Monday, March 27, 2023

 


’மனிதன் வறியவனாய் வாழ்கிறான். ஆயின் நேர்மையானவனாய் இருக்க மட்டுமே ப�ோராடுகிறான். தான் வாழும் சமூகமோ அவனை விடாமல் துரத்துகிறது துன்ப வலைக்குள் தள்ளுகிறது. அவன் துயர் உறுவதுகண்டு கேலி பேசுகிறது. சமூகத்தின் அடித்தட்டில் வாழ்வோரும் பெண்டிரும் அனுபவிக்கும் துயர்கள் தொடர்கதையாகவே அரங்கேறுகின்றன. கஞ்சிகுடிப்பதற்கிலார்அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் எண்ணிக்கையோ குறைந்தபாடில்லை. படித்தவர்கள் பண்பாளர்களாய் வாழத்தான் பயிற்றுவிக்கப்படவில்லை.கற்றல் ப�ொருள் ஈட்டலுக்கு மட்டுமே, ப�ொருள் ஈட்டல் என்பது படாடோபமாய் வாழ்வதற்கு மட்டுமே என்கிற நியதியை குருதியில் ஏற்றிக்கொண்ட இளைஞர் சமுதாயம் கண்முன்னே உலா வருகிறது. ஒழுக்கம் சார்ந்த கல்வி பணிக்கலாசாரம் வாழ்க்கைமுறை அனைத்தும் எள்ளலுக்குறிய விஷயங்களாய் அனுபவமாகின்றன. இவைகட்கு இடை வாழும் எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் வலியும் வதையும் ரணமுமே சிறு கதைக்குக்கரு. அவை கொணரும் படைப்புகளே உங்களோடு.’ எஸ்ஸார்சி Size: Demy Price: Book no: Spine: ஞானவாபி எஸ்ஸார்சி ஞானவாபி எஸ்ஸார்சி சந்தியா பதிப்பகம் சென்னை - 83 ஞானவாபி © எஸ்ஸார்சி முதற்பதிப்பு: 2023 அளவு: டெமி = தாள்: 60gms = பக்கம்: 104 அச்சு அளவு: 11 புள்ளி = விலை: ரூ.120/- அச்சாக்கம்: அருணா எண்டர்பிரைஸஸ் சென்னை - 40 சந்தியா பதிப்பகம் புதிய எண்: 77, 53வது தெரு, 9வது அவென்யூ அசோக் நகர், சென்னை - 600 083. தொலைபேசி: 044-24896979 ISBN: Gnanavaapi © Essarci Printed at A S X Pvt. Ltd., Chennai - 40. Published by Sandhya Publications New No. 77, 53rd Street, 9th Avenue, Ashok Nagar, Chennai - 600 083. Ph: 044-24896979 Price Rs.120/- sandhyapublications@yahoo.com sandhyapathippagam@gmail.com www.sandhyapublications.com SAN-1057 முன்னுரை வணக்கம். ………………………இது என்னுடைய பத்தாவது சிறுகதைதொகுப்பு. சிறுகதையின் யுக்தி படைப்புத்தளத்தில் மிக நுணுக்கமானது. சிறுகதை சொல்லவேண்டிய செய்தி ஒன்றை வாசகர்களுக்கு நிச்சயம் சொல்லி நிற்பது. ஒரே வாசிப்பில் ஒரு சிறுகதையை வாசகனால் படித்து முடிக்க இயலும். மனித வாழ்க்கையில் அன்றாடம் காட்சியாகும் எந்த சாதாரண விஷயமும் சிறுகதைக்கு ஆதாரமாகிவிடும். படைப்பாளியின் பார்வை கதைக்கான மூலத்தை கண்டடையும் அத்தருணமே சிறுகதை உயிர்கொண்டு அவன் மனத்தில் உலா வரத் தொடங்கிகிவிடும். எழுத்துரு கொண்ட கதைகளாய் அவை படைக்கப்பட்ட பின்னரே அப்படைப்பாளி நிறைவடைகிறான். தரங்கூடிய சிறுகதைகள் இலக்கிய இதழ்களில் இடம்பிடித்து மனித சமூகத்தை வந்தடைகின்றன. கணிப்பொறி அறிவியல் மய்யமாகி இணையம் என்னும் நீட்சி எந்த ஒரு படைப்பையும் வாசகப்பரப்பிற்கு, அடுத்த கணமே இலகுவாய் எடுத்துச்சென்று சேர்க்கிறது. 6 ஞானவாபி F எனது சிறுகதைகளை வெளியிட்ட சங்கு திண்ணை, தமிழ்ப்பல்லவி, விருட்சம், ஆகிய இதழ்களுக்கு எனது நன்றிகள். இல்லப்பணிகளைக் குறைத்து என்னை இலக்கியத்தின்பால் தொடர்ந்து நாட்டம்கொள்ளத்துணை நிற்கும் என் துணைவியார் எஸ். பானுமதிக்கு என்றும் நன்றியுடையேன். இச்சிறுகதைத்தொகுப்பு வெளிவர பெருமனத்தோடு உதவிய எழுத்தாளர் பதிப்பாளர் அன்புக்கொண்டல் திரு. சந்தியாநடராஜன் அவர்கட்கு எனது அன்பும் பணிவும். வாசகர்கள் இத்தொகுப்பு பற்றிப்பேசிட மகிழ்வேன். அன்புடன் எஸ்ஸார்சி எஸ்.ராமச்சந்திரன் 23 ஏ இரண்டாவது தெரு, நேதாஜி நகர், பழைய பெருங்களத்தூர் சென்னை - 600063. பேசி: 9443200455 கதைப் பக்கம் முன்னுரை 5 யாரே பெரியோர் 9 வசதி 19 k டு லெட் 24 த�ோழமை 30 k த�ொற்றெனும் பாவி 37 சரித்தான் 44 k புதிர் 49 பிழை(ப்பு) 54 k பிராப்தம் 61 கவிதை வாங்கலையோ கவிதை 66 கண்ணகிக்கு சில வினா 74 என்னவோ நடக்குது 78 ‘எங்கேயும் சுற்றி’ 84 k ஞானவாபி 90 கேட்டிலும் துணிந்து நில் 96 குரு வந்தனம் 100 யாரே பெரியோர் ‘வருந்தாதே இலக்குமணா’ சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான். சீதையின் முகம் இயல்பாய் இல்லை. இப்படி சினம் கூட்டிக்கொண்ட அண்ணியாரின் குரலை அவன் கேட்டதேயில்லை. முதன் முதலாகக் கேட்கிறான். ‘சுய சிந்தனை என்ற ஒன்று உங்கள் தமயனுக்கு உண்டா? ‘நீங்கள் அதனை தெரிந்துகொண்டீர்களா?’ சீதை கோபமாய்க் கேட்டாள். ‘அண்ணியாரே என்ன பேசுகிறீர்கள் நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள். என் கண்களையே என்னால் நம்பமுடியாமல் தவிக்கிறேன் தாயே.’ ‘திருமணத்திற்குக் காத்திருக்கும் அரசகுமாரர்களே மிதிலைக்கு வாருங்கள் வந்து உங்கள் பராக்கிரமத்தால் என்னிடமுள்ள சிவதனுசுவில் நாண் ஏற்றுங்கள். தகுதியானவர் தாரமாக்கி கொண்டு ப�ோங்கள் என் பெண்ணை அறிவித்தது என் தந்தை... அங்கேயே ஆரம்பமானது என் பிரச்சனை.’ இலக்குவன் அதிர்ந்து ப�ோய்க் காணபப்பட்டான். 10 ஞானவாபி F ‘சிவதனுசு முறிக்கப்படுவதற்கு முன்பாகவே அவரைப் பார்த்து விட்டேன். என்னை நான் அக்கணமே இழந்தும் விட்டேனே. பரமனின் வில் முறிபடுவதற்கு முன்பாகவே நான் முறிந்துப�ோனது மெய்.’ இலக்குவன் கண்களை மூடித்திறந்தான். ‘என்னை மணம் செய்தார்  நினது தமயன். அவரை மணம் முடித்து யான் பெற்ற நலம் யாது?’ முன்னமேயே இளவல் இலக்குவன் நொந்து ப�ோயிருக்கிறான். தன் தமயனை அண்ணியார் முதன்முதலாக கணவன் என்று அழைப்பதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இதற்கு மேலும் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கத்தான் முடியுமா என்ன? அண்ணியாரின் பேச்சு வழக்கத்திற்கு மாறாகத் தடமிறங்கிப்போனது மெய். அவனே மீண்டும் ஒரு சமாதானம் சொல்லிக் கொண்டான் ‘அண்ணியார் சரியாகத்தான் பேசுகிறார்களோ.’ தூரத்தில் சிறிய சிறிய குடிசைகள் தெரிந்தன. அந்த குடிசைகளுக்குள்ளேதான் வால்மீகி முனிவரின் ஆஸ்மம் இருக்கிறது... ஆஸ்ரமரத்து மாணவர்கள் ஓரிருவர் தேரில் வந்திறங்கிய இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.   ‘இது தவறு’ என்றான் ஒருவன். ‘என்ன தவறு’ ‘இப்படி நாம் பார்த்ததில்லை’ ‘இருவருமே மகிழ்ச்சியாக இல்லை. அவர்களிருவரும் கணவன் மனைவியாய்த் தெரியவும் இல்லை. அந்தப்பெண்மணி அதிர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். அவன் தலை குனிந்து கேட்டுக்கொண்டே நிற்கிறான். அவர்கள் வந்திறங்கிய தேரும் வெள்ளைக் குதிரையும் தேரோட்டியும் தூரத்தில் அதோ பார்’ ‘பார்த்தேன். நமது குருபெருமானிடம் இந்தச் சேதி சொல்ல வேண்டும்.’ ‘வினாக்களுக்கெல்லாம் விடை தெரிந்தவர் அவர் மட்டும்தானே. அவரிடம் இதைத் தெரிவிப்போம் வா வா’ இருவரும் அங்கிருந்து கலைந்து ப�ோயினர். F எஸ்ஸார்சி 11 அந்த மாணவர்களைச் சுற்றி மான் குட்டிகள் ஒன்றையொன்று துரத்தி துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை தம் மாசிலா அன்பினை ஒன்றோடொன்று வெளிப்படுத்திய வண்ணம் இருந்தன. அருகில் ஓங்கி வளர்ந்திருந்த மாமரத்தின் கிளையில் புறாக்களின் கூட்டம். அவை வெள்ளை நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் இரண்டு விதமாய்ப் பிரிந்து தெரிந்தன. அவை ஏகத்துக்கு இரைச்சலிட்டுக் கொண்டும் இருந்தன. சில பறந்தன சில தத்தித் தத்தி நடந்தன. தமது கூச்சலை நிறுத்தாமல் அவை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆஸ்ரமத்தின் கோசாலைக் கொட்டகை இதோ தெரிகிறது. பசுக்கள் மேய்ந்து முடித்துப் படுத்துக் கிடந்தன. எல்லாமே கறவை மாடுகளாய் இருக்கலாம்... வெள்ளைக் குதிரைகள் இரண்டு பாதையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரதமொன்றின் தேர்க்காலொடு கட்டிக்கிடந்தன. அவைகளுக்கு முன்னால் அருகன் புற்கள் பச்சைப்பசேல் என்று முட்டு முட்டாய்க்கிடந்தன.   பாதை ஓரம் துளசி மாடங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவை வேறு வேறு வண்ண இலைகளைத் தாங்கியிருந்தன.துளசி மாடத்தின் மத்தியில் வெள்ளையும் காவியுமான கோடுகளால் ஓம் என்று எழுதியிருந்தது. சீதையைக் கூட்டி வந்த தேரின் பணியாளன் அவன் ஓட்டும் தேரின் குதிரையோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் குதிரை மொழி அறிந்தவனாக இருக்க வேண்டும். ‘என்னைக் காட்டில் விட்டு விட்டு வரச்சொன்னது யார்?’ சீதை வினவினாள். ‘எனது மேன்மை தங்கிய தமயனார்.’ ‘ஏன் என்று கேட்டீரோ’ ‘இல்லை அண்ணியாரே’ ‘அந்தப் பழக்கம்தான் இல்லையே’ இலக்குவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். ‘சீதை மீண்டும் வினவினாள்.’ காடு வந்தது நானும் அரச ரதத்தினின்று இறங்கி விட்டேன். உமது பணி முடிந்தது. இன்னும் என்ன? நீர் புறப்படலாம் அல்லவா’ 12 ஞானவாபி F ‘எனக்கிட்ட பணி இது மட்டுமே.’ இலக்குவன் உளம் சோர்ந்து ப�ோய்க் காணப்பட்டான். அவன் மிகவும் குழம்பிப் ப�ோயிருந்தான். ‘உமது தமயனாரிடம் எனக்குச் சில கேள்விகள். அவற்றிர்க்கு விடை காண வேண்டும் கேட்பீரா.’ ‘கேள்விகள் எனக்குத் தெரிய வேண்டும். விடை காண்பது பற்றிப் பிறகு பார்ப்போம்.’ ‘அன்னை கைகேயி உமது அண்ணனைக் காட்டிற்கு அனுப்ப மன்னன் தயரதனிடம் தான் பெற்ற ஒரு வரத்தைப் பயன்படுத்தினாள். தனது மகன் பரதனை பட்டத்து அரசனாக்க இன்னொரு வரத்தை பயன்படுத்தினாள். இந்தக் கைகேயி அன்னையின் நோக்கம் பற்றி அதன் நேர்மை பற்றி உமது அண்ணனுக்கு அய்யமே எழவில்லையா. தந்தை உன்னைக் காட்டுக்குப் ப�ோ என்று சொன்னதாய் அவள்தான் அவரிடம் சொன்னாள். அதனையே சிரமேற்கொண்டு முடிசூட்டு விழா நாளன்று அதே முகூர்த்தத்தில் காவி உடுத்தி அவர் வனம் செல்கிறேன் எனப் புறப்பட்டாரே எந்த வகையில் அது அரச தருமம்?” இலக்குவன் திகைத்துப் ப�ோனான். அண்ணியாரா இப்படிப் பேசுவது? இங்கு நடப்பது ஒன்றும் கனவில்லையே அதனை ஓர் முறை உறுதி செய்து கொண்டான். தேரோட்டி பைய நடந்து வந்து இலக்குவனிடம் நின்றான். ‘செய்தி என்ன?’ ‘எஜமானரே வணங்குகிறேன். தேரின் குதிரைகள் உடன் மழை வரலாம் என்பதை என்னிடம் தெரிவிக்கின்றன அதை உங்களுக்குச்சொன்னேன். தங்கள் உத்தரவு’. ‘புறப்பட வேண்டியதுதான்’ தேரோட்டி அருகில் நின்றிருந்த. அயோத்தி பட்டத்து அரசி சீதையை உற்று நோக்கினான். அவள் தாய்மை அடைந்து இருப்பதையும் அவன் கவனிக்காமல் இல்லை. அவன் கண்கள் குளமாகின. அவன் தன் கண்களைத்துடைத்துக் கொண்டான். வேகவேகமாக நடந்தான். தேர் அருகே ப�ோய்த் தயாராய் நின்று கொண்டான். F எஸ்ஸார்சி 13 சீதை மீண்டும் ஆரம்பித்தாள். ‘மாரீசன் ப�ொன் மானாய் உருவெடுத்து தண்டகாரண்ய ஆஸ்ரம வாயிலில் தாவிக்குதித்து ஓடிய ப�ோது நான் ஏமாந்து ப�ோனேன் உமது தமயனார்க்கு அது மாயமான் என்பது தெரிந்தும் இருக்கும். என்னைச் சரியாக வழி நடத்த வேண்டிய கடமை அவருக்கு உண்டு தானே. மாயமான் பின்னே தானும் ப�ோனது எப்படிச்சரி? ராவணன் ஒரு அந்தணனாய் உருமாறி வந்து ஆஸ்ரம வாயிலில் பிச்சைக்கு நின்றப�ோது தாங்கள் எனக்கு எச்சரிக்கையாய் ப�ோட்டு விட்டுப்போன எல்லைக் கோட்டினை நான் தாண்டினேன் யாசிக்கும் அந்தணர்க்கு பிச்சை இடச் சித்தமானேன். பிச்சையிட இயல்பாய் நீண்டன கரங்கள். அதனை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் விழித்தேன், தவித்தேன். கோட்டைத் தாண்டினேன். அங்கு யாசிக்கும் அந்தணனில்லை. ஏமாந்து ப�ோனேன். மெய்யாய் அவன் ஒரு அசுரன் இலங்கைக்குப் பேரரசன். பாவி ராவணன். அவன் என்னைக் கவர்ந்து ப�ோனான். இலக்குவன் கற்சிலைப�ோல் சீதை முன்னே நின்றுகொண்டிருந்தான். ‘வாலியை மறைந்து நின்று அம்பெய்தி நின் தமயன் கொன்று முடித்தார். அப்படித் தன்னைக் கொன்று முடிக்க எய்திய அம்பினில் ராமா என்று எழுதியிருக்க அதனைக் கண்ட வாலி மனம் நொறுங்கி வீழ்கிறான். ‘ராமனா ராமனா’ என்னைக் கொன்றது எனப் புலம்பித் தீர்க்கிறான். இலங்கைக்கோன் ராவணனை பிடித்துக் கொண்டு வா என்று கட்டளை இட்டால் நான் ப�ோய் நொடியில் அவனைக் கட்டிக் கொணர்ந்து உமது காலடியில் சமர்ப்பிக்க மாட்டேனா. குரங்கின் குலத்திற்கு மானிட ஒழுக்கம் ப�ொருத்தி என் மீது குற்றம் சுமத்துதல் நியாயமா. ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன் என்னைப்போல் அல்லாமல் என் அன்பு இளவல் சுக்ரீவன் நிறைவழ்க்கை வாழ வேண்டும் ஒரு ப�ோதும் தனது அண்ணனைக் கொன்றவனென்ற பழி மட்டும் அவனுக்கு வந்துவிடக் கூடாது.’ மரணிக்கும் வாலி வேண்டுவது இதுதானே. இப்படிப்பட்ட சத்யவான் வாலியை மறைந்து நின்று கொன்று முடித்தது எந்தவகை யுத்த தருமம்? வாலியை யுத்தத்தில் நேராக நின்று எதிர்த்த ஒருவனுக்கு அவனுடைய 14 ஞானவாபி F பாதி பலம் வாலிக்கே சென்று சேர்ந்து விடும் என்கிற விஷயம் அறிந்து அப்படிச் செய்தார் உன் தமயன் என்றால் அவருடைய மனசாட்சியின் கேள்விக்குப் பதில் சொல்வதெப்படி? வாலி குரங்கினத்துக்காரன். இத்தனைத்தரம் கூடி அவன் பேசும் ப�ோது உயர்ந்த  மானிடர்தான் எப்படிச் சிந்திக்க வேண்டிய கடமை உடையவர்கள்.’ இலக்குவன் ஆகாயத்தை முறைத்துப் பார்த்தான். ‘மழை வந்துவிடும் என்று பார்க்கிறீர்களா’ சீதை வினவினாள். ‘என்னால் நிற்க முடியவில்லை. தவிக்கிறேன்’ ‘ஏன்’ விடை சொல்லாமல் இலக்குவன் ஆகாயத்தையே பார்த்தான். ‘நான் ராவணனால் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டேன். அனுமன் என்னைக்கண்டு உம் தமயனுக்கு சேதி சொன்னார். என்னை  மீட்க பெரும் யுத்தம் வந்தது. ராவணன் அழிந்து ப�ோனான். உன் தமயன் என்னைத் தீயில் இறங்கி வரச்சொன்னார். நான் புனிதமானவள் என்று உலகிற்கு நிரூபிக்கக் கட்டளை தந்தார். நானும் அப்படியே தீயில் இறங்கி வெளிவந்தேன். உன் தமயனார் எப்படித் தன் புனிதம் காத்தார் என்பதை உலகிற்கு நிரூபிக்கத் தீயில் இறங்கி வரத் தேவையில்லயா? அதனைத்தான் யாரும் என்றும் ஆண்களிடம் கேட்கவும் மாட்டார்கள். அது சரி இலக்குவனுக்குக் கை கால்கள் நடுங்கத் தொடங்கின. ‘‘ஒரு சலவைத்தொழிலாளிப் பேசினானாம். வேற்று ஊருக்குச்சென்று ஓர் இரவு தங்கிவிட்டு வீடு திரும்பிய தன் மனைவியைப்பார்த்து “நான் ஒண்ணும் அயோத்தி ராசா இல்லை எத்தனை நாளு யாரு வூட்டுல தங்கியிருந்துட்டு ப�ொண்டாட்டி திரும்பி வந்தாலும் வச்சி குடும்பம் பண்றத்துக்கு.” ‘அதனை உம் தமயனார் வேதவாக்காக எடுத்துக்கொண்டு வயிற்றில் குழந்தையோடு இருக்கின்ற தன் மனையாளைக் கொண்டு ப�ோய்க் காட்டில் விட்டு விடக் கட்டளை உங்களுக்குத் தந்தார். தாங்கள் என்னைக் கொண்டு வந்து காட்டில் விட்டு விட்டு நெட்டை மரமாய் நிற்கின்றீர்.’ F எஸ்ஸார்சி 15 இலக்குவன் தரைமீது வீழ்ந்து வணங்கினான். கதிரவன் இன்னும் ஆகாயத்திலே இருக்க எப்படி எங்கும் ஒரே இருள் என அதிர்ந்து ப�ோனான். ‘வருகிறேன்’ சீதை சத்தமாய்ச் சொன்னாள். ஐந்து பூதங்களும் அதிர்ந்தன. சீதை நடக்கத் தொடங்கினாள். அடர்ந்த காட்டினுள் விரைவாகச் சென்று உடன் மறைந்தாள். இலக்குவன் தனித்து நிற்பதை நோக்கிய தேரோட்டி தன் தேரினை பைய ஓட்டி வந்து இலக்குவனிடம் நிறுத்தினான். இலக்குவன் ஏறித் தேரில் அமர்ந்து கொண்டான். குதிரை வேகம் எடுத்து ஓடத்தொடங்கியது. சீதை நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்தாள். நெஞ்சு கனத்தது. என்ன என்னனவோ வினாக்களை எல்லாம் மொத்தமாய்க் கொட்டி இலக்குவனை நோகடித்து விட்டோமா என எண்ணினாள். இனியொரு தடவை அந்த அயோத்தி இளவல் இலக்குவனைக் காண்போமா? என்று மட்டும் அவள் ஆழ்மனம் சொல்லியது. தன் கணவனைக்கூட அவள் இனி அந்தப் பழைய படி நிலையில் வைத்துக்குக் காணப் ப�ோவதில்லை. ஒரு உயர்ந்த அரசமரம் சமீபித்தது. மரத்தடியில் நீண்ட பலகையொன்று கிடந்தது. அதனில் அயர்வுக்குச் சற்று அமரலாம் என தீர்மானித்தாள். மழை வருவதற்கான அனைத்து நிமித்தங்களும் அவள் கண் முன்னே தெரிந்தன. இனி மழையில் நனைனந்தால்தான் என்ன நனையாமல் தன்னைக் காத்துக் கொண்டால்தான் என்ன. இதற்கு மேலும் நிகழ பாக்கியாய் என்னவிருக்கிறது? சீதை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். கண்களை மூடித் தனது தாய் பூமாதாவை எண்ணினாள். பூமி ஒரு முறை குலுங்கியதாய் சீதை உணர்ந்தாள். கண்கள் சிவந்து ப�ோயிருந்தன. வயிற்றில் தங்கி வளர்ந்து வரும் ஒரு உயிருக்காக இந்த உடலைப் பேணித்தான் ஆக வேண்டும். பெண் என்பதற்கு அதுவே தருமம். பிறகு வேறென்ன? அவளே விடையும் சொல்லிக்கொண்டாள். கட்டிய துணி ஒன்றோடு அந்த அரசமரத்தின் கீழ் கிடந்த பலகையில் அயோத்தியின் பேரரசி அமர்ந்து கொண்டாள். சீதையின் கண்கள் அவள் மிகக் களைத்துப் ப�ோயிருந்ததை அறிவித்துக் கொண்டிருந்தன. 16 ஞானவாபி F வால்மீகி முனிவர் என்றும் ப�ோல் மாலை வன உலா வருவதற்காய் ஆஸ்ரமத்தை விட்டுக் கிளம்பி வெளியே வந்தார். சீதையை தேரில் அழைத்து வந்து காட்டில் இறக்கிவிட்டு தேரோட்டியும் இலக்குவனும் கிளம்பிச் சென்றதை கண்ட ஆஸ்ரம மாணாக்கர் இருவர் இந்த சேதியை தமது குருவாகிய முனிவர் பெருமானுக்குச் சொல்லிக் கொண்டிருந்தனர். வால்மீகி முனியோ மனத்திரையில் இதற்கு எல்லாம் விடைதான் யாது என ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்தப் பெண் சக்கரவர்த்தி தயரதன் மூத்த குமாரன் ராமனின் மனைவி சீதை. அயோத்தி அரசன் ராமன் அவளைக் கானகத்தில் விட்டு விட்டு வா என இலக்குவனைப் பணித்ததும் அவருக்கு மனத்திரையில் தெரியலாயிற்று. ‘எங்கே அந்தப் பெண்?’ முனிவர் மாணவர்களை வினவினார். ‘அதோ பாருங்கள் அந்த அரச மர நிழலில் நீண்ட பலகையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கி இருக்கிறாள்.’ சரியாகவே சொன்னார்கள் இரு மாணாக்கர்களும். ‘வாருங்கள் அங்கு ப�ோவோம்’ வால்மீகி முனிவர் பைய நடந்தார். அரசமரம் நோக்கி அவர்கள் மூவரும் சென்றார்கள். அரசமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சீதை மெதுவாக எழுந்தாள். அந்த மூவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பவளாக அவள் காணப்பட்டாள். உடல் களைப்புற்றுக் காணப்பட்டது. கண்கள் இன்னும் சிவந்து இருந்தன. ‘இரு கரம் கூப்பி வணங்குகிறேன் மாமுனியே யான் சீதை அயோத்தி மாமன்னரின் மனைவி.’ ‘அறிவேன் பெண்ணே. அனைத்தும் அறிவேன்’ ‘தங்களைக் காண்பேன் என்று நான் கற்பனைக்கூட செய்யவில்லை. தெய்வச்செயல் எனத் தங்கள் வருகையைக் கருதுகிறேன்.’ ‘ நிகழ்பவை அனைத்துமே தெய்வத்தின் செயல்கள்தான்’ ‘அப்படியா மொழிகிறீர்கள்’ ‘ஆம் அதனில் என்ன அய்யம் உனக்கு’ F எஸ்ஸார்சி 17 ‘நான் இங்கு இந்த மரத்தடியில் அமர்ந்து தங்களைக்காண்பதுவும் கூடவா’ ‘ஆம். நிகழ்பவை அனைத்தும் அந்த ஒரு விதிப்படியே’ ‘பிரச்சனையை இக்கணம் பூதாகாரமாக எண்ணி எண்ணி வருந்தும் எனக்கு தங்களின் விடை அருமருந்தாக அமையுமெனவே நினைக்கிறேன்.’ ‘மிகச்சரி. நீ என்னுடன் வா எனது குடிலுக்குச் செல்வோம்.’ சீதை தனது கண்களை மூடித்திறந்தாள். கரம்பிடித்த கணவனே தன்னைக் கைவிட திக்கற்றவளாக எண்ணிய நேரத்தில் தெய்வமென இந்த மாமுனிவர் தனக்கு முன்னே தோன்றியதைச்சற்று மகிழ்வோடு நினைத்துப் பார்த்தாள். விதி என்கின்ற ஒன்று வாழ்க்கையில் புதிராக அவிழ்வதை ஆழ்ந்து நோக்கினாள். அயோத்தி நகர எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தது இலக்குவனின் ரதம். தேரின் குதிரைத் தன் இருப்பிடம் சமீபத்தில் என்பதுணர்ந்து சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது. இலக்குவன் தீவிர யோசனையில் மூழ்கிக்கிடந்தான்.தேரோட்டியின் கண் முன்னே ஒரு பெண்ணுருவம் தீடிரெனத் தோன்றியது. ஒரு நொடிப்போதில் ஓடு தேரின் சக்கரத்தில் தன் கழுத்தைக் கொடுத்தது. குருதி மேல் நோக்கிப் பீறிட்டது.தேரோட்டியின் முகத்தில் அது பட்டுத் தெறித்தது. தேரை சட்டென்று நிறுத்திய தேரோட்டி ‘ஐயோ’ என்று அலறி முடித்தான். ‘என்ன நடந்தது’ இலக்குவன் அதிர்ந்து ப�ோய்க் கேட்டான். ‘பெண்ணொருத்தி தேரின் சக்கரத்தில் தலைகொடுத்தாள். இதோ பாருங்கள் மனிதக் குருதியை’ ‘என்ன சொல்கிறாய் நீ’ ‘யாரது அய்யய்யோ கொடுமை நீயா நீயா மோசம் ப�ோனேனே நான் மோசம் ப�ோனேனே என் மனையாட்டி என்னப்பா பெருங்கொடுமை நான் ஓட்டும் தேரின் சக்கரத்திலா.’   உடன் அவளைத் தூக்கி நிறுத்தினான். தோளில் ப�ோட்டுக் கொண்டான். சிறிது நடந்து பின் அமர்ந்தான். அவன் தன் தொடைமீது அவளின் தலையைத் தூக்கி வைத்துக் கதறினான் அம்மாடி என்னம்மா இது. ஓவென்று கத்தினான் கதறினான். 18 ஞானவாபி F ‘நீங்கள் தானே தாய்மையைத் தொட்ட அரச மாதேவி சீதையை தேரில் அழைத்துப்போய் காட்டில் விட்டு விட்டு வந்தது’. அவள் ஈனஸ்வரத்தில் அவனிடம் பேசினாள். ‘உனக்கு யார் சொன்னார்கள்’ ‘யார் சொன்னால் என்ன’ ‘கற்பிணிப் பெண்ணை அழைத்துப்போய் காட்டில் தன்னந் தனியாகத் தவிக்க விட்டு விட்டு திரும்புகிறவர்கள் எல்லாம் ஆண் மக்களா?’ கேட்டாள். தேரோட்டி நிலை தடுமாறினான். பதில் சொல்லத் தெரிந்தும் அவனுக்கு நா சொல்ல வராமல் தவித்தான். இலக்குவன் தேரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்து நின்றான். தேரோட்டியின் மனைவி இலக்குவனைப் பார்க்கப் பிடிக்காமல் தனது கண்களை மூடிக்கொண்டாள். ‘மன்னியுங்கள் என்னை. என்னால் இனி தேரோட்ட இயலாது தாங்கள்தான் அரண்மனைத் தேரை ஓட்டிக் கொண்டு ப�ோக வேண்டும்’ அவன் ஓங்கிச் சொன்னான். சொல்லிவிட்டு தன் துணைவியை நோக்கினான். அவன் கண்கள் குளமாயின. தேரோட்டியின் மனைவி தனது கடைசி மூச்சினை வேக வேகமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். அவன் மடியிலேயே கண்கள் குத்திட்டுக் கிடந்தாள். கணப்பொழுதில் மரணித்தாள். இலக்குவன் தேரின் சாரதி இருக்கையில் அமர்ந்தான். தேர் அயோத்தி அரண்மனைக்குச் செல்லவில்லை. ‘நேர் எதிர் திசையில் செல்.’ அவன் குதிரைக்குக் கட்டளைத் தந்தான். குதிரை நான்கு கால்களையும் உயர்த்திக் கொண்டு வேகம் எடுத்தது. ஓங்கி ஓங்கிக் கனைத்தது. இலக்குவன் தனது தேரை எதிரே தெரியும் பச்சை மலைக்குச் செல்லும் ஒரு அகலப் பாதையில் ஓட்டிச் சென்றான். அதனைக் கண்ட தேரோட்டி லேசாய்ப் புன்னகைத்தான். தன் மனைவியின் உடல் மீது விழுந்து விழுந்து அழுதான். நெஞ்சில் வேக வேகமாய் அடித்துக் கொண்டான். அவனும் அவள் சென்ற வழியே சென்றான். 3 F எஸ்ஸார்சி 19 வசதி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதினான். அந்த சுபாஷ் நகர் ஒரு பெரு நகரத்தை ஒட்டிய புதிய குடியிருப்புப் பகுதி. அங்குதான் அவன் எலக்ட்ரிகல் ஷாப் நடத்திக் கொண்டிருந்தான் எண்ணிக்கையில் அவை பத்து இருக்கலாம். கீழ்த் தொட்டியிலிருந்து தண்ணீர் மேல் ஏற்றும் சிறு மோட்டார்கள் அவனிடம் விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கிப்போகாமல் கடையின் பெரிய அலமாரியின் மேலடுக்கில் அப்படியே சயனத்திலிருந்தன. ஒரு மோட்டார் விலை ஆறாயிரம். ஆக ஒரு அறுபது ஆயிரம் ரூபாய்... இருந்தாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவைகளின் அட்டைப்பெட்டியை அவிழ்க்காமல் வைத்துக் கொண்டிருப்பது ஆக எழுதினான். பெரு மதிப்பிற்குறிய மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்குப் பணிவான வின்ணப்பம். எங்கள் சுபாஷ் நகரில் வீடுகளுக்கு குடி தண்ணீர் கனெக்‌ஷன் கொடுத்து இருக்கிறார்கள். தெருவிலும் ப�ொதுக் குழாய்கள் இருக்கின்றன. ஒரு சில வீடுகளில் சிறிய மோட்டார் ப�ொறுத்தி 20 ஞானவாபி F திருட்டுத்தனமாக குடி தண்ணீர் எடுக்கிறார்கள். அதனால் தெருவின் ப�ொதுக்குழாயிலும் நியாயமாய் பணம் கட்டிக் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள குடியிருப்புக்களிலும் தண்ணீர் சரியாக வருவது இல்லை. இப்பகுதி மக்கள் மிகமிகக் கஷ்டப்படுகிறோம். ஆகவே அய்யா அவர்கள் உடனடியாக இந்தத் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்து சுபாஷ் நகரில் எல்லோருக்கும் குடி தண்ணீர் நேர்மையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.’ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அப்புகார் மனுவை அனுப்பி முடித்தான். ஒரு வாரம் சென்றது. நகராட்சிக்காரர்கள். மாவட்ட ஆட்சியரிடமிருந்து என்ன ஆணை பெற்றார்களோ அதுதான் தெரியவில்லை. ஒரு நாள் காலை அதுவும் அதிகாலை... சுபாஷ் நகருக்கு நகராட்சியின் பெரிய லாரி ஒன்றில் நான்கைந்து பேருக்கு தொற்றிக்கொண்டு வந்தார்கள். பெரிய பெரிய ஸ்பானர் ரோப் இத்யாதிகள் கைவசம் இருந்தன. நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கூடவே வந்திருந்தார். ‘அப்படியே இங்க பாருங்க இந்த நகரு குடி தண்ணீர் கனெக்‌ஷனுங்க சீரியல் நெம்பரு அது அதுங்க விலாசம் இருக்கு. நேரா ப�ோங்க சின்ன மோட்டார் ப�ோட்டு நம்ப சப்ளயை திருட்டுத்தனமா எடுக்குறாங்களான்னு பாருங்க அப்பிடி இருந்தா. உடனே அலெர்ட். அந்த மோட்டரை நாம பறிமுதல் செய்யுறம்’ என்றார் அந்த ஆய்வாளர். அவன் எலக்ட்ரிகல் கடையிலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று நோட்டம் விட்டான். ஒரு பத்து மோட்டர்களை இவர்கள் கழட்டிச் சென்றால் தேவலை. அவனிடம் விற்காமல் கிடப்பில் கிடக்கும் பத்து மோட்டர்களை மீண்டும் ப�ோணியாக்கி விடலாம். தீவிர யோசனையில் இருந்தான். ‘இப்ப ப�ோறமே இது தண்ணி வுடுற நேரம்தானா சாரு’ வயதில் மூத்த தொழிலாளி நகராட்சி ஆய்வாளரைக் கேட்டு வைத்தான். ‘பிறகென்ன இதுதான் நாம குடி தண்ணி சப்ள பண்ற கரெக்ட் டயம்’ அதான் நாமளும் வந்துருக்கம். நீங்க ப�ோங்க ப�ோயி அந்த திருட்டு மோட்டாருவுள கழட்டிக் கொண்டாங்க. அதான் இப்பக்கி நம்ப ஜோலி. நா சொல்றது என்னன்னு தெரிதா’ கட்டளை தந்தார் ஆய்வாளர். F எஸ்ஸார்சி 21 குடி தண்ணீர் எடுக்கப்படும் எல்லா வீடுகளுக்கும் அந்தக்குழு சென்று பார்த்தால் அதுவே சரியாக இருக்கும். அதுதானில்லை. ஏனில்லை. அதற்கும் காரணம் இலாமலா. ‘என் வீட்டுக்கு முந்தி வீட்ட வுட்டுப்புட்டு என் வீட்டுக்குள்ளாற நுழையுறிங்க. அங்கயும் சின்ன மோட்டாரு ஓடுதே’ என்றாள் ஒரு பாட்டி. பயனாளிங்க விலாசமும் டாப் கனெக்ஷன் நெம்பரும் எங்களுக்கு குடுத்து இருக்காங்க அது பிரகாரம் எங்க வேலய நாங்க செய்யுறம். நீங்க சொல்லுற அந்த வீட்டு விலாசம் இங்க எங்களண்ட இல்லயே’ என்றார் வந்திருந்த மூத்த தொழிலாளி. ‘அவுங்க கனெக்‌ஷனே திருட்டு கனெக்‌ஷன். நாங்க அப்பிடி இல்லே. தண்ணி வரமாட்டேங்குதுன்னு கொழாயில சின்ன மோட்டரு செறுகியிருக்கும். அதான், நாங்க தண்ணி வரியும் கட்றமே. அவுங்க அந்த அதயும் கட்றதில்லே. ஆனா அங்க திருட்டு மோட்டாரு ஓடுது இது மாதிரிக்கு இன்னும் பல பேரு வூட்டுல திருட்டு கனெக்‌ஷனுங்க இருக்கு சாரு. அங்கதான் நீங்க மொதல்ல ப�ோவுணும். மூத்த தொழிலாளியிடம் கேட்டாள் அந்தப் பாட்டி. ‘எங்க வேலய நாங்க செய்யுறம் அவ்வளவுதான்’ முடித்துக் கொண்டார் அந்த மூத்த நகராட்சி ஊழியர். நான்கைந்து தாய்மார்கள் நேரே நகராட்சி ஆய்வாளரிடம் வந்து கத்தினார்கள். ‘மோட்டர கழட்டி எடுத்துகினு ப�ோங்க. எங்க வூட்டுல நாலு கொடம் தண்ணி வேணுமே. சின்ன மோட்டர் ப�ோட்டாத்தான் அது வரும் மோட்டர் இல்லன்னு வச்சிக்க வெறும் காத்துதான் வரும் தண்ணி வராது’ சத்தம் ப�ோட்டுக் கொண்டிருந்தனர். ‘எதாயிருந்தாலும் எங்களுக்கும் ஒசக்க பெரிய ஆபிசருங்க இருக்காங்க. அவுங்களை பாருங்க. ஒங்க கொறய சொல்லுங்க’ என்றார் ஆய்வாளர். நகராட்சி லாரியில் பத்து பதினைந்து மோட்டார்களை அங்கங்கு பார்த்து கழட்டிக் கொண்டு வந்து அடுக்கினர். நகராட்சி வண்டி புறப்பட்டது. ‘அநியாயம், இது அக்கிரும்பு’ புலம்பினர் சுபாஷ் நகர் வாசிகள். நகராட்சி லாரியில் அவர்கள் எடுத்துச்சென்ற அனைத்து மோட்டார்களுமே அவன் அவர்களுக்கு தனது எலக்ட்ரிகல் 22 ஞானவாபி F கடையிலிருந்து விற்றவைதான். அந்த ஸ்டாக்கில்தானே இன்னும் பத்து மோட்டர்கள் கடையில் பாக்கியாகிக் கிடக்கின்றன. எலக்ட்ரிகல் கடையிலிருந்து அவன் அரங்கேறிய களேபரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். மாலை நேரம். ஒவ்வொருவராக மோட்டார் பறிகொடுத்த சுபாஷ் நகர்காரர்கள் கூடினார்கள். என்ன செய்வது என்று யோசித்தார்கள். தண்ணீர் வரியே கட்டாதவர் வீட்டில் மோட்டார் இருக்கும். நகராட்சித் தண்ணீர் வரும்... கனெக்‌ஷனே திருட்டு கனெக்‌ஷன் ‘அக்குரும்பு அக்குரும்பு...’ மாறி மாறி இதனையே பேசினார்கள். ‘நாளைக்கு தண்ணி வேணுமே என்ன செய்வே’ ஓங்கிக்குரல் கொடுத்தார் ஒரு பெரியவர். அவரே சொன்னார். ‘கழட்டி எடுத்துட்டுப் ப�ோன மோட்டாருங்களை நாம திரும்ப கொண்டாரணும். அது ஒண்ணும் இப்பக்கி ஆவாது. நாம அதே எலக்ட்ரிகல் ஷாப்புக்கு ப�ோவுறம். திரும்பவும் காசு ப�ோட்டு புதுசா மோட்டரு வாங்குறம். அதச்சொறுகி தண்ணி எடுப்பம். வேற என்னா வழி இருக்கு. நாளைக்கு நாம வேலைக்கு ப�ோவுணும். நம்ப புள்ளிங்க ஸ்கூலுக்கு ப�ோவுனும்ல யாரு தப்புக்கு யாரு தண்டம் அழுவுறது...’ முடித்துக் கொண்டார். எலக்ட்ரிகல் கடைக்கு சொல்லி வைத்தாற்போல் ஒருவர் பின் ஒருவராய் சென்றனர். அந்தச் சிறிய மோட்டாரை அதே எலக்ட்ரிகல் கடையில் விலைக்கு வாங்கினர். வீட்டுக்குழாய் இணைப்பில் அதனைத் திரும்பவும் ப�ொறுத்தினர். குடி தண்ணீர் பழைய படிக்கு வந்தது. ஆறு மாதம் கழிந்தது. நகராட்சிக்காரர்கள் தகவல் அனுப்பினார்கள். அதன்படி மோட்டார் பறி கொடுத்த ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய் நகராட்சிக்கு அபராதத்தொகை எனக் கட்டினார்கள். இனி இப்படிச் செய்ய மாட்டோம் என எழுதிக் கொடுத்தனர். ஒரு சிலர் அச்சத்தில் குழம்பினர். ‘இதுல ப�ோயி உங்களுக்கு என்னா கொழப்பம் இதுக எல்லாம் ஒரு ஆபிஸ் ப்ரொசிசரு அவ்வளவுதான்’. அவர்களுக்கு நகராட்சிப் பெரியவர்கள் சொன்னார்கள். நகராட்சிக்காரர்கள் சுபாஷ் நகரில் கழட்டிச் சென்ற அந்த அந்தத் திருட்டு மோட்டாரை F எஸ்ஸார்சி 23 அவரவர்களே கையெழுத்துப் ப�ோட்டு திரும்பவும் பெற்றுக் கொண்டனர். அவன் எலக்ட்ரிகல் கடையில்தான் இன்னும் இருந்தான். அவரவர்கள் நகராட்சியிலிருந்து பழைய மோட்டாரை வாங்கிக் கொண்டு தத்தம் வீட்டுக்குச் செல்வதை உற்றுப் பார்த்தான். ‘பத்திரமா கொண்டு ப�ோய் வீட்டுல வையுங்க இது ரிப்பேரானா அது. அது ரிப்பேரானா இதுன்னு வச்சிகிடலாம். அதுலயும் ஒரு வசதி இருக்குது அந்த எலக்ட்ரிகல் கடைக்காரன் சொல்லி நிறுத்தினான். 3 24 ஞானவாபி F டு லெட் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் அவனுக்குத் திருமணமாம். கல்யாண வயது பையன் ஊர் மதுரை அருகே உசிலம்பட்டி என்றான். மஞ்சள் சிவப்பு கல்யாணப் பத்திரிகையை நீட்டினான். அவனுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்றான். பிரம்மச்சாரிக்கு வீடு கொடுப்பதில்லை. நான் என்று இல்லை எங்கும்தான். யாரும் தான் கொடுப்பதில்லை. மிக மிக நல்ல பையன் என்று சர்டிபிகேட் வைத்து இருந்தாலும் வாடகைக்கு வீடு கிடைப்பது பெரிய பிரச்சனை... திருமணம் என்று ஒன்று ஆகி குடும்பம் நடத்துபவன் பிள்ளை குட்டி என்று பெற்று வைத்திருப்பவனை இந்தச்சமூகம் கொஞ்சம் மரியாதையோடுதான் பார்க்கிறது. கொரோனா ஆண்டு இது என்று பாழாய்ப்போன 2020ஐ அப்போது யாருக்கும் தெரியாது. ஜனவரி மாத தொடக்கம். என் வீட்டுக்குக் கீழ்தளத்தில் ஓர் அறை, ஹால் கிச்சன் கொண்ட வீடு காலியாக வைத்து இருந்தேன். அதனைத்தான் வாடகைக்கு விடவேண்டும். நான் என் வீட்டு முதல் தளத்திற்கு ஏன் ப�ோனேன். கீழ் தரைதளம் ஏன் காலி என்பது ஒரு சுவாரசியமான விஷயம். F எஸ்ஸார்சி 25 அதுவும் உங்களுக்குத்தெரிந்தால் நல்லதுதான். 2015ல் கழுத்துவரை நிரம்பிய ராட்சசன் செம்பரம்பாக்கம் ஏரியை கன்னா பின்ன என்று விவரம் தெரியாதவர்கள் திறக்க பெரு வெள்ளம் வந்தது. அது சென்னையின் மென்னியைப் பிடித்து நெருக்கியது. சென்னைவாசிகள் எல்லோருக்கும் கொஞ்சம் தலைக்கனத்தைக் குறைத்துமே வைத்தது. உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாமலா இருக்கும். என் வீட்டருகே ஒரு கால்வாய் சிறியதாய் ஓடியது. அதனை ஏதோ கன்னியோடை என மிக அலட்சியமாக இருந்து விட்டேன். மனை ஒன்று இங்கே வாங்கி என் சக்திக்கு ஒரு வீடு கட்டினேன். குடி வந்து ஏழு ஆண்டுகள் ஓடிற்று. பின்னர்தான் நூறு ஆண்டுகளுக்கு மாநகர் சென்னையில் பெய்யாத ஒரு பேய் மழை பெய்து பெருவெள்ளம் வந்தது. என் வீட்டருகே ஓடிய சிறு ஓடையை இவ்வெள்ளம் வந்த பிறகே ஓடையே இல்லையப்பா அதுவே அடையாறு என்று சொன்னார்கள். செம்பரம்பாக்கம் வீங்கினால் வீக்கம் இறக்க என் இல்லம் அருகே ஓடும் அடையாறுதான் சரணாகதி என்கிற ஞானமெல்லாம் கண்கெட்ட பிறகே எனக்குக் கிட்டியது. வெள்ளம் வந்த அந்த நாள் இரவு செம்பரம்பாக்கம் வெள்ள நீர் என் வீட்டுக்குள் ஆர்ப்பரித்து நுழைய நானும் என் குடும்பமும் தலை தெறிக்க ஓடித் தப்பித்தோம். எங்கள் நகரில் இருந்த வீடுகளின் முதல் தளம் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் தப்பியது. என் வீட்டில் இருந்த மொத்த செல்வமும் ஜல சமாதிதான். என் மேற்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணமும் என் மனைவி ப�ோட்டிருந்த கொஞ்சம் தங்க நகையும்தான் பாக்கி. நண்பர்கள் உடன் பிறந்த அண்ணன்மார் எனக்கு வெகுவாய் உதவினார்கள். நாங்கள் மீண்டு வந்தோம். அது ஒரு தனிக்கதை. மிகச் சோகமானது பிறகு தான் வங்கியில் கடன் என்று கொஞ்சம் வாங்கி முதல் தளத்தில் ஒரு சின்ன ஹால் கிச்சன் கட்டிக் கொண்டு மேலே குடியேறினோம். ஆகத்தான் தரை தளத்தை வாடகைக்கு விடுதல் சாத்தியமானது. ‘குடி வருபவர்களிடம் ஒன்று சொல்லி விடுவேன். 2015ல் வெள்ளம் வந்தது வீட்டினுள்ளேயும் நுழைந்தது. இது விஷயம் உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பேன்.’ 26 ஞானவாபி F ‘தெரியும் சாரு. சென்னையில பாதிக்கு மேல வெள்ளத் தண்ணில மொதந்தது.’ பதில் சொல்வார்கள். மனம் கொஞ்சம் கனம் குறைந்த மாதிரிக்குத் தோன்றும் அவ்வளவே. வாடகைக்கு வீடு வேண்டுமென்ற உசிலம்பட்டிக்காரனிடம் ரூபாய் பதினைந்தாயிரம். மூன்று மாத வாடகை அட்வான்சு வாங்கினேன். மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து வாடகைக்கு வருவதாகச் சொன்னான். ‘குடும்பம் குடும்பமா லட்சணமா இருக்கணும். பீடி சாராயம் இதுக கூடாது. அசைவம் ப�ொழங்கறது அளவோட இருக்கணும்’ கண்டிஷன்கள் சொன்னேன். சரி என்றான். ‘சாவி வாங்கிகிறீங்களா’ ‘நான் வாங்கிகிட்டு ப�ோயி என்ன செய்ய. உங்ககிட்ட இருக்கட்டும். பத்திரமா இருக்கும்ல’ அவன் பதில் சொன்னான் ‘கரண்டுபில் எப்பிடி. தண்ணி மோட்டரு எப்பிடி’ அவனே கேட்டான். கரண்டு கனைக்‌ஷன் தனி. நீங்க கட்டிகலாம். தண்ணிக்கு மாசம் நூறு கொடுக்கணும். கரண்டு பில்லு நானு கட்டிக்குவேன்’ பதில் சொன்னேன். ‘மோட்டரு ப�ோடுறது நிர்வாகங்க எல்லாம்’ ‘ரெண்டு சொச்சி. நீங்களும் கீழ இருந்து ப�ோடுலாம் நானும் மேல இருந்து ப�ோடுலாம்.’ அவன் சிரித்துக்கொண்டான். ‘வரேன் சாரு கல்யாணம் முடிஞ்சி நானு உசிலம்பாட்டியிலேந்து கெளம்பி வரணும். சாமான் செட்டோட லாரி புடிச்சி வருணும். ‘ப�ொண்ணு அவுங்க சனம் கூட வருணுமே’ ‘ஆமான் சார் மறந்துட்டேன். அவுக ஒரு காரு அமத்திகிட்டுதான் வருணும்’ பதில் சொன்னான். F எஸ்ஸார்சி 27 ‘உங்க விசிட்டிங்கார்டு குடுங்க’ ‘அது எல்லாம் ஏது சாரு. இப்பதான் நா இங்க வந்து ஆறு மாசம் ஆவுது. தாம்பரம் கிட்ட மெப்ஸ்லதான் ஒரு பிரிண்டிங் பிரஸ்ல வேலக்கி சேந்தேன். பேரு பாசுகரன். ப�ோன் நெம்பரு தாரென். எழுதிகீங்க’ என்றான். அவன் பேரையும் ப�ோன் நெம்பரையும் சரியாக எழுதிக் கொண்டேன். கீழ் வீட்டு சாவியையும் அந்த பேப்பரோடு வைத்து என் வீட்டு பீரோவில் பத்திரமாக வைத்து விட்டேன். உசிலம்பட்டிக்காரன் ஒரு டூ வீலரில் நண்பனோடு வந்தவன் விடை பெற்றுக் கொண்டான். 2020 பிப்ரவரி தொடங்கியது. சீனாவிலுள்ள வூஹான் நகரத்தில் சனியன் பிடிக்கத் தொடங்கியது. அது இல்லவே இல்லை என்றார்கள் ஆமாம் உண்மைதான் என்றார்கள். வவ்வால் உடலில் இருந்த ஒரு வைரஸ் மூலம் இந்த மர்ம காய்ச்சல் மனிதனுக்கு வந்தது என்றார்கள். உலக சுகாதார நிறுவனம் ஆபத்து ஆபத்து எனக் கத்தி கத்தி பார்த்தது. நம் புண்ணிய பாரத நாட்டுக்கு எல்லாம் அந்த வியாதி வரவே வராது என்றார்கள் கொரோனா என்கிற வைரஸ் எப்பிடி வரும் இங்க அடிக்குற கத்திரி வெயில்ல அப்பிடியே ப�ொறிஞ்சி ப�ோயிடும் என்றார்கள். நானும் கெடக்கட்டும் சனியன் விடு என்று இருந்தேன். ஒரு ஆராய்ச்சிக்காரர் வுஹான் நகரத்திலிருந்து கேரளா வந்தராம் அவருக்கு கொரோனா இருக்கிறதாம். அது கொடுமையான தொற்று வியாதியாம். மிக மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் எல்லோருக்கும் புதிய சேதி சொன்னார்கள். இத்தாலி ஸ்பையின் பிரான்சு லண்டன் என கொரோனா தீயாய் பரவ ஆரம்பித்து மனித உயிர்களை கொத்து கொத்தாய் கொல்லத் தொடங்கியது. பெரிய மனிதர்கள் பிரதமர்கள் மந்திரிகள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் நர்சுகள் இன்னும் இன்னும் என வரிசை வரிசையாய் மடியத் தொடங்கினார்கள். டில்லி மும்பாய் ஹைதராபாத் சென்னை என வைரஸ் பரவ ஆரம்பித்தது. மரணம் மரணம். எங்கும் மரண அவஸ்தை அழுகுரல். கொரோனா சாவு பிணத்தைக் கண்ணாலும் பார்க்கக்கூடாது. கடுமையான உத்தரவுகள். 28 ஞானவாபி F ப�ோக்குவரத்து ஸ்தம்பித்தது. நாடே திணறி விழித்தது. மொட்டை மாடியில் மெழுகுவத்தி ஏற்றினார்கள். ஒலி எழுப்பினார்கள். பாரதப் பிரதமர் அறிவுறுத்தினார் இப்படி. ரயில் இல்லை பஸ் இல்லை விமானமில்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மாடுகள் ஆடுகள் சாலைகளில் நிம்மதியாய் உலா வந்தன. முகக்கவசம் கிளவுஸ், சானிடைசர் சமூக இடைவெளி ஆறு அடிகள். என அங்கங்கு மும்முரம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கோடி பேருக்கு மாநகர வீதியில் நின்றார்கள். அழுது அழுது புலம்பினார்கள். அரசாங்கம் என்னஎன்னவோ செய்தது. மானுட வேதனை தான் தீரவே இல்லை. ஏழுமலையான் கோவில் தொடங்கி தெருவின் ஏழைப்பிள்ளையார் கோவில் வரை கதவடைத்துக் கிடந்தன. பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மூடிக்கிடந்தன. மருத்துவமனைகள் கொரோனாக்காரர்களால் நிரம்பி நிரம்பி விழி பிதுங்கின. கண்ணீர் சிந்தின. எத்தனையோ மருத்துவர்கள் மரித்துப் ப�ோனார்கள். எல்லா கடவுளர்களுக்கும் ஒரே குழப்பம். இன்னது செய்வது என்று தெரியாமல் கண்கள் மட்டும் மூடி மூடித் திறந்து அந்த கடவுளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டனர். அவ்வளவே. மயானங்கள் நாள் முழுவதும் மும்முரமாய் இயங்கின. திருமணங்கள் பல பல விழாக்கள் கோவில் தேரோட்டங்கள் தெப்பல்கள் இல்லாமல் காணமல் ப�ோயின. உறவுகள் நண்பர்கள் ப�ோதலும் வருதலும் அற்றுப்போயின. வணிகம் முற்றாய் சீர்குலைந்தது. சரி சரி நம் விஷயத்துக்கு வந்துவிடுவோம் அந்த உசிலம்பட்டி தம்பிக்குத் திருமணம் ஆகி இருக்கலாம். தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் தொழில் பகுதியில் ஒரு தொழிலும் இல்லை. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடி மூடிக்கிடந்தன. உசிலம்பட்டித் தம்பி கொடுத்துப்போன அந்த ப�ோன் நெம்பர் கொண்டு ப�ோன் செய்து செய்து எனக்கு விரல் வீங்கியது. ஒரு மாதம் இரண்டு மாதம் மூன்று மாதம் நான்கு ஐந்து ஆறு என மாதங்கள் ஓடின. அவ்வளவே... அவன் என்னிடம் கொடுத்து விட்டுப் ப�ோன முன் பணம் பதினைந்தாயிரமும் கீழ் வீட்டு F எஸ்ஸார்சி 29 சாவியும் அப்படியே அலமாரியின் மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. டிசம்பர் 31, 2020 வரை பார்த்தேன். அந்த உசிலம்பட்டித் தம்பிதான் பேசவே இல்லை. என்ன ஆனானோ எங்கேனும் மனைவியோடு சந்தோஷமாய் இருக்க என் நீண்ட பிரார்த்தனை. கொரோனா காலத்தில் ப�ோன் தொடர்பு மட்டும் சொந்தங்கள் நட்புகளோடு பேசிப் புலம்ப எப்போதும் கிடைத்தது. பேச வாய்த்தது. வீட்டுக்கு மின்சாரம் நிற்காமல் வந்தது விவசாயிகள் நெல் வயலில் வஞ்சனை இல்லாமல் தம் திருப்பணி தொடர்ந்தனர். அது திருப்பணி தான். எல்லோருக்கும் பசி என்பதுவே இல்லாமல் நாட்கள் சென்றன. தெய்வங்களாக மருத்துவர்கள் கண்ணுக்குத் தெரிந்தார்கள். ஆயிற்று டிசம்பர் முடிந்தது. கொரோனாவுக்குத்தான் விடை பெறலாமா என்ற ஒரு யோசனை வந்ததாகத் தெரியவில்லை. தடுப்பூசி யுத்தங்கள் அங்கங்கு மெல்லத் துவங்கித்தான் இருக்கின்றன. சரி நாமும் நம் விஷயத்துக்கு வருவோம் இனி என்ன செய்ய. உசிலம்பட்டித் தம்பியை எங்கே தேடுவது. 2021ஆம் ஆண்டும் ஆரம்பித்தது. கொரோனா ஓய்ந்ததா என்றால் அதுதான் இல்லை. கீழ் வீட்டுக்கு மீண்டும் ‘டு லெட் பலகை’ மாட்டியிருக்கிறேன். நீங்களும் தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் உடனே ஒரு ப�ோன் ப�ோட்டு சொல்லுங்களேன். 3 30 ஞானவாபி F த�ோழமை பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் வயது ஓடிப் ப�ோய்விடும் என்பார்கள். அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலிமனை இருந்தது. அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப் ப�ோட்டான். அந்த நகரத்தில் அரசாங்கம் அவனுக்குக் குடியிருப்பு வழங்கியிருந்தது. அதனில்தான் குடியிருந்தான். பணி ஓய்வுக்குப் பின்னர் சென்னை மாநகருக்கு வந்து விட்டான். பெற்ற பிள்ளைக்குச் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளையோடு அவனுக்கு ஓய்வுக் காலம் சென்று கொண்டிருந்தது. முதுகுன்ற நகரில் இனி ஆக வேண்டியது ஏதுமில்லை... அங்கே இருக்கும் அந்தக் காலிமனையை விற்று விடலாம் என்று முடிவு செய்தான். ஒரு நாள் காலை முதுகுன்றம் நகரத்துக்குப் புறப்பட்டு ப�ோனான். காலிமனை முதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தனலட்சுமி எண்ணெய் ஆலைக்குப் பின்புறமாக இருந்தது. முதுகுன்றம் பேருந்து நிலையம் இறங்கி அங்கிருந்து F எஸ்ஸார்சி 31 ஆட்டோ பிடித்து அந்தக் கணபதி நகருக்குப் ப�ோனான். கணபதி நகர் லேஅவுட்டில்தானே அந்தக் காலிமனை இருக்கிறது. எண்ணெய் ஆலைக்குப் பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோவில். அதன் காம்பவுண்ட்டை ஒட்டித்தான் கணபதி நகர் லேஅவுட். ஓரிருவர் வீடு கட்டிக்கொண்டு அங்கே குடியிருந்தார்கள். நேராகத் தன் காலிமனைக்கு நடந்தான். ஒரே முள்ளும் புதருமாக இருந்தது. எல்லைக்கற்கள் எங்கே என்று தேடினான். நான்கு கல்லுக்கு ரெண்டு கற்கள் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக அவன் கண்ணில்பட்டன. ‘சாரு வணக்கம்’ இப்படி வணக்கம் சொன்னான் ஒரு நடுத்தர வயதிருக்கும் ஒருவன். ‘என்ன சேதி’ ‘அய்யா இங்க வீடு கட்டிகிட்டு வர்ரதா இருக்கிங்களா’ ‘ஏன் கேக்குறீங்க’ ‘தெரிஞ்சிக்கலாம்னுதான். நானு ரியல் எஸ்டேட் புரோக்கரு’ யோசனை செய்தான். புரோக்கர் என்றாலே அவனுக்கு அச்சமாகக்கூட இருந்தது. இருந்தாலும் இந்தக் காலிமனையை இனி வைத்துக் கொண்டும் என்ன செய்வது. தன் மகனுக்கு இந்தப்பக்கம் வருவது என்பதில் எல்லாம் நாட்டம் இல்லை. ஆக இந்தக் காலிமனையை விற்றுவிட வேண்டியதுதான் அவன் மனம் முடிவாய்ச் சொல்லியது. புரோக்கருக்கு இவன் மனதில் எண்ணியது எப்படித் தெரிந்ததோ. அவன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். ‘தேவைக்கு என்ன கூப்புடுங்க. பேரு பங்காரு... நமக்கு இதுதான் தொழிலு. எதுலயும் ஒரு சுத்தம் இருக்கணும்.’ அவன் விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டான். ‘இங்க செண்ட் என்ன வெல ப�ோவுது’ ‘செண்ட் வந்து ரெண்டுக்குள்ள ப�ோவும். ஓரம் சாரம் சந்து குத்து மூல மொடக்குன்னு ஒண்ணரைதான் ப�ோவும். மொத மாறி இல்லங்க இந்த பிசினசு. அதுலயும் இந்த பாழாப்போன கொரானா வந்தப்பறம் சனங்ககிட்ட காசி ஏதுங்க. சனம் சின்ன படுதுல்ல.’ 32 ஞானவாபி F ‘சரி தேவப்பட்டா ப�ோன் பண்ணுறன்’ பதில் சொன்னான். ‘எல்ல கல்லு புடுங்கி கெடக்கு. ஒரே முள்ளு கள்ளு. ஆடு மாடு மேயுது. சாராயம் குடிக்கிறவன்க இங்கதான் இருட்டுனா வந்து ஒதுங்குறான். மோசம் மோசங்க. நீங்களும் எங்கயோ தூரத்துல இருக்கிங்க என்னா செய்விங்க. வயசும் ஆவுதுல்ல’ அவன் பேசுவது சரியாகத்தான் இருந்தது. ‘உங்க ப�ோன் நெம்பரு விலாசம்’ ‘நானு இங்க இந்த ஊர்ல இருந்தவந்தான். பூதாமூர் கோர்டர்ஸ்ல குடியிருந்தேன்... வேல முடிஞ்சி ப�ோச்சி ரிட்டேரானேன். சோத்துக்கு பென்சன் வருது. ஆண்டவன் என்னை கைவுடல. சென்னையில பையனோட இருக்குறன்’ அவன் பதில் சொன்னான். ‘ஊருக்குப் ப�ோயி ப�ோன் பண்ணுங்க. இது தானே உங்க பிளாட்டு. என்னா ஒரு நாலு செண்ட் வரும்.’ ‘ஆமாம் நாலு செண்ட்தான்’ ‘பாக்குலாம் ஒன்ண மொத ஞாபகம் வச்சிகிங்க. இந்த இடம் ஒண்ணும் சரியில்லாத இடம். வா பந்தல் ப�ோட்டுதான் இத விக்குணும். விஷயம் தெரிஞ்சவன் இந்த பக்கம் பிளாட் வாங்கி வூடு கட்டி குடி வரமாட்டான். குடிகாரக் கழுதிவ வரும். இல்லன்னா பலான பலான ஆளு வரும்’ சட்டமாய்ப் பேசினான் புரோக்கர். அவன் விடை பெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினான். பத்து நாட்கள் சென்றது. முதுகுன்றம் ரியல் எஸ்டே புரோக்கர் சொன்னது அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. புரோக்கர் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை தேடிக் கண்டு பிடித்தான். முதுகுன்றத்துக் காலிமனையை விற்று விடுவது என்று முடிவு செய்தான். அவனுக்குத்தான் ப�ோன் ப�ோட்டான். ‘பங்காரு, நான் கணபதி நகரு பிளாட்காரன் பேசுறன்’ ‘சொல்லுங்க சாரு ரெம்ப சந்தோசம்’ ‘இப்ப செண்ட் அங்க எப்பிடி ப�ோவுது’ F எஸ்ஸார்சி 33 ‘என்ன சாரு பத்து நாளு ஆவுல அதுக்குள்ள வெல ஏறிபுடுமா’ ‘இல்ல கேக்குறன்’ ‘உறுதியா செண்ட் ரெண்டுக்கு முடிக்கிலாம். ரெண்டுன்னா ரெண்டு லச்சம். உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லுறன். எனக்கு ரெண்டு பர்செண்ட் கமுஷன் தருணும். அதுவும் சொல்லிபுடுறன். அது எனக்கு பதினாறு ரூவா வரும்.’ ‘கமுஷன் எவ்வளவு’ ‘இந்தக் கமுஷன்னா முட்டும் சனங்களுக்கு காதுல வுழுவாது. ஆராயிருந்தாலும் இது இப்படிதான். எனக்கு ரூவா பதினாறு ஆயிரம். உங்களுக்கு மொத்தமா எட்டு லச்சம்.’ ‘ஆவுட்டும் சட்டுனு ஒரு பார்ட்டிய பாரு. எனக்கு சேதி வரட்டும். மனைக்கு அட்வான்சு தர்ரது அது இது எதுவும் வேணாம். நேரா கிரயத்துக்கு நான் வர்ரன் அண்ணைக்கு பணத்த மொத்தமா என் கணக்குல பாங்குல ப�ோட்டுடுணும். நானும் ரிஜிஸ்டர் ஆபிசுல கையெழுத்து ப�ோடுவேன். ‘சட்டமா பேசுறீங்க’ ‘இது ரூவா சமாச்சாரம்’ ‘நானு எல்லாம் ரெடி பண்ணிகிட்டு சேதி சொல்லுறன். இதுதான உங்க ப�ோன் நெம்பரு. சாரு, நானு பெறகு பேசுறன்’ புரோக்கர் ப�ோனை வைத்து விட்டான். அவனிடமிருந்து ப�ோன் வரும் வரும் என்று அவன் காத்திருந்தான். புரோக்கர் ப�ோன் செய்யவே இல்லை. வீதியிலிருக்கும் வழித்துணை விநாயகருக்கு வேண்டியும் வைத்துள்ளான். முதுகுன்றம் காலிமனை விற்றுவிட வேண்டுமென்றும் அதற்கு. அவர்தான் கண் திறக்க வேண்டும் என்று காத்திருந்தான். நாட்கள் ஓடின. புரோக்கரிடமிருந்து ஒரு ப�ோன் வந்தது. ‘நானு பங்காரு’ ‘சொல்லுங்க. ரொம்ப நாளா ப�ோன் வல்லியேன்னு இருந்தன்’ ‘நீங்க இன்னைக்கு பதினைஞ்சா நாளு முதுகுன்றம் வர்ரீங்க. மொத்த பணம் நீங்க சொன்ன மாதிரிக்கு பெரிய ரூவா எட்டும் பாங்குல வுழுந்திடும் பிளாட் சம்மந்தமா எல்லா ரெக்கார்டும் 34 ஞானவாபி F அப்ரூவல் சேத்து ஒரு செராக்ஸ் அனுப்புங்க. இன்னைக்கே இப்பவே அனுப்பி நாளைக்கு எனக்கு அதுவ என் கையுல கெடக்கிணும். ஒர்ஜினல் எல்லாம் ரீஸ்டர் அன்னைக்கு இக்கட வந்துபுடணும்’ புரோக்கர் பங்காரு சொன்னான். அவன் எல்லா ரிக்கார்டுகளுக்கும் ஒரு நகல் எடுத்து முதுகுன்றம் பங்காருக்கு புரொஃபஷனல் கொரியரில் அனுப்பி வைத்தான். அவன் ரிஜிஸ்டர் நாள் அன்று அதிகாலை கிளம்பினான். எல்லா ஒரிஜினல் ரிகார்டுகளுடன் வங்கிப் பாஸ் புத்தகத்தோடு முதுகுன்றம் ரிஜிஸ்டர் ஆபிஸ் முன்பாக வந்து நின்று கொண்டான். பங்காரு புரோக்கர் அங்கே தயாராகக் காத்திருந்தான். அவன் வங்கி பாஸ் புத்தகத்தை பங்காருவிடம் நீட்டினான். ‘இன்னும் அரை மணியில பணம் உங்க கணக்குல வுழுந்துபுடும்’ வங்கி விபரம் எல்லாம் தன் கைபேசியில் பங்காரு படமெடுத்துக் கொண்டான் ‘இங்கயே இருங்க ரிக்கார்டுவ பத்திரம்’ பங்காரு சொல்லிப் ப�ோனான். ரிஜிஸ்டர் ஆபிஸ் முன்பாக அவன் ஒரு கொடி மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு இருந்தான். கொடி மரத்தில் கொடி ஏதுமில்லை வெட்டையாக இருந்தது. ஒரு நடுத்தர வயது பெண் அவள் குழந்தை இருவரும் ஒரு ஆட்டோவில் அங்கே வந்து அங்கே இறங்கினர். அவனுக்கு அந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரிக்கு இருந்தது. ‘நீங்க கிரயம் வாங்க வந்து இருக்கிங்களா’ ‘ஆமாம்.’ ‘எந்த மனை கிரயம்’ அவன் தொடர்ந்தான். ‘கணபதி நகருல ஒரு நாலு செண்ட் கிரயம்’ ‘நாந்தாம்மா அது கிரயம் தர்ரது உங்க சாரு’ ‘அவரு வரல்லே. எங்கப்பா வருவாரு. பாங்குக்கு ப�ோயிருக்குறாரு பணம் ப�ோட்டுட்டு வருவாரு. அந்த பார்ட்டி நீங்கதானா.’ ‘உன்ன எங்கயோ பாத்த மாதிரிக்கு இருக்குது’ அவன் சொன்னான். F எஸ்ஸார்சி 35 ‘எங்கப்பா மோகன்ராசு. டெலிப�ோன்ல லைன்மெனா வேல பாத்தாரு. உங்களுக்கு தெரியுமா என்னா’ அதற்குள்ளாக வங்கியில் பணம் செலுத்திவிட்டு பங்காரு ரசீதோடு அங்கு வந்து கொண்டிருந்தான். கூடவே அந்த மோகன்ராசு வந்து கொண்டிருந்தார். ‘நீ மோகன் ராசுதானே’ ‘ஆமாம் சந்திரன்தானே நீங்க’ அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் பார்த்துக் கொண்டார்கள். முதுகுன்ற நகரத்து ப�ொதுவுடமை கிளையில் இருவரும் பல காலம் உறுப்பினராக இருந்தவர்கள். எத்தனையோ நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள். இருவரும் எத்தனையோ ப�ோராட்டங்களில் பங்கு பெற்றவர்கள். தண்டனைகள் பல பெற்றவர்கள். ‘சொல்லப் ப�ோனால் நாம் இருவரும் தோழர்கள்’ சொல்லிக் கொண்டார்கள். ‘நீந்தான் தோழர் விக்கிற நான் என் ப�ொண்ணுக்கு வாங்குறன்’ அவனிடம் மோகன்ராசு சொன்னான். ‘பேசினவரைக்கும் இருக்கட்டும் இது என்னா நேரம். உத்தி பிரியற நேரமா, ஒப்பு ஒறவு பேசுற நேரமா. உள்ள ஆபிசரு கூப்பிடறாரு நேரம் ஆவுது. நம்ப செலாட் வந்து ப�ோச்சி உள்ள ப�ோங்க. ப�ோயி ஆவுற காரியத்தை பாருங்க’ சத்தம் ப�ோட்டான் பங்காரு. அவன் ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று கையெழுத்து ப�ோட்டு முடித்தான். மோகன்ராசுவின் பெண்ணும் தன் பணி முடித்தாள். ரிக்கார்டுகள் கை மாறின. தயாராக வைத்திருந்த பதினாறு ஆயிரத்தை புரோக்கர் பங்காருவிடம் அவன் ஒப்படைத்தான். எல்லாம் முன்னரே முடித்து விட்ட மோகன்ராசு தன் மகளோடு விடை பெற்றுக் கொண்டான். அவன் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்தான். சென்னைப் பேருந்தைத் தேடினான். ஒன்றையும் காணோம். ‘சந்திரன் சந்திரன்’ மோகன்ராசுவின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். 36 ஞானவாபி F மோகன்ராசுதான். விஷயத்துக்கு வந்தான். ‘ நீ செண்ட்டு என்ன விலைக்கு கொடுத்த’ வேகமாய்க் கேட்டான். ‘நானு செண்ட் ரெண்டு லச்சம்னு. குடுத்தன்’ ‘எங்கிட்ட செண்ட் மூணுன்னு பங்காரு காசு வாங்கிகிட்டான். பத்திர செலவு ஒண்ணு ஆயிடுச்சி எழுத்துக்கூலி, பெறவு ரெஜிஸ்தர் ஆபிசுக்கு கொடுக்குற மாமுலு பத்து.’ ‘ஆக புரோக்கரு பங்காருக்கு வரவு நாலு செண்டுக்கும் நாலு லச்சம். என்கிட்ட ஒரு பதினாறு ஆயிரம் கமிசன். உங்கிட்டயும் கமிசன் வாங்கியிருப்பாந்தான்.’ ‘நானும் பதினாறாயிரம் கமிசன் கொடுத்தேன்.’ ‘ரூவா பத்தாயிரம் இந்த மன வாங்ககுள்ள அப்பத்திய செலவு... ஆயிடுச்சி முப்பது வருஷம். இன்னைக்கு அது எட்டு லச்சம். ஆனா இந்த புரோக்கரு பங்காருக்கு கை மொதலே இல்லாம லபக்குன்னு நாலரை லட்சம் இது எப்பிடி இருக்கு.’ ‘தோழர் இதுக எல்லாம் நமக்கு என்னைக்கும் வெளங்காது. வுட்டுடு...’ ‘இங்கன நா இன்னும் நம்ம கச்சிலத்தான் இருக்கேன்.’ ‘அங்க சென்னையில நானும்தான்’ அவன் பதில் சொன்னான். சென்னைக்குச் செல்லும் பேருந்து ஆரவாரமாக அங்கே வந்து நின்றது. தோழர்கள் பிரிந்து அவரவர்கள் வசிப்பிடம் நோக்கிச் செல்கிறார்கள். 3 F எஸ்ஸார்சி 37 த�ொற்றெனும் பாவி முதல் மாடியில் என் வீடு. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன். கதவைத் திறக்க வேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி நிற்கிறது. இரவு மணி எட்டிருக்கலாம். என் வீட்டிற்கு வரும் ஆம்புலன்சைப் பார்த்த வீதி ஜனங்கள் அச்சத்தில் அவரவர்கள் தங்கள் வீட்டுக் கதவினைத் தாழிட்டுக் கொண்டார்கள். எங்கும் ஒரே அமைதி. என் பையன் தெருவில் ஆம்புலன்சிற்கு அருகே நிற்கிறான். அவனுக்கு பெங்களூரில் ஒரு கம்பெனியில் உத்யோகம். சென்னையில் எந்த வேலையும் கிடைக்கவில்லை. சென்னைக்கு மாற்றிக்கொண்டு வருவானா என்றால் இல்லை. அவன் வேலை பார்க்கும் அந்தக் கம்பெனிக்கு இங்கு கிளைகள் உண்டு ஆனால் மாற்றல்தான் கிடையாது என்கிறார்கள். குலதெய்வம் ராயம்பரம் செல்லியம்மனை எல்லாம் வேண்டிப் பார்த்தேன். ஒன்றும் கதை ஆகவில்லை. என் மனைவிக்கு ரெண்டு மூன்று நாட்கள் ஜுரம். பெருங்களத்தூர் அருள் அன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் ப�ோனேன். உயிர்வளியின் அளவு பார்க்கும் கருவி கொண்டு சோதித்தார்கள். உயிர்வளி இருக்கும் நிலமை சரியில்லை என்றார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள். நுரையீரல் 38 ஞானவாபி F பகுதிக்குப் பாதிப்பு எனக்குத் தகவல் சொன்னார்கள். கொரனா சிவப்பு பிரிவுக்கு ஸ்டெச்சரில் ப�ோட்டு உருட்டிக்கொண்டு ப�ோனார்கள். கொரனா மஞ்சள் பிரிவு என்ற ஒன்றும் அந்த மருத்துவமனையில் இருந்தது. அங்கு பெருந்தொற்று சற்றே பாதிக்கப்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். என்னோடு என் பேத்தி இருக்கிறாள். அவளுக்கு வயது ஆறு. அவளின் பெற்றோர் கலிப�ோர்னியாவில் இருந்தார்கள். லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வசிப்பதற்கு ஒரு வாடகை வீடு பார்த்து பால் காய்ச்சிய பிறகு இந்தப் பேத்தியை அழைத்துப் ப�ோவதாய்ச் சொல்லிப் ப�ோனார்கள். நம் கணக்கில் எதுமே இல்லை... அதற்குள்ளாய் உலகமே தலைகீழாய் மாறிப் ப�ோயிற்று, எங்கெங்கும் பெருந்தொற்று. மனிதகுலம் நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு திக்குமுக்கு ஆடியது. அமெரிக்காவில் இந்தப் பெருந்தொற்றின் பாதிப்போ சொல்லி முடியாது. தெருவெங்கும் பிணங்கள் குவியக் குவியலாய். எந்த மருத்துவமனையிலும் மனிதர்கள் நுழையவே இடமில்லை. மருத்துவமனை வாயிலில் ஆம்புலன்சுகளின் முற்றுகை. அந்த வண்டி உள்ளே இருக்கும் நோயாளிகளில் மிகவும் வயதானவர்கள் மிகவும் நோயுற்றவர்கள் ‘விதி உனக்கு எப்படியோ ப�ோ ப�ோ’ என வீட்டுக்கு விரட்டப்பட்டார்கள். உலக விஞ்ஞானிகள் இத்தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க பிள்ளையார் சுழி ப�ோடத் தொடங்கினார்கள். அது எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. என் மனைவிக்கு சர்க்கரை உண்டு. ஸ்டீராய்ட் கொடுத்துக் கொடுத்து மருத்துவர்கள் ப�ோராடினார்கள். ஐசொலேஷன் வார்டில் பத்து நாட்கள். அந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மட்டும்தான் அவளிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். நானும் என் பேத்தியும் வீட்டில் தனித்து இருந்தோம். எங்களுக்கு நோயின் பாதிப்புத் தெரியாமல்தான் இருந்தது. வீதியில் உள்ளவர்கள் எங்களோடு யாருமே பேசுவதில்லை. ஒரு நாள் செவிலியர் எனக்குப் ப�ோன் செய்து ‘உங்கள் மனைவி உங்களையும் பேத்தியையும் பார்க்க வேண்டும் என்கிறாள். ஆக நீங்கள் இருவரும் கொரானா வார்டிலிருந்து தள்ளி தூரத்தில் வந்து நில்லுங்கள். கைகளை அசையுங்கள். நாங்கள் வீல் சேரில் உங்கள் மனைவியைக்கூட்டி வந்து உங்களுக்குச் சைகை காட்டுகிறோம்’ சிவப்பு வார்டு செவிலியர்கள்தான் F எஸ்ஸார்சி 39 சொன்னார்கள். நானும் என் பேத்தியும் அந்தச் சிவப்பு வார்டுக்குப்போய் அப்படியே செய்தோம். என் மனையியை வீல் சேரில் அழைத்து வந்தார்கள். கண்கள் மட்டுமே வெளித் தெரிந்தது. அவள் குரல் மட்டுமே அவளை அடையாளம் காட்டியது. பிற எல்லாம் வெள்ளைத்துணிதான் அங்கே. அவள் வீல்சேரில் ப�ொட்டலமாய்க் கிடந்தாள்.. ‘குழந்தை பத்திரம். அவுங்க அப்பா அம்மாகிட்ட பேத்திய ஒப்படைச்சிடுங்க’ அவ்வளவே மனைவி பேசினாள். வீல் சேர் நகர்ந்து கொண்டது. அவள் கைமட்டும் தூக்கி அசைத்தாள். தூரத்திலிருந்து என் பேத்திக்கு பாட்டியைக் காட்டினேன். ‘நம்ப பாட்டி குரல்தான் கேக்குது’ என்றாள் என் பேத்தி. பெங்களூரில் இருக்கும் என் இரண்டாவது மகன் வீட்டில் குழந்தைகள் இருவரில் பெரியவனுக்கு கொரனா. என் மகனுக்கு என் மருமகளுக்கு கொரனா. ஒரு மனிதனுக்கு எத்தனை கஷ்டம் வரவேண்டுமோ அத்தனையும் வந்து அவர்கள் குடும்பம் சின்னாபின்னமாகியது. என் மனைவிக்கும் என் சின்ன பையனுக்கும் ஒ பாசிடிவ் இரத்தம். சிகிச்சை யுக்தியில் அப்போது பிளாஸ்மா தெரபி பிரபலமாக இருந்தது. என் பெங்களூர் மகனுக்குக் கொரானா வந்து ப�ோனது. அவனுக்கும் ஒ பாசிடிவ் இரத்தம். அவனிடம் குருதி எடுத்து அதனில் பிளாஸ்மா பிரித்து எடுத்தார்கள். கொரனா பாதித்த என் மனைவிக்கு அதனை இரத்தத்தில் ஏற்றினார்கள். உயிர் வளியின் அளவு மட்டும் ஏறாமல் என் மனைவிக்கு மிகக்கஷ்டமாக இருந்தது. இரண்டு சிலிண்டர்கள் மாற்றி மாற்றி வைக்கப்பட்டது. சிலிண்டரை எடுத்தால் அவளுக்கு உயிர்வளி அளவு சர்ரெனக் கீழே ப�ோய்விடும். மூச்சுத்திணறும். இன்றுதான் என் மனைவியை அந்த அருளன்னை மருத்துவமனையிருந்து டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். என் மூத்த மருமகளின் தாயார் தகப்பனாருக்குத் திருநெல்வேலிக்குப் பக்கம் சேரன் மாதேவியில் ஜாகை. சென்னைக்கு வர ரயிலாவது பஸ்ஸாவது எதுவுமில்லை. தண்டவாளங்களில் தார்ச்சாலைகளில் மாடுகள் ஆடுகள் படுத்து உறங்கிய கொரனாக்காலம் ஆக ஒரு வாடகைக் காரைப் பிடித்துக்கொண்டு சென்னைக்கு வந்தார்கள். ஆயிரம் நடைமுறைகள் அனுசரித்துத்தான் மருத்துவத்திற்கு மட்டுமே என்று சொல்லி இப்படி ஒரு பயணம். அவர்கள் 40 ஞானவாபி F என் பேத்தியை கூட்டிக் கொண்டு இன்று மதியம்தான் சேரன் மாதேவிக்கு திரும்பிப்போனார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் இரண்டோடு ஆம்புலன்சில் வீட்டுக்கு வரும் அவளின் அன்புப் பாட்டியைப் பார்த்து விட்டு மனம் ஒடிந்து ப�ோனால் என்ன செய்வது ஆக என் பேத்தியை மதியமே அனுப்பி வைத்து விட்டேன். என் மனைவி இன்று மாலைதான் டிஸ்சார்ஜ் ஆனாள். என் பேத்தியும் நானும் பத்து நாட்கள் தனித்து இருந்தோம். பேத்தியின் தாயும் தந்தையும் அமெரிக்காவில். இதுநாள் வரை பேத்தியை பார்த்து பார்த்து வளர்த்த பாட்டியோ மருத்துவமனையில். நான் தினம் தினம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஓரமாய்க் கிடந்தேன். என் பேத்தி. அத்தனைக்குச் சமத்தாக என்னோடு இருந்தாள். அந்தக்கடவுள் அவளுக்கு நல்லறிவு கொடுத்து அவளைக்காத்தான். அப்படிச்சொல்வதுவே சரி. உறவினர்கள். யாரும்தான் யார் வீட்டுக்கும் வீட்டுக்கு வர மாட்டார்களே. ‘பாட்டிய நீ நல்லா கவனமா பாத்துகோ தாத்தா’ சொல்லி அழுதுகொண்டே அந்த சேரன்மாதேவி அம்மா தாத்தா பாட்டியோடு என் பேத்தி சேரன்மாதேவிக்குப் ப�ோனாள். நானோ தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தை அனுபவித்தேன். என் சம்மந்திமார் என் வீட்டின் உள்ளேயும் வரவில்லை. கொடூரமான பெருந்தொற்றுக் காலம். நானும் பேரக்குழந்தையும் அடிக்கடி மருத்துவமனை சென்று சென்று திரும்பியவர்கள். ஆக தெருவில் நின்று கொண்டே பேத்தியை கூட்டிக்கொண்டு காரில் ப�ோனார்கள். சொல்ல வேண்டிய மெயின் விஷயத்துக்கு வருவோம். நான்கு லட்சம் ரூபாய். அருள் அன்னை மருத்துவமனையில் மருத்துவச் செலவு ஆனது. இரண்டு சிலிண்டர்கள் துணையோடு சுவாசிக்கும். என் மனைவியை ஆம்புலன்சிலிருந்து இறக்கி ஸ்டெச்சரில் முதல் மாடிக்குத் தூக்கி வருகிறார்கள். இரவு எட்டு மணி. என் சின்னப்பையன் கொரனாவில் படுத்து எழுந்தவன். அம்மாவுக்குப் பிளாஸ்மா கொடுத்தவன். மருத்துவமனை உதவி ஆட்களோடு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வருகிறான். எல்லோருக்கும் நீல நிற மாஸ்க் இத்யாதிகள் சானிடைசர்கள் வகை எல்லாம்தான். ‘தம்பி வீட்டு சாவியை எங்கோ தொலைச்சிட்டேன்.’ F எஸ்ஸார்சி 41 என் பையன் பதில் சொல்லவில்லை. ‘அப்பா’ என அழைத்தான் ஒரு முறை. ‘சாவியைக் காணுமா. நல்லா பாத்தியா’ ‘பார்த்தேன்’ பதில் சொன்னேன். என் வீடு பூட்டிக் கிடந்தது. பெரிய சாவி கொண்டு மட்டுமே கதவு திறக்க முடியும். தொட்டிப்பூட்டு என்று சொல்வார்களே அந்த இனம்தான் அது. இரண்டு சிலிண்டர்களோடு என் மனைவியை வீட்டு வாசலில் கிடந்த நாற்காலியில் கிடத்தி விட்டு ஆம்புலன்சுக்காரர்கள் நகர்ந்து கொண்டார்கள். ஆம்புலன்சில் சுழலும் சிவப்பு ஓளி. அதனைக் கக்கிக் கொண்டே அது நகர்ந்து ப�ோனது. சிலிண்டரோடு என் மனைவி சுவாசித்துக் கொண்டிருக்க தெருவில் எனக்கு உதவத்தான் யாருமில்லை. எல்லா வீட்டுக்கதவும் சாத்தித்தான் கிடந்தது எப்படியோ ஒருவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவர் திறந்தார். வீட்டு ‘சாவி தொலைத்து விட்டேன் கொஞ்சம் உதவி செய்யுங்கள்’ என்று கெஞ்சினேன். அவர் காலை மட்டும்தான் நான் பிடிக்கவில்லை. நான் பிடிக்கவும் கூடாதுதானே அவர் என் முகத்தைப் பார்க்காமல் ஆகாயம் பார்த்து ஏதோ பேசினார். என் பையன் சாவிக்காரன் யாரையேனும் பார்த்து அழைத்து வருகிறேன் என்று கடைத்தெருவுக்குப் ப�ோய் விட்டான். கதவைத் திறந்து கொண்டு வந்த அவருக்கு என் மனைவி ஆம்புலன்சில் திரும்பியது எல்லாம் தெரியும். அவர் முகக்கவசம் அணிந்து கொண்டார். என் வீட்டுக்கு வந்து, ‘இது சாவிக்காரன் வந்தா தான் முடியும் நா ஒரு ப�ோன் நெம்பர் தர்ரேன். நீங்க பேசுங்க ஆனா மணி எட்டரை ஆயிடுச்சி ராத்திரி வேற’ என்று சொல்லி அவர் தன் வீட்டுக்கு சட்டெனப் ப�ோய் விட்டார். அவர் கொடுத்து விட்டு ப�ோன மொபைல் எண்ணுக்கு ப�ோன் ப�ோட்டேன். கிராண்ட் ஃபுனெரல் சர்வீசஸ் என்று சொல்லிக் கொண்டு மொபைலில் விளம்பர ஒலிப்பான் ஓடியது. என் மனம் கிடந்து பட் பட் என அடித்துக் கொண்டது. இது என்ன விபரீதம் என்று நினைத்தேன். ‘சார் சொல்லுங்க’ என்றான் எதிர் முனையிலிருந்து. 42 ஞானவாபி F ‘என் வீட்டுல கதவுக்கு சாவி ப�ோடணும். சாவி தொலஞ்சிப் ப�ோச்சி. ரொம்ப அவசரம்’ என்றேன். ‘மாத்து சாவி ப�ோடுறதும் எனக்கு வேலதான். ஆனா இப்ப ராத்திரியா இருக்கு. காலையில வரேன்.’ ‘என்ன சார் ரொம்ப அவசரம் காயிலா கெடக்குற ப�ொண்டாட்டிய தெருவுல வச்சிகிட்டு நிக்குறன்.’ ‘என்ன காயிலா அத மொத சொல்லுங்க’’ ‘டிசண்ட்ரி ப�ோனது’ ப�ொய்தான் சொன்னேன். ‘ அப்ப சரி நானு வர்ரேன் ஆனா ஆயிரம் ரூபாய் ஆகும்’ ‘தர்ரேன் சார்’ ‘என் வீட்டு விலாசம் வாங்கிக் கொண்டார். இன்னும் அரை மணியில் அங்கு இருப்பேன். வீட்டுக்கு வந்துபுடுவேன் என்றார். என் பையன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். ‘ஒரு பாயை பார்த்து பேசியிருக்கேன். அவுரு சாவிக ஏராளம் வச்சீருக்காரு இப்ப வருவாரு. நம்ப வீட்டு அட்ரஸ் கொடுத்து இருக்கேன்’ எனக்குச்சொன்னான். சற்றைக்கு எல்லாம் ஒரு டூவீலர் வீட்டு வாசலில் நின்றது. ‘தோ வந்துட்டாரு பாயி’ என் பையன் கத்தினான் ‘இங்க நீங்க தானா. ஒரு பெரியவரு பேசுனாரு விலாசம் ஒண்ணாதான் இருந்திச்சு நான் ஒண்ணும் பேசிகில ப�ோயி பாத்துகுவம்னுட்டு வந்தேன்.’ ‘அது எங்க அப்பா’ ‘இங்க பக்கத்துல ஒருத்தரு நெம்பர் கொடுத்தாரு அதான் ப�ோன் பண்ணினேன். அவரும் இவரும் ஒண்ணுதானா’ ‘ஆமாம்’ என்றான். ‘இந்த வீட்டுக்கு தெரு கேட் எங்க இருக்குது. மொதல்ல அந்த கேட்டுப்பூட்டை யாரு தொறந்தா’ பூட்டு ரிப்பேர் பாய் கேட்டார். ‘நாந்தான் திறந்தேன்’ ‘அதுக்கு சாவி’ F எஸ்ஸார்சி 43 யாரோ என்னை ப�ொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது நான் கீழே ஓடினேன். கிரில் கேட்டைப் ப�ோய்ப் பார்த்தேன் முதலில் கேட்டைத் திறந்த நான் வீட்டுப் பெரிய சாவியை அந்தக் கேட்டுப் பூட்டோடு வைத்து விட்டு நிலைக் கதவிடம் நின்று கொண்டு சாவியை தொலைத்து விட்டதாக எண்ணி விட்டேன். நொந்து நொந்து ப�ோனேன். ஆத்திரத்தில் அவசரத்தில் புலம்பியிருக்கிறேன். இத்தனை அமர்க்களம் இங்கு அரங்கேறி முடிந்திருக்கிறது... வீட்டுச்சாவி என்கையில்... இப்போது வீட்டுக்கதவும் திறந்தாயிற்று. என் மனவியை பதனமாய் உள்ளே அழைத்துப் ப�ோய்க்கட்டிலில் படுக்க வைத்து உயிர் வளி சிலிண்டர்களை அருகே அருகே வைத்தேன். இங்கு நடந்தவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருந்த மனைவியின் கண்களிருந்து கண்ணீர் தாரையாய் வந்து கொண்டிருந்தது. பையன் ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து பாயிடம் கொடுத்து ‘இத வச்சுகுகுங்க எப்படியோ சாவி கிடைத்துவிட்டது அது ப�ோதும்’, என்றான். “நானு இங்க எந்த வேலயும் செய்யுல. எனக்கு காசு எதுவும் வேணாம். எனக்கு மனசாட்சி இருக்கு. அதுக்கு மட்டும் மாத்து சாவி இல்ல’’ சொல்லிய பாய் தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார். 3 44 ஞானவாபி F சரித்தான் ‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் ப�ோட்றிக்கிங்க. பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே.’ என்னிடம்தான். ஒரு பெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில் குடியிருக்கிறேன். கீழ் தரைதள வீட்டை வாடகைக்கு விடவேண்டும். ஆக டு லெட் ப�ோர்டு ப�ோட்டு இருக்கிறேன். ‘ஆமாம். உங்களுக்கு வாடகைக்கு வீடு வேணுமா’ ‘ஆமாம் எனக்குத்தான் சார்’ அந்தப்பெண் பதில் சொன்னாள். ‘நாங்க வீடு வாடகைக்கு விட புரோக்கர்ங்கள அனுமதிக்கறது இல்ல’ நான் கண்டிப்பாய்ச் சொன்னேன். எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கும் ப�ோது எல்லாமே எனக்குத் தெரிந்த மாதிரிதான் ஆரம்பிப்பேன். ‘வாடகை எவ்வளவு அட்வான்ஸ் எவ்வளவுன்னு தெரியணுமே சொல்லுங்க’ ‘வாடகை அஞ்சி அட்வான்ஸ் பதினைந்து. தேதி அஞ்சிக்குள்ள வாடகை வந்துடணும் நீங்க குடும்பமாதான வருவீங்க.’ ‘ஆமாம் சார். அதுல என்ன’ F எஸ்ஸார்சி 45 ‘இல்ல நாங்க பேச்சலருக்கு விடறது இல்ல’ யாரும் பிரம்மச்சாரி என்கிற வார்த்தயை மட்டும் பிரயோகிப்பதில்லை. நானும் தான். ‘சார் நாங்க குடும்பமாதான் வருகிறோம். நானு எங்க சாரு அப்புறம் எங்களுக்கு பசங்க ரெண்டு பேரு.’ ‘அப்ப ரொம்ப சரி’ சின்ன குடும்பம். சாருன்னா அது ‘எங்க வீட்டுக்காரருதான் சாரு.’ “சரித்தான். வீட்டைப்பாக்க எப்ப வர்ரீங்க. ஆளுங்க கேட்டுகிட்டே இருக்காங்க. யாரு அட்வான்ஸ் மொதல்ல தர்ராங்களோ அவுங்களுக்கு நான் விட்டுடுவேன் பெற்வு வருத்தப்படாதிங்க” கறாராகத்தான் பேசினேன். ‘சார் நானே தோ ஏ டி எம் ப�ோயி ரூவா எடுத்துட்டு வந்து அடவான்ஸ் கொடுத்துடறேன்.’ ‘வீடு உங்களுக்கு புடிக்க வேண்டாமா’ ‘சாரு நான் உங்க வீட்டை பாத்து இருக்கேன்’ அதக்காலி பண்ணிகிட்டு சொந்த வீட்டுக்குப் ப�ோன அந்த அய்யா என் கூட ஸ்கூல்ல டீச்சரா வேல பாக்குறவரு. அந்த வீட்டுக்கு நான் மொதல்லயே வந்து இருக்கன் ‘இந்தி டீச்சர் கமலான்னா அவுருக்குத் தெரியும்.’ அந்தப்பெண் பதில் சொன்னாள். டீச்சர் உத்யோகம் பரவாயில்லை வேறு யாராவது வருவதற்கு பதில் டீச்சர் என்றால் பரவாயில்லைதான். எனக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது. அந்தப்பெண் அட்வான்ஸ் பதினைந்தாயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். பழைய நோட்டும் புதிய நோட்டுமாக அட்வான்ஸ் தொகை இருந்தது. கீழ் வீட்டு சாவியை அவள் வசம் ஒப்படைத்தேன். ‘தண்ணி மோட்டாருக்கு தனியா ரூவா எர நூறு மாசம் ஒண்ணுக்கு வாடகையோட எனக்கு வந்துடணும்’ ஜம்பமாகச் சொன்னேன். அவளும் தலையை ஆட்டினாள். ‘கரண்டு அட்டைய புடிங்க இது வரைக்கும் வந்த பில்லு கட்டியாச்சி. இனி மேலுக்கு நீங்க கட்டிகிறிங்க. மீட்டர் ரீடிங்கை ஒரு எட்டு பாத்துகுங்க. தண்ணி மோட்டரு என் வீட்டுக்கு 46 ஞானவாபி F வர்ர கரண்டுல ஓடுது. அதான் தண்ணி கரண்டுக்குன்னு காசு எர நூறு ரூவா தனியா கேக்குறன்.’ ‘எல்லாம் ரைட்டாதான் இருக்கு’ அவர் பதில் சொன்னாள். ஒரு டீச்சருக்கு ரைட் ராங்க்தான் நிறையவே ப�ோணியாகிறது. ‘சாருக்கு எங்க வேலன்னு சொல்லுலயே’ ‘அவுரும் என்னோட ஸ்கூலுக்குத்தான் வர்ராரு’ அவள் பதில்தான் சொன்னாள். பதில் பூடகமாக இருந்தது. ஒரு வாரம் சென்றது. மாதத்தின் முதல் நாள். நல்ல நாளாகவும் இருந்தது. குடி வருவதாகச் சொல்லிச்சென்ற அந்த இந்தி டீச்சர் வந்தும் விட்டார். வீட்டு வாசலில் டீ கேன் கட்டிய பழைய சைக்கிள் நின்றது. இந்தி டீச்சரின் கணவர். டீயை எவர்சில்வர் கானில் எடுத்துக் கொண்டு சைக்கிளில் சுற்றிச் சுற்றி வியாபாரம் செய்பவர். ஸ்கூலுக்கும் அவர்தான் டீ சப்ளை. இப்படியாக டீ கொடுக்கும் ப�ோதுதான் இந்தி டீச்சருக்கும் இவருக்கும் சினேகம் தொடங்கி அது கல்யாணம் வரைக்கும் ப�ோனது ப�ோல... பிறகு குடும்பம் அது இது என்றாகி விட்டதாக அந்த டீ மாஸ்டர் என்னிடம் சுய புராணம் சொன்னார். இந்தி டீச்சர் அந்தப்பக்கம் வரவில்லைதான். ரெண்டு பசங்க எனக்கு என்று கமலா டீச்சர் சொன்னது ப�ொய்யில்லை. அந்த பசங்க இருவருக்கும் வயது முப்பதை தொட்டுக்கொண்டும் இருக்கலாம். ஒருவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள். ஆனால் மனைவி விபத்தொன்றில் இறந்து ப�ோனாளாம். அந்த தாயில்லா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு பெரிய பையன் வீட்டோடு இருக்கிறானாம். அடுத்தவனோ இப்போதுதான் திருமணம் முடித்து இருக்கிறான். அந்த புதுப்பெண்ணும் வளைகாப்புக்குத் தயாராகி நின்று கொண்டிருந்தாள். இந்தி டீச்சர் ஸ்கூலுக்குப் புறப்படும்போதே அவர் கணவரின் டீ கேன் ரெடியாகி விடுகிறது. அவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே நடக்க டீச்சரும் உடன் சென்று கொண்டிருந்தாள். நான் யோசித்துப் பார்த்தேன். இந்தி டீச்சர், டீ வியாபாரி ரெண்டு பேர். பையன்கள் ரெண்டு. அவர்களுக்கு சின்ன சின்ன கம்பெனியில் வேலை. பெரிய பையனுக்கு மனைவி F எஸ்ஸார்சி 47 இல்லை. ஆனால் ரெண்டு குழந்தைகள். குழந்தைகளை கவனிக்க வேண்டுமே. ஆகத்தான் பெரிய பையன் வேலைக்குச் செல்வதில்லை. ரெண்டு ரெண்டு ரெண்டு ஆக ஆறு பேர் இவர்களோடு பிரசவத்திற்கு இருக்கும் சின்ன மருமகள். மொத்தம் ஏழு பேர். இந்தி டீச்சரின் தாய் மட்டும் இருக்கிறாளாம். அந்தத் தாயுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இந்த மாதம் ஒரு பெண் வீடு அடுத்த மாதம் வேறு ஒரு பெண் வீடு என கண்டிஷன் ப�ோட்டு மாறி மாறி அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்களாம். ஆக ஒரு நாள் அந்தத்தாயும் கமலா டீச்சர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ‘இங்கணு ஒரு மாசம்னா. அங்கணு ஒரு மாசம் என்னங்க நான் சொல்லுறது நாம்ப செய்யுற எதுலயும் ஒரு நியாயம் இருக்கோணும்ல’ என்னிடம் அந்த டீச்சரின் தாய் கொங்கு நாட்டு பாஷையில் சொல்லிக் கொண்டாள். இப்போது கீழ் வீட்டில் எட்டு நபர்கள் வாசம் செய்கிறார்கள். வாயிலில் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு இந்தி டீச்சர் நின்று கொண்டிருந்தாள். ‘என்ன விஷயம்’ கேட்டேன். ‘ஒண்ணும் இல்லேங்க. சின்ன மருமகளோட அம்மா வர்ரேன்னாங்க. காணுல அதுக்கும் பெரசவத்துக்கு நாளு கிட்டத்துல வருதுல்ல அவுங்க வந்துட்டா நமக்கு கொஞ்சம் ஒத்தாசை.’ ‘தல பிரசவம் தாய் வீட்டுலதானே செய்வாங்க’ நான் கேட்டுப் பார்த்தேன். ‘அது ஒத்த ஆளு. ஆம்பள இல்லாத எடம். அந்த அம்மாவுக்குமே ரெண்டும் ப�ொம்பள புள்ளைங்க. அப்புறம் யாரு எவுரு பெரசவம் பாப்பாங்க நீங்களே சொல்லுங்க’ வக்கீல் பேசுவது மாதிரிக்கு இந்தி டீச்சர் பேசினாள். அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. நான் வாயையே திறக்கவில்லை. ‘இந்தி டீச்சரு வூடு இது தானே கேட்டுக்கொண்டே ஒரு பாட்டியம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். ‘நீங்க யாரு’ நான் தான் வெடுக்கென்று கேட்டேன். 48 ஞானவாபி F ‘சரியா ப�ோச்சி ப�ோங்க சம்மந்தியம்மா வந்துருக்காங்க வாங்க வாங்க நீங்க வருணும் வருணும்’ என்று சொல்லி இந்தி டீச்சர் அந்தப் பாட்டியைத் தன் வீட்டின் உள்ளே அழைத்துப் ப�ோனாள். முன்னம் எழுவர். அந்த சம்மந்தி இந்த சம்மந்தி என இருவர். ஆக ஒன்பது பேருக்கு கீழ் வீட்டில்தான் வாசம். பேரனோ பேத்தியோ பிறந்தால் பத்தாகி விடலாம். இப்போதெல்லாம் நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் மோட்டார் ப�ோட வேண்டியிருக்கிறது. இன்னும் அதிகரிக்கவும் கூடும். ‘எங்களுக்குப் பசங்க ரெண்டு பேரு’ கீழ் வீட்டுக்குக் குடி வந்துள்ள இந்தி டீச்சர் சொன்னது சரித்தான் அதில் மட்டும் தவறு ஒன்றும் இல்லை... பிறகென்ன. 3 F எஸ்ஸார்சி 49 புதிர் வாலாஜாபேட்டையில் நாளை காலையில் திருமணம். உறவினர்களில் முக்கியமானவர்கள் எல்லோரும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தாயிற்று. இந்த அம்பத்தூர் முதுநகரிலிருந்து வாலாஜாபேட்டை திருமணத்திற்குச் செல்ல ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லோரரையும் சேர்ந்தால் ஒரு ஐம்பது பேருக்கு வரலாம். திருமணம் முடிந்து திரும்பி வருவதற்கும் சேர்ந்துதான் பேருந்துக்காரனிடம் வாடகை பேசியிருக்கிறார்கள். ‘ஏண்டா ஞாபகமா எல்லா ஜாமானையும் எடுத்துக்கிட்டமா’ அவன் அப்பா அவனிடம் ஒரு முறை எச்சரிக்கையாய் விசாரித்துக் கொண்டார். அவன் தன் அம்மாவிடம் அதனையே கேட்டுக் கொண்டான். வேல செஞ்சாதான் காரியம் ஆகும் கேள்வி மட்டும் கேட்டா என்ன ஆகும் அப்பாவையும் பிள்ளையையும் பார்த்து குரல் உயர்த்திப் பேசினாள் அம்மா.  கல்யாணத்திற்கு தியாகராய நகரில் ஆர்.எம்.கே.வி கடையில் வாங்கிய ஜவுளிகள் தெற்கு உசுமான் சாலை சின்ன ஜி.ஆர்.டி-யில் அதுதான் ஆகிவந்த கடை என்பதால் வாங்கிய 50 ஞானவாபி F நகைகள் இன்னும் கல்யாணத்திற்கு வாங்கிய ஷாப்புக்கடை வளையல் கடை சாமான்கள் என வகை வகையாய்த் தயாராக பெட்டிகளில் அடுக்கி எடுத்து வைக்கப்பட்டன. அவர்கள் வீட்டு குடும்ப புரோஹிதர் அவசர அவசரமாக வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டார். ‘என்ன ஆயிண்டீருக்கு எல்லாம் ரெடியா சொல்லுங்கோ’ அவன் சந்தனம் தாம்பூலத்தை சர்க்கரைத்தட்டை அய்யருக்கு பவ்யமாக நீட்டினான். ‘என்ன மாப்பிள்ள கல்யாண்ம்னா ப�ொறுப்பு வந்துடறது. மராஜனா தீர்க்காயிசா இரு’ சொல்லிய அய்யர் தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டார் ‘எல்லாம் ரெடி பண்ணியாச்சு, நீங்க யாத்ராதானம் அது இதுன்னு பூஜை ஆரம்பிக்கலாம்’ அவன் தந்தை அய்யரிடம் சொல்லிக் கொண்டார். வீட்டு வாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் பேருந்துக்காரன் ஹாரனை இரண்டு முறை அடித்து ‘நான் ரெடி நீங்க ரெடியா’ என்றான். ‘நாலு எலுமிச்சம்பழம் ரெண்டு மொழம் பூவு சூடம் கொஞ்சம் வெத்தல பாக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் தட்சணை எல்லாம் ப�ொறப்படுற வண்டிக்கி படைக்க கொண்டாங்க. நேரம் ஆவுது ப�ொறப்படுணுமே.’ டிரைவர் கத்திக் கொண்டிருந்தார். ‘கூழ்பாண்டம் ரெடியா இருக்கா’ ‘சுவாமி அது என்னன்னு சொல்லுங்க’ ‘பூசணிக்காய் ரெடியான்னுதான் கேட்டேன்’ அய்யர் சொல்லிக் கொண்டார். ‘ரெடியா இருக்கு’ அவன் அப்பா அய்யருக்கு பதில் சொன்னார். ‘பூசணிக்காய்னா ஒரு திருநெல்வேலி காரனா இருந்தா அவன் கடைக்குப் ப�ோய் மஞ்சள் நெறத்துல ஒரு பரங்கிக்காய வாங்கிண்டு வந்துடுவான். அவன் பரங்கிய பூசனிம்பான் பூசனிய தடியங்காய்னு சொல்வான்’ சொல்லிவிட்டு சிரித்தார் அய்யர். F எஸ்ஸார்சி 51 ‘வெள்ள பவுடர் பூசிய காயதான் வாங்கி வச்சிருக்கம்’ என்றார் அவனின் அப்பா. ‘மாப்பிள்ள வந்து உக்காரணும் புள்ளயார் பூஜ ஆரம்பிக்கிறேன். கலச பூஜ கிரகப் ப்ரீதி பண்ணனும். பலதானம் இருக்கு. அப்புறம் யாத்ராதானம் அதுக்கப்புறம் இந்த பூசனிக்காய கல்பூரம் ஏத்தி ஒரு சுத்து சுத்திட்டு உடச்சி ப�ோடணும். ஒரு தேங்காய சதுர்க்காய் விடணும்’ அய்யர் சொல்லி முடித்தார். அவனை மணையில் அமர்த்தி மூன்று கட்டுக் கழுத்திகள் சந்தன நலுங்கு வைத்தனர். அய்யர் ஒவ்வொரு சடங்கையும் செய்து முடித்தார். பேருந்தின் டிரைவர் மற்றும் க்ளீனர் செய்ய வேண்டிய சடங்குகள் முடித்து பேருந்து தயார் என்று அறிவிப்பு செய்தனர். “குலதெய்வ பிரார்த்தனை இஷ்ட தெய்வ பிரார்த்தனை மங்கள ஹார்த்தி பந்து ஜனங்கள் சபை ஆசீர்வாதம் எல்லாம் ஆச்சு. ராஜரத்னம் பிள்ளை நாதஸ்வரக் கேசட் தன் இஷ்டத்துக்கு பாடியதையே மீண்டும் பாடிக் கொண்டிருந்தது. ‘நேரம் ஆயிண்டிருக்கு கெளம்புங்கோ. அமிர்த கடிகை பத்து நிமிஷம்தான் இருக்கு’ அய்யர் விரட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் பேருந்து அருகில் நின்று கொண்டார்கள். ‘மொதல்ல ஒரு பச்ச புள்ள வண்டில ஏறி உக்கார சொல்லுங்க. முருகா முருகான்னு சொல்லிகிட்டு ப�ொறப்படறம்,’ வண்டியின் டிரைவர் உரக்க சொல்லிக் கொண்டிருந்தார். மூட்டை முடிச்சுகள் வண்டியில் ஏற்றப்பட்டன. அவனுடைய தாயும் தந்தையும் சாமி கும்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தனர்.புறப்படும் சரியான நேரத்தில் அவன் ப�ோன் அலறி அவனை அழைத்தது. இந்த நேரத்துல யாரு கூப்பிடறது அவன் தந்தை சத்தம் ப�ோட்டுக் கொண்டிருந்தார். ‘நான்தான் தேவி பேசுறேன்’ மாப்பிள்ளையிடம் அவள் பேசினாள். ‘யாரு நீங்க’ இது அவன். ‘வாலாஜாபேட்டை தேவிங்க’ ‘சொல்லுங்க’ 52 ஞானவாபி F ‘நீங்க யாரும் ப�ொறப்பட்டு இங்க வரவேணாம். எனக்கு வேற ஒருத்தரோட திருமணம் முடிஞ்சி ப�ோச்சி.’ ‘யார் நீங்க இப்ப என்னத்த பேசுறீங்க’ ‘நாளக்கி கல்யாணம்னு ப�ொறப்பட்டு வரவேண்டாம்’ ‘இந்த எழவு சேதிய இண்ணைக்கு அதுவும் இப்ப வந்து சொல்லுறதா’ ‘பதிவு திருமணம் மொதல்ல முடியட்டும் பிறகு இதை யாருக்கும் சொல்லலாம்னு முடிவு. அதான் எங்க அப்பா அம்மாக்கே இப்பதான் இந்த விஷயம் சொல்லுறென்’ ‘நீங்க தேவியா சத்யமா சொல்லுங்க யாராவது பக்கத்துல பெரியவங்க இருந்தா அவங்கள பேச சொல்லுங்க’ அவனுடைய தாயும் தந்தையும் அவன் அருகில் நின்று கொண்டு துடிதுடித்துப் ப�ோய் காணப்பட்டார்கள். ‘நான் தேவியோட அப்பா பேசுறேன் நீங்க யாரும் வாலாஜாபேட்ட வரவேணாம். கல்யாணம் இங்க எதுவும் இல்லை உங்க சொந்த பந்தங்க எல்லாருக்கும் சேதி ப�ோவுணும். பாவம் வர்ர ஜனங்க கெடந்து திண்டாடும்’ ‘என்னா பேசுறீங்க நீங்க மொதல்ல ஒரு மனுசனா பேசுங்க” ‘என்ன மன்னிச்சிடுங்க. நான் பெரிய பாவி பாவிதான். எனக்கும் இதுல எவ்வளவு பெரிய அவுமானம் தலையில பாறாங்கல்லு கல்லுதான் வுழுந்திடுச்சி எத நான் சொல்றது. நீங்க யாரும் கல்யாண்ம்னு வரவேணாம்’ அதற்குள்ளாக உறவினர் சத்தம் ப�ோட ஆரம்பித்தனர். பேருந்தின் டிரைவரும் க்ளீனரும் அதிர்ந்து ப�ோய் நின்று கொண்டிருந்தார்கள். அய்யர் ‘இது இனி சரியா வரும்னு தோணல்ல. நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்ல. நாம ஏதோ கணக்கு ப�ோடறம் பகவான் அபிப்ராயம் வேறதினுசா ப�ோகிறதுப�ோல. எதுலயும் நிதானம் இருக்கட்டும். வேற எத சொல்றது நான்’ சொல்லிக் கொண்டு புறப்பட்டார். பேருந்தில் இருந்த டிரைவரும் க்ளீனரும் ‘நாங்க அப்புறம் வரம் இப்ப எதப்பேசுறது. வூடு புடிச்சிகினு எரியுது பீடிக்கு நெருப்பு கேக்குலாமா’ சொல்லிக்கொண்டே இடத்தைக் காலி F எஸ்ஸார்சி 53 செய்தனர். ஓரிருவர் பாக்கி இருக்க உற்றார் உறவினர்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஒத்த புள்ள பெத்தும் சந்தீலதான் நிக்கணுமா? பீய துண்ணனும்னு பாழும் விதி போட்டிருக்கா’ அவன் தாய் ஒப்பாரிவைத்து அழுதாள். அவன் கண்களில் நீர் நிறைந்து கொண்டிருந்தது. அவன் தந்தை இனி செய்வது என்று அப்படியே இடிந்து ப�ோய் அமர்ந்திருந்தார். அவன் பெற்றோரைச் சமாதானம் செய்வது எப்படி என்று தெரியாமல் விழிக்கிறான். ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ தெருவில் ஒரு சிறுமி சன்னமாகப் பாடிய படி அபிநயம் செய்கிறாள். வளமான குரல் அவளுக்கு. வயது ஐந்து கூட இருக்காது. எத்ததனை அழகு. அவன் அச்சிறுமியையே பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கினான். 3 54 ஞானவாபி F பிழை(ப்பு) அதிகாலையிலேயே மொட்டை மாடியில் இருக்கும் சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன் நீர் மோட்டார் சுவிட்சைப் ப�ோட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை. ஹூம் ஹூம் என்று ஒரே ஹம்மிங் ஓசை. ஏதோ கோளாறு அது மட்டும் தெரிந்தது. உடனேயே மோட்டார் நின்றும் விட்டது. மோட்டார் அருகே சென்று தொட்டு தொட்டுப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லையே. உள்ளே எங்கேனும் பியரிங்லில் பிடிப்பு இருந்தாலும் மோட்டார் ஓடாதுதான். ஆக தேங்காய் எண்ணெய் கொண்டு வந்து மோட்டாரின் கிடைத்த இடுக்கில் எல்லாம் நீண்ட ஸ்க்ரூ டிரைவரால் தொட்டுத் தொட்டு தடவினான். மோட்டார் சுவிட்சைப் ப�ோட்டால் அது ஓடினால்தானே. ஹம்மிங் ஒலி லேசாக மட்டும் வந்தது. பழைய ட்யூப் லைட்கள் எரியும்போது அப்படித்தான் ஒரு வண்டின் ரீங்காரம் வரும். எத்தனையோ திருக்கோவில்களில் இப்படி குழல் விளக்குகள் எரிவதுண்டு. அவன் தெரு நிற்கும் மின்விளக்கும் கூட இவ்விதமாய் ரீங்கரிப்பது கேட்டிருக்கிறான். மோட்டார் ஏர் வாங்கியிருக்குமோ என்று அந்தப் பித்தளைத் திருகினை பலங்கொண்ட மட்டும் அழுத்தித் திறந்தான். F எஸ்ஸார்சி 55 அதெல்லாம் ஏர் ஒன்றும் வாங்கவில்லை. தண்ணீர் பீறிட்டுக் கொண்டு கொட்டியது. அந்தப் பிரச்சனையில்லை. தண்ணீர் அந்த சந்து வழிச் சரியாக வெளி வந்தால் கீழே ஃபுட் வால்வும் கூடச் சரியாகத்தான் இருக்கும். அவனுக்கு இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. திணறினான். அவன் வழக்கமாக அழைக்கும் பிளம்பரைக் கைபேசியில் அழைத்தான். இரண்டு முறை அழைத்தால்தான் அவன் ப�ோனை எடுப்பது வழக்கம். அப்படித்தான் ஆகியது இம்முறையும்.. ‘தண்ணீ மோட்டர் ஓடுல. என்ன பிரச்சனன்னு தெரியல. நீங்க உடனே வரணும். வீட்டுல சுத்தமா தண்ணி இல்ல. நான் ஒண்ணுமே புரியாம நிக்குறன்.’ ‘ஒரு அரை மணி ஆவும் இங்க ஒரு சின்ன வேலைல இருக்கன். நீங்க இப்புறம் அந்த மோட்டார கீட்டார ப�ோடாதிங்க. வெஷயம் தெரியாம யாரும் ப�ோட்டுற கீட்டுற ப�ோறாங்க. பாத்துகுங்க மோட்டாரு காயில் பூடும். நா வந்துடறன்’ பிளம்பர் கைபேசியை நிறுத்தினான். அவன் அந்த பிளம்பர் வருகைக்காகக் காத்திருந்தான். ‘முக்கியமான வேலய இருந்தா அத மட்டும் பாரு. தண்ணி மோட்டாரு ரிப்பேரு. அத ஞாபகத்துல வை’ அவன் மனைவியிடம் எச்சரிக்கையாய்ச் சொல்லிக்கொண்டான். ‘சரிங்க. எதுவும் செய்யுல நான்.’ ‘ப�ொங்குற வேல ஆவுட்டும். அத நிறுத்திடாதே. தண்ணி சிக்கனமா ஆவுட்டும்.’ அவன் மனைவிக்கு யோசனை சொன்னான். ‘இண்ணைக்காவது வெளியில எங்காவது ப�ோயி சாப்புட்டுக்குவம்’ ‘ஏற்கனையே வூட்டுல மோட்டாரு பூட்டுது. இதுல சாப்பாட்டு செலவு ஓட்டல்ல வேறயா’ அவன் அதிர்ந்து பதில் சொன்னான். பிளம்பர் வரும் அரவம் கேட்டது. அவனது டி.வி.எஸ் எக்செல். அது எழுப்பும் ஒலியே அலாதி. பிளம்பர் வண்டியை நிறுத்தினான். கழுதை கனம் கனக்கும் டூல்ஸ் பை ஒன்றோடு மோடாரிடம் ப�ோய் நின்றான். ‘மோட்டாரைப் ப�ோடுங்க’ 56 ஞானவாபி F ‘தோ ப�ோடுறன்’ அதே ஹம்மிங் ஒலி வந்தது. மோட்டார் ஏர் வாங்குகிறதா எனப் பார்த்தான். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. மோட்டாரின் மேல் மூடியைக் கழட்டினான். திரும்பவும் மூடினான். மோட்டாருக்குப் பக்கத்தில் அதனோடு ஒட்டிகொண்டு இருந்த கண்டென்சரைக் கழட்டி சோதித்தான். ‘கண்டென்சர் ப�ோயிடுச்சி. அதான்’ ‘இப்ப என்ன செய்ய’ ‘நா சேட்டுகிட்ட ப�ோயி புதுசு வாங்கியாறன். ரூவா முந்நூறு கொடுங்க’ என்றான். அவனிடம் அவன் கேட்ட பணம் கொடுத்தான். பிளம்பர் தனது வண்டியில் புறப்பட்டு சேட்டுக் கடைக்குப் ப�ோனான். ‘தோ வந்துடறன்’ சொல்லிப் ப�ோனான். இரண்டு மணி நேரம் ஆகியது. இன்னும் பிளம்பரைக் காணோம். அவனுக்குப்போன் ப�ோட்டான். அவன் எடுக்கவே இல்லை... அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பிளம்பரின் வண்டி சத்தம் உடனேயே கேட்டது. இம்முறை தன்னோடு ஒரு இளைஞனையும் அழைத்து வந்தான். ‘இவுரு மெக்கானிக்கல் படிச்சவரு. நாம இந்த தொழிலு அனுபவத்துல பழகுனம் அவ்வளவுதான்’ பிளம்பர் சொன்னான். உடன் வந்திருந்த இளைஞன் மோட்டாரிடம் சென்று அந்த பழைய கண்டென்சரை கழட்டிவிட்டு புதிய ஒன்றை அவ்விடத்தில் ப�ொருத்தினான். ‘இப்ப மோட்டாரை ப�ோடுங்க’ திரும்பவும் அதே ஹம்மிங் ஒலி. ஆனால் இம்முறை சற்று அதிர்வு ஒலி கூடுதலாகக் கேட்டது. ‘மேல தொட்டியில பாருங்க தண்ணி அங்க உழுவுருது தெரியும்.’ அவன் மொட்டை மாடிக்குச்சென்று சிண்டெக்ஸ் தொட்டியின் மூடியைத்திறந்து பார்த்தான். தண்ணீர் குழாயில் கொஞ்சமே வந்தது. அரை குழாயுக்கு இருக்கலாம். அதனை ப்பார்த்துக்கொண்டான். F எஸ்ஸார்சி 57 ‘தண்ணி சீரா வருது. மொத மாதிரி இல்ல. அர குழாயிக்கு இருக்கும்.’ ‘இங்க மோட்டாரு பாடியில கரண்டு லீக்கு ஆவுது, இங்க பாருங்க டெஸ்டரை’ டெஸ்டரில் இருந்த விளக்கு அழுமூஞ்சியாய் எரிந்தது. ‘மோட்டரு சரியில்லங்க. இத மாத்தினாதான் வேலைக்கு ஆவும்’ ‘ரிப்பேரு செய்யலாமா’ ‘என்ன சாரு இத ரிப்பேரு பண்ணுறதுக்கு புதுசே வாங்கிகலாம் பிரச்சனை இல்லாம ஓடும்’ உடன் வந்திருந்த இளைஞன் தலை ஆட்டி அதுவே சரி என்றான். ‘புதுசுன்னா எவ்வளவு வரும்’ ‘அது பத்து ரூபாயுக்கு வரும்’ ‘பத்தாயிரமா’ ‘மேலயும் ஆவும் சாரு. இப்ப வெல வாசி என்னா’ பிளம்பர் ஆகாயம் பார்த்தான். அவன் மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘ஆக வேண்டிய ஜோலிய மொத பாருங்க இது தண்ணி பிரச்சனை’ என்று மனைவி சத்தம் ப�ோட்டாள். ‘ஸேட்டுகிட்ட நீங்க வாங்க பேசிக்கலாம். நா அங்க இருக்கன்’ பிளம்பர் புறப்பட்டான். அவன் மயங்கி மயங்கி நின்றான். ‘வேலய பாருங்க. இப்ப என்னதான் செய்வ நீ’ தனக்கு மரியாதை டக்கென்று குறைந்து ப�ோனதை எண்ணிப் பார்த்தான். சேட்டுக்கடை நோக்கிப் புறப்பட்டான். கடை வாயிலில் பிளம்பர் நின்று கொண்டிருந்தான். கூட வந்த இளைஞனும் அவனுக்குத் துணையாக அங்கே இருந்தான். 58 ஞானவாபி F ‘‘சேட்டு என்ன சொல்றாரு’’ ‘சாரு நா சொல்ல என்ன இருக்குது. ரூவா பதிமூணு சூப்பரு மோட்டாரு’ குசுணா மோட்டாரு. மேங்கொண்டு சாமான் கூலி இருக்கு’ அவன் தன் சட்டைப்பையில் இருந்த ஏ.டி.எம் கார்டு இருப்பதை உறுதி செய்து கொண்டான். ‘ஒரு வருசம் காரண்டி’. மோட்டாரு நல்லா ஓடும். இது வரக்கும் இந்த அயிட்டம் நூறு பீஸ் ஒடி இருக்கு. ஒரு ரிமார்க்கு இல்ல. பாத்துகுகுங்க. செய்யுறது நல்ல செய்யுணும். பேரு முக்கியம். பேரு கெட்டா ஒருத்தர நா கூடம் மதிக்காதில்ல’ சேட்டு சொல்லி நிறுத்தினான். பிளம்பர் ஒரு தரம் கண்களை மூடித்திறந்தான். ஒரு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கை மாறியது. மோட்டர் வாங்கியாயிற்று. அதனைப் ப�ொறுத்தும் சாமான்கள் ஒரு சின்ன பையுக்கு இருந்தது. மூவரும் திரும்பவும் வீட்டிற்கே வந்தார்கள். ‘சமையல் செஞ்சியா என்னா’ ‘எல்லாம் ஆச்சி. அதுல கொற வப்பனா’ அவன் மனைவி பதில் சொன்னாள். புது மோட்டார் இப்போது பிணைக்கப்பட்டது. கழட்டிய பழைய மோட்டாரை ஒரு ஓரமாக எடுத்து வைத்தான் பிளம்பர். ‘இது எடைக்குக்கூடம் தேறாது’ சொல்லிக்கொண்டான். திரும்பவும் பழைய மோட்டாரைத் தொட்டுப் பார்த்தான். ‘இப்ப மோட்டார் சுவிச் ப�ோடுங்க’ என்றான். அந்தப் புது மோட்டாரும் ஓடினால் தானே. எந்த ஒலியும் இல்லை. அவனுக்குத் தலை சுற்றியது. புது மோட்டாரும் ஓடாதா இது என்ன கஷ்ட காலம் என யோசித்தான். பிளம்பர் சேட்டுக்குப் ப�ோன் ப�ோட்டான். புது மோட்டார் ஓடவில்லை என்றான். சேட்டு என்ன சொன்னாரோ தெரியவில்லை. பிளம்பர் அடுத்த வீட்டுக்குச் சென்றான். கரண்டை டெஸ்டுக்கு என்று கேட்டு வாங்கினான். ஒரு பெரிய ஜங்க்‌ஷன் பாக்ஸ் வழியாக புதிய மோட்டாருக்கு அந்த மின்சாரத்தைக் கொண்டு வந்தான்... F எஸ்ஸார்சி 59 அவர்கள் அப்படி எல்லாம் கொடுத்து உதவிடவும் விட மாட்டார்கள். பிளம்பருக்கு என்ன சாமர்த்தியமோ. அவர்களும் டெஸ்டுக்கு என்று ஒத்துக்கொண்டு கரண்டு கொடுத்தது சாதாரண விஷயமில்லை... ‘என்னவோடா உலகம்’ இது அவன் நினைத்துக் கொண்டான். ‘சாரு ஒண்ணும் யோசனை வேண்டாம். அவுங்க வீட்டு மெயின் செவுத்துல சமையலறை கழுவுத்தண்ணி லீக் ஆவுது. அத அடுத்ததா நா ப�ோய் பாக்கணும். இல்லன்னா அவுங்க மெயின் செவுறு ப�ோயிடும். அதான் செத்த டெஸ்டுக்கு கரண்டு கொடுங்கன்னுகேட்டேன். ஒ கே எடுத்துகன்னாங்க’ பிளம்பர் அவனுக்கு விளக்கம் சொன்னான். புது மோட்டாருக்கு அடுத்த வீட்டு கரண்டு கனைக்‌ஷன் கொடுத்தார்கள். சுவிட்சை ஆன் செய்தார்கள். மோட்டார் கும்மென்று ஓடத்தொடங்கியது. அவன் மொட்டை மாடி ஏறிப்பார்த்தான். குழாய் நிறைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்தது. ‘சாரு ஒரு சேதி. கரண்டு ஆபிசுல எழுதி வையுங்க. உங்க வீட்டுக்கு வர்ர நியூட்ரல் சரியா வரலன்னு. அத அவுங்க வந்து சரி பண்ணுவாங்க. கரண்டு மரத்துலேந்து வர்ர நியூட்ரல் சரியில்ல அத உங்க வீட்டுக்கு வர்ர கரண்டு ப�ோஸ்டுல ஏறி ஈ.பி காரனுங்க அவுங்கதான் சரி பண்ணணும்.’ அவன் கரண்டு ஆபிசுக்கு ப�ோன் ப�ோட்டான். நடந்த சேதி சொன்னான். ‘இன்னும் ஒரு மணி நேரத்துல ஆளு வரும்’ என்று பதில் சொன்னார்கள். அப்படி இப்படி என்று ஒரு மணி நேரம் ஆனது. ஈ.பி காரர்கள் ஆணி அடித்தாற்போல் வந்தார்கள். கரண்டு மரம் ஏறி நியூட்ரலை பிரித்து அடித்துச் சரிசெய்தார்கள். இப்போது அவன் வீட்டுக்கரண்டு கனைக்‌ஷன் கொடுத்து மோட்டார் சுவிட்சைப் ப�ோட்டார்கள். புது மோட்டார் கும்மென்று தண்ணீர் இறைத்தது. கொடுக்க வேண்டிய மாமூலைக் கொடுத்து கரண்டு காரனை அனுப்பியாயிற்று. ‘இன்னும் சேட்டுக்கு பாக்கி நாலாயிரம் தரணும் குடுத்துடுங்க. எனக்கு கூலி ரெண்டாயிரம். இந்த பழைய மோட்டாரு அத ஐநூறுக்கு நானே எடுத்துகறன். அது ஒரு முந்நூறுதான் ப�ொறும் 60 ஞானவாபி F ப�ோவுட்டும். நாம எம்மானோ சம்பாரிக்கறம். இதுல என்னா. ஆக எனக்கு இன்னும் ஆயிரத்து ஐநூறு குடுங்க ப�ோதும்.’ ‘இந்த மோட்டாரு ஐநூருதான் ப�ோவுமா.’ ‘சாரு இது முந்நூறுக்குத்தான் ப�ோவும் யாரு எடுத்துகுவா குப்ப நானு ப�ோனா ப�ோவுதுன்னு எடுத்துகிறன். உங்களுக்கு ஒரு எர நூரு சேத்து தர்ரேன்’ பிளம்பர் அழகாகவே சொன்னான். அவனோடு துணைக்க வந்த இளைஞன் பழைய மோட்டாரை அலாக்காகத் தூக்கினான். பிளம்பரின் டூ வீலரில் பதனமாக இறுத்தி வைத்தான். ‘சேட்ட பாத்து அந்த பாக்கிய குடுத்துடுங்க’ சொல்லிய பிளம்பர் தன் கூலி ஆயிரத்து ஐநூறு வாங்கித் தன் சட்டைப்பையில் பத்திரமாய்ப் ப�ோட்டுக் கொண்டான். வண்டியை ஸ்டார்ட் செய்தான். ‘ஏங்க அந்த பழைய மோட்டாருக்கே அடுத்த வீட்டு கரண்டை கொடுத்து மோட்டார ஓட்டி பாத்து இருக்கலாமுல்ல. நம் வீட்டுக்கு வர்ர நியூட்ரல்லதானங்க பிரச்சனை இருந்திச்சி... அப்படின்னா புதுசா ஒரு மோட்டார நாம என்னாத்துக்கு வாங்குணும். நமக்கு இருக்குற கஸ்டத்துல’’ அவன் மனைவி சன்னமாக ஆரம்பித்தாள். ‘நீ சொல்லுறது சரிதான்’ அவன் திகைத்துப்போய் நின்றான். ‘எல்லாமே எனக்கும் காதுல வுழுவுது. சாரு’ சொல்லிய பிளம்பர் வண்டியை நகர்த்தி ஓட்டிக்கொண்டு ப�ோயே சேர்ந்தான். 3 F எஸ்ஸார்சி 61 பிராப்தம் ஐ.டியில் வேலை பார்க்கும் அவன் பெண்பார்ப்பதற்கு வந்திருக்கிறான். அவனோடு அவன் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள். அவர்களைப் ‘பெண் பார்ப்பதற்கு வாருங்கள்’ என்று பெண் வீட்டார் அழைக்கவே அவர்கள் மூவரும் வந்திருக்கிறார்கள். இந்த பெண் பார்க்கும் சமாச்சாரம் எல்லாம் கர்நாடக விஷயம் இதுவோ நவீன காலம்... ஆனாலும் காதலித்து ஒருவர் திருமணம் முடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. கல்யாணத்திற்கு காத்திருக்கும் மாப்பிள்ளைப் பையன்கள் எல்லோராலும் காதல் சமாச்சாரம் சாத்தியப்படுவதில்லை. அதற்கு ஒரு மனோ வலிமை என்று மட்டுமில்லை கூடவே முகராசியும் வேண்டும். அனேகமாக அந்த மனோ வலிமை பராக்கிரமங்கள் எப்படியோ இங்கு பெண்களுக்குக் கூடுதலாக இருப்பதை அனுபவித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்... பத்துப் பெண் வீட்டார்களை கைபேசியில் தொடர்பு கொள்ள அவர்களில் ஐந்து பேர் பிள்ளை வீட்டாரோடு பேசி விட்டாலே பிள்ளை வீட்டார் பெரிய அதிஷ்டசாலி. அவர்களுக்கு முதல் ராங்க் தர வேண்டும். பெண்ணைக் கல்யாணத்துக்கு என்று வைத்து இருப்பவர்கள் மட்டும்தான் எதனையும் கறாராகத் 62 ஞானவாபி F தீர்மானம் செய்கிறார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் ரிசிவிங் எண்டில்தான்... வரதட்சிணைக் கொடுமை அது இது எல்லாம் மலை ஏறி வெகுகாலம் ஆயிற்று. முதிர்கன்னி கண்ணீர் விடும் கவிதைகள் எல்லாம் எழுதினால் இனிப் ப�ோணி ஆகாது. அங்கங்கு மாப்பிள்ளைகள் கல்யாணத்துக்குப் பெண் கிடைக்காமல் வயது நாற்பது தாண்டி தலை நரைத்து சொட்டை விழுந்து பரிதாபமாக வீதியைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகமோ புதுச்சேரியோ சட்டசபைத் தேர்தலின் ப�ோது ப�ொதுவுடமைக் கட்சிக்காரர்கள் பிரசாரத்திற்கு வீதி நாடகங்கள் ப�ோடுவார்கள். அது ஒரு காலம். அதனில் மாப்பிள்ளைக் கடை என்று ஒரு நிஜ நாடகம் உண்டு... அதனை அனேக முறை ப�ோட்டிருப்பார்கள். நொண்டி மாப்பிள்ளை தொடங்கி பென்சனுள்ள அரசு உத்யோகம், விடுப்பு பிரதானமாகிய ஆசிரியர் உத்யோகம் கரன்சி நோட்டு எண்ணி எண்ணிப் பார்க்கும் வங்கி உத்யோகம், ஜபர்ஸ்தாய்ப் பார்க்கும் கலெக்டர் உத்யோகம் என்று மாப்பிள்ளை தினுசுகள். மாப்பிள்ளைகளை ரகம் ரகமாய் ஏலம் விடுவார்கள்... பெண்ணைப் பெற்ற ஏழைத் தந்தை ஒரு மாப்பிள்ளையையும் விலைக்கு வாங்க முடியாமல் நொந்து நூலாகி அதே மாப்பிள்ளைக் கடையில் ஒரு ஓரமாய் மஞ்சள் பையோடு நின்று கொண்டிருப்பார். வாழும் சமூகம், நமது கலாசாரம் இங்கே எத்தனைக் கேவலமாய்ப் ப�ோனது என்பதனை ஒரு தலைவர் விளக்கியபடி வீர உரை ஆற்றிக் கொண்டிருப்பார். இந்த மாப்பிள்ளைக் கடை சமாச்சாரம் எல்லாம் இனி இங்கே வேலைக்கு ஆகாது.. சரி விஷயத்துக்கு வருவோம். ‘எம் ப�ொண்ணு மாப்பிள்ளையோட ஒரு ஐந்து நிமிஷம் தனியாப் பேசணும்னு சொல்றா’ பெண்ணின் தந்தை மாப்பிள்ளையின் தந்தையிடம் பவ்யமாய்ச் சொல்லி முடிக்கிறார்... ‘இது எல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம். பேஷா பேசட்டும்’ பதில் சொன்னார் பிள்ளையின் தந்தை. பெண்ணும் பையனும் தோட்டத்துப் பக்கமாய் இருக்கும் தென்னை மரத்தின் கீழாக நின்று கொண்டார்கள். அங்கே அவர்கள் அமர்ந்து பேச நாற்காலிகள் எதுவும் ப�ோடப்படவும் இல்லை. F எஸ்ஸார்சி 63 ‘நீங்க ப�ொண்ணு பார்க்கற நிகழ்ச்சி வரைக்கும் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல்ல’ அவள் ஆரம்பித்தாள். ‘ஏன் ஏன் அப்பிடி சொல்றீங்க’ அவன் கேட்டான். ‘நான் வேலைக்குப் ப�ோனதும் வீடு கட்டக் கடன் வாங்கியதால் மாதம் முப்பது ஆயிரம் ஈ.எம்.ஐ கட்ட வேண்டும். இது சொன்னதுமே கழண்டு ப�ோன வரன்கள் பல உண்டு... அம்மாவும் அப்பாவும் என்னோடுதான் இருப்பார்கள் நான்தான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். இந்தப் பெண் வேண்டவே வேண்டாம் என்று சிலர் ஓடியே ப�ோனார்கள். என் தாயும் தந்தையும் அவர்களால் முடியும் வரைத் தனி ஜாகையில் இருப்பார்கள். அவர்கள் செலவுக்கு மாதம் இருபத்தைந்து ஆயிரம் ஆகலாம். நான் தான் அதனைத் தர வேண்டும். இப்படிச் சொன்னதும் பிய்த்துக் கொண்டவர்கள் பலருண்டு. ‘நீங்கள் மட்டும்தான் இந்த சமாச்சாரங்கள் எதனையும் ப�ொருட்படுத்தவே இல்லை. ஆகத்தான் பெண் பார்க்கும் படலம் வரை வந்து விட்டீர்கள்.’ ‘சரியாகத்தானே நான் செய்திருக்கிறேன். என் மீது என்ன தவறு.’ ‘தவறு என்னிடம்தான். நேராக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். என் அலுவலகத்தில் நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணமும் செய்து கொள்வேன்... என் அப்பாவுக்கு இது விஷயம் எதுவும் தெரியாது.’ ‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள் இங்கு வந்தது எங்களுக்கு வெட்டி வேலைதானா’ பதறிப் ப�ோய்க்கேட்டான். ‘மெதுவாகப் பேசுங்கள். ஆமாம். வெட்டி வேலைதான். வீட்டிற்குப் ப�ோய் ப�ோன் ப�ோட்டு நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன் என்று சொல்லி இங்கிருந்து புறப்படுங்கள்.’ ‘என் பெற்றோர்களுக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்.’ ‘என் தந்தையிடம் சொல்லாத ஒரு உண்மையை உங்களிடம் சொல்லி விட்டேன். ஒரு ப�ொய் சொல்லி உங்களைத் திருமணம் செய்து கொண்டு உங்களுக்கு அநியாயம் செய்ய எனக்கு மனம் 64 ஞானவாபி F ஒப்பவில்லை. நான் மட்டும் என்ன தவறா செய்கிறேன்’ அவள் மெதுவாகப் பேசினாள். இருவரும் தனியாகப் பேசுவது முடிந்தது. அவரவர் இடத்துக்குப் ப�ோனார்கள். பெண்ணைப் பெற்ற தந்தை திரி திரி என்று விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பெண்ணின் தாய் அடுப்படியில் ஏதோ காரியம் செய்து கொண்டு இருந்தார். வீடு அமைதியாக இருந்தது. ‘நாம புறப்படலாம்’ என்றான் அவன். ‘என்னடா ரெண்டு பேரும் தனியா பேசுனிங்க. என்ன ஆச்சு’ ‘இங்க பேச வேண்டாம் நாம வீட்டுல ப�ோய் பேசிக்கலாம்’ அவன் பதில் சொன்னான். ‘கெளம்பு கெளம்பு’ அவன் விரட்டினான். அவர்கள் மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள். பெண்ணின் தகப்பனார் அதிர்ந்துப�ோய் நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருந்தார். அவரின் பெண் அவளின் லேப் டாப்பில் தன் அலுவலக வேலையைத் தொடர்ந்து கொண்டார். தாய் அடுப்படியை விட்டு வரவே இல்லை. மூவரும் நடுத்தெருவில் ஒரு ஒரு அடியாய் எடுத்து வைத்து நடந்து ப�ோய்க் கொண்டிருந்தார்கள். ‘என்னடா ஆச்சு’ ‘ஒண்ணும் இல்லேப்பா’ ‘உன் முகமே விபரீதமாய் சேதி சொல்லுதே’ அம்மா பட்டென்று சொன்னாள்... ‘அவ யாரையோ காதலிக்கிறாளாம். என்கிட்ட சொன்னா’ ‘இது என்ன கஷ்டகாலம். நமக்கு இது என்ன வம்பா. உண்மையைச் சொல்லியிருக்கா. நம்ம கழுத்த அறுக்கல... அதுவரைக்கும் அவ நல்ல ப�ொண்ணு’ அவன் தந்தை ஒரு ஒரு வார்த்தையாய்ச் சொன்னார். ‘என்னடா இப்பிடி பெரிய பாறாங்கல்லை தூக்கிப் ப�ோடற’ அவன் அம்மா அழ ஆரம்பித்தாள். அவன் மொபைல் ப�ோனைக் கையில் எடுத்தான். பெண்ணின் தந்தைக்கு ப�ோன் ப�ோட்டான். அவன் தந்தை அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். F எஸ்ஸார்சி 65 ‘நான்தான் ப�ொண்ணு பாக்க வந்த பிள்ளையோட அப்பா பேசுறேன்’ முழுப்பொய்தான் சொன்னான். ‘சொல்லுங்க சம்பந்தி’ பெண்ணின் தந்தை பேசினார். ‘அந்த பெரிய வார்த்தை வேண்டாம் விஷயம் அப்பிடி இல்ல. மன்னிக்கணும் மன்னிக்கணும் என் பையன் அவன் ஆபிசுல ஒரு ப�ொண்ணோட பழகிகிட்டு இருக்கானாம். அவன் எங்ககிட்ட இது விஷயம் சொல்லவே இல்ல சொல்லி இருந்தா இந்த ப�ொண்ணு பாக்குற வேலயே எங்களுக்கு இல்ல. இதோ அந்தப் ப�ொண்ணு என் வீட்டு வாசல்ல உக்காந்துகிட்டு இருக்கா கூச்சல் ப�ோடறா.’ ‘என்ன சார் இப்பிடி ஒரு குண்ட தூக்கி ப�ோடுறீங்க.’ சம்பந்தி ப�ோய் அவர் சார் ஆனார். ‘ஒரே ஒரு முக்கியமான சேதி. உங்க ப�ொண்ணுக்கும் அப்பிடி எதாவது காதல் கீதல்னு இருக்கலாம். அவளுக்குத் தெரியாம அத மொதல்ல உறுதி பண்ணிக்குங்க. இன்னொரு மாப்பிள்ளய அதுக்கப்புறமே பாருங்க’ மொபைலை ஆஃப் செய்து பத்திரமாக வைத்தான். மூவரும் விரக்தி நடை நடந்தனர். ஒரு பேருந்தைப் பிடித்தனர். 3 66 ஞானவாபி F கவிதை வாங்கலையோ கவிதை            நீங்களே பாருங்களேன் இதோ கட்டு கட்டாய் அவன் வீட்டுப் பரணில் கிடக்கிறதே. அவனே தன் கையைச்சுட்டுக்கொண்ட அந்தக் காரியம். அவன் எழுதியது ஒரு கவிதைப் புத்தகம் ஞானத்தீ என்றுதான் அந்த நூலுக்குப் பெயர் வைத்து இருந்தான். பெயரில் ஒன்றும் குறைச்சல் இல்லை. எந்த பதிப்பகத்தாருக்கும் கவிதையைச் சீண்டுவது இல்லை என்கிற ஞான வைராக்யம் சித்தியான பிறகு கவிதைக்கு மவுசு அவ்வளவுதான்... நீங்களும் நானும் என்ன செய்வது. அவனுக்கோ யோசித்து யோசித்து மண்டை வலித்தது. குத்தல் எடுக்க எடுக்க எழுதி முடித்தக் கவிதைகளே அத்தனையும்... எக்கேடு கெட்டும் தொலையட்டும் அவை என விட்டு விடத்தான் மனம் ஒப்பியதா. அவன் பெற்றுப்போட்ட பிள்ளைகளாயிற்றே. உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஜீவிக்கும் சிற்றிதழ்கள் விலாசம் சில அவனுக்குத் தெரியும். ஆகத்தான் அவ்வப�ோது சில கவிதைகள் அச்சாகி வெளிவந்தன. அவை அவனை கிச்சு கிச்சு மூட்டி விட்டனதான். F எஸ்ஸார்சி 67 அச்சில் வெளிவந்த அந்தக் கவிதைகளை யாருக்கும் தெரியாமல் படித்து படித்துப் பார்ப்பான் வீட்டில் அவனைச்சுற்றி இருந்தவர்கள் கவிதை என்பதெல்லாம் என்ன விலை என்றுதான் கேட்டார்கள். அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. இந்தப்படிக்கு பூடக சமாச்சாரம் எல்லாம் பிரம்மனுக்கே கூட பிடிபடுவதில்லலை என்கிறார்களே... ஆக அது அது அவர்கள் செய்த புண்ணியம் பாவம். அவ்வளவே... சமூக சூழல் கொஞ்சம் என்று இல்லை, ஏகத்துக்கும் மாறித்தானே காட்சியாகிறது. தகவல் பரிமாற்றத் துறையில் தொழில் நுணுக்கம் அம்மாடியோவ் என்கிறபடிக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆக எத்தனைப் பிரதிகள் இக்கணம் வேண்டுமோ அத்தனை மட்டும் ஒருவன் எழுதிய புத்தகத்தை அச்சடித்துக் கொண்டு சாமர்த்தியமாக இருந்து விடலாம். ஆனால் இப்படி சூட்சமாலங்கார பிரிண்ட் ஆன் டிமாண்ட் டெக்னலாஜி ஜனிப்பதற்குக் கொஞ்சம் முன்னாலேயே அந்தக்கவிதை நூலை அவன் ப�ோட்டும் விட்டானே அரைகுறையாய் அவனுக்குத் தெரிந்த அச்சகத்துக்காரன் ஆயிரம் பிரதிகள் அடித்து விடலாம் என்று உற்சாகமாய்ச் சொல்ல அவனே தான் அச்சகத்து ஆட்களோடு கெஞ்சிக் கூத்தாடி அதனை ஐநூறு பிரதிகள் மட்டுமே எனக் குறைத்துக் கொண்டு வந்தான். நாமே ப�ோடும் புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் என அச்சடித்து வீட்டில் கட்டுக் கட்டி பரணையில் இருப்பு வைத்துக் கொள்வோம் என்றால் வாடகைக்குக் குடியிருக்கும் ஒரே ஒரு கட்டில் ப�ோடும் அறை, கவ்பீன அளவு ஹால் கொஞ்சமாகச் சமையலிடம் என்கிற மாதிரிக்கு உள்ள வீட்டில் எல்லாம் இது லேசில் சாத்தியமாகின்ற சமாச்சாரமா என்ன... அரசாங்கத்தார் அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வார்கள். ஒன்று இரண்டு எனப் புத்தகம் சொந்தமாய் செலவு செய்து கொண்டு வருவோர் நூலக ஆணை பெற்று விட்டால் நஷ்டம் ஏதும் இல்லாது தப்பித்து விடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அதெல்லாம் கதைக்கு உதவாது. சரியான படிக்கு அந்தப் பலான ஆசாமியைக் கண்டுபிடித்து வெட்டுவதை வெட்டி விட்டல் அரசு நூலக ஆணை உங்களைத் தேடிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறது என்கிறார்கள். அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள்... அவனால் எல்லாம் ஆகின்ற கதையா இது. 68 ஞானவாபி F அதுவும் அவன் கொணர்ந்திருப்பது ஒரு கவிதை நூல்.தமிழ் நாட்டில் மக்கள் தொகையை விடக் கவிஞர்கள் தொகையே அதிகம் என்று பேசத் தெரிந்தவர்கள் ஏகடியம் பேசுவதெல்லாம் அவன் காதில் விழாமலா. அது நமக்கு சொல்லப்பட்டதே இல்லை என்றல்லவா அவன் காலட்சேபம் செய்து கொண்டு வருகிறான்... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி என்று வரும் திரைப்படப் பாடலை அடிக்கொருதரம் அசைப�ோட்டுக் கொள்வான். அவனுக்கு சமுத்திரகுப்பத்தில் ஒரு ஆத்ம சினேகிதன் இருந்தான். அவனும் கவிதைகள் எழுதினான். கவிதைகள் நன்றாகத்தான் இருந்தன. சென்னையில் துலாக்கோல் என்னும் ஒரு புத்தக வெளியீட்டாளர் அதனை நூலாக்கி வெளியிட்டார். சும்மா ஒன்றும் இல்லை அவனுக்கு ஆயிரம் ஆயிரமாக ரூபாய் செலவானது ஒரே ஒரு பிரதியில் அன்புடன் என்று எழுதி கையெழுத்தும் ப�ோட்டு அவனுக்குத் தந்தான். வாழ்வில் முன்னேற வழிகள் நூறு என்று தலைப்புடன் கவிதை நூலின் அட்டை இருந்தது. அதற்குக் கீழாகக் கண்ணதாசதாசன் என்று பெயர் அச்சாகி இருந்தது. அவன் பெயர்தான் அது. ஜேசுதாசன் என்கிற அவன் இயற்பெயரை இப்படி மாற்றி ஒரு புனை பெயராக வைத்துக்கொண்டான். யாரும் கேட்டால் நான் கண்ணதாசனுக்கு தாசன் என்பான். அது அவன் விருப்பம். அதில் நமக்கு தாவா ஏதுமில்லை. புத்தகத்தின் தலைப்பு ஒரு கவிதை நூலுக்கான தலைப்பாக இல்லையே என்று அவனிடம் கேட்டும் விட்டான். “அது பப்ளிஷர் பண்ணின வேல. கவிதை நூலை லைப்ரரிக்கு தள்ளிவிடணும்னா இப்படி தலைப்பை மாத்திட்டாதான் வேலைக்கு ஆகுமாம் ஆகக் கட்டுரை நூலைப் ப�ோல புத்தகத்து பேர மாத்தி அச்சடித்து கொணாந்து இருக்காரு. புத்தக தலைப்பு உங்கள மாதிரி ஞானத்தீ ரணம் சுமந்து வேதவனம்ன்னா யாரு தொட்டு பாப்பாங்க நீங்களே சொல்லுங்க” என்றான் அந்தக் கண்ணதாசதாசன். நல்ல விபரம்தான் அந்த நண்பனிடம் ஒன்று கேடகப்போய் அவனுக்கு ஒன்பது கிடைத்தது. கவிதை நூலுக்கு வெளியீட்டு விழா எல்லாம் உண்டா என்ன? அதற்குப் படைபலமும் பணபலமும் கொஞ்சமாவது வேண்டுமே அவனுக்கு. ஏதும் இலக்கிய அமைப்பு கிமைப்பு ஆடல் கூடல் சாடல் பாடல் நாடல் என்று பெயர் வைத்துக்கொண்டு உறவாகவும் இல்லை. ஐநூறு புத்தகங்கள் அச்சடித்ததில் நூறு F எஸ்ஸார்சி 69 புத்தகங்கள் செலாவணி ஆகியது. நேராகவும் கொடுத்தான் தபாலிலிலும் அனுப்பினான் சும்மாதான். ஏது ஏதோ ஊரிலிருந்து நான்கு பிரதிகள் ப�ோட்டிக்கு அனுப்புக என்றால் அன்றே அனுப்பினான். பரிசு கிரிசு எல்லாம் வந்துவிடாது என்பது அவனுக்குத் தெரியாததுவா தபால் செலவும் கொரியர் செலவும் ஆனது. புத்தக விமர்சனத்திற்கு என்று கொஞ்சம் பிரதிகள் அனுப்பினான். சில இதழ்கள் வரப்பெற்றோம் என மட்டும் வெளியிட்டு சிறிய மரியாதை செய்தன அதற்கே கொஞ்சம் ப�ோதை வந்த மாதிரி தெரிந்தது. இது என்னப்பா கேவலம் இத்தனை ஈனத்தனம் என்று தன்னையே நொந்து கொண்டான். இன்னும் நானூறு பிரதிகள் கட்டுக்கு ஐம்பது என எட்டு கட்டுகளாகப் பரணையில் கிடந்தன பார்க்கும் ப�ோதெல்லாம் மனம் என்னவோ செய்தது. தெருவில் மூன்று சக்கர சைக்கிளை உருட்டிக்கொண்டு கோணல் தராசு பத்திரமாய் வைத்திருக்கும் பத்தமடை பேப்பர்காரனிடம் ப�ோட்டு விடலாம்... மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஞானத்தீ என்றல்லவா கவிதைப் புத்தகத்தின் தலைப்பு. அது வேறு மனசாட்சியைக் கொஞ்சமாகவா ரணப்படுத்தியது. ஒரு நாள் அவனுடைய மூத்த சகோதரர் அதிசயமாக அவன் வீட்டிற்கு விஜயம் செய்தார். கையில் மஞ்சள் நிறத் துணிப்பை. அதன் உள்ளிருந்து கட்டு கட்டாக பத்திரிகைகளை எடுத்து வெளியில் வைத்தார். ‘தம்பி எனக்கு மணிவிழா வருது. ஆயிட்டுது எனக்கும் வருஷம் அறுவது. இதுக்கு ப�ோயி  எதுக்கு  ஒரு விழான்னு வீண் செலவுன்னு யோசனையில் இருந்தேன். பாப்பாவும் மாப்பிள்ளையும் வுடமாட்டேன்னு வம்பு பண்ணிட்டாங்க. உன் அண்ணியும் மாப்புள சொன்னதை எததான் தட்டி இருக்கா. பெறவு என்ன பண்ணுவ நானும் சரி செய்யுங்கன்னு சொன்னன். இந்தா பத்திரிகை... நாலு நாளுக்கு முன்னாடி வந்துடு. காரியம் கெனமா கெடக்கு’ அண்ணன் ஒரு பத்திரிகையை அவனிடம் ஒப்படைத்தார். ‘எனக்கெல்லாம் பத்திரிக எதுக்கு கூடப்பொறந்த அண்ணனுக்கு அறுவது. நான் தம்பி எனக்கு பத்திரிக வைக்குணுமா. வாடா கழுதன்னா வரப்போறன்’ பதில் சொன்னான். 70 ஞானவாபி F ‘நீ இனிமேலுக்கா பேச கத்துக்க ப�ோற’ அண்ணன் சிரித்துக் கொண்டார். தேனீர் ஒரு கோப்பை ப�ோட்டு எடுத்து வந்து அண்ணன் முன்பாக வைத்தான். ‘எங்க யாரும் காணும் உன் மவ, ப�ொண்டாட்டி அதுவ எங்க’ ‘சனிப்பிரதோஷம்னு அந்த செவன் கொவிலுக்கு ப�ோயிருக்காங்க’ ‘ரொம்ப நல்லது, வந்தா விஷயம் சொல்லு நான் நேரில வந்தேன்னும் சொல்லு’ அண்ணன் புறப்பட்டார். ஒரு யோசனை அவனுக்குத் திடீர் என்று வந்தது. ‘மணிவிழா அண்ணனுக்கு என்றால் எப்படியும் உற்றார் உறவினர்ன்னு கூட்டம் வரும். அவுங்களுக்கு எல்லாம் தாம்பூலப்பையில தேங்கா ஒண்ணு ப�ோட்டு ப�ோட்டு தருவாரு அண்ணன். அது ஒரு மரியாதையாச்சே. அப்ப தேங்கா ப�ோடாம அதுக்கு பதிலா நம்ப கவிதைப் புத்தகம் ஞானத்தீ ஒரு பிரதிய அந்த பையில ப�ோட்டு குடுத்துட்டா என்ன. நம் வீட்டு பரண்ல செம கொஞ்ச மாதிரிக்கும் இருக்கும். அண்ணனுக்கு உதவினதாவும் இருக்கும்’ சரி எப்படியோ இந்த புத்தகக்கட்டுகள் இடம் பெயர்வதற்கு ஒரு வழி கிடைத்துதான் விட்டது. மகிழ்ச்சி பாவித்தான். லேசாக ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டான்... மணி விழா நாளும் வந்தது. அவன் மனைவிக்கும் இந்த புத்தகக்கட்டுகள் இந்த இடத்தை விட்டு வேறிடம் செல்வதில் திருப்திதான். ஆனாலும் அவன் மனைவிக்கு ஒரு சந்தேகம். அந்த மூத்தார் இந்த ஞானத்தீ புத்தகத்தை தாம்பூலப்பையில் ப�ோட்டு அனைவருக்கும் வழங்கியும் விடுவாரா என்று. இதனை எல்லாம் வெளியில் சொல்லாமல் அழுத்தமாய் இருந்தாள். நமக்கு ஏன் ப�ொல்லாப்பு என்றபடிக்கு அவளின் சாமர்த்தியம்தான் காரணம். டவுன் பஸ்சில் ஏறினால் நாலாவது நிறுத்தம் மணிவிழா நிகழ் மண்டம். ஆனாலும் அவன் ஒரு ஆட்டோ வாடகைக்கு அமர்த்தினான்.அவனும் அவன் மனைவியும் ஆட்டோவில் மையமாய் அமர்ந்து கொள்ள அவர்களைச் சுற்றிலும் கவிதைப் புத்தகக் கட்டுகளை அடிக்கி வைத்துக் கொண்டு மண்டம் நோக்கிச் சென்றார்கள். ஆட்டோகாரன் கடுப்படித்து கொண்டே வண்டியை ஓட்டினான் F எஸ்ஸார்சி 71 ‘இது என்னா டெம்போவா ஆட்டோதானே, ஏறுனா ஆளுவதான் குந்தலாம். பத்து கட்டு புத்தகத்தை தூக்கியாந்து உக்காந்துகற ஆள சுத்தி வச்சிகிட்டா அது என்னா இந்த சனத்துக்கு அம்மாம் சாமர்த்தியம்ங்கறன்.’ ‘இப்ப என்ன சொல்லுற’ ‘நூறுன்னு பேசுனதை நூற்றி அம்பதா குடுங்க’ ‘மூணு பேரு ஆளு மட்டுமே ஏறி இருந்தா அப்ப என்ன சொல்லுவ’ ‘அப்ப சொல்ல என்ன இருக்குது.  இப்ப வண்டில செம ஏத்துனதாலதான பேசுறன்’ ‘அத அங்கய நீ சொல்லி இருக்கலாமுல்ல’ ‘சொன்னா வேற ஆட்டோகாரன தேடுவிங்க எம் ப�ொழப்புன்னு ஒண்ணு இருக்குல்ல.’ ‘சரி அத வுடுங்க உங்களுக்கு எத எப்ப எப்பிடி செய்யிணும்னு எண்ணைக்குதான் வெளங்கிச்சி’ அவன் மனைவிக்கு ஆட்டோவில் சும்மா உட்கார்ந்து இருக்கப்பிடிக்காமல் தன் பங்குக்கு அள்ளிப் ப�ோட்டாள்... அதற்குள்ளாக ஆட்டோ விழா மண்டபத்திற்கு வந்தும்விட்டது. ஆட்டோகாரன் இறங்கி புத்தகக்கட்டுகளை இறக்கி ஒரு ஓரமாக வைத்துக்கொண்டிருந்தான். அவனும் அவளும் மெதுவாக ஆட்டோவைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தனர். அரை மனதோடு அவன் நூற்றைம்பது ரூபாயை எண்ணி எண்ணி ஆட்டோகாரனிடம் ஒப்படைத்தான். ‘ மண்டபத்துக்குள்ளாற இந்த ப�ொத்தக செமயை கொண்டுப�ோய் வச்சிடலாமுல்ல’ அவன் ஆட்டோகாரனிடம் பரிதாபமாய்க் கெஞ்சினான். அதற்குள்ளாக அவன் அண்ணனும் அண்ணியும் அந்த இடத்திற்கு வந்து’ வாங்க எல்லோரும் வாங்க’ என்று அழைப்பு தந்தனர். ‘என்ன இங்க ப�ொஸ்தகம் எல்லாம்’ 72 ஞானவாபி F அவன் அண்ணன் ஆரம்பித்தார். ‘நீ தாம்பூலப்பையில ப�ோட்டுக்குடுக்க நானு நாநூறு புத்தகம் கொண்டாந்து இருக்கன்  எல்லாம் நான்  எழுதின கவிதைங்கஞானத்தீ’ அண்ணனுக்கு பதில் பவ்யமாய்ச் சொன்னான். ‘என்னா இது தாம்பூலப்பைய்ல ப�ோட்டுகுடுக்கறதா இந்த ப�ொஸ்தகத்தயா நல்லா இருக்கு கதெ இதுங்க எல்லாம் யாரு யோசனை’ என்று சொல்லி அவன் கூட நிற்கும் அவன் மனைவியை, இறுக்கமாய் ஒரு பார்வை பார்த்தார். அவன் மனைவி தனக்கும் இந்த யோசனைக்கும் சம்பந்தமில்லை என்று உதட்டைப்பிதுக்கினாள். ஆட்டோகாரன் அங்கயே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு மண்டபத்தில் ஏதும் வேறு கிராக்கி கிடைக்கலாம் என்கிற தொழில் யோசனை. ‘ஏ ஆட்டோ இந்த ப�ொஸ்தகக்கட்டுங்களை அப்படியே நீ எங்க ஏத்துனயோ அந்த வூட்டுலயே கொண்டுப�ோய் எறக்கிடு’ ‘என்ன அண்ண நா ஆசை ஆசையா கொண்டாந்து இருக்கன் இப்படி என்னைக் கெடாவிப் பேசுற’ ‘நீ எதனா எழுதுவ அத கவிதம்ப நாலு பேரு அத ஆமாம்பான். யார் இல்லேங்கறாங்க.. அதுக்குன்னு இத தாம்பூலப்பைல ப�ோடுறேன்னு உனக்கு யோசனை  வந்தா அது வெளங்குமா.’ அதற்குள்ளாக அண்ணனின் மனைவி ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து தடவிப்பார்த்தாள். அவனுக்கு மகிழ்ச்சியாகக்கூட இருந்தது. அவன் மனவி கூட அப்படி அந்தப்புத்தகத்தை எல்லாம் எங்கே தொட்டுப்பார்த்தாள். ‘ஞானத்தீ’ ன்னு புத்தகம் பேரு. தீ தீயின்னு வருது அதப் ப�ோய் சுப நிகழ்ச்சியில தாம்புலப்பையில ப�ோடுவாங்களா’ அண்ணியார் நன்றாகவே பேசினார்.அவனுக்கு சுரீர் என்றது .தலையில் யாரும் குட்டிதான் இருப்பார்களோ என்று தடவிப்பார்த்தான். ஆட்டோகாரன் புத்தகக்கட்டுக்களை ஆட்டோவில் அடுக்கிவைத்துக்கொண்டான். ‘நீங்க யாரு வர்ரீங்க.’ F எஸ்ஸார்சி 73 ‘நீ ப�ோயி  தம்பி வூட்டு வெளி கேட்டை லேசாதள்ளிபுட்டு இதுவுள உள்ளாற வச்சிடு. அவுங்க அப்புறமா வந்து அத எடுத்து எங்க வக்கிணுமோ அங்க வச்சிகுவாங்க. இந்தா நூறு ரூவா. உனக்கு ஆட்டோ சார்ஜுக்கு வச்சிகு’ அண்ணனே ஆட்டோகாரனிடம் எடுத்துக்கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்ட ஆட்டோகாரன் வண்டியை நகர்த்தினான். ‘ ஒரு தேங்காய ப�ோட்டு தாம்பூலப்பையில குடுத்தா தோசக்கி இல்ல இட்டிலிக்கி ருசியா ஒரு சட்னிக்கு ஆவும் இந்த ப�ொஸ்தகம் என்னாத்துக்கு ஆவும் சொல்லு’ அண்ணன் அவனிடம் சொல்லி நிறுத்தினார். ஆட்டோகாரனும் இதனைக் காதில் வாங்கிக்கொண்டான். ‘ நீ ஏன்பா  இன்னும் நிக்குற கெளம்பு’ கெளம்பு ’ என்றார் அவனின் அண்ணன் ஆட்டோகாரனிடம். 3 74 ஞானவாபி F கண்ணகிக்கு சில வினா வீசி எறிந்த தனது இடது கொங்கையின் முனைத் தீப்பிழம்பாகி வானத்தில் பிரகாசித்து ’ஹஹ்ஹா’ எனக் கர்ஜித்து நிற்கிறது. எங்கும் அச்சம். எங்கிருந்தோ தொடர்ந்து கேட்கும் இடியோசை. இனம் இதுவென ச்சொல்லமுடியாத மிருகம் ஒன்றின் உறுமும் குரலொன்று தொடர்ந்து கேட்ட வண்ணமிக்கிறது. நிகழ்ந்துவிட்ட பெருஞ்சோகத்திற்காக மதுரை மா நகரமே திக்குமுக்காடியது.. ப�ொற்கொல்லன் சொற்கேட்டுக் குற்றம் இழைத்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அவன் துணைவிப் பேரரசி கோப்பெருந்தேவி இருவரும் அரசியின் சிலம்பு திருடியது கோவலன் அல்லன் என்பது தெளிகின்றனர். அரசனும் அரசியும் நிகழ்ந்துவிட்ட கொலைக்குற்றத்திற்காக வருந்தி அக்கணமே தம் உயிர் மாய்த்துகொள்கின்றனர்.. இச்செய்தி அறிந்து மதுரை நகரமோ சோகக்கடலில் மூழ்கித்தத்தளிக்கிறது.. கணவனை இழந்துவிட்டப் பத்தினிக் கண்ணகி சினமென்னும் புரவிமீதேறி கூடல் நகர் மாட வீதியில் முழக்கமிடுகின்றாள்.. ‘கண்ணகி அன்னையே’ ஓங்கி அழைத்தான் அக்கினித்தேவன் ’ ‘கற்பினுக்கு கடவுளாய் சமைந்துவிட்ட உன்னிடம் எனக்கு சில கேள்விகள்.’ F எஸ்ஸார்சி 75 ‘யாரது’ என்கிறாள் கண்ணகி. ‘அக்கினித்தேவன் தாயே’ என்றான் இருமுகக்கடவுள் அக்கினி. ‘‘இன்னுமா நீ மதுரை நகரைத் தீக்கிரையாக்கவில்லை எனது ஆணை நின் செவிக்கு எட்டியது தானே’’ கோபக்கனல் தெறித்து வீசுகிறது எங்கும். கண்ணகிதான் பின்னும் பேசுகிறாள். ‘உனக்கு இன்னும் என்னதான் பிரச்சனை அக்கினி தேவா. ஏன் இப்படி வாளா நிற்கிறாய்?’ ‘உன்னிடம் எனக்கு சில கேள்விகள். உண்டு நான் கேட்கட்டுமா.’ நீ ‘‘மதுரையை எரிப்பது எப்போது சொல்’’ ‘கேள்விகள் சில என்னிடம். அவைகள் நின் செவி விழட்டும்.’ ‘குற்றமே செய்யா என் கணவனைக்கொன்ற பாண்டி நாட்டு அரசனும் அரசியும் தம்மை மாய்த்துக்கொண்டனர் நீ அறிவாயோ.’ ‘அறிவேன் தாயே’ ‘அறிந்துமா’ ‘ஆம் தாயே’ ‘விரைக தருக உன் வினாக்களை.’ ‘சோழப்பெரு நாட்டு காவிரிப்பூம்பட்டினத்து ப�ொற்கொல்லர்களால் செய்யப்பட்டது உன் சிலம்பு. அது கொணர்ந்து உனக்குத்தொடர்பே இல்லாப் பாண்டி நாட்டு மதுரை மாநகரில் விற்பது சாத்தியமா என்ன. பூம்புகார் கொல்லன் செய்த சிலம்பின் மதிப்பை பூம்புகார் வணிகர்களல்லவா மொத்தமாய் அறிவர்... பிறிதொரு நாட்டுத்தலை நகர் மதுரையில் அச்சிலம்புதான் விலையாகுமா.’ ‘ பூம்புகார் மா நகரத்துப் ப�ொற்கொல்லர் செய்தஅணிகலன்கள் பூவுலகு மேல் கீழ் என மூவுலகிலும் செலவாணியாகும் பாண்டியனின் இம்மதுரை அத்தனைக்கும் பெரிதா அக்கினி தேவா.’ ‘விலை மதிப்பற்ற சிலம்பு விற்க நீ உன் கணவனுடன் மதுரைக்கு வந்தாய்... உன் கணவன் கோவலனை மதுரை மா நகர் வீதியிலே நீ தனித்துத்தான் அனுப்புவாயா. நீயும் உடன் சென்றிருக்கலாம் அல்லவா.’ ‘‘அறங்காக்கும் மதுராபுரித்தெய்வங்கள் அரண் செய்யும் மதுரைப்பதியல்லவா தவறு நிகழ்ந்துவிடாது’ என்று நம்பினேன்.’ 76 ஞானவாபி F உன் ‘காற்சிலம்புகள் இரண்டையும் விற்கக் கோவலன் வசம் அனுப்பி வைக்காமல் ஒற்றைச்சிலம்பு மட்டுமே ஏன் தாயே நீ அனுப்பி வைத்தாய்.’ ‘தாய் வீட்டுச் சீதனச்சிலம்புகள் அவை. ஒரு நாள் எமக்கு விடிவு வரும். நல்லூழ் எம்மை இவ்வறுமையினின்று மீட்டெடுக்கும். விற்ற சிலம்பின் மாதிரியொன்று கைவசமிருக்கட்டும். அடுத்தொன்றையும் மீண்டும் சமைத்திட அது வழிவகுக்குமே அதனால்தான்’. ‘குடும்பப் பெண்ணல்லவா யோசனை சரித்தான். தீயில் வெந்திட இம்மதுரை மாநகர் என்ன தவறு செய்தது. அதன் மக்கள் என்ன தவறு செய்தார்கள்’ அன்னையே’ அக்கினி தொடர்ந்தான். ‘‘நீ சரியாக வினா வைத்தாய் இப்போது... சுடும் தீயினின்று யார் யாருக்கு விலக்கு அளிக்கவேண்டுமோ அவர்கட்கு விலக்கு அளித்துவிட்டேன். பார்ப்பனர் அறவோர் பசு பத்தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி என அவர்களை மட்டும் நீ உன் தீ நாக்கால் தொட்டுவிடாதே... சேர்க நீ தீத்திறத்தார் பக்கமே. ஆக உன் பணி தொடரட்டும்’. தீப்பிழம்பு தழுவட்டும் மதுரையை’ கண்ணகி ஆணயிட்டாள். அக்கினித்தேவன் கற்புக்கரசியை தரை வீழ்ந்து வணங்கி எழுந்தான். மதுரை நகரமெங்கும் பெருந்தீ.. தீ மள மள என தகித்து எரித்தது. பத்தினிப்பெண் கண்ணகி மதுரையைத்துறந்து மலை வளஞ்சேர் அந்தச்செங்குட்டுவன் வாழ்ச் சேரநாடு நோக்கிப்பயணித்தாள். காலம் காலமாய் மதுரைக்கு நீர்த்தனம் கொடுத்துக் காக்கும் நீர்த் தேவதை வைகைச்செல்வி குமுறி குமுறி அழுதாள். என் வைகை மக்களுக்கு இப்படிக்கொடுமையா. ஒரு பெண்ணின் கற்புக்கா இத்தனை மாசக்தி’ எனத்திக்குமுக்காடினாள். ‘அயோத்தி முன்னவன் ஆணையிட்டான் அவன் இணை சீதை அக்கினி குண்டம் இறங்கினாள். சானகிக் கற்பினில் அக்கினித்தேவனே ஓர் கணம் தீய்ந்து பின் தெளிந்தான் அறிவாயோ நீ’ அசரீரி வானில் முழங்கியது. செவி மடுத்த வைகைப்பெண்ணாள் தகிக்கும் அனலில் செய்வதறியாது திகைத்தாள். ‘என் உடலெங்கும் இப்படியா F எஸ்ஸார்சி 77 தீப்பிழம்பு. சுடும் என்ன கொடுமை என்ன கொடுமை’ என அரற்றினாள். வருண தேவன் வானத்தில் தோன்றினான். தொடர்ந்த இடியோசை. மின்னல் கொப்பளித்தது கரு வானம். ‘என் அன்புக் குழந்தாய் வைகை. பார்வதி கல்யாணத்தில் அந்தக்குண்டோதரன் பெருந்தாகம் தீர்த்த தாயல்லவா நீ. சற்றே ப�ொறு. வருண தேவன் யான் உனக்கு உறவு முறையும் ஆவேன் நினது இடர் ப�ொறுப்பனோ. இதோ எழுகிறது என் சாபம். ‘பேய்மழை விடாது ப�ொழியட்டும். கீழைக்கடலில் ஆழிப்பேரலை ஓங்கி எழுக. அவ்ஆழிப்பேரலை பத்தினிப்பெண் அவதரித்த பூம்புகார் நரை விழுங்கட்டும்’. ‘மதுரை மா நகரத்து அப்பாவிச் சனம் ஆடுகள் மாடுகள் மரஞ்செடிகொடிகள் வைகைத்தாய் கொணர்ந்த பெருந்தனம் இவை எல்லாம் தீயில் வெந்ததற்கு ஈடாக அப்பத்தினிப்பெண் கண்ணகி அவதரித்தக் காவிரிப்பூம்பட்டினம் ஆழிப்பேரலையொன்றால் மொத்தமாய் விழுங்கப்படும்’ அசரீரி வானத்தில் இப்படியாய் ஓங்கி எழுந்து ஓலித்தது.. கோவலன் வெண் புரவி பூட்டிய அழகுத்தேர் ஒன்றில் அமர்ந்து பூவுலகம் நோக்கி வந்துகொண்டிருந்தான். கண்ணகி அவனை எதிர் நோக்கித்தான் காத்திருந்தாள். அவளுக்கு வானத்து எழுந்த அசரீரி கேட்கவே இல்லை. முலை முனை இழந்த பத்தினிப்பெண் கோவலன் கொணர்ந்த தேர் ஏறிப் பெற்றனள் விண்ணகம். நாட்கள் கட கட எனச் சென்றன. பூம்புகார் நகரை ஆழிப்பேரலை உருக்கொண்டு அந்தக் கீழைக்கடலாள் கபளீகரம் செய்தாள். பெருவணிகர் நகரத்தார் மொத்தத்தில் பாதி ஜல சமாதியாயினர்.. மீதமானவர்கள் மூட்டை முடிச்சுக்களோடு குழந்தை குட்டிகளோடு தென் தமிழக கானாடு காத்தான், ப�ொன்னமராவதி காரைக்குடி என மேட்டுக்குப்பங்களுக்கு பயணமாயினர். அன்று தொடங்கியே அன்னை கொப்புடைத்தாய் நகரத்தார்க்குக் காவல் தெய்வமானாள். 3 78 ஞானவாபி F என்னவோ நடக்குது கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்குப்பயணம். என் ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள். ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம் ஒன்றுக்கு மேல் ஆயிற்று.. கொரோனாவின் கோர ஆட்சி தொடர்ந்துகொண்டு இருந்தது. சேரன்மாதேவியில் தங்கியிருக்கும் பேத்தியை நேரில் பார்த்துவிட்டு வந்தால் தேவலாம் என்று எனக்கு ஒரு யோசனை. சிறப்பு ரயில் என்று ஒன்றோ இரண்டோ சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச்சென்றும் திரும்பிக்கொண்டிருந்தது. கொரோனா தன் பேயாட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருந்தது. ஆட்டம் ருத்ர தாண்டவமாக இப்போதைக்கு இல்லை. ஆனால் இங்கேயும் அப்படி ஆகக்கூடும். என்கிறார்கள். நான் பயணித்தது. மூன்றாம் வகுப்புப் படுக்கை வசதி கூடிய. ஏ சி கோச். லோயர் பெர்த் எனக்கு அலாட் ஆகியிருந்தது. F எஸ்ஸார்சி 79 நேரமோ முன் இரவு. ஆனாலும் நல்ல குளிர் அடித்தது... சிலர் சாதுர்யமாக கம்பளிப் ப�ோர்வை இத்யாதிகள் கொண்டு வந்திருந்தனர். சிலர் அவை கொணராது குளிரோடு சிறு சிறு யுத்தம் நடத்திக்கொண்டிருந்தனர். பக்கத்து சீட்டிலும் எதிர் சீட்டிலும் ஒரு அம்மாவும் ஒரு அய்யாவும் ஓயாது தும்மிகொண்டும் இருமிக்கொண்டும் இருந்தனர். எனக்குச் சங்கடமாக இருந்தது. அந்த இருவருக்கும் கொரோனா முகக்கவசம் இல்லை. சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். அந்தப்பெட்டியிலுள்ள எட்டு பேரில் நான் மட்டும் அச்சத்தோடு முகக்கவசம் அணிந்திருந்தேன்.ஒரு சிலர் அதனை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு பாவ்லா காட்டிய வண்ணம் இருந்தனர். வண்டியில் அப்படியும் இப்படியும் உலா வந்த ரயில் டிக்கட் பரிசோதகர் முகக்கவசத்தைக்கடனுக்கு மட்டுமே அணிந்திருந்தார். எனக்குச் சன்னலோர இருக்கை. ஆனால் அதனில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்திருப்பது குறித்து அவளுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. எது பற்றியும் கவலையே இல்லாமல் அவள் மொபைலில் தொடர்ந்து நொள்ளை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தாள். லக்கேஜ் இத்யாதிகளைத் தன் சீட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு நீண்ட இருக்கையை ஆக்கிரமித்தாள். மாலை நேரம். மணி ஏழு கூட ஆகவில்லை. எதிர் ப்பக்க லோயர் பெர்த் ஆசாமி தான் படுக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தான். ஆக அந்த நெருக்கடியின் விளைவாய் உட்காரமுடியாமல் உபரியாகிவிட்ட இருவரும் எங்களின் லோயர் பெர்த்தில் நெருக்ககியடித்து அமர்ந்துகொண்டனர். ரயில் வண்டி விழுப்புரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் கொண்டு வந்திருந்த தோசைப் ப�ொட்டலத்தை அவிழ்த்துச் சாப்பிட்டேன். அப்புறம் ஒவ்வொருவராக அவர்கள் கொண்டு வந்த இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள். ரயிலின் உள்ளே வாட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை.. யாரும் யாருடனும் மனம் விட்டுப்பேசவில்லை. அந்த ஊர்க்கதை உலகத்துக்கதைப் பேசும் காலம் எல்லாம் மலை ஏறி எத்தனைக் காலம் ஆனது.. ரயில் சினேகிதம் என்கிற சொல் வழக்கும் ப�ொய்த்தே விட்டது. 80 ஞானவாபி F மொபைல் இல்லை லாப்டாப் வைத்துக்கொண்டு அவரவர்கள் ஏதோ தெரிந்தது செய்துகொண்டு மும்முரமாகவே இருந்தனர். ஒரு அரை மணி ஆகியிருக்கலாம். டப் டிப்பென்று எல்லாவற்றையும் மூடிவிட்டுப் ‘படுக்கையை ப�ோடலாம்’ என்றனர். எங்கள் பெட்டியின் சைடு லோயரில் ஒரு பெண் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் கணவனாக இருக்கலாம். அவள் சீட்டுக்கு மேலாக இருக்கும் சைடு அப்பரில் படுத்துக்கொண்டு அங்கும் இங்கும் கண்களை உருட்டி உருட்டி பார்த்தபடியே இருந்தான். இருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்துமிருக்கலாம்... அது உண்மையோ என்னவோ... அவர்கள் சின்னஞ்சிறுசுகள்... ஒரு மணி நேரம் ஆயிற்று... சைடு அப்பரில் படுத்திருந்த மனுஷன் படபட எனக் கீழே இறங்கினான். என் தலைக்கு மேலாகத்தூங்கிக்கொண்டிருந்த ஒருவனை ‘எறங்குடா கீழே’ என விரட்டினான். விரட்டப்பட்ட அவன் செகண்ட் பர்த்தில் அரைத்தூக்கத்தில் இருந்தான். திரி திரி என விழித்தான் கீழே இறங்கினான். ‘நானும் பாக்குறன் அப்பயிலிருந்தே பார்க்குறேன். என் வயிஃபையே மொறச்சி மொறச்சி பாக்குற. நீ என்ன ப�ொம்பள ப�ொறுக்கியா.’ கத்து கத்து என்று கத்தினான். அதற்குள்ளாக லைட் எல்லாம் ப�ோட்டுக்கொண்டு எல்லோரும் எழுந்து உட்கார்ந்துகொண்டும் நின்றுகொண்டும் என்ன கலாட்டா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘நீ என் ப�ொண்டாட்டியை வச்ச கண்ணு வாங்காம மொறைக்கில. ஏன் அப்பிடி மொறச்ச. சொல்லு’ ‘நானு அப்பிடி ஒண்ணும் பாக்குல’ பிரச்சனையில் மாட்டிக்கொண்டவன் பதில் சொன்னான். ‘புளுவாத நாந்தான் கண்ணால பாத்தனே’ ‘நானு பாக்குல. அப்பிடியே ஒரு பேச்சிக்கி பாத்தேன்னு வச்சிகிட்டாலும் சும்மா பாக்குறது கூட ஒரு தப்பா.’ ‘வச்சிகிட்டாலும் அது ஒரு தப்பான்னு ராங்கு மசுரா பேசுற.’ ‘அப்பிடி நா சொல்லுலயே’ F எஸ்ஸார்சி 81 ‘சட்டமா சரா பேசுற. உன்ன வுடவே மாட்டன். சொல்லிய அவன் பளார் பளார் என்று கன்னத்தில் நான்கு அறைகள் ஓங்கிவிட்டான். அடுத்த அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகக்கூடினர். ‘இவுனுவுள இப்பிடியே உடக்கூடாது. ப�ொரம்போக்கு புளியாமரத்துல கட்டி தோல அப்பிடியே உறிக்கணும்’ என்றனர் சிலர். அடிபட்டவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவன் முகம் விகாரமாகியது வீங்கிப்போயிற்று. ‘அந்தப் ப�ொண்ணயே கேளுங்க. அவுங்க உண்மையை சொல்லுட்டும்.’ அடிவாங்கியவன் அழுதுகொண்டே சொன்னான். ‘ப�ொம்பள சொல்லுணுமா. எப்பிடி சொல்லுவா நாந்தான் உன்ன பாத்தேனே. எதிர்ப் பேச்சா பேசுற’ மீண்டும் அவன் முகத்தில் இரண்டு குத்து குத்தினான். சில்லி மூக்கு உடைந்தது. ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அவன் அதனை துடைக்கவும் இல்லை. யார் தகவல் தந்தார்களோ அந்த இடத்திற்கு டி டி ஈ வந்து நின்றுகொண்டார். ‘இங்க என்ன நடந்துது. என்ன பிரச்சனை. எதா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுணும். நீங்களே முடிவு பண்ணிக்கறது இல்லே. ரயில்ல ப�ோலிஸ் இருக்கு. அவுங்களுக்கு சேதி ப�ோவுணும்’ ‘ஒத்தன் என் ப�ொண்டாட்டிட கைய புடிச்சி இழுப்பான். நா உங்கள தேடுவேனா’ ‘எதயும் நீங்களே முடிவு பண்ணிகறது இல்லே. எனக்கு த்தெரியுணும். ப�ோலிசுக்கு தெரியணும். இது சின்ன சமாச்சரம் இல்லே’ ‘அது எப்பிடி சாரு இங்க ஒரு அநியாயம் அக்கிரமம் நடக்கும் அது பாக்க நீங்க ப�ொழுதுப�ோயி வருவீங்க நாங்க அது வரைக்கும் தேவுடு காக்குணுமா.’ ‘அடிபட்டவன் செத்து கித்து ப�ோயிட்டா என்னா செய்வ. யாரு பதிலு சொல்லுறது. சட்டம் இருக்கு கோர்ட்டு இருக்கு இன்னும் ஏதுதோ இருக்குதுல்ல’ 82 ஞானவாபி F ‘அப்ப ஒரு ப�ொம்பள அழிஞ்சி ப�ோனாலும் ப�ோவுலாம் சட்டத்தை மட்டும் நேரா நிக்கவச்சிட்டா அது ப�ோதும்.’ ‘ரொம்ப பேசுறீங்க.. இது தப்பு. தப்பு’ மூக்கில்ரத்தம் வழிந்தவன் அப்பிடியே கீழே அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் மூடியிருந்தன. சட்டை எங்கும் ரத்தமாக இருந்தது. இரண்டு ப�ோலிஸ்காரர்கள் சர்ர் புர்ர் என்று அவ்விடம் வந்து, ‘இங்க என்னதான் பிரச்சனை’ சத்தம் ப�ோட்டார்கள். அடிபட்டவன் ப�ோலிஸ்காரர்கள் அருகேப�ோய் நின்று தன் வீங்கிய முகத்தைக்காண்பித்தான். அவனை அடித்தவன் எதுவும் பேசாமல் மவுனமாக நின்றுகொண்டிருந்தான். ‘சார் எம் மொபைல இப்பத்தான் யாரோ ரவுட்டிட்டான் காணுல’ ஒரு நடுத்தர வயதுக்காரர் அழுது அழுது புலம்பினார். ‘என் கழுத்துல இருந்த ரெண்டு பவுன் தங்க நெக்லசு காணூல. அய்யய்யோ’ என்று இளம் வயதுக்காரி ஒருத்தி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள். ‘என் ப�ொட்டி என் ப�ொட்டி என் ப�ொட்டி’ என்றபடி மதுரைக்குப்போகும் மடிசார் புடவை மாமி லப�ோ திப�ோ என்று கூச்சலிட ஆரம்பித்தாள். ப�ோலிஸ்காரர்கள் இருவரும் இந்தக் கம்பார்ட்மெண்டில் சைடு அப்பரில் தன் பெண்டாட்டிக்கு ஏதோ அநியாயயம் நடந்துவிட்டதாய் அமர்க்களம் செய்தவனைக்கெட்டியாகப்பிடி த்துக்கைகளைப்பின்புறமாய் இழுத்துக் கட்டினர். அவனோடு மனைவி என வந்திருந்த பெண் அழுதுகொண்டே நின்றாள். ப�ோலிசுகாரரில் ஒருவர் பேசினார். ‘இவுங்க ரெண்டு பேருமே திருட்டு கும்பலை ச்சேந்தவங்க. இவங்களோட இன்னும் ரெண்டு பேர் ஆணும் ப�ொண்ணும் ஜோடியா உண்டு. ஒரு ஜோடி இப்பிடித்தான் குய்யோ முறையோன்னு பெரிய கலாட்டா ஆரம்பிக்கும் அந்தக்களேபரத்தில் இன்னொரு ஜோடி திருட்டுத்தொழில் பாக்கும். ஆக ஒரு ஜோடி கலாட்டா பண்ண ஒரு ஜோடி திருடும்.’ F எஸ்ஸார்சி 83 அடுத்திருந்த ப�ோலிசுக்காரர் என்ன என்ன அங்கே திருடுப�ோனது அவர்களின் பெயர்விலாசம் ப�ோன் நெம்பர் இன்னும் தேவையானவைகளைக்குறிப்பு எழுதிக்கொண்டார். ‘எந்த ஸ்டேசன்ல நீங்க இறங்குறிங்களோ அந்த இருக்குற ரயில்வே ப�ோலிசு கிட்ட ப�ோய் நடந்த விபரம் குறித்து தகவல் தெரிவிச்சிட்டுப்போகணும். ஏதும் சேதின்னா நாங்க உங்கள கூப்பிடுவோம்’ அவர் தன் பணி முடித்துக்கொண்டார். தாய்மார்கள் அவரவர்கள் தங்கள் கழுத்தைக் கைகளை காதை மூக்கைத் தொட்டு தொட்டுப்பர்த்துக்கொண்டனர். கொண்டுவந்த தங்களது உடமைகளைச்சரி பார்த்தனர். ரயில்வண்டி எது எப்பிடி இருந்தால் எனக்கென்ன என்று சொல்லி வேதாந்தமாய் ஓடிக் கொண்டே இருந்தது. திருச்சி சந்திப்பில் ரயில் வண்டி நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் பெண் ப�ோலிசு இருவர் தயாராய் நின்றுகோண்டிருந்தனர்.. நான்கு ப�ோலிசுகாரர்களும் திருட்டுக்கும்பல் ஆண் பெண் இருவரையும் இறக்கி பிளாட்பாரத்திற்கு நெட்டிக்கொண்டு சென்றனர். திருச்சி சந்திப்பில் எங்கள் கம்பார்ட்மெண்டின் அந்தக்காலியான சைடு அப்பர் மற்றும் லோயர் பர்த்துக்கு இப்போது புதிய ஜோடி ஒன்று அத்தர் மணம் வீச உலாவி வந்து கால்களை நீட்டி அமர்ந்துகொண்டது. நாளைக்கு கன்னியாகுமரியில் அவர்களுக்கு ஹனி மூனாம். அவர்களை ரயில் ஏற்றிவிடவந்தவர்கள் அவர்களிடம்பேசிவி ட்டுச்சென்றதிலிருந்து எனக்குக் கசிந்த சமாச்சாரம். ‘கொரோனா காலத்தில் ஹனிமூனா’ என் மனம் ஏது ஏதோ யோசனைக்குத்தாவியது. 3 84 ஞானவாபி F ‘எங்கேயும் சுற்றி’ மலர் அங்காடிப் பேருந்து நிலையம். உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான். கழுத்து மாரியின் சிலை ஒன்று பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது... அதனைக் குட்டியாக ஒரு கோவில் என்று சொல்லலாம். அதற்கு யாரோ என்றோ ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால், இப்படியும் அப்படியும் கம்பங்கள் நட்டு ஒரு கொட்டகை மாதிரிக்கு ப�ோட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஊரோ என்ன பேரோ... யாருக்கும்தெரியுமா என்ன?. இப்போது அவனும் இவனும் ஒவ்வொரு இரவும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் தான் உறங்கி முடிக்கிறார்கள். மலர் அங்காடிப் பேருந்து நிலையம் மலர்கடைதெரு அடுக்கு மாடி தொலைபேசி நிலையம் பெரிய நீதி மன்றம் அப்படி இப்படி என்று கையில் ஒரு தட்டோடு ஒரு சுற்று சுற்றி வந்தால் நூறு ரூபாயுக்குத்தேரும். காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் எனப் பாகம் ப�ோட்டுக்கொண்டு அந்த திருப்பணியைச்செய்வார்கள். கொட்டகையில் ஒருவர் கட்டாயம் இருக்கவெண்டும். இல்லாவிட்டால் அந்த இடம் அம்போ. பிறகு குந்தி முடங்க F எஸ்ஸார்சி 85 இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அந்தப் பகீரதன் கங்கைக்குப்போராடினமாதிரிப் ப�ோராடினால் பிச்சைக்காரர்களுக்குக் குந்த இடம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் சரியாய் அமையவேண்டும். ப�ோது விடிந்தது. இருவரும் கழுத்து மாரி கோயில் முன்பாக குந்தியிருந்தார்கள். காலத்துக்கும் தட்டு எடுத்துகிணு சுத்தி சுத்தி வர்ரதுதானா நம்ப ப�ொழப்பு’ இவன் பேச்சைத்தொடங்கினான். ‘வேற என்னா தெரியும். ஓயாம ஒரு வெடத்துல ஒழைக்கறது ப�ோவுறது எல்லாம் இனி யம்மாலே ஆவுறகதையில்லே’ அவன்’ ‘நாலு பேருகிட்ட கைய நீட்டூனா ஒருத்தன் கட்டாயம் காசு ப�ோடுறானே அதுக்கு என்னா சொல்லுற’’ ‘அதான் அங்க சூச்சுமம். இல்லாகாட்டி நாம ஏன் இதுல கெடந்து அழியறம். நாலு பேரு நம்மள எட்ட ப�ோடா நாயின்னு அன்னிக்கே சோட்டால அடிச்சி தொரத்தியிருந்தா இன்னிக்கு இந்த தும்பம் இல்ல. ஆனா அதை ஒரு நாயிம் செய்யிலயே.’ ‘சரி வுடு பெரிய வார்த்தை எதுக்கு. உனக்கு சோசியம் எதானு வருமா கிளி சோசியம் கைரேகை பூவு சோழி வச்சி பாக்குறது’ ‘அதுக்கு படிக்கிணும். அது அதுக்கு ப�ொஸ்தகம் இருக்கு. அந்தக் கதெ இங்க சும்மா ஆவாது. உனக்கும் எனக்கும் என்னா படிக்க வரும் நாமதான் படிக்காத முண்டமாச்சே’ ‘எனக்கு ரொம்ப நாளா ஒரு ரோசனை சொல்லுலாமா’’ ‘அது என்னா ரோசனை நீனு விவிதி சந்தணம் நெத்தில வுட்டுக செண்டர்ல வட்டமா கொங்கம் வச்சிக. இடுப்புல துண்டு கட்டிகினு கழுத்து மாரி முன்னாடி சம்மணம் ப�ோட்டு குந்திக நானு ப�ோயி. முழுங்கி தட்டுல எனக்கு புடிச்சத வாங்கியாந்து உன் முன்னால நீட்டுறன். காட்டுறன்’. ‘இது தேவுலாம்பா. அப்புறம் சொல்லு’ செத்த நாழி நீ பாவுலா காட்டு. அப்புறமா என் தட்டுல இருக்குற பண்டத்தை உன் கையால தொடு நீ எடுத்துக. உட்னே நானு கீழ வுழுந்து சாமியோவ் ஒன் உத்தரவுன்னு சொல்லி கும்புட்டு எழுந்து அப்பால ப�ோயிடுவேன்.. நாலு நாளுக்கு இத உடாம செஞ்சா நம்ம தொழிலு பிக்கப் ஆயிடும் இத பாக்குற சனம் தட்டு தட்டுன்னு கையில எடுத்துகினு அதுல எதனா வாங்கிய்யாரும். செலது 86 ஞானவாபி F காசு பணம்னு தட்டுல வைக்கும். பத்து தட்டு வந்துதுன்னா. நாலுக்கு ஒண்ணுன்னு கணக்கு வச்சி நீ தட்ட கையால தொடு அப்புறம் அதுல உள்ளதை எடுத்துகு. சாக்கு பையில இல்ல ஒரு கூடையில கொட்டிக. வந்த தட்டுங்கள்ள பாக்கியா உள்ளத நீ தொட்றக்கூடாது. இப்ப கெரகம் ஆவுல நேரம் காலம் கூடி வருல சாமி உத்தரவு தருலேலேன்னு நானு அவாளுண்ட மொழங்கிடுவேன். நீனு வாயவே தொறக்கவேண்டாம். என்னா நான் சொல்லுறது.’ ‘நீ கூடம் சோரா தான் ரோசன பண்ணுற’ நானு உன்ன ஏதோ சம்பலா கணக்கு ப�ோட்டிட்டன். ‘நாளயிலேந்து இந்தக்கதை ஆரம்பம். நானு சின்ன தட்டுல எதான வாங்கியாந்து ஒன் முன்னாடி வச்சிகிட்டு நிப்பன். நீ அத ஒன் கையால எடுத்துக.’ சாமியோவ் ஒன் உத்தரவுன்னு சொல்லி கீழ வுழுந்து கும்புட்டு நானு அப்பால ப�ோவன். பாக்குற சனத்துல நாலுக்கு ஒண்ணு பழுது இல்லாம இதுவுள கண்ணுகொட்டாம பாக்கும். எட்ட நிக்குற சனம் உன் கிட்ட கிட்ட வரும் தட்டு தாம்பாலம்னு கொண்டாரும். அதுல பலானது வாங்கி வக்கிம் அப்புறம் ரூவான்னும் அது இதுன்னும் தட்டுல வக்கறதுக்கு ஆரம்பிக்கும்... அப்பிடியே நம்ப ப�ொழப்பு ப�ோவுறதுதாம். கழுத்து மாரிக்கு ரவ நல்ல எண்ண வெளக்கு சூடம் வத்தி ஒரு மொழம் பூவு ரவ கொங்கம் ரவ மஞ்சளு செலவு ஆவும்தான் அத எல்லாம் பாத்தா ப�ொழப்பு ஆவுமா.’ ‘எங்கயோ ப�ோவுது ஒன் ரோசனை. நாளைக்கே இத தொடங்குறம்’ என்றான் இவன். முதல் ரெண்டு நாட்களுக்கு மக்கள் யாரும் இவ்விஷயத்தைக் கண்டு கொள்ளவில்லை. பிறகு ஒரு நடுத்தரவயதுபெண்மணி ஒரு சீப்பு வாழைப்பழம் தட்டில் எடுத்துக்கொண்டு வந்து தருவி தருவி நின்றாள். அப்புறம் மூன்று நான்கு ஐந்து என்று ஆண்கள் பெண்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆப்பிள் சாத்துக்குடி கொய்யா வாழைப்பழம் தேங்காய் திராட்சை எனத்தட்டுக்களில் வர ஆரம்பித்தன. ‘சாமி உத்தரவு தருலன்னா தட்டுல உள்ள அந்த பழத்த இல்ல பண்டத்த என்னா செய்யுறது.’ வந்திருந்த பெண்மணி கேட்டாள். F எஸ்ஸார்சி 87 ‘அவன் பட்டென்று பதில் சொன்னான்.’ ஒன் யோசனை ஏன் இப்பிடி கோணலா ப�ோவுது சாமி உத்தரவு தருலேன்னா. உனக்கு தோஷம் இருக்குதுன்னு அருத்தம். அந்த பண்டத்த அப்படியே பசு மாட்டுக்கு வையி. இல்ல காசு பண்ம்னா ஏழப் பாப்பானுக்கு குடுத்துடு. ஒண்ணும் ஆவுல்லன்னா கோவில்ல எம்மானோ சனம் குந்தி கெடக்கு அங்க குடு. ஒண்ணும் ஆவுலன்னா ஒடுற தண்ணில வுட்டுடு. இல்ல சமுத்தரத்துக்கு கொண்டும் ப�ோ அங்க வுடு. மீனுவ திங்கும் ஆனா ஒன் வூட்டுக்கு கீட்டுக்கு எடுத்துகினு ப�ோயிடாதே. அதுல மட்டும் உசாரா இரு. தெரிதா ‘சரி சாமி’ என்றாள் அவள். முதல் முதலாக அவனை இப்போதுதான் சாமி என்று ஒருவர் அழைத்து அவன் கேட்கிறான். மனதிற்கு இந்த ‘சாமி’ எத்தனை இதமாக இருக்கிறது என்று நினைத்தான். நான்கு தட்டுக்கு ஒரு தட்டு இவன் கையால் தொடமாட்டான். அதில்மட்டும் உறுதியாக இருந்தான்.. தட்டில் ரூவா நோட்டு எது இருந்தாலும் அதனைக்கண்களால் இவன் பார்க்கவும் மாட்டான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டே இருந்தது. மலர்க்கடை பஸ் ஸ்டாண்ட் குறிசொல்லுற மாரி கோவில்னு அதனை மக்கள் பேசிக்கொண்டார்கள். கழுத்துமாரிக்கு ஒருகால பூசை செய்ய ஒரு நொண்டி குருக்கள் வந்து அவர்களோடு சேர்ந்துகொண்டார். கோவில் முன்பாக இரண்டு மூன்று பழக் கடைகள் பூக்கடைகள் செயல்படத் தொடங்கின. வெற்றிலைபாக்கு பழ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு மஞ்சள் பை நிறைத்துக்கொண்டு காணிக்கைக் காசு பணங்கள் சேர்ந்துவிட்டன. பூசைக்கு வரும் நொண்டி குருக்கள்தான் காசு எண்ணி எண்ணி அவர்கட்கு வருமானக் கணக்குச் சொல்லுவார். அவருக்கு மாதச் சம்பளம். அதனைத் தவறாமல் கொடுத்தார்கள். நொண்டிக்குருக்களுக்கும் பரம திருப்தி. நல்லபடியாக அவர்கள் எல்லோரின் காலமும் ப�ோய்க்கொண்டிருந்தது. இப்படிக்கூடவா நடக்கும் என்று கேட்டால், நடக்கும்தான். நடந்ததே.’ ஒரு நாள் அதிகாலை மலர்க்கடைப் பேருந்து நிலையம் வந்த அதிகாரிகள் பெரிய கேட்டை இழுத்துப் பூட்டினார்கள். இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் இனி சாலையில் அங்கங்கே நிற்கும். ஆட்டோவில் அறிவிப்பு செய்தார்கள்... பேருந்து 88 ஞானவாபி F நிலைய சிமென்ட் ஷீட் கூரையை மாற்றி ஆர் சி கான்க்ரீட் ப�ோட்டு ஓட்டப்போகிறார்களாம். காண்ட்ராக்ட் எடுத்த கம்பெனிக்காரர்களின் தொப்பித்தலை ஆக்கிரமிப்பு எங்கும் தெரிந்தது. இவனும் அவனும் இனி என்ன செய்வது? இருவரும் கழுத்து மாரி முன்பாக கைகளைப்பிசைந்து கொண்டு நின்றார்கள். கண்கள் கலங்கி இருந்தன. ‘யாரு இங்க எடத்தக்காலி பண்ணு. வேல செய்யுற கம்பெனி ஆளுவள தவுற பாக்கி யாருக்கும் இங்க எடமில்ல. நவுறு நவுறு.’ என்று காவலர்கள் விரட்டிக்கொண்டே இருந்தார்கள். ‘எங்க ரெண்டு பேரு ப�ொழப்பு. அந்த நொண்டி குருக்களு சேத்தா மூணு ஆளுங்க இங்க குந்தி சனங்களுக்கு தெனம் தெனம் குறி சொல்லுவம். இதோங்க இருக்குற கழுத்து மாரி சந்நிதில. அது ப�ோச்சே இப்ப அது எல்லாமே ப�ோச்சே’ இருவரும் ஓங்கி ஓங்கி கத்திக்கொண்டு இருந்தார்கள். காண்ட்ராக்ட் கம்பெனியின் வாட்ச்மென் கையில் தடியோடு இருவரையும் நெட்டித்தள்ளி இரும்பு கேட்டுக்கு அப்பால் கொண்டுவிட்டான்.. குறி கேட்க சில ஆண்களும் பெண்களும் கையில் தட்டோடு கழுத்துமாரிகோவிலை எங்கே என்று தேடிக்கொண்டு இருந்தார்கள். ‘ஏன் என்ன ஆச்சு குறி சொல்லுற சாமிவ எங்க’ என்று மக்கள் வினவியபடி இங்கும் அங்கும் தேடிக்கொண்டே இருந்தார்கள். கையில் தடியோடு இருந்த கம்பெனி வாட்ச்மென் சொன்னான். ‘சாமிவ ரெண்டும் கயிலங்கிரி ப�ோயிருக்கு. அங்க இருக்குறது குருசாமி. அதான் பெரியசாமி இவாள அங்க வரச்சொல்லி. உத்தரவு. ஆயிட்டுது... எப்ப இங்கன திரும்ப வரும்கறது ஆரு கண்டா.’ இவனும் அவனும் அந்த வாட்ச்மென் சொன்னதை ஒருகணம்கேட்டு விட்டுப் பிரமித்துப்போய் நின்றார்கள். ‘இதுவும்கூட தேவுலாம்’ என்றனர் இருவரும். ‘இங்கன எம்மானோ மேம்பாலம் கட்டி கட்டி கெடக்குது. எதனா ஒரு மேம்பாலத்துக்குத்தாழ பெரிய பெரிய செமெட்டுத் தூணுவ இருக்குமே அது சுத்தி அங்க அங்க நம்ப ஆளுவ F எஸ்ஸார்சி 89 மொத்தமா குந்திகினு இருக்கும். மேல பாலம் தாரு ரோடு அதுல காருவ பஸ்ஸுவ ப�ோவும். பாலத்துக்கு கீழ நாம அப்பிடி இப்பிடி இருந்துக்கறதுதான் அந்தப் பாலங்க கட்டுனது பின்ன எதுக்குன்றே’ என்றான் அவன். காசு பணம் திணித்து இருக்கும் மஞ்சள் பையைக் கெட்டியாகப்பிடித்தபடியே இவன் அவனோடு மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தான். ‘ஆ தெரியுது பாரு இன்னும் ஒரு மைலு இருக்கும் அதுதான மேம்பாலம். நட நட’ என்றான் அவன். ‘மொத நாம தூக்கிகினு சுத்தி வருவமே அந்த தட்டுவ ரெண்டும் பத்திரமா இருக்குல்ல’ கேட்டான் இவன். ‘ஒன் புத்தி ஏன் இப்பிடி கீழ கீழயே ப�ோவுது’ அவன் பதில் சொல்லி நடந்து’ கொண்டிருந்தான். 3 90 ஞானவாபி F ஞானவாபி ‘எட்ட நவுறு உறமொற சாதி சனம் வாய்க்கர்சி ப�ோட்டாச்சி. மங்குடம் ஒடச்சிட்ட உங்க ஜோலி அத்தோட சரி’ ‘எத்தோட சரி’ ‘நாங்கதான இங்க மயானத்துல சேத்த ப�ோட்டு வக்கோலு வச்சி சவத்த மொழுவறது’ ‘ஜனத்துல நாங்க வேற... நீ சவத்துகிட்ட கிட்ட அப்பிடி இப்பிடி வரவேண்டியதில்லே. நாங்க பாத்துகுவோம்.’ ‘சாமி நானு சொல்றத செத்த காது கொடுத்து கேளு. இந்த ஊரு மண்ணு ஓடுற தண்ணி வீசுற காத்து அது அடிக்குற வாட்டம் மழை மப்பு நீ கொண்ணாந்து இருக்குற வெறவு வெரட்டி காஞ்சது ஈரம் வந்த சவத்துல ஆணு ப�ொண்ணு பெரிசு சின்னது வெசம் சாப்புட்டது பலான காயிலா கண்டது அது இதுன்னு இருக்குதுங்கறன்.’ ‘எது எப்பிடி இருந்தாலும் நாங்க பாத்துகுவம் நீ தூர ப�ோ.’ ஆங்கில எழுத்து U கணக்கில் நாமம் ப�ோட்டு அரக்கு ஜரிகை வேட்டியை கீழ்பாய்ச்சியாய்க் கட்டிக்கொண்ட பெரியவர் சொல்லிக்கொண்டிருந்தார். காவிரியின் தென் கரை F எஸ்ஸார்சி 91 பெருநகரத்து சவம் ஒன்றை எரிக்கத்தான் காவிரி தென்கரை ஓயாமரி சுடுகாட்டில் இத்தனைப் பாடு. இரண்டு வெட்டியான்களும் அருகிருந்த நெட்டை அலகு ரெட்டைக்கழுகுகள் குலாவும் வன்னிமரத்தடியில் அமர்ந்து ஒருதரம் வெற்றிலை ப�ோட்டுக்கொண்டார்கள். ‘எல பூரான் அண்ணிக்கி ராமம் ப�ோட்டுகிட்ட அய்யிரு கெராக்கி ஒண்ணு வந்துதே அதுவ பாட்டுக்கு நம்மள்ட்ட அந்த சவத்த வுட்டுட்டு ப�ோயிடல.’ ‘‘மாமாய் ப�ோன வெசாழக்கெழம அது. ராமம் ப�ோட்டுகின அய்யிருவதான். வடகர காவேரி அந்த ஊருதான் அப்ப ஒண்ணும் பிரச்சனையே வருல.’ ‘இது என்னா சேதி இம்மாம் புடிவாதம் ஆங்காரம்’ அந்தக் கேவி சார் வெட்டியான்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். கேவி வங்கியொன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கட்டிய மனவி ப�ோயாயிற்று. குழந்தைகள் உண்டா என்பது தெரியவில்லை. ஓயாமரி வெட்டியான்களோடு எப்போதும் கூடவே இருக்கிறார். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. மயான ஊழியர்கள் அவரை ’அய்யிரு எங்க சாமி. எங்க கூடத்தான் இருப்பாரு. நல்லது கெட்டது எதுன்னாலும் அந்த அய்யிருதான். இங்கிலீசு படிச்சவரு. பின்சன் கனமா வருது.. கெடக்குட்டும் எங்க கம்புல எங்களோட குந்தி இருக்க ப�ோவ எல்லாத்துக்கும் ஒரு மனசு வேணுமே’ என்பார்கள். ‘நீங்க அந்த சவத்த மொழுவுல கோணல் மாணலா கெடக்குது’ கேவிதான் கேட்டார். ‘இல்ல சாமி நாங்க சவம் கிட்டத்துல வரக்கூடாதுன்னு அந்த அய்யமாரு சொல்றாங்க’. பெறவு எப்பிடியோ ப�ோவுட்டும்’ என்றான் பூரான். ‘தொடகூட்டதுன்னு சொன்னா. நாம கிட்ட ஏன் ப�ோவுணும் வுடு வுட்டுடு அத. ஆவுறது ஆவுட்டும்’ அடுத்த வெட்டியான். ‘சாமி ராமம் ப�ோட்ட அய்யிருவ. ப�ோன வாரம் வந்தாங்க. அப்ப ஒண்ணும் இப்பிடி சேதி இல்ல. நாங்கதான் சவத்த மொழுவுணம்’ என்றான் பூரான். ‘ராமம் எப்பிடி இருந்திச்சி’ 92 ஞானவாபி F ‘நெத்தில தான்’ ‘அப்பிடி இல்ல மாம்மோய், அந்த அய்யிருவளுக்கு மூக்குமேல ராமம் இருந்துச்சி. இந்த அய்யிருவுளுக்கு அது மூக்கு தொட்டுகினு வருல நெத்தியோட சரியா ப�ோச்சி’ விளக்கமாய்ச்சொன்னான் அடுத்த வெட்டியான். ‘அதாம்பா அதுல ரெண்டு சாதி இருக்கு. ராமம் கீழ் எறக்கி ரவ மூக்கு மேல வந்தா அது தெங்கலம்பாங்க. நெத்தியோட வளச்சி சுருட்டிகிட்டா அது வட கலம்பாங்க. அதான் சாதியில கீழ மேலன்னு. இருக்கும். அது எதுக்கு இப்ப’ என்றார் கேவி.. ‘நீங்க பூச வுடுறவரு. இதுல கூடம் மூக்கு தொட்டு வுடுறது தொடாம வுடுறது எல்லாம் இருக்கா’ பூரான் சிரித்துக்கொண்டான். ‘ஒனக்கு தெரியாத சேதியா என்கிட்ட கேக்குற.’’ என்றார் கேவி கேவி சவம் சேரு குழைத்து முழுகுகிற அந்த இடம் நோக்கி. வேக வேக மாகவே நடந்தார். ‘நானு இப்ப அங்கே வர்ரேன்’ கத்தினார். ‘யாரும் இங்க வரவேண்டாம். இது சுயமாச்சாரியா காரியம். வேத்து மனுஷாள் வரப்பிடாது உங்களையும் சேத்துதான்’ அவருக்கு கட்டளை வந்தது. கேவி அப்படியே நின்றார். திரும்பி அந்த வன்னிமரம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.. கேவிக்கு மனக்கிடங்கில் நினைவு எத்தனையோ வருடங்கள் பின்னே சென்றது. தான் பிறந்த ஊரான தருமங்குடியில் தனது தந்தையோடு வேத நாராயணப்பெருமாள் கோவில் சம்புரோக்‌ஷணத்தின் ப�ோதுதான் ஒரு சாயரட்சை இப்படி நடந்தது. திருமடப்பள்ளியில் கோஷ்டி ஆரம்பமாகியது. சாப்பிடலாம் என அப்பாவோடு கேவி அமர்ந்திருந்தார். ‘இங்க யாருப்பா வைஷ்ணவா கோஷ்டில ஸ்மார்த்தன் அவன எழுப்பு எழுப்பு ஒடனே எழுப்பு பாக்கி காரியம் கோவில்ல ஆகிறதா இல்லே. இந்த சம்புரோக்‌ஷண சமாச்சாரம் எல்லாத்தையும் அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு நாங்க எல்லாரும் எங்க ஊர பாக்க கெளம்பிடறதா’ என்று ஒரு வைரக்கடுக்கன் அணிந்த நாமக்காரர் சத்தம்போடக் கேவியை அவர் தந்தையோடு வெளியே F எஸ்ஸார்சி 93 ப�ோகச்செய்தனர். அவர்கள் பிறகு கதவு தாளிட்டுக்கொண்டனர்’. திருமடப்பள்ளி உள்ளாக கோஷ்டி தொடர்ந்தது. ‘இதுல ஒண்ணும் தப்புல்ல. இது அவா அவா மொற. நம்மள ஒரு வெவரம் இல்லாதவன் அழச்சிண்டு ப�ோய் பந்தி இலயில உக்காரவச்சீட்டான் நாமளும் ப�ோனது தப்பு. பசி நமக்கு’ என்று கேவியின் தந்தை சொன்னதும் நினைவுக்கு வந்ததது. ‘என்னா சாமி. அப்பிடி ஒரு யோசனை’ என்றான் பூரான். ‘ஒண்ணுமில்லே’ சமாளித்தார் கேவி.. ஒயாமரி சுடுகாட்டில் அன்று வெட்டியான்கள் இருவர் மட்டுமே இருந்தனர். கேவி அவர்களோடு வழக்கம் ப�ோல் பேசிக்கொண்டு இருந்துவிட்டுத்தனது சிந்தாமணி ஜாகை நோக்கிப்புறப்பட்டார். அன்று இரவு கருத்த மேக மூட்டம். ஈரக்காற்று. அந்தச்சவம் சரியாக எரியவே இல்லை. ‘இன்னும் ரவ நேரம் ஆனா. வடகரை அய்யமாரு பால் தெளிக்கு ப�ொறப்பட்டு வந்துடுவாங்க. ப�ொணம் இன்னும் சமஞ்சி சாம்பல் பூக்குல’ என்றான் பூரான். கேவி விடியற்காலையிலேயே எழுந்து ஓயாமரி சுடுகாட்டுக்குப்புறப்பட்டார். வாயில் இரும்பு கேட் ஓரமாய் தன் டூ வீலரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி மெல்ல வந்துகொண்டிருந்தார். ‘வேல இன்னும் முடியில’ ‘நாங்கதான் கிட்ட ப�ோவுலயே சாரு’ ‘அவுங்க கெளம்பி வந்துட்டா என்ன செய்யுவ’ ‘அவுங்கதானே சவம் கிட்ட வராதேன்னு சொன்னது’ என்றான் பூரானுக்கு அடுத்த வெட்டியான். பூரான் கேவியையே பார்த்துக்கொண்டு நின்றான். ‘நீங்க சவத்தை நல்லா எரிய வுட்டு குறையை சரி பண்ணுங்க. நானு ப�ோயி அவுங்கள ரெண்டு மணி நேரம் தாமதமா கெளம்பி இந்த பாலு தெளி காரியத்துக்கு வரச்சொல்லுறன்.’ சொல்லி விட்டு கேவி புறப்பட்டு வட கரை அக்கிரகாரம் சென்றார். 94 ஞானவாபி F மேலச்சித்திரை வீதி சாவு வீட்டின் வாயிலில் பெஞ்சும் நாற்காலியும் கோணல் மாணலாய்க்கிடந்தன சஞ்சயன நிகழ்வுக்கு உறவினர் சிலர் கிளம்பிக்கொண்டிருந்தனர். சவத்திற்கு கொள்ளி வைத்த காரியக்காரரைக் கேவி அழைத்துத்தனியாகப்பேசினார். அந்தச் சவம் இன்னும் எரியாத நிலையில் இருப்பதை அவருக்கு விளக்கினார். இரண்டு மணி நேரம் தாமதமாக ஒய்யாமரிக்குப்புறப்படலாம் என்று சொல்லி முடித்தார். ‘சவத்த சேத்த வச்சி முழுகறது எப்பவும் சரியா இருக்கணும்’ என்றார் கேவி... ‘அங்கதான் தப்பு நடந்து ப�ோச்சி. மயானத்தொழிலாளிய சொல்றத நாம என்னன்னு கேக்கணும் நீ வாய தெறக்காதேன்னு என்னத்தானே சொன்னார் அந்த’ வைரக்கடுக்கன் வாத்தியார்’’ என்றார் காரியக்காரர்.. ஆக சம்பந்தப்பட்டவர்கள் ரெண்டு மணி தாமதித்து மயானம் புறப்பட்டுச் சென்றனர். அங்கு பூரானும் அடுத்தவனும் ஓயாமரியில் சவ எரிப்பு வேலையைச் சரியாக முடித்து தகன மேடையை சீராக வைத்திருந்தனர். பால் தெளி காரியமும்’ டாண்’ என்று முடிந்து ப�ோயிற்று. இடுகாட்டு தொழிலாளிகள் அந்த இருவருக்கும் பேசிய பணத்தைவிடக்கூடுதலாகவே ஐநூறு ஐநூறு என. காரியக்காரர் கொடுத்து முடித்தார்... கேவிக்குத் தரவேண்டும் என்று ஞாபகமாய் எடுத்துவைத்த ஒரு ஆயிரம் மட்டும் இன்னும் அவரிடம் பாக்கி இருந்தது.’ கேவிசாரு எப்பிடி, இங்க, அவுரு யாரு’ என்றார் காரியக்காரர். ‘அத தான இந்த நிமிஷம் வரைக்கும் எங்க கையில சொல்லமாட்டேன்றாரு. பூச வுடுற அய்யிருதான். கவுச்சி கசமாலம்னு எதுவும் துன்னமாட்டாரு. எந்த கெட்ட பயக்கமும் இல்ல அவுருக்கு மாசா மாசம் பிஞ்சன் வருது வாங்குறாரு. அந்த காசில யும் பேர் பாதி எங்க ஆளுவுளுக்கு வச்சிகுன்னு குடுத்துடுவாரு ஆனா மசானத்து காரியம்னு வர்ர யாரும் ஒரு பைசாவ அவரண்ட தானம்னு கொடுத்துடலாம்னா அது முடியாது’ என்றான் பூரான். F எஸ்ஸார்சி 95 ‘இந்த கேவிசாரு யாரு தகப்பனா தமயனா ஒரு செனேகிதமா அந்த சொடலமாடனேதானா, மாசாணமுத்தா, இல்ல கழுத்துல பாம்பு சுத்துன செவபெருமானா யாருன்னு இன்னவரைக்கும் தெரியல’ என்றான் பூரானுக்கு அடுத்து நின்ற மயானத்தொழிலாளி. ‘எப்பவும் தெரியாததுதான் சாமி கெனம்’ என்றான் பூரான். 3 96 ஞானவாபி F கேட்டிலும் துணிந்து நில் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில்தான் அந்தக்கல்யாண மண்டபம் நேற்றைக்கு மாலையில் ஓகோவென்று ஜானுவாசம். திருவெண்காட்டார் நாதசுவரம். இன்னும் என்ன என்னவோ அமர்க்களம். வாண வேடிக்கை. புஸ்வாணம், பூமாலை அலங்காரம். சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம். பாண்டு வாத்யம் இவைகளோடு. இலக்கண சுத்தமாய் ஜானுவாச டிபன், இரவு நிச்சயதார்த்தம் முடிந்து கச்சிதமான டின்னர். கும்பகோணம் நகரத்து ஆனையடி சின்னசாட்டைதான் எல்லா சமையல் ஏற்பாடும்... இதுவரைக்கும் சரியே... காலை ஏழரை மணிக்கு முகூர்த்தம். அதிகாலை ஐந்து மணிக்குச்சரியாக மங்கள ஸ்நானம். வாத்தியார் இரவு சட்டமாய்ச் சொல்லிபிட்டுத்தான் ப�ோனார். மாப்பிள்ளை வீட்டார் ஜாகை கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது. மங்கள ஸ்நானத்திற்கு மங்கள வாத்தியத்தோடு அழைக்க அட்சதை சந்தனம் குங்குமத்தோடு மங்களகரமாய் பெண் வீட்டார் வரவேண்டும். ஏனோ வரவில்லை. ஆமாம் வரவில்லைதான். எவ்வளவு நேரமாய் காத்திருப்பது... ‘என்னப்பா இதுல எதுவோ பிரச்சனை இருக்கு. நாம அது தெரியாம இங்க முழிச்சிட்டு நிக்குறம்.’ F எஸ்ஸார்சி 97 ‘நேற்று ஜானுவாசம் நல்லா முடிஞ்சி, நிச்சயதார்த்தம் ஆனதே. இன்னைக்கு காலையில என்ன ஆச்சி.’ மாப்பிள்ளையும் அவன் தந்தையும் பேசிக்கொண்டார்கள். மனம் கனக்க கல்யாண மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்... மண்டபவாசல் வெறிச்சென்று கிடந்தது. நாதசுரக்காரர்கள் கைகளைக்கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நின்றுகொண்டிருந்தார்கள். சமையல் சின்ன சாட்டை மண்டபத்திண்ணையில் இடிந்துப�ோய் அமர்ந்திருந்தார். ‘ஏன் என்ன ஆச்சு.’ தந்தையும் மகனும் மண்டபத்துக்குள்ளாக நுழைந்தனர். ‘பெண்ணின் தந்தை’ சுவாமி என்ன மன்னிச்சுடுங்கோ, என்று அவன் தந்தையின் கால்களில் விழுந்து கதறிக்கொண்டிருந்தார். ‘வேண்டாம் எழுந்திரிங்கோ’ ‘‘எம் ப�ொண்ணையும் ப�ொண்டாட்டியையும் வெடி காத்தால மூணு மணிலேந்து காணும் அவா எங்கயோ ப�ோயிட்டா’’ ‘யாரு யாரு’ ‘கல்யாணப்பொண்ணு அவ அம்மா அதான் எங்காத்துக்காரி ரெண்டு பேரும் எங்க ப�ோனான்னு தெரியல’ நா நாயாய் அலஞ்சி பாத்துட்டேன். எங்கயும் காணும்’ அவரின் கண்கள் குளமாகியிருந்தன. அவனுக்கு சட்டென்று விஷயம் விளங்க ஆரம்பித்தது. கல்யாணப் பெண்ணும் அவள் தாயும் ஜூட். எங்கோ தலை மறைவு ஆகிவிட்டார்கள். இந்த மனிதனுக்கு அதான் பெண்ணின் தந்தைக்கு த்தெரிந்து நடந்ததோ தெரியாமல் நடந்ததோ யார் அறிவார்... திருவெண்காட்டு தவில்காரன் ஒரு சேதி சொன்னான் ‘ராத்திரி நடு சாமம் இருக்கும் ரெண்டு மூணு பேர் ப�ொம்பளைங்க ஒரு ஜட்காவுல ஏறினாங்க. ரயில்வே ஸ்டேஷன் ப�ோறதா குசு குசுன்னு பேசிகிட்டாங்க. அதுங்க யாரு எவுரு யார் கண்டா. நடு ராத்திரி மெட்ராஸ் ப�ோற ப�ோட் மெயில் வண்டில ப�ோயி இருக்கலாம் எங்க ப�ோனாங்களோ.’ பெண்ணின் தந்தை தலையில் தலையில் அடித்துக்கொண்டார். பெண் வீட்டு உறவுக்காரர்கள் பாதிக்குமேல் மண்டபத்தைக்காலி செய்து ப�ோய்க்கொண்டு இருந்தார்கள். 98 ஞானவாபி F ‘இப்படி கழுத்த அறுக்கலாமா. இதவிட எங்கள நீங்க கொன்னு ப�ோட்டு இருக்கலாம். இது அவமானம். எவ்வளவு பெரிய அவுமானம். ஆத்துல குளத்துல எறங்கி விழுந்து செத்து ப�ோயிடலாம்’ என்றார் அவனின் தந்தை. அதற்குள்ளாக என்ன சேதி யார் சொன்னார்களோ மாப்பீள்ளை வீட்டார் எல்லோரும் மண்டபத்துக்கு வந்து காச் மூச் என்று கத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் ப�ோலீசுக்குப்போகலாம் என்றார். இன்னொருவர் அது சரியில்லை என்றார். தலைக்கு தலை ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அவன் தாய் மயக்கம் வந்து மூலையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தார். அவன் ஒரு நிமிடம் யோசித்தான். இப்போது என்ன செய்வது. இதிலிருந்து எப்படி மீள்வது இங்குள்ள எல்லோரையும் எப்படி மீட்பது என்று மண்டையைக்குழப்பிக்கொண்டான்... ‘‘இங்க டிபன் ரெடியா இருக்கு. மதியம் சமையலுக்கு ஆக வேண்டியது தயார் ஆகி கெடக்கு. மண்டபத்துல மேளம் நாதசுரம் புரோகிதர் எல்லோரும் ரெடியா இருக்கா. இந்தக் கல்யாண மண்டத்துல எங்க பந்துக்கள் மொத்தமும் இருக்கா. ஆக எங்கப்பா அம்மாவுக்கு இந்த மண்டபத்தில அறுபது அதான் மணி விழாவ நாம தடபுடலா பண்றம். மாட்டுப்பொண் ஆத்துக்கு வந்து நடக்கலாம்னுதான் இருந்தது. ஆனா பகவான் விருப்பம் வேறயா இருக்கு’... அவன் எல்லோருக்கும் பவ்யமாய் இப்படி அறிவித்துக்கொண்டு இருந்தான். ‘இப்ப இதே மண்டபத்துல அறுபது கல்யாணம் எங்க அப்பா அம்மாவுக்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கணும்’ அவரவர்கள் இனி அந்த நிகழ்ச்சிக்கு தயார் ஆகணும். ‘கல்யாணத்துக்கு கொண்டு வந்த மொத்த ரொக்கத்தையும் கல்யாண மண்டபம், சமையல், நாதசுரம், வேலைக்காரர்கள், புரோகிதர்கள் என அவனே பங்கீடு செய்து முடித்தான். ‘பெண்ணின் தந்தையிடம் ப�ோனான்’ சுவாமி நமஸ்காரம் இங்க எங்க அப்பா அம்மாக்கு சஷ்டி அப்த பூர்த்தி நடடக்கறது. இனிமே மண்டபத்துல ஒத்த நயா பைசா நீங்க செலவு F எஸ்ஸார்சி 99 பண்ணக்கூடாது. எல்லா செலவும் நானே பாத்துகறேன். யார் யாருக்கு எவ்வளவு பாக்கியோ. அது என்னோடது. வாங்கோ வந்து எங்காத்து ஃபங்கஷன நடத்திக் கொடுங்க’ சொல்லி முடித்தான். மாப்பிள்ளை வீட்டு சொந்த பந்தங்களுக்கு ரொம்ப திருப்தி. கல்யாணம் நின்னுப�ோச்சி. அந்தப் ப�ொண்ணுக்கு விருப்பமில்லே. அப்புறம் அந்த பிடிக்காத கல்யாணம் நடக்கறதுதான் என்னத்துக்கு. ஆனா இதை பெற்றோரின் மணிவிழாவா மாத்தின திட்டத்தை, ப�ொண்ண பெத்த தந்தைக்கு இந்த இக்கட்டான நேரத்துல ஒத்தாசையா இருந்த அவன் நல்ல குணத்தை எல்லோரும் மனதாரப்பாராட்டினார்கள். பெண்ணின் தந்தை ‘நீ என் மகன்’ என்று அவனைக்கட்டி அணைத்துக்கொண்டார். மணிவிழா முடிந்தது. ஆசிபெற்றவர்களும் ஆசிர்வதித்தவர்களுமென மண்டபம் ஏக அமர்க்களமாக இருந்தது. திருவெண்காட்டார் நாதசுரமும் தவிலும் மண்டபம் அதிரக்கேட்டுக்கொண்டு இருந்தது. சின்ன சாட்டையின் முகூர்த்த சாப்பாடு. திருப்தியாக சாப்பிட்டு முடித்த உற்றாரும் உறவினரும் மகிழ்ச்சியாக தாம்பூலம் பெற்றுக் கலைந்தனர். திருக்கடையூர் என்னும் திருத்தலம் மயிலாடுதுரைக்கு மிக அருகில் இருப்பதை அவன் அறிவான். அது மணிவிழாத்தலம் என்கிற விஷயமும் கூடவே அறிதிருந்தான். அன்று மாலையே அவன் தனது அம்மாவையும் அப்பாவையும் முகூர்த்த மாலையோடு திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடப்பெருமானைத் தரிசிக்க அழைத்துப்போனான்.. 3 100 ஞானவாபி F குரு வந்தனம் குயவன் களிமண்ணை சுழலும் அச்சக்கரத்தில் எடுத்து எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான் எதனைச் செய்வான் சட்டியா பானையா அதனதன் மடக்கா, எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுத் தொட்டியா சாலா சாலும்கரகம்தானா யார் அறிவார்?. அந்தச்சக்கரம் அமர்ந்த களிமண் எதுவாக உருப் பெறும் எப்படி அதன் வடிவம் இருக்கும், அக்குயவன் சுழலும் சக்கரத்தை எதுவரை சுழற்றுவான் எப்போது நிறுத்துவான் யாருக்குத்தெரியும். அனைத்தும் அவன் விருப்பம். மனிதர்கள் அந்தக்குயவனின் கைக்கு அகப்படக்காத்திருக்கும் களிமண் அவ்வளவே. ராபர்ட் பிரொளனிங் என்னும் ஆங்கிலக்கவிஞன் எழுதிய ஒரு கவிதை... கவிதையின் பெயர் ரப்பி பென் எஸ்ரா. கவிராயர் ராபர்ட்பிரொளனிங் சொல்லுவார். ‘கடவுள் ஓர் குயவன். அவனுக்கு முன்னால் தயாராக பிசைந்து பிசைந்து வைக்கப்பட்டிருக்கிறது கூடை நிறைய களிமண். அவன் ஆணைக்கு ஏற்பச்சுழலக் காத்திருக்கும் ஒரு சக்கரம் இவ்வுலகம். செல்லப்பா வகுப்பில் இப்படிச்சொல்லிக்கொண்டே ப�ோவார். முதுகலை இறுதிப்பருவம் கவிதையியல் அவனுக்குச் சொல்லிக்கொடுத்த பேராசான் அவர். F எஸ்ஸார்சி 101 அவன் மனம் மட்டும் வேறு வேறு வழியில் சென்று அவனைத் துளைத்துக்கொண்டேகொண்டே இருந்தது. மனித முயற்சி என்ற ஒன்று இல்லையா என்ன? அதற்கு உரிய மாண்பென்தும் உண்டுதானே பிறந்த குழந்தைக்கு நடக்கக்கற்றுத்தர வேண்டாமா பேசக்கற்றுத்தரவேண்டாமா? தத்தித் தத்தி விழுந்து விழுந்து அடி பட்டு பின் எழுந்துதானே அது நடை பழகவேண்டும். மழலைச்சொல் பேசிப்பேசி பின்னர்தானே சட்டமாய்ப் பேசவரும். உணவும் உடையும் உறையுளும் இங்கு வாழும் மக்களுக்கு .யார் கொண்டு தருவார்?. மனிதர்கள்தானே அயராது உழைத்து அவை அவை உருவாக்கித்தரவேண்டும். காலைக்கட்டிக்கொண்டு நீயும் நானும் ஒரு மூலைபார்த்து உட்கார்ந்து விட்டால் இவை எல்லாம் எப்படி சாத்தியமாகும். மனிதன் வயற்காட்டில் மாடாய் உழைத்து உற்பத்தி செய்யாவிட்டால் சட்டியும் பானையும் சமையல் கூடத்தில் சயனித்துக்கொண்டு என்ன செய்யும்... ஆங்கிலப்பேராசான் செல்லப்பா நடத்திக்கொண்டே ப�ோவார். கிராமரியன்ஸ் ஃபுனெரல் என்னும் கவிதையிலிருந்து மேற்கோள் வந்து வந்து விழும். அதுவுமே பிரெளனிங் எழுதிய கவிதைதான். ‘வாழும் இக்கணத்து இன்பம் ஒன்று மட்டுமே என்பது தெருநாயுக்கும் குரங்குக்கும்தான் மனிதனுக்கு அவ்விதம் இல்லையே. மனிதன் முக்காலத்தையும் கணக்கில் கொண்டு வாழ்வை தீர்மானிக்க வேண்டும்’ ‘மனிதன் வாழ்ந்து முடிக்கப்பிறந்தவனில்லையப்பா... அவன் மென்மேலும் அறிந்துகொள்ளப்பிறந்தவன்’ பேராசான் அந்தக்கவிதையிலிருந்து சொல்லிக்கொண்டேப�ோவார். ‘மெமொராபிலியா’ என்னும் கவிதைக்குத்தாவுவார்... ‘ஷெல்லி எனும் கவிஞரை ஒரு நாள் நீ சாதாரணமாய்ப் பார்த்தாயல்லவா அவர் நின்றார் உன்னோடு பேசினார்தானே நீயும் அவரோடு திரும்பப்பேசினாய் எத்தனைப்புதுமை எத்தனைக்கு அரிது இது அறிவாயோ அத்தனைக்கும் பிறகு முன் எப்படி இருந்தாயோ அப்படித்தான் இருப்பாயோ இப்போதும்’ நீ.’ 102 ஞானவாபி F ‘ஒரு கவிஞனுக்கு இதனைவிட இன்னொரு கவிஞன் பெருமை சேர்த்துவிட முடியுமா’ என்பார். ‘‘உலகம் மாறுகிறது உன் ஆன்மா அப்பேரான்மா நிலையில் மாற்றமில்லை. உன்னுள் இருக்கும் அது இருந்தது இருக்கிறது என்றும் இருக்கும் சுழலும் சக்கரம் பின் போகும் ஏன் நிற்கும்கூட... களிமண் வைத்திருக்கும் குயவன் மட்டுமே அறிவான் மொத்தமும்’. எத்தனை அழகாகக் கவி பிரெளனிங் மனித வாழ்க்கையை எடுத்து வைக்கிறார் செல்லப்பா தொடர்வார். ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக்கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்னும் கடுவெளிச்சித்தர் பாடலை ப்ரெளனிங்கின் பாடலோடு ஒப்பிட்டுச்சிலாகிப்பார். வகுப்பே வாய்பொத்தி அமர்ந்து உற்சாகமாய்க் கேட்கும். ஆங்கிலக்கவிஞன் பிரெளனிங்கின் கவிதை நூலை இக்கணமே வாங்கி முற்றாய்ப்படித்துவிடவேண்டும். அவன் முடிவு செய்தான். ரப்பி பென் எஸ்ரா இந்த ஒரு கவிதை மட்டுமே அவனுக்கு சிலபஸ். என்றாலும் என்ன?.. தான் வாழும் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத்தேடிதேடி அலைந்தான். அந்தத்திருவல்லிக்கேணி கடற்கரை சமீபமாய்த்தான் இந்த வகைப் புத்தகங்கள் எல்லாம் விற்பார்கள். அவன் எத்தனையோ புத்தகங்கள் இப்படி வாங்கியிருக்கிறான். கடைத்தெருவில் நடை பாதையில் முட்டு முட்டாய்க் கொட்டிவைத்திருக்கும் பழைய புத்தகங்களில் அந்த பிரெளனிங் கவிதையைத்தேட ஆரம்பித்தான். ‘என்ன தேடுற’ ‘உனக்கு சொன்னா புரியுமா’ ‘தேவுலாம்டா இது என்கட நா வியாவாரி’ ‘சொல்லுறேன் பிரெளனிங் கவிதைகள்’ F எஸ்ஸார்சி 103 ‘அப்படிச்சொல்லு, இங்க்லீஷ் கவிதங்க கேக்குற, தனியா வச்சிருக்கேன் பாரு.’ அவன் ஒரு தனி அடுக்கைக்காட்டினான். ‘அடுக்கி இருக்குறது சும்மா கொழப்பாதே. நெதானமா பாரு நீ கேக்குறது இருக்கும்.’ அவன் வரிசையாக பார்த்துக்கொண்டே வந்தான். ஷெல்லி. வர்ட்ஸ்வர்த். லாங் ஃபெல்லோ, ஜான் டன், மில்டன், ஷேக்ஸ்பியர் எமர்சன், எமிலி, ஃப்ராஸ்ட், எட்கர் ஆலன் ப�ோ, வால்ட் விட்மன், ஷெரிடன், தாகூர் ஆர் கே நாராயண் ராஜாராவ் இன்னும் எத்தனை பேர்... ‘கெடச்சிதா’ ‘பாக்குறேன்’ பிரெளனிங் எழுதிய ‘லாஸ்ட் ரைட் டுகெதர்’ எனும் கவிதைக்கு குதிரை இரண்டுடன் அழகழாய் ஆணும் பெண்ணும் என அட்டைப்படம் ப�ோட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைத்துவிட்டது. அவன் அதை தட்டி எடுத்துக்கொண்டான். ‘கொண்டா கொண்டா’ அவனிடம் அதை ஒப்படைத்தான். கடைக்காரன் ஒரு புரட்டு புரட்டுனான். ‘எடு நூறு’ ‘நூறா’ அவன் புத்தகத்தைப்புரட்டி இரண்டாம்பக்கத்தில் விலை என்ன ப�ோட்டிருக்கிறது என்று பார்த்தான். ப்ரைஸ் அதற்குப்பிறகு வட்டமாய் ஓட்டை... விலை மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. ‘என்னா பாக்குற வெலயா’ ‘அது ஏன் உனக்கு எது எடுத்தாலும் அந்த கட்டில நூறு ரூவாதான்.’ ‘அது எப்பிடி? ப�ோட்டிருக்கிற விலய கிழிச்ச’ நீ’ ‘ப�ொஸ்தகம் வேணுமா வெலய ப�ோய் பெரிசா பாக்குற’ ‘நான் கேக்குறதுல என்ன தப்பு’ 104 ஞானவாபி F ‘தப்புதான் அந்த பலான பலான புத்தகம்னு சொல்லு வெல கொறச்சி தாரேன். இத வெல கொறச்சி குடுத்தா அதுவும் தப்பு தெரிமா.’ அவன் தொடர்ந்தான். ‘பெரிய மனுஷன் பெரிய மனுஷன் படிக்கணும்னு எழுதுனது. நாயிங்க நாயிங்களுக்கு எழுதுன சமாச்சாரமில்ல. எதுல ப�ோய் காசி பாக்குற அது உள்ற என்னா சமாச்சாரம் இருக்கு. எனக்குத் தெரியாது. ஆனா அந்த முட்டுல கை வச்சிட்டு தேடுனா அவன் பெரிய மனுஷன்.’ ‘பின்ன ஏன் வெலய கிழிச்ச’ ‘ஒண்ணும் கேக்காத சாமி’. அவன் ப�ோட்டிருக்கும் கிழிந்த பனியனை கைவிட்டு தூக்கித் திருப்பிக்காட்டினான். அவன் வயிறு மட்டும் கச்சிதமாகத் தெரிந்தது...’ அவன் எதுவும் பேசவில்லை. யாரோ பளார் என்று கன்னத்தில் அறைந்தமாதிரிக்கு உணர்ந்தான்... நூறு ரூபாயை எடுத்து அவனிடம் பவ்யமாய் நீட்டினான். ‘உசந்த மனுஷன ரவ நாழில அசிங்கப்படுத்திட்ட.’ சொல்லிய கடைக்காரன் அந்த நூறு ரூபாயை கண்ணில் ஒற்றிக்கொண்டு சுருக்குத் துணிப்பையில் ப�ோட்டுக்கொண்டான். 3