Friday, November 20, 2020

சோர்வு

 

 

 சோர்வு              

ன்ன எழுதுவது

யோசித்து யோசித்து

மண்டைதான் வலிக்கிறது.

எதுவும் சரி இல்லையா

சொல்லக்கூடாது அப்[படி

சில சரி பல சரியாக இல்லை

சொல்லல் ஆமோ சொல்லுங்கள்

அடிநாளில் இந்நிலத்தில்

சோஷலிசம்,  பூத்து

குறை ஏதும் இல்லாத் திரு பூமி

ஆகிவிடும் இந்தியா நம்பியிருந்தேன்

ஊமையன் கண்ட கனாவென

ஒன்றுமில்லாமல் போனதே

நம்பியிருந்த சோவியத் நாடு

லெனின் சிலையை ஓந்தி வைத்துத்தூக்கி

ஓரம் போட்டார்கள் கைகொட்டிச்சிரித்தார்கள்

நெஞ்சு வலித்தது

மனம் சீராக மாதங்கள் பல ஆனது

வடுக்கள் இன்றைக்கும். என்றைக்கும்

செஞ்சீனம் வழிகாட்டும்

சோசலிசம் இமயமலை ஏறி

இந்தியாவை அரவணைக்கும்

நம்பினேன்  நாடாண்ட நேருவைப்பழித்தேன்

போனது மோசம்

சீனா சோஷலிச அரிதாரம் பூசி

பிடிபடா மிருகமாகிவிடும்

ஆரூடம் சொல்லவில்லை யாரும்

அனுபவிக்கிறது உலகம்

சீனாவுக்கு  முரடர்கள் மூர்க்கர்கள்

மட்டுமே கூட்டாளிகள்

இலங்கைத்தமிழர்கள் தானாய்ப்பாதி தம்பிரானால் பாதியென

அழிந்ததுபோக எஞ்சியவர்களை

சீனா சின்னக் கணக்குப்போட்டுக்

கதைமுடித்தது.

செங்கொடிக்காரர்கள் சிறுத்துப்போய்

காட்சியிங்கு பெருங்காய டப்பியாய்

மேற்கு வங்கத்தில் அது கிழவர்களின் கூடாரம்

கேரளாவிலோ  தங்க ஸ்வப்னா விவகாரம்

சோரவே வைக்கிறது இன்னும்..

-------------------------------------

 

 

 

 

 

Wednesday, November 11, 2020

அப்பாவிகள்

 

 

அப்பாவிகள்                         

 

கல்வி கற்பிக்கும் கூடங்கள்

விதம் விதமாய் அங்குதான்

எத்தனை ஏற்ற இறக்கங்கள்

வசதிக்குக்குத்தக்கவே அவை

படித்து  வெளிவரும் பிள்ளைகள்

ரகம் ரகமாய்

பள்ளிக்கூடம் என்ன செய்யும்

’ஒருத்தர் மண்டையில் அன்றைக்கு

என்ன எழுதி இருக்கானோ அவன்

அதுவே அவர்களை த்தீர்மானிக்குது’

அட்டகாசமாய் விளக்கம் தருகிறார்கள்

 நிறைந்து போகிறது மனம்.

மருத்துவ சேவையிலும்

படிகள் பலப்பல

அரசாங்க ஆசுபத்திரி தொடங்கி

அப்பல்லோ வரை விதம் விதமாய்

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை

வள்ளுவன் வகுத்துச்சொன்னது

அருள் இல்லார்க்கு அவ்வுலகம்

இல்லாமலும் போகலாம்

நமக்குத்தெரியாதச் சமாச்சாரம்.

மருத்துவசேவை கண்முன்பாகவே

மக்களைத்தள்ளித்தள்ளி

நிறுத்திவைக்கிறது

சமூக இடைவெளியோடு

ஆயிரம் பிரிவுகள் வசதிக்குத்தக்கனவே எல்லாம்.

ஏதுமில்லாதவர்க்கு நீதி மன்றத்தில்

ஒளி காட்டப்படும் என்பதில்லை

இருக்கின்ற ஓட்டை அமைப்பைக்

காக்கப்பிறந்தனவே சட்டங்கள்

கண்ணைகட்டிக்கொண்டாள் நீதி தேவதை

காசுக்குத்தக்கன முடிவுகளங்கு

வேறு வேறு

 உரு எடுத்து சாதிக்கும்

ஆயிரம் சந்துகளும் பொந்துகளும்

சட்டத்தில் மிக உண்டுதான்

விபரம் தெரிந்தவர்கள் மட்டுமே பெறுவார்கள்

என்றைக்கும் வெற்றி

எத்தனை ஏற்ற இறக்கங்கள்

எத்தனை நெளிவுசுளிவுகள்

வண்ண வன்ண விளக்குகள்

ஜிகினா போர்த்திக்கொண்ட

வார்த்தை ஜாலங்கள் மாயங்கள்

புரியவே இல்லைசாமி

வணிக உள்குத்து சமாச்சாரங்கள்.

பனிமலை எல்லையில் இரவு பகலாய்

துப்பாக்கியோடு நிற்பவனும்

ஏர்முனையில் மேழி பிடித்து நடப்போனுமே

என்றைக்கும் அப்பாவிகள்.-

----------------------------------

 

 

 

 

.

 

 

 

.

 

 

 

Wednesday, November 4, 2020

மனுவும் ஒன்றும் கொம்பனில்லை

 

 

 

மனு  ஒன்றும் கொம்பனில்லை

                 

அமெரிக்காவில் தேர்தல்

டிரம்புக்கும் ஜோபிடனுக்கும் போட்டி

ரிபப்ளிக் கட்சியோடு டெமாக்ரடிக் கட்சியின்

ஆடுகளக் குடுமிச்சண்டை.

பீகாரில் சட்டசபைத் தேர்தல்

தொடங்கிவிட்டிருக்கிறது.

மூன்றாவது கட்டத் தேர்தல் மேடை முழக்கம்

மும்முனைப்போட்டி.

நாடு சந்திக்கும் நெருக்கடிகள் கிடக்கட்டும்

அந்த நானல்லவா முக்கியம்

அனைத்துக்கும் ஆதாரம்  நான்

மேலுக்குச் சண்டையென்ற தோற்றம்

கண்டு கண்டு ஏமாறும்

கோடான கோடி அப்பாவிகள்

2 ஜீ யை அமுக்கி வாசிப்பதில்

எப்படி வருகிறது ஒற்றுமை

எதிர் புதிர்த் தலமைகள்

சகாயம் விசாரித்த கல்குவாரி ஊழல்

தென்தமிழ் மண்ணில் அறிவோம்

பத்து மனித எலும்புக்கூடுகள் கிடைத்ததே

யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா

அமைதியாய் இக்கிறார்கள் எல்லோரும்

ஈரோடு சமீபம் தேசிய நெடுஞ்சால

கண்டையினரில் கட்டுக்கட்டாய்ப்

யாத்திரைப் போன கரன்சி நோட்டுகள்

சேலம் சென்னை  ஓடும் ரயிலில்

இரும்புப்பெட்டிகள் அறுத்துக்

கொள்ளையோ கொள்ளை

தமிழ் நாட்டு பழஞ்சிலைகள்

கண்டம் விட்டு கண்டம்திருடு போவது

துருவித்துருவி ஆய்ந்த அந்தமீசைக்காரர்

எங்கே காணோம் அறிவோமா நாம்

ஊட்டி பெருமாளிகையில் நடந்த

முப்பெரும்  தொடர்கொலைகள்

ஏன் பேச்சே காணோம்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு

அவைகட்கு தொப்புள்கொடி அறாதபோதும்

லட்சமென கையிருப்பு வைத்திருந்த

ஐ ஏ எஸ் அதிகாரியின் புதிர்ப்பதில்

கேட்டோமே நாம்.

அரவம் தொலைத்தது

சென்னை அப்பல்லோ மருத்துவமனை

அம்மாமுதல்வரின் இறப்பு விசாரணை.

புத்தர் பிறந்ததற்கு முன்னர் பிறந்த

செத்தச்சுவடி மனுவுக்கு

எப்படி முளைக்கும் புது இறக்கை.

குடியரசுத்தலைவர்கள் இருவர் பெற்றோம்.

அம்பேத்கர் யாத்திட்ட அரசியல் சாசனம்

அவர்களுக்கு ச்சூட்டியது மகுடம்.

எப்பொருள் யார் யார் வாய் க்கேட்பினும்

அப்பொருளின் மெய்அறிதல் எம்கடன்

மனு ஒன்றும் கொம்பன் .இல்லை.

--------------------------------------------

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sunday, November 1, 2020

செல்பேசி வாழ்க்கை

 


 

 

செல்பேசி வாழ்க்கை

 

செல்பேசிதான் வாழ்க்கை

இன்றைக்குச் செல்பேசி இல்லையென்றால்

மனித குலம் மொத்தமாய்

சுடுகாட்டுக்குப்போயிருக்கும்

மின்சாரம் உற்றதுணை

மண்ணும் மணி நீரும்

நேர்மையாய் துணையிருக்க

வஞ்சமில்லா விவசாயி

சோழ நாட்டுவயலில்

காலநேரம் பாராதுழைத்தான்

மக்கள் வயிறு நிறைகிறது

மருத்துவப்பணியாளர்கள்

மருந்து இன்னது அறியாமலே

தடுப்பூசி வரும் வரும் என்கிறார்கள்

தடம் புரியாமல் விழிக்கும் மக்களுக்குத்

தெய்மெனக் காட்சி தருகிறார்கள்

ஏழு மாதங்கள் முடிந்துபோயின

சமுதாயம் இன்னும் இருண்டுதான் கிடக்கிறது

காலம் பொன் போன்றது என்றார்கள்

எது போனாலும் கிடைக்கும்

காலம்  போனால் கிடைக்காது

சொல்லி சொல்லி வளர்த்தார்கள் மக்களை

எத்தனைக்கோடிகோடி மனித நாட்களை

கொரோனா கொள்ளை நோய் பலி கொண்டது

ஈராயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகுமென்றார்

எங்கே வல்லரசாவது

மனித உயிர்களைக் காப்பாற்றத்தான்

இரவு பகலென போராடுகிறது இச்சமூகம்

தீவிரவாதிகள் ஏனோ

எண்ணிப்பார்க்கமாட்டேன் என்கிறார்களே

பிரான்சில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் எல்லையில்

ஓயாத வெடிச்சத்தம்

நமது மண்ணின்

நாற்பதாயிரம் சதுர அடியை

நேருகாலத்து சீனயுத்தத்தில் ஆக்கிரமித்து

பின்னும் அருணாசலம் வேண்டுமென்கிறது

லடாக் எல்கையில் ஓயாது சீண்டல் தொடர்கிறது

-------------------