Wednesday, November 11, 2020

அப்பாவிகள்

 

 

அப்பாவிகள்                         

 

கல்வி கற்பிக்கும் கூடங்கள்

விதம் விதமாய் அங்குதான்

எத்தனை ஏற்ற இறக்கங்கள்

வசதிக்குக்குத்தக்கவே அவை

படித்து  வெளிவரும் பிள்ளைகள்

ரகம் ரகமாய்

பள்ளிக்கூடம் என்ன செய்யும்

’ஒருத்தர் மண்டையில் அன்றைக்கு

என்ன எழுதி இருக்கானோ அவன்

அதுவே அவர்களை த்தீர்மானிக்குது’

அட்டகாசமாய் விளக்கம் தருகிறார்கள்

 நிறைந்து போகிறது மனம்.

மருத்துவ சேவையிலும்

படிகள் பலப்பல

அரசாங்க ஆசுபத்திரி தொடங்கி

அப்பல்லோ வரை விதம் விதமாய்

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை

வள்ளுவன் வகுத்துச்சொன்னது

அருள் இல்லார்க்கு அவ்வுலகம்

இல்லாமலும் போகலாம்

நமக்குத்தெரியாதச் சமாச்சாரம்.

மருத்துவசேவை கண்முன்பாகவே

மக்களைத்தள்ளித்தள்ளி

நிறுத்திவைக்கிறது

சமூக இடைவெளியோடு

ஆயிரம் பிரிவுகள் வசதிக்குத்தக்கனவே எல்லாம்.

ஏதுமில்லாதவர்க்கு நீதி மன்றத்தில்

ஒளி காட்டப்படும் என்பதில்லை

இருக்கின்ற ஓட்டை அமைப்பைக்

காக்கப்பிறந்தனவே சட்டங்கள்

கண்ணைகட்டிக்கொண்டாள் நீதி தேவதை

காசுக்குத்தக்கன முடிவுகளங்கு

வேறு வேறு

 உரு எடுத்து சாதிக்கும்

ஆயிரம் சந்துகளும் பொந்துகளும்

சட்டத்தில் மிக உண்டுதான்

விபரம் தெரிந்தவர்கள் மட்டுமே பெறுவார்கள்

என்றைக்கும் வெற்றி

எத்தனை ஏற்ற இறக்கங்கள்

எத்தனை நெளிவுசுளிவுகள்

வண்ண வன்ண விளக்குகள்

ஜிகினா போர்த்திக்கொண்ட

வார்த்தை ஜாலங்கள் மாயங்கள்

புரியவே இல்லைசாமி

வணிக உள்குத்து சமாச்சாரங்கள்.

பனிமலை எல்லையில் இரவு பகலாய்

துப்பாக்கியோடு நிற்பவனும்

ஏர்முனையில் மேழி பிடித்து நடப்போனுமே

என்றைக்கும் அப்பாவிகள்.-

----------------------------------

 

 

 

 

.

 

 

 

.

 

 

 

No comments:

Post a Comment