Friday, November 20, 2020

சோர்வு

 

 

 சோர்வு              

ன்ன எழுதுவது

யோசித்து யோசித்து

மண்டைதான் வலிக்கிறது.

எதுவும் சரி இல்லையா

சொல்லக்கூடாது அப்[படி

சில சரி பல சரியாக இல்லை

சொல்லல் ஆமோ சொல்லுங்கள்

அடிநாளில் இந்நிலத்தில்

சோஷலிசம்,  பூத்து

குறை ஏதும் இல்லாத் திரு பூமி

ஆகிவிடும் இந்தியா நம்பியிருந்தேன்

ஊமையன் கண்ட கனாவென

ஒன்றுமில்லாமல் போனதே

நம்பியிருந்த சோவியத் நாடு

லெனின் சிலையை ஓந்தி வைத்துத்தூக்கி

ஓரம் போட்டார்கள் கைகொட்டிச்சிரித்தார்கள்

நெஞ்சு வலித்தது

மனம் சீராக மாதங்கள் பல ஆனது

வடுக்கள் இன்றைக்கும். என்றைக்கும்

செஞ்சீனம் வழிகாட்டும்

சோசலிசம் இமயமலை ஏறி

இந்தியாவை அரவணைக்கும்

நம்பினேன்  நாடாண்ட நேருவைப்பழித்தேன்

போனது மோசம்

சீனா சோஷலிச அரிதாரம் பூசி

பிடிபடா மிருகமாகிவிடும்

ஆரூடம் சொல்லவில்லை யாரும்

அனுபவிக்கிறது உலகம்

சீனாவுக்கு  முரடர்கள் மூர்க்கர்கள்

மட்டுமே கூட்டாளிகள்

இலங்கைத்தமிழர்கள் தானாய்ப்பாதி தம்பிரானால் பாதியென

அழிந்ததுபோக எஞ்சியவர்களை

சீனா சின்னக் கணக்குப்போட்டுக்

கதைமுடித்தது.

செங்கொடிக்காரர்கள் சிறுத்துப்போய்

காட்சியிங்கு பெருங்காய டப்பியாய்

மேற்கு வங்கத்தில் அது கிழவர்களின் கூடாரம்

கேரளாவிலோ  தங்க ஸ்வப்னா விவகாரம்

சோரவே வைக்கிறது இன்னும்..

-------------------------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment