. சத்யானந்தன் எழுதிய கவிதை 'பகல் வேஷம்' படித்தேன்..நல்ல கவிதை.கனம் மிகுந்த சொல்லாட்சி. கவிதை விடுபடா ப்புதிர்களை ஊடுருவி ஆராயும் சிந்தனை ஓவியமாய் உரு எடுக்கிறது. சத்யானந்தனின் கவிதை வரிகள் எப்போதுமே சத்தியமானவை.
'அசல் வீர்யம்
எந்த விதையில் என்னும்
கேள்வி முளைவிட்டது'
படித்து மகிழ்ந்தேன்.ஆழமான கேள்வி வைக்கிறது கவிதை..
இன்றைய உலகை அளந்து பேசும் கவிதை வரிகளும் அழகாக க்கவிதையில் அவிழ்கின்றன.ஒரு கவிஞனுக்கு சாத்தியமாகாத விஷயம் என்று எதுவுமே இருக்க வாய்ப்பில்லை படைப்புத்தளத்தில் கவிதை என்பது பெரு உச்சம்.அது கவிஞருக்கு இயல்பாக சித்திக்கிறது.
'சேமிப்பவற்றுள் பணம்
.மட்டுமே
சல்லி வேர்கள் அற்றது.'
நல்ல விஷயம். சொற்களின் நர்த்தனத்தை சத்யானந்தனின் கவிதையில் அனுபவிப்பவன் நான்.'பகலின் முனகல்,.இருமை ஓய'.என்னும் பதங்கள் என்னைக்கட்டிப்போட்டன.சிறு விலங்குகள் பறவைகள் மரங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் கவிதைகள் கவிஞர் தருவது.
வௌவாலுக்கு இரவு பகல் இரண்டில்லை என்பது வாசகன் படித்து அசைபோடச்செய்யும் இடம்.மனத்திரையில் ஒரு வௌவால் தோன்றிக் கவிதைவரிகளை சொல்லிப்பார்ப்பதுபோல் உணர்ந்தேன்.கழுதை மலை யேறுகிறது. கரடுமுரடான மலைப்பாதையில் ஏறும் வழி அறிந்த கழுதை. தன் உடல் வலி அறியாக்கழுதையும் அதுவே என்று பேசுகிறது கவிதை.இங்கே கழுதை மனிதனாகக்கூட உருப்பெறலாம். வலியை நோக்கியவன் வாழும் வழியை இழந்து நிற்றலை மனித வாழ்க்கை யதார்த்தம்மாக்குகிறது என்பதனை மிகச்சரியாக எண்ணிப்பார்க்கலாம்.
தலையணை நீது நரம்பற்ற ஒரு வீணை. கண்ணீர் த்துளிகள் அதன் மீது விழுந்து அது நரம்பாகிறது.விணை இப்போது ஒரு முழு அடைகிறது.சோகம் மலர்ந்து வெளி எங்கும் இசை வியாபிக்கிறது. அற்புதமான சித்திரம்.இப்படி ஒரு பேசும் சித்திரத்தை கவிதை கொணரும்போது வாசக மனம் நிறைந்து போகிறது.
பாதி உண்மைகள் பகுதி உண்மைகள் எனத் தரம் நோக்கும் சத்யானந்தன் உண்மைகளின் ஊடே மனிதனுக்கு அகப்ப்படா ஒன்று.கண் சிமிட்டி ப்பேசும் அந்த மொழி தனக்கு வசப்படுமா என்பதில்.கவனம் கொள்கிறார்.
-----------------------------------------------......
No comments:
Post a Comment