Wednesday, November 19, 2014

cuddalore neelakandan panioyvu

தொடரும் சிரிலின் பாரம்பரியம் - தோழர் நீலகண்டனுக்குப்பணி நிறைவு


நீலகண்டன். கடலூர் நீலகண்டன்..தொலைபேசி அலுவலத்தில் எழுத்தராய்ப்பணியைத்துவங்கியவர்.அண்ணாமலையில் படித்த அன்றைய வேதியல் பட்டதாரி. சீர்காழிக்காரர்.நாளும் தமிழிசையால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தரின் ஊர்க்காரர் என்றால் மிகச் சரியே.
. என்.எஃப்.டி.இ தொழிற்சங்கம் கடலூர் என்றால் அது தோழர் நீலகண்டனைச் சேர்த்துத்தான்.பருப்பு இல்லாமல் கல்யாணமா என்பார்கள். அப்படித்தான் கடலூர்மாவட்ட த் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட களம் என்றால் அங்கே தவறாமல் இருப்பவர் தோழர் நீல கண்டன்.
அமுதத்தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆராக்காதல் கொண்டவர்.இயல்பாய்க்கவிதை படைப்பவர். தமிழ் நேசர் தோழர் முத்தியாலு முன்னாள் மாநிலச்செயலரால் 'ஆயிரத்தில் ஒருவன்' என ப்போற்றப்பட்ட பெரியமனதுக்காரர்.மகாகவி பாரதிக்கு தமிழால் சொந்தமாகிப்போனவர்.அசப்பில் கடலூர் மண்ணின் எழுத்தாளர் ஜெயகாந்தனை ஒத்தவர். நீலகண்டனின் செம்மாந்த மீசையும் தலைமுடிப்போக்கும் இலக்கிய நேசமும் அப்படித்தான்.கடலூர் தொலைபேசி மாவட்டத்தில் நாற்பதாண்டுகள் பணியாற்றி நிறைவோடு இப்போது ஓய்வுபெறுகிறார்.
கடலூர் மாவட்டம் என்றால் தொழிற்சங்க இயக்கங்கள் என்றும் ஓயாது. கடலூரின் அலைகள் அறச்சீற்றத்தால் அமரத்துவம் பெற்றவை.உழவாரம் தூக்கிய சமயக்குரவர்அப்பர்பிரானை தூக்கிக்கரை சேர்த்த க்கடலலைகள் அவை. கடலூர் தொலைப்பேசித்தொழிற்சங்க அரங்கில் தோழர்கள் சிரில் ஜகன் ஆர்கே த்மிழ்மணி ரகு ரெங்கநாதன் என இன்றளவும் தொடரும் அதன் போற்றுதலுக்குரிய போர்க்குணம் மிக்கத்தலைமை.வர்க்க ஞானம் ஒளிருமொரு வழித்த்டம்.
தோழர் நீலகண்டனின் தொழிற்சங்கப்பணி அது நித்தம் தொடரும் வரலாறு.இன்றுதானே வந்தன இந்த டிஜிடல் பேனர்கள் அன்றைக்கு எல்லாம் தட்டி ஒட்டி அதனில் தூரிகை கொண்டு எழுதி எழுதித்தான் விளம்பரங்கள் செய்தி தந்தன..
தொலைபேசி ஊழியர்களின் அகில இந்திய மா நாடு.சென்னையில் விஜய் சேஷ மஹாலில் நடைபெற்றது நாமறிவோம்.. சென்னையைச்சிவக்க வைத்த அந்த அகில இந்திய மா நாட்டில் விளம்பரத் தட்டி எழுதும் குழுவுக்குத்தலைமை தோழர் நீலகண்டன்.. நம் தோழர் ஜகனின் தேர்வு அப்படி அமரர் ஜகனின் அன்புக்குப்பாத்திரமான கடலூர் தோழர்கள் பலரில் நீலகண்டன்.தலை மாணாக்கர்.
பெருங்கவி ஞானக்கூத்தன் தலமையில் கடலூர் கலை இலக்கிய ப்பெருமன்றத்தில் நிகழ்ந்த கவியரங்கில் அவர் வாசித்த கவிதையிலிருந்து ஒரு வரி,

பார்வையை மேலே வைத்தல்
உயர்வென எண்ணி
காலடியில் மிதிபடுவதும் தெரியாமல்
தப்படிகள் தடுமாறி நடந்தது போதும்!

எத்தனை ஆழமான அழுத்தமான செய்தி. அது நம் எல்லோருக்கும் தான்.காக்கைக்குருவி எங்கள் சாதி என்னும் மாகவிபாரதியின் அன்பனல்லவா நீலகண்டன் .தொழிற்சங்க இயக்க பிரச்சனையில் பழிவாங்குதல் மாற்றலில் சிதம்பரம் சென்று பல ஆண்டுகள்:பணிபுரிந்து தொழிற்சங்க வழிகாட்டுதலில் மட்டுமே பின்னர் மாவட்டத்தலை நகர் திரும்பியவர்.எண்ணற்ற தணடனைகள் அவரின் இயக்க ப் போர்க்குண்ததிற்கு சவாலாக நின்றன.நிலையின் திரியாத நேர்மையாளர் அவர்.
தன் திருமணத்தை தேவையற்ற வைதீக ச்சடங்கு தவிர்த்து புதுமையாக நடத்திக்காட்டிய உறுதியாளர்.நல்ல புத்தகங்களின் நண்பன்.புரட்சிக்கருத்துக்களின் கருவூலம்.அஞ்சாமை அவரின் செல் நெறி.
அவரின் துணைவியார் தமிழாசிரியர். கடலூர் தொலைபேசி அலுவலத்தில் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை அனைத்து தமிழ் விழாக்களிலும்
சிறப்பாய்ப்பங்கேற்பவர்.நீலகண்டனின் மகளார் மருத்துவம் பயிலும் பாரதி வாலன்டீனா இருமுறை சிரில் அறக்கட்டளையினரின் தமிழுக்கு ஊக்கம் விருதுக்கு த்தேர்வு செய்யப்பட்டார்.நல்ல தமிழ்க்குடும்பம் அவருடையது.
தனது திருமண வெள்ளிவிழாவினை கடலூர் டவுன் ஹாலில் அவரின் நண்பர்களோடு கொண்டாடிய புதுமையைச்செய்தார்.இனிய விருந்தோம்பலோடு ,கடலூர் தொழிற்சங்க ஆசானும் இலக்கியவாதியுமான எழுத்தாளர் சிரிலின் சிறுகதைத்தொகுதி 'வேலைகொடு' நூலினை மறு பதிப்பு செய்து அனைவருக்கும் வழங்கிய் தமிழ்ப்பற்றாளர்.தமிழையும் சிரிலையும் தனது இரு கண்களாய்க்கொண்டிருப்பது நமக்குப்பெருமை.
கடலூர் மாவட்டச்சங்கத்தின் பொருளராக ப்பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் நீலகண்டன்.ர்கடலூர் மாவட்டச்சங்க த்தலமைக்கு எழுத்துப்பணியால்.எப்போதும் உதவுவது தோழரின் பெருங்குணம். ஆங்கிலமோ அல்லது தமிழோ அவர் மனந்தோய்ந்து உருவாகும் கடிதங்கள் என்று மட்டுமில்லை இன்ன பிறவும்தான்.
கடலூர் தொலைபசிமாவட்டத்து தொழிற்சங்க மகளிர்தினம்,சிரில் அறக்கட்டளையாரின் தமிழ் விழா, கலை இலக்கிய பெருமன்ற நிகழ்வுகள் எல்லாவற்றிலும் தன் முத்திரை பதித்தவர்..
கடலூர் தமிழ் இலக்கிய அமைப்புக்கள் பலவற்றோடும் தோழமை உறவு பேணும் பெரும் பேற்றுக்குச்சொந்தக்காரர்.
தோழருக்கு ப்பணிிலிருந்து ஒய்வு. அலுவலகப்பணியிலிருந்து மட்டுமே.இனி த் தொழிற்சங்கப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் தோழரின் வருகை கூடுதலாய் வலிவும் பொலிவும் இசைந்து மெருகு சேர்க்கும்.
அவரைமோதிப்பார்த்த இன்னல்கள் அவரை வியந்து நோக்குவது மட்டுமே எமக்குக் காட்சியாகிறது.தோழரே உமது சேவையும் எளிமையும் கடலூர்.மண்ணுக்கு மாசற்ற செல்வங்கள்.
தொடரட்டும் உமது சேவை
சிறக்கட்டும் இந்த மானுடம்....
---------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, November 12, 2014

puusai -story


பூசை -எஸ்ஸார்சி

அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்' கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு சாமானுங்க தர்ரது எல்லாம் அப்புறம் பாக்கலாம் இண்ணைக்கு இந்த கார்டுக்கு சாமான் தர முடியாது' என்று சொல்லியதாக அவனிடம் சொன்னாள்.
முத்துலச்சுமி ஒன்றும் சும்மா போய்வருபவளும் இல்லை எங்கு போகச்சொன்னாலும் அதில் ஒரு கணக்கு இல்லாமல் இருக்காது.அவனுக்கு ரேஷன் கடையில் சர்க்கரை அல்லது திருனெல்வேலிக்காரர்கள் பாஷையில் சொன்னால் சீனி மட்டும் போதும்.சீனி மட்டும் எதற்கு என்று யாரும் கேட்டுவிடவேண்டாம். ரேஷன் கார்டில் அவனுக்குள்ள பாத்தியதையை எப்படி சமூகத்துக்கு அவன் அறிவிப்பது. அவனுக்கும் கூட சர்க்கரை வியாதி. அது யாரை விட்டு வைத்து இருக்கிறது.எனக்குரொம்ப நாளாக ஒரு ஐயம் இதனை அந்த தாமிரபரணிக்காரர் சீனி வியாதி என்று சொல்லாமல் சர்க்கரை வியாதி என்று ஏன் சொல்கிறார்களோ.
அவனுக்கும் அந்த ரேஷன் கடை சர்க்கரை வாங்கி ஒன்றும்பெரியதாக ஆக வேண்டியதில்லை.ஆனாலும் தமிழ் நாட்டில் இன்கம்டாக்ஸ் கட்டுபவர்கள் வீட்டில் நூற்றுக்கு தொண்ணூத்து ஒன்பது சதவிகிதம் விலையில்லா மின்விசிறி ,மிக்சி கிரைண்டர் ,எல்லாம் சமத்தாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆயுத பூஜை அன்று சந்தனம் குங்குமம் வைத்து படையல் நடக்கும்போது அவைகட்கும் மாலை மரியாதை கற்பூர ஆரத்தி எல்லாம் உண்டு
ரேஷன் கடைக்காரர்கள் அவனை எதற்கு வரச்சொன்னார்களோ அவன் யோசித்து யோசித்துபார்த்தான். ஒன்றும் கதையாகவில்லை.நேராக ரேஷன் கடைக்கே இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டுபோனான்.ரேஷன் கடையில் பில் போடுவதற்கு ஒரு க்யூவும் சாமான்கள்கொடுப்பதற்கு இன்னொரு க்யூவும் இருந்தது.அவ்ன் அவ்விடம் வருவதை வரிசையில் நிற்பவர்கள் யாரும் விரும்பவில்லை.அவர்கள் முக லட்சணம் அதை அறிவித்தது.
'பன்னெண்டு மணிக்கு ரேஷன் கடைக்கு வந்தா இங்க யாரு வுடுவா'
'நான் சாமான் வாங்க ஒண்ணும் வருல. ஒரு விவரம் கேக்கத்தான் வந்தேன்'அவன் ஒரு பெரியவருக்குப்பதில் சொன்னான்.பில்போடுபவர் எட்டிப்பார்த்தார்.
'சாருக்கு என்ன சேதி'
'நேரா வரச்சொன்னிங்களாம் அதான் வந்தேன்'
'யாரு சொன்னா?'
'பக்கத்து வீட்டு அம்மா சொன்னாங்க'
'கார்டு எதுக்கு அவுங்ககிட்ட கொடுத்தீங்க'
அந்த விஷயம் எல்லாம் பில் போடுபவருக்கு சொல்லவா முடியும்.அவன் வாய் திறக்காமல் அப்படியே நின்றான்.பில் போடுவதற்கு வரிசையில் நின்ற கூட்டம் அவனை வேண்டா வெறுப்பாக பார்த்தது.
'போயி நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு இங்க வாங்க மத்ததை பேசிக்குலாம்' பில் போடுபவர் பதில் சொன்னார்.க்யூ வரிசையில் நின்ற மனிதர்களுக்குச்சின்ன மகிழ்ச்சி. அவன் அவர்கள் முகங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
'சரி நாளைக்கு வர்ரன்'
பதில் சொல்லிப்புறப்பட்டான்.
மறு நாள் காலை ஒன்பது மணிக்கு முன்பாகவே சென்று ரேஷன் கடை வாயிலில் பார்த்தான். அந்தக்கடை வாயிலில் யாரும் இல்லை.ஒரு பெண் நாயைச்சுற்றி சுற்றி நான்கு ஆண் நாய்கள் வட்டமிட்டு நின்றன.உயரம் அதிகமான நாயுக்கு அங்கே கொஞ்சம் மரியாதை அதிகம்போல் தெரிந்தது.அந்த அளவுக்கு உயரம் இல்லை என்றாலும் சுறுசுறுப்பு அதிகம் உள்ள நாய் ஒன்று அதன் பக்கத்தில் நின்றது. நானும் ஒன்றும் சளைத்துவிடமாட்டேன் என்று சொல்லிக்கொண்ட மாதிரி வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது. நான்கு நாய்கள் சுற்றி இருப்பதில் பெண் நாயுக்கும் அதிக இம்சை இல்லை ஒரு சவுகரியம்தான்

ரேஷன் கடைமற்றபடி வெறிச்சோடிக்கிடந்தது
. . . .
..'அப்புறம் வரலாம் இப்போது ஒன்றும் அவசரமில்லை' என்ற முடிவோடு வீட்டுக்குத்திரும்பி வந்தான்.
பணி ஓய்வு பெற்றதிலிருந்து அவனுக்குப் பத்து மணிக்குத்தான் சாப்பாடு அந்த பழக்கம் இப்போதுதான் வந்தது.காலை எட்டு மணிக்கு சமையல் ரெடியாகி அவனைச்சாப்பிட அழைத்தவர்கள் பத்து மணியானாலும் இப்போதெல்லாம் கவலைப்படாமல்தானே இருக்கிறார்கள்.பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை ஆக அதுவும் சரியாகவே இருக்கும் அவன் நினைத்துக்கொள்வான்.
ரேஷன் கடைக்குப்போகவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவனுக்கு நான்கு சப்பாத்தி தயார் செய்து கொடுத்தார்கள்.ஊறுகாயைத்தொட்டுக்கொண்ட அவன் அதனைச்சாப்பிட்டுவிட்டு நேராக ரேஷன் கடைக்குப்போனான். ரேஷன் கடை வாயிலில் இப்போது பத்து பேருக்கு அதிகமாக வரிசையில் நின்றார்கள்..அவன் பதினோறாவது நபராக வரிசையில் நின்றான்.அவனுக்குப்பின்னால் யாரும் இல்லை. இனி வருவார்கள். துர்ரமாக பத்து பேருக்கு நின்று கொண்டு ஊர் கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் இந்த க்யூவில் இடமுண்டு எனபதைத் தெரிந்துகொண்டான். கால் வலியோ இல்லை எதுவோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டு அவர்கள் மரத்தடியில் நின்றார்கள்.மெட்ராஸ் அய்.வந்து இருப்பதாகவும் அதனால் தள்ளி நிற்பதாகவும் சொல்லிய இரு பெண்கள் அங்கே தெரிந்தார்கள். க்யூவில் அவர்கள் முறை வந்துவிட்டால் அவர்கள் டாண் என்று பில் போடுபவரின் அருகே வந்து நின்றுவிடுவார்களாம் இது விஷயம் அங்கு வரிசையில் இருந்தவர்கள் சன்னமாய்ப் பேசிக்கொண்டார்கள்.
க்யூவில் நிற்கின்றவர்களுக்கு ரிலிவர் என்றபடி வசதி எல்லாம் உண்டு. அவன் கேள்விப்பட்டான். தண்ணீர் மோட்டார் போட்டுவிட்டு வந்தேன் இல்லை அடுப்பில் குக்கர் வைத்து இருக்கிறது என்பார்கள்.பையன் வரிசையில் நிற்பான் அவனுடைய அப்பா வந்து ரிலிவ் செய்வார்.மாமியார் நிற்பாள் மருமக்ள் ரிலிவ் வந்து செய்வாள். பக்கத்துவீட்டுக்காரர் க்யூ வரிசையில் நிற்பார் பிறகு அவர் தூக்கிக்கொண்டு நிற்கும் அந்த ரேஷன் கார்டின் ஒரிஜினல் உரிமையாளர் வந்து அவரை ரிலிவ் செய்வார்.
'கார்டு யாரு பேருல இருக்கோ அவுங்க மட்டும் வருணும் அப்பத்தான் வெரிபிகேஷன் பண்ணினதா கணக்கு ஆவும்' ரேஷன் கடைக்காரர் ஓங்கிக்கத்திக்கொண்டிருந்தார்.
'கார்டு எம் பையன் பேருல இருக்கு அவன் வரமுடியாது. தினம் முப்பது மைலு தாண்டி வேலைக்கு போயாவுணும் நான் அவன் ஆத்தா காமாட்சி .எம்பேரும் கார்டுல இருக்கு நானு என்ன செய்வேன்' ஒரு கிழவி புலம்பிக்கொண்டிருந்தாள்.
'எனக்கு மேல இருந்து என்னா உத்தரவோ அது தான். தெரிதா நீ சொல்றது எல்லாம் எனக்கு உத்தரவு இல்லே. கார்டு யாரு பேருல இருக்கோ அவுங்க வருணும்'
'சாரு அவுனுக்கு லீவு கெடையாது எப்படி இங்க வ்ருவான்'
'ஞாயித்துக்கிழமைக்கு நாங்க ரேஷன் கடக்கி வேலைக்கு வரம் உன் பையன இங்க வரச்சொல்லு பாட்டி , ஒண்ணும் பேசாத கெளம்பு கெளம்பு' ரேஷன் கடைக்காரர் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார்.
அவன் அந்த கிழவியையேபார்த்துக்கொண்டிருந்தான்.அந்தக்கிழவி கால்கடுக்க ஒரு மணி நேரமாவது க்யூவில் நின்று இருக்கலாம்.அவனுக்குப்பாவமாக இருந்தது.
அவனுக்கு அலுவலகத்தில், மேல் அதிகாரியாய்ப்பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஒருவர் ரேஷன் கார்டும் கையுமாக ரேஷன் கடைக்கு இப்போதுதான் வருகிறார்.
'யாரு சந்திரனா' அவனைக்கேட்டார்.
'ஆமாம் சார் வணக்கம்' அவன் பதில் சொன்னான்.
அவனுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்த புதிய மனிதரை ஏற இறங்க பார்த்தனர்.
'நீங்க ரிடையர் ஆகி பத்து மாசமா'
'ஆமாம் சார்'
' நீங்க நவம்பர் நா..மார்ச் செட்டில்மென்ட் எல்லாம் முடிஞ்சிதா பென்ஷன் ரெகுலராவருதா'
அவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது.இப்படி எல்லாம் யாரும் அவனை எங்கே கேட்டார்கள்.அவன் பென்ஷன் வாங்குவது யாருக்கும் பிடிக்கவில்லையோ என்னவோ.
' பென்ஷன் வருது. எனக்கு பணம் வந்ததை பேங்க்குல போட்டு இருக்கன்'
' இங்க பக்கத்துல ஐயொபி பேங்குலதான் நான் பென்ஷன் வாங்குறன்'
'நான் கொஞ்சம் தள்ளி போயி இந்தியன் பேங்குல வாங்குறன்'
'பசங்களுக்கு செய்யவேண்டியக்கடமை எல்லாம் முடிஞ்சி போச்சுதா'
அவனை யாரும் இப்படி அப்படி எல்லாம் கூட யாராவது கேட்டார்களா என்ன? பற்கள் அத்தனையும் வெளிக்காட்டினான்.' சாரு முடிச்சூரு கிராமத்து அந்த ரெட்டை அய்யனாரு புண்யம் ரெண்டு பொண்ணுவுளயும் கட்டிக்குடுத்துப்புட்டன் நல்லா இருக்குதுங்க'
'வேற என்னா வேணும்,உங்க சம்சாரம் எப்படி உடம்பு சொகமா சுகர் கிகர் உண்டுமா'
'எனக்கு சுகர் எட்டிபாக்குதுன்னு டாக்டரு சொன்னாரு.மருந்து சாப்புடறன்.என் மனைவிக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. அப்ப அப்ப கொஞ்சம் முட்டிகாலு வலிம்பா அதான்'
'ஏன் வாகிங்க் கீகிங்க் கூப்பிட்டு போறதுதானே,என்ன செய்யுறுறீரு வூட்டுல' அந்த அதிகாரி பவ்யமாக விசாரித்தார்.அப்போதுதான் அவன் பார்த்தான்.அந்த அதிகாரி அவனுக்கு முன்பாக க்யூ வரிசையில் இப்போது தன்னைப்பொறுத்திக்கொண்டு விட்டார்..சுற்றும் முற்றும் பார்த்தான் அவரவர்கள் அவரவர்களின் வேலை எதனையோ கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த அதிகாரி போலவே இன்னும் ஓரிருவர் வரிசையில் நைசாக நுழைந்து தங்களை பத்திரமாகபொறுத்திக்கொண்டனர். வரிசையில் நின்ற சிலருக்கு இது விஷயம் எல்லாம் தெரியாமலும் இல்லை.மனம் பொறுக்க முடியாதவர்கள் சிலரின் முகங்கள் மட்டும் வீங்கி இருந்தன.
அந்த அதிகாரியின் ரேஷன் கார்டில் விலையில்லா மின் விசிறி, கிரைண்டர், மிக்சி வேட்டி சேலை.இவை வழங்கப்பட்டதற்கான முத்திரைகள் அழகாக இருந்தன. எட்டிப்பார்த்ததில் இதுகள் தெரிந்தன. ஒரு மாவட்டத்துக்கே அதிகாரி. சம்பளம் மாதம் ஒரு லட்சம் தாண்டியும் இருக்கலாம்.
'பென்ஷன் அய்யாவுக்கு எவ்வளவு வருது' தைர்யத்தை வரவழித்துக்கொண்டு அவரைகேட்டு விட்டான்.
'இதுவரைக்கும் யாரும் இப்படிக்கேட்டதில்ல. இருந்தாலும் நீங்க கேட்டாச்சி.நான் சொல்லுணும் மாசம் அம்பது வருது அப்புறம்' அதிகாரி அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
கால் வலிக்காரர்கள் கண் வலிக்காரர்கள் எல்லோரும் பில் போட்டு வாங்கிக்கொண்டார்கள் அல்லது கார்டு வெரிபிகேஷன் முடித்துக்கொண்டார்கள்.அந்த உயர் அதிகாரி உலக நடப்பு எல்லாம் அவனோடு பேசினார். அவனும் தன் பங்குக்கு உலக் செய்திகளை தெரிந்தவரை சொல்லி மகிழ்ந்துகொண்டான்.மலாலா நோபல்பரிசு வாங்கியது, மீனவர்கள் அய்ந்து பேருக்குத்தூக்குத்தண்டனை விதித்த சீலங்கா ராஜபக்சே அரசின் கொடூரம், சிவசேனைக்கு இப்போது என்ன ஆயிற்று மும்பையில், முல்லைப்பெரியாறு அணை உயர்த்திக்கட்டப்பட்ட விவகாரம்,பெங்கலூரு பார்ப்பன அக்கிரகாரத்து சிறைக்கூட வாஸ்து விஷயங்கள்,ஒன்று விடாமல் அவனும் அந்த அதிகாரியும் அலசிக்கொண்டிருந்தனர்.ரேஷன் கடையில் கூடியவர்கள் அவர்கள் இருவரின் சம்பாஷணையைக்கேட்டு கண்களை மூடி மூடி த்திறந்து அதிசயித்துப்போனார்கள். வரிசையில் நிற்காமல் பாதியில் அவர் நுழைந்தது எல்லாம் இனி யாரும் பேசிவிடத்தான் முடியுமா என்ன?
அந்த அதிகாரியின் கார்டு வெரிபிகேஷனும் முடிந்து,
'அப்ப நான் கிளம்புகிறேன்' என்று அவனிடம் விடை பெற்றுக்கொண்டார். அவன் நேற்று கடைக்கு வந்து திரும்பிப்போனான். இன்று வந்து க்யூவில் நின்று அந்த அதிகாரிக்கு வழி விட்டான். இப்போது பில் போடுபவர் முன்னால் நின்று வெரிபிகேர்ஷன் முடித்துக்கொண்டிருந்தான். இந்த மாத ரேஷன் சர்க்கரைக்கு அவன் பில் வாங்கிக்கொண்டான்.அவனுக்குப்பின்னால் ஒரு பத்து வயது பையன் நின்று கொண்டிருந்தான்.
'ஏன் சாமான் வாங்கதானே வந்த தம்பி கையில பை ஒண்ணும் இல்ல' அவனிடம் கேட்டுவைத்தான் அவன்.
'சாமான் வாங்கியாச்சி இப்ப வெரிபிகேஷனுக்கு நிக்கறன்' பையன் அவ்னுக்குப்பதில் சொன்னான்.
'கார்டு யாருபேருல இருக்கோ அவுங்க வருணும் தெரியாதா தம்பி' அவன் விஷயம் தெரிந்த மனிதனாய் அவனிட்ம் காட்டிக்கொண்டான்.
'பில்ல்லு போட்டாச்சின்னா சாமானுவ வாங்கறத பாக்குணும்' பில் போடுபவர் அவனுக்கு சட்டென்று பதில் சொன்னார்.அவன் ஒன்றும் பேசாமல் பில்லை சாமான் போடுபவரிடம் கொடுத்துவிட்டு கொண்டு வந்த பை ஒன்றின் காதுகளை அகட்டி சர்க்கரை எடை போடும் இயந்திரம் முன்னால் நின்று கொண்டு இருந்தான்.
'சக்கரை மட்டுமா'
'ஆமாம்' அவன் எடை போடுபவருக்கு ப்பதில் சொன்னன்.
சர்க்கரை இரண்டு கிலோ எடை போட்டு அவன் பையில் அவர் கொட்ட அது அவன் முன்பாகவே நாலா பக்கமும் சிதறி ஓடியது. பையின் இரண்டுகாதுகளும் அவன் கையிருகக் கீழே பார்த்தான் மஞ்சள் பையின் அடிப்பகுதி முழுவதும் கிழிந்து விட்டிருந்தது. அதன் ஓட்டை வழி பாக்கி சர்க்கரையும் கீழே விழுந்தபடி இருந்தது.
'சாமான வாங்குனா பட்டு பட்டுன்னு நவுறுணும்' என்றார் அடுத்து லயுனில் இருந்த ஒரு முதியவர்.
அவன் அங்கயே நின்றான். கீழே குனிந்து கொட்டிக்கிடக்கும் சர்க்கரையை கைகளால் கூட்டிக் கூட்டி அள்ளினான்.அதை எடுத்துப்போவதற்குத்தான் பை சரியில்லயே ஆக ஒரு பக்கமாக ஓரம் செய்து விட்டு யாரும் பை ஏதும் தருவார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பத்து வயதுப்பையன்தான் ஒரு பிளாஸ்டிக் பையை த்தன் டிராயர் பையிலிருந்து எடுத்து அவனுக்குக்கொடுத்தான்
பில் போடுபவர் விடு விடு என்று எழுந்து வந்தார். அந்த ப்பையன் கொடுத்த பிளாஸ்டிக் பையினுள் அவன் தரையில் சிந்தவிட்ட அந்த சர்க்கரையை அள்ளிப்போட்டு அவன் கையில் கொடுத்து ;'ரேஷன் கார்டை பத்திரமா வூட்டுக்கு எடுத்துப்போங்க சாரு அது ரொம்ப முக்கியம்' சொல்லி நிறுத்தினார்.
முல்லைபெரியாறு அணை உசந்து போனது மலாலா நோபல் வாங்குனது எல்லாம் தெரியுது ஆனா கையில இருக்கிற மஞ்ச பை அடி கிழிஞ்ஜி போனது மட்டும் அய்யாவுக்குத் தெரியல' எடை போடுபவர் அவனைப்பார்த்துச் சொல்லிவிட்டு எடைபோட்டுக்கொண்டே இருந்தார்.அவ்ன் 'வூட்டுக்குப்போனதும் பாரு அந்தப்பொட்டக்கழுதைக்கு இண்ணைக்கு பூசை வசமா இருக்கு' அவன் முணு முணுத்துக்கொண்டே தன் வீடு நோக்கி நடக்கிறான்..
---------------------------------------------------------------------------------------------------------
'...... ....,


. .

Tuesday, October 21, 2014

raajamkirushnan maraivu


எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது இலக்கியச்சிந்தனை விருது என விருதுகள் அணிவகுத்து அவருக்குப்பெருமை கூட்டின.
தருமமிகு சென்னையில் தான்வாழ்ந்த வீடும் தன் கணவன் கிருஷ்ணன் மறைந்த பிறகு தனக்கு இல்லாமல் போக நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்க்கு எழுத்தாளர் திலகவதி தோழமை கை கொடுத்தார். ஆக திருவான்மியூர் பக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அவர்க்கு அடைக்கலம்தந்தது.
பின்னர் அவர் போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர்கள் பராமரிப்பில் தங்கி இருப்பதாக அண்மையில் காலமான நண்பர் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி எனக்குச்சொன்னார்.ராஜம் கிருஷ்ணன் மருத்துவ மனையில் படுக்கையிலிருந்துகொண்டு சொன்ன நினைவு சொச்சங்களை தொகுத்து ஒரு நூலாக அது வெளிவந்திருப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். வெளியிட்டவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப்படித்து இதனை வெளியிட்டிருந்தால் அவருக்கு கூடுதல் பெருமை சேர்த்திருக்கும் சு கி .என்னிடம் இப்படி ப்பகிர்ந்து கொண்டார்.
கலைஞ்ர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சமீபத்தில்தான் ராஜம் கிருஷ்ணன் படைப்புக்களை அரசுடமை ஆக்கி மூன்று லட்சங்கள் அவருக்குத்தந்து தமிழ்ப் புண்ணியம் கட்டிக்கொண்டார். எழுத்துப்படைப்பாளிக்கு பிரக்ஞ்னை உள்ளபோதே கொடுத்து கௌரப்படுத்தியது ஒரு நல்ல விஷயம்.இந்த வகையில் நிதி உதவி பெற்றோர் அது போது கொஞ்சம் எண்ணிக்கையில் அதிகம்.
.தமிழக ஆட்சிக்கட்டிலில் இப்போதுள்ளவர்கள் எப்படி என்ப்து.எல்லாம் நல்ல புத்தகம் வெளியிடுவோர் உங்களுக்குச்சொல்லி இருப்பார்கள்.என்னை மன்னிக்கவும் நான் ராஜம் கிருஷ்ணனுக்கு வருகிறேன்.

ராஜம் கிருஷ்ணனை கடலூர் தொலைபேசிதொழிற்சங்கம் சார்பில் ஒரு மகளிர்தின விழாவுக்கு நாங்கள் அழைத்திருந்தோம்.பெண் எழுத்தாளரை அழைப்பது மகளிர் தினவிழாவில் பேசவைப்பது கடலூர் தொலைபேசி ஊழியர் மரபு. வெண்ணிலா, தமிழரசி, பத்மாவதி விவேகானந்தன்,சைரா பானு என பெண்டிர் அனிவகுத்து கடலூர் வந்திருக்கிறார்கள். சென்னை தொலைபேசித்தோழியர் ஏ டி ருக்மணியும் ராஜம் கிருஷ்ணனோடு கடலூருக்கு வந்திருந்தார்.
கடலூரில் சிரில் பெயரால் ஆண்டுதோறும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் விழா ஒன்று சிறப்பாக நடத்துகிறார்கள். தமிழ் நாட்டு தமிழ் அறிஞ்ர்கள் இது விஷயம் அறிவர். புதுவை நூற்கடல் கோபாலைய்யர் தொடங்கி ஈழத்துக்கவி காசி ஆனந்தன்.வரை இங்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.இது நிற்க.
ராஜம் கிருஷ்ணன் (1998) கடலூர் நகரம் வந்து தொலைபேசி ஊழியர்கள் மகளிர் தின நிகழ்வில் பெண்கள் சமூக அரங்கில் எப்படி முன்னணியில் நின்று பணி ஆற்றிவது என்பது பற்றி உருக்கமாகப்ப்பேசினார், தோழியர் ஏ டி ருக்மணி ராஜம் கிருஷ்ணன் பெருமைகளை எல்லாம் சொல்லி நிகழ்ச்சிதொடங்கி வைத்தார்.கடலூர் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் அன்பர்கள் இன்றும் கூட அதனை நிறைவோடு நினைத்துப்பார்ப்பார்கள்.
நிகழ்ச்சி முடிந்து இரவு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் தோழியர்கள் இருவரையும் வண்டி ஏற்றி அனுப்பிவைத்தோம். ரயில் வருமுன்பு திருப்பாப்புலியூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உலக நடப்புக்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்
.பெண்ணை ஆணின் பின் இணைப்பாக.வைப்பதில் மதங்களின் பங்கு ,சாதியும்(!) நாதியும் அற்று பெண் வாழ்வதில்தான் ஆண் இனத்தின் கீழ்மை வெளிச்சம் பெறுவது, பெண்குழந்தையை இரண்டாந்தர பிரஜையாகமட்டுமே இந்தச் சமூகம்.அங்கீகரிப்பது. பெண்களுக்குஇட ஒதுக்கீடு வழங்குவதில் ஆண்கள் அரசியல் நடத்துவது, விதவைப்பெண்கள் காலம் காலமாக பட்ட நெடிய துயரம் இவைபற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். கூர்மையான நகைச்சுவை,ஆழ்ந்த அறிவு,பளிச்சிடும் தெளிவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்க ஊற்றாய்க்கொப்பளிக்கும் இயல்பான ஆர்வம் இவை அவரிடம் தரிசிக்க முடிந்தன..
தன் கணவரின் ஈடில்லா ஒத்துழைப்பு.த்னது படைப்பு சார்ந்த தொடர் பயண அனுபவங்கள். எல்லாம் இடை இடையே பங்கு பெற்றன.

எனது முதல் புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு' விருத்தாசலம் அரசு பீங்கான் ஆலை, சேஷசாயீ இன்சுலேடர் ஆலை இவை மூடப்பட்டது தொடர்பாக நான் எழுதியது.. அந்த ப்புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு பற்றி' ராஜம்கிருஷ்ணன் நல்லதொரு விமரிசனமெழுதி அது கணையாழியில் வெளிவந்ததும் எனக்குப்பெருமை.
ராஜம்கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்- உப்பளத்தொழிலாளி துயர் பேசும் அற்புதமான ஒரு படைப்பு. அதில் அவர் சொல்லும் ஒரு விஷயம் அவர் எந்த நிறம், யார் பக்கம் என்பது அறிவிக்கும்.

'அரைக்கஞ்சி அவள் கருணை
பட்டினி அவள் கருணை
அறியாமை மௌட்டிகம் அவள் கருணை
அடுத்தவனை நம்பி அவன் அமுக்கிட்டு மேலேறுறதும்:நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு சாவறதும் அவ கருணைதான்'

எந்தப்பகுதித்தொழிலாளர்களையும் தன் படைப்புக்குள் கொணர்ந்த முற்போக்காளர் அவர். என்றும் தமிழ்மொழியில் உழைப்பாளி இலக்கியம் அவர் நினைவு போற்றும். ராஜம்கிருஷ்ணனை நினைவுக்குக்கொண்டு வரும் ஒரு பெண் எழுத்தாளருக்கு இனி இந்த இலக்கிய உலகம் காத்துக்கிடக்கும்.
--------------------------------------------------------------------------------------------
....

Friday, October 17, 2014

munnurai - birammalipi
பிரம்ம லிபி இது என்னுடைய ஏழாவது சிறுகதைத்தொகுப்பு.

வண்டி யோட்டி ஒருவன் தானிய மூட்டைகள் சுமந்த பரரவண்டியை ஓட்டிக்கொண்டே செல்கிறான்.. காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு மண்சாலையில் நடக்கின்றன. காளைகளின் கழுத்துப்பட்டை சதங்கை ஒலியும் கொம்பில் தொங்கும் மணி களின் ஒலியும் கூத்து அரங்கொன்றை மனத்திரையில் காட்சிப்படுத்துகின்றன. முன் இரவுப்போது.சாலை நெடுகிலும் அடர்ந்து உயர்ந்த மரங்களின் வரிசை. மலர்ந்து மணம் வீசும் பூங்கொத்துக்ககளை அவை தாங்கி நிற்கின்றன.பறவைகள் இரவுக்கு த்தம் இருப்பிடம் வந்துவிட்டதை க் கூவி க்கூவித்தம் சொந்தங்களுக்கு அறிவிக்கின்றன
ஆகாயத்தில் சிரிக்கும் பொக்கை நிலவோடு தாரகைகள் சூழ இடை இடையே மேகங்கள் நடனமாடுகின்றன.தூரத்தில் ஒரு நீர் நிலை இருப்பதை த்ழுவிச்செல்லும் குளிர் காற்று ச்சுகம் உறுதி செய்கிறது.சாலை ஓரத்தில் நடப்பட்டிருக்கும் குத்து மைல் கற்கள் கடந்து வந்ததும் கடக்க இனி காத்திருப்பதும் எத்தனை தூரம் என்பது பேசுகின்றன.
வண்டியோட்டிக்கு த்தலையில் ஒரு முண்டாசு. கையில் கடிதோச்சி மெல்ல எறியும் ஒரு மூங்கில் கொம்பு.. தன்னை அறியாமலே தன் வாய் எதுவோ ஒரு ராகத்தை நீட்டிப்பாடுகின்றது. வண்டியோட்டியின் ஆழ்மனம் சொல்லொணா நிறைவு ஒன்றை இக்கணம் அசைபோடுகிறது. .
ஒரு சிறுகதை எழுதி முடித்ததும் படைப்பாளி பெறும் மன நெகிழ்வு இது.

பிரம்ம லிபி -இந்த தொகுதிக்கு தலைப்பாகி வந்திருக்கும் சிறுகதை. கபாலி என்னும் என் நண்பனின் மகள் +2 படிக்கும் அருணா தற்கொலை செய்துகொள்கிறாள்.அவளின் அத்தைக்கு தன் தங்கச் சங்கிலியை ஏதோ ஒரு நிகழ்வுக்கு கழுத்தில் அணிந்து செல்லக் கடனாகக்கொடுக்கிறாள். அதனை அந்த அத்தை புருஷன் சர்ராயம் குடிக்க வாங்கிச்சென்று விற்று விடுகிறான். அருணா தன் அப்பாவுக்குத்தெரியாமல் நடந்துவிட்ட இந்த நிகழ்வுக்காக செய்வது அறியாமல் தூக்குப்போட்டு மடிகிறாள்.
அத்தை அருணாவின் இறப்புக்கு வருகிறாள். துக்கத்தில் கலங்கிப்போயிருக்கும் இருக்கும் சகோதரனுக்கு ஆறுதலாக க்கொஞ்ச காலம் தங்கி இருப்பதாக க்கணவனிடம் பொய்சொல்லி விட்டு தன்னால் நடந்துவிட்ட இந்தத் துயரம் தாங்கமாட்டாமல் ஊரைவிட்டு எங்கேயோ சென்று விடுகிறாள்.
ஒரு நாள் இறந்த மகளின் டைரியை தற்செயலாகப்புரடட்டுகிறான் கபாலி. தன் மகள் அருணா தன் இறப்புக்குக்காரணத்தை ஸ்கூல் டைரியில் ப்பதிவு செய்து இருப்பதைப்படிக்கிறான். தன் மனைவியிடம் நடந்த அந்த விஷயம் எப்படிச் சொல்வது. ஆக அடக்க முடியாத சீற்றத்தோடு தன் தங்கையின் வீடு தேடிப்போகிறான்.
அங்கு சென்று தன் தங்கை, தன் அண்ணன் தங்கி வீட்டில் இருப்பதாய்ப்பொய்சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டதை அக்கணம்தான் கேள்விப்படுகிறான்.எதிரே தன் தங்கையின் கணவன் வழக்கம் போல் குடித்துவிட்டு போதை தலைக்கேறி நிலைதடுமாறி வீடு வந்து சேர்கிறாான். இருப்பிடம் தேடி வந்த மைத்துனனை தன் வசம் இன்னும் பாக்கி இருக்கும் சாராயத்தைக்குடிக்கச்சொல்லிக் குழந்தையாய் க்கெஞ்சுகிறான்.
தன் தங்கை. தன் மகள் தன் தாரம் ,தன்தாய்.எல்லோரையும் தான் ஏமாற்றி விட்டதை நினைத்துக்கபாலி குமுறுகிறான்.குடிகாரக்கணவனைத்தன் தங்கைக்கு அவன் தான் மணம் முடித்துவைத்தவன். அன்று ஏமாந்துபோனான் இந்தக் கபாலி.
காலமாகிப்போனக் கபாலியின் தாய் எப்படி நொந்துபோயிருப்பாளோ. இன்று தன் மகள் நடந்துவிட்ட இந்த எதுவும் தன் தாயுக்குத்தெரியவேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு 'அத்தை பாவம்' என்று அவள் டைரிக் குறிப்பை முடித்து இருப்பதுவும் அவனுக்கு மனதில் ரணமாய் நெருடுகின்றது.
இவற்றிர்க்கு எல்லாம் விடை காணமுடியாத கபாலி ' எதுவும் அவன் போட்ட எழுத்துப்படி 'என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.
தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லுவார் மனிதன் ஒரு புதிர்.அந்த ப்புதிர் அவிழ்க்கப்படும்வரை இறைவன் இம்மண்ணில் இருக்கவே செய்வார் என்று. மாற்று வழி அறியாது துயரம்தொடர்கின்றவரை மனிதன் இறைவனிடம் சென்றுதான் மண்டியிட்டு நிற்பான் இப்படி இயம்புகிறது மார்க்சியம். ஆனாலும் தத்துவங்கள் என்றும் பசி ஆற்ற மாட்டாதன
. மனித இருப்பும் உழைப்பும் அன்பெனும் விருடசம் தழைக்க ஆதாரமாகும்போது மட்டுமே அமரத்வம் பெருகின்றன. அவ்வழி ப்பயணித்து இறை நிலை என்பது மானிட உன்னதம் என்றும் கொள்ளலாம்
சுழல் என்னும் சிறுகதை மனிதன் காசு என்னும் ஒரு விஷயத்துக்கு பின்னால் ஒரு நாயாய் குழைந்து அனுபவமாவதைப்பேசுகின்றது.பேராசை இல்லை என்று வெற்று வாயால் சொல்லமட்டுமே முடிகிறது.அடி மனத்தில் அந்த ஆசை மண்ணுக்குள் உயிர்ப்புபோல எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.நல்லவனைப்போல வேடமிட மனிதன் எத்தனை ஆலாய்ப்பறக்கிறான்.தோலை உறிக்க உறிக்க இல்லாதுபோகும் வெங்காயம்போல மனிதனின் வைராக்கியங்கள் நெருக்கடியில் தம் முகம் தொலைத்துவிடுகின்றன. .ஏமாற்றுக்காரர்கள் சின்னத்தனமாய் அயல் மொழி பேசுவதும் பகட்டு வித்தை காட்டுவதும் நெளித்துக்கொண்டு நிற்பதுவும் தொடரமட்டுமே வாழும் இச்சமுதாய அரங்கம் அமைக்கிறது.
சுழல் இக்கதையைத்தன் 'சங்கு' இதழில் வெளியிட்ட எனது பாசமிகு நண்பர் வளவதுரையன் யான் பெற்ற நட்புச்செல்வம்.மாற்றுஅறியா அன்புக்குரியவர். என் நன்றிக்கும்தான்.
'ஆகவே' என்னும் சிறுகதை சுரண்டப்படும் வர்க்கத்திற்கு எதிராக த்தன்னை வரிந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் கூர்மை எப்படி மழுங்கிப்போகிறது என்பது பேசும். அதிகாரமும் அகங்காரமும் பொதுவுடமை இயக்கத்தை விழுங்கும் ராகுவும் கேதுவும். மனித அன்பை புரிந்துகொள்ளுதல் முதலாளித்துவ சதி என்று பேச ஆரம்பித்தால் போதும் அதிகாரக்கதவுகள் அங்கே திறந்துகொள்ளும். ஆய்வு செய்யப்படாத விஷயங்கள் ஆய்வு கட்டாயம் செய்யப்பட வேண்டிய முடிச்சுக்கள் ஏராளமுண்டு.நேர்மையான ஆய்வாளர்களின் வருகைக்குத்தேவை பொதுவுடமை அரங்கில் அசாத்தியம் நேர்மை என்பதற்கு உடன் இலக்கணம் யார் சொல்வது?.
எழுத்தாளர் சத்யானந்தன் என்றும் என் மரியாதைக்கு உரியவர். அவர் ரசித்துப்படித்த கதை நாய்ப்பிழைப்பு, மனிதர்கள் நாய்களோடு எப்படி வாழ்ந்து பின் வீழ்ந்து போகிறார்கள் என்பது பேசும் சித்திரம். இக்கதை குறித்து சத்யானந்தனின் திண்ணை பின்னூடாக்குறிப்புக்கும் எனது நன்றிகள். திண்ணை இலக்கிய இணைய வார இதழுக்கு என் நன்றிகள் என்றும் போல்.
'காசிக்குத்தன்போனெலென்ன' கதையை ரசித்துப்பாராட்டியவர் என் சொந்த ஊர் மூத்த எழுத்தாளர், சகிருதய்ர், வே.சபாநாயகம். எங்கு போனாலும் நம் நிழல் நம்மோடு என்பது வாசகர்க்குச் சொல்லும் கதை இது.
இப்படியாய் இங்கு இன்னும் பல கதைகள். நானே சொல்லிக்கொண்டு போனால் என்ன ஆவது. வாசகர்கள் நீங்கள் படியுங்கள்
. இத்தொகுப்பை எனது எழுத்தாள நண்பர் எஸ்.ஷங்கர நாராயணனுக்கு ச்சமர்ப்பிக்க என் மனம் விரும்பயது அவரின் வாழ்த்துக்களின்றி'பிரம்ம லிபி' சோபிக்கவும் முடியாது.
என் நண்பர் இத்தொகுப்பு வெளியீட்டுக்கு உறுதுணையாளர் உதயகண்ணனுக்கு என் அன்பு எப்போதும்..


எஸ்ஸார்சி

23 அ இரண்டாவது தெரு
நேதாஜி நகர்
பழைய பெருங்களத்தூர்.சென்னை 63.

9443200455.
... . .

.


.

.

Thursday, September 25, 2014

thari-sinam
தரி-சினம் -எஸ்ஸார்சி


காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை.
அரசாங்க ஊழியர்கள் பெறும் சலுகைகள் கூட இந்த வகைதானோ என்னவோ. எத்தனையோ சலுகைகள். விடுப்பில் பயணம் என்பதும் ஒரு சலுகை.கேள்விப்பட்டுதான் இருப்பீர்கள்.நான்காண்டுகளுக்கு ஒரு தடவை இந்தியாவில் எந்த மூலைக்காவது சென்று திரும்பலாம். எந்த ஊர் போக முன்பணம் வாங்கினீர்களோ அந்த ஊர் மட்டும்தான் போகலாம். அங்கு பூகம்பம் வந்துவிட்டது ஆக அந்த ஊர் போகவில்லை.இந்த ஊரோடு திரும்பிவிட்டேன் அங்கு ஒரே வெள்ளக்காடு, சொன்ன இடம் போகமுடியவில்லை எனக்கு உடம்புக்கு முடியாமல்தான் நான் போகவில்லை குழந்தைக்கு முடியாமல்போய்விட்டது ஆகவே நாங்கள் சொன்ன ஊர் போகாமல் சொந்த ஊருக்கே திரும்பினோம். வேறு என்ன செய்ய என்று உள்ளதைச் சொன்னால் கணக்கு அதிகாரிகள் ஒத்துக்கொள்ளமாட்டர்கள். அங்கு அப்படி அது இது நடந்தது என்பதற்கெல்லாம் ' என்ன அய்யா ஆதாரம்' என்று அனுப்பிவைத்த எல் டி சி பயண பில்லை குறுக்கும் நெடுக்கும் சிவப்பு மையால் கோடு போட்டு நமக்குத்திருப்பி அனுப்பி விடுவார்கள்
. கிரகங்கள் சரியாக இருந்து குரு பார்வையும் விழுந்து அனுப்பி வைத்த எல் டி சி பில் செட்டில் கிட்டில் ஆகிவிட்டது என்றால் வேண்டிக்கொண்ட பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்துவைத்து வேண்டுதலை முடித்தவர்கள் உண்டுதான்
இப்படியாகவும் இன்னும் பலப்பல மாதிரியாகவும்தானே மத்திய அரசு ஊழியர்களுக்குச் சலுகைகள் உண்டு. சமீப காலமாய்த்தான் ஒரு குறை. யார் கண் பட்டதோ இல்லை, பில்லி சூன்யம் வைத்தார்களோ, ஏவல் கீவல் உண்டோ, சாமி குத்தமோ இல்லை பிதுர்கள் விட்ட சாபமோ, காராம் பசுவை ஏதும் பட்டினித்தான் போட்டுவிட்டார்களோ அந்த விஷயம் மட்டும் இன்னும் சரியாப் பிடிபடவில்லை.
. வயதான காலத்தில் கொஞ்சம் மரியாதையாக அரை வயறு சோறு கிடைக்கும் என்றால் அதுவும் கிடையாதாம் இனி. அந்த வெள்ளைக்காரன் கொடுத்த ராஜ மரியாதை (என்கிற) பென்ஷன் காலியாகிவிட்டது.
பெண்கொடுப்பவர்கள் 'அரசாங்க வேலைன்னா பார்க்கிறான் என் மாப்பிள்ளை' என அண்ணாந்து அண்ணாந்து அந்த ஆகாயம் பார்த்து பேசவும் முடியாது..
எல்.டி.சி யாகப்பட்டது என்னவென்றால் அரசாங்கம் கொடுக்கின்ற ஒரு பத்து ரூபாயுக்கு நூறு ரூபாய் செலவு வரும். கீழ்வீடு மேல் வீடு இன்னும் சுற்றும் முற்றும் இருப்பவர்கள் 'போகிறான் பார் எல் டி சி' என க் கொஞ்சம் வயறு எரியத்தான் செய்வார்கள்.
எந்த அலுவலத்திலும் தடுக்கிலும் கோலத்திலும் நுழைந்து வெளி வரும் ஆசாமிகள் அங்கிங்கெனாதபடிக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அலுவலத்தில் கை நீட்டி வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்வதைவிட எந்த ஒரு சலுகையை எப்படி ப்பெறலாம் என்கிற.நுணுக்கம் தெரிந்த அவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் அப்பப்பா எக்கச்சக்கம்.
'இந்த டிசம்பரோட முடியுது இந்த பிளாக் எக்ஸ்டென்ஷன். எல் டி சி போகணும்னா நீர் சட்டுனு போயி வந்துபுடும்' என்று நண்பன் எச்சரிக்க அவன் அப்பா அம்மாவோடு தங்கையைக்கூட்டிக்கொண்டு சின்ன எல் டி சியாக திருப்பதிக்குப் போய்வரலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
பெற்றோர்களிடம் இது விஷயம் விளக்கமாய்ச் சொன்னான். கல்யாணத்திற்கு இருக்கும் அவன் தங்கைக்கும் இந்த சலுகை உண்டென்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. அலுவலத்தில் .எல் டி சி அட்வான்ஸ் கொடுத்தார்கள்.. சலுகையில் போகும் அந்த ஊர் டிக்கட் வாங்கியதைக்காட்டினால் அட்வான்ஸ் அவ்வளவு, காட்டவில்லை என்றால் இவ்வளவு, அது எவ்வளவு என்று மட்டும் கேட்கவும் கூடாது ஒருவர் சொல்லவும்கூடாது.சொல்லிவிட்டால் கதையில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அதனை மட்டும் கொஞ்சம் விட்டுவிடுங்கள்.
தருமங்குடியிலிருந்து அவர்கள் மூவரும் ஏழுமலையானை த்தரிசிக்க எல்.டி.சி பயணம் புறப்பட்டனர். புறப்படும் முன் ஒரு கடிதம் 'நாங்கள் புறப்பட்டு விட்டோம் ' என அலுவலகத்தில் சடங்குக்காக அவன் எழுதிக்கொடுத்தான்.தருமங்குடி யிலிருந்து புறப்பட்டு மூவரும் திருமுதுகுன்றம் வந்தார்கள்.விழுப்புரத்திற்கு ஒரு பஸ் பிடித்து பின் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தார்கள்.அந்தக்காலத்தில் தகரக்கொட்டகை போட்டுக்கொண்ட விழுப்புஈம் பஸ் நிலையம், ஊசி மணி பாசி மணி விற்கும் குறத்திகள் ஜனத்தொகையும் அங்கு சற்று அதிகம்.
அந்தக்காலத்தில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு ஒரு பாசெஞ்செர் ரயில் போய் வந்து கொண்டிருந்தது.எல்லா ஊரிலும் நின்று நின்று போகும் அந்த ரயில்தான்.விடியற்காலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் அந்த மூவரையும் விழுப்புரத்திலிருந்து ஏற்றிக்கொண்டுபோய் இறக்கி பின் ஒரு பெரும் மூச்சு விட்டது.ஸ்டேஷனுக்குப்பக்கமாய் இருந்த ஜிலுக்கு புலலுக்கு மின்சார சிறு பல்புகள் ஓயாமல் எரியும் ஒரு உணவு விடுதி பார்த்து காபி சாப்பிடப்போனார்கள். அங்கு அவர்கள் காபி என்று பெயர் சூட்டிக்கொண்ட ஒன்றைத்தான் வாங்கிச் சாப்பிட்டார்கள்.யாரும் காபியைக்குடிப்பதில்லைதானே. பல்லும் துலக்கவில்லை ஒன்றும் இல்லை அப்போதைக்கு. வேறு வழிதான் என்ன.
குட்டி நடையில்.திருமலைக்குச்செல்லும் பஸ் நிலையம். ஒரு பஸ் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்து கொண்டார்கள் .கதவு மூடிக்கொண்ட குட்டி குட்டி பஸ்கள் திருமலைக்குப்போய் வருகின்றன. மலைப்பாதை வளைவு வளைவு வளைவு ஒரு வழியாய் திருமலை வந்தது.
தேவஸ்தான ஓசி.ரூமுக்கு ஒரு மைலுக்குக் க்யூ இருந்தது. அவனுக்குக் கால் வலித்தது. க்யூ வில் நின்ற அவனுக்கு ஓ சி அறை சாவி ஒன்று கடைசியாய்க் கைவசமானது.ராட்சசத்தனமாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை சிறு அறைகள் அறைகளாகக் கத்தரிக்கப்பட்டு ' வா வா 'என அழைத்துக்கொண்டு காட்சி தந்தன. சாவி யோடு இணைந்த அந்த ஒரு தகரத்தில் அறை எண் எழுதி இருந்தது.
அவனின் அப்பா கோவிந்தா கோவிந்தா என அடிக்கொரு தரம் சொல்லிக்கொண்டே வந்தார்.அவன் அம்மாவுக்கு எத்தனையோ சகஸ்ர நாமங்கள் மனப்பாடம். தண்ணீர்பட்ட பாடாக( அந்த கால பழ க்கத்தில் சொன்னது) விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.அவன் அறையைக்கண்டு பிடித்து அந்தச் சாவியை க்கொண்டு பூட்டைத் திறந்தான்.மூட்டை முடிச்சுகள் எடுத்துக்கொண்டு வந்ததை அலமாரியில்வைத்து க்காலை நீட்டிக்கொண்டு மூவரும் .சிரம பரிகாரம் செய்துகொண்டார்கள்.
'புஷ்கரணியில ஸ்நானம் செய்யாலாமா'
என்று கேட்ட தந்தையிடம் ' புஷ்கரணியில இறங்கி தலையில் கொஞ்சம் தீர்த்தம் மட்டும் புரோக்ஷித்துகொண்டால் போதுமப்பா,இங்கேயே ஸ்நானம் பண்ணிட்டு போயிடலாம்' அவன் பதில் சொன்னான்.அவ்விதமே அறையில் கொட்டும் ஜில்பு நீரில் குளித்துமுடித்து புஷ்கரணிக்குப்போய் தலையில் தீர்த்தம் தெளித்துக்கொண்டு கோவில் க்யூ வரிசையில் நிற்கப்புறப்பட்டனர்.
'மொட்ட அடிச்சிகறது எல்லாம் உண்டா?'
' நம்மாத்துல ஒரு மொட்டைதான் நம்ம குலதெய்வ்ம் ஸ்வாமி மலைல அதுவும் ஒரு வயசுலதான். காது குத்தறதுக்கு முன்னாடி தலமுடியும் இறக்கி ஆயிடும். மற்றபடி புருஷான்னா தாடியும் கூடாது மொட்டையும் கூடாது, குடுமியோ கிராப்போ குடும்பத்துல இருக்கறவான்னா அப்பிடிதான் இருக்கணும்'
தந்தை அவனுக்கு விளக்கம் தந்தார்.
' இந்தபடிக்கு சட்டமா பேசறது மாத்ரம் அப்பிடியே போய்விட்ட எம் மாமியாரை எனக்கு ஞாபகப்படுத்திண்டே இருக்கு'.அவன் தாய் சொல்லிக்கொண்டாள்.

காத்திருப்பு. தெய்வ தரிசனத்துக்காகத்தான். அறைகள் நிறைந்து நிறைந்து மனிதர்கள். எத்தனை எத்தனை விதமாய் முக தேஜஸ்கள். கோவிந்தா கோவிந்தா என்கிற ஒலி. .காலம் டி வி பிறப்பதற்கு முன்.
வரிசையில் நிற்க இல்லை உட்கார்ந்திருக்க கோவில் நிர்வாகம் என்ன வித்தை காட்டினால் என்ன மக்கள் அறை அறையாய் அமர்ந்து நெளிந்து துவண்டு கிடந்தனர் .பத்து மணி நேரம் அடைபட்டுக்கிடந்த மக்களுக்கு ஏழுமலையான் திவ்யமாய் தரிசனம் தந்தார். தரிசனம் முடித்து
மூவரும் கோவில் உள் பிராகாரத்தைச்சுற்றி வந்தனர். நெட்டை உண்டியலில் காசு போட்டனர்.நாமதாரி அய்யங்கார் எந்திரமாய் பிரசாதம் வழங்கியது சன்னதியிலே வாங்கிக்கொண்டனர். திருப்பதிப்பிரசாதம் திருப்பதி லட்டும் அவர்களுக்கு எத்தனை விதிக்கப்பட்டதோ அத்தனை வாங்கி பத்திரம் செய்துகொண்டார்கள்.
திருக்கோவிலை விட்டு வெளிப்பட்டு கண்கள் நாமத்தால் மூடிய வெங்கடாசலபதி போட்டோவும் திருப்பதி கயறும் வாங்கி அவன் அம்மா பத்திரப்படுத்தினார்.' நான் போயி ரூமைக்காலி பண்ணிண்டு வந்துடறேன் நீங்க இங்க இருங்கோ' அவன் தன் தங்கையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினான்.
'சந்தனக்கல் சந்தனக்கட்டை' விற்பவர்கள் சுற்றி சுற்றி வந்து நச்சரித்தனர்.
' அது சந்தனமரைக்கும் கல்லுமில்லை சந்தனக்கட்டையுமில்லை' அவன் தந்தைக்கு எச்சரித்தான்.
' சந்தனக் கல்லும் கட்டையும் நம்ப ஆத்துல இல்லையா என்ன' தந்தை அவனுக்குப்பதில் சொன்னார்.
அந்த நேரம் பார்த்து திருப்பதி தேவஸ்தானத்து சிப்பந்தி ஒருவர் இலவச உணவுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டே வந்தார்.அவன் மூன்று டிக்கட் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான்.
' நாம கோவில்ல போடற அந்த சாப்பாட்டயே சாப்பிடலாம்கறயா' தந்தை கேட்டார்.
' ஏன் சாப்பிட்டா என்ன' அவன்.
'இல்ல நம்ப காசுல சாப்பிட்டாதான் அது புண்ணியம்பா பெரியவா'
' அந்த பகவான் தான் எல்லாருக்கும் எப்பவும் சாப்பாடு போடறான்'
' அப்படி சுத்தி இப்படி வரயாப்பா நீ பரவாயில்லேயே'
' சித்த வாய மூடிண்டு வரப்பிடாதா அவ்னுக்கு த்தெரியாதா நச நசன்னு என்ன பேச்சு வேண்டி இருக்கு இன்னும் அவனென்ன விரல சூப்பிண்டு பச்ச குழந்தையா' தாய் தந்தையக் கடிந்து கொண்டாள். அவன் எதுவும் காதில்போட்டுக்கொள்ளாமல் அவர்கள் தங்கி இருந்த அறையைக்காலி செய்யப்புறப்பட்டான்.
'என்ன வெங்கடாஜலபதி பெருமாளை நன்னா சேவிச்சேளா' அம்மா தான் அவன் தந்தையை க்கேட்டாள்.
' மொதல்ல வெங்கடாசலபதின்னு சொல்லத்தெரிஞ்சுகோ அசலம்னா அது மலை, வெங்கடா ஜலமும் இல்லே விருத்தா ஜலமுமில்லே இல்லே'
'சலம்னா சொன்னா அது என்னமோ மாதிரி சரியா வருமா என்ன'
'காகம்னு சொல்லற அதுல முதல் 'கா' எப்படி, ரெண்டாவது 'க' எப்படி சொல்லற அப்படி சலத்தை சலம்னு சொல்றச்ச அந்த ச எழுத்தை அழுத்திச்சொல்லணும்'
' இந்த நக்கீரர் வியாக்கியானம் எல்லாம் தெரிஞ்சிதான் கெடக்கு, பெருமாள சேவிச்சேளான்னு கேட்டேன் அதுக்குப்பதிலு வரல''
'எங்க சேவிச்சேன் கொஞ்ச நாளா நேக்கு தூரத்துல இருக்கறது எல்லாம் சரியா தெரியல. கண்ணுல காடராக்ட் ஏதும் ஃபார்மாயிருக்கல்லாம்னு தோண்றது'
' சன்னதியிலயே நான் பாத்தேன். கக்கிரி பிக்கிரின்னு அங்க முழிக்கச்சேயே நேக்கு விஷயம் தெரிஞ்சிட்து அதான் கேட்டேன். இப்பக்கி கண்ண டெஸ்ட் பண்ணிட்டு ஒரு கண்ணாடியானு மாட்டிண்டு இந்த சுவாமி தரிசனத்துக்கு வந்து இருக்கலாம் இல்லயா'
' செஞ்சி இருக்கலாம்'
'என்ன செஞ்சி இருக்கலாம் கிஞ்சி இருக்கலாம்'
' பின்ன நான் என்னத்தை சொல்லுணும்கற'
' துளி கூடவான்னா தெரியல அங்க ஸ்வாமி நிக்கறது ஜகஜ்ஜோதியா மின்னித்தே நீங்க பாக்கலேன்னா அது என்ன பாவமோ'
அவர் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தார்.
மூவரும் திருமலயைவிட்டு இறங்கத்தயாரானார்கள்.
' இந்த திருப்பதி மலையத்தொட்டாலே போறும் இந்த ப் புஷ்கரணியில ஒரு மீனா பொறந்தாலே அதுவே புண்ணியம்பா' அவன் தந்தை சொல்லிக்கொண்டே வந்தார்.
'திருமலையில ஏறி ஸ்வாமிய நேறா போய் சன்னதியில து துசேவிச்சுட்டு வந்து திருப்பதி மலயத்தொட்டாலே புண்ணியம் அது இதுன்னு பேசினா என்ன அர்த்தம்னு கேக்கறேன்' அவன் தந்தையிடம் கடுப்பாகிக் கேள்வி வைத்தான்.
' கொஞ்சம் வயசானேலே இப்படி புருஷா படுத்தறது எல்லாம் சகஜம் விடுடா' தாய் மகனிடம் சொல்லிக்கொண்டாள்.
அவருக்கு அதுவும் காதில் விழத்தானே செய்தது.அவன் பயண சீட்டுக்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டே வந்தான்.எங்கசுத்தினாலும் அந்த ரெங்கன சேவிக்கணும் அவனும் ஊர்போய் அந்த அக்கவுண்ட்ஸ் அதிகாரிகளுக்கு எல் டி சி பயண பில்லை ஒட்டி கட்டி சமர்பித்தாக வேண்டும்தானே.
அவன் அப்பாவுக்கு ஸ்வாமியை சரியாய்ப்பார்க்காத குறை ஏதும் இல்லை. அவன் தாயுக்கு மட்டும் அடி மனத்தில் இன்னும் அது உருத்திக்கொண்டே இருந்தது. நடந்த எல்லாம் தெரிந்த அவன் தங்கை எப்பவும் போல் மவுனமாகவே பேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தாள்.இந்த முங்கோபி அண்ணனை வைத்துக் கொண்டுதானே அவளும் கரை ஏறி வேறு ஒரு ஊர் போய்ச் சேரணும்...
-----------------------------------------------------
.

..
... ..

Friday, September 19, 2014

vedamÅ¢Õðºõ 72
                ÁÉò¾¡ø
                ¸Õò¾¡ø
                š측ø
                ¦ºÂüÀ¡ð¼¡ø
                ¸ðÎí¸û ´üÚ¨Á                          âì 10.191
               
                ÜÎ
                º¢ó¾¢
                §¸¡Ú
                ÁÉí¸û ´ýÈ¡¸ðÎõ.                       

                §¿¡ì¸õ ´ýÈ¡¸¢
                ¯É÷×ò¾ÇÁ¾É¢ø
                º¢ó¾¨É ºó¾¢ì¸
                ±ð¼ðÎõ
                þ¨ÂÒ ¿¢¨Ä.                       

                ¦Áö¡¸î¦º¡ø
                À¸¢÷óÐý½¡ ¯ñÊ
                ¿ï¦ºýÚ,
                À¨¼ò¾Å¨É ÁÈóÐ
                Àì¸òÐô  Àº¢ò¾Å¨É
                ÒÈÁ¡ì¸¢
                ¾¡§É ¯ñÀÅý
                Á¡À¡Å¢.                         âì 10.11.7

               Ţź¡Â¢ìÌ
               «ýÉÁ¢Î¸¢ÈÐ ¸Äô¨À
               À½í¸û
               ¦ºöÀÅ§É À½õ Àñϸ¢È¡ý
               ÍõÁ¡ þÕôÀÅÛìÌ
               ´ÕÀÊ
               §Áø «ó¾ áÄȢšÇý
               ¦¸¡Îì¸ ÓÊó¾Åý
               ÁðΧÁ
               ±ýÚõ ²¨ÆìÌò§¾¡Æý .                         ( 7 )

               þÃñÎÀ½õ
               ¯ûÇÅý Å¢¨ÃóÐ ¦ºø¸¢È¡ý
               ´Õ À½õ
               ¯ûÇÅý  «Åý À¢ý§É
               ¦¾¡¼÷¸¢È¡ý
               ãýÚ À½õ ¯ûÇÅý
               ±øÄ¡÷ìÌõ Óý§É¡Ê
               ¿¡ýÌ À½õ ¯ûÇŧɡ
               ãŨÃÔõ
               ¾¡ñÊŢθ¢È¡ý.                                (8)
               
              ¸ÊÅ¡Çõ ²Ø¼ý
              ¬Â¢Ãõ ¸ñ¸û
              ¦¸¡ñ¼ ÒÃÅ¢
              ¸¡Ä þò¨¾ þØòÐø¸¢ÈÐ.
              ÁñÏõ
              ÁÉ¢¾Ûõ
              À¢È×õ
              «¾ý ºì¸Ãí¸û
              Á¸¡òÁ¡ì¸û ÁðÎõ
              «¾É¢ø À½¢ì¸¢ýÈÉ÷.                «¾÷Ž 19 53 54
        
              Å¢ñ½¢ø «¨Á¾¢
              Áñ½¢ø «¨Á¾¢
              Å¡ý ÅÆ¢
              ÅƢ󧾡Îõ ¿¾¢
              ¦ºÊ ¦¸¡Ê
              Òø âñ¦¼¦¾ý
              Á£Ðõ  ¾Åú¸¢ÈÐ «¨Á¾¢.                       19.9.1

upanisath

§Å¾ÅÉõ
Å¢Õðºõ 7ƒ£Åý¸û ±í¸¢ÕóÐ
Åó¾É ?                           ¸Àó¾¢Â¢ý Ţɡ

À¨¼ôÒ츼×û                      
Å¢ÕôÀõ «Ð
«ùÅ¢ÕôÀõ ¦¸¡½÷ó§¾
¯½×õ ¯ñÀÅÛõ
¬¸ò¾¡ý ¯Â¢Ã¢Éí¸û.           À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼    À¢Ãî§É¡ ¯À¿¢ºò 1/4

¸¾¢ÃÅ§É ¯Â¢÷
¯½× ¾Õ§Å¡ý ºó¾¢Ãý
¯½§Å¡
¯Õ× ¦¸¡ñÎõ
¯ÕÅÁ¢ýÈ¢Ôõ                                    1/5

ÝâÂò¾ó¨¾ìÌ
³óÐ ¸¡ø¸û ³óÐ ÀÕÅí¸û
ÀýÉ¢Õ §¾¡üÈõ ÀýÉ¢Õ Á¡¾í¸û
¬Ú ¬Ãí¸û
¦¸¡ñ¼ ²Øîºì¸Ãò§¾Ã¢ø
²Ø ̾¢¨ÃôâðÊ
¬§Ã¡¸½¢òÐÅÕõ «Åý
Á¨Æ ¾ÕÅ¡ý
À¢ÃÀïºõ «ÅÛ¨¼ÂÐ.                           1/11

 À¸ø ¯Â¢÷
«ø ¯½×
.þÃ×ì¸ÄÅ¢
À¢ÃõÁîºÃ¢Âõ
À¸ø Ò½÷§Å¡
ƒ£Åý ÀÈ¢ôÒ                                   1/13

                                           À¡÷ì¸ÅÉ¢ý Ţɡ
 ¯Â¢ÃÉí¸ðÌ òШ½Â¡¸¢ ¿¢üÀР¡÷
 «È¢ÅÇ¢ôÀР¡÷
 þ¾É¢ø ±Å§Ã ¦ÀâÂÅ÷ ?

À¢Ã¡½îºì¾¢§Â ãÄõ                         À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼
«Å§É ¯ñ§À¡ý
§¸ðÀÐõ À¡÷ôÀÐõ º¢ó¾¢ôÀÐõ
«Å§É
ÅÇÓõ «È¢×õ
¾Õõ ¾¡Â¡É ¾Â¡ÀÃÛõ
«Å§É                                        2/13

¯Â¢÷îºì¾¢ ±í§¸ À¢Èó¾Ð
±ôÀÊ Åó¾Ð
¬ûŦ¾ôÀÊ
«ÕÌŦ¾ôÀÊ ?                             «ÍÅÄ¡Å¢ý Ţɡ

³õÒÄɡ𺢧 À¢Ã¡½ý
¸Æ¢ôÀÐ «À¡Éý
À¸¢÷ÅÐ ºÁ¡Éý
ÍÆÖÅРŢ¡Éý
¯û§Ç «ÛÁ¾¢ôÀÐõ
¯Â¢¨Ã 즸¡ñΧÀ¡ÅЧÁ ¯¾¡Éý             À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼  3/5

Ţ¡Éý ¯¨È
þ¾ÂòÐ
´Õ áüÚ ´Õ
¿ÃõÒ¸û
´Õ áÚ ¸¢¨Ç¡Ìõ
´ù¦Å¡Õ ¿ÃõÒõ
¸¢¨Ç¦Â¡ýÚ
±ØÀò¾¢¦Ãñ¼¡Â¢ÃÁ¡öôÀ¢ýÛõ À¢Ã¢Âô
À¢Ã¾¡É ´ý§È¡ÎÜðÊ
727210201 ¿ÃõÒ¸û.                            3/6¯Èì¸Óõ ´Õ ¯Â¢ÕìÌ
¸É×측ðº¢Ôõ
À¢ýÅÕõ ŢƢôÒõ ±ýÉ ?                         ¸÷ì¸Ã¢ý Ţɡ

¸¾¢ÃÅý Á¨ÈÅ ¦¾¡ìÌõ ¯Èì¸õ
¯¾¢ôÀ¦¾¡ìÌõ  ŢƢôÒ.                           À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼

´õ ±ýÛõ ¦º¡øÄ¢ý
¯¨È ¦À¡Õû ±ýÉ ?                           ºò ¸¡ÁÉ¢ý Ţɡ

À¡õÒ ò¾ýºð¨¼¨Âò
¦¾¡¨ÄôÀЧÀ¡ø
À¡Åõ ¦¾¡¨ÄòÐ
Ţξ¨Ä ¸¡ñ§À¡ý
´õ «Ð ¦¾Ç¢ó¾Åý

¸¾¢ÃÅý ´Ç¢§Â¡Î
¾¡Ûõ ´ýÈ¡Å¡ý                              
´õ «Ð ¦¾Ç¢ó¾Åý                              À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼ 5/5


¬ýÁ¡ ¾ý¨É
¦¾Ç¢Ôõ Óý
þ¨¼¸¡Ïõ À¾¢¦É¡Õ ¸¨Ä¸û ¡¨Å ?         ͧ¸ºÉ¢ý Ţɡ

â¾í¸û ³óÐ
ÒÄý¸û ³óÐ
¸÷§Áó¾¢Ã¢Âí¸¨ÇóÐ
ÁÉõ ´ý¦È¡Î
¬¸ì¸¨Ä¸§Ç¡ À¾¢É¡Ú
Àº¢ìÌ ¯½×
ÀèÉò¦¾Ã¢Â§Å ¾¢Â¡Éõ                          À¢ôÄ¡¾Ã¢ý Å¢¨¼ 5/4

¬Ú¸û ¸¼ø
¦¾¡ðÎô
¦ÀÂ÷ ¯Õ þÆóЧÀ¡õ
þ¨¼ ¿¢üÌõ
À¾¢É¡Ú ¸¨Ä¸§Ç¡
ÀÃõ «È¢Â
þÆìÌõ ¯Õ.                                6/15
---------------------------------------------------------------------------


     
  

    


upanisath


                                                                    
§Å¾ ÅÉõ                                                                   
Å¢Õðºõ 71.
                  ¿£Å¢÷ ¾ñ½£Ã¢ý
                  §¾Å¨¾¸û
                  ¿¢¨Èó¾ ͸õ
                  ÅÆíÌõ ÝìÌÁ측â¸û
                  ¬¸îº¢Èó¾
                  «¸§¿¡ì¸Óõ
                  ÌýÈ¡ ¬üÈÖõ
                  «ÕÙÅ£÷ ±ÁìÌ.               - Ã¢ì §Å¾õ 10.9.1
   
                  ¿¢¨ÈÅÇõ
                  ¾Õ ¿£÷ò¾¢Õ Ñõ§Á¡Î.
                  ¿¢Ä×ĸ¢ø
                  «ýÒ ô¦ÀÕ즸ÎìÌõ
                  «ý¨ÉÂ÷
                  «¨ÉÂáö
                  ±õ¨ÁÔõ ¬ì¸¢Î¸.            – “        10.9.2
                 
                  þÉ¢¨Á ¿øÌõ
                  þɢ ¿£÷츼×ǧÃ
                  ±ÁìÌõ þýÉÕû:
                  §ÅñÊ Ñõ¨Á§Â
                  ¿¡Î¸¢§È¡õ ¿¡í¸û.                        10.9.3
                 
                            


                  ¿£Ã¢ý Á£Ð
                  ÒÄÕõ âÅ¢¨É
                  «È¢ó¾Å¦Éŧɡ
                  ÁÄ÷¸û
                  Á¢Õ¸í¸û
                  Á츦ÇÉ
                  «ò¾¨ÉÔõ
                  «Åý ¾É¾¡ì̸¢È¡ý.              (  Âƒ¤÷-¨¾ò¾¢Ã£Â ¬Ãñ¸õ 1..22 )

                  ¿¢Ä¡ «Ð
                  ¿£÷ ¦ÀüÈ ÁÄ÷
                  «È¢ó¾Å¦Éŧɡ
                  Á츦ǡÎ
                  Á¢Õ¸í¸¦ÇÉ
                  «ò¾¨ÉÔõ
                  «Åý ¾É¾¡ì̸¢È¡ý.                         1 
                         
                  ÒÉÖìÌ ãÄõ
                  «Éø
                  «ÉÖìÌ ¬¾¡Ãõ
                  ÒÉø
                  «È¢ó¾Å¦Éŧɡ
                 «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý.                   2
                                                      
                  ¾ñ½£Ã¢ý ¬¾¡Ãõ
                  ¦¾Ã¢Å¡§Â¡
                  ÅÇ¢
                  ÅÇ¢ìÌ ãÄõ ÒÉø
                 «È¢ó¾Å¦Éŧɡ
                 «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý.                    3       
                      
                  ¾ñ½£Ã¢ý ¬¾¡Ãõ
                  ¾¸¢ìÌõ ¸¾¢÷
                  ¸¾¢ÃÅ¨É «È¢ó¾Å¦Éŧɡ  
                  «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý                    4
                               
                  ¿¢Ä§Å ¿£Ã¢ý ãÄõ
                  ¿¢Ä¨Å «È¢Å¡§Â¡
                  «È¢ó¾Åý  ±Å§É¡
                  «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý.                    5
             
                  Å¡ÉòÐ ¯Î츧Ç
                  ¾ñ½££Ã¢ý ãÄõ
                  ¯Îì¸¨Ç «È¢ó¾Åý ±Å§É¡
                  «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý                     6    

                  ¸¡÷§Á¸í¸§Ç
                  ¾ñ½£Ã¢ý ¬¾¡Ãõ
                  §Á¸í¸¨Çô
                  Òâó¾Åý ±Å§É¡
                  «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý                     7 

                  Á¨Æ ¦À¡Æ¢Ôõ
                  ¸¡Ä§Á ¾ñ½£Ã¢ý ¬¾¡Ãõ
                  Á¨Æ ÅÕõ ¸¡Äõ
                  «È¢ó¾Åý ±Å§É¡
                 «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý                     8
                                                         
                  ¾ñ½£Ã¢ý Á£Ð
                  À½¢ìÌõ ¿¡Å¡ö
                  ¿¡Å¡¨Â «È¢ó¾Åý ±Å§É¡  
                 «Å§É ¦¾Ç¢óÐ ¿¢¨Ä츢ȡý.                     9