Tuesday, April 1, 2025

கடிதம்

 

 

அன்புசால் தோழரே  வணக்கம்.

’காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.’

என்றார் மகாகவி பாரதியார். தொலைத்தகவல் துறையிலே  அன்றாடம்  அபரிமித வளர்ச்சியும்  மாற்றமும் தொடர்கின்றன.  தொழில்நுணுக்கம் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  மானுடம் வென்றிருக்கிறது. பெருமைப்படுகிறோம். இவற்றையெல்லாம் சாதித்து நிற்கும் அறிவியலாளர்கள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள், உடன் உழைத்திட்ட தொழிலாளர்கள் அத்தனைபேரும் நமது வணக்கத்திற்குரியவர்கள்.

அறிவியலின் எழுச்சியை அதன் ஆளுகையை தவிர்க்கவொண்ணா அதன் மாற்றத்தை அவதானிக்க ஆற்றல்மிகு தலைமை உடனடித் தேவையானது. இயல்பாகவே தேசியத் தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியத்தலைமை அதனைப் பெற்றிருந்தது. அவ்வமைப்பின் ஒப்பற்ற தலைவராக ஓம் பிரகாஷ் குப்தா விளங்கினார். கணிப்பொறியின் ஆட்சிகண்டு அதனைத் தொழிலாளி வர்க்கம் எப்படி அணுகுவது, அதனை எங்ஙனம் பணியாற்றும் ஊழியர்கட்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதறிந்து செயல்பட்டார். காலத்தை அவதானிக்கத்தெரிந்த  தொழிற்சங்க மேதை குப்தா. தொழில் நுணுக்கம்  கொணர்ந்த பிரச்சனையை எப்படி அணுகவேண்டுமோ அப்படி அனுகினார். ‘ Assimilate Autamation’   என்கிற புதிய கோஷத்தை  தொலைத்தொடர்புத்தொழிலாளிக்குப் புரியவைத்தார்.சமுதாயத்தின் தேவை நாட்டின் வளர்ச்சி இவை கொணர்ந்த நெருக்கடியை மிகச்சரியாக  எதிர்கொண்டார்.

நமது இலாகா பொதுத்துறையாவது தவிர்க்கமுடியாதது என்றாகியபோது தொழிலாளிக்கு எது பிரதானமானது என்பதனை ஆய்ந்து   ஒரு பொறுப்புள்ள  தலைவனாய்  பிரச்சனையை சந்தித்த பிதாமகன்  தோழர் குப்தா. ஓய்வு பெற்ற தோழர்கள்  இன்று பெறுகின்ற ஓய்வூதியம் தானாக வந்துவிடவில்லை. இழக்கப்போவது எது  என்பது அறியாதவர்களாய்   தொழிலாளர்கள் இருந்தபோது  ஓய்வூதியத்திற்காக நம்மைப்போராட வைத்துச் சாதித்துக்காட்டிய வித்தகத்தலைவர் குப்தா.அரசுத்துறை தொலைபேசி  பொதுத்துறையாகின்ற போது அங்கே  பணியாற்றும்  ஊழியர்கள்  அரசுத்துறையின் ஓய்வூதியத்தைப்பெற்றாக வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாக இருந்தார். ஓய்வூதியத்திற்கு மத்திய அரசின் உத்திரவாதம் பெற்றுத்தந்தார். தோழர் ஓம் பிரகாஷ் குப்தா  இயக்கத்திற்குத்   தலைமையேற்க நாம் எத்தனைப் பேறு பெற்றோம்.

என்றுமே  இது வரலாறு. அகில இந்திய சங்கத்திற்குப் பிரதான அச்சாகி இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வது தமிழ் மாநில சங்கம். தமிழ் மாநிலத்தின் ஆற்றல் மிகு அன்புத்தலைவன் தோழர் ஜகன். அவர் காட்டிய  தோழமை வெளிச்சத்தில் முகிழ்த்து எழுந்தது  நமது மாநில சங்கம்.  நமது துறையில் காசுவல் ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்  என  அத்துக்கூலிகளாய்  லட்சத்திற்கும் மேலாகத்  தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும்  இலாகாவின் நிரந்தர  ஊழியர்களாக்க தஞ்சைத்தரணியில் தோழர். ஜகன்  காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டதை  நித்தம் நித்தம் நினைத்துப்பார்க்கிறோம்.தோழர் ஆர் கே. அப்படிச்சொல்லலாமா, அஞ்சா நெஞ்சன் தோழர் ஆர். கே. என்பதுவே சரி.  தமிழ் மாநிலச்செயலராய் விளங்கிய  தோழர் ஆர்.கே  ’ தலமட்டத்தில் பிரச்சனை வந்ததா, நீ போராடு.  உன் அதிகாரி என்னைக் கூப்பிட்டுப் பேசட்டும்’  ஆர். கே நமக்குச் சொன்ன இயக்கத் திருவாசகம்.

தோழர் ஜகனுக்கு ஆசானாய் விளங்கிய தோழர் பி. டி  சிரில் இயக்கம் கண்டது கடலூர் பூமி. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் ஆகிய இரட்டையர்கள் தமது  தோழமையால் பாசத்தால் அன்பால் கடலூர் தொலைபேசிப்பகுதியைப் போராட்டக் களமாய் மாற்றிக்காட்டிய சாகசக்காரர்கள். நேர்மை பளிச்சிடும் அவர்தம் நடப்பால் நமது முன்னோடிகள்  அதிகாரவர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கினர். அவர்களோடு நாம் இயக்கம் கண்டோம் என்பதே நமக்கு வரலாற்றுப் பெருமை.

சிதம்பரம் பகுதியிலே தமிழ் மாநில மாடு. ஆனந்த தாண்டவம் ஆடும்  இறைவனின் திருத்தலம். அன்னம் பாலிக்கும் தில்லை என்பார் பெரியோர்.  இந்நகரம் விருந்தோம்பலுக்குப் பெயர்போன பெரிய மனமுடை சான்றோர் உறைநிலம். நமது அண்ணாச்சி தோழர் ரெங்கநாதன்.  அவர் தொழிலாளியின் இலக்கணம் இப்படி என்று நமக்கு வாழ்ந்து  வழிகாட்டிய தோழமை மண். அவருடைய பெயரால் தமிழ் மாநில மாநாட்டு அரங்கம். இப்பகுதித்தோழர்களின் மூச்சுக்காற்றய் உலாவந்த தோழர் ரகுநாதன்.  அவரின் பேராலே  பொறுத்தமான ஆளுமைகளின் விவாத மேடை. சிதம்பரத்து உடன்பிறவாச் சகோதரன், சுதாகரன்.  நம்மைப் பாசத்தால் நெகிழவைவைத்த அருமைத்தோழர். அவர் பெயரிலே  தமிழ் மாநில மாநாட்டு உணவுக்கூடம்.

இந்நாடு நமது. நமது  தொழிற்சங்க இயக்கம் தேசபக்தி மிக்கது. இயற்கை பேரிடர் சுனாமியும், கடுங்காற்றும், கொட்டும் மழைவெள்லமும் எதிர்கொண்டு  நமது  சேவையைச் செவ்வனே ஆற்றுபவர்கள் நாம். இத்தேசமும்  இம்மக்கள் சமுதாயமும் நமது  இருகண்கள். நமது சேவையைத் திறம்படச்செய்வதே நமது ஆற்றல். இவை அனைத்தும் கற்பிக்கும் பள்ளியாய் நமது தொழிற்சங்கம்.

நமது தொலைத்தகவல் பகுதிக்குப் பெருந்தலைவரும் நிர்வாக இயக்குனருமாய் இயக்குனராயும் இன்று பெருமையோடு  விளங்கும்  திரு………………………………………… நமது அண்டையூர் புதுச்சேரிக்காரர். தான் பிறந்த மண்ணின் மாண்பு போற்றுபவர்.சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு வருகைதந்து சிறப்பிப்பதாய் உறுதி சொல்லியிருக்கிறார்கள்.அவரின் வருகை நமது சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு விழுமியம் சேர்ப்பது.

இத்தேசத்தின்  ஆன்ற பெருமை, நமது தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளளனத்தின் தியாக வரலாறு, நமக்கு வழிகாட்டி மறைந்த தியாகத்தலைவர்கள் நமக்குக் காட்டிய செம்பாதை  இவை நமக்கு முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. நாம்  நமது  தந்நலமற்ற தலைவர்களுக்கு என்றும் கடமைப்பட்டவர்களாய் இருப்போம் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்.

சிதம்பரம் மாநிலமாநாடு வெற்றிகரமாக அமையட்டும். அம்மாநாடு  சிறக்க  நம்மால்  இயன்ற பொருளுதவி அளித்து உதவிடவேண்டியது நம் அனைவரின் வர்க்கக்கடமை. உங்கள் மனமோ என்றும் பெரிது. இது உங்கள் இல்லம்.  இவ்வியக்கம்  நமது. விண்ணை அளக்கட்டும்  நமது  தியாகச்செங்கொடி. நாம் நமது கடமைஉணர்ந்து  செயல்படுவோம்.  சிதம்பரம்  மாநில மாநாடு  சிறக்க   பொருளுதவி அளித்து தோழமையோடு உதவுவீர்கள் என்கிற பெரு நம்பிக்கையோடு.

 

                                                                                                                                                  இவண்

                                                                                                                                 

 

 

அன்புசால் தோழரே கடிதம்

 

 

 

அன்புசால் தோழரே  வணக்கம

தொலைத்தகவல் துறையிலே  அன்றாடம்  அபரிமித வளர்ச்சியும்  மாற்றமும் தொடர்கின்றன.  தொழில்நுணுக்கம் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  மானுடம் வென்றிருக்கிறது. பெருமைப்படுகிறோம். இவற்றையெல்லாம் சாதித்து நிற்கும் அறிவியலாளர்கள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள், உடன் உழைத்திட்ட தொழிலாளர்கள் அத்தனைபேரும் நமது வணக்கத்திற்குரியவர்கள்.

இந்திய விடுதலையைப் பெற்றுத்தருவதில் முன்னின்று போராடிய இயக்கம் இந்தியத் தபால் தந்தி ஊழியர்கள் இயக்கம்.   என்றும் பாரத தேசத்தைப் போற்றுபவர்கள் அணிவரிசையிலே  முன் நிற்பவர்கள்  நாம்.

அகில இந்திய சங்கத்திற்குப் பிரதான அச்சாகி  நமது  பேரியயக்கத்தை முன்னெடுத்துச்செல்வது தமிழ் மாநில சங்கம். தமிழ் மாநிலத்தின் ஆற்றல் மிகு அன்புத்தலைவன் தோழர் ஜகன். அவர் காட்டிய  தோழமை வெளிச்சத்தில் முகிழ்த்து எழுந்தது  நமது மாநில சங்கம். 

தோழமைப்பேரொளி ஜகனுக்கு ஆசானாய் விளங்கிய தோழர் பி. டி  சிரில் இயக்கம் கண்டது கடலூர் பூமி. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் ஆகிய இரட்டையர்கள் தமது  தோழமையால் பாசத்தால் அன்பால் கடலூர் தொலைபேசிப்பகுதியைப் போராட்டக் களமாய் மாற்றிக்காட்டிய சாகசக்காரர்கள். நேர்மை பளிச்சிடும் அவர்தம் நடப்பால்  அதிகாரவர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கினர். அவர்களோடு நாம் இயக்கம் கண்டோம் என்பதே நமக்கு வரலாற்றுப் பெருமை.

சிதம்பரம் பகுதியிலே   வருகிற மார்ச், 6 -7,  2025,   தமிழ் மாநில மாடு. ஆனந்த தாண்டவம் ஆடும்  இறைவனின் அற்புதத் திருத்தலம். அன்னம் பாலிக்கும் தில்லை என்பார் பெரியோர்.  இந்நகரம் விருந்தோம்பலுக்குப் பெயர்போன பெரிய மனமுடை சான்றோர் உறைநிலம். சிதம்பரம் நகரில்  நடைபெற இருக்கின்ற தமிழ் மாநில மாநாட்டிற்கு சீர்மிகு வரவேற்புக்குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

வரவேற்புக்குழுவின் தலைவர் பொறுப்பின மண்ணின் மைந்தர்  ஆற்றல் மிகு ஜி எம் ஸ்ரீதரன் வாண்டையார் அவர்கள்  அன்பு கூர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இம்மாநாடு வெற்றி மாநாடாக அமைந்து சிறக்கும் என்பதில் நாம் பெருமைகொள்கிறோம்.

 நமது அண்ணாச்சி தோழர் ரெங்கநாதன்.  அவர் தொழிலாளியின் இலக்கணம் இப்படி என்று நமக்கு வாழ்ந்து  வழிகாட்டிய தோழமை மண். அவருடைய பெயரால் தமிழ் மாநில மாநாட்டு அரங்கம். இப்பகுதித்தோழர்களின் மூச்சுக்காற்றய் உலாவந்த தோழர் ரகுநாதன்.  அவரின் பேராலே  பொறுத்தமான ஆளுமைகளின் விவாத மேடை. சிதம்பரத்து உடன்பிறவாச் சகோதரன், சுதாகரன்.  நம்மைப் பாசத்தால் நெகிழவைவைத்த அருமைத்தோழர். அவர் பெயரிலே  தமிழ் மாநில மாநாட்டு உணவுக்கூடம். நமது  இயக்க வேர்களை நெகிழ்வோடு போற்றுவோம்.

இயற்கை பேரிடர் சுனாமியும், கடுங்காற்றும், கொட்டும் மழைவெள்ளமும் எதிர்கொண்டு  நமது  சேவையைச் செவ்வனே ஆற்றுபவர்கள் நாம். இத்தேசமும்  இம்மக்கள் சமுதாயமும் நமது  இருகண்கள். நமது சேவையைத் திறம்படச்செய்வதே நமது ஆற்றல். இவை அனைத்தும் கற்பிக்கும் பள்ளியாய் நமது தொழிற்சங்கம்.

சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு   ஆற்றல் மிகு உயர் அதிகாரிகள்  அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள்  அனைவரின்  வருகை  நமது சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு விழுமியம் சேர்ப்பது.

சிதம்பரம் மாநிலமாநாடு வெற்றிகரமாக அமைய  நம்மால்  இயன்ற பொருளுதவி அளித்து உதவிடவேண்டியது  நமது  வர்க்கக் கடமை. உங்கள் மனமோ என்றும் பெரிது.  சிதம்பரம்  தமிழ் மாநில மாநாடு  சிறக்க   தங்களால்   இயன்ற  பொருளுதவி நல்கி  உதவுவீர்கள் என்கிற பெரு நம்பிக்கையோடு.

                                                                                                                                                  இவண்