Another poem
which drew my attention is ‘Falling through water’. ‘Perhaps you grew wings to
measure
the suns’
distance, simply to witness
its’ gradual
extinction’ is a thought provoking pithy
statement by Rowland Hughes. Whether you witness it or not the sun will die one
day, what will happen then, we have no answer. That is scientific fact also. We are insignicant tiny
flies of no value before this humanly unimaginable universe.
Changming
Yuan poems I take next. In ‘Languacolonization’ we hear the words,English
Empire -where the moon never sets. Now the
Globalization has set in and Americanization is also another name for it.
English is now the world language.The
advantages of English being the world language is vast.They came,they saw,and
they conquered was their history. My
country India then was one among the British colonies. The education they gave ,made
us literally slaves to them, on the contrary it produced native thinkers ,of freedom and self respect.
I am to say
we normally say,in British empire sun never sets but Yuan puts it differently as, the moon never sets.
‘Some day’
poem by Changming yuan recalls freedom movement song of African freedom
movement-‘we shall overcome one day, oh deep in my heart I do believe we shall
overcome some day’.
To
sufferings of humans and animals, remedy is always expected. They want to get
rid of the darkness. Does he mean the prevailing political situation in his own
country?
In the
‘Delivering Guy’ the poet laments for the empty tomorrows. ‘But surely garbage
in the end ‘ also seconds of his ‘ empty
tomorrows’.
In the
poem,History Reviewed (3)
‘They are
planting phone poles and
Spreading
wires everywhere to steal
All the
innocent consciousness
From every
boy and girl.
The poet
worries for the chaotic situation in his native land and also for western
devils to come and exploit the prevailing condition in his own land.
In the
poem,Jingzhou pepper, Yuan calls Mao Zedong a poetic revolutionary and Qu yuan
a revolutionary poet.Is Mao a poet? Then it is a news to me.
‘The road
from Bangla Desh’ poem by Huw Punder
depicts a bad situation prevailing in his country. As a neighbor to the state I
feel sorry for the existing state of affairs. He says ‘shame and anger grows’.
Penelope
Thoms in his ‘There are no children here’ exhibits a landscape where we do not
here sound of children. They were wiped out by hooligans. Perhaps he may echo
the Libyan situation.
Crabs poem
by Ouyang Yu is quiet interesting. I am vegetarian in my food habits and I do
not any animals or insects. At least 3croer people in my country are
vegetarian. Have you heard about this ever?
Ann J.
Davidsons’ mentioning of Herbert Kuhner who said,’There is nothing chivalrous
about killing civilians. It is not anything to be proud of, is pinching my
heart. Good souls crave for harmonious living everywhere.
----------------------------------------------------------------------
Saturday, April 7, 2018
Wednesday, April 4, 2018
Thursday, March 29, 2018
on akkalur ravi s' translation of india enum karuththaakka
சுனில் கில்நானியின் 'இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி: எஸ்ஸார்சி
சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது 'The idea of India' என்னும் அற்புதமான நூல். இதனை 'இந்தியா என்கிற கருத்தாக்கம்' என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது.
இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் கொண்டுசெல்லுதல் என்பன மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவிக்கு இலகுவாய் வசப்பட்டிருக்கிறது.மாலதி ராவ் ஆங்கிலத்தில் எழுதி சாகித்ய அகாதெமியின் விருதுபெற்ற நாவலைத் தமிழில் தந்தவர் இரவி
.சாகித்ய அகாதெமிக்கென ஜே கேயின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழில் தந்த ஆழமான சிந்தனையாளர்.மார்க்சிய நெறிகள்,அதனை செயல்படுத்துதலில் தொலைபேசி தொழிற்சங்க அரங்கில் வெகு அனுபவங்கள் அவருக்குண்டு.
சுனில் கில்நானியின் அந்த ஆங்கில நடை அது வாசகனை'The idea of India' என்னும் அவரின் மூல நூலை படிக்கின்றபோது சொக்கவைத்துவிடும்.அக்களூர் இரவியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் என்னும் தமிழ்மொழிபெயர்பை வாசிக்கின்ற போதும் அதே உணர்வினை வாசகன் கண்டுணர நிச்சயம் வாய்க்கும்.இதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி எனலாம்.தேவைப்படும் போதெல்லாம் மூல ஆசிரியரைத்தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்பை ச்செழுமைப்படுத்தியிருக்கிறார்.
இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வெளிவந்த நூல்களில் கவனம் பெற்ற ஒரு படைப்பு இது.
26 ஜனவரி 1997,அன்று எழுதப்பட்ட முன்னுரையில் கில்நானி இந்த நூல் 'இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் பொது வாழ்வை ப்பற்றியது' என்று மிகச்சரியாகவே குறிப்பிடுகிறார்.
2003 ஆம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுக உரையில் கில்நானி இப்படிப்பேசுகிறார்.
'வாழ்க்கையை மாற்றும்,வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்,வசீகரம் நிறைந்த, தினந்தினம் மாறும் தொழில் நுட்பத்தின் சாத்தியங்களை பம்பாயில் ஒருவர் உணர்ந்திருக்கலாம். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அந்தப்படுகொலைகளுக்கு உதவிய தொழில் நுட்பத்தின் ஈவிரக்கமற்ற மிருகத்தன்மையை குஜராத்தில் அவர் உணர்ந்திருக்கமுடியும்.இத்தகையச்சூழலில்,இவற்றில் எதைத்தேர்வு செய்வது என்ற தர்மசங்கடமான நிலையில் இந்தியா இருக்கிறது.'
இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கில்நானி எழுதியது. நாடும் நடப்பும் இன்று நமக்கு முன்னால் எப்படி என்பது நாம் உணர்கிறோம்.ஊழலில் மாட்டிக்கொண்டு நிர்வாணமாகிய அரசு இயந்திரத்தை ப்பார்க்கசகிக்காமல் இந்திய மக்கள் ஒரு மாற்றம் விழைந்தனர்.மாற்றம் மாற்றமாக இல்லை.ஏமாற்றமாகவே அனுபவமாதல் நிகழ்கிறது. மாவு எப்படியோ பணியாரம் அப்படி. அன்று நரி.இப்போது குரங்கு .இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இந்திய நாடு திண்டாடுகிறது.
2017 ஆம் ஆண்டு பதிப்புக்கான முன்னுரையில் 'மோடியும் அவரது கூட்டணி நண்பர்களும், அனைத்து அரசியல் எதிரிகளையும் துடைத்தெறிந்து,'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை' உருவாக்க விரும்புகிறார்கள்.விமர்சனங்களும் கருத்து மாறுபாடுகளும், தேசத்திற்கு எதிரானவை என முத்திரை குத்தப்படுகின்றன.'என்று சொல்லிப்போகிறார் கில்நானி.
மகாத்மா காந்தி விரும்பியது இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்பதை.அதன் நோக்கம் புனிதமானது.நாசகார சக்திகள் புனிதமான விடுதலை இயக்கத்தின் விழுமியங்களை சொந்தம் கொண்டாடிச் சுய லாப வேட்டைக்காரர்களாக மாறிப்போவார்கள்.கொள்ளைக்கூடாரமாய் இந்த ப்புனித இயக்கம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் தேச பிதா.
ஆனால் அந்த விபரீதமும்ம அரங்கேறியது. மோடி வார்த்தை ஜாலக்காரர் ஆயிற்றே.காந்தி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விழைந்தார். எனவே அதைத்தான் தான் நிறைவேற்ற விழைவதாக க்குறிப்பிடுகிறார்.
கில்நானியின் அவதானிப்புக்கள் இரவியின் மொழி ஆக்கத்தில் சிறப்பாக வந்திருப்பதை முன்னுரைகள் வாசகனுக்குப்பறை சாற்றுகின்றன.
இந்நூலை வாசிப்பதற்கு கில்நானியின் முன்னுரைகள் மிகச்சிறந்த அடித்தளம் என்று கவனமாகக்குறிப்பிடுகிறார் மொழிபெயர்ப்பாளர். ஆகச்சரியே.
முன்னுரையின் இறுதியில் ஜவஹர்லால் நேரு(1946) குறிப்பிட்டதை கில்நானி நினைவு படுத்துகிறார்.
''இந்தியாவின் மனோபாவத்தையும் தோற்றத்தையும் மாற்றி அவளுக்கு நவீனத்துவ துகிலை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் கவலையுடனும் இருந்தேன்.இருப்பினும் என்னுள் சந்தேகங்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன.'
வேத மேத்தா (1970)ல் குறிப்பிட்டதுவும் உடனே அங்கு வருகிறது.சாராம்சம் இதுதான். ஆயிரக்கணக்கானோர் பட்டினியில் வாடும்போது தேசத்தின் தலைவர்கள் பெரிய விருந்தொன்று நடத்தினர்.சிலைகள் பல வைத்து ஆராதனை செய்தனர்.அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கையின் ஐந்துவிரல்கள் சுவரில் எதையோ எழுதின.அது இன்னது என்று கூடியிருந்த யாருக்கும் விளங்கவில்லை.
'எழுதப்பட்டிருப்பதை ப்படித்து அதன் பொருளைத்தெரியப்படுத்தக்கூடிய சந்தேகத்தை த்தீர்க்கக்கூடிய அறிவு வெளிச்சமும் புரிதலும் ஞானமும் கொண்டவர் எவரையுமே கண்டுபிடுக்க முடியவில்லை' இப்படி முடிகிறது அது.முடிச்சுக்கள் ஒரு நாள் அவிழலாம்.
புத்தகத்தின் பின் அட்டையில் அமர்த்தியா சென்னின் வாசகம் இந்நூலை ப்பற்றி வாசகனுக்கு கச்சிதமாக உரைக்கிறது.'எழுச்சியூட்டும் சீற்றம் மிகுந்த உள்முகப்பார்வை கொண்ட படைப்பு' இப்படி.
அறிமுகம் இதனிலிருந்து தொடங்கி இந்நூலை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.'பொருளாதார நவீனத்துவம் நோக்கிய விழைவு,பெருமளவில் இங்கு சமமற்ற சமுதாயச்சித்திரத்தைத்தீட்டியிருக்கிறது.பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு தோல்வியாகவே இது முடிந்திருக்கிறது.இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா.இக்காரணங்கள் பெரும்பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவை.அவை சிக்கல் நிறைந்தவை.சர்ச்சைகளுக்கு உட்பட்டவை என்று கூறமுடியும்.மறுக்கப்படும் வாய்ப்புகளும்,சமமற்ற விநியோக முறையும்தான் இவற்றிற்கான தர மாதிரிகள்' என்று சொல்கிறார் கில் நானி.
மிக உச்சத்தை எட்டியமேல்தட்டு மக்கள் ஒரு புறம்,அதல பாதாளத்தில் கிடக்கும் சாமானியர்கள் மறுபுறம் என்று இச்சமுதாயம் பிரிந்து பிரிந்து கிடப்பதை கில்நானி சரியாகவே எடை போடுகிறார். மகாத்மா காந்தி,ஜவஹர் லால் நேரு,வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய ஆளுமைகளைத்தொட்டுப்பேசுகிறார்.அவர்களின்றி இந்தியா என்பது ஏது என்று வாசகனும் ஒத்துப்போகவே செய்கிறான்.
இறுதியாக இந்த அத்தியாயத்தில் மிகச்சரியான ஒரு விஷயம் வருகிறது.'காந்திக்கு எதிராக அம்பேத்கர் மீண்டும் நிறுத்தப்படுகிறார்,நேருவிற்கு எதிரான யுத்தத்திற்காக பட்டேல் மீண்டும் தருவிக்கப்படுகிறார்.' அற்புதமாக இரவியின் மொழிபெய்ர்ப்பு..மொழிபெயர்ப்பாளர் நம்மைப்பேசவைத்துவிடுகிறார்.
பட்டேல் தருவிக்கப்படுகிறார் என்பதில் ஒரு விஷயம் பொதிந்து கிடக்கிறது. வரலாற்றுப்போக்கில் பட்டேலை மூட்டைகட்டி தூக்கிவைத்துவிட்ட ஒரு அரசியலையும் நமக்கு கில்நானி நினைவுக்குக்கொண்டு வருகிறார்.பட்டேல் இருட்டடிப்பு. தேசியக்கட்சிக்கு ஒரு அரசியல் இல்லாமலா இப்படி என்பதை வாசகன் எண்ணிப்பார்க்கிறான்.இன்று குஜராத்தில் பட்டேலின் ஆகப்பெரிய சிலைவைக்க ஏற்பாடு நடக்கிறது.சிலையின் உயரம் அச்சம் கொள்ள வைக்கலாம்.மனிதர்கள்தான் சிறுத்துப்போகிறார்கள்.
அடுத்த அத்தியாயம் 'ஜனநாயகம்'. பி. ஆர் அம்பேத்கரின் வாசகத்தோடு தொடங்கும் பகுதி.'முரண்பாடுகள் நிறைந்த இந்தவாழ்க்கையை எவ்வளவு காலம் தொடர்ந்து வாழப்போகிறோம்' என்னும் கனம் கூடிய அம்பேத்கரின் வாசகம் நம்மை த்தொட்டுப்பார்க்கிறது.அண்மையில் சென்னையில் ஆர் கே நகர் தேர்தலைப் பார்த்துவிட்ட நாம். அது நமது கண்கள் செய்துவிட்ட பாவம். எங்கே போய் முட்டிக்கொள்வது.இருக்கிற அமைப்பில் ஜனநாயகம் தேவலாம் என்போம்.அது நடுத்தெருவில் ஈனப்பட்டதை அதன் சிருஷ்டி கர்த்தாக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
'இந்தச் சமுதாயத்தை ஆட்சி செய்வது சுலபம்.ஆனால் மாற்றுவது கடினம்' என்று இந்தியாவில் நிலவும் சாதியையும் வருணத்தையும் பற்றி க்குறிப்பிடுகிறார் கில்நானி.மிகச்சரியான கணிப்பு இது.அப்படித்தான் அரசியல் அனுபவமாகிறது.
மெக்காலே வகுத்த கல்வி முறை பற்றி அழகாகக்குறிப்பிடும் கில்நானி இப்படி ச்சொல்கிறார்.
'நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியனாகவும், சுவைஉணர்வில்,எண்ணங்களில் நீதி நெறியில், அறிவுத்திறனில் ஆங்கிலேயனாகவும் இருக்கக்கூடிய மனிதனை உருவாக்குதல்' இதுவே கச்சிதமாக இங்கே சாத்தியமாகியது.கோட்டும் சட்டையும் போட்ட அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள்.ஆங்கிலம் பேசினார்கள்.கைகட்டி நின்றார்கள். அது ஒரு தொடர்கதை.
அரசியலில் தவறாக நடப்போருக்கு எதிராக மக்கள் தம் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு உபாயமே தேர்தல் என்கிற எளிமையான தட்டையான விவேகமற்ற புரிதல் நிலைபெற்று நடைமுறைக்கு வந்திருப்பதை இந்திய மக்கள் சரி என்று உணர ஆரம்பித்து வெகுகாலம் ஆகிவிட்டது. திறமான ஆளுமையும் பொருளாதார நாணயமும் நேர்மையும் நாட்டின் ஒட்டு வளர்ச்சியும் சமூக த்தரம் உயர்தலும் உலகம் பற்றிய சரியான புரிதலும் மறக்கப்பட்டுவிட்டன
.காசுபணம் சம்பாரிக்கக்கல்வியும்,காலை நீட்டி ப்படுக்க அமெரிக்காவில் ஒரு இடமும் வேண்டுமே என இறைவனிடம் மன்றாடும் இந்திய மக்களை மட்டுமே பெருவாரியாக பார்க்க வாய்த்திருக்கிறது. இதனை கில்நானி சரியாக அவதானித்து இது எப்படி எங்கே தொடங்கியது என்பதை இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலமையும் அதற்குப்பிறகுமான நடப்புக்களும் என்பவைகளோடு தொடர்புபடுத்திப்பேசுகிறார்.
கில் நானியின் வார்த்தைகளில்'இந்திய அரசிற்கும தன் சமுதாயத்திற்கும் ஜன நாயகம் என்பதன் பொருளை திருமதி காந்தி மாற்றி அமைத்தார் என்று வருவதை க்காண்கிறோம்.ஜன நாயகம் என்றால் தேர்தலில் வெல்லுவது மட்டுமே என்கிற நிலமை பிரத்தியட்சமானது.
இந்திரா காந்தியின் சோக முடிவோடு, ராஜிவ் காந்தியின் கோர முடிவையும் கில் நானி ஆராய்கிறார்.சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டதையும் விவரிக்கிறார்.
மாயாவதியை பிற்பட்ட வகுப்பைச்சார்ந்தவர் என்று கில் நானி தவறாகப்பதிவு செய்கிறார். அட்டவணை இனத்தவரான மாயாவதியை ஏன் அப்படிக்குறிப்பிடுகிறார் என்பது சற்று நெருடலாகவே உள்ளது.
மூன்றாவது தலைப்பாக' எதிர்காலக்கோவில்கள்' என்கிற விஷயம் பேசப்படுகிறது. 'மனிதகுல நன்மைக்காக மனிதர்கள் வேலை செய்யும் இடங்கள்தான் மிகப்பெரிய கோவிலாக மசூதியாக அல்லது குருத்வாராவாக இந்நாட்களில் இருக்கமுடியும் என்று எண்ணினேன்.' என்று நேருபிரான் கூறியதைக்குறிப்பிட்டு இந்த அத்தியாயம் ஆரம்பமாகிறது.
பக்ரா அணை கட்டிய விவரணையை இந்நூல் சிறப்பாகச்செய்து இருக்கிறது.மைசூர் மஹாராஜாவிடம் பணிபுரிந்த விசுவேசுவரய்யா பற்றிய குறிப்பும் இந்த ப்பகுதியில் வருகிறது.'தொழிமயமாகு இல்லையேல் அழிந்துபோ' இது விசுவேசுரய்யாவின் கோஷம்.தேசபிதா கந்தியோ' தொழில் மய மாகு அழிந்து போ' என்று தொடர்ந்து வாதிட்டார்.
நேரு விரும்பிய பொதுத்றை நேரு விழைந்த மாற்றத்தை கொண்டு வரவில்லை.அவை நாட்டின் சுமைகளாக உருவெடுக்க ஆரம்பித்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் மட்டும் பொதுத்துறை காக்கப்படவேண்டும் என்பதில் குறியாகத்தான் இருந்தன.
மூன்றாவதாக 'நகரங்கள்' என்னும் தலைப்பு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கு நகரங்களில் வாழ்வதை நாம் காண்கிறோம்.விவசாயத்தின் மீதிருந்த கவர்ச்சி அல்லது மரியாதை தொலைந்துபோய்விட்டது.கல்விக்கூடங்களும்,தொழிற்கூடங்களும், மருத்துவ மனைகளும் நகரத்தை விட்டு நகர மறுக்கும்போது வேறு என்ன செய்வது? நகரங்கள் வீங்கிப்போய்க்கிடக்கின்றன.கில்நானி இந்திய நகரங்கள் குறித்து விரிவான அறிக்கை தருகிறார்.அகமதாபாத்,கொச்சி,சூரத் இவை பொருளாதார வர்த்தக மையங்கள்,பனாரஸ்,பூரி,மதுரை போன்றவை புனித நகரங்கள்,டில்லி,ஆக்ரா என்பவை நிர்வாக நகரங்கள் என எழுதிச்செல்கிறார். காசி நகரம் எப்படி நாறிக்கிடக்கிறது என்பதனை மகாத்மாவின் மேற்கொளோடு சுட்டுகிறார்.டில்லியைப்பற்றிய விவரணை விளக்கமாக உள்ளது.சண்டிகர் எப்படி பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு மாற்றாக வடிவமைக்கப்பட்டது என்பதனை க்குறிப்பிடுகிறார். பம்பாய் நகரை சிவசேனா எப்படி க்கையாள்கிறது என்பதனையும் தவறாமல் கில்நானி குறிப்பிடுகிறார்.மைசூரும் பெங்களூரும் அவர் பார்வைக்குத்தப்பவில்லை. மொழிபெயர்ப்பாளர் இரவி சிறப்பாக இப்பகுதியை மொழிபெயர்த்து இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்பதையே மறக்க வைத்துவிடுகிறார்.
இந்தியன் யார்? என்பது நான்காவது அத்தியாயம்.1989ல் நிகழ்ந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் என்கிற முஸ்தீபு குறித்துத் தொடங்குகிறது.'
தங்களது நிலப்பரப்பை அந்நியர்கள் வெற்றி கொண்டார்கள்,காலனியத்திடம் அடிமைப்பட்டுப்போனோம் என்ற உண்மைதான்,தேசிய இனம் ஒன்றிற்கான சுய தேடலை இந்தியர்களுக்குச்சாத்தியமாக்கியது.'என்று சரியாகவே கில்நானி வரையரை செய்கிறார்.ஐநூற்று ஐம்பத்தாறு தேசங்கள் தாமே பண்டைய பாரதம்.தமிழ் மண்ணிலேயும் எத்தனையோ அரசு பிரிவுகள். ஓயாத சண்டை. அதிலே தமிழற்குப் பெருமை.காதலும் வீரமும் அவையே இரண்டு கண்கள். அதனைப்பேசிப்பேசி அகமும் புறமும் எமக்கு மூச்சு என்று முழங்கியது தமிழர் வரலாறு.
'பிளவற்ற ஹிந்து வரலாற்றைக்கடந்த காலங்களில் தேடியவர்களை மிகவும் வசீகரிக்கும் அரசியல் புள்ளியாக விநாயக் தாமோதர் சாவர்க்கர் இருக்கிறார்.இவரது படைப்புகளில் இருந்துதான் பிர்காலத்தில் பி.ஜே.பி.'ஹிந்துத்வம்' என்ற தனது மந்திரத்தின் இலக்கணத்தை எடுத்துக்கொண்டது.'என்று வரையறை தருகிறார் கில்நானி ஹென்றி மிஷா என்னும் பிரான்சில் குடியேறிய பெல்ஜியக்கவிஞர் இந்தியா பற்றிக்குறிப்பிடுவதை வாசகனுக்கு நினைவூட்டுகிறார் ஆசிரியர்.
'இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள் தொடக்கத்திலேயே இந்தியாவையும் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் கைவிட்டு விட்டனர்.இப்போது ஹிந்துக்கள் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளச்செய்ததுதான் ஆங்கிலேயர் செய்த மிக அற்புதமான செயல்' இதனை மறுத்திட முடியாது.
வள ஆதாரங்கள் மீதான கட்டுப்பாட்டை உன்மையான பரிசு என்று கருதும் அரசின் இருப்பும்,அந்தப்பரிசை அடைவதற்கான விளையாட்டில் பெரும்பாலான மக்களை ஈடுபட வைத்திருக்கும் உறுதியுடன் நீடித்திருக்கும் ஜன நாயக அரசியலும்தான் போட்டியின் பொருளாக அதனை வைத்திருக்கின்றன.இப்படிப்பேசும் கில்நானி இந்திய அரசியலை சமூகத்தை நிகழ்வுகளை எத்தனை ஆழமாக அலசியிருக்கிறார் என்பதை எண்ணி நாம் திகைத்து ப்போகிறோம்.
முடிவுரைக்கு வருவோம். நவீனத்துவம் என்கிற துகில். சற்று தூரத்திலிருந்து பார்த்தால்தான் பொருட்களைத்தெளிவாக ப்பர்க்கமுடியும் என்னும் ஏ.கே ராமானுஜனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது. அது இந்த நூலின் ஆசிரியருக்கும் கூடச்சரியாகவே பொருந்தும். அவரும் லண்டனில் இருந்து இந்தியாவைப்பார்த்துக்கருத்துக்கள் உரைக்க அதுவே இந்தியா என்னும் கருத்தாக்கமாக மலர்ந்து பெருமை பெறுகிறது..
சிதறுண்ட சோஷலிச அமைப்பு இந்திய ராணுவப்பாதுகாப்பின் கடையாணியாக இருந்த சோவியத் யூனியனைக்கழற்றிவிட்டது. இன்று சோஷலிசமா?சந்தைக்களமா?எது வென்றது எனில் சந்தைப்பொருளாதாரமே.இந்தியாவைச்சுற்றி ஜன நாயகம் மறந்த பாகிஸ்தான்,சீனா,பர்மா என அமைதி குலைக்கும் நாடுகள்.
இந்தியா இப்போது உலக அரங்கில் ஒரு நவீன தோற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய சரியான தருணம்.மனிதத்திறமைகளை மட்டுமே அது நம்பியிருக்கிறது என்கிறார் சுனில் கில்நானி.
அற்புதமான ஒரு நூல்.கடின உழைப்பு. ஆழ்ந்த சிந்தனை,சம தள ஆய்வு,எடுத்துக்கொண்ட பொருளில் இணையில்லா ஈடுபாடு,அழகு மொழி ஆளுமை இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த சுனில் கில்நானியை அடிமனதிலிருந்து பாராட்டுவோம். உயர்ந்த பொருள் கொண்ட புத்தகத்தை காலம் அறிந்து தேர்ந்து மொழியாக்கம்செய்து வென்று நிற்கும் அக்களூர் இரவி தமிழ் ச்சிந்தனை த்தளத்திற்கு சாதனை ஒன்றை நிகழ்த்தி ப்பெருமை கொள்கிறார்.
--------------------------------------------------
.
on paavannan stories10
10 பாவண்ணின் சிறுகதைகள்.
பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன் கண்கள் பனிக்காமல் அவர் எழுத்துக்களை படித்துவிடமுடியாது.
பாவண்ணனின் அந்தப் படைப்பு மனம் அது தானாக எழுதிக்கொண்டு போவதை வாசகன் படிக்கும்போது உணரமுடியும்.பாசாங்குத்தனம் அறியா எழுத்துக்கள் அவை. சாதாரண ஒரு எளிய மனிதனின் உள்ள நெகிழ்வை பாவண்ணனால் மிகச்சரியாக அவதானிக்க முடிகிறது. ஏதோ ஒரு சத்தியத்தின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அவர் எழுத்துக்கள் சொல்லிச்செல்கின்றன.
வாழ்க்கை பற்றிய படைப்பாளியின் அணுகுமுறை, அனுபவம்,படைப்பாற்றல், வாசகனுக்குத் தான்தெரிவிக்க விழையும் ஒரு செய்தி இவை அனைத்திற்குமான விடை அவரது படைப்புக்களில் பெற முடியும். பிரிக்கவேமுடியாத உறவு அவரின் பிறந்த மண்ணோடு இருப்பதை அவரின் எல்லாப்படைப்புக்களிலும் தரிசிக்கவும் வாய்க்கும்.
கால்களில் மிதிபடும் புல்லின் ஒரு இதழில் பிரபஞ்சத்தின் ரகசியம் ஒளிந்திருப்பதை நோக்குவது ஒப்ப, ஒரு எளிய மனிதன் பேசும் வார்த்தைகளில் மாகாவியங்கள் உணர்த்தப்போராடும் கனவிஷயத்தைச்சொல்லிவிட பாவண்ணனால் சாத்தியப்படுகிறது.
பச்சைக்கிளிகள்:
சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'பச்சைக்கிளிகள்' என்னும் தொகுப்புக்குள் நாம் இப்போது நுழைகிறோம்.13 கதைகளைக்கொண்ட ஒரு தொகுதி இந்த பச்சைக்கிளிகள்.
தீரா நதி,ஆனந்தவிகடன்,உயிர் எழுத்து,உயிர்மை,காவ்யா,அந்திமழை, அம்ருதா என இலக்கிய பிரக்ஞை கூடிய இதழ்களில் வெளிவந்தவை.இந்தப்பட்டியலில் இலக்கியப்பிரக்ஞை கூடியன என்பதில் முரண் இருக்கலாம்.ஆனால் பாவண்ணனின் படைப்பு வெளிருவதில் கொஞ்சம் கூடுதல் அக்கறையுள்ள இதழ்கள் என்கிறபோது இயல்பாக இவைகட்கு இலக்கிய மாற்றுக்கூடிப்போவதை ஏற்கத்தான் வேண்டும்.
வெளிச்சத்தைக்கொண்டு வருபவன்-என்கிற கனமிகு கதையிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.ரங்கநாதன் சார் என்னும் கிராமத்து ஆசிரியரின் கதை.ஆசிரியன் என்னும் ஒரு இலக்கணத்துக்கு பொறுத்தமான ஒரு பெரிய மனதுக்காரனின் கதை.
அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த வயிற்றுப்பிழைப்பு. கிராமப்புறங்களில் அதுவே பெரிய பாடு என்று வாழ்க்கை அனுபவ மாகின்றபோது ஒரு ஏழைக் குடும்பத்து மாணவன் எப்படிப் பள்ளியில் சேர்ந்து படிப்பது. பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிறார்களே பின் அதுதான் என்னவாம்.
செங்கல் சூளை வேலைக்குச்செல்லும் பள்ளிச்சிறார்கள். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..உழைத்தால் குடும்பம் பசி ஆற்றிக்கொள்ளும்.இல்லாவிட்டால் பட்டினி கிடந்து மடிவதைத்தவிற வேறு வழி என்ன என்பதுவே யதார்த்த நிலை. தன் பிள்ளையை செங்கல் சூளை வேலைக்கு அனுப்பும் தாய் ரங்கநாதன் சாரிடம் இப்படிப் பேசுகிறாள்.
'இங்க பாரு சார்.வீணா புடிவாதம் புடிக்காத.மத்த சார்மாருங்களாட்டம் நீயும் இருந்துட்டு போ சார்.எங்க ஊட்டுல ஒல கொதிக்கணும்னா அவனுங்களும் வேலை செஞ்சாதான் முடியும்.என் புள்ள மேல எர நூறு ரூபா அட்வான்ஸ் குடுத்திருக்காரு மொதலாளி.அதோ அந்த மாயாண்டி,காத்தமுத்து, குள்ளன்,வெளுத்தான்,கோணக்காதன்,அந்தத்தடியன்,மொட்ட, எல்லார் மேலயும் எர நூறு முந்நூறுன்னு இருக்குது சார்.வேல செய்யுறதனாலதான் நம்பிக்கையா கடன் குடுக்க்றாங்க சார்.செய்யலைன்னா யார் குடுப்பா? படி படின்னு சொல்றியே படிப்பு வந்து குடுக்குமா?' இப்படி இருக்கிறது ரங்கநாதன் சார் முன்பாக பிரத்யட்சமாக நிற்கும் கிராமம்.இந்த இருண்ட சூழலில் கல்வி என்னும் அறிவு வெளிச்சத்தை எப்படி ஒரு ஆசிரியர் கொண்டு வருகிறார் என்பதைச்சொல்லும் கதை இது.
பாவண்ணனுக்கு நேர் எதிரே அனுபவமான ஒரு விஷயமாக இருக்கவும் கூடும்
அமரர்.வே.சபாநாயகம் ஒரு நாவல் எழுதியிருப்பார்.'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' திண்ணைப்பள்ளிக்கூடத்தை தத்ரூபமாக வாசகனுக்கு அறிமுகப்படுத்திய ஒரே படைப்பு அது. ..திருமணமே செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி வாத்தியார் தன் இறுதிமூச்சுவரை எழுத்தாளர் சபாநாயகம் வாழ்ந்த அதே தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தில் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியராக பணி செய்து, அந்த மக்களுக்கு எண்ணும் எழுத்தும் அறிவித்து த் தன் வாழ்க்கையை முடித்துக்கொண் டுவிடுவார்.அந்த புதினத்தை வாசகனுக்கு நினைவுக்குக்கொண்டு வருகிறது பாவண்ணனின் இந்தச்சிறுகதை. ஆக அவ்வை சொன்னதை நாமும் ஆமோதிப்போம். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பதே சரி.
பாவண்ணன் சொல்கிறார்.'பக்கத்துக்காட்டில் ஆடு மாடு மேய்த்தவர்கள்,பன்றி மேய்த்தவர்கள்,கரும்பு வெட்டுக்குப்போனவர்கள்,சாணமெடுக்கச்சென்றவர்கள் என பிள்ளைகள் கூட்டம் ஒவ்வொரு திசையிலிருந்தும் தினமும் வந்து சேர்ந்தபடி இருந்தார்கள்'.அறிவுக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பதில் அத்தனை ஆழ்ந்த பிடிப்பும் கவலையும் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியரைக்காண்பதில் வாசகனுக்கு எத்தனை நிறைவு.அந்த ரங்கநாதன் ஆசிரியரின் நிழற்படத்துக்குப்போடப்பட்டிருந்த கண்ணாடிச் சட்டம் ஒரு நாள் உடைந்துபோய்விடுகிறது. அதனைச்சீர் செய்ய செல்லும் அவரின் ஒரு மாணவன் வாசகனுக்குச்சொல்லும் ஆழமான ஒரு செய்தியாக படைப்பு அமைகிறது இந்தச்சிறுகதை, படிக்கும்.ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நல்- ஆசிரியரின் நினைவை நிழலாகக்கொண்டுவரும். அவரோடு என்றோ ஒரு நாள் உரையாடிப்போனதை மீண்டும் மனத்திரையில் அனுபவிக்க வாய்க்கும்.
ஆங்கிலக்கவிதாயினி எமிலி டிக்கின்சன் எழுதியிருப்பார்.தான் இறந்து தன் சவ ஊர்வலம் தான் படித்த அதேபள்ளிக்கூட வீதி வழி செல்கிறது. அதுபோது அந்தப்பள்ளிப்பிள்ளைகள் அச்சத்தில் மூழ்குகிறார்கள். ஆக ஒரு படைப்பாளிக்குத் தான் படித்த பள்ளி என்பது மறக்கவே முடியாத பெரு விஷயமாகும்.
வெயில் -என்கிற தலைப்பு.அடுத்து வரும் சிறுகதை.மனிதன் நோயற்ற நல்வாழ்வில் வாழவே எப்போதும் விரும்புகிறான்.ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படுகிறதா என்ன? நோயிலும் மன நோய் என்கிற விஷயம் மிக மிக மோசமானது.தன்னையே மறந்து தடம் இறங்கிப்போய், பார்க்கும் எல்லோரும் பரிதாபப்படும் ஒரு ஜீவனாக மாறிப்போகிற அந்த வாழ்க்கை கொடுமையானது.மூன்றாம் பிறை திரைப்படத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு கதா நாயகியை வெள்ளித்திரையில் பார்த்து இருப்போம்.அந்த க்கதா நாயகிப்பெண்ணுக்கு குழம்பிய மனம் மீண்டும் ஆரோக்கியமாகும்.ஆனால் உயிருக்கு உயிராய் காதலித்தவனை மட்டும் அவள் மறந்து போய் நிற்பாள்.சோகம் கனத்துப்போவதை பார்வையாளன் இங்கு உணரமுடியும்.
அன்பைகொட்டிக்கொட்டி நேசித்த அந்தப்பெண்ணை வெளி நாடு சென்று தாயகம் திரும்பும் கதை சொல்லி தேடிவருகிறான்.எங்கே போனாள் அவள். அவனுக்கு அவன் குடியிருந்த வீட்டுச்சொந்தக்காரர் சொல்லிய செய்தி இது.அவள் குடும்பத்தில் எல்லோரும் ஒரு சாலைவிபத்தில் சிக்கி இறக்க அவளுக்கு த்தலையில் அடி. மூளை அனேகமாய் செயலிழுந்துபோயிற்று..பைத்தியம் பிடித்தவள் போல் காணப்பட்ட அவளை, தன்னை உயிருக்கு உயிராய் நேசித்த அந்த அவளை ,அவளின் உறவினர்கள் மன நல சிகிச்சைக்காக மா நகர மருத்துவமனை ஒன்றில் உட்புற நோயாளியாக சேர்த்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.கதை சொல்லி அவளைக்கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசையில் மன நல மருத்துவ மனைக்குச் சென்று தேடுகிறான். கடைசியாக பார்த்தும் விடுகிறான்.
'அவள் பார்வை.எங்கோ தொலைவில் வானத்தில் பதிந்து கிடந்தது.அந்தக்கண்கள்.அந்த உதடு.அக்கணமே புரிந்துவிட்டது.காவேரியேதான்.உயிரின் ஆற்றலை எல்லாம் அவை சுமந்திருந்தன.ஆனால் தோற்றம்தான் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.மொட்டை அடிக்கப்பட்ட தலையில் கொஞ்சம்போல முளைத்திருந்த முடி.ஒடுங்கிப்போன நெற்றி,குச்சியாகிவிட்ட கழுத்து,சுருங்கிப்போன தேகம்.நாலடி தோலைவில் நிற்பவள் நாலாயிரம் அடி தொலைவில் நிற்பவளைபோலத்தோன்றினாள்.என் உடலில் ஒரு தடுமாற்றமும் சோர்வும் படிவதை உணர்ந்தேன்.அவளை அழைக்க நினைத்த குரல் எழாமலேயே குரல்வளைக்குக்கீழே அடங்கி ஒடுங்கியது.'பாவண்ணன் இப்படிச்சொல்லி முடிக்கிறார்.
கதைசொல்லி அந்தப்பெண்ணைக்கண்டும் காணாதவன் என்கிறபடி மன நல மருத்துவமனை விட்டு மனம் கனத்து வெளியே வருகிறான்.வெயில் ஈட்டியாய் காய்கிறது.அவனை அவளால் நினைவில் கொண்டுவரமுடியவில்லை.அவனாலும் எதுவும் செய்யமுடியாத நிலை..அவனுக்கும் அவளுக்கும் இருந்த அன்பென்னும் சங்கிலி அறுபட்டுப்போய் அவள் வாழ்நலம் நொறுங்கிப்போய் ஒரு மன நோயாளியாய் கிடக்கிறாள்.இந்தப்பெண்ணின் அவலம் கொடுமையானது.பாவண்ணன் இதை ஒரு ஓவியமாகத்தீட்டி வாசகனுக்கு'பாரப்பா இப்படியும் ஒரு சோகத்தை' எனக்காட்டியிருக்கிறார்.சிறிய கதைதான்.பாவண்ணன் இப்படிச்சாதாரணமாக சிறிய சிறுகதை எழுதுவது வழக்கமில்லை. நெடியகதை என்பது தான் எப்போதும் அவர் சிறுகதைப்பாணி.
சாதாரணமாக ஆட்டோ ஓட்டிகள் எல்லோரும் கவிதை மாதிரிக்கு இரண்டு வரிகளை முதுகுப்புறம் எழுதிக்கொண்ட ஆட்டோக்களை ஓட்டுகிறார்கள்.சில வாசகங்கள் கனமான சிந்தனைக்கு இடம் அளிக்கவே செய்கின்றன.தமிழ் நாட்டில்தான் இப்படி.வேறு மாநிலங்களில் இது மாதிரிக்குப் பார்க்கமுடியவில்லை.மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்க இயக்கங்களில் இது போல் கவிஞர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுதி ஓங்கி ஓங்கி முழக்குகிறார்கள்.கவிஞர் பழமலய் ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டங்களில் பயிலப்பட்ட அனேக கோரிக்கை முழக்கங்களை, நாடகக்கூறுகளை,கதைப்பாடல் ஒத்த செவிக்கு உவந்த வரிகளைஅவற்றின் இலக்கிய ஈர்ப்புகண்டு 'நாங்கள் பாடினோம்' என்னும் ஒரு நூலாக வெளிக்கொண்டுவந்தார்.இந்த வகையில் போஸ்டர் எழுதி அவைகளை பிரதான வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கும் ஒரு சாதாரண தொழிலாளியின் சமூகப்பிரக்ஞையை வெளிக்கொணரும் சிறுகதையாக 'சுவரொட்டி' யை பாவண்ணன் எழுதியிருக்கிறார்.ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறந்த சிறுகதை இது.சிறுகதைகளூடே கூர்மையான விமரிசனங்களைச்செறுகி எழுதும் சமூகப்பொறுப்பும் பாவண்ணனிடம் இருப்பதை அனேக இடங்களில் காணமுடியும்.
'இந்த நாட்டுல கெட்ட வார்த்தங்க பேசுறதுல ஒரு போட்டி வச்சா,போலீஸ்காரங்களுக்குதான் மொத மெடல் கெடைக்கும்' என்று சவமாகக்கிடக்கும் அந்த பெரியப்பா என்னும் ஒரு சுவரொட்டி தயாரிக்கும் தொழிலாளி சொன்னதுவாகக்குறிப்பிடுகிறார்.
'மருந்து' என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ளது அடுத்து ஒரு கதை இந்தக்கதை, எளிய மனிதர்கள் படும் இன்னல்கள் அவைகளுக்கு இடையேயும் அவர்களின் ஒளிரும் மானுட நேர்மையை அழகாகப்படம் பிடிக்கிறது.பாவண்ணனுக்கு இயல்பாகவே அந்த மனிதர்களோடெல்லாம் நிறைந்த அனுபவங்கள் இருப்பதை அவர்தம் படைப்புக்களில் காணமுடிகிறது.பக்கத்திருப்பவர் துன்பம் அதைப்பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியாத எத்தனையோ மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களின் இருப்பை கதைகள்வழி கொண்டு நிறுவும் இந்த படைப்பாளி மனித நம்பிக்கையை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொள்கிறார் ஒரு .மனிதர் சக மனிதர் கொள்ளும் அந்த நம்பிக்கை புனிதமான ஒன்று.
இந்தக்கதையில் வரும் தாத்தா ஒரு நாட்டு மருத்துவர்.அவர் ஒரு சமுதாய மருத்துவரும் கூட.'இவன மொதல்ல மனுஷனாக்கனும்.அதுக்கப்புறம்தான் மருந்து தரணும்' என்கிற அவரின் வார்த்தைகளின் பாவண்ணனின் அடிமன வார்த்தைகள்தான். ஒருவரின் வியாதியை வைத்து பணம் எவ்வளவு ஈட்டுவது என்கிற ஈன வணிகக்கலை(?) பித்தாய்ப்பிடித்து ஆட்டுகிற அந்த மருத்துவத்தொழில் அல்ல இது.
மருத்துவர் தாத்தாவின் அணுகுமுறையில் எப்போதும் ஒரு விசித்திரம் இருக்கும்.'இந்த வேலிய தாண்டி உள்ள வந்துட்டா அது யாரா இருந்தாலும் அவுங்க நோயாளிங்க.அவுங்க நோய்க்கு மருந்து குடுக்கறது நம்ம கடமை,புரிஞ்சிதா?'என்கிற கம்பீரம் வாசகனைச்சிந்திக்க வைக்கும் அழகுச்சொல்லோவியம் பாவண்ணனின் இந்த மருந்து..
ஏதோ ஒரு மருந்து வாங்க மாணிக்கத்திடம் க்கொடுத்தனுப்பிய பணத்தை அது தேவைப்படாததுவாய்போய்விடவே அதனை நாணயமாக ஆனால் சற்று தமதமாக திரும்பவும் ஒப்படைக்கிறான். அதற்குள்ளாகவே அந்த மாணிக்கம் ஊர் திரும்பும் காலம் கூடிப்போனது. அது எப்படி எப்படி எல்லாமோ எளிய மனிதர்களை ப்பற்றித் தப்புதப்பாகக்கணக்குப்போடவைக்கிறது.
குடிப்பழக்கம் என்கிற நோயிலிருந்த மீட்ட மருத்துவர் தாத்தா மட்டும் அந்த மாணிக்கத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.நம்பிக்கை வீண் போகவில்லை. மீள்பயணத்தின் போது நிகழும் சில சமூகப்பிரச்சனைகள் அதுவே அவன் காலதாமத ஊர் திரும்புவதற்குக் காரணம் என்பதை அழகாகச்சொல்கிறது அந்த மருந்து என்னும் கதை.பாவண்ணனுக்கு நாட்டு வைத்திய சிகிச்சை முறைகளிலும் ஆழமான விஷயங்கள் அத்துப்படி என்கிற புதிய செய்தியையும் நமக்குச்சொல்கிறது..
படைப்பாளி என்பவனுக்கு பறவைகள் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு.அவை மனிதர்க்குச்சுதந்திரத்தை அறிவிப்பதாக அவன் உணருகிறான்.நினைத்த மாதிரிக்கு எல்லாம் அவை தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிடுவதாக என்ணுகிறான்.அவை தமக்கு பிடிபடாத எதனையோ சொல்லி நிற்பதாக அனுபவப்படுகிறான்.
வால்மீகி ஒரு பார்த்துவிட்ட குயில். அது அவனை மாகாவியம் எழுத வைத்தது.மயிலும் குயிலும் ஞானிகளின் தத்துவ அலசல்களில் தப்பாமல் இடம் பெறுகின்றன.அருணகிரியாருக்கும் கிளிக்கும் ஒருதொடர்பு. சுகப்பிரம்மத்தின் கிளிஉரு என அடுக்கிக்கொண்டே போகமுடியும். இலங்கை அரசன் ராவணன் சீதையைத்தூக்கிச்சென்றபோது சண்டையிட்ட சடாயு அறச்சீற்றம் எத்தனைப்பெரிய விஷயம்.
ஆங்கிலக்கவி ஷெல்லிக்கு அந்த வானம்பாடி,தமிழ்பாரதிக்கு ஒரு குயில் இன்னும் இந்த ரகத்தில் எத்தனையோ.தி.ஜானகிராமன் தன் நாவல் செம்பருத்தியில் எத்தனையோ பறவைகளின் விவரத்தை வாசகனுக்கு அள்ளி அள்ளி போடுவார். சொக்கிப்போவான் வாசகன்
.பாவண்ணனை கிளி அசைத்துப்பர்க்கிறது.பாவண்ணன் தன் கவிதைகளில் பறவையை மரத்தை நீர் நிலையை தொடாமல் அதனை முடித்துவிடமாட்டார். அப்படி ஒரு ஈர்ப்பு.இயற்கை த்தாயின் சித்திரங்கள் ஒரு படைப்பாளியை கிறங்கவே வைக்கின்றன.இந்தக்கதைத்தொகுப்புக்குத்தலைப்பாக வந்த கதை 'பச்சக்கிளிகள்'.கதையில் வரும் முத்துசாமி என்பானுக்கும் கிளிகள் கூட்டத்துக்கும் அத்தனை நெருக்கம்.அவனை கிளிகள் சுற்றி சுற்றி வருகின்றன.கொஞ்சுகின்றன.அந்தக்காட்சி பார்ப்போர் அனைவருக்கும் விந்தையாக அரிய விருந்தாக மாறி நிற்கிறது.பாவண்ணனின் வருணனை அக்காட்சியை அப்படியே கண் முன்னே கொண்டு வருகின்றது.
'என் இதயம் என்றுமில்லாதபடி வேக வேகமாகத்துடித்தது.பறப்பத்போல கையும் காலும் பரபரத்தன.மரத்தின் மீது தாவி,வானத்தை நோக்கித்தாவியப்படியே மேக மண்டலத்தின் மீது தாவிப்பறப்பது போல உல்லாச நினைவுகள் பொங்கி பொங்கி எழுந்தன.எந்த நிமிடத்திலாவது கண்ணுக்குத்தெரியாமல் அவை பறந்துவிடுமோ என்ற பதற்றத்தில் கிளிகள் மீது வைத்த பார்வையை எடுக்க யாருக்குமே மனம் வரவில்லை.முத்துசாமி அண்ணன் அந்தக்கிளிகளைத்தொட்டுத்தூக்கினார்.அவற்றின் சிறகுகளை வருடிக்கொடுத்தார்.கொஞ்சினார்.பறக்கவிட்டுப்பிடித்தார்.கன்னத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு முத்தமிட்டார்.' இவை அத்தனையும் கதாசிரியன் தனது அனுபவமாக இருக்க விழைவதையே வாசகன் அனுமானிக்க நேர்கிறது.
பறவைகளில் அந்த பச்சைக் கிளி. அதன் நாவை அன்றோ கலைவாணி இருப்பிடமாய்க் கொண்டாள். மாகவி பாரதியார் தனது வெள்ளைத்தாமரை பூவினில் இருப்பாள் பாடலில் இப்படிச் சொல்லிச்செல்வார்.வைணவ இறைமகள் ஆண்டாளுக்கும்,இறைவி மீனாட்சித்தாயுக்கும் பச்சைகிளியோடு எத்தனையோ பந்தம்.நாம் அறிந்த்வைதாம்.
'கண்காணிப்புக்கோபுரம்' என்னும் அடுத்த ஒரு சிறுகதைத்த்குப்புக்கு வருவோம்..பதாகை.காம் குறிப்பிட்டுள்ள பாவண்ணன் குறித்த ஒரு விவரணையை இந்த க்கதைதொகுப்பின் பின் அட்டை தாங்கி நிற்கிறது.அற்புதமான ஒரு இலக்கிய அளவுகோலின் துல்லிய கணிப்பு. அந்தப் பதாகையாருக்கு நன்றி சொல்லியாகவேண்டும்.
'உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவர் பாணி'என்று குறிப்பிடும் பதாகை.காம் அவருக்குப்பெருமை கூட்டி நிற்கிறது.மறைந்த அன்பர் கு.அழகிரிசாமிக்கு இந்தத்தொகுப்பை பாவண்ணன் சமர்ப்பணம் செய்துள்ளார்.சிறுகதைஉலகில் அழகிரிசாமியின் மரியாதைக்குரிய பணியை நாம் எங்கே மறப்பது.எளிய மனித மனங்கள் அழகிரிசாமிக்கு எழுத்துக்களம்.பாவண்ணனுக்கும் அப்படித்தான்.எளிய மனிதர்களின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிக்கொள்ளாத சொற்கட்டுக்களில் கோர்த்து க்கோர்த்து த்தமிழ் ச்சிறுகதைக்கு வளம் கூட்டியவர் பாவண்ணன்.
கண்காணிப்புக்கோபுரம்:
இந்தத்தொகுப்பில் முதல் கதை'கண்காணிப்புக்கோபுரம்'.அதுவே தொகுப்பின் பெயராக வந்துள்ளது. கண்காணிப்புக்கோபுரத்தின் பணியாள் அஜய்சிங்கா.அவனைப்பற்றிய சிறுகதை இது.அவன் ராணுவத்தில் சிப்பாய்.அங்கே நிகழும் அடக்குமுறைகள் குறித்து விவரமாய்ப்பேசுகிறது கதை.'மானம்,மரியாதை,கோபம்,ரோஷம் எல்லாத்தையும் காத்துல பறக்கவுட்டாதான் ராணுவத்துல சிப்பாய வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது.'கசப்பான அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம் ராணுவத்தில். பொதுவாக ஒரு ராணுவத்தின் செல்நெறி அப்படி.
'ஒரு நாளு துணிய உதறி கொடியில காயபோடும்போது அந்த ஈரம் தோட்டத்துப்பக்கமா மேஞ்சிட்டிருந்த அவுங்க வீட்டு நாய் மேல பட்டுட்து.உடனே மேடம் கீழே கெடந்த கம்பிய எடுத்தாந்து என் தோள்பட்டையிலயும் முதுவுலயும் அடியடின்னு அடிச்சிட்டா.அப்ப வாங்குன அடியில முதுகுத்தோல் கிழிஞ்சிட்டுது.ஆஸ்பத்திரியில போட்ட தையலோட தழும்புதான் அது'. என்றுசொல்லும் சிங்கா இந்திய ராணுவம் பற்றி நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறான்.
'சிலிகுரி ராணுவ முகாமில் வேலை செய்துகொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத்துடைக்கச்சொன்ன வேலையைச்செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக கீழ்படிய மறுத்தவன் என குற்றம் சுமத்தி இந்த குன்றிலிருந்த முகாமுக்கு மறு நாளே மாற்றிவிட்டதாகச்சொன்னான்.கசப்பான எத்தனையோ விஷயங்கள் ராணுவம் என்னும் குடையின் கீழ் தம்மை மறைத்துக்கொண்டு இருக்கவே செய்கின்றன.அந்த அப்பாவி ராணுவ சிப்பந்திக்கு மூன்று பெண் குழந்தைகள்.'பெரிய பொண்ணு டாக்டராவணும்.நடு பொண்ணு வக்கீலாவணும்.சின்ன பொண்ணு டீச்சராவணும்.நடக்குமா தோஸ்த்?' என்கிற அவன் மன விருப்பத்தைக் கதாசிரியனோடு பகிர்ந்துகொள்கிறான்.இப்படி எளிமையை எதார்த்தத்தை மனவலியை மானுட ப்பிரியத்தை வாசகனுக்கு தெரிவித்து ஒரு நிறைவு பெறுதல் பாவண்ணனுக்கு இயல்பாக அமைந்த எழுத்தாளுமை.
'அன்னபூரணி மெஸ்' என்னும் அடுத்த சிறுகதை. பாவண்ணனின் எழுத்து இங்கே மலராய் விரிகிறது.கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்ட அந்த ஒரு மெஸ் முதலாளி. அவரோ உழைதுப் பாடு படுவோருக்கு காசு கணக்குப்பார்க்காமல் உணவளித்து மெஸ் நடத்துகிறார்.அங்கே வேலை செய்யும் ராஜாராமன் என்னும் நல்ல ஊழியனும், காசு மட்டுமே பிரதானமாய் தீய தொழில்கள் பல செய்யும் பாலகுருவும் சந்திக்கிறார்கள்.தங்குவதற்கு அறை கேட்டு த்தேடிவந்த பாலகுருவுக்கு நல்லது சொல்லி திருத்த முயலும் அவன் தானே கெட்டு சீரழியத்தொடங்கி அறையைவிட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போகிறான்.நிர்கதியாக அந்த அறையில் விடப்பட்ட கெட்டவன் பாலகுரு ராஜாராமன் வேலை பார்த்த அந்த அதே அன்னபூரணி மெஸ்சில் வேறுவழியே இல்லாமல் வேலைக்குச்செல்லுகிறான்.
'பணத்தால சம்பாதிக்கிற மரியாதை பணமில்லாம போனதும் படுத்துடும்.தண்ணியில்லாத செடி மாதிரி.ஆனா நம்ப பண்பால சம்பாதிக்கிற மரியாத எப்பவும் பன மரம் மாதிரி நெலச்சி நிக்கும்' இப்படிப்பேசிய ராஜாராமன் காலியாகக்கிடக்கும் பாலகுரு அருந்திய அந்த மது பாட்டிலை எடுத்து தன் நாவில் சொட்டவிட்டு ருசி பார்க்கிறான்.பாலகுருவின் உடுப்புகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு அவன் கைப்பேசியையும் பர்சையும் திருடிக்கொண்டு அந்த பாலகுருவின் கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிவிடுகிறான்.தீயவை தீய பயக்கவே எப்போதும் காத்திருக்கும். தீமைகள் எப்போதும் சுறுசுறுப்பு கூடியவை. விதி வசமாகிய ராஜாராமன் தடம் இறங்கிப்போகிறான்.
ரூம் தேடி வந்த பாலகுருவோ சூழ் நிலைக்கைதியாகி அதே அன்ன பூரணி மெஸ்ஸில் வேலைக்கு சேர்கிறான்.மெஸ்சில் வியாபாரம் இப்போது ஓகோ என்று ஆகிவிட அவன் கை ராசிக்காரன் என்ற பெயர் வாங்குகிறான்.மெஸ் முதலாளியின் பாராட்டுச் சொற்கள் அவனை ஒரு ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வேலையில் சேர்ந்த ஒருவாரமாக' பணம் பணம் 'என்று முன்பு சதா நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பழைய பாழ் மனம் இப்போது எங்கோ போய்விட்டது.
மனித மனங்கள் படும் பாட்டை எழுத்துச்சித்திரமாய்க்கொண்டு வாசகனைக் கிறங்கவைக்கிறார் பாவண்ணன்.ஆனந்த விகடனில் பிரசுரமான அழகுக்கதை இது. மனிதர்கள் உயரிய பண்போடு வாழ்தலையும் பண்பைத்தொலைத்துவிட்டு அதன் மதிப்பு தெரியாமலேயே வாழ்க்கையில் உழன்று உலா வருவதையும் சிக்கலே இல்லாமல் எடுத்து வைக்கிறார்.
அடுத்துவரும் சிறுகதை'வைகுண்ட ஏகாதசி'.வைகுண்ட ஏகாதசி அன்று உயிர்விடும் ஒரு பெண். அந்த இறப்பு வீட்டு அமர்க்களங்கள் அவலங்கள் அனுசரிப்புக்கள் தெருவில் சாதாரணமாக ஒரிடம் சென்று வருவதற்கும் இடையூறாக அமைந்துவிடுகிறது.மனித மனம் தன் சக உயிர் ஒன்றின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.அதுவோ தனக்கும் நேர க்காத்திருக்கும் ஒன்று. மனித அறிவுக்குப்புரியாத விஷயம் புலப்படாத புதிர் அது.எப்படி இங்கு வந்தோம் எங்கு ஒரு நாள் போவோம் என்பது தெரியக்கூடிய எளிய விஷயமா என்ன?.
பாவண்ணன் அதனை எல்லாம் அசைபோட்டுக்கொண்டேதான் கதையை எழுதிக்கொண்டு போகிறார்.தான் சிறுவனாக இருந்த போது ஒரு சுடுகாட்டு வெட்டியான் ஒருவனின் தொடர்பும் தோழமையும் எப்படி இருந்தது என்பதனை ச்சொல்ல இந்தக்கதையைக்களமாக்குகிறார்.
அந்த குப்பாண்டி தாத்தா சுடுகாட்டுல பொணம் சுடுறவர் என்கிறார் கதைசொல்லி.
ஒரு பிணம் எரிக்க ரூபாய் நூறு தனக்குக்கூலியாக வேண்டும் என்பதில் கவனமாக கறாராக இருந்த குப்பாண்டி சுடுகாட்டுக்குப்பக்கத்திலிருக்கும் சினிமாக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து நூற்றுக்கணக்கில் அரைகுறையாக எரிந்து நாறிய பிணங்கள் தான் பணி ஆற்றும் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது நெஞ்சம் குமுறுகிறார். மெய்யான குப்பாண்டியை வாசகன் சந்திக்கிறான்.ஊர் கணக்குப்பிள்ளை பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்து ஒரு மேற்துண்டில் அதனை மூட்டையாய்க்கட்டி எடுத்து வருகிறார்.குப்பாண்டியைப்பார்க்கிறார்.'கொறவோ நெறவோ மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதின்னு சொன்னாரு கணக்கு புள்ள.என்கிறார் கதை சொல்லி.
குப்பாண்டி கணக்குப்பிள்ளையிடம் இப்படிப்பேசுகிறார்.'என்னிய என்ன கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா, செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா,அப்பா,அப்பா,அக்கா,தங்கச்சி,பேரன் பேத்தி மொறன்னா எனக்கும் அந்த மொறைதான் சாமி.இன்னும் என் ரத்தத்துடிப்பு அடங்கல.செத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவன் நான்.எங்கிட்ட எதுவும் பேசாத ,போயிடுசாமி.போயிடு.காசி பணம்லாம் ஒண்ணும் வேணாம் ,போயிடுன்னு அழுதுகினே சத்தம் போட்டாரு.கணக்குப்புள்ளயால ஒரு வார்த்த கூட பேசமுடியவிலை அப்படியே செலயாட்டம் நின்னுட்டாரு.யாரோ ஒருத்தவங்க அவருக்கு பதிலா பேச போனாரு.கணக்குப்புள்ள அவரு கைய புடிச்சி தடுத்துட்டு வாங்க போவலாம்னு திரும்பி எல்லாரயும் கூப்ட்டுக்னு போயிடாரு.'
கார்கில் யுத்தத்தில் இறந்துபோன ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கி காசு சம்பாரித்த கோட்டும் சூட்டும் போட்ட நெட்டை மனிதர்கள் குப்பாண்டி முன் சுருங்கித்தான் போவார்கள். இங்கே நம் எதிரில் சுடுகாட்டுக்கொட்டகைக்குக் கூரை வாங்கியதில் சுருட்டிக்கொண்ட பெரிய மனிதர்களும் குப்பாண்டி முன்னே தப்பமுடியாது. 'உண்மையிலேயே பெரிய மனுஷந்தான் அந்த தாத்தா'. பாவண்ணனின் குப்பாண்டி நம் நெஞ்சத்தை க்கொள்ளை கொண்டு விடுகிறார்.எழுத்து நிலை பெற்று நிற்கிறது.
'கடவுள் அமைத்து வைத்த மேடை' இந்த த்தொகுப்பில் சிறப்பாக க்காணப்படும் கதை.தினகரன் தீபாவளி மலர் 2015ல் இக்கதை வெளிவந்து இருப்பதை அறிய முடிகிறது.செத்துவிட்ட பழனி அண்ணனைப்பற்றிப்பேசும் கதை.பழனி அண்ணன் சோகமாய் இறந்து போகிறார். கதைசொல்லியின் மனம் இதை ஒப்ப மறுக்கிறது.ஏரிக்கரையின் பக்கம் போகும்போதெல்லாம் கதைசொல்லியை'அமைதியான நதியினிலே ஓடம்' பாட்டு பாடச்சொல்வார் இறந்துபோன பழனி அண்ணன். அந்த பழனி அண்ணன் தன் கண்களை மூடிக்கொண்டு இந்தப்பாட்டைக்கேட்பார்.அவர் முகம் அப்போது கனிந்திருக்கும்.தன் தந்தைக்கும் பிடித்த பாட்டு இது என்பார் பழனி அண்ணன். பழனி அண்ணனின் அந்தத் தந்தையும் கூட அருகில் எங்கோ அமர்ந்து இருந்து இந்தப்பாட்டை கேட்டுக்கொண்டு இருப்பாரோ என்றும் தோன்றும் என்கிறார் பாவண்ணன்.
மரமும் செடியும் ஏரியும் ஆறும் பாவண்ணனுக்கு மிகப்பிடித்த இடங்கள்.தன்னுடைய பிறந்த ஊர் தொடும் தென்பெண்ணையாக இருந்தாலும் சரி, பிழைப்புக்கு வந்த கர்நாடகாவில் பாய்ந்து ஓடும் துங்கபத்திரையானுலும் சரி பாவண்ணனுக்கு அவை உயிர் ஓட்டமுள்ள நதிகள்.அவை அவரோடு உறவாடுபவை.சம்பாஷிப்பவை.
'மரத்த பாக்கறன்,செடிய பாக்கறன்னு இட்ட வேலய மறந்துடாதடா.மொதல்ல ஒட்டட கோல எடுத்துகினு தென்னந்தோப்பு ஊட்டுக்கு போயி ஒட்ட்ட அடிக்கற வேலயபாரு.சுண்ணாம்பு அடிக்கற ஆளு பத்துமணிக்குலாம் வந்துருவாங்கன்னு ஒங்கப்பா சொன்னத மறந்துட்டியா?' அம்மாவின் சொற்கள் வழியாக அப்பாவே பேசுவதுபோல இருந்தது.நாக்கைக் கடித்தபடி அம்மாவைப்பார்த்து தலையசைத்துக்கொண்டே ஒட்டடைக்கோலுடன் வீட்டைவிட்டு வெளியே நடந்தேன் என்கிறார் கதை சொல்லி.
.பழனி அண்ணன் நட்டுவிட்டுப்போன முருங்கைக்கொம்பு முளைவிட்டு நிற்பதைக்கண்டு ப்பரவசமடையும் அந்தக்கதை சொல்லி,முருங்கையின் தளிர்கள்' கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் குருவி குஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன' என்று சொல்கிறார்.என்னே அற்புதமான உவமை.
பழனி அண்ணன் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு பாதி உடல் சிதைந்து கிடப்பதை நோக்கி'வெட்டிச்சாய்த்த வாழை மரமெனக்கிடந்தார்' என்று எழுதுகிறார் பாவண்ணன்.'கையில கேள்வித்தாளை வாங்கனதுமே அடுப்புல ரசம் கொதிக்கற மாதிரி மூள கொதிக்க ஆரம்பிச்சுடும்' என்று தொடங்கி 'கண்ணா மூச்சி ஆட்டத்துல புள்ளங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சிக்கும் தெரியுமா அந்த மாதிரி ஒவ்வொரு பதிலும் மனசுக்குள்ளயே ஓடி ஒளிஞ்சிக்கும்'என்று சொல்லிக்கொண்டே போகிறார்.அந்த ப்பழனி அண்ணன் ஒரு மரத்தில் சாய்ந்தபடி நிற்பார்.எதிரே புல் தரை.அதன் பச்சை பசுமை.அதன் மீது ஒரு மைனாக்குருவி தன்னந்தனியா நடந்து செல்கிறது. அப்போது அதனை நோக்கும் பழனி அண்ணன் மௌனத்தில் மூழ்கிவிடுவார்.காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தி பழனி அண்ணனை நம்முடன் பரிச்சயப்படுத்தும் பாவண்ணன் வென்று விடுகிறார்.
ஒரு வழியாக இப்படித் தீர்மானிக்கலாம்.
'வயசுல மனசு காக்கா மாரி நாலு பக்கமும் அலைபாயத்தான் செய்யும்,இல்லைன்னு சொல்லல.ஆனா நாமதான் கட்டுப்படுத்திக்கணும்.கட்டுப்படுத்தலன்னா நமக்கும் மிருகத்துக்கும் என்னாங்க வித்தியாசம் இருக்குது? கடவுள் அமைத்து வைத்த மேடைச்சிறுகதையில்இப்படிப்பேசும் எழுத்துக்கு எத்தனை எளிமை,எத்தனை உறுதி,எத்தனை பரிவு. எத்தனை ஆழம். பாவண்ணனின் எழுத்துக்களில் நேர்ப்படப்பேசும் அறம் தப்பாமல் ஓங்கி நிற்கும்
.பாசாங்குத்தனம் பயின்று -அறியா எழுத்துக்கள் அவை. அன்பின் மிகுதியால் வாசகனின் மனத்தோடு பேசுபவை.சமூக அக்கறை தொனிக்கும் இந்தக் குரல் பாவண்ணனின் எந்த படைப்பிலும் அடி நாதமாய் வெளிப்படும். அடக்கமாய் சொல்லவேண்டியதை அது வாசகனுக்குச் சொல்லி த்தன் கடமை முடிக்கும்.
-----------------------------------------------------------------------------------------.
Subscribe to:
Posts (Atom)