செல்பேசி
வாழ்க்கை
செல்பேசிதான் வாழ்க்கை
இன்றைக்குச் செல்பேசி இல்லையென்றால்
மனித குலம் மொத்தமாய்
சுடுகாட்டுக்குப்போயிருக்கும்
மின்சாரம் உற்றதுணை
மண்ணும் மணி நீரும்
நேர்மையாய் துணையிருக்க
வஞ்சமில்லா விவசாயி
சோழ நாட்டுவயலில்
காலநேரம் பாராதுழைத்தான்
மக்கள் வயிறு நிறைகிறது
மருத்துவப்பணியாளர்கள்
மருந்து இன்னது அறியாமலே
தடுப்பூசி வரும் வரும் என்கிறார்கள்
தடம் புரியாமல் விழிக்கும் மக்களுக்குத்
தெய்மெனக் காட்சி தருகிறார்கள்
ஏழு மாதங்கள் முடிந்துபோயின
சமுதாயம் இன்னும் இருண்டுதான் கிடக்கிறது
காலம் பொன் போன்றது என்றார்கள்
எது போனாலும் கிடைக்கும்
காலம் போனால் கிடைக்காது
சொல்லி சொல்லி வளர்த்தார்கள் மக்களை
எத்தனைக்கோடிகோடி மனித நாட்களை
கொரோனா கொள்ளை நோய் பலி கொண்டது
ஈராயிரத்து இருபதில்
இந்தியா வல்லரசாகுமென்றார்
எங்கே வல்லரசாவது
மனித உயிர்களைக் காப்பாற்றத்தான்
இரவு பகலென போராடுகிறது இச்சமூகம்
தீவிரவாதிகள் ஏனோ
எண்ணிப்பார்க்கமாட்டேன் என்கிறார்களே
பிரான்சில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான் எல்லையில்
ஓயாத வெடிச்சத்தம்
நமது மண்ணின்
நாற்பதாயிரம் சதுர அடியை
நேருகாலத்து சீனயுத்தத்தில் ஆக்கிரமித்து
பின்னும் அருணாசலம் வேண்டுமென்கிறது
லடாக் எல்கையில் ஓயாது சீண்டல் தொடர்கிறது
-------------------
No comments:
Post a Comment