Thursday, May 19, 2022

விட்டல் ராவின் ஓர் அன்னாடு காச்சியின் சேலம்

 

ramachandran sundaresan <essarci@yahoo.com>
To:Editor Virutcham
Thu, Apr 28 at 7:25 PM

விட்டல் ராவின் எழுத்துச்சித்திரம்

,’ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’.                   -எஸ்ஸார்சி

 வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை 83.  145 பக்கங்கள் விலை ரூ 150.

விட்டல் ராவ் மூத்த எழுத்தாளர். பெங்களூரில் தற்காலம் வசித்துவருகிறார்.தொலைபேசித்துறை எத்தனையோ எழுத்தாளர்களை தமிழ் எழுத்துக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது. அந்த எழுத்தாளர் திருக்கூட்டத்தில் விட்டல் ராவ் பெருமைக்குறியவர். 

சேலம் அவர் இளமைக்காலத்தில் வாழ்ந்த பெரு நகரம். ஒரு சாதாரணன் பார்வையில் சேலம் எப்படி இருந்தது என்பதனை விருவிருப்பான நடையில் ‘ஓர் அன்னாடு காச்சியின் சேலம் என்னும் நூலாக விட்டல் ராவ் படைத்துள்ளார். இது  உலர் சுவை கட்டுரை நூல் அன்று. தன் வரலாறும் அன்று .புதினம் என்றும் இதனைச்சொல்லமுடியாது. விட்டல் ராவின்  சுவாரசியமான எழுத்துக்களால் உருவான எழுத்துச்சித்திரந்தான்  இந்நூல்.

விட்டல் ராவ் எழுதிக்குவித்தவை  நாவல் 12, குறுநாவல்2, சிறுகதை தொகுப்பு 4, கட்டுரை நூல் 10. இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் என்னும் மாபெரும் இலக்கியப்பணியை மூன்று பெரும் தொகுதிகளாகச் சாதித்தவர் விட்டல் ராவ்.  வெளியீடு கலைஞன் பதிப்பகம்.’ நதி மூலம்’ இவரின் பேசப்பட்ட புதினமாகும்.

எழுத்துமட்டுமல்ல இவர் நுழைபுலம் இன்னும் , ஓவியம் சிற்பம் திரைப்படம் என்று விரிந்து செல்கிறது.  விட்டல் இசையில் ஈடுபாடும் நல்ல  குரல் வளமும் படைத்தவர்.

 ’ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’ என்னும் நூலை  எழுத்தாளர் அமரர் சா. கந்தசாமிக்கு அன்புக்காணிக்கையாக்கியுள்ளார்.என்னுடைய சக பயணியும் குடும்ப நண்பருமான கந்தசாமி என்று பெருமையோடுஅவரைக் குறிப்பிடுகிறார்.

சேலம் என் ஊர்,என் மண்,என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று என்று நிறைவோடு பேசுகிறார்.

12 பகுதிகளாக  இந்நூல்  வாசகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ’குல தெய்வம்’ தொடங்கி ’சேலம் இன்று’ என்பதோடு நூல் முடிகிறது.

விட்டல் ராவின் குல தெய்வமான ‘எல்லம்மா’வை பவ்யமாய்க்குறிப்பிடுறார். சேலத்தில் பிரசத்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி எழுதுகிறார். கூடவே ஜாதிய சதி பற்றியும் இப்படி விமர்சிக்கிறார்.

‘ ஜாதீயத்தை  ஏற்படுத்தியவன் கூடவே தாங்கள் உண்டாக்கிய சாமிகளையும் உயர் ஜாதி கடவுள்கள், கீழ் ஜாதி கடவுள்கள் எனவும்,சட்டென பார்வைக்குப்படும்படியாய் வகைமைப்படுத்தி வைத்தான்.’

 தேர் முட்டி  அருகே இருந்த வில்வாத்திரி பவன் என்னும் உணவகத்தை அதன் சிறப்பை விளக்கமாகக்குறிப்பிடுகிறார்’பழுப்பேறிய வேட்டியை தூக்கி க்கட்டிக்கொண்ட வயதான பிராமணர்கள் அங்கு பரிசாரகர்களாக இருந்தனர் என்பதைப்பதிவு செய்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் அலெக்சாண்டர் ரீட் (1792 வருடம் ) சேலத்தில்  கலெக்டராகவும் சூப்பரின்டெண்டாகவும் இருந்தவர். போலீசு,  என்ஜினியரிங், நீதி  இந்த மூன்று துறைக்கும் அன்றைய சேலம் மாவட்டத்துக்கு அவர் ஒருவரே.

அன்று மக்களிடம் கடிகாரம் கிடையாது. தினம் மூன்று பீரங்கிக்குண்டுகள் முழக்கப்பட்டன. காலை 6 மதியம் 12 இரவு 8 என்பவை  அந்த நேரங்கள்.

நேஷனல் ஓட்டல் என்னும் நட்சத்திர விடுதி கட்டப்பட்டபோது  எதிரே இருந்த சர்க்கிள் ஏரி காணாமல் போனதை வருத்தத்தோடு எழுதுகிறார்.

விக்டோரியா மைதானம் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஓரினப்பாலுறவு மைதானமாக மாறிய செய்தியை விடாமல் குறிப்பிடுகிறார்.

தான் படித்த சிறுமலர் உயர் நிலைப்பள்ளி பற்றிப் பெருமையொடு பதிவு செய்கிறார். அந்நாள் தலைமை ஆசிரியர் ரெவெரெண்டு ஃபாதர் புஷ்ப நாதர், ’சிறிய புஷ்பம்’ உயர் நிலைப்பள்ளி என்றுதான் குறிப்பிடுவாராம்.

நடிகர் அசோகன் அப்பள்ளியில் தாமஸ் என்ற பெயரில்படித்ததை இவண் நாம் அறிகிறோம்.

சேலம் மத்திய சிறைக்குப்பின்னே காடும் புதருமாய் மண்டிக்கிடக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ்ஸாரின்படப்பிடிப்புக்கள் அனேகம் அங்கு நடைபெறும். அங்குள்ள ஓடையைச்சுற்றி சிறுகளா,காரை,சூரப்பழம்,அழிஞ்சி,சங்கம்,கறிவேப்பிலைக்கு சக்களத்தி,காட்டிலந்தை,சப்பாத்தி, கள்ளி ஆகிய செடிகள் செழித்திருக்கும். இவை இவை பேசப்படுகின்றன.

‘பேரு சொல்லாம திங்கணும்,பேரு சொல்லி போட்டு தின்னா கசக்கும்,புளிக்கும்’ சங்கப்பழம் பற்றிச்சுவையான செய்தியை விட்டல் குறிப்பிடுகிறார்.

மாம்பழங்களின் வகை, மல்கோவா,கிளிமூக்கு,குதாதாத், ஜஹாங்கீர்,குண்டு ஈமாம் பசந்து,தில் பசந்து என சேலத்து அற்புதக்கனி குறித்து இனிமையாய்ச்சொல்லிப்போகிறார்.

 இராமாயண ஜடாயு என்னும் கழுகு மரித்த இடமான சுண்ணாம்புக்கரடு பற்றியும், கல்கி   ஒரு புதினத்தின் தலைப்பாய்க்குறிப்பிட்ட ‘பொய்மான் கரடு’பற்றியும் அனேக செய்திகளை இங்கே வாசகர்கள் அறியவாய்க்கிறது.

அயோத்தியாப்பட்டிணம்என்னும் ஊர் பற்றிய கதையொன்று வருகிறது. ராமனும் சீதையும் ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு  புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்கின்றனர். நடுவானில் இருட்டிவிடவே சேலம் பகுதியில் கீழிறங்கித் தங்கினர். விடிந்து மறு பயணம் புறப்படுவதற்குள்   பட்டாபிஷேகத்திற்கு குறித்த நேரமும் வந்துவிடுகிறது.  ராம பட்டாபிஷேகத்தை அயோத்தியாப்பட்டிணத்திலேயே முடித்துக்கொண்டு இருவரும்  புறப்பட்டனர். அயோத்திக்குச் சென்றவுடன் சம்பிரதாயத்துக்கு ஒரு பட்டாபிஷேகம்  நடத்திக்கொள்வதாய் ஒரு முடிவானது. அச்சமயம்  ராவணின் தம்பி விபீடணனும்  ராவணன் அடக்கம் முடித்து விட்டு  அவர்களோடு அயோத்தியாபட்டினத்தில் வந்து சேர்ந்துகொண்டானாம். விட்டல் ராவ் விவரமாய்த்தான் சொல்கிறார்.

 எழுத்துலகில் எழுத்தாளர் சேலம் பகபில பகடாலு நரசிம்மலு நாயுடு’ தட்சிண இந்திய சரித்திரம்’  என்னும்  அரிய பெரிய நூலை எழுதியவர். இது நமக்குப் படிக்க கிடைக்குமா தெரியவில்லை

 நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை  என் கதை,மலைக்கள்ளன் நூல்களைத்தந்தவர்.

 எழுத்தாளர்கள் கு. சின்னப்ப பாரதி,தமிழ் நாடன்,சி. மணி, பாக்கியம் ராமசாமி,மகரிஷி, திலகவதி ஐ பி எஸ்,பெருமாள்முருகன் கலைஞர்கள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், சேலம் ஜெயலட்சுமி என சேலத்துப்பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் விட்டல் ராவ்.

விட்டுப்போனவைகள் என்று சில  இருக்கலாம்.   விட்டல் ராவால் சொல்லப்பட்ட விஷயங்கள்  மிக அழகாகச்சொல்லப்பட்டுள்ளன. படிக்கத்துவங்கினால் படித்து  முடித்துவிட்டுத்தான்  மறுவேலை என்கிறபடிக்கு வாசகனைப்பந்தப்படுத்துகிறது விட்டலின்  எழுத்துநடை.

பாவண்ணன் பெங்களூரை எழுதினார் சந்தியா நடராஜன் மயிலாடுதுரையை எழுதினார், சுப்ரபாரதிமணியன் புதுச்சேரியை எழுதினார் விட்டல் ராவ் சேலத்தை எழுதினார். இன்னமும் சில இவ்வகையில் இருக்கலாம். இது ’ஊரும் பேரும்’ காலமோ என்னவோ.

-----------------------------

 

 

 
உபநிடதம்

 


 


 

எஸ்ஸார்சி யின் உபநிடத சாரம்.

உப நிடதம்

அறிவோம் உபநிடதம்    

ஈசாவாஸ்ய  உபநிடதம்

 

அங்கும்  நிறைவு

.இங்கும்   நிறைவு.                

நிறைவே  நிறைவை வழங்கிட

அந் நிறைவு

நிறைவாய்த்தான்  மீதமாகிறது

.ஈசாவாஸ்வாஸ்ய  உபநிடதசாந்திபாடம் இப்படித்தான்தொடங்குகிறது.

1.இங்கு அசைவன அசையாதன

எப்பொருளிலும் இறைவன்

 விரவி இருக்கின்றான்.

எப்பொருளோடும் நீ

 பந்தப்படாமல் விலகி இரு.

2அங்ஙனம் பந்தப்படாதவன் மட்டுமே

 நிறைவாய் வாழ்கிறான்

அடுத்தவன் செல்வத்துக்கு

உன் ஆசையை வளர்த்துக்கொள்ளாதே.

 

2. செயல்படுவதே இங்கு உனதுவேலை.

 மனிதன் நூறாண்டுகள் உயிர்வாழலாம்.

 செயல்படுவதுமட்டுமே பிரதானகுறிக்கோள்

 உரிமைகள்உனது.

செயல்பாட்டின்பலனோடு மட்டும்

உனக்குப்பந்தம் வேண்டாம்.

 

3. உடலைப் பெரிதெனக்கருதி ஆன்மாவைக் கொன்றவர்கள் அடர்ந்த இருள்உலகில்வாழ்கிறார்கள். நிலையில்லாத பொருள்களுக்குப்பின்னால் சுற்றிச்சுற்றித் திரிகிறார்கள்.   

அழிவற்றஆன்மாவின்  மகிமையும் ஆற்றலும்அவர்கட்கு விளங்குவதில்லை.

4. மனிதஆன்மாஅசைவில்லாதது ஆனால்  மனோவேகத்தைவிட வேகமாகச்செல்லவும்வல்லது.  ஐம்பொறிகளைவிட விரைவாகச் செல்லும்ஆற்றல்வாய்ந்தது.

ஐம்பூதங்களில் காற்று உயிர்வாழ் அனைத்து ஜீவன்களுக்கும் உற்றதுணையாக நிற்கின்றது.

ஆன்மா தொலைவிலும் இருப்பது .

காண்கின்ற ஒவ்வொரு பொருளிலும்

 அதனதன் உள்ளும் நிறைந்து

 வெளியிலும் உறைவது.

6.அனைத்து உயிர்களையும் தன்ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்அனைத்து உயிர்களிலும் தன்ஆன்மாவைக் காணுதலும்என்கிற ஆத்ம அனுபவம் கைவரப்பெற்றால்அந்தமனிதர் எந்தத் துயரமும்படுவதில்லை.

அரசன், குடியானவன், ஞானி

,முரடன், செருப்புதைப்பவன்,நாவிதன்,

 எறும்பு,யானை, மரம்,கல்

எல்லாவற்றிற்கும்

ஆன்மா என்பது பொதுவானதே.

 அப்படிஉணரும் ஒரு ஞானிக்கு

எப்படியாரையும் வெறுப்பதும்

இழிவுசெய்வதும் சாத்தியப்படும்.

7.எல்லா உயிர்களும்தன்ஆன்மாவோடு பந்தமுடையன என்கிற பார்வைவாய்த்தபின் துயரம் எங்கிருந்து ஒருவனைஆட்கொள்ளும். எங்கு நோக்கினும் உன்னையே நீகாண்கிற அனுபவம் வாய்க்குமானால் உன்னைத்துன்பம் எப்படிநெருங்கும்..

8.இல்லாதது,குறையென ஏதுமில்லாதது,

 ,தசையற்றது, தூயது,

 பாவவினைகள்தொடாதது,தெளிந்தது

,மாஞானிஅது, விரவிச்செல்லவல்லது,

ஆன்மாஅதுவாகவே அரும்பியது.

9.வேதச்சடங்குகளைச்

 சுயதேவை கருதிசெய்பவன்

இருளில்வீழ்கிறான்

குறை ஞானத்தோடு

உருக்கொண்ட தெய்வங்களை

மட்டும்வழிபடுவோன்

இன்னும் இருளில் வீழ்கிறான்.

10. உருக்கொண்டதெய்வங்களை

அறிதலினின்றும்பெறப்படுவது

சடங்குகளைச்செய்வதனின்றும்

பெறப்படுவது என

இரண்டுவிஷயங்கள்

நமக்குச்சொல்கிறார்கள்..

11தெய்வங்களைப்பற்றியதெளிவு

 சம்பிரதாயச்சடங்குகள்செய்விப்பது .

என்கிறஇவற்றில்

முதலாவதுவித்யாஎன்றும்

,இரண்டாவதுஅவித்யா

,என்றும் பெயர்பெறுகிறது.

  இவை இரண்tடையும் தெளிந்து தேர்ந்தவர்கள் இப்படிச்செய்கிறார்கள்.

இவ்வுலக அன்றாடநடப்புக்களைச் செயல்பாடுகளைச் சம்பிரதாயச்சடங்குகள் என்னும்அவித்யாவினால் நிறைவாக முடிக்கின்றனர்.

தெய்வங்களின்பால்தெளிவு என்னும் வித்யாவினால் அமரத்துவம் அல்லது நிலைபேறு பெறுகிறார்கள்.

12.தோன்றா உருவத்தை வணங்குவோர்

 குருட்டுஇருளில் மூழ்குவர்.

எதிர்நிற்கும் தோற்றத்தை 

மட்டுமே      வழிபடுவோர்

இன்னும் கூடுதல்

 இருளுக்குத்தான்போவார்கள்

13.தோற்றத்தின் மூலத்தை( ஹிரண்யகர்பன்)வணங்குபவர்கள் ஒன்றைப்பெறுகிறார்கள்.

தோற்றம் தறா இயற்கையை( unbornபிரகிருதி) வணங்குபவர்கள் மற்றொன்றைப்பெறுகிறார்கள்.

தெளிந்தோர் எமக்கு உரைத்தவை இவை.

14.தோற்றத்தின் மூலம்,தோற்றம்தரா  இயற்கைஎன இரண்டையும்

வணங்குபவர்கள் எளியசாதனைகளைத்  தோற்றத்தின் மூலவழிபாட்டின் துணைகொண்டும்

நிலைத்தபேறுபெறுவதைத்தோற்றம் தறாஇயற்கையை வழிபடுவதன் மூலமாயும்

பெறுகிறார்கள்.

15.தங்கத்தாம்பாளம் கொண்டு

 சத்யத்தின்முகம் மூடிக்கிடக்கிறது.

 கதிரவனே நீ நினது மூடியைத்திற.

 யான் சத்யத்தைத் தரிசிக்கவேண்டும்.

 சத்தியத்தை வணங்குவோன் யான்

 என்னையே யான் அறியத்

துணை நிற்பாய்

 

16.கதிரோன்நீ

.எம்உயிருக்கு ஆதாரம்நீ.

அண்டமெங்கும் பயணிப்போன்நீ.

அனைத்தையும் ஆளுபவன்நீ,

தலைவனின்குமாரன், நீ,

 கதிரொளிவழங்கு.

 தகிக்கும்வெளிச்சத்தைக்கூட்டு

.நினது ஒளிர் உருவை யான் காண்கிறேன்.

 யானும்அதுவாகவேஆகிறேன்

 நின்னுள் உய்யும் புருடன்யான்.

17.எனதுஉயிர்

எங்கும்நிறை

எப்போதும்உறை

அக்காற்றோடு கலக்கட்டும்.

தீ என்உடலைஎரித்துச்சாம்பலாக்கட்டும்.ஓம் .

எனதுசெயல்கள் நினைவில் இருக்கட்டும்’

 எனதுசெயல்களே நினைவில்இருக்கட்டும்’

18.கடவுளே நீயேஅறிவாய்அனைத்துவழிகளும்

எங்களை நல்வழிப்படுத்து.

விடுதலைக்கும் வளமைக்கும் இட்டுச்செல்.

உம்மைஉளமார வணங்குகிறோம்.

கொடூரமான பாவங்களிருந்தும் எம்மைக்கரைசேர்..

------------------------------------

 

2.கேனோப உபநிடதம்

முதல்காண்டம்

என்னுடைய கை கால்கள்

 என்பேச்சு, கண்,காது,

என்னுடைய உணர்வுகள்பலமடைகின்றன

.உபநிடதத்தில்காணும்

அத்தனையும்பிரம்மமே.

யான்பிரம்மத்தை மறுக்காதிருப்பேன்ஆகுக.

பிரம்மம் என்னை

 ஒதுக்காதிருக்கட்டும்

பிரம்மம் வேறுஎங்கும்

மறுக்கப்படாதிருக்கட்டும்

பிரம்மம் எதனையும் ஒதுக்காதிருக்கட்டும்

உபநிடதத்தில் சொல்லப்பட்ட அறங்கள்

என்னில்தழைக்கட்டும்

எனது ஆன்மா மகிழ்ச்சியுறுக

என்னில்அவை உறுதிப்படட்டும்.ஓம்

மாணாக்கனின் வினா:

நமதுஅறிவை ஒருபொருளின்மீது எப்படிச் செலுத்துகிறோம்?

நம்உயிர் எதன்கட்டளைக்குப் பணிந்து  வினையாற்றுகிறது ?

நாம் யார்கட்டளைப் படிபேசுகிறோம்?

நமது கண்களையும் காதுகளையும் எந்தஅறிவு அதனதன் செயல்களைஆற்றச்சொல்கிறது.?

2.ஆசிரியரின் விடை:

அதுகாதின் காது

அறிவின் அறிவு

பேச்சின் பேச்சு

உயிரின் உயிர்

கண்ணின் கண்.

நான் –என்னும் தன்முனைப்பு

 நீங்கப்பெற்றால்

 வெற்றுஉணர்வுகள்

வெல்லப்பட்டு ஒரு ஞானி

அமரத்துவம்பெறுகிறான்.

 

3. நமதுகண்கள்

பிரம்மத்தைப் பார்க்காது

நமது பேச்சும்அறிவும்

 அதனை அறியாது

அதுபற்றிப் பாடம்சொல்ல

அறியாதவர்கள்நாம்.

இதுகாறும் அறிந்தவைகளில்

 அதுஇல்லை

நமக்குத் தெரியாதவைகளுக்குமே

 இன்னும் அப்பாலுள்ளது அது.

அப்படித்தான் முன்னோர்கள்

 கற்பித்திருக்கிறார்கள்.

நாம் செவிமடுத்து இருக்கிறோம்.

 

4. நமதுபேச்சுஅதனை விளக்காது

நாம் பேசுவதை

 அதுவெளிச்சப்படுத்தும்

அது மட்டுமேபிரம்மம்.

மற்றபடி மக்கள்  வழிபடுகிறார்களே

அதுவல்ல அது.

5. நமதுஅறிவுகொண்டு

 அதனைச் சிந்திக்கஇயலாது.

ஆயின்நமது அறிவைச்

 சிந்திக்கவைப்பது அதுவே.

அது  மட்டுமே பிரம்மம்

. மற்றபடி மக்கள் வணங்கும்

அதுவன்று அது.

 

6. நமது கண்களால்

அதனைக்காணஇயலாது

. ஆயின்நமது கண்களை

 அது காணவைக்கிறது.

அதுவே பிரம்மம் என்றுஅறி

. மற்றபடி மக்கள்

 இங்குவணங்கி எழுவதல்லஅது.

 

7. நமது காதுகள்

 பிரம்மத்தைக் கேட்க இயலாதன.

ஆயின் நமதுகாதுகளை

 அவைதாம்கேட்க வைக்கின்றன

அதுவே பிரம்மம்  என்பதறிவாய்.

மக்கள் வணங்கிஎழும்

 பிறிதல்லஅது

 

8. நமது  மூச்சோடு சேர்ந்து

 சுவாசிக்கும் ஒன்றன்றுபிரம்மம்.

நமது சுவாசத்தை இயக்குவதுஅது.

அதுமட்டுமே பிரம்மம்.

மக்கள் வணங்கி வழிபடும் பிறவன்றுஅது.

 

இரண்டாவதுகாண்டம்

 

1.ஆசிரியர்: உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

2.மாணவன்: நான் அப்படிஅதனைத் தெரிந்ததாகஎண்ணவில்லை. எனக்கு அதுதெரியாது என்றும் சொல்லமுடியாது.

நானறிவேன்.எம்மில்அதனை அறிந்தவனே அறிந்தவன்.அறியாதவன்அறியாதவனே.

3. ஆசிரியன்:

 பிரம்மத்தைஅறிந்திலேன்

என்பவன் அறிந்தவன்.

 பிரம்மத்தை அறிந்தனனென்று

நினைப்போன் அறியாதவன்.

தெரிந்துகொண்டேன் என்போன்

 தெரிந்துகொள்ளவில்லை.

அதனை அறியவில்லை

 என்போன் அறிந்தவன்.

4 ஒருவனது.உள்ளுணர்வு

அறிவிக்கும் அந்தபிரம்மத்தைத்

 தெரிந்துகொண்டேன் என்பதை..

அப்படிஅறிந்தோன்

 அமரத்துவநிலை எய்துகிறான்.

சுயபலத்தால் உடல்வலிவமை எய்துகிறான்.

 ஞானத்தால் அவனுக்கு

 நிலைபேறு உறுதிப்படுகிறது.

5. இவ்வுலக வாழ்விலேயே

 அந்தபிரம்மத்தை அறிந்தவன்

 மனிதவாழ்வின் நிறைவைக்கண்டவன்.

அப்படிஅறியாதவன் அழிவெய்துகிறான்.

பிரம்மம்ஒன்று

அதுவே அனைத்துபொருட்களிலும்

விரவியிருப்பதைத் தரிசிப்பவன்.

வெற்று உணர்ச்சிமட்டுமே வாழ்க்கை

என்பதினின்றும் உதறிஎழுகிறான்.

 அமரத்துவம்பெறுகிறான்

 

காண்டம் 3

1.ஆசிரியன்:அசுரர்களைவென்றுபடைப்புக்கடவுள்தேவர்களைக்காத்தார். தேவர்களைமீண்டும் உயர்த்திக் காட்டினார்பிரம்மா .அசுரர்களுடன்நடந்தபோரில் வெற்றி பெற்றதற்கும் அவர்கள் புகழ்மீட்கப்பட்டதற்கும் தேவர்களே சொந்தம் கொண்டாடினார்கள். வெற்றியும் புகழும் தமக்குத்தான் என்றுநினைத்துக்கொண்டனர்.

2. அவர்களின் வீண்பெருமையைஅழிக்கபிரம்மா ஒருபாடகனாகஅவர்கள்முன்னேதோன்றினார். தேவர்களுக்கு இதுவிஷயம் தெரியாது

3. தேவர்கள்அக்கினியிடம்பேசினார்கள்: ஜாதவேதனே நீ கண்டுபிடியார் இது நம்முன்னேபுதியதாய் பேராவிபோன்று?

உட்னே அக்கினி அந்தப்பேராவிமுன்வந்து‘ என்னசெய்தி’ என்றார்.

பிரம்மா(பேராவிஉருவில்): ‘யாரப்பாநீ “

அக்கினி:’நான்தான் அக்கினி. ஜாதவேதன்’.

பிரம்மா:‘ உன்சக்திஎன்ன?  அந்தசக்திஎன்னசெய்யும்?

அக்கினி:பூமியில் எதுஇருந்தாலும் அதனைஎரித்துமுடிப்பேன்.

பிரம்மா:ஒருபுல்லை கீழேபோட்டு ’ இதனைஎரிப்பாய்’ என்றார்.

அக்கினி தனது சக்தி முழுவதும் திரட்டிமுயன்று அப்புல்லை எரிக்கமுடியாமல் தோற்றுப்போனார்.

தேவர்களிடம்  அக்கினி ஓடினார்.’அந்தப்பேராவிஇன்னதுஎன்றுஅறியமுடியவில்லையே’ என்றுபுலம்பினார்.

7. தேவர்கள் வாயுவைஅழைத்தார்கள்.: வாயுதேவா இந்தப்பேராவி இன்னதுஎன்று கண்டுசொல் ?என்றார்கள்.

வாயு பகவான்பேராவி உருவில்இருக்கும்பிரம்மாவிடம்சென்றார்.

பிரம்மா :நீயார் ?

வாயு: நான்வாயு. ஆகாயத்தில்பயணிப்பவன்.

பிரம்மா: உன்சக்திஎன்ன? அதுஎன்னவெல்லாம்செய்யும்?

வாயு: அண்டத்தையேஊதித்தள்ளிவிடுவேன்.பூமியில்இருப்பவைஅத்தனையும்தான்.

10.  பிரம்மா வாயுதேவன் முன்பாக ஒருபுல்லைக்கிள்ளிவைத்து’இதனை’ ஊதித்தள்ளேன்’ என்றார்.

வாயுதன்சக்தி அனைத்தும் கூட்டிமுயற்சிசெய்தார்.அதனை அசைக்கமுடியவில்லை.காத்திருந்த தேவர்களிடம் ஓடினார்.’ அந்தப்பேராவி இன்னதுஎன்று கண்டுபிடிக்கமுடியவில்லை’ என்றுஒத்துக்கொண்டார்.

11. தேவர்கள்இந்திரனைஅணுகி ’சர்வவல்லமைஉள்ளவனேஇந்தப்பேராவி இன்னது என்றுஅறிந்துசொல்’ என்றனர்.

இந்திரன்;’ சரிஅப்படியேசெய்கிறேன்’

அந்தப்பேராவியிடம்போய் இந்திரன் நின்றான்.

பேராவி உருவில் வந்தபிரம்மாவோ மறைந்து போனார்.

12. இமயவான் புதல்வி உமா அழகானபொன்நிறத்தில் அவ்விடத்தே தோன்றியிருந்தார்.

இந்திரன்கேட்டான்: இதுயார் இந்தப்பேராவி ?

 

   காண்டம் 4

1.குருவாகிய அப்பெண்: ‘ அதுமெய்யாகபிரம்மனே அந்தப்பிரம்மாவின் ஆற்றலினால்தான் நீங்கள் இன்று  புகழோடு இருக்கிறீர்கள்’

உமை அம்மையின் வார்த்தை யினால்தான் இந்திரன்வந்துபோன அந்தப்பேராவி பிரம்மா என்பதைஅறிந்துகொண்டார்.

2.ஆகவே  இந்ததேவர்கள்  அக்கினி வாயு  இந்திரன் ஆகியோர்பிரம்மாவின் மிகஅருகேநெருங்கி இருக்கிறார்கள்.

அப்பேராவி பிரம்மா என்பதைமுதன்முதலில்அறிந்துகொண்டனர்.

3. மற்றதெய்வங்களின்முன் இந்திரன்ஆகச்சிறந்தவன்ஆனான் ஏனெனில்பிரம்மாவை நெருங்கிஅருகிருந்தவன்அல்லவா.  அந்தப்பேராவிபிரம்மன் என முதலில் அறிந்தவன்அவனே.

4. மின்னலின் ஒளிபோன்று ஒளிர்ந்துகண் இமைக்கும்நேரத்தில் மறைந்துபோனார்பிரம்மா. தேவர்களுக்கும் பிரம்மாவுக்கும் இடைஇருக்கும் வித்யாசம்இது.

5 பிரம்மாவுக்கும் நம்உடலில்உள்ள ஆத்மாவுக்கும்இடையிலான ஒப்புமையாதெனில்

மனதால்பிரம்மாவை  எண்ணும்வேகத்திற்கும், மனம் ஒருவிருப்பத்தைப் பிறப்பிக்கும் வேகத்திற்கும் இடைஅமைந்துநிற்பதே.

6.எல்லோராலும் வணங்கப்படும் பிரம்மன் தத்வனா எனப்படுகிறது .அனைவரும்அன்புசெலுத்தத் தகுதியானது

ஆகவே அது தத்வனம் என்றாகிறது.

7மாணவன்:  ’குருவே எனக்கு உபநிடதம் கற்பியுங்கள்’

ஆசிரியர்’: உனக்குஉபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று. நிச்சயமாகவே உனக்கு உபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று

.பிரம்மத்தைப்பற்றியும்தான்.

8. சுயகட்டுப்பாடு,சுயமாய்த்

தேவையைச்சுருக்குதல்,

 கடமைஎனும் காரியமாற்றுதல்

,எல்லாப்பிரிவுகளுடன்

கூடியவேதங்கள் கற்றல்,

பிரம்மத்தை அறியஆதாரங்கள்.

வாய்மையே

எல்லாவற்றிற்குமான உறைவிடம்.

9.இப்படி அறிபவன்அனைத்துப் பாவங்களையும் தொலைக்கிறான்., ஆனந்தத்தில் நிலைக்கிறான். முடிவில்லாத அருள்வழங்கும்  உயர்பிரம்மத்தில் உறைகிறான்.

----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2.கேனோப உபநிடதம்

முதல்காண்டம்

என்னுடைய கை கால்கள்

 என்பேச்சு, கண்,காது,

என்னுடைய உணர்வுகள்பலமடைகின்றன

.உபநிடதத்தில்காணும்

அத்தனையும் பிரம்மமே.

யான்பிரம்மத்தை

மறுக்காதிருப்பேன்ஆகுக.

பிரம்மம் என்னை

 ஒதுக்காதிருக்கட்டும்

பிரம்மம் வேறுஎங்கும்

மறுக்கப்படாதிருக்கட்டும்

பிரம்மம் எதனையும் ஒதுக்காதிருக்கட்டும்

உபநிடதத்தில் சொல்லப்பட்ட அறங்கள்

என்னில்தழைக்கட்டும்

எனது ஆன்மா மகிழ்ச்சியுறுக

என்னில்அவைஉறுதிப்படட்டும்.

ஓம்

மாணாக்கனின் வினா:

நமதுஅறிவை ஒருபொருளின்மீது எப்படிச் செலுத்துகிறோம்?

நம்உயிர் எதன்கட்டளைக்குப் பணிந்து  வினையாற்றுகிறது ?

நாம் யார்கட்டளைப் படிபேசுகிறோம்?

நமது கண்களையும் காதுகளையும் எந்தஅறிவு அதனதன் செயல்களைஆற்றச்சொல்கிறது.?

2.ஆசிரியரின் விடை:

அதுகாதின் காது

அறிவின் அறிவு

பேச்சின் பேச்சு

உயிரின் உயிர்

கண்ணின் கண்.

நான் –என்னும்

 தன்முனைப்பு நீங்கப்பெற்றால்

 வெற்றுஉணர்வுகள்

வெல்லப்பட்டு

ஒரு ஞானி

அமரத்துவம்பெறுகிறான்.

 

3. நமதுகண்கள் பிரம்மத்தைப் பார்க்காது

நமது பேச்சும்அறிவும்

 அதனை அறியாது

அதுபற்றிப் பாடம்சொல்ல

அறியாதவர்கள்நாம்.

இதுகாறும் அறிந்தவைகளில்

 அது இல்லை

நமக்குத் தெரியாதவைகளுக்குமே

 இன்னும்அப்பாலுள்ளது அது.

அப்படித்தான் முன்னோர்கள் கற்பித்திருக்கிறார்கள்.

நாமும் செவிமடுத்து இருக்கிறோம்.

4. நமதுபேச்சுஅதனை விளக்காது

நாம் பேசுவதை

 அதுவெளிச்சப்படுத்தும்

அது மட்டுமேபிரம்மம்.

மற்றபடி மக்கள்  வழிபடுகிறார்களே

அதுவல்ல அது.

 

5. நமதுஅறிவுகொண்டு

 அதனைச் சிந்திக்கஇயலாது.

ஆயின்நமது அறிவைச்

 சிந்திக்கவைப்பதுஅதுவே.

அது  மட்டுமே பிரம்மம்

. மற்றபடி மக்கள் வணங்கும்

அதுவன்று அது.

 

6. நமது கண்களால்

அதனைக்காணஇயலாது

. ஆயின்நமது கண்களை

 அது காணவைக்கிறது.

அதுவே பிரம்மம் என்றுஅறி

. மற்றபடி மக்கள்

 இங்குவணங்கி எழுவதல்லஅது.

 

7. நமது காதுகள்

 பிரம்மத்தைக் கேட்கஇயலாதன.

ஆயின் நமதுகாதுகளை

 அவைதாம்கேட்க வைக்கின்றன

அதுவே பிரம்மம்  என்பதறிவாய்.

மக்கள் வணங்கிஎழும்

 பிறிதல்லஅது

 

8. நமது  மூச்சோடு சேர்ந்து

 சுவாசிக்கும் ஒன்றன்றுபிரம்மம்.

நமது சுவாசத்தை இயக்குவதுஅது.

அது மட்டுமே பிரம்மம்.

மக்கள் வணங்கி வழிபடும் பிறவன்றுஅது.

இரண்டாவதுகாண்டம்

 

1.ஆசிரியர்: உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறாய்அதுஅப்படிஅல்ல.

.உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

2.மாணவன்: நான் அப்படிஅதனைத் தெரிந்ததாக எண்ணவில்லை. எனக்கு அது தெரியாது என்றும் சொல்லமுடியாது.

நானறிவேன்.எம்மில்அதனை அறிந்தவனே அறிந்தவன்.அறியாதவன்அறியாதவனே.

3. ஆசிரியன்:

 பிரம்மத்தைஅறிந்திலேன்

என்பவன் அறிந்தவன்.

 பிரம்மத்தை அறிந்தனனென்று

நினைப்போன் அறியாதவன்.

தெரிந்துகொண்டேன் என்போன்

 தெரிந்துகொள்ளவில்லை.

அதனை அறியவில்லை

 என்போன்அறிந்தவன்.

4 ஒருவனது.உள்ளுணர்வு அறிவிக்கும்

அந்தபிரம்மத்தைத்

 தெரிந்துகொண்டேன் என்பதை..

அப்படிஅறிந்தோன்

 அமரத்துவநிலை எய்துகிறான்.

சுயபலத்தால்

உடல்வலிவமை எய்துகிறான்.

 ஞானத்தால் அவனுக்கு

நிலைபேறு உறுதிப்படுகிறது.

5. இவ்வுலக வாழ்விலேயே 

அந்தபிரம்மத்தை அறிந்தவன்

 மனிதவாழ்வின் நிறைவைக்கண்டவன்.

அப்படிஅறியாதவன்

அழிவெய்துகிறான்.

பிரம்மம்ஒன்று

 அதுவே அனைத்துபொருட்களிலும்

விரவியிருப்பதைத் தரிசிப்பவன்

வெற்று உணர்ச்சிமட்டுமே

 வாழ்க்கை

என்பதினின்றும் உதறிஎழுகிறான்

 அமரத்துவம்பெறுகிறான்.

 

காண்டம் 3

1.ஆசிரியன்:அசுரர்களைவென்றுபடைப்புக்கடவுள்தேவர்களைக்காத்தார். தேவர்களைமீண்டும் உயர்த்திக் காட்டினார்பிரம்மா .அசுரர்களுடன்நடந்தபோரில் வெற்றி பெற்றதற்கும் அவர்கள் புகழ்மீட்கப்பட்டதற்கும் தேவர்களே சொந்தம் கொண்டாடினார்கள். வெற்றியும் புகழும் தமக்குத்தான் என்று நினைத்துக்கொண்டனர்.

2. அவர்களின் வீண்பெருமையைஅழிக்கபிரம்மா ஒருபாடகனாகஅவர்கள்முன்னேதோன்றினார். தேவர்களுக்கு இதுவிஷயம் தெரியாது

3. தேவர்கள்அக்கினியிடம்பேசினார்கள்: ஜாதவேதனே நீ கண்டுபிடியார் ? இது நம்முன்னேபுதியதாய் பேராவிபோன்று?

உடனே அக்கினி அந்தபேராவிமுன்வந்து‘ என்னசெய்தி’ என்றார்.

பிரம்மா(பேராவிஉருவில்): ‘யாரப்பாநீ “

அக்கினி:’நான்தான் அக்கினி. ஜாதவேதன்’.

பிரம்மா:‘ உன்சக்திஎன்ன?  அந்தசக்திஎன்னசெய்யும்?

அக்கினி:பூமியில் எது இருந்தாலும் அதனைஎரித்துமுடிப்பேன்.

பிரம்மா:ஒருபுல்லை கீழேபோட்டு ’ இதனைஎரிப்பாய்’ என்றார்.

அக்கினி தனது சக்தி முழுவதும் திரட்டிமுயன்று அப்புல்லை எரிக்கமுடியாமல் தோற்றுப்போனார்.

தேவர்களிடம்  அக்கினி ஓடினார்.’அந்தப்பேராவிஇன்னது என்றுஅறிய முடியவில்லையே’ என்றுபுலம்பினார்.

7. தேவர்கள் வாயுவைஅழைத்தார்கள்.: வாயுதேவா இந்தப்பேராவி இன்னது என்று கண்டுசொல் ?என்றார்கள்.

வாயு பகவான்பேராவி உருவில் இருக்கும்பிரம்மாவிடம்சென்றார்.

பிரம்மா :நீயார் ?

வாயு: நான்வாயு. ஆகாயத்தில்பயணிப்பவன்.

பிரம்மா: உன்சக்திஎன்ன? அதுஎன்னவெல்லாம்செய்யும்?

வாயு: அண்டத்தையே ஊதித்தள்ளிவிடுவேன்.பூமியில்இருப்பவைஅத்தனையும்தான்.

10.  பிரம்மா வாயுதேவன் முன்பாக ஒருபுல்லைக்கிள்ளிவைத்து’இதனை’ ஊதித்தள்ளேன்’ என்றார்.

வாயுதன்சக்திஅனைத்தும் கூட்டிமுயற்சிசெய்தார்.அதனை அசைக்க முடியவில்லை.காத்திருந்த தேவர்களிடம் ஓடினார்.’ அந்தப்பேராவி இன்னதுஎன்றுகண்டுபிடிக்கமுடியவில்லை’ என்று ஒத்துக்கொண்டார்.

11. தேவர்கள்இந்திரனைஅணுகி ’சர்வவல்லமை உள்ளவனே இந்தப்பேராவி இன்னது என்றுஅறிந்துசொல்’ என்றனர்.

இந்திரன்;’ சரிஅப்படியேசெய்கிறேன்’

அந்தப்பேராவியிடம்போய் இந்திரன் நின்றான்.

பேராவி உருவில் வந்த பிரம்மாவோ மறைந்து போனார்.

12. இமயவான் புதல்வி உமா அழகானபொன்நிறத்தில் அவ்விடத்தே தோன்றியிருந்தார்.

இந்திரன்கேட்டான்: இதுயார் இந்தப்பேராவி ?

காண்டம் 4

1.குருவாகிய அப்பெண்: ‘ அதுமெய்யாகபிரம்மனே அந்தப்பிரம்மாவின் ஆற்றலினால்தான் நீங்கள் இன்று  புகழோடு இருக்கிறீர்கள்’

உமை அம்மையின் வார்த்தை யினால்தான் இந்திரன் வந்துபோன அந்தப்பேராவி பிரம்மா என்பதைஅறிந்துகொண்டார்.

2.ஆகவே  இந்த தேவர்கள்  அக்கினி வாயு  இந்திரன் ஆகியோர்பிரம்மாவின் மிகஅருகே நெருங்கி இருக்கிறார்கள்.

அப்பேராவி பிரம்மா என்பதை முதன்முதலில் அறிந்துகொண்டனர்.

3. மற்றதெய்வங்களின் முன் இந்திரன் ஆகச்சிறந்தவன் ஆனான் ஏனெனில் பிரம்மாவைநெருங்கி அருகிருந்தவன்அல்லவா.  அந்தப்பேராவிபிரம்மன் என முதலில் அறிந்தவன் அவனே.

4. மின்னலின் ஒளிபோன்று ஒளிர்ந்துகண் இமைக்கும்நேரத்தில் மறைந்துபோனார் பிரம்மா. தேவர்களுக்கும் பிரம்மாவுக்கும் இடைஇருக்கும் வித்யாசம் இது.

5 பிரம்மாவுக்கும்

 நம்உடலில்உள்ள ஆத்மாவுக்கும்

இடயிலான ஒப்புமையாதெனில்

மனதால் பிரம்மாவை

எண்ணும்வேகத்திற்கும்,

 மனம் ஒருவிருப்பத்தைப்

 பிறப்பிக்கும் வேகத்திற்கும்

 இடைஅமைந்து நிற்பதே.

 

6.எல்லோராலும் வணங்கப்படும் பிரம்மன் தத்வனா எனப்படுகிறது.அனைவரும்அன்புசெலுத்தத் தகுதியானது

ஆகவே அது தத்வனம் என்றாகிறது.

 

7மாணவன்:  ’குருவே எனக்கு உபநிடதம் கற்பியுங்கள்’

ஆசிரியர்’: உனக்குஉபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று. நிச்சயமாகவே உனக்கு உபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று

.பிரம்மத்தைப்பற்றியும்தான்.

8. சுயகட்டுப்பாடு,சுயமாய்த்

தேவையைச்சுருக்குதல்,

 கடமைஎனும் காரியமாற்றுதல்

,எல்லாப்பிரிவுகளுடன்

கூடியவேதங்கள்கற்றல்,

பிரம்மத்தை அறியஆதாரங்கள்.

வாய்மையே

எல்லாவற்றிற்குமான உறைவிடம்.

 

9.இப்படி அறிபவன்

அனைத்துப் பாவங்களையும்தொலைக்கிறான்.,

ஆனந்தத்தில் நிலைக்கிறான்.

 முடிவில்லாத அருள் வழங்கும் உயர் பிரம்மத்தில் உறைகிறான்.

 

கதோபனிடதம்

இது ஆறு வல்லிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இரண்டு அத்யாயங்கள் ஆறு கிளைகள். ஒவ்வொரு அத்யாயத்திற்கும் மூன்று வல்லிகள்.    (வல்லி-கிளை.)

தொடக்கத்தில் ஒரு விஷயத்தை இங்கே விளங்கிக்கொள்ள வேண்டும்.

வாஜஸ்ரவசா என்பவன் தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் தானம் செய்துவந்தான். அவனுக்கு  நசிகேதஸ் என்னும்  ஓரு மகன் இருந்தான்.

பசுக்களை தானம் கொடுப்பதற்குத் தனது தந்தை   அவைகளை  ஓட்டிவரும் சமயம் பார்த்துக்கொண்டே இருந்த நசிகேதஸ் ‘ தந்தையே என்னை யாருக்கு தானம் கொடுப்பாய்? என்று கேள்வி கேட்டான்.

ஒன்று இரண்டு மூன்று என மூன்றுமுறை அதே கேள்வியைக்கேட்டான்.

அவனது தந்தை அவன் பக்கம் திரும்பி, ‘ இறப்புக்கு உன்னை த்தானம் கொடுப்பேன்’ என்று பதில் தந்தார்.

அவன் எழுந்து நின்றான்.

அவன் தந்தை சொன்னார்.

’ நீ  மரணம் அடைவாய்

 மரணத்தின் பொறுப்பாளி எமன்

அவன் இடத்திற்கு

 நீ சென்று தங்கிவிடு.

 மானுட  இறப்புக்கு எல்லாம்

பொறுப்பாளி

 தன்  இருப்பிடத்தில் 

அவன் இல்லை  என்றாலும்  நீ

அவன் இருப்பிடத்தில்

 மூன்று  இரவுகள்

 உணவின்றி  உறை.’

எமன் திரும்ப வந்து

உன்னிடம் வினா வைப்பான்.

‘எத்தனை இரவுகள் இங்கு காத்துக்கிடந்தாய்? என்று..

‘மூன்று’ என்று  சொல்.

முதல் நாள் இரவு என்ன சாப்பிட்டாய்?

 எமன் கேட்டால்

நீ ‘உனது வாரிசைதான் சாப்பிட்டேன்’  பதில் சொல்.

இரண்டாம் நாள் இரவு ? என்று எமன் கேட்டால்

’உனது ஆடு மாடுகளை’  பதில் சொல்.

மூன்றாம் நாள் இரவு ? என்று எமன் கேட்டால்

 ’ உனது நற்செயல்களை’

 பதில் சொல்.

நசிகேதஸ் இறந்து எமன் வசம்  போனான். எமன் அவன் இருப்பிடத்தில் இல்லை .மூன்று இரவுகள் உணவின்றி எமன் இருப்பிடத்தில் தங்கியிருந்தான். எமன் திரும்பி வந்தான் ‘ எத்தனை இரவுகள் இங்கு தங்கியிருந்தீர்?’ கேள்வி  கேட்டான்.

‘மூன்று’ நசிகேதஸ் பதில் சொன்னான்.

‘ முதல் நாள் இரவு என்ன சாப்பிட்டாய்?’

‘உனது வாரிசை’

‘இரண்டாம் நாள் இரவு’

‘உனது கால் நடைகளை’

‘மூன்றாம் நாள் இரவு’

‘உனது நற்செயல்களை’

‘உனக்கு எனது மரியாதைகள் பல. தகுதிக்குரியவன் நீ.  உனக்கு என்ன வரம்  நான் தர வேண்டும் சொல்’ என்றான் எமன்  நசிகேதசிடம்.

’ நான் என் தந்தையிடம் திரும்பவும் செல்லவேண்டும்’

‘சரி ஆயிற்று, உனது அடுத்த வரம்’

‘எனது நற்செயல் எப்போதும் அழியக்கூடாது’

எமன்’ நசிகேதஸ் அக்னி ’பற்றி உனக்குச் சொல்லிக்கொடுத்தேன்.’.’உனது நற்செயல்கள்  ஆக அழியாதன’ என்று வரம் தந்தான்.

’மூன்றாம் வரம் என்ன வெண்டும்?’

‘ இறப்பை எப்படி வெல்வது?’ என்றான் நசிகேதஸ்

எமன் அவனுக்கு ’நசிகேதஸ் மகாயாகம்’ பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நசிகேதஸ் இறப்பை வென்றான்.

 

அத்யாயம் ஒன்று.

வல்லி ஒன்று.

ஓம்.  மாணவனையும் ஆசிரியரையும் காப்பற்றட்டும்

..முக்தியின் ஆனந்தத்தை

 நாங்களிருவரும் அனுபவிக்க

அவன்  காரணமாகிறான்.

 புனிதச்சுவடிகளின்

மெய்யான கருத்தை

 நாங்கள் முயன்று காணவேண்டும்.

 எங்கள் கல்வி நிறைவு தரட்டும்.

 நாங்கள் இருவரும்

வீண் தர்க்கம்

செய்யாமல் இருப்போம் ஆகுக.

1.   வாஜஸ்ரவா வின் குமாரன் வாஜஸ்ரவாசா,

2.    தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டி தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்தான்.

3.    அவனுக்கு நசிகேதஸ் என்ற பெயருடைய குமாரன் இருந்தான்.

4.   தனது தந்தை தானமாக அனைத்துப்பொருட்களையும் வழங்கிய போது நசிகேதசுக்கு  தந்தை பாசம் இதயத்தில் செயலாற்றத்தொடங்கியது. அவன் சிறுவன், ஆயினும் அவன் சிந்திக்கலானான்

5.   பசுக்கள் தண்ணீர் அருந்தி புல் தின்று பால் கொடுத்து இன விருத்தி செய்யமுடியாத நிலையில் உள்ள அவைகளை யாகத்தில் தானமாகக் கொடுத்தவர்கள்  மகிழ்ச்சி தராத உலகிற்குத்தான் செல்வார்கள் .

6.   நசிகேதஸ் தனது தந்தையை நோக்கி’ யாருக்கு நீ என்னைத்தானமாய்க்கொடுப்பாய்’ என மூன்றுமுறை வினவினான். சினமடைந்த தந்தை’ உன்னை எமனுக்குக்கொடுப்பேன்’ என்று விடை சொன்னார்.

7.    நசிகேதஸ் ‘எத்தனையோ பேரில் நான் முதலாமவனோ எத்தனையோ பேரில் நான் இடையில் இருப்பேனோ அந்த எமன்  என்னிடம்  எதனை எதிர் பார்ப்பானோ.’ என்று யோசித்தான்.

8.   நமது முன்னோர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படி  இதரர்களும் நடக்கவேண்டும். ஒரு சோளம் மண்ணில் விழுந்து உருவிழந்து ஒரு செடியாக பிறப்பெடுக்கிறது. மனிதர்களும் அப்படித்தான்  நசிகேதஸ் எமனின் வைவஸ்வதா இருப்பிடம் சென்றான்

அங்கு எமன் இல்லை. யாரும் அவனை வா என்று அழைக்கவும் இல்லை

7.’ஒரு அந்தண விருந்தாளி நெருப்பென  வீட்டிற்குள் நுழைகிறான். அவனை சாந்தப்படுத்த வைவஸ்வதனே தண்ணீர் கொண்டுவா’ என்றார் எமன்..

8. நம்பிக்கை,எதிர்பார்ப்பு,

 நல்லோர் சேர்க்கை,

நட்பு பேச்சு,யாகம்,

 புனித தானம்,

 பெற்ற மகன்கள்

 மற்றும் ஆடுமாடுகள்

 அனைத்தும் அழிந்துபோம்

 எப்போது எனில்  

ஒரு அந்தண விருந்தாளி

ஒருவன் வீட்டில் உணவு ஏதுமின்றி

ஓர் இரவு தங்க நேர்ந்துவிட்டால்.

 

 எமனோ மூன்று இரவு கழித்து வீடு திரும்பியிருக்கிறான்.

 

9 ‘. ஓ  அந்தணனே மரியாதைக்குரிய விருந்தினனே மூன்றிரவுகள் உண வின்றி என் இருப்பிடத்தில் தங்கிவிட்டீர். நான் உமக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். உம்மை வணங்குகிறேன். எனக்கு நன்மை உண்டாகட்டும்’

என்றார் எமன்.

10. எமா, நான்  என் தந்தையிடம் செல்லவேண்டும் அவர் கோபம் ஏதும் இல்லாமல் என்னை அரவணைத்துச் சாந்தமாக வேண்டும்.அவர் என்னை வாழ்த்த வேண்டும்.

11. ‘ என்னுடைய அருளினால்  அருணனின் குமாரன் ’ஆடலகி’ உன்னை அடையாளம் காண்பான். நிம்மதியாக இரவில் உறங்குவான். நீ இறப்பின் பிடியிலிருந்து விடுபடுதலைக்காண்பாய். அவன் சினம் தணிந்துவிடும்.

 

12. சொர்க்கத்தில்  எமன்  இல்லை  ஆக அங்கு எம பயமில்லை. வயதானவர்கள் அங்கு அஞ்சுவதுமில்லை. பிரச்சனை ஏதுமில்லாமல் பசியும் தாகமும் தணிந்து ஒருவன் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக  வாழ்கிறான்

13. ஓ இறப்புக்கடவுளே

 நீ சொர்க்கம்  நோக்கி நம்மைச்செலுத்தும்  யாகம்  எப்படிச் செய்வது என்பது அறிவாய். நான் அதனை முழுவதுமாக நம்புகிறேன். அதனை நீ எனக்கு விளக்கமாகச்சொல்லிக் கொடு. இப்பூவுலகில் வாழ்வோர் என்றும்   அழிவிலா ஒரு  நிலையை எய்துகிறார்கள்.இது எப்படி?

 எனது இரண்டாவது வரம்.

 

14. ’சொக்கம் நோக்கி

இட்டுச்செல்லும் தீ யை

நான் அறிவேன்.

ஓ நசிகேதஸ்

 நான் உனக்கு அதன் விபரம் சொல்வேன்.

 என்னிடம் இருந்து

அதனை நீ  அறியலாம்.

பேரண்டத்திற்கு ஆதாரமானதும்

 நம் இதயத்தின் மய்யமாய்

 வீற்றிருப்பதுவும்

 அந்த அக்கினியே’.

 

15. அந்த யாகம் பற்றி எமன் விளக்கினார்’. உலகில் அதன் ஆதார இருப்பாகச், சிலை செய்வதற்கு செங்கற்கள் எப்படி இருக்கவேண்டும்  எண்ணிக்கையில் அவை எத்தனை வேண்டும். எப்படி அவை வைக்கப்படுதல் வேண்டும்’

. நசிகேதஸ் தான்  விளங்கிக்கொண்டதை திரும்பவும் சொன்னான். எமன் சந்தோஷமடைந்தார்.

 

16’.திருப்தி அடைந்த எமன்  இதனையும் வரமாக ப்பெற்றுக்கொள் என்றார். இந்த யாகம் இனி உன் பெயரால் நசிகேதஸ் யாகம் என வழங்கப்படும். இந்த பல வண்ண மாலையை நீ பெற்றுக்கொள்’ என்றார்.

 

17. யார் யார்  இந்த,   நசிகேதஸ் யாகத்தை  மூன்று முறை செய்கின்றார்களோ  யார் தனது தந்தை தாய் ஆசான் இவர்களோடு இயைந்து வாழ்கிறார்களோ, படிப்பு வேள்வி தருமம்  என்கின்ற மூன்றை யார் தொடர்கின்றார்களோ, இவர்கள் பிறப்பு இறப்பை க்கடந்துவிடுகிறார்கள்.

 

 இந்த  மேன்மை பொருந்திய ஒளிமிக்க அனைத்தும் அறிந்த  பிரம்மனிடமிருந்து  வெளிப்பட்ட அக்கினியை உணர்ந்தவர்கள்  என்றும் நிலைக்கும் அமைதியைப்பெறுகிறார்கள்.

 

18. நசிகேதஸ் யாகம்   மூன்றையும்  முறையே அறிந்து அதற்கு சாந்தி அளித்தவர் இறப்பு எனும் விலங்கை விலக்கித்  துன்பம் தொலைத்து சொர்க்கத்தில் இன்பத்தையே அனுபவிக்கிறார்.

 

19. நசிகேதனே நீ பெற்ற இரண்டாம் வரம் ஒருவனை சொர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் யாகம் பற்றியது. இந்த யாகம் உன் பெயரால் விளங்குவது. நீ மூன்றாம் வரத்தை கேட்கலாம்.

 

20. நசிகேதஸ் கேட்டான்  “ஒரு அய்யம்  நீங்கள் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும். மனிதன் இறந்தபிறகு சிலர் அவனுக்கு  ஆன்மா உண்டென்கிறார்கள். சிலர் அவனுக்கு  அது இல்லை என்கிறார்கள்”

21. எமன் விடை சொன்னார். “ இந்த விஷயத்தில்  பழங்காலத்திலிருந்து கடவுளர்க்கே கூட அய்யமுண்டு. இதனை எளிதில் விளங்கிக்கொள்ள முடியாது.   பூடகமானது. இதனை எனக்காக விட்டுவிடு வேறு ஏதும் வரம் கேள்”.

22. நசிகேதஸ் கேட்டான்.

  எமா நீ யே சொல்கிறாய்

இதனில் கடவுளர்க்கே

 அய்யம் என்று

. அதனை எளிதில்

அறிய முடியாதென்று.

உன்னைப்போல்

 இனி ஒரு ஆசிரியர்

 கிடைக்கவும் மாட்டார்.

நிச்சயமாக இதனைவிட

  வேறுஒர் வரமும்

இருக்கவும் முடியாது.”

 

23.’மகன், பேரன் என்று பெற்று   நூறு ஆண்டுகள் வாழவேண்டும்,  மந்தையென மாடுகள் யானைகள்,தங்கம், குதிரைகள் என வரம் கேள். உலகில் விரிந்து , பரந்த வசிப்பிடம்   எத்தனை ஆண்டுகள் வாழ்க்கை வேண்டுமோ  அவற்றைக்கேள்.’ என்றார் யமன்.

 

24.’ இன்னும் இதுபோன்று நிறைந்த  செல்வமும் நெடிய ஆயுளும்  நீ கேட்கலாம்.  பரந்த புவியுலகின் அரசனாக விருப்பமா, நீ விழைவது எல்லாம்  அனுபவிக்க விருப்பமா’  எமன் கேட்டார்.

 

25.’  இந்த அனித்ய உலகில் எவையெல்லாம் கிட்டாதோ அவைகளைக்கேள்.  ரதம் ஏறி வரும் இசைக்கருவிகளோடு அழகு தேவதைகள் உனக்குப்பணிவிடை செய்யவேண்டுமா. நான்  அளிக்கிறேன். இறப்புக்குப்பின் ஆன்மா என்னவாகும் என்பத மட்டும் விட்டு விடு கேட்காதே.’ எமன் தொடர்ந்தார்.

 

26.’ எமா  நீ சொல்லும் இவை  எல்லாம் நாளைக்கே அழிந்துபோம்.  நமது  பொறிகளின் உணர்வுகளை எல்லாம்  அவை  நீர்த்துபோகச்செய்துவிடும்.

நீண்ட ஆயுள் என்பதும் மிகச் சிறியதுதான்.தேர் நடனம் இசை இவைகள் உன்னிடமே இருக்கட்டும்.’

 

27. ’பொருளால் எந்த ஒரு மனிதனும் மகிழ்ச்சி அடைந்துவிடமுடியாது. பொருள்பல பெறலாம் ஆயின்,  நீ விரும்பும்வரை மட்டும்தானே பூவுலகில் ஒருவர்  உயிர்வாழ்தல் சாத்தியம். ஆக எது  நான் கேட்டேனோ அது மட்டுமே அதுவே சரியானது.’

 

28. அழியாத என்றும் நிலைத்த ஒரு  பெரு விஷயத்தை தெரிந்துகொண்டபின் அழியும் இந்தப் பூவுலக வாழ்வில் நீண்ட ஆயுளோடு அழகும்  காதலும் பெற்றுவிட்டதால் சந்தோஷிப்பானா?

 

29. எமா,  மனிதனுக்கு எதனில் அய்யம் எழுகிறது? எதற்குப்பின் பெரு விஷயம் அவனுக்கு  சாத்தியமாகும்?

 நசிகேதஸ் ’ஆன்மாவை  அறிதலைத் தவிர்த்து எந்த வரமும் கேட்கவிரும்பவில்லை.’என்றான்.

 

 

வல்லி     II

 

1.எமன் பேசுகிறார்,

’ஒன்று நன்மை தருவது

மற்றது இன்பம் தருவது

வேறுபட்ட இவை

மனிதனைப்  பிணிக்கின்றன.

 இன்பம் விழைந்தவன்

உண்மைப்பொருளைத் தொலைக்கிறான்.

நன்மை விழைந்தவன்

ஆசீர்வதிக்கப்படுகிறான்

. நன்மையும் இன்பமும்

 மனிதனை ஆட்கொள்கின்றன

புத்தியுள்ளவன் ஆராய்கிறான்.

 இரண்டிற்குமுள்ள வேறுபாடு

தெரிந்துகொள்கிறான்

.புத்திமான் நன்மையத்தொடர்கிறான்.

 புத்திகெட்டவன்

  உடல்  இன்பம் தேர்கிறான்.

 

3. ஓ நசிகேதா  நீ இச்சை தருவிக்கும் பொருட்களை வேண்டாமென்கிறாய்.

இன்பம் கொணர்கின்ற பொருட்களை வேண்டாமென்கிறாய். மெய் எது என  நீ அறிந்துள்ளாய். அழிவு தரும் பொருட்செல்வம் நீ கேட்கவில்லை.

4. பேதமையும் அறிவும்

வேறு பட்டவை.

அவை வெவ்வேறு

இலக்கு நோக்கி இட்டுச்செல்பவை

.எந்த ஆசையாலும்

அசைக்கமுடியாத நசிகேதா

 நீ அறிவுப்பாதை விரும்புகிறாய்.

 

5.பேதை இருளின்

மய்யமாய் வாழ்பவன்.

தன்னைத்  தெரிந்தவனாய்

 அறிவாளியாய் எண்ணுபவன்.

தவறான வழிகளில்

 சுற்றிச் சுற்றி வருபவன்.

ஒரு குருடன் இன்னொரு குருடனை

  வழி நடத்துவது போல.

 

6. இதையும் தாண்டி என்ன

 என்பது பற்றிப்

 பேதை அறியான்

பொருளின் மயக்கத்தில் அறிவிலியாய்

 முட்டாளாய்ச் சுழன்று வருவான்.

 இதுதான் உலகம் 

வேறொன்று ஏதென்பான்.

என்னுடைய பிடியின் சுழலில்

மட்டுமே உழலுவான்

 

7.பலர் காதுகொடுத்துக்

கேட்கமாட்டார்கள்.

 கேட்டாலும் விளங்கிக்

கொள்ளமாட்டார்கள்.

 ஆன்மாவை அறிபவன்  ஆச்சர்யமானவன்.

 அவன்  ஆன்மா பற்றித்

  தகுதி வாய்ந்த ஆசான்  

சொல்லிக்கொடுக்க

ஆன்மாவை விளங்கிக்கொள்பவன்.

 

8.ஆன்மா பற்றி மந்த புத்தி உள்ளவன் கற்பித்தால் அதனை எளிதில்கிரகித்துக்கொள்ள முடியாது. அதற்கு பல  வழிமுறைகள் தெரிந்தாகவெண்டும்.ஆக  ஒரு ஆசிரியன் பிரம்மத்தை அறிந்து அதுவாகவே ஆகிப்போனவனுக்குக் கற்பித்தலில் சிரமம் இராது. ஆன்மா என்பது நுண்ணியதில்  நுண்ணியது.

  விவாதம் செய்து  ஆன்மஅறிவு கிட்டிவிடாது

 

9.   விவாதித்துப் பெறப்படுவது

அல்ல  ஆன்ம அறிவு.

 எளிதில்  விளங்கிக்

கொள்வது சாத்தியம்.

 அனைத்தும் ஒன்றெனத்தெளிந்து

 உணர்ந்தே ஆசிரியன்

 கற்பிக்கவேண்டும்.

 நசிகேதனே  நீ

அந்நிலை எட்டியுள்ளாய்.

 மெய் எதுவெனத்தெளிந்துள்ளாய்.

 நின்னைப்போல்

ஒரு விசாரணைக்காரன்

 கிடைக்கவேண்டுமே.

 

10. செல்வம் நிலையில்லாதது

 நான் அறிவேன்.

 நிலைத்த ஒன்றை

நிலைத்த ஒன்றால்தான் பெறமுடியும்.

ஆகத்தான் நசிகேத அக்னியைத் திருப்படுத்தினேன்.

 அதற்கு நிலயற்ற

 பொருட்களை க்கொடுத்து

 நிலைத்த ஒன்றினைப் பெற்றிருக்கிறேன்.

 

11எல்லா விருப்பங்களின் முடிவு,

 இப்பூவுலகின் ஆதாரம்

,.முடிவில்லாத் தியாகங்களின் வெகுமதி ,

அச்சமேயில்லாத அடுத்த கரை ,

மதிப்பு மிக்கது, மகத்தானது,

 அனைத்து ஆன்மாக்களையும் தாங்கும்

விரிந்த உலகு  இது.

 இவை அனைத்தும் பார்த்த  நசிகேதனே  நீ 

எல்லாவற்றையும்

 உறுதியுடன் நிராகரிக்கிறாய்.

 

12.கற்றறிந்த ஞானி

 தன்னுள்ளே  தவம் செய்து

 காணக்கிடைக்காத ஆதியைக் காண்கிறான்.

அதனை ஆழம்காணமுடியாது

மறைந்திருக்கும் ஒன்று அது ,

இதயத்தில் குகைஎன்னும் பள்ளத்தில்

பொதிந்து கிடப்பது

 புத்தியில் உறைந்து கிடப்பது

 இன்பம் துன்பம்

இரண்டும் அறியாதது அது.

 

13.  ஆன்மா குறித்து காதால் கேட்டு,

அதனை  பூரணமாய் உள்வாங்கி,

 புனித ஆன்மாவை

 நிலையற்றவைகள் தடுப்பதை உணர்ந்து,

 மறைந்திருக்கும் ஆன்மாவைத்  தெரிந்து

மகிழ்ச்சி பாவிக்கிறான்

ஏனெனில் அவன் மகிழ்ச்சிக்கான

காரணத்தை மூலத்தைத்

 தெரிந்துகொண்டவன்.

 பிரம்மத்தின் இருப்பிடம்

நசிகேதனுக்கு அகலத்திறந்து கிடக்கிறது

 என்பது என் எண்ணம்..

 

14 கேட்கிறான் நசிகேதன்.

‘ தர்மம் அதர்மம்

 இவை இரண்டையும் தவிர்த்து

இறந்தகாலம் எதிர் காலம்

 இவை இரண்டையும்  தவிர்த்து

நீ  எதனைக் காண்கிறாய்

 அதனை எனக்குச்சொல்’

 

15.எமன் விடை சொல்கிறார்.

வேதங்களின் முடிவு,

எல்லா தவங்களின் உறுதிப்பொருள்,

பிரம்மச்சரிய வாழ்க்கை

வாழ்வதன் நோக்கம்

அனைத்தும் சுருக்கமாய்ச்சொன்னால்

ஒரு வார்த்தையில்

 அது ’ஓம்’ என்பதே.

 

16. இந்தச் சொல் ஓம்

 பிரம்மம்.

 அதுவே மகத்தானது

, இதை விளங்கிக்கொண்டவன்

 விரும்பியது பெறுகிறான்.

 

17. இதுவே மிகச்சிறந்த துணை,

 இதுவே உச்சபட்ச துணை

, இதனை அறிந்தவனை

 பிரம்மலோகத்தில் ஆராதிக்கிரார்கள்.

 

18. அறிவே ஆன ஆன்மா

 பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை.

எதனின்றும்

அது முளைப்பதுமில்லை.

 அதிலிருந்தும் எதுவும் முளைப்பதில்லை.

 பிறப்பில்லாதது,என்றுமிருப்பது,

ஆதியானது.

 உடல் கொல்லப்படலாம்

ஆன்மா கொல்லப்படாதது.

 

19. கொல்கிறேன் என்பதுவும்

கொல்லப்படுகிறேன் என்பதுவும்

 அறியாதவன் பேசுவது.

 கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை.

 

20.ஆன்மா சூக்குமத்தின் சூக்குமம்,

பெரிதினும் பெரிது

 இதயத்தில் வாசம் செய்வது

 மன உணர்வுறுப்புக்கள்

கட்டுப்படுத்தியவன் ஆன்மாவைக்காண்பான்.

 அவனுக்குத்துயர் இல்லை.

 

21.அவன் இங்கு அமர்ந்திருப்பான்

தூரம் போவான்,

அவன் எங்கும் செல்லவல்லவன்.

அவனைத்தவிர

பிறகு  இன்ப துன்பம் தொடாத

 இறையை யார் அறிவார்

 

22.ஆன்மாவுக்கு உடலில்லை

ஆயின் அழியும் உடலில் அது உறையும்

மகத்தானது,எங்குமிருப்பது

 இது அறிந்த ஞானியோ

 துயர் உறுவதில்லை.

 

23.இவ்வான்ம அறிவை

  வேதங்களைப்படித்தோ,

புத்தி கூர்மையாலோ,

 சத் விஷயங்கள் கேட்பதாலோ பெறமுடியாது

அவன் ஆன்மாவே

அவனைத்தேர்ந்துகொண்டு

ஆன்மாவை அறிதலின்

 மெய்மையை அறிவிக்கும்.

 

24. தீயவைகளிலிருந்து மீளாதவர்கள்

, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதவர்கள், 

மன ஒருமைப்பாடு எட்டாதவர்கள்

மனத்தை நல்வழிப்படுத்தாதவர்கள்.

 படித்தலின் வழி

 ஆன்மாவை அறிதல் முடியாது.

 

25. பிராம்ண, க்‌ஷத்ரிய என்னும்

 வர்ணபேதங்கள்  உண்ணும் சோறு என்பதாய்

 மானுட மரணம் என்பதைத்

 தொட்டுக்கொள்ளும்

 ஊறுகாய் என்பதாய்ப்

 பேசியே போது கழிக்கும்

தகுதியற்றவர்கள்

 ஆன்மாவை எப்படி  அறிவார்கள்?

 

வல்லி  III

1.பரமாத்மாவும் ஜீவாத்மாவும்  நல்வினைகளினபலனைஅனுபவிக்கின்றனர் உயர்இருக்கையில் அமர்ந்த உன்னதமான அந்த பிரம்மத்தைஅறிந்தவர் அவைகளை ஒளி மற்றும் நிழல் என்றழைக்கிறார். இல்லறம் நடத்தி ஐந்து முறை  அக்னி காப்போரும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்வோரும் அவ்விதமே செய்வர்.

2.இரு யாகங்களையும் நாம் அறிவோம். நசிகேத யாகம் அனைத்து யாகங்களையும் இணைப்பது. உன்னதமானது. அழிக்கமுடியாத பிரம்மம். அது அச்சமில்லாதது பிறவிக்கடலை க்கடக்க விரும்புவோர்க்கு உறுதுணையாவதாகும்.

3. ஆத்மா  தேரில்  அமர்  பெரும்பொருள்

, உடல் தேர்

,புத்தி தான் தேரோட்டி,

 மனமே கடிவாளம் ,

 

4.ஐம்புலன்கள் குதிரைகள்,

  சாலை அவைகளின் நோக்கம்,

 , ஐம்புலன்களோடு, மனம் ஒன்றாய்க்கூட

  ஆன்மாவே அனுபவிக்கின்றோன் ஆகிறான்

 அறிஞர்கள் அப்படிச்சொல்வர்.

 

5. பகுத்து அறியாதவன்,

 மனம் எப்போதும் கட்டுப்படாதவன்,

 ஐம்புலன்கள் எனும்  தீய எண்ணங்கொண்ட

குதிரைகளை அடக்காத

 குதிரை ஓட்டியாவான்.

6.விஷயங்கள் புரிந்தவன்,மனத்தை அடக்கியவன், அவனது ஐம்புலன்கள் ஒரு குதிரை ஓட்டிக்கு நல்ல புரவிகளாகின்றன.

7.பகுத்து அறியாதவன்

,மனமடங்காதவன்,

 தூய்மையில்லாதவன்,

 இலக்கை அடையமாட்டான்.

 பிறப்பு இறப்பு எனும் சுழலில்

 அகப்பட்டுக்கொள்வான்.

 

8. யாருக்கு விஷயங்கள் விளங்குகிறதோ,

 மனம் கட்டுப்படுகிறதோ

  யார் தூய்மையானவனோ, 

அவன் இலக்கை அடைகிறான்.

அவன் மீண்டும் பிறப்பதில்லை.

 

9.பகுத்தறியும் அறிவுடையோன்,

 மனக்கடிவாளத்தை நன்கு  வசமாக்கியவன்

 பயணத்தின் இலக்கை

ஒரு நல்ல சவாரிக்கரனாய் அடைந்துவிடுவான்

அவ்விலக்கு திருமாலின் உறைவிடம்.

 

10.ஐம்புலன்களினும் 

விஞ்சியவை பஞ்ச பூதங்கள்,

அவைகளை விஞ்சியது மனம்,

 மனத்தை விஞ்சியது புத்தி

 புத்தியை விஞ்சியது ஆன்மா.

 

11. காணும் பிரபஞ்சத்தை விஞ்சியது

 காணாப் பெருவெளி,

 அதனையும் விஞ்சியது ஆன்மா

அதனைத்தாண்டி எதுவுமில்லை.

 அதுவே உன்னத இலக்கு.

 

12. எல்லா ப்பொருளிலும்

 ஆன்மா மறைந்து உறைகிறது

.ஒளிர்வதில்லை

.கூரிய ஆழ்ந்த ஞானவான்கள்

அமைதியாய் அதனைத் தரிசிக்கிறார்கள்.

 

13.அறிஞன் பேச்சை

 மனத்தில் ஆழ்த்தி,

 மனத்தை புத்தியில் ஆழ்த்தி,

 புத்தியை பரமாத்மாவில் செலுத்தி,

அந்த பரமாத்மனை

 அமைதியில் ஆழ்த்துவான்.

 

14.எழு, விழி,பேராசான் சமீபம் ,

 ஆன்மாவை அறிவாய்

.கடினமான வழிதான்

 கூரிய கத்தி போன்றவழிதான்.

அறிஞர்கள் மொழிவார்களப்படி.

 

15. அது ஒலி இல்லாதது

,உணரமுடியாதது,

 உருவமில்லாதது,

 அழியாதது,ருசியில்லாதது

, எப்போதுமிருப்பது, மணமற்றது,

ஆரம்பமில்லாது, முடிவில்லாது, பெரிதினும் பெரிது,

 மாறாதது,

இப்படி ஆன்மாவை அறிந்தவன்

 இறப்பின் பிடியிலிருந்து  விடுதலை எய்துகிறான்.

 

16  எமன் சொன்ன நசிகேதனின் கதையைக்கேட்பவர்கள் சொன்னவர்கள் பிரம்மலோகத்தில் சிறப்பு அடைகிறார்கள்.

17. பிராம்ணர்கள் சபையிலே, முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்ற போதினிலே பக்தியோடு இந்த ரகசியத்தைதை ச்சொன்னவர்கள் இறவா நிலைஅடைவர். இறவா நிலை அடைவர்.

 

பகுதி 2

வல்லி 4.

 1.எமன் கூறினார்.

 ‘தானாக உருவான பிரம்மா

  மனிதனுக்கு  ஐம்புலன்களை

வெளி  நாட்டமுள்ளவைகளாகவே படைத்தார்.

ஆக மனிதன் வெளி உலகை மட்டுமே காண்கிறான்.

 உள்ளிருக்கும் ஆன்மாவைக்காண்பதில்லை.

சில மனிதர்களே

 தமது கண்களால் உணர்வுகளை

வசீகரிக்கும் விஷயங்களைத்தவிர்த்து

  நிலைத்த   ஒன்றை விரும்பித்

 தன் உள்ளே  கடந்து

பொதிந்திருக்கும்

ஆன்மாவைக்காண்கிறார்கள்’

 

2.அறிவிலி  தான் ஆசைப்பட்ட

வெளிப்பொருட்களின் பின்னே ஓடி

இறப்பெனும் வலையில் வீழ்கிறான்

 அறிவாளியோ அழியா

 ஒன்றின் தன்மை  தெரிந்து

 அழியும் பொருட்களை விரும்பமாட்டான்.

 

3.உருவை , சுவையை ,

மணத்தை, ,ஒலியை,

 உணர்ச்சியை மகிழ்ச்சியை

 எது ஒன்று பற்றியும் அறிவது

ஒருவன் அறிவது ஆன்மாவினாலியே

 நீ  கேட்பது அது பற்றியே.

 

4. விழிப்போ உறக்கமோ

  அனைத்தையும் அறிவது

 எங்கும் நிறைந்துள்ள

ஆன்மா ஒன்றினாலேதான்.

 அப்படி அறிபவன் துயர் உருவதில்லை.

 

5.ஆன்மாவை தேனினும் இனியதாய்,

 இதயமாய்க்

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்

 கடவுளாய்க்காண்பவன் அச்சப்படுவதில்லை.

அதுவே இது.

 

10. ஐம்பூதங்களில்

அவன் உறைந்திருப்பதைக்காண்பவன்

தவங்களின் பயனாய்ப்பிறந்தவன்.

 தண்ணீர் தோன்றியதற்கு

 முன்பாகத்தோன்றிய அது.

 இதயக்குகையில் எழுந்தருளி

 வசிப்பது  அது.

 

7 உயிரோடு பிறக்கும் ஆன்மா

 அனைத்து கடவுளர்களின் உருவிலும்,

இதயத்திள்லும் நுழைந்து

அங்கே  வதிகிறது.

அது பஞ்ச பூதங்களோடும் தோற்றுவது.

 

8.கருவை ப்பாதுகாப்பய்ச்சுமக்கும்  ஒரு பெண் ஒப்ப

 இரு கட்டைகளுக்கிடை

அக்கினியை வைத்துத்

 தினமும் விழிப்புப்

பெற்றவர் வழிபடுகின்றனர்

ஆராதிக்கின்றனர்.இதுவே அது.

 

11. சூரியன் எங்கிருந்து எழுகிறான்

எதற்கு மறைகிறான்.

 அனைத்து கடவுளர்களும் அது ஒப்பவே.

அதனை விஞ்சி எதுவுமில்லை. இதுவே அது.

 

12. இங்குளதே அங்கும் உளது.

அங்குளது இங்கும்.

ஒரு  இறப்பினின்று

 அடுத்த இறப்பைத் தொடரும் அவன்

ஆன்மாவுக்கும்  இந்த உலகிற்குமான

  வேறுபாடு அறிந்தவன்.

 

11.மனத்தினாலே

ஆன்மா அடையப்பெறுவது.

பிறகு  அவைகட்கு இடையே

 வேறுபாடென்பது எதுவுமில்லை.

வேறுபாடு அறிபவனோ 

 ஒரு இறப்பினின்று

 அடுத்த இறப்புக்கு ப்பயணிக்கிறான்

.

12.கட்டை விரல் ஒத்த ஆன்மா

 உடலின் நடுவில் உறைவது.

அது  கடந்தகாலம் எதிர்காலம் அறிந்தது.

இது அறிந்தவன் அஞ்சுவதில்லை.

இதுவே அது.

 

13.கட்டைவிரல் ஒத்த ஆன்மா

 புகை தரா ஒளி.

கடந்தகாலம் வருங்காலம் அறிந்த கடவுள்.

இன்றும் நாளையும்

இருப்பது அதுவே

.இதுவே அது.

 

14. மலையினின்று வீழும் மழை நீர்

  பாறைகளின் மீது விழுந்து

 அனைத்து திசைகளிலும் சிதறும்.

அப்படி

வேறுபாடு மட்டுமே அறிபவன்

 அனைத்து பக்கங்களிலும் சிதறித்திரிகிறான்.

 

15. சுத்தமான நீர் 

சுத்தமான நீரோடு சேர்ந்து

 சுத்தமான நீராகவே முடிகிறது.

இப்படி  நினைப்பவரின் ஆன்மா

இதனையே அறிகிறது   அதுவே  கவுதமனாகிறது.

 

வல்லி 5.

1.   நிலைத்த ஞானமுள்ள ஆன்மா பதினோரு வாயில் கொண்ட  மாநகரத்தை உடலை ஆள்வது. அவ்வான்மாவை வணங்குபவன் துயருறமாட்டான். அனைத்துப் பேதமைகள் என்னும் தளைகளிருந்தும் அவன் விடுதலை பெறுவான்.இதுவே அது.

 

2.   சூரியன் மேலுலகில்

, காற்று ஆகாயத்தில்,

 அக்கினி பூவுலகில், 

 ,விருந்தினர்கள்  இல்லத்தில்,

 மனிதர்கள் வீடுகளில்,

 கடவுளர்கள் மெய்யாக

  அண்டவெளியில்

  எங்கனம் இருப்பார்களோ

 அவ்விதமாய் இவ்வான்மா..

 ஆன்மா நீருக்குள்

,பூமியில், வேள்வியில் ,மலைகளில் பிறக்கிறது.

 ஆன்மா அவன் மெய்யானவன்

,ஆகப்பெரியவன்.

 

3.   ஆன்மா தேவர்களால்

வணங்கப்பெற்று

 உடலில் மய்யமாய் அமர்ந்து

 பிராணானை மேலாகவும்

  அபானனை கீழாகவும் செலுத்துகிறது.

 

 

4.   ஆன்மா உடலில் வசிக்கிறது. பின் விடைபெருகிறது. எஞ்சுவது எதுவுமில்லை. இதுவே அது.

 

5.   மனிதர்கள் பிராண அபானன்களால் உயிர்வாழ்வதில்லை. இவை எதனைச் சார்ந்து இயங்குகிறதோ அதனால் மனிதன் வாழ்கிறான்.

 

 

6.   கவுதமனே, நான் புரியாத ஒன்றான புராதன பிரம்மம் பற்றி மரணத்திற்குப்பிறகு ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது என்பது பற்றி விளக்குகிறேன்.

 

7 சில ஜீவர்கள் அன்னை வயிற்றில்

 நுழைந்து உடல் எடுப்பார்கள்.

 சிலர்  நிற்கும் அனங்ககப்பொருட்களில்

 அடங்கிப்போவார்கள்.

 ஒருவற்கு கருமம் ஞானம் இவை

அதற்கு ஆதாரமாக நிற்பவை.

 

8 ஆன்மா விழித்திருப்பது

 எது உறங்கினும் அது உறங்காது.

அது பிரம்மன் எனப்படுவது என்றுமுளது

எல்லா உலகங்களும் அதன்மீது எழுபவை.

அதனை விஞ்சி யாரும் செல்ல முடியாது.

இதுவே அது.

 

9 அக்கினி போன்றது ஆன்மா.

 எதனுள்ளும் நுழைந்து

 அதன் உருவம் பெறும். 

அதனை எரிக்கும். 

ஆன்மா  எதன் உருவும் எடுக்கும்.

அதன் உள்ளும் புறமும் வதியும்.

 

10  ஆன்மா வாயுவைப்போன்றது.

எதனுள் அது  நுழைகிறதோ அதன் உரு எடுக்கும்.

அதன் உள்ளும் புறமும் அதுவாகவே.

 

11  ஆன்மா சூரியன் ஒத்தது.

 உலகத்தின் கண் போன்றது.

 எந்தக் குறை யும் அழுக்கும் இல்லாதது.

 உலகின்கண் உள்ள குறைகள்

எதுவும் தொடமுடியாதது.

 

12   உயிரினங்களின் ஆட்சியாளன் அது.

 உலகின்  குறைகள்

எதுவும் அணுகமுடியாதது.

 அனைத்திற்கும் அப்பாலுள்ளது.

 

 

13   ஆன்மாவை என்றுமுளதாகப்

 பார்க்கும் ஞானி

உணர்வுகளின் உணர்வாக

அதனை உணருவான்

.அவரவர்கள் விருப்பத்தை

 அவரவர்களுக்குள் அமர்ந்து

பூர்த்திசெய்பவனாகப்பார்ப்பான்.

அந்த ஞானிகளுக்கே நிரந்தரமாய்

 அமைதி கிட்டும்

 மற்றவர்களுக்கு அன்று.

 

14   அவர்களே விளக்கமுடியாத

 ஆனந்தமாகிய இதுவே அது

 என்பதைப்பெறுவார்கள்

. எப்படி அறிவது இதை?

அது தானே ஒளிருமா? இல்லை

. வேறு ஒளி அதன்மீது விழ ஒளிருமா?

 

15.அங்கு சூரியன் பிரகாசிப்பதில்லை

, நிலவும் பிரகாசிப்பதில்லை,

 விண்மீன்கள், மின்னலொளி

,இவ்வக்கினி, பிரகாசிப்பதில்லை

.ஆன்மா ஒளிர அனைத்தும் ஒளிர்கின்றன

. ஆன்ம ஜோதியால் எல்லாம் ஒளிர்கின்றன.

 

வல்லி 6.

எமன் கூறுகிறார்;

1.பழைய அரசமரம் இருக்கிறது.

அதன்  வேர்கள் மேலேயும்

,கிளைகள் கீழேயும் படர்ந்துள்ளன.

அது தூய்மையானது.அது பிரம்மன்.

 அது என்றுமுளது.

அத்தனை உலகங்களும்

 அதனை ஆதாரமாகக்கொண்டுள்ளன.

இதுவே அது.

 

2.இப்பேரண்டமே

பிரம்மனிலிருந்து உருவானது.

பிராணத்தில் இயங்குவது.

 இடியோசை எழுப்பும்

பேரச்சம் தரும் பிரம்மன் அது.

இது அறிந்தவர்கள் அழிவதில்லை.

 

3பிரம்மனுக்கு அஞ்சி நெருப்பு தகிக்கிறது.கதிரவன் ஒளிர்கிறான். இந்திரன் வாயு  எமன் எனப் பணியாற்றுகின்றனர்.

4.இவ்வுடல் முடிந்துபோவதற்குள்ளாக

பிரம்மத்தை அறியவேண்டும்.

அவன் மட்டுமே உலகத் தளைகளிருந்து

விடுதலை அடைவான்.

அப்படி அறியாதவன்

 மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுப்பான்.

 

5.கண்ணாடியில் பார்ப்பதுபோல் தனது ஆன்மா,

கனவு காண்பதுபோல் பித்ருக்களின் உலகு,

தண்ணீருக்குள் இருப்பதுபோல் கந்தர்வர்களின் உலகம்,

நிழலும் ஒளியும் போல் பிரம்மனின் உலகு.

 

6.ஐம்புலன் உணர்வுகளும்

ஆன்மாவும் வேறு வேறு.

அவை எழுவதும் வீழ்வதும் அப்படியே.

விவேகி இதனை அறிந்தவன்.

 

7.உணர்வுகளுக்கு அப்பால் மனம்,

 மனத்திற்கு அப்பால் புத்தி

,புத்தியினும் உயர்ந்தது பேரான்மா.

 புலப்படா ஒன்று. எல்லாவற்றினும் பெரிது.

 

8.புலப்படா ஒன்றைத்தாண்டியது

 எங்கும் நிறைபுருஷம்.

உருவற்றது.

 இது அறிந்தவன் விடுதலை அடைகிறான்.

இறவா நிலை எய்துகிறான்.

 

9.அவன் உருவைக்காணமுடியாது.

இந்தக்கண்களால் பார்க்கமுடியாது

.மனதை புத்தியினால்கட்டுப்படுத்தி,

தொடர்ந்த தியானத்தால்

அது காட்சியாகலாம்

.இப்படி அறிந்தவர்கள் அழிவதில்லை.

 

10.ஐம்புலன்களும் அடங்கி,

மனம் அடங்கி,

 புத்தி அமைதியுற

  ஒருவற்கு பெரு நிலை வசமாகும்.

 

11.ஐம்புலன்கள் வசமாவது  யோகம்.

 கவனமாய் இருந்தால் மட்டுமே

பெற்றது போகாமலிருக்கும்.

 

12.ஆன்மாவை பேச்சினால்

 மனத்தினால்,கண்களால்

நெருங்கிவிடமுடியாது.

ஆன்மா  இருப்பதை எப்படி உணர்வது?

 

13 ஆன்ம இருப்பு வெளிப்படுவது.

 ஆன்மா மெய்யாகவே இருப்பது..

இந்த இரண்டு நிலைகளில் 

அதன் இருப்பு வெளிப்பட

 உண்மைத் தன்மை காட்சியாகும்.

 

14 மனதிலுள்ள ஆசைகள் அற

 அழி நிலையிலிருந்து  ஒருவன்

அழியா நிலைக்குச்சென்று

 பிரம்மத்தை அடைவான்.

 

15.இவ்வுலகின் அறியாமை எனும் 

பந்தங்கள் அறுபட

 அழி நிலையிலிருந்து 

அழியா நிலையை  அடைவான்

.இதுவே வேதங்களின் அறிவுரை.

 

16.இதயத்தில் 101 நரம்புகள்  உள்ளன.சுஷும்னா எனும் நரம்பு மண்டைக்குள் செல்கிறது. மேல் எழும் அது இறக்கும் தருணத்தில்  ஒருவனை   அழியா நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.  பிற நரம்புகள் வேறு பணி செய்கின்றன.

 

17. ஆன்மா கட்டைவிரல் போன்று உள்ளே இதய மத்தியில் எல்லா உயிர்களிலும் இருப்பது. ஒரு செடியின் தண்டிலிருந்து அதன் உள்ளிருப்பை இழுப்பதுபோல் ஒருவன் உடலில் இருந்து அதனை ச்சரியாக வெளியே கொண்டுவரவேண்டும்.அது தூய்மையானது அழியாத ஒன்று என்று அறிதல் வேண்டும்..

 

18. நசிகேதன் எமன் சொல்ல 

இவைகளை த்தெரிந்துகொண்டான்

. யோகத்தை அறிந்தான்

.அனைத்து அழுக்குகளிலிருந்தும்

இறப்பினின்றும் விடுபட்டு

 பிரம்மத்தை அடைந்தான்

.ஆன்மாவைப்பற்றித்

தெரிந்துகொள்பவர்கள்

அனைவர்க்கும் இப்படியே.

 

 

 

·          

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரஸ்னோபனிஷது

 

வினா 1.

ஓம்   கடவுளர்களே

  நாங்கள் எங்கள் காதுகளால்

புனிதமானவற்றையே கேட்போமாகுக.

வணங்குதற்குரியவர்களே

 புனிதமானவற்றையே பார்ப்போம் ஆகுக.

 எங்கள் உடலாலும் வலுவான கைகால்களாலும்

இறைவனால் எங்களுக்கு

அளிக்கப்பட்ட  வாழ்க்கையை

 உங்களை ப்புகழ்ந்து

அனுபவிப்போமாகுக.

 சக்திவாய்ந்த  பண்டைப்புகழுடைய

 இந்திரன் எங்களை

வளமைக்கு இட்டுச்செல்லட்டும்

. எல்லா வளங்களையும் வைத்துக்காக்கும்

 அவர் எங்களுக்கு நல்லவற்றை அருளுக.

 விரைவான இயக்கத்தின் கடவுள்

 எங்களுக்கு உதவட்டும்.

பெரியன காக்கும் அவர்

 எங்களையும் காக்கட்டும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

 

1.   உயரந்த ஆத்மாவுக்கு வணக்கம். ஹரி ஓம்

பரத்வாஜன் குமாரன் சுகேசன்,சூர்யனின் பேரன் கார்க்யன்,அஸ்வலாவின் குமாரன் கவுசல்யன்,விதர்பி குமாரன் பரத்வாஜன், காத்யனின் குமாரன் கபந்தி,இவர்கள் அனைவரும் பிரம்மத்தை வழிபடுபவர்கள் உயர்ந்த பிரம்மத்தை விரும்புபவர்கள், கைகளில் சமித்தோடு  வணக்கத்திற்குரிய பிப்லாதரை அணுகி அவர் அனைத்தையும் விளக்குவார் என நினைக்கிறார்கள்

 

2.   இன்னும் ஒரு ஆண்டு ஒழுக்கத்தோடு பிரம்மசர்யம் காத்து, நம்பிக்கையோடு இங்கிருங்கள். பிறகு  விருப்பம்போல் கேள்வி கேளுங்கள். எனக்கு விடை தெரிந்தால் அனைத்தையும் உங்களுக்கு                    விளக்குகிறேன்.

 

3.   காத்யயன கபந்தினி பிப்லாதரை அணுகி‘ அனைத்து வகையானும் தலைவரே,உயிரினங்கள் எங்கிருந்து பிறக்கின்றன?’ என்றார்.

4.   உயிரினங்களின் கடவுள், வமிச விருத்தி இருக்கவேண்டும் என்று விரும்பினார். தவம் செய்தார். ஜடப் பொருளையும் உயிரையும் ஓர் இணை என  உருவாக்கினார். உணவும் உண்பானும்  அவ்விதமே. அவை உயிரினங்களை பல வகைகளிலும் உருவாக்கும் என்று எண்ணினார்.

 

5.,  சூரியன் உயிர்

சந்திரன்  உணவு பொருள்.

அனைத்து உருவம் பெற்றவையும்

 உருவமற்றவையும்

உணவே ஆகின்றன.

உருவும்  மெய்யாக உணவே.

6.சூரியன் உதித்துக்

 கிழக்கே செல்கிறான்.

 கிழக்கே அனைத்து உயிரினங்களையும்

  கதிரொளியால் நனைக்கிறான்.

தெற்கே,  வடக்கே

 பாதாளத்திலே உச்சியிலே

இடையிலே உள்ள

அனைத்து உயிரினங்களின் மீதும்

 கதிரை வழங்குகிறான்.

 

7.. இந்த வைஸ்வநரா

 என்னும்  சூரியன்

  அனைத்து உயிரினங்களின்  சேர்க்கை.

எல்லா உருவமும் எடுப்பவன்,

  எல்லா உயிருமாகுபவன்

 நெருப்பானவன்.

தினமும் எழுபவன்.

ரிக் வேதம் இப்படிச் சொல்கிறது.

 

8. எவ்வுருவமும் எடுப்பவன்,

மஞ்சளாய் ஒளிர்பவன்,

எல்லாம்தெரிந்தவன்,

பெரிய லட்சியவான்,

அவன் ஒரு விளக்கு,

வெப்பம் அருளி,

ஆயிரம் கதிருடையோன்

, நூறுஉருக்களில் இருப்போன்,

உயிரினங்களின் உயிரி.

அவனே சூரியன். அவன் எழுகிறான்.

 

9.   வருடம் – பிரஜாபதி-

என்பது உற்பத்திக் கடவுள்

. இரு வழிகள்.தெற்கு வடக்கு என்பன.

 புனிதமான தியாகங்கள் கூடிய

  கர்ம வழி செல்வோர்

சந்திர உலகை அடைவர். 

இவண் மீண்டும்  வருவர்.

முனிவர்களில் வமிச விருத்தி

 வேண்டுவோர் தெற்கு வழியை

 பின்பற்றுவர்.

 

 உணவின்  இவ்வழி

முன்னோர்களின் வழி.

 

10. தவத்தால் பிரம்மசரியத்தால்,

 நம்பிக்கையால், ஞானத்தால்  

ஆத்மாவை அடைந்தவர்கள்

வடக்கு வழியைத்தேர்ந்து

பலனடைவார்கள்.

உயிர்களின் அழிவில்லாத

அச்சமில்லாத உன்னதமான

 இலக்குடையது அது.

அங்கு சென்றவர்கள்

திரும்பி வரமாட்டார்கள்.

அது பற்றிய செய்யுள் இது.

 

11. ஐந்து கால்கள்(பருவங்கள்)  கொண்டு பன்னிரு உருவங்களுடைய( மாதங்கள்)  தந்தை மழை வழங்குபவன். சொர்க்கத்திற்கும் உயரத்தில் அமர்ந்துள்ளான்.இப்படி முனிவர்கள் சொல்கிறார்கள்

.பிறர் அவனை எல்லாம் தெரிந்தவன் என்கிறார்கள்.ஒவ்வொன்றும் ஆறு கால்களை உடைய ஏழு சக்கரங்கள் கொண்ட தேரில் இவ்வுலகம் நிர்மாணிக்கப்பட்டு அவன் மீது அமைந்துள்ளது.

 

12. மாதம் என்பது பிறப்புக்கடவுள்.

 அதன்  இருண்டபகுதி அதன் உணவு.

 ஒளிரும் அதன்   பாக்கிப்பகுதி பிராணன்

.முனிவர்கள் ஒளிர் போதில் யாகம் செய்கிறார்கள்.

பிறர் இருள் போதில் பணி செய்கிறார்கள்.

 

13.பகலும் இரவும் படைப்புக்கடவுள்.

பகல் பிராணன் இரவே உணவு.

பகலில் புணருபவர்கள்

பிராண சக்தியை வீணாக்குகிறார்கள்

.இரவில் காதல் புணர்ச்சி செய்வோர் பிரம்மச்சாரிகள் என்றே கருதப்படுகிறார்கள்.

 

14.உணவே பிறப்புக்கடவுள்.

அதினின்று விந்து பிறக்கிறது.

எல்லா உயிரினங்களும்

அப்படித்தான்  பிறக்கின்றன.

 

15. படைப்புக் கடவுளின் 

விதியை க்கடைபிடிப்போர்

 இணையை உருவாக்குகிறார்கள்.

அவர்களுக்கே பிரம்ம உலகம்.

தவம் புனிதம் வாய்மை

அவர்களிடமே தங்குகிறது.

 

16. ஏமாற்றாதவன்,

பொய்யில்லாதவன்,

 தன்னிடம் இல்லாத ஒன்றை

 இருப்பதாய்ச்சொல்லாதவன்

  தூய்மையான பிரம்மலோகம்

 இவர்கட்கே சொந்தம்.

 

துவிதிய பிரஸ்னா

வினா2

பார்க்கவர் மற்றும் பிப்பலாதர்

 

விதர்பியின் குமாரர் பார்கவா  பிப்லாதரை  இப்படி வினவினார்.

1.ஓ பகவானே  எத்தனை தேவர்கள் ஒரு உயிருள்ள ஒன்றுக்கு த்துணை செய்கிறார்கள். யார் அவர்களுள் அதனை விளக்குவார்கள். பிறகு  அவர்களுள் யார் பெரியவர்?

அவர் விடை சொன்னார்.

2.ஆகாயம்,காற்று, தீ, நீர், பேச்சு, மனம்,கண் மற்றும் காது இவர்களே தேவர்கள். அவர்கள் தங்கள் பெருமையை வெளிக்காட்டுகிறார்கள்.   அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்குள் இந்த விஷயத்தில் பிரச்சனையும் உண்டு).’ நாங்கள் ஒன்றாக இருந்து உடலைக்காக்கின்றோம்’.

3.பிராணன் சொன்னது.’ முட்டாள் தனமாய் மயக்கத்தில் தொலைந்து போகாதீர்கள். நானே ஐந்து பகுதியாகப்பிரிந்து  இந்த உடலுக்கு ஆதாரமாகி பாதுகாக்கிறேன்’

4.பிராணனுக்கு அவர்கள் மேல் கோபம். தான் உடலைவிட்டுவிட்டு  மேலே செல்வதாய்த் தெரியவந்தது. பிராணன் சென்றவுடன் மற்றவைகளும் மேலே சென்றன.பிராணன் கீழே இறங்க மற்றவைகளும் இறங்கின.

ராணித்தேனீ  வெளிச்சென்றால் பிறவும் அதனோடு சென்றுவிடுமே  அதுபோல்.

ஆக மனம் பேச்சு கண் காது மற்றும் பிற இதனை ஆமோதித்து பிராணனைப்புகழ்ந்தன.

 

5.உயிர் அக்கினி போன்று எரிகிறது

 கதிரவன் ஒளி வீசுவது போல

இந்திரன் ஆணையிட

மழை பெய்கிறது.

அப்படியே காற்று பூமி, சந்திரன் அனைத்தும்.

தேவ அமிர்தத்திற்கு உருவமுண்டு

 அது அருவமுமானது, என்றுமிருப்பது.

 

6.ஒரு சக்கரத்தின் ஆரக்கம்பிகளைப்போல் பிராணனை மய்யத்தில் வைத்து ரிக் யஜுர் சாம யாகங்கள், க்‌ஷத்ரியர்கள் பிராம்ணர்கள்  சுற்றி  இருக்கின்றார்கள்.

 

7. உயிர்க்கடவுள் பிரஜாபதி

கருவறையில் இயங்குபவன்

 பிறகே பிறப்பெடுப்பவன்.

ஐம்புலன்களோடு வாழ்பவன் அவனே.

அவனுக்கே  உயிரினங்கள்

அனைத்தையும் படைக்கின்றன.

 

8.பிராணன் நீ தான்

 கடவுளுக்கு எதையும் எடுத்து செல்பவன்

.முன்னோர்களுக்கு

முதல் படையலை க்கொண்டு சேர்ப்பவன்.

ஐம்புலன்களின் இயங்கு சூட்சுமம்

 நீயே இவ்வுடம்பின் மூலச்சத்து

 

9.ஓ பிராணனே

நீயே இந்திரன்,

வலிமைமிக்க   ருத்திரன் நீயே,

காப்பவன் நீ

விண்ணில் இயங்குபவன் நீ,

நீயே கதிரோன்,

 அனைத்து ஒளியின் எஜமானன் நீ.

 

10.பிராணனே நீ

 மழையை வர்ஷிக்கிறாய்.

 உயிரினங்கள் மகிழ்ச்சி பாவிக்கின்றன

அவர்கள் விரும்பும்

அந்த உணவு

 கிடைக்குமென நம்பிக்கை உண்டாகிறது.

 

12. ஓ பிராணனே 

நீயே தூயவனாய்த்தோன்றினாய்,

நீயே விழுங்கும் நன்னெருப்பு,

 அனைத்தையும் புசிப்பவன்

, உலகின் நற்கடவுள்,

நாங்கள் படைப்பவர்கள்,

நீயே காற்று 

நீயே காற்றின்  தகப்பன்,

 

12  பேச்சொலியில் வதிகிறாய்,

காதில்,கண்ணில்,

 வெளி எங்கும் செல்லாது

 மனதில், நிலைக்கிறாய்

 அனுகூலமாக்குகிறாய்  பிராணனே.

 

13.அனைத்துமே பிராணனின் கட்டுப்பாட்டில்.

மூவுலகிலும் அப்படியே.

ஒரு அன்னையைப்போல்

எங்களைக் காப்பாய்.

வளமும் ஞானமும் வழங்கு.

 

 

திருதிய பிரஸ்னா

வினா 3

கவுசல்யர் மற்றும் பிப்பலாதர்

1.அஸ்வாலரின் குமாரர் கவுசல்யர் வினா வைத்தார்

.’ஓ பகவானே இந்த ப்பிராணன் எங்கிருந்து பிறக்கிறது?இந்த உடலினுள் எப்படி வருகிறது? எப்படி  உடலினுள் பிரிந்து பிரிந்து தங்குகிறது? எப்படி வெளியே செல்கிறது? உடலுக்கு வெளியிலும் உள்ளும் எப்படி  ஒர் ஆதார விஷயமாக இருக்கிறது?’

2. நீ நுணுக்கமான  வினாக்களை கேட்கலாம். நீ பிரம்மத்தைப் பற்றி வினா வைப்பவன் உனக்கு அவைகளை விளக்குவேன்.

3.ஆத்மாவிலிருந்து

பிராணன் பிறக்கிறது

.பிராணன் மனிதனுக்கு நிழல்போல்.

பிராணன் ஆத்மாவுக்கு நிழல் போல்.

 மனத்தின் செயல்பாட்டால்

 பிராணன் உடலினுள் செல்கிறது.

4. ஒரு அரசன் தனது அதிகாரிகளுக்கு ’ கிராமங்களில் தங்கி ஆட்சி புரியுங்கள்’ என்று உத்தரவு இடுவது போல் பிராணன் அதன் கீழ் உள்ள பிராணன்களுக்கு வேலைப்பங்கீடு செய்கிறது.

5. அபானா கழிவு உறுப்பிலும் பிறப்பு உறுப்பிலும் வதிகிறது. பிராணன் கண்,காது,வாய், மூக்கு ஆகிய உறுப்புக்களில் தங்குகிறது. சமானா உணவினை சமவிகிதத்தில் பிரித்து வழங்குகிறது. ஏழு அக்கினி அதனின்று எழுகிறது.

6. ஆன்மா இதயத்தில் உறைவது. இங்கு 101 நரம்புகள் உள்ளன.ஒவ்வொன்றிர்க்கும் 100 கிளைகள்.ஒவ்வொரு கிளைக்கும் 72000 சிறு கிளைகள் இங்கு வ்யானன் இயங்குகிறது.

100x101=10100x72000=727200000+10201=727210201

(10100+101=10201)

13. ஒரு நரம்பின் வழி உதானன் மேல் ஏறுகிறது. நற்செயல்களால் புண்ய லோகத்திற்கும், இழி செயல்களால் பாவ லோகத்திற்கும், புண்யமும் பாவமும் கலந்த செயல்களால் மானிட உலகிற்கும் நம்மை அது இட்டுச்செல்கிறது.

14. கதிரவன் வெளியில் தெரியும் பிராணன். கண்கள் வழி அது பிராணனுக்கு உதவுகிறது. பூமாதா அபானனை கீழ் இழுத்துக் கட்டுப்படுத்துகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிருப்பது ஆகாசம்- ஈதர்- அது சமானன்.

காற்று வ்யானன் ஆகிறது.

15. வெளியில் இருக்கும் நெருப்பு உதானன். ஒருவன் உடலிலிருந்து பிரியும் நெருப்பு,  உணர்வு  உறுப்புக்களை உள்வாங்கிய மனம்,வேறு உடலுக்குச்சென்றுவிடுகிறது.

14 இறப்பின் சமயம் எழும் நினைப்பு பிராணனோடு சேர்ந்து  பின் உதானனோடு சேர்ந்து ஜீவாத்மாவை எண்ணிய உலகிற்கு இட்டுச்செல்கிறது.பிராணனை இப்படி அறிந்தவன் சந்ததி அழிவதில்லை. அவன்  என்றும் நிலைத்தவனாகிறான். அது பின் வருமாறு

15.தோற்றத்தை,  வருகையை 

அமர்தலை  பிராணனின்

ஐந்து  பிரிவுகளை

அவை   உடலினுள்  வியாபிக்கும்

அக நிலை  அறிந்தவன்,

என்றும் நிலைத்தவனாகிறான்

 ஆம் சாகா நிலை எய்துகிறான்.

 

 

நான்காவது பிரஸ்னா

பகுதி 4

சவுர்யயானி கார்க்யா மற்றும் பிப்பலாதர்.

1 சூர்யனின் பேரன் கார்க்யா சூரியனிடம் வினா வைத்தார்.

பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?

2.பிப்பலாதர் விடை சொன்னார்.

 ஓ கார்க்யா

 சூரியன் தன் ஒளித்தட்டோடு  

மறைந்து பின் எழவில்லையா.

 இப்படி  மனித மனம் எல்லாவற்றையும்

ஒருங்கிணைக்கிறது

. உறக்கத்தின்போது  காது கேட்காது

,கண் பார்க்காது,மூக்கு நுகராது

, உடல் உணராது, பேச முடியாது,

 எதனையும்  உட்கொள்ளமுடியாது,

 அனுபவிக்க வாய்க்காது,

இடம் பெயரமுடியாது,

அசைதல் முடியாது,

 ஆகத்தான் அவன்

 உறங்குகிறான் என்கிறோம்.

 

3.பிராணாக்னி  இவ்வுடலில் விழித்து இருக்கிறது. அபானா  என்பது சமையலறை நெருப்பு. வ்யானா என்பது அன்வஹர்ய பசனா நெருப்பு. ப்ராணா என்பது அஹவனியா நெருப்பு. கர்ஹபத்யா நெருப்பிலிருந்து இது பெறப்படுகிறது.

இதயத்தின் தெற்கு பாகத்தினின்று வெளிப்படும் வ்யானா என்பது அன்வஹர்யபசனா. அது தக்‌ஷிணாக்னி எனப்படும்.

உறக்கத்தின் போது அபானாவிலிருந்து அஹவனியா எனும் ப்ராணா  நெருப்பு பெறப்படுகிறது.

4.சமானா பணியைச் சரியாகப் பிரித்து வழங்குகிறது. எனவே அது ஹோத்ரி (புரோஹிதர்).  மனம் என்பது  யக்ஞம் செய்வோன். ,உதானா  என்பது யக்ஞத்தின் பலன். உதானா என்பதுவே  யக்ஞம் செய்வோனை வழி நடத்துகிறது.

5.மனம் கனவில்

 பெருமையை அனுபவிக்கிறது. 

அவன் பார்த்ததைப்பார்க்கிறான்.

கேட்டதைக்கேட்கிறான்.

  பல தேசங்களில் பல இடங்களில்

அனுபவித்ததை அனுபவிக்கிறான்.

பார்த்ததைப் பார்க்காததை

கேட்டதைக்கேட்காததை

அனுபவித்ததை அனுபவிக்காததை

 உண்மையை உண்மையில்லாததை

அனைத்தையும் காண்கிறான்.

அவனே அனைத்தும்.  அவனே பார்க்கிறான்.

 

6.ஒளி அவனை

ஆட்கொள்கிறபோது

மனம் கனவு காண்பதில்லை.

மகிழ்வின்பம் அவன் உடலில் எழுகிறது.

 

7.அன்பனே  ,ஒரு பறவை கூட்டிற்குச்சென்று வாழ்வதொப்ப  பேரான்மாவில் இவை அத்தனையும் வதிகின்றன.

 

 

8    பூமி  அதனுள் உறையும் மூலகங்கள்,

நீர் அதனுள் உறையும் மூலகங்கள்,

 தீ அதனுள் உறையும் மூலகங்கள், 

காற்று அதனுள்  உறையும் மூலகங்கள்,

 வான் அதனுள் உறையும் மூலகங்கள்,

கண் காணப்படுபவை,

செவி கேட்கப்படுபவை,

 நாசி நுகரப்படுபவை,

கரங்கள் பிடிபடுபவை,

 கால்கள் நடந்துசெல்லக்கூடிய இடங்கள்,

 பிறப்புருப்பு அதனால் அனுபவிக்கப்படுபவை ,

கழிவுறுப்பு கழிக்கப்படுபவை,

மனம் நினைக்கப்படுபவை

,புத்தி  தீர்மானிக்கப்படுபவை,

 தன்னுணர்வு அதன் பொருள் 

,சித்தம் அதன் பொருள்,

 ஒளி அதன் பொருள்,

பிராணன் அது தாங்குபவை,

இவை ஆழ்ந்த உறக்கத்தின் போது

உயர் ஆன்மாவில் ஓய்வெடுக்கின்றன.

 

9.காண்பவன், உணர்பவன்

,கேட்பவன், நுகர்வோன்,

 சுவைப்பவன், நினைப்போன்,

 அறிபவன், 

புருஷா என்கிற புத்திசாலி ஆன்மா.

 அவனே செய்பவன்

 அழிக்கமுடியாத உயர் ஆன்மாவில்

அவன் வசிக்கிறான்.

 

10.உயர்ந்த,அழிவில்லாத

(,அவன்) புருஷன் பெறுவோன். 

நிழலில்லாத  நிறமில்லாத 

தூய அழிவில்லாத

 அத( வ)னை அறியும்

அந்த அன்பன்,

 யாதும்  அறிந்தவன்,

 அனைத்திலும் உறைபவன்.

 

 

பன்ச்சம பிரஸ்னா

 வினா 5

இதுவே  இந்த  கவிவாசகம்.

 

13. அழியா ஆன்மாவில்

உறையும் சுயம், 

அதன் தேவர்கள்

,பிராணன் பஞ்ச பூதங்கள்

 இவை அறிந்த அன்பனே

யாதும் அறிந்து எதிலும் உறைபவன்.

 

 

சத்யகாமா மற்றும் பிப்லாதர்

 

1.சிபியின் மைந்தன் சத்யகாமன் கேட்டார்.’ ஓ   பகவானே !  மனிதர்களில் ஓம் எனும் மந்திரத்தை தன்  இறப்புவரை தியானிப்பவன்  அதனால்  எந்த உலகத்தை அடைவான்.

2. சத்யகாமா ! ஓம் என்பது பிரம்மத்தின் உயர் நிலையும் தாழ் நிலையுமாகும். அது அறிந்தவன்  இவை இரண்டில்  ஏதோ ஒன்றைஅடைவான்.

3. ‘அ’ எனும் ஒலி அளவை தியானிப்பவன் அதனால் விளக்கம் பெற்று பூவுலகிற்கு விரைவில் வருகிறான். ரிக் வரிகள் மனித உலகிற்கு அவனை இட்டுச்செல்கின்றன. உறுதியை சிறப்பை நம்பிக்கையை பெற்று அவன் பெருமை அடைகிறான்.

4.  ‘உ’ எனும் இரண்டாவது மாத்திரையை தியானிப்பவன் யஜுர் வேத வரிகளால்  ஆகாயத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறான்.சந்திர உலகிற்கு (பிதிர் உலகம்) ச்செல்கிறான். அங்கு பெருமை பெற்று மனித உலகிற்குத்திரும்புகிறான்.

5. ஓம் எனும் மூன்று மாத்திரை ஒலிகளை தியானிப்பவன் ஒளி வீசும் சூரியனோடுஇணைகிறான். பாம்பு தன் சட்டையை உரிப்பதொக்க பாவங்களிருந்து விடுபடுகிறான். சாம தோத்திரங்களால் பிரம்ம உலகம் சென்று  நிறை வாழ்வெனும் ஹிரண்யகரப்பத்தை அடைந்து உயர் புருஷன் எனும் இதயவாசியைக்காண்கிறான். இது பற்றி இரண்டு பாடல்கள் உள்ளன.

6.  இந்த மூன்று மாத்திரைகளை

 பிரித்துப் பிரித்துப்

 பயன்படுத்துவோன்

நிலையற்றவன்

 தவறாகப் பிரயோகிக்காது

மூன்று மாத்திரைகளையும் சேர்த்துச்

  சரியாகப் பிரயோகிப்பது தெரிந்தவன்,

 உள் வெளி  நடு எனும்

அனைத்துச் செயல்பாடுகளிலும்

நடுக்கமுறமாட்டான்.

 

7. ரிக் வரிகளால்

 பூவுலகை அடைந்து

,யஜுர் வரிகளால் ஆகாயம் அடைந்து

,சாம வரிகளால்  பிரம்ம லோகம் அறிகிறான்.

 ஓம் எனும் மந்திரம் தெரிந்த

புத்திசாலி இவைகளை ப்பெறுகிறான்.

அமைதியான அழிவில்லாத

 இறப்பில்லாத அச்சமில்லாத

 உயர்ந்த நிலை அது.

 

 ஷஸ்த பிர்ஸ்னா

வினா 6.

சுகேசனும் பிப்பலாதரும்

1.   பரத்வாஜனின் குமாரன் சுகேசன் வினா வைத்தார்.

’ஓ பகவானே ஹிரண்யகர்பனே,கோசல நாட்டு இளவரசன் என்னிடம் வந்து இப்படி கேள்வி கேட்டான். ‘ஓ பரத்வாஜனே,புருஷனின்  16 காலங்களை அறிந்தோனா நீ,?  அந்த இளைஞனிடம் சொன்னேன்.’  நான் அவனை அறியேன். எனக்குத்தெரிந்தால் நான் ஏன் சொல்லாமல் இருக்கப்போகிறேன். உண்மையில்லாததைப் பேசுவோன் அடிவேரிலிருந்து ஒன்றுமில்லாமல் உலர்ந்தேபோவான்ஆக நான் உண்மையில்லாதைப்பேசமாட்டேன். சொல்லிய பின், தேரில் ஏறி அமைதிஆனான்.. ஆகத்தான் நான் கேட்கிறேன். புருஷன் என்றால் அது யார்?

 

2.   அவர் பதில் சொன்னார். அற்புதமான இளைஞனே! 16 காலங்களும் பிறக்கும்  அந்த புருஷன் இந்த சரீரத்திலும் உள்ளான்.

3.   ’ யார் விடைபெற்றால் நான் விடைபெறவேண்டும், யார் இருந்தால் நான் இருக்கவேண்டும் ‘புருஷன் வினா..

4.   புருஷனே பிராணனை உருவாக்கினான்.

 பிராணனிலிருந்து கிடைத்தவை

 நம்பிக்கை,ஆகாயம்,காற்று,தீ,

 நீர், மண் உணர்வுறுப்புக்கள்,

மனம், உணவு,

 உணவிலிருந்து சக்தி,

தியானம், மந்திரங்கள்

காரியங்கள், உலகங்களின் பெயர்கூட

 

5.   ஆறுகள் ஓடி  கடலை அடைகின்றன. பேரும் உருவமும் அவை இழந்து  கடலாகின்றன. அப்படி 16 காலங்களும் புருஷனில் மறைந்து புருஷனாகவே ஆகின்றன. பிரிவுகளற்று அழிவில்லாத ஒன்றாக ஆகிவிடுறது அது.     இப்படிச் சொல்கிறது இவ்வரி

 

6.   சக்கரத்தின் ஆரக்கம்பிகள் ஒப்ப 16 காலங்கள் புருஷனில் அமைகிறது. இறப்பு பாதிக்காத  ஒரு நிலையை நீ  எய்துகிறாய்.

 

 

7.   பிப்லாதர் பிறகு அவர்களிடம் சொன்னார். உயர்ந்த பிரம்மனை இவ்வளவு மட்டுமே  நான் அறிவேன். இதற்கு மேல் ஒன்றுமில்லை.

 

8.    அனைவரும்  உம்மைப் பிரார்தித்து  வணங்குகிறோம். உயர்ந்த முனியே வணங்குகிறோம் மிக உயர்ந்த முனியே, அறியாமை சமுத்திரத்தை கடக்க உதவும் தாங்களே எங்கள் அனைவருக்கும் பிதா.

 

முண்டகோபனிஷத்

 

ஓம்     கடவுளர்களே எது புனிதமோ

 

 அதனை எங்கள் காதுகளால்

 நாங்கள் கேட்கவேண்டும்.

வணக்கத்திற்குரியவனே,

 எது புனிதமோ அதனை

எம் கண்களால் பார்ப்போமாகுக.

 கடவுளால்  கொடுக்கப்பட்ட

இவ்வாழ்க்கையை வாழ்வோமாக.

வலிமையான கை கால்களுடன்

 கூடிய உடல்களோடு

 உம்மைத் துதிக்கிறோம்.

இந்திரன் வலிமை வாய்ந்தவன்

 பழம் புகழ் உடையோன்

 எங்கள் வளத்தைக்காக்கட்டும்.

உணவு கொடுப்போன்

 வளத்தின் பொறுப்பாளி

 எங்களுக்கு எது நன்மை பயக்குமோ

அச்செல்வத்தை இந்திரன் அருளட்டும்.

 விரைவான இயக்கத்தின் கடவுள்

 எங்களுக்கு நன்மை அருளுக.

 பெரு விஷயங்களைக் காக்கும்

அவர் எம்மையும் காப்பாற்றுக.

 

அத்யாயம் 1 பகுதி 1

 

1.அண்டத்தைப்படைத்துக்காக்கும் பிரம்மனே கடவுளர்களில் ஆதியில் உதித்தவன். பிரம்ம ஞானத்தை அவரே வகுத்தவர். பிரம்மஞானமே அனைத்து அறிவின் ஆதாரம். இதனை மூத்த குமாரன் அதர்வனுக்கு பிரம்மன் விளக்கினார்.

2. பிரம்மா அதர்வனிடம் சொன்ன பிரம்மத்தைப்பற்றிய அறிவு  அதர்வன் , ஆங்கிரனுக்கு ச்சொன்னான். ஆங்கிரன்  பரத்வாஜ குடும்பத்தைச்சார்ந்த சத்யவாஹனுக்குச்சொல்ல சத்யவாஹன் ஆங்கிரசுக்குச்சொன்னான். குருபரம்பரையாக இந்த அறிவு பெறப்பட்டது.

3.சௌனகர் என்னும்  உயர் குடும்பத்துக்காரர் புனித நூலின் படி  ஆங்கிரசை அணுகினார். வினா வைத்தார். ஓ பகவானே, எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?.

 

4.சௌனகருக்கு ஆங்கிரஸ் விடை சொன்னார்.

இரண்டுவகை அறிவு

பெறப்படவேண்டும்.

வேதமும்  பிரம்மமும்

அறிந்த உயர்ந்தோர்,

மற்றும் தாழ்ந்தோர். ( பர- அபர)

 

5.ரிக் யஜுர் சாம அதர்வ  வேதங்கள்,

உச்சரிப்பு, கல்பம்,சடங்கு முறை,

 இலக்கணம்,சொற் பத அறிவு,

அணி இலக்கணங்கள்,  

ஜோதிடம் என்பன

அறிவின் தாழ் நிலையிலுள்ளவை.

என்றும்  உள்ளதை

அறிய தேவையானது உயர் அறிவு.

 

6.எதனை க்காணமுடியாதோ,

பெறமுடியாதோ,

 தோற்றமில்லாததுவோ,

 குணவிசேஷமில்லாததுவோ,

செவியும் கண்ணும் இல்லாததுவோ,

 என்றும் உள்ளதோ,

பலவாககாட்சி தருகிறதோ,

 அனைத்திலும் விரவி இருப்பதுவோ,

 மிக நுணுக்கமானதுவோ,

அழிக்கமுடியாததுவோ

, அதனை ஞானி எல்லாவற்றிர்க்கும்

( பூதங்களுக்கும் அல்லது அனைத்து படைப்புக்களும்) மூலம் என்பதறிவான்.

 

7.சிலந்தி வலை பின்னுவதொப்ப,

 பூமியிலிருந்து செடிகொடிகள் வளர்வதொப்ப,

வாழும் மனிதனிடமிருந்து

 முடி முளைப்பது போல்,

பிரம்மத்திலிருந்து

இந்த பேரண்டம் துவங்குகிறது.

 

8.தவத்தால் பிரம்மன் உலகைப்படைக்க

அதனின்று உணவு பெறப்பட்டு,

 உணவிலிருந்து உயிர், மனம்,

ஐம்பூதங்கள், உலகம்,செயல்

 அதன் பலன்கள் வருகிறது.

 

9. எல்லாமும் விவரமாய் அறிந்தவன்பிரம்மன்.

  யாருடைய தவம்,

 அறிவு, பிரம்மன், பெயர், உருவம் மற்றும்

 உணவு என்பவைக் கொணர்கிறதோ

அவனே பிரம்மன்

 

அத்யாயம்1. பகுதி 2

 

1.     ஞானிகள் கண்ட  வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யாக கிரியைகள் உண்மையானவை. திரேதா யுகத்தில் செயல்படுத்தப்பட்டன. உண்மையை நேசிப்பவர்கள்  அவைகளை விடாமல் அனுசரிக்கவேண்டும். அதுவே உனது பாதை. அது நல் உலகிற்கு இட்டுச்செல்லும்.

 

2.   அக்னியை கிளரிவிட்டு ஜுவாலை அசையும் தருணம்  யாகம் செய்பவர்  நம்பிக்கையோடு ஹோம வஸ்துக்களை இரண்டு அக்னிகளுக்கிடையுள்ள  இடத்தில் நெய்யை ஊற்ற வேண்டும்.

 

 

3.   அக்னிஹோத்ர யாகம் என்பதனை

  அமாவாசை பௌர்ணமி யாகங்களால்,சாதுர்மாஸ்ய யாகங்களால், அக்ராயன   (   autumnal season) யாகங்களால் தொடரப்படாமல்,, அதிதி என்னும் விருந்தினர் வருகையில்லாமல்,  சரியான நேரத்திற்கு செய்யப்படாமல், விஸ்வதேவர்களுக்கு சடங்கு செய்யாமல், விதி எதுவோ அதன்படி செய்யாமல்,   செய்யப்படுவது ஏழுதலைமுறைகளை அழித்துவிடும்.

4.    தீயின்  ஆடிக்கொண்டே இருக்கும் ஏழு கங்குகள்,  கலி ( கருப்பு) கராலி( வீர்யமானது) மனோஜவா( மனோ வேகமுடையது) சுலோஹிதா( கருஞ்சிவப்பு) சுதும்ரவர்னா( புகை நிறத்தவை) ஸ்புலிங்கினி ( ஒளிர்வது) விஸ்வரூபி அல்லது விஸ்வருசி. ( அனைத்து உருவங்களும் கொண்டது)

 

5.   அக்னிஹோத்திரத்தை தீ ஜ்வாலை வரும் சமயம் சரியான நேரத்தில் செய்பவன் சூரியக்கதிர்கள் வழி தேவர் தலைவன் வசிக்குமிடம் சென்றடைவான்.

 

6.   வருக வருக  என்று சொல்லி அக்னிக்கு வணக்கம்  செய்து யாகம்செய்பவனைக் கதிரவன் கதிர்களுக்கு கீழாக அழைத்துச்சென்று கதிரவனை ,புகழும் வார்த்தைகளான ‘பிரம்மனின் புனித உலகமிது உன் நற்செயல்களால் பெறப்பட்டது’ என்று சொல்லவைக்கவேண்டும்

.

7.   யாகத்திற்குத்துணை புரியும் 18  பேரும் தற்காலிகமானவர்கள் அழியக்கூடியவர்கள். இவர்களைத்தான் கீழான விழாக்கள் நம்பியிருக்கின்றன. இதையே ஆகச்சிறந்தது என்றெண்ணி மகிழும் அஞ்ஞானி மீண்டும் மீண்டும் வயோதிகனாகி மரணிக்கிறான்.

( 16 புரோஹிதர்கள், கர்த்தா அவர் மனைவி, ஆக 18 பேர்)

 

8.   அஞ்ஞானி

அஞ்ஞானத்தில்  ஆழ்ந்துத்

 தன்னைப்  புத்திசாலி

அறிவாளி என்றுமே

 கற்பனை செய்து

 சுற்றிச் சுற்றி வருகிறான். 

குருடனை இன்னொரு குருடன்

வழி நடத்துவதுபோலே

துன்பப்பட்டுக்

கீழ் நிலை அடைகிறான்.

 

9.    அஞ்ஞானி அறிவில்லாது

பல வழிகளில் உழன்று

தான் ஒரு முடிவை

 எட்டி விட்டதாய் நினைக்கிறான்.

 அறிவில்லாது வினையாற்றுபவர்கள்

 தமது ஆசையினால்

துன்ப நிலைக்கு வருகிறார்கள்.

கர்மாவின் பலன் இருந்து

அது  தீர்ந்துபோனபின்னால் 

 சொர்க்கத்தைவிட்டு

நீங்கி விடுகிரார்கள்.

 

10.  யாகத்தையும் தானத்தையும்

 ஆகச்சிறந்ததாக எண்ணும்

இந்த அஞ்ஞானிகள்

அதற்கு மேல் உள்ள

 நல் விஷயம் அறியாதவர்கள்.

 தாம் செய்த நற்செயல்களால் 

உயர்ந்த சொர்க்கத்தில்

 இருந்து அனுபவித்துவிட்டு 

மீண்டும் இவ்வுலகிற்கோ

 அதற்குக் கீழான உலகிற்கோ

 சென்றுவிடுகின்றனர்.

 

11.  உறுதியை தவத்தைக்

 கைக்கொண்டு

புலன்களை அடக்கிக்

 காட்டில் யாசகம் செய்து

  பாவங்களிலிருந்து விடுபட்டு

 வாழும் ஞானிகள்

சூரியன் வழியாக

  என்றும் உள்ள அழியாப் புருஷன்

 இருக்கும் இடம் சென்று   சேர்வர்..

 

12. கர்மாவினால் பெறப்பட்ட

 இவ்வுலகத்தை ஆராய்ந்த

பிராம்ணன்( பிரம்மத்தை விரும்பி)

 அனைத்துஆசைகளினின்று

விடுதலை பெற்று

 அழியா ஒன்றை கர்மாவினால்

பெறமுடியாது என்பதுணர்கிறான்.

என்றும் அழியா ஒன்றின்

ஞானத்தை ப்பெற

கைகளில் சமித்தோடு

 வேதம் அறிந்த குருவை ச் சேர்ந்தே

 பிரம்மத்தோடு இணைகிறான்.

 

13. மனம் அமைதியாகி

,புலன்கள் அடங்கி,

 வணக்கத்தோடு குருவை ச்சேரும்

மாணவனுக்கு பிரம்ம ஞானம் வழங்கி,

அதன்வழி  உண்மையான

 அழிவேயில்லாதப் புருஷனை

 அறிய நல்லாசிரியன்

போதனை செய்கிறான்.

 

 

அத்யாய ம் 2 பகுதி 1.

 

1.கொழுந்துவிட்டெரியும் தீயிலிருந்து 

ஆயிரம் தீப்பொறிகள் எழுவதுபோல்

அழிவில்லா பிர்மத்திடமிருந்து 

அனேக ஜீவர்கள் தோன்றி 

அந்த பிர்மத்திடமே திரும்புகின்றனர்.

இதுவே உண்மை.

 

2. அது ஒளிர்வது ,

உருவமில்லாதது,

 இருப்பதுவும் இல்லாததுவும்,

 பிறவிஎடுக்காதது

 பிராணன் இல்லாதது

 மனம் என்ற ஒன்றில்லாதது

தூயது, பெரிதினும் பெரிது,

அழிவில்லாதது.

 

3.பிர்மத்திடமிருந்தே உயிர் மனம்

அனைத்து உறுப்புக்கள்,

ஆகாயம்,காற்று, தீ, நீர்,

எல்லாரையும் தாங்கும் நிலம்

 இவை இவை பிறக்கின்றன.

 

4. தீ அவன் தலை,

சூரிய சந்திரர் கண்கள்

, நான்கு பருவங்கள் திசைகள்

அவன் செவி, பேச்சு  சொல்லப்பட்டவேதம்,

 காற்று அவன் மூச்சு,

அவன் இதயம் இவ்வண்டம்,

அவனே எல்லா  உயிர்களிலும்

 உள் உறைகிறான்.

 

5.   புவியும் சொர்க்கமும்

அவனிடமிருந்து உண்டாகின்றன.

 இவை இரண்டிற்கும்

 முதல்   தீ  சூரியனிடமிருந்து,

 இரண்டாவது  தீயோ  மேகம்

 சந்திரனிடமிருந்து,

 மூன்றாவது தீ  ஆகின செடிகொடிகள்

அந்த மேகத்திடமிருந்து,,

 செடிகொடிகளிருந்து

 மனிதன் என்கிற நான்காவது தீ

 விந்து என்பது ஐந்தாவது தீ

அவனிடமிருந்து அது பெண்ணிற்கு.

 இப்படியாய் அனேக உயிரினங்கள்

புருஷனிடமிருந்து தோன்றுகின்றன.

 

6 . பிர்மத்திடமிருந்தே எல்லாமும் 

ரிக் சாம யஜுர் தீட்சை

 அனைத்து யாகங்கள் மிருக பலி

, புரோகித தட்சணை,

 ஆண்டு,யாகம் செய்வோன்

, சந்திரன் சுத்தி செய்ய, சூரியன் ஒளி தர,

பெரும் பெரும் உலகங்கள்..

 

7.பிர்மத்திடமிருந்தே கடவுளின்

 பல்வேறு நிலைகள்.

தேவர்கள் மனிதர்கள் கால் நடைகள்

 பறவைகள் பிராண அபானங்கள்

 அரிசி பார்லி

 உண்மை தவம் பக்தி புனிதம் ஆளுகை.

 இவை எழுகின்றன.

 

8.பிர்மத்திடமிருந்தே  ஏழு பிராணங்கள்,

 ஏழு தீ, ஏழு எரிபொருள்,

 ஏழு வழிபாடு,

 இதயத்தில் வதியும்

பிராணன் வியாபிக்கும்  ஏழு உலகங்கள்

அனைத்தும் ஏழு ஏழு

 என்பதாய்த்தொடர்கின்றன..

 

9.பிர்மத்திடமிருந்தே

  சமுத்திரங்கள் மலைகள்

 பல்வித ஆறுகள், வருடாந்திர தாவரங்கள்

அவற்றின் ரசங்கள் 

 சூக்கும பஞ்ச பூதங்களால்

 சூழ்ந்த இவ்உடலை நிர்வகிப்பது 

இவை இவை  இப்படி

 நிகழ்கின்றன ஓ இளைஞனே

10.பேரண்டத்தில் புருஷனே எல்லாமும். யாகம் தவம் பிரமன்  அழியா உன்னதங்கள்  இதயத்தில் மறைந்துள்ளது இவை அறிந்தோன் இங்கேயே அறியாமையை நீக்குபவன் என்பதாக அது.

 

அத்யாயம் 2 பகுதி 2

 

1 ஒளிர்வது அருகிருப்பது 

இதயத்தில்  உலவுவது

 பெரிதினும் பெரிது

 அனைத்திற்கும் ஆதாரமானது.

இயங்கும் அனைத்திற்கும்

 சுவாசிக்கும்அனைத்திற்கும்

 கண் இமைக்கும்

 அனைத்த்திற்கும் பிர்மத்தினுள்

 மய்யமாய் உறைவது .

 உருவமுள்ளதும் உருவமில்லாததும்

எல்லோராலும் மதிக்கப்படுவதும்

 மனித அறிவுக்கு எட்டாததும்

 அனைத்திற்கும் உயர்ந்ததும் அது.

 

2. பிரகாசமானது சிறிதினும் சிறிது

அனைத்து உலகங்களும்

அதன் மீது அமைந்தேயிருப்பது,

 அழியா பிர்மம் உறைவது.

அதுவே பிராணன் பேச்சு மனம். 

அது உண்மை அழிவில்லாதது

 ஓ இளைஞனே . அதனையே பெறுவோம்.

 

3 பேராயுதமான உப நிசத்

 என்கிற வில் கொண்டு,

தொடர்த் தியானம் என்கிற  கூர் அம்பு பூட்டி

 

 பிர்மத்தின் மீதே

 மனத்தைச்செலுத்துகின்ற

  நாண் இழுத்து

, அழிவில்லாத பிர்மம்

என்கிற இலக்கை

அடைவாய்  ஒ இளைஞனே!

 

4. ஒம் எனும் ப்ரணவம் வில்,

ஆன்மா என்பது அம்பு

, பிர்மம் என்பதிலக்கு.

 தன்னைக்கட்டுப்படுத்திய மனிதன்

  அதனை எய்தவேண்டும்.

அம்பும் இலக்கும் ஒன்றாகி

 அனைத்தும் பிர்மமம்

எனவே முடியும்.

 

5.மேலுலகம் பூவுலகு

 ஆகாயம் மனம் பிராணன்கள்

 அனைத்தும் பிர்மத்தில்

 மய்யம் கொண்டுள்ளன.

 அதுவே அனைத்திற்கும் ஆன்மா.

மற்ற பேச்சுக்களை விட்டொழியுங்கள், 

என்றும் அழிவில்லாத ஒன்றிற்கு

இதுவே பாலம் என்றாகிறது.

 

6.   நரம்புகள் சந்திக்கும் இதயத்தில்

அது பலவகையானும் இயங்குகிறது.

சக்கரத்தில் ஆரக்கம்பிகள் போலத்தான்.

 ஓம் என்பதை தன்னுள் ஆக்கித்

 தியானியுங்கள்.

இருண்ட பகுதிக்கு

அப்பால் சென்றுவிடுவீர்கள்.

 உங்களுக்கு வாழ்த்துகள்.

 

7.   அனைத்தும் அறிந்த,

 விளக்கமாய் தெரிந்த

 உலகெங்கும் ஒளிருகின்ற

 ஆகாயத்தில் உறைகின்ற 

ஆன்மா பிர்ம உலகத்தில் .

 

ஆன்மா  உங்கள் மனம்போல்

  உடலுக்கும்  வாழ்க்கைக்கும்

 வழிகாட்டியாகும்.

ஆன்மா உணவில் உறைவது,

  இதயத்திற்கு அருகில் இருப்பது.

அருளில் நிறைந்த

 அழியாத ஆன்மாவை

 புத்திசாலி உயரிய

அறிவோடு காண்கிறான்.

 

8.நுண்ணியன் பெரிதினும் பெரியோன்

அவனை தரிசித்தால்

 இதய முடிச்சுக்கள் அவிழும்

அய்யங்கள் அகலும்

கர்மாக்கள் அழியும்.

 

9.   கறை எதுவுமற்ற

பிரிவுகளற்ற பிர்மன்

 தங்கத்தகடு போர்த்திக்கொண்ட

 மூடிக்குக்கீழாக உள்ளது.

 தூயது ஒளியின் ஒளி. 

ஆத்மாவை அறிந்தவர்கள்

இதை அறிவார்கள்.

 

10. அங்கு சூரியன் ஒளிராது

நிலா விண்மீன்கள் ஒளிராது

  மின்னல்கள் அக்னி எதுவுமிராது.

அது ஒளிரும்போது

அதன் பின்னே அனைத்தும் ஒளிரும்.

அதன் ஒளியால்

அனைத்தும் ஒளிர்கின்றது.

 

11. அழியா பிர்மம் முன்னால்,

 அந்த பிர்மம் பின்னால்,

 வலப்பக்கம்  இடப்பக்கம்,

 மேலாக கீழாக

, எல்லா இடங்களிலும் அதுவே. 

பிர்மமே  எல்லாமுமாய்.

அதுவே மிகமிக உயர்ந்தது.

 

 

 

அத்யாயம் 3. பகுதி 1.

 

1.   இணைபிரியா இரு பறவைகள்

 ஒரு மரத்தில் வாழ்ந்தன.

 ஒரு பறவை இனிய கனியை உண்கிறது.

மற்றொன்று  கனியை உண்னாமல்

 அதனை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது

 

2.   அதே மரத்தில்

அமர்ந்திருக்கும் ஜீவாத்மா எனும் பறவை

  அறியாமையால் மயங்கி

 யாரும் உதவவில்லை என வருந்துகிறது..

 தன்னை அடுத்துள்ள

  எல்லோராலும்  வணக்கத்திற்குரிய

ஒளிர் தலைவனை நோக்க

 அது துயரத்திலிருந்து விடுபடுகிறது.

 

3.   அப்படித் தங்க நிறமான

படைப்புக்கடவுளை

 புருஷனை பிரம்மாவுடைய

மூலத்தை   தரிசிக்கும்

ஜீவாத்மா ஞானியாகி

 நல்வினை தீவினை இரண்டும் துறந்து

 மாசற்ற  உயரிய

 சம நிலையைப் பெறுகிறான்.

 

4.   அனைத்து உயிர்களிலும்

ஒளிரும் கடவுள்

அந்த ப்பிராணனே.

இப்படி அறிந்த ஞானி

 எதனையும் பேசமாட்டான்.

 தன்னுள்  விசாரித்து

 தன்னுள் மகிழ்ந்து

தன் பணி செய்து

 பிர்மத்தை அறிந்தவர்களுள்

பேராளன் ஆகிறான்.

 

5.    உண்மையை கைக்கொண்டு

 தவம் செய்து நல் ஞானத்தோடு

 இன்பங்களிலிருந்து தூரமாகி  நிற்பவன்

 ஆத்மாவைக்கண்கிறான்.

இப்படிப் பாவம் தொலைத்தவன்

காண்பதுவே தூயதும்

ஒளிர்வதுமான உடலுள் உறையும் ஆன்மா.

 

6.   வாய்மையே வெல்லும்

பொய்மை அல்ல.

உண்மையே தேவ பாதையை திறந்துவிடும்.

 ஆசையை வென்ற ஞானிகள்

 அவ்வழியே செல்கிறார்கள்

வாய்மை வதிகின்ற உயரிய இடம் அதுவே.

 

7.   அந்தப்பிரம்மம் ஒளிர்வது

 அகண்டது புனிதமானது

 புரிந்துகொள்ள முடியாதது.

 நுண்ணியதினும் நுண்ணியது

. தூரத்திற்கு வெகு அப்பாலும்,

 வெகு வெகு அருகிலும்

ஞானியின் இதயத்துள்ளும் உறைவது.

 

8.   கண்களால் காணமுடியாது

 பேசிப்பெற்றுவிடமுடியாது

மற்ற புலன்களால் உணரமுடியாது

தவத்தால் பெறமுடியாது

 நற்செயல்களால் அடையமுடியாது

. மனித மனம் அமைதியான

 அறிவொளியால் தூய்மையாகி

 காணமுடியாத பிரம்மத்தை க்காண்கிறது.

.

9.   நுணுக்கமான ஆன்மாவை

 மனம் இந்த உடலுள் உறைவதாய் அறிகிறது.

ஐந்து  மடிப்புள்ள பிராணன்

 உடலுள் நுழைகிறது.

எல்லா உயிரினங்களின் மனதிலும்

 பிராணன் வதிகிறது

.மனம்  அது  தூய்மையாக ஆன்மா ஒளிர்கிறது.

 

10. தூய்மையான மனமுள்ளவன்

உலகை வெல்கிறான்

  மன விருப்பங்களை அடைகிறான்

. ஒவ்வொருவனும் 

ஆன்மாவை அறிந்தவனை

 வணங்க மகிழ்வெய்துகிறான்.

 

 

அத்யாயம் 3   பகுதி 2.

 

1.   அண்டம் அமைதியாய் இருக்கும் இடம்  உயர்ந்த  பிரமன்  ஒளியோடு இருக்குமிடம்.  இது அறிந்தவனை,    ஆசைகளற்ற ஞானி  வணங்குகிறான். மறு பிறவி தொலைக்கிறான்.

 

2.   ஆசையை மனதில்

 

  வளர்த்துக்கொள்பவன்

அந்த ஆசையினாலே

 இங்கும் அங்கும் 

மீண்டும்  மீண்டும்

  பிறவி எடுக்கிறான்.

 ஆசைகள் ஓய்ந்து

ஆன்மாவை உணர்ந்தவனுக்கு

இப்பூவுலகிலேயே

அனைத்து ஆசைகளும்

பெற்றுக்கொள்கின்றன விடை.

 

 

3.   வேதங்களை படிப்பதாலே

 நிறைவாய் கற்றலாலே

  பெற்ற அறிவினாலே,

 ஆன்மாவை அடையமுடியாது

. யாருடைய சுயம்

அவனைத்  தேர்கிறதோ

 அவனில்  தோய்கிறதோ

அவனுக்கே அச்சுயம்  சாத்தியப்படுகிறது.

அவனுக்கே ஆன்மா

 தனது பண்பை வெளிச்சமாக்குகிறது.

 

4.   வலிமையில்லாதவன்,

 தன் முனைப்பு இல்லாதவன்,

 இலக்கு ஏதுமில்லாத தவசி

 ஆன்மாவை க்காண்பதில்லை.  

 இவைகள் கைவரப் பெற்று

  தொடர்ந்து முயலும் ஞானி

 பிரம்மத்தையே அடைகிறான்.

 

5.   ஆத்மாவைக் கண்டடைந்த முனிவர்கள் ஞானம் நிறைவாக கைவரப்பெற்று ஆசைகளினின்று விடுதலைபெற்று  அமைதி பெறுகின்றனர். எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் ஆத்மாவை  தரிசித்தவர்கள் ஆத்மாவுக்கு  விசுவாசமாகி எல்லாவற்றிலும் நிறைவடைகிறார்கள்.

 

6.   அய்யத்துக்கு இடமின்றி வேதாந்த ஞானம் கைவரப்பெற்று யோக அனுசரிப்பால் ஆசையை வென்று மனத்தைத் தூய்மையாக்கிய துறவிகள் பிரம்மலோகத்தை அடைகிறார்கள். இறப்பின் போது  முற்றாய் விடுதலை பெறுகிறார்கள்.

 

 

7.   15 காலங்கள்-பிரிவுகள்  அதன் மூலங்களில் நுழைகின்றன. அதனதன் தேவர்கள் அந்தந்த தேவர்களில் நுழைகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள்  ஆன்ம அறிவு   இவைகளால் அழிவேயில்லா உயர் பிரம்மத்தின்  உச்சத்தில் ஒன்றாகிறார்கள்.

 

8.    பாயும் ஆறுகள்

 கடலில் சங்கமமாகி

இழப்பது உருவத்தை பெயரை..

 ஞானிகள்  பெயர் உரு

 இரண்டானும் விடுதலை

 பெற்றுப் பெரிதினும்

 பெரிய புனிதரைச்சேர்கிறார்கள்.

 

9.   உயரிய பிரம்மத்தை அறிந்தவர்கள் பிரம்மமாகிவிடுகிறார்கள்.  துயரை வென்று, நன்மை தீமைளினின்று விதலைபெற்று  இதயத்தின் எல்லா தளைகளிலிருந்தும் விடுதலையாகி  அழியா நிலையை அடைபவர்கள் அவர்களே..

அவ்வழி பிரம்மத்தை அறியாதவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள்

 

10. ரிக் வேதம் பின் வருமாறு சொல்கிறது.

விதிக்கப்பட்ட செயல் செய்யும்

ஒருவற்கு பிரம்ம ஞானத்தைக்

 கற்பிக்கவேண்டும்.

 அவர்கள்  நன்கு வேதமறிந்து

  முழு நம்பிக்கையோடு

பிரம்மம் கைவரப்பெற்று ஏகார்ஷி

 என்னும் நெருப்புக்கு வணக்கம் சொல்லி

 சிரோவிரதம் என்னும் விரதத்தை

 அதர்வண விதிப்படி  அனுஷ்டிப்பார்கள்.

 

11. விரதத்தை  அனுசரிக்காதவர்கள் யாரும் இவைகளைப்படிக்கவேண்டாம். இதுவே உண்மை. அங்கிரச முனிவர் அந்தக்காலத்திலேயே   சவுனகருக்கும் மற்றவர்களுக்கும்  இதனைச்சொல்லியிருக்கிறார். பெரும் முனிவர்களுக்கு வந்தனம். பெரும் முனிவர்களுக்கு வந்தனம்.

 

 

மாண்டுக்யோ உபநிடதம்.

 

1.ஓம், கடவுளர்களே, புனிதமானவற்றை

எமது  செவிகள்  கேட்பதாக,

வணங்குவற்குத் தகுதியானவர் தாங்கள்,

புனிதமானவற்றை  யாம் காண்போமாக,

எங்களுக்கு கடவுளால்

 பணிக்கப்பட்ட வாழ்வுகாலம்

 யாம் வாழ்வோமாக

,வலுவானகைகால்கள் கொண்ட

 உடலோடு உம்மை வாழ்த்துகிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

 

2.இங்கு அனைத்துமே பிரம்மம், உயர்ந்த சுயம் பிரம்மமே. இந்த ஆத்மாவுக்கு நான்கு பகுதிகள்

.

3. முதல் கால் -வைஸ்வ நரா, விழிப்பு நிலை, புறப்பொருள் பற்றிய  நினைவு, ஏழு கால்கள்  limbs, 19 வாய்கள், இதன்படி புற ப்பொருள்களை அனுபவிக்கிறான்.

 

ஏழு limbs

                       சொர்க்கம் –தலை

                       சூரிய சந்திரன் – கண்கள்

காற்று – மூச்சு

அக்னி –வாய்

ஆகாயம்- உடல்

நீர்- சிறு நீரகம்- உறுப்பு

பூமி- கால்

 

வாய்கள் 19

ஞானேந்திரியம் -5 கர்மேந்திரியம்-5 பிராணன் -5 அந்தகரணம் -4

(மெய் வாய் கண் மூக்கு செவி -5

வாய்  இருகைகள் பிறப்புறுப்பு குதம்- 5

பிராண அபான சமானா வ்யானா உதானா-5

மனசு புத்தி சித்தம் அகங்காரம்-4)

 

 

 

4. இரண்டாவது கால் (quarter)  என்பது தைஜசா கனவு நிலை. உள்ளுறுப்புக்களைப்பற்றிய நினைவிருக்கும். ஏழு கால்கள் பத்தொன்பது வாய்கள் உடையது அது. நுண் பொருட்களை  உணர வல்லது.

5. மூன்றாவது கால்- நிலை. சுஷுப்தி ஆழ்ந்த உறக்கம். அனைத்து அனுபவங்களும் ஒன்றாகி ஆனந்தத்தை அனுபவிக்கும். ஞான நிலைக்கு இட்டுச்செல்வது இது.

6. அனைத்திற்கும் தலைவன், அனைத்தும் அறிந்தோன், அக நிர்வாகி, காரண கர்த்தா,  அனைத்திற்கும்தொடக்கமும் முடிவும் அது.

7. நான்காவது காலான துரியம் அக புற உலகங்கள் என்னும் இரண்டும் பற்றி உணர்வில்லாதது என்று  ஞானிகள் கருதுகிறார்கள்:

 அறிவின் மொத்தத்தை  சிறிய உணர்வை  ஜடப்பொருள் பற்றிய உணர்வை  அது அறியாதது.

அதனைக்காண முடியாது,  அது தொடர்பற்றது,  புரிந்துகொள்ள முடியாதது, வரையறுக்க முடியாதது,  நினைக்க முடியாதது, வர்ணிக்கமுடியாதது, வரையறுக்கப்பட்ட உலக  கட்டுப்பாட்டிற்குள் வாராத தொடர்பில்லாத   சுயத்தின் உச்சபட்ச உணர்வு நிலை அது.

 

8. ஆத்மா  என்பது ஓம்காரம் அது ஓம். அதன் பகுதிகள்.

                         பிரிவுகள்  அதன் கால்கள் –quarters.

                        அதன் கால்கள் அதன் பிரிவுகள்.

ஓம் என்பதன்  3 பிரிவுகள் அ உ ம  A U M.  நான்காவது பிரிவு  கட்டுக்குள் -அளவுக்குள் வாராத ஒன்று.

 

9.   வைஸ்வநரா முதல் பிரிவு    விழிப்பு நிலை அனைத்திலும் உறைந்து  அனைத்திலும் முதன்மையாய் இருப்பது.

 

10. தைஜசா என்பது கனவு நிலை ஓம் என்பதில்     என்ற  இரண்டாம் எழுத்தால் அறியப்படுவது. உயர்ந்ததாய்  நடு நாயகமாயிருப்பது. இதை அறிந்தவன்  அனைவர்க்கும் இணையோன்  அனைத்தும்  அறிந்தவன். அவன் குடும்பத்தில் பிரம்மத்தை அறியாதவர்கள் ஜனிப்பதில்லை.

 

11. பிரக்ஞையின் ஆழ்ந்த உறக்கமே      ஓம் என்பதின் மூன்றாவது பாகம்.  மூன்றாவது அளவு அது. அனைத்தும் ஒன்றாவது இங்கு.  இதை அறிந்தவன் அனைத்தையும் அளப்பான்.  அனைத்தையும் அறிவான்.  அவன் சுயத்தால் இவை  இயலும்.

 

12.அளவுக்குள் வாரா ஒன்று  நான்காவது. ஆழ் நிலையானது. காரண இருப்பின் சார்பு நிலைகொண்டது, ஆனந்தமயமானது, இரு பிரிவற்றது, அதுவே ஓம்காரம். இதை அறிந்தவனின் ஆன்மா பேரான்மாவோடு ஒன்றிணைந்துவிடுகிறது.

-----------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

·