Thursday, February 25, 2016

Thaatsanyam-story



தாட்சண்யம் -எஸ்ஸார்சி

பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார்.
'பட்னாக்ர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துங்க இலக்கியச்சிறகு இத்ழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ' என்கிறபடி.
என் நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலம் ஒன்றும் தமிழ் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகிறார். தமிழ் இலக்கிய இதழ் 'இலக்கியச்சிறகு'.ஆங்கில இதழுக்கு 'ஷைன்' என்று பெயர் வைத்திருந்தார்.
பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சிலவற்றை ஷைன் இதழில் பட்டுக்கோட்டை ராமலிங்கம் வெளியிட அந்த இதழோடு அவருக்கு தமிழ் இலக்கியச்சிறகும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு இதழ்களும் சேர்த்து அனுப்புவதுண்டு.அந்த வகையறாவில் பட்னாகார் பெயரும் சேர்ந்துகொள்ள இரண்டு இதழ்களும் அவருக்கும் சென்றிருக்கிறது.பட்னாகர் குவாலியர் வாசி.அந்த வட மா நிலப்பெரு நகரில் எத்தனையோ தமிழர்கள்வாசம் செய்கிறார்கள்.அவர்களில் சில நண்பர்கள் பட்னாகருக்கு இருக்கத்தானே செய்வார்கள்.அவர்களில் ஒருவரை தேடிப்பிடித்து தமிழ் இதழ் இலக்கியச்சிறகினை கொடுத்துவிட்டிருக்கிறார். அந்த நண்பர் ஆகா ஊகு என்று இலக்கியச்சிறகினை பாராட்டியும் இருக்கிறார். ஆகத்தான் பட்னாகர் பட்டுக்கோட்டை ராமலிங்கத்திடம் தன் கவிதைகள் சிலதுகளை மொழிபெய்ர்த்து இலக்கியச்சிறகில் போடுமாறு கேட்டுக்கொள்ள அது இப்போது என் வரைக்கும் வந்துவிட்டது.
நானும் சில பட்னாகர் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தால் நல்லதுதானே என்று 'சரி' செய்கிறேன் பதில் சொல்லிவிட்டேன்.ராமலிங்கம் கேட்டுக்கொண்டபடிக்கு ஒரு நான்கு கவிதைகளை தமிழாக்கி பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தேன்..அவை அடுத்த இலக்கியச்சிறகு இதழில் வெளியாகியது. எனக்கும் அந்த இதழ் வ்ழக்கம்போல் வந்தது.பட்னாகருக்கும் ஒரு பிரதி போயிருக்குந்தானே செய்யும்..பத்து நாட்கள் சென்றன.பட்னாகரிடமிருந்து எனக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது. தபால் கொஞ்சம் கனமாகவே இருந்தது.பிரித்த்ப்பார்த்தேன்.உள்ளாக அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகளின் நான்கு தொகுப்புக்கள் இருந்தன.அத்தனையும் அந்த பட்னாகர் எழுதியவை.கவிதை நூல்களுள்.ஒரு கடிதம் ஒளிந்துகொண்டு இருந்தது.பிரித்துப்படித்தேன்.நான் மொழிபெயர்த்து வெளியான கவிதைகள் தாங்கிய இதழை ராமலிங்கம் பட்னாகருக்கு அனுப்பிவைத்ததாகவும்.அவை நன்றாகவந்திருப்பதாக தமிழ் படிக்கத்தெரிந்த் அவர் நண்பர் படித்துக்காட்டியதாகவும் அவரே ஒரு ஆண்டு சந்தா தொகையினை ராமலிங்கத்திற்கு அனுப்பிவைத்துவிட்டதாகவும் மொழிபெய்ர்ப்பு செய்து கொடுத்த அதற்கு மிகவும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மனம் எனக்கு குதூகல்ம் ஆனது.எழுத்துப்பைத்தியங்களுக்கு மட்டும்தான் இந்த அல்ப திருப்திகள் விளங்கும் என்பார்கள்
. பட்னாகரின் கடிதத்தில் கடைசி வரியாக ஒரு விஷயம் இருக்கத்தான் செய்தது.' நான் எனது நான்கு கவிதை நூல்களை இத்துடன் அனுப்பியுள்ளேன்.அவைகளில் மொத்தம் சுமார் நானூரு கவிதைகள் இருக்கின்றன.அவைகளில் உங்களுக்குப்பிடித்த ஒரு நூறு கவிதைகளை தமிழாக்கித்தர வேண்டும்.சென்னையில் எனக்கு நண்பர்கள் உண்டு. அது ஒரு நூலாக வெளிவருதல் என் பொறுப்பு..நீங்க்ள் எனக்கு மொழிபெயர்த்து உதவத்தான் வேண்டும்.' கடிதம் முடிந்து இருந்தது.ஒரு தலைவலி முடிந்து இன்னொரு தலைவலியில் அல்லவா மாட்டிக்கொண்டுவிட்டோம்.
நான் ஏதும் கதை எழுதுகிறேன். அவை பின் புத்தகமாக வெளிவர எத்தனையோ பெரிய பெரிய மனிதர்களை சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது.காலை கெட்டியாப்பிடித்துக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில், எழுத்தாளர்களிடமிருந்து தங்கள் பொற்ப்பாதங்களை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டுதானே இந்த பதிப்பக உரிமையாளர்கள் ஆனந்தமாக உலாவருகிறார்கள்.
ஆக ஒரு விஷயம் மட்டும் சரி. இந்த பட்னாகரே அது புத்தகமாக வெளிவருதல் தன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார். முடிந்தவரைக்கும் ஒருகை பார்ப்போம்.ஒரு நூறு கவிதைகள் மொழிபெயர்த்துவிட்டு அவருக்கும் தகவல் தெரிவித்துவிடுவோம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.பட்டுக்கோட்டை ராமலிங்கம் சாருக்கும் இந்த விஷயம் கடிதத்தில் எழுதியிருந்தேன்.'புதிய சிக்கலில் நான் மாட்டிக்கொண்டு விட்டது குறித்து அவரும் எனக்கு வருத்தப்பட்டு பதில் எழுதியிருந்தார்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் பட்னாகரின் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.எனக்குப்பித்த கவிதைகளாகத் தேர்வு செய்தேன்.நான்கு கவிதைப்புத்தகங்கள் அல்லவா எனக்கு அவர் அனுப்பி வைத்து இருக்கிறார். பிடிக்காத கவிதைகளே அனேகம் இருந்தன.சொல்லிவிட்ட விஷயத்தையே திரும்ப த் திரும்பச்சொன்னால் எனக்கு கவிதைகள் சுவாரசியப்படுவதில்லை. அலுப்புத்தட்டி விடுகிறது.எப்படியோ நூறு கவிதைகள் பொறுக்கி எடுத்த நான் அவைகளைத் தமிழாக்கி விட்டேன்.திரும்பத் திரும்ப படித்து த்திருத்தி அவ்வளவுதான் குவாலியர் நகரத்து பட்னாகருக்கு நமது உழைப்பு என்கிறபடி முடிவுக்கு வந்தேன்.
மொழிபெயர்த்த கவிதை நூலுக்கு தலைப்பு என்ன வைப்பது என்று யோசித்து யோசித்து 'காலம் மாறும்' என்கிற தலைப்பு கிடைத்தது. ஒரு கவிதையின் தலைப்பும் அது.பொதுவுடைமை தத்துவத்தைச் செயலாக்கி உலகுக்கு ஒரு புதிய தரிசனத்தை வழங்கிய சோவியத் நாட்டின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை இருக்கவே செய்தது.அதனை கவி என்கிற வகையில் பட்னாகரும் உணர்ந்துதானே இருக்கவேண்டும்.ஆக சோவியத் நாடு திரும்பவும் தன் மகத்துவத்தை நிலை நிறுத்தத்தான் போகிறது என்கிற சமாச்சாரத்தை சொல்லும் கவிதை ஒன்றை அந்த பட்னாகர் எழுதியிருந்தார். அதையே என் கவிதை நூலுக்குத்தலைப்பு என முடிவு செய்தேன். எனக்கும் அக்கருத்தில் உடன்பாடு உண்டுதானே.மாகாளி கடைக்கண் வைத்து தந்த ரஷ்ய வெளிச்சம் என்று தமிழ்க்கவிபாரதி வாழ்த்திச்சென்றானே அது இல்லை என்றாகிவிடுமா என்ன? மனதில் எப்போதும் இப்படி ஒரு அச்சம்.
எழுபதுகளில் சோவியத் பயணம் செய்துவிட்டு மாஸ்கோவில் தமிழன் என்று ஒரு நூல் எழுதிய அன்றைய காங்கிரசுக்காரர் தருமலிங்க.ராமச்சந்திரன் எனக்கு நண்பர். சோவியத் சிதறுண்டு போகும் என்று ஆரூடம் எழுதிய அவரை நான் வெறுத்தேன். பொய் பேசுகிறார் என்று முடிவு கட்டினேன்.பின்னர் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் உங்களுக்குத்தெரியாதா என்ன?எல்லாம் காலம் நிகழ்த்திவிட்டது. மாகாளியை எங்கே போய் த்தேடி முறையிடுவது. புதுக்கவிதை தாடிக்காரர் பிச்சமூர்த்தி மீது எனக்கு வருத்தமுண்டு.'மனு வெள்ளம்போச்சி,மார்க்சு வெள்ளம் போகும்' என்றல்லவா ஒரு கவிதை தந்தார்.மனு வெள்ளம் போகவேண்டும்தான் மார்க்சு வெள்ளம் கூட அப்படியா என்ன?
பட்னாகருக்கு வந்துவிடுகிறேன்.
'காலம் வெல்லும்' என்கிற பெயர்வைத்து பட்னாகரின் நூறு கவிதைகளை மொழிபெயர்த்து வைத்தவுடன் பட்னாகருக்குத்தகவல் சொன்னேன்.
' எனக்கு புத்தகம் அச்சில் வரவேண்டுமே' அவரிடம் பசினேன்.
'சென்னையில் எனக்கு தோழியர் உண்டு அவர்கள் விலாசம் தருகிறேன். அவர்களுக்கு நீங்கள் நேராகவே மொழிபெய்ர்த்தவைகளை அனுப்பிவையுங்கள்'
'அவர்கள் இதனை புத்தகமாக வெளியிடுவதெல்லாம் செய்துவிடுவார்கள்தானே'
'நிச்சயமாக.அவை ஒரு புத்தகமாவது என் பொறுப்பு.விடுங்கள்'
எனக்கு பட்னாகர் பதில் சொன்னார். மொழிபெயர்த்த நூறு கவிதைகளை அவர் சொல்படி சென்னை விலாசத்துக்கு அனுப்பி வைத்தேன். கவிதைகளை பெற்றுக்கொண்ட தோழியர் சென்னை மகளிர் கல்லூரி ஒன்றில் இந்திப்பேராசிரியர்.தமிழ் மொழியும் நன்கு அறிந்தவர் இவை பட்னாகர் எனக்குச்சொன்னவைகள். நானா சென்னைக்குப்போய் பார்த்துவிட்டு வந்தேன். சில நாட்கள் ஆகியது.
'ஒரிஜனல் கவிதைகளை செராக்ஸ் எடுத்து அனுப்புங்கள்.அப்போதுதானே மொழிபெயர்ப்பு எப்படி வந்து இருக்கிறது என்பது எனக்குத்தெரியும்' இப்படி எழுதிக்கொண்டு எனக்கு ஒரு கடிதம் சென்னையிலிருந்து வந்தது.
'ி புத்தகம் அச்சிட தன் கை காசு செலவு செய்பவன் எது சொன்னாலும் சரிதானே என்று நான்கு கவிதைபுத்தகங்களில் பென்சிலால் மார்க் செய்துகொண்ட கவிதைகளை செராக்ஸ்கடைக்கு எடுத்துப்போய் நகல் எடுத்தேன்.அதனைச் சுருட்டி கிருட்டி கொரியர் தபாலில் சென்னை முகவரிக்கு அனுப்பிவைத்தேன். என் வேலை முடிந்ததாய் எண்ணிக்கொண்டேன்.ஒரு வாரம் கழித்து எனக்கு மீண்டும் தபால் வந்தது.அனுப்பிய கவிதைகள் பத்திரமாய் சென்னையிலிருந்து எனக்குத்திரும்பி வந்தன.
'நன்கு வந்திருக்கிறது மொழிபெய்ர்ப்பு. நீங்கள் தேர்ந்திட்ட கவிதைகள் அத்தனையும் 'காலம் மாறும்' என்கிற அந்த பெயரிலேயே அச்சிட்டுவிடலாம் .நீங்கள் முன்னுரை எழுதும்போது எனது பெயரை மறக்காமல் எப்படிக்குறிப்பிடவேண்டுமோ அப்படி குறிப்பிட்டுவிடுங்கள்.வேறு ஒன்றும் நான் எதிர்பார்ப்பதில்லை.புத்தகம் வெளியானதும் இரண்டு பிரதிகள் மட்டும் மறக்காமல் என் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அரசு நூலக ஏற்பு ஆணை வாங்கித்தருவது விஷயமாக அதுவும் நீங்கள் விருப்பப்ப்ட்டால் என்னோடு தொடர்புகொள்ளலாம்.நன்றி'
படித்துமுடித்தவுடன்.தலை கிர்ரென்றது.
பட்னாகருக்கு கொஞ்சம் கோபமாக ஒரு கடிதம் எழுதினேன். இனி மொழிபெயர்த்த கவிதைகளின் அச்சாக்கம் என்ன ஆவது என்கிறபடிக்கு. உடனே எனக்குப் பதில் கடிதம் வந்தது.
அவர் எங்கே எனக்குப்பதில் எழுதப்போகிறார் என்று கூட நினைத்தேன். ஆனால் பதில் வந்ததே.
'ஒன்றும் தவறில்லை. சென்னை நண்பர் அவருக்கு ஏதோ சந்தர்ப்பம் சரியில்லை. மற்றபடிக்கு மிக நல்ல மனிதர்.கவிதைகளை அப்படியே வைத்திருங்கள்.வேறு யாராவது பார்க்கிறேன். இத்துடன் என் புகைப்படம் அனுப்பியுள்ளேன்.இதனையும் அந்த மொழிபெயர்த்த கவிதைகளோடு பத்திரமாகவையுங்கள்.அட்டைபடத்துக்கு தேவைப்ப்டும்.ஆகத்தான் அனுப்பியுள்ளேன். போட்டோவை பின் அட்டையில் கூடபோடுங்கள் தவறில்லை'.
மொழிபெயர்த்த கவிதைகள் மற்ற கடிதங்கள் அத்தனையும் பரணையில் எடுத்துப்போட்டேன்.'கிடக்கட்டும் சனியன்' என்று சொல்லிக்கொண்டேன்.நாட்கள் ஓடின. பட்டுக்கோட்டை ராமலிங்கத்துக்கும் நடந்தவைகள் அத்தனையும் தகவல் சொன்னேன்.
'சிலர் இப்படித்தான். நல்லா கவிதைங்க எழுதுறாரு ஆனாலும் என்ன செய்ய' இது அவர் தந்த செய்தி. பட்னாகர்
குவாலியரில் தனது நாற்பத்தைந்தாவது தொகுப்பு ஒன்றுக்கு என க்கவிதைகள் எழுதிக்கொண்டுமிருக்கலாம்.அவரிடமிருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை.பரணையில் இருப்பவைகள் எனக்கு மன உறுத்தல் தர ஆரம்பித்தன.அந்தக்கவிதைகள் கூட என்னிடம் பேசுமா என்ன? கொஞ்சம் பாருங்க நீங்க நெனச்சா புத்தகம் அச்சாகிடும்.மனசு வையுங்க' இவைகளைச் சதா சொல்லிக்கொண்டே இருந்தன.
எப்படியோ சிங்கி அடித்து ஒரு பத்தாயிரம் ரூபாய் புரட்டிக்கொண்டு அருகிருக்கும் சிதம்பரம் அது வன்னியர் தெரு என்றுதான் நினைக்கிறேன் அங்குள்ள தட்சிணாமூர்த்தி புத்தக அச்சகத்தாரிடம் சென்றேன். மொழிபெயர்த்த அந்தக் கவிதைகளை ஒப்படைத்தேன்.
மேலட்டைக்கு மும்பை பிரசித்தம் அந்த குதிரை சவாரி வீரசிவாஜி படம் ஒன்று என்னிடம் இருந்ததை மறக்காமல் கொண்டு சென்றேன்.பின்னட்டையில் பட்னாகர் புகைப்படம் வரவேண்டும் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.
தவறுகள் சரிபார்க்க ஒறுமுறை சிதம்பரம் வன்னியர்தெரு அந்த தட்சணாமூர்த்தி அச்சகம் போனேன். பத்து நாள் கழித்து எனக்கு 'காலம் மாறும்' கவிதை நூல் முந்நூறு பிரதிகள் லோகல் லாரி பார்சலில் வீடு தேடிவந்தது.அச்சாகிய புத்தகத்தை தடவிப்பார்த்துக்கொண்டேன்.பின்பக்க அட்டையில் பட்னாகர் படம் லட்சணமாகத்தான் அச்சாகி இருந்தது. மீண்டும் என் வீட்டுப் பரணையில் பட்னாகரின் கவிதைகள் ' காலம் மாறும்' புத்தகங்கள் என உரு மாற்றிக்கொண்டு துயிலத்தொடங்கின. கிறுக்கு மனம் விட்டால்தானே.
ஒரு பத்து புத்தகங்கள் எடுத்துக்கட்டி பட்னாகருக்கு தபாலில் அனுப்பிவைத்தேன். ஒருவர் ஏதோ இரண்டு புத்தகத்தை
தபாலில் அனுப்பவேண்டுமென்று ஒரு முடிவோடு தபால் ஆபிசுக்குப்போனால் போதும். பார்சலைக்கட்டியது சரியில்லை என்பார்கள்,ஒட்டியது சரியில்லை என்பார்கள்,குவாலியர் உள் நாடா வெளி நாடா என்பார்கள். யாரும் திறந்து பார்க்கும்படிக்கு என்வெலப்பின் மூடிப்பக்கம் இருக்கவேண்டும் என்பார்கள், விலாசம் தெளிவில்லை என்பார்கள்,பின்கோடு எழுதவில்லையா என்பார்கள், அனுப்புனர் விலாசம் தெளிவாக எழுதிக்கொண்டுவாங்களேன் என்பார்கள், பதிவஞ்சலா, வெறும் பார்சலா நூல அஞ்சலா, அச்சிட்ட புத்தகங்களா ஒன்றும் சரியாக எழுதவில்லை நீங்கள், என்பார்கள் சரியானசில்லரையையாவது கொடுங்கள் தபால் அனுப்ப வந்துவிட்டீர்கள் என்பார்கள் நமக்கு ரசீது என்று ஒன்று கொடுப்பதற்குள் நம் முகத்தையே பார்க்காமல் எப்படித்தான் இவை அத்தனையும் செய்வார்களோ.
பட்னாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதனில் .புத்தகங்கள் பத்து அனுப்பியது சொல்லியிருந்தேன்.
கடிதம் கிடைத்ததுதான் தாமதம் பட்னாகர் டெலிபோனில் பேசினார்.
'புத்தகங்கள் வந்துசேரவில்லை.கொஞ்சம் பாருங்கள்.தபால் ஆபிசில் விசாரியுங்கள். உங்களால் முடியும் முடிந்தால் என் சரியான விலாசம் எழுதி சிரமம் பாராமல் பத்து பிரதிகள் வைத்து மீண்டும்ஒரு பார்சலை அனுப்பித்தாருங்கள்' என்றார்.
அடுத்தவன் படும் சிரம்ங்கள் என்னவென்று கண்டே கொள்ளாமல் தன் காரியம் மட்டும் சாதிக்க நினைப்பவர்கள் நன்றாக கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு அய்யம் வர நண்பர் விழுப்புரம் பழமலய்தான் எனக்கு ப்பொட்டில் அரைந்தமாதிரி விடை சொன்னார்,'கையில பேனா எடுத்துட்டா அவன் எழுத்தாளன் ஆயிடுவான் மற்ற நேரம் அவன் சராசரியா மனிதன் இல்ல அதுக்கும் கீழயும் போயிடுவான்'. பட்னாகர் விஷயத்திலும் அது சரி என நினைத்துக்கொண்டு மீண்டும் ஒரு பத்து புத்தகங்களைக்கட்டிக்கொண்டு தபால் ஆபிசுக்குப்போய் பட்னாகருக்கு அனுப்பி வைத்தேன். ஒருவாரம் சென்றது. பட்னாகர் மீண்டும் போனில் பேசினார்.'சார் இரண்டு பார்சல்களுமே ஒரே நாளில் எனக்குக்கிடைத்துவிட்டது.மிகுந்த நன்றி. முடிந்தால் புத்தகத்தை புத்தக விமரிசனத்துக்கு என்று அங்கு அங்கு இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிவையுங்கள்.உங்களுக்கும் நல்லது என்று ஆலோசனை சொன்னார்.
படபட என வந்தது. எழுந்தேன்.
பரணையில் கிடந்த அத்தனைப்பிரதிகளையும் கீழிறக்கி ஒரே கட்டாகக்கட்டி கோயம்புத்துர்ர் புத்தக விற்பனையாளர் ஒருவர் விலாசம் எழுதி கொட்டை எழுத்துக்களில் 'டு பே' என்றும் போட்டுக்கொண்டு பார்சல் லாரி அலுவலகம் சென்றேன். கோயம்புத்தூரில் அப்படி யார் என்று மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் அவர் நண்பர்தான் பார்சல்மீது அனுப்புனர் விலாசம் சரியாக எழுதி என் தொலைபேசி எண்ணும் குறிப்பிட்டு இருந்தேன். அவ்வளவுதான்.என் வேலை முடிந்தது.
கோயம்புத்தூரிலிருந்து தொலைபேசியில் என்னை யாரும் இதுவரை கூப்பிடவில்லை யார் கேட்டாலும் நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.
--------------------------------------------




.

Tuesday, February 23, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்l




ஆத்ம ஞானம் -கலில்ஜிப்ரான்

 மனிதன் கேட்கிறான்.
ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்'
அவர்  சொன்ன விடை .
பகல் இரவின் அந்தரங்கங்களை
உங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்
ஆத்ம ஞானம் பற்றிக்கேட்க
 உங்கள் செவி 
விடாய் பெற்றிருக்கும்
சிந்தனை செறிந்த 
அச்சொற்களை நீங்கள் அறிவீர்கள்
அக்கனவின் நிர்வாணக்கனவுகளை
உங்கள் விரல்கள் 
 ஸ்பரிசிக்கலாம் நிச்சயமாக
ஆன்ம ஊற்று எழ விழையும்
சிற்றுருமல் சாதிக்கும்
 கடல் நோக்கி ஓடும்
ஆழம்காணாமுடியா ஆன்மக்கருவூலம்
கண்களே  அறியும்
அறியமுடியா ச்செல்வத்தை எது கொண்டு அளப்பது
கம்போ அல்லது வேறு கருவிகொண்டோ 
அளவிட விழைவாயோ
கங்குகரைகாண்முடியாத 
அளப்பரிய ஆன்மக்கடல்.
உண்மையை அறிந்தேன்
 சொல்லாதே அப்படி
உண்மை யொன்று 
தெரிந்ததாய்ச்சொல்
ஆன்மாவின் பாதையைக்
கண்டதாய்ச்சொல்லாதே
ஆன்மாநின்வழி 
நடை பயில்வது கண்டதாய்ச்  சொல்
ஆன்மா எத்தடத்திலும் பயணிக்கும்
ஆன்மா கோடு வரைந்து பயணிக்காது 
 ஒரு செடியின் தண்டென நீட்டமாய் வளராது
எண்ணிலடங்கா இதழ்கள்
 போர்த்திய  ஓர்  தாமரைப்பூ
தன்னில் மலர்வதே ஆன்மா.
------------------------------------------.

கலில் ஜிப்ரான் கவிதைகள்l



உள்கட          -கலில்ஜிப்ரான்

பெண் பூசாரி கேட்டார்.
'இறைவழி பாடு பற்றிச்சொல்லுங்கள்.'
அவரின் விடை வந்தது.
துயரமும் தேவையும் 
நெருக்கத்தானே உமது வழிபாடு
மகிழ் நிறைவும்
 வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது
அத்தருணம் இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது 
உம்மையே விரித்து வாழும்
பெருவெளியொடு ஏகமாகிடும் அனுபவம்
உமது இருள்துயரத்தை
 மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை
 மகிழ்வையும் கூட்டித்தான்
ஆன்மா வழிபாடென்று
 அழைப்பு விடும்பொதெல்லாம்
 அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல் தொடர்கிறது.
தொடரும் அழுகை 
அது மகிழ்சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு
 பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் 
 அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்கு ச்செல்கிறாய்
தேடும்அது கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
 இல்லை என்றால் என்ன
ஆனந்தப்பரவசமும்
 இனிய சந்திப்பும் நிச்சயம்
வேண்டும் இது வேண்டும் அது
இப்படித்தானா  செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்தும் விடுமா
குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உய்ர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு நன்மையே
 வேண்டுமென ஆலயம் போனதுண்டா
உன் வேட்டல் 
அவன் செவி அப்போதும் ஏறாது
கண்ணுக்குப்புலனாகா ஆலயம்
நின்னுள்  கட உள்
எப்படி கடப்பது 
நான் சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும்மாட்டர்ர்
அவராக உன் வாய்வழி வந்து
 ஏதும் உரைக்கக் 
அது கேட்கும் அவர்க்கு.
கடலும் மலையும் வனமும் பிரார்த்திக்கிறது 
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலை வனம்
 நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடு நிசிப்போதில் அவைகளின் வேட்டல்
 கவனி  அது கேட்டிருக்கும்

' கடவுள் நம் இருப்புக்கும்
 நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே 
உள் போய் நம் விருப்பாகிறது

நம்முன் பகலும் இரவுமாய்
 மாறி மாறி விரிவது
இறை விருப்புத்தான்

யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
 எம்பாற் பின்னே பிறப்பது
இறைநீயே எமது விருப்பு.
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
 யாம் அனைத்தும் பெறுகிறோம்'

----------------------------------------------------------------








Monday, February 1, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்




கலில் ஜிப்ரான் 

அழகென்பது


'அழகு எது என்று சொல்வாயோ'
 கவியின் கேள்வி
 விடையோ வினாவாய் .
எங்கே அழகைத்தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழகே வழிகாட்டி
அமைய க்கிடைக்கலாம் அழகு

அழகு பற்றி இன்னும்  ?
அழகே மனமிறங்கி அதனை 
அமைத்துக் கொடுக்க 
அது சாத்திய மாகலாம்.

மனம் துன்புற்றவனும் 
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்.
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை.
இளந்தாய் ஒருத்தி
 தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு
 நம்மிடையே  நடப்பதொப்பது அழகு.

உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்.
'அப்படி இல்லை
அழகென்பது வலிமை
 அது அஞ்சவும் வைப்பது.
கீழிருக்கும் இப்பூமியை
 மேலிருக்கும் அந்த விண்ணை
உலுக்கிப்போடும் இளம் புயல் அது.

களைப்பும் சலிப்பும் கொண்டவன்
 விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு.
அழகு நம் உணர்வின் உயர் தளத்தில்
 நம்மிடம் சம்பாஷிப்பது..
ஒரு சிறிய ஒளிக்கீற்று
 சூழ்நிழலைக் கிழித்துக்கொண்டு ப்
பாய்வதொக்கும்.

ஆயின் மனக் கவலையில் 
தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
 அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்.
அதனைத்தொடர்ந்துதானே
புரவிகள் குளம்பொலி
இறக்கைகளின் படபடப்பு
சிங்க கர்ஜனை.

மா நகர இரவுக்
காவலாளி பகர்கிறான்.
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்.

நண்பகல் உழைப்போனும்
 நடைப்பயணம் செல்வோனும் சொல்கிறார்கள்.
கதிரவன் மறை போதே சாரளமாகி
அழகுப்பெண் பூமி மீது
 ஒய்யாரமாய்ச்சாய்ந்திருப்பாள்.

மாரிக்கால ப்பனி
 போர்த்தியவை சொல்லும்
குன்றின் மீது தவழ்ந்து
வசந்தகாலத்தில் உலா வரும் அழகு.

கோடை வெயிலில்
 கதிர் அறுப்போர் சொல்வர்,
உதிர்ந்த இலைகளிடை 
 அழகுக் கூத்திடுவாள்
 கண்டோம் யாம்
அவள் கூந்தலிடை
 பனி தழுவிச்சென்றதங்கே.

 அழகு குறித்து ப்
 பலரும் பகன்றவை.
அழகு குறித்தா இல்லை இல்லை

உம்  நிறைவேறாத் தேவைகள் அவை
அழகு, தேவையொடு 
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிலிர்ப்பு.
நாவில் நீர் சொட்டவைக்கும் விடாயோ 
வெறுங்கையின் நீட்சியோ இல்லை அது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் 
ஆன்மாவின் ஆனந்த லயிப்பு

பார்க்கும் உருவும்
 நீ கேட்கும் பாடலும் இல்லை அது.

கண்களை மூடிட க்காட்சி யாவது
 செவிகளை ப்பொத்திடக்கேட்க முடிவது
பிளவுண்ட மரக்கிளையின் மையப் பகுதி
 சொட்டும் அத்திரவமில்லை அது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் 
சிறகும் இல்லை அது
பொதெல்லாம் மலர் அவிழும் நந்தவனம் 
தேவ கன்னியர் கூட்டத்து ஓயாப்பேரணி.
.
 ஆர்ஃபலிசு ( Orphalese)  நகரத்து  மாசனங்களே
வாழ்க்கையின் புனித முகம் 
தெரியத்தெரிய
 மனித வாழ்க்கை அழகு.

வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ.
இதோ ஆடி முன்னே 
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு.

காலத்தை வெல்பவன் நீ
நின்முன்னே நிற்கும் அவ்வாடியும் நீ..
-----------------------------------------------------