கணித விஞ்ஞானி ராமானுஜன் -
திராவிடப் பெருமை
என் பையன்
தன் அலுவலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தான். அவனுக்கு பெங்களூரில் ஒரு தனியார்
கம்பெனியில் வேலை.
புத்தகத்தின் பெயரையும் அதன் ஆசிரியரையும் முதலில்
சொல்லிவிடுகிறேன். ’THE FUTURE IS FASTER THAN YOU THINK ’ BY PETER H. DIAMANDIS and STEVEN KOTLER.
SIMON
& SCHUSTER PAPERBACKS, NEWYORK, LONDON
,TORONTO, SYDNEY ,NEW DELHI. 2020 JAN EDITION
பீட்டர் ஹெச். டயமண்டிஸ்.
- நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக ஆசிரியர். இருபது உயர்
தொழிற்நுட்ப நிறுவனங்களின் ஸ்தாபகர். ஹார்வெர்ட் மருத்துவக்கல்வி நிறுவனத்தில் எம் டி பட்டம் பெற்றவர். ஃபார்ச்சூன் மாகசின் தேர்வு செய்த ஐம்பது பெருந்தலைவர்கள் பட்டியலில் ஒருவர்.
ஸ்டீவன் கோட்லெர்,-
இவரும்
நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக
ஆசிரியர், விருது பெற்ற பத்திரிகையாளர். இவருடைய
படைப்புகள் நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டு முறை இவர் புலிட்சர்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்..
இந்தப்புத்தகத்தில்
நமது மண்ணின் கணித மேதை ராமானுஜம் பற்றிய குறிப்பு
( பக்கம் 79) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அதனை தீவிர வாசகர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை.
பாகம் ’ வலிமை
- பேரறிவு ’ 4 FORCE#
4 : More Genius
1913 ஆம்
ஆண்டு காம்பிரிட்ஜ் கணித மேதை ஜி ஹெச். ஹார்டிக்கு
ஒரு வித்தியாசமான கடிதம் தபாலில் வந்தது
. ‘அன்புள்ள
அய்யா’ என்று தொடங்கிற்று.
.’ ஆண்டுக்கு
20 பவுண்டு சம்பளம் பெறும் மதராஸ் போர்ட் டிரஸ்ட் ஆபிஸ் கணக்குப்பிரிவு குமாஸ்தாவாகிய நான் என்னை அறிமுகம் செய்துகொள்ள உங்களைப் பணிகிறேன்.
ஒன்பது பக்கங்களுக்கு
அக்கடிதம் நீண்டது. அக்கடிதம் முழுவதும் கணிதம்
குறித்தே. நம்பர் தீயரியில் ( Number
Theory) 120 விடைகள், ஆகப்பேரெண்ணின்
(Infinitive series) தொடர்ச்சி, பின்னத்தின்( continued fractions) கீழ் நிலைத்தொடர்ச்சி,
தகாத்தொகையீடுகள்(improper integrals) என்பன
அவை. கடிதம் தொடர்கிறது.
நான் ஒரு ஏழை.
தங்களுக்கு
நான் அனுப்பியுள்ள தேற்றங்களில் ஏதேனும் குறிப்பிடத்தக்க
விஷயம் தங்களுக்குச் சரி என்று பட்டு ஏற்றால், அவைகளை வெளியிட விரும்பிகிறேன்.
எஸ். ராமானுஜன். என்று
கையொப்பமிடப்பட்டிருந்தது.
காம்பிரிட்ஜ்
கணிதாசிரியனுக்கு இப்படி சமன்பாடுகள் தபாலில்
வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தக்கடிதம் ஹார்டியின் கவனத்தைச்சுண்டியது.
கணிதம் என்பது
உலகறிந்த கால்குலஸ் என்பதில் தொடங்கியிருந்தாலும் வெகுவிரைவிலேயே அது திகைக்கவைக்கும் பல்வேறு
திசைகளுக்கு வியாபித்தது.
ஹார்டியை அது இப்படிச்
சொல்லவைத்தது’ கட்டாயம் இவை உண்மைதான். உண்மையில்லை என்றால் யாரும் இதனை இவ்விதம்
யோசித்து யோசித்துக் கண்டுபிடித்திருக்கமாட்டார்கள்’
அப்படித்தான்
அந்தக் கணிதப்பெருங்கதை தொடங்கியது.
ஸ்ரீனிவாச ராமானுஜன் மதராஸில் 1887 ல் பிறந்தார்.
அவரின் தாய் வெளி வேலை எதற்கும் செல்லாத வீட்டுத்தாய். ஒரு புடவைக்கடை கணக்குப்பிள்ளையே அவர் தந்தை.
எண்கள் மீது
லயிப்பு கொண்ட ராமானுஜனுக்குச் சரியான கணித ஆசிரியர் தொடர்பும் கிடையாது பயிற்சி
எதுவும் இல்லை. பள்ளிப்படிப்பிலும் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. கல்லூரியில் ஒவ்வொரு
வகுப்பிலும் தேர்வாகமாட்டார். ஆனால் கணிதப்பாடத்தில் மட்டும் அப்படி இல்லை அவருடைய .கணிதபேராசிரியர்களுக்கே அவர் போடும் கணக்கு விளங்காது.
இருபது வயது
ஆவதிற்கு முன்பே அவர் தோற்றுப்போனார். நான்காண்டுகள் வறுமையில் வாடினார். கடைசியாக
நொந்துபோய்தான் ஹார்டிக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கண்ட ஹார்டிக்கு முதலில் குழப்பம்.’ இது என்ன தமாஷா இருக்குமா? என்று உடன் பணியாற்றும்
கணித ஆசிரியன் ஜான் லிட்டில் வுட்டிடம் அந்தக்கடிதத்தைக் கொண்டுபோய்க் காட்டினார்.
அது அப்படி ஒன்றும் தமாஷ் சமாச்சாரம் இல்லை
என்பது அவர்கட்கு விளங்கிற்று. அம்முடிவிற்கு
வரக் காலதாமதம் ஏதும் ஆகவில்லை.
தத்துவ ஞானி
பெர்ட்ரண்ட் ரசல் மறுநாள் அந்த இருவரையும் சந்தித்தார். அவர் எழுதினார். ’ 20 பவுண்டே
ஒரு ஆண்டுக்கு சம்பளம் வாங்கும் மதராஸ் இந்து குமாஸ்தா. அவரை இரண்டாவது நியூட்டனாகக்கண்டு அல்லவா அந்தக்கணிதமேதைகள் பேராச்சரியம் அடைந்திருந்தனர்’
காம்பிரிட்ஜுக்கு
ராமானுஜம் அழைக்கப்பட்டார். ஐதாண்டுகள் சென்றது.
பெருமைமிகு ராயல் சொசைட்டிக்குத்தேர்வு செய்யப்பட்டார்.
முதன் முதல் தேர்வு செய்யப்பட்ட I இந்தியரும் அவரே. வயதில் இளைஞரும் அவரே. இவை இரண்டுமே வரலாறு.
எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்ட
ராமானுஜம் நான்காண்டுகளில் மரணமடைந்தார். மரணத்திற்கு முன்பாக 3900 தேற்றங்களைக் கணிதசாத்திரத்துக்கு கொடையாக்கினார். விடையே காணமுடியாது கணித உலகில் புதிராக இருந்த அருங்கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்தார். இயற்பியல்,மின்பொறியியல்,
கணிப்பொறி இயல் இவைகட்கு அவரின் நுணுக்கமானஆய்வுகள் இன்றும் ஆய்வுபேருதவியாய்த்திகழ்கின்றன..
அய்யத்திற்கு
இடமின்றி கணிதப்பேரறிஞர். வரலாற்றில் ஓர் மாமனிதர்
என்றும் ராமானுஜன் உறுதிபடுத்தப்படுகிறார். இத்தனைக் கணித விஞ்ஞானக்கொடைகள் அவர் வழங்கியிருந்தாலும்
ஒரு விந்தை. அதுவரை அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுவே.’
மனதிற்கு
நிறைவு தந்த இந்தக்குறிப்புக்கள் நிச்சயம்
நெகிழவைக்கும். கணிதமேதை ராமானுஜத்தை எப்போது நாம் சிறப்பாகக்கொண்டாடுவோம். இதனை அதனைப்பாராது ஒரு பேரறிஞரைப் போற்றுவோமா? தமிழக அரசின் கவனம்
ராமானுஜத்தின் மீது விழுமா?
----------------------------------------------------------------------------------------------------------