தேடு
ஈசன் சிரசில் கங்கைப்புனல்
இந்திய சிரசில்
காசுமீர் அனல்
அனல் மூட்டியவர்கள்
முனைந்தால் முடியலாம்
அவர்கள் மனமோ
தாழிட்டுக்கொண்டிருக்கிறது
தகவல் தெரிந்தவர்கள்
தமாசு பழகுகிறார்கள்.
மும்பைக்குக்கனத்துப்போனது
தலை
வடக்கத்தியர் விரட்டப்பட்டு
தலை நிமிர
ஆட்டுகிறது வாலை
குசராத்தில் பணம்
பெருத்தவர்கள்
மனம் சிறுத்து
மதப்பேயொடு
தேன் நிலா போகிறார்கள்
கீழை இந்தியாவில்
விதம் வேறு
மண்ணில் பிறந்தவர்களோடு
யாரெல்லாம் கூடுவது
கூடியவர்களின்
எண்ணிக்கைக்
கூடிக்கொண்டே எப்படி?
ஒரிசாவிலும் மைசூரிலும்
சாமிச்சண்டை
எந்த சாமியப்பா
அதிகம் போணி
வோட்டுக்கள் வேண்டுவோர்
வேட்டுக்கள் வேண்டுவோர்
நாட்டுக்குள் மலிந்தனர்
எப்படிப்பொறுக்கும் இறை
இலங்கையில்
நித்தம் குண்டு
மழை
தமிழ் ரத்தம் யாருடம்பில்
வீர்யமாய் ஓடுகிறது
முஸ்தீபு நடக்கிறது .
பொன்விழா காணலாம்
உள்ளூர் நட்பிங்கு.
’சந்திராயணம்’ தயாராகட்டும் சந்தோசம்
வல்லரசுக்கு அறிகுறி
வரலாற்றில்.
நல்லரசு வேண்டும்
நாம் எங்கே போவது
தொலைந்துவிட்ட
தேசபிதாவைத்தேடிக்கண்டுபிடி
தெரியவரும் விடை.. (இலக்கியச்சிறகு 15/2009)
------------------------------------------------
ஈழம் மலரும்
வரலாறு மன்னிக்காது
என்றும் எம்மை
முள்ளிவாய்க்கால்
சோகங்கள்
சொல்லி முடிவதுவா
ஆயிரம் ஆயிரம்
சொந்த சோதரர்கள்
குருதிச்சேற்றில்
எத்தனை அழுகுரல்கள்
அவலங்கள் அவமானங்கள்
அம்மணமாக்கிப்பொசுக்கித்தள்ளினர்.
லங்கையின் ராட்சதன்
ராஜபட்சே
ஆணைதந்தான் தெய்வங்கள்
ஊமையாயின
ரோசம் தொலைத்து
மோசம் போனது மொத்தமாய்
யாம்
இலவசங்கள் பெருவதும்
இளித்து நிற்பதுவும்
நடைமுறையாகி
தடித்துபோனது தமிழன்
தோல்
இந்துவின் ராம் வழிகாட்டுவதா எமக்கு.
இருபத்தோறாம் நூற்றாண்டில்
வாழ்கிறோம் யாம்
அகங்காரம் விண்ணைமுட்ட
கொலைகள் கொலைகள்
கொலைகள் மட்டுமே
புத்தரின் வழியில்
ரத்தக்காட்டேறிகள்
யாதும் ஊரே யாவரும்
கேளிர் சொல்லிக்
கண்ணை மூடிக்கொண்ட
கயவர்கள் யாம்
தன்னினத்தான் மடிய
சாட்சிகளாய் நிற்கும்
தமிழனை எப்படிப்பேசினால்
என்ன
எருமைத்தமிழர்கள் யாம்
வள்ளுவர்க்கோவாரிசு
வள்ளுவர்க்கோவாரிசு
நாட்டின் சொந்த
மக்களையே
கொன்று குவித்த
மோசக்காரனுக்குப்
பாசம் காட்டும்
நீசர்கள்
சத்மேவ ஜயதே சொல்கிறார்கள்
அம்மணமாய் நிறுத்திவைத்து
அறுசுவை உண்டி
தந்தால்
யார் எக்கேடு கெட்டால்
என்ன
மீசைதான் யமக்கெதற்கு?
கொலைகள் முடிந்து
கோரம் நிகழ்ந்தபின்னே
கண்ணைத்திறந்துகொண்டான்
அமெரிக்கன் அய்யோ
போர்க்குற்றம் போர்க்குற்றம்
மலை மீதுஏறி முழங்கினான்
சங்கு பிடித்து..
ராஜபட்சேயை சொல்லாதே
அப்படி
சுருங்கிப்போகிறார்கள்
கங்கையின் மைந்தர்கள்
கீதை படித்தபடி
சங்கையில்லாது
யாம்தான்
சட்டைபோட்டுக்கொண்டு
உலா வருகிறோம்.
கிரிக்கெட்டு விளையாட
லங்கைப்பயணம்
நேற்றும் இன்றும்
தாயை சகோதரியை
அம்மணமாக்கி
சிதைத்த வெறி நாய்
கிலுகிலுப்பை ஆட்டிக்காட்டுகிறது
வழித்துக்கொண்டு
வாயைப்பிளக்கிறோம் யாம்
இப்படியே போய்விடாது
காலம்
கணக்கு நேர் செய்வோம்
யாமும்
சாம்பலில் எழும்
பீனிக்ஸ் பறவை
தருகிறது எமக்குப்பாடம்.
மண்ணுக்குள் உயிர்ப்பாகி
மறைந்து கிடக்குது
எங்கள் தன்மானம்
இப்போ சொரணைகெட்டுக்கிடப்பதற்கு
வெட்கித்தலைகுனியும்
நாள் ஒன்று வராமலா
போகும்
அன்றெங்கள் தமிழீழம்
மலரும்.
---------------------------------------------(
கலை இலக்கிய முகாம் கடலூர் NFTE 27/7/2012)
அது
வரவிருக்குது யுத்தம்
நான் எந்த ஆயுதம்
எடுக்கவேண்டுமென்று
என் எதிரி தீர்மானிக்கிறான்.
யார் எதிரி எனக்கு
எப்போதும் நானே
தீர்மானிக்கிறேன்-
அது.
தேசபிதாவுக்கு
மாலைபோட
மண்டை உடைந்தது
நீயா அது நானா.
சண்டை ஏனாம்
சரியாப்போச்சு
பாற்கடலைக்கடைந்தபோதே
பங்கிடுதலில் கோளாறு.
வேண்டுமொரு
விசாரணைக்கமிஷன்
-அது.
இல்லாத ஒன்றை
இருப்பதாய்ச்சொல்லு
இருப்பதொன்றை
இல்லாததுவாய்ச்சொல்லு.
உள்ளதைச்சொல்பவன்
உட்கார்ந்திருக்கட்டும்.
சும்மா இருந்தானே…
உண்மையின் கால்களைச்
சிதைத்துப்
பொய்மைக்குச்
சிறகு
செய்யும் தருணம்-அது. (யுகமாயினி-1/2008)
அரக்கச்சிரிப்பு
பாசத்தால்
பாதரட்சைகள்
ஆட்சிக்கட்டிலில்
ஏறிய
எம்மண்ணில்
ஆர் டி எக்ஸ்களின்
அமோக விளைச்சல்
மும்பை ரயில்கள்
மனிதக்குருதி
மனித நிணங்கள்
சுமக்கும் சுமை
வண்டிகளாய்
பெற்றன மாற்றம்
எட்டு குண்டுகள்
தொடர்ந்து வெடித்தன
வாழைத்தோலாய்
இருப்புப்பெட்டிகள்.
மனிதர்கள் ஆயிரமாய்
குருதிச்சேற்றில்.
மும்பை நகரில்
இரண்டாம் முறை
அரக்கச்சிரிப்பு.
தொடருமோ இன்னும்!
மும்பாதேவிக்கும்
தொந்திக்கணபதிக்கும்
எட்டினால்தானே விஷயம் .
எறும்புகள் மிதிபடக்கூட
மனம் ஒப்பா
எம்மண்ணில்
எப்படிச்சாத்தியமிது
தத்துவத்தின் மூலக்கோளாறு
செயல் பாட்டில்
வக்கிரமம்
ஆண்மையின் அம்மணம்
நெறிகள் கற்பிழந்தன.
யாருக்குப்பிரச்சனை
யார் சாவது?
ஏதும் அறியா
அப்பாவிகளைக்
கிழித்துப்போட்டது
மானுட அசிங்கம்.
அவமானம் அச்சம்
பேடித்தனத்தின் உச்சம்
பேடித்தனத்தின் உச்சம்
காறி உமிழலாம்
கழுகுகள் கூட!
பூமித்தாயின்
வயிறு பற்றி
எரிகிறது
புத்தன் ஏசு
காந்தியையும் பெற்றிட்ட
பூமித்தாயின்
வயிறு பற்றி எரிகிறது.
---------------------------------------------------
(இலக்கியச்சிறகு 12/2006
குறுங்கவிதைகள்
மலையேற்றப் பயணம்
புழுக்கை புழுக்கையாய்ப்பேருந்துகள்
வரிசை
இயேசு அழைக்கிறார்
எதிரே
எழுதிச்சிரிக்கும் கல்.
மார்கழி வந்தால்
மந்தமாகின்றன காதுகள்
புளித்துப்போய்விட்ட
அதே பக்திப்பாடல்கள்
அதே பக்திப்பாடல்கள்
அவிழ்வதில் சிக்கல்
உச்சிக்குப்போனபின்னே
விடுதலை நாள்
உச்சிக்குப்போனபின்னே
விடுதலை நாள்
கொடியேற்றம்.
கால் ஒடிந்த அம்மா.
கிராமத்துக்கொட்டகையோடு
மாடிவீட்டு வாழ்க்கை
பட்டினத்தில் அவனது.---------------
-
-
அடிபட்டுக்கிடப்பவனை
கண்ணு உனக்கு எங்க பொடரியிலா
கேள்வி கேட்டார் ஆட்டோ ஓட்டி.
காந்தி பொம்மை யொன்று
பொக்கைச் சிரிப்போடு
அவருக்கு முன்னால்
காலை மடித்தபடி..
.
பொக்கைச் சிரிப்போடு
அவருக்கு முன்னால்
காலை மடித்தபடி..
.
வாழிடத்தே மனிதக் குருதியோடை
கண்களை மூடிக்கடந்தார்கள்
கண்களை மூடிக்கடந்தார்கள்
கையில்
பெரிய பகவத் கீதை.
அவன் பொருளைப்பார்க்க
நான் எடைக்கல்லை
கடவுள்
பொதுவாமே.
ஆண்குழந்தைக்கு
ஐநூறு
பெண் குழந்தைக்கு
இருநூறு
பிரசவ
வார்டில் சமூக நீதி.
இவன் கழுத்தை அவனும்
அவன் கழுத்தை இவனும்
பாசிச வேர் அறுப்பு கூடித்தான்.
விற்பதற்கும்
கொள்முதலுக்கும்
அளக்கும் படிகள்
வேறு வேறு
சரியளவோ ஆயுதபூசைப்பொட்டு..
அவள் கைவிட்டாள் அதே
இடத்தில் நானும்
தபால்
பெட்டி.
சாமியைக்காணோம்
எல்லோரும் ஆனார்கள்
சாமியாய்
சாமியே
சரணம்.
தெளிதல்
.அயல்மொழி ஆண்டமொழி
அவ்வாண்டை மொழிகொண்டு
எழுதியிருக்கிறார்கள்
சுவரெங்கும்
நல்லதுகள் பயிராகவேண்டும்.
மா நகராம் பெங்களூரு
ராமமூர்த்தி நகரில்
தேவாலயம் மய்யமாய்
கிறித்துவின் பிறந்த
நாள் கூட்டம்.
பலவண்ண பொம்மைகளின்
குவியல்.
இயேசு குழந்தையாய்
மாட்டுத்தொழுவமொன்றில்
ஒளிர்ந்து தருகிறார்
காட்சி .
மின்சார விளக்கு
தெய்வீகக்காட்சியாய்க்
கனம்கூட்டிக்காட்டியது.
மண்டியிடுகிறார்கள்
மன்றாடுகிறார்கள்
மகிழ்ந்து நிற்கிறார்கள்
புத்தாடை அணிகலன்
புதுமலர்கள் எனத்
தின்பண்டங்கள்
பரிமாறியபடி மக்கள்
ஆசிவழங்கும் வெள்ளைச்சீருடை
சிரம் தொட்டு த்தொட்டு
ஓய்ந்துபோனது சரிதான்
ஆலய வாயிலில்
‘அம்மா அப்பா அண்ணா’
தமிழ்க்குரல் கேட்கிறது
காய்ந்த தலையோடு.
ஈராயிரம் ஆண்டுகள்
முடிந்துபோனது
ஏசுவை
என்று சரியாய்த்தெளிவது நாம்..
மக்களாட்சி
. மக்களாட்சி
இன்று
எங்கேபோய் முடிந்திருக்கிறது
மக்களைப்பிரித்து
ப்பிரித்து
ஒருவரை ஒருவர்
புரிந்துக்கொள்ளவே
முயலக்கூடாது
என்பதுவாக
இந்தியா என்பதில்லை
அமெரிக்கா என்று
சொன்னாலும்
இழிக்குணம் இதுவே.
வோட்டுக்கள் பெறுவதெப்படி
என்பதுவே ஒரே யுக்தி.
மக்களாட்சி என்பது
கணக்குப்போடுவதாய்
சுருங்கிப்போனது.
அரசியல் என்பது
தொழிலாக
அனுபவமாகிறது.
தியாகமும் சேவையும்
விலாசம் தொலைத்து
நிற்கச்
சாதியும் இனமும்
மதமும் தோல் நிறமும்
நடத்துகின்றன பேரம்
மக்களாட்சி பாரெங்கும்
நீர்த்துத்தான்
கிடக்கிறது
மக்களை மெய்யாக மதிக்கும்
முறையொன்று மலரத்தான் வேண்டும் மாற்றாக.
மொழியுறவு
.ஆங்கிலம் படித்து
அல்லலுற்றதாக பாரதி
சொன்னார்
கதையும் கட்டுரையும்
அம்மொழியில் எழுதிப்படைத்தவர் பாரதி.
கணினி வந்த பின்னே
தமிழ் எழுத்துக்கள்
திரையில் வர
ஆங்கில எழுத்துக்கள்
வினையாற்றி
தமிழாய்ப்பிறப்பெடுக்கின்றன.
ஏ எம் எம் ஏ ஏ ஆங்கில
எழுத்துக்கள் ஒன்றாய்க் கூடி
‘அம்மா’ என்று
திரை காட்டுகிறது அழகாய்.
தமிழின் படைப்புகள்
எல்லாம் இன்று
ஆங்கில எழுத்தைத்
தடவித்தடவி தமிழில்
பிரசவமாகின்றன.
வசதிகள் ஆயிரம்
கணினியில்
உலகம் சுற்றுகின்றனவே
கவிதைகள்.
இணைய வழியில் ஆங்கில
எழுத்தின்
ஆதாரம் தமிழுக்குத்தோழமை
விடைபெற்ற தலைமுறைக்கு
இது பழக்கமில்லை..
தனித்தமிழ் இயக்கம்
பிடிவாதமாய்த்
பிடிவாதமாய்த்
துவங்கினால்கூட
ஆங்கில அறிவு
அவசியமென்பது அனுபவமாகிறது.
வேறு ஏதும் அக அரசியல்
உண்டென்று யூகித்தாலும்
உண்டென்று யூகித்தாலும்
மொழிகள் ஒன்றையொன்று
நேசிக்கின்றன
மெய்யாக.
எல் நினோ
.பருவ நிலை மாற்றங்கள்
பாடாய்ப் படுத்துகின்றன.
இந்திரபிரஸ்தமான
டில்லி
அவத்தையின் தலமானது
புகையும் புழுதியும்
மூச்சை
இறுக்கத் திணறிப்போகிறார்கள்
மக்கள்.
சுனாமி இந்தோனிசியாவை
விழுங்கிவிடப்பார்க்கிறது.
எரிமலைகள் எதிர்பாராமல்
கீழை தேசத்தில்
வெடித்துச்சிதறி
வேதனைதருகின்றன.
பனிப்புயல் புழுதிப்புயல்
அனல் காற்று
பேய்மழை எதைப்பேச
முடிகிறது.
வாழ்க்கை முறையை
கோணலாக்கி
ஆரோக்கியத்தை க்கரியாக்கி
நிற்கிறோம்.
மருந்தும் மாத்திரைச்சிலவும்
மக்களை ஏலம் போடுகின்றன
மொத்தமாய்.
கல்விக்கட்டணங்கள் புளியமரப் பிசாசாகி
எவ்வளவோ காலமானது.
சூழல் நம்மைக்கைதியாக்கி
கைகொட்டிச் சிரிக்கிறது.
பொறுப்பற்ற வாழ்க்கைக்கு
மனிதகுலம்
பெருவிலை தருகிறது.
வாழும் பூமியில்
அத்தனை இன்னல்களையும்
மனிதன்தானே முயன்று
வெற்றிகொள்கிறான்.
வக்கணையாய்ப் பேசவும்
எழுதவும்
இசைபாடவும் ஓவியம் தீட்டவும்
இசைபாடவும் ஓவியம் தீட்டவும்
கற்றுக்கொண்டான்.
அறிவியலால் ஆயிரம்
சாதனைகள்
அடுக்கடுக்காய்
சாதித்து நிற்கிறான்.
மருத்துவத்தில்
வானியலில்
வேளாண்மை உற்பத்தியில்
அறிவியல் தொழில்
நுட்பத்தில்
தகவல் அரங்கில்
இமயமலையென
சாதித்தவை எத்தனையோ.
பிரபஞ்ச ரகசியம் அது பிடிபடாவொன்று
விடுவிக்க முனைந்து
தொடர்ந்து தோற்றுப்போகிறான்.
விடுவதாயில்லை
மனிதக் குலம்
படைப்பின் ரகசியம்
அறியத்துணியும்
பயணம்
வாழ்க்கையொரு கோணலாய் அரும்பி
முன்னும்
பின்னும் இன்னும்
காரிருள்தான் எஞ்சி
நிற்கிறது.
அவை விடுபட வேண்டுமா
இல்லை வேண்டாவா
அறிதல் அத்தனை
எளிதுமில்லை.
தோற்றலில் நிறைவு
மனிதனுக்குத்
தோல்வியோ வெற்றித்தடத்தில்
ஒரு படி
மொத்தமாய்ப்படிகள்
எத்தனையுண்டு
யார்
அறிவார்.
அனுபவி
. சென்னை வாழ்க்கை
பெயருக்குத்தான்
அது
மய்ய சென்னையில்
இசையும் நாடகமும்
இயலும்
கொட்டிக்கிடக்கிறது.
மார்கழி மாதம்
சொல்லவே வேண்டாம்.
சென்னையைச்சுற்றிய
சிற்றூருக்கு வாய்ப்புகள்
அந்தப்படிக்கு இல்லை.
அந்தப்படிக்கு இல்லை.
நகரின் ஆக்கிரமிப்பு நச்சு
எளியவர்களின் ஏக்கங்களுக்கு
இரக்கம் காட்டாது.
வெள்ளைக்காரன்
போட்ட
மா நகர ரயிலும்
இல்லாமல் போனால்
ஏழை எளியோர்க்கு
சென்னை வாழ்க்கை
ருசிக்கச் செய்யாது
துளியேனும்
பேருந்தில் ஏறி மா நகரில்
ஓரிடம் சென்று திரும்ப
ஓரிடம் சென்று திரும்ப
இரண்டு மணி நேர
அவகாசம்
போதவே போதாது.
போவதற்கும் மீள்வதற்கும்
நான்குமணி நேரம் அனர்த்தமாய்ப் போய்விடும்.
கையில் காசும்
மய்யமாய் குடியிருப்பும்
இல்லா மா நகர வாழ்க்கை
எளியோர்க்கு என்றும்
விதிக்கப்பட்டே
கிடக்கிறது.
யார் கேட்கப்போகிறார்கள்
நான்
புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
நல்ல சினிமா
.பரியேறும் பெருமாள்
படம் பார்த்தேன்
நல்ல படம்
பத்தாண்டுகளுக்கு
மேலாக
படமொன்றும் பார்க்கவில்லை.
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜின்
மனதைத்திரை கொப்பளிக்கிறது.
நீர்த்துப்போகாத
கனமான சிந்தனை
பாடல்கள் வசனங்கள்
படமெடுப்பு அத்தனையும்
அற்புதமாக வந்திருக்கிறது.
தமிழிலா இப்படம்
என்று
நெகிழ்ந்து போனேன்
கதா நாயகனும் அவனுக்கு
நண்பனும்
மனதை கொள்ளை கொண்டார்கள்.
கொலைகாரப்பெரியவரும்
தந்தையாய்வரும்
நாயகச்சாயல்
பெரிய மனிதரும்
கதையின் நாயகியும்
கல்லூரி முதல்வராய்வரும்
டை கட்டிய
செருப்புத்தொழிலாளியின்
வாரிசும்
நெகிழத்தான் வைத்தனர்.
‘ நீங்க மாறணும்’
சுடும் உண்மை.
காலம் இருண்டுதான்
கிடக்கிறது
எத்தனை யுகத்திற்கு அய்யா
சொல்லிக்கொண்டே போவதிப்படி.
9. இரண்டரை லட்சம்
கொடுத்தால்
பேரப்பிள்ளையை எல் கே ஜி யில் சேர்ப்பார்கள்.
மருமகள் சொல்கிறாள்
பெங்களூரு வாசம்
சின்ன மகன்.
சென்னையில் ஒண்ணரை
லட்சம்
போதும் எல் கே
ஜி க்கு
பெரிய மகன் சொன்னான்.
கல்வி முடித்து
ஒரு குழந்தை
நிறைவாய் வெளிவர
எத்தனை லட்சங்கள்
கொட்டிக்கொடுப்பார்கள்.
பெற்றோர் இக்காலத்தில்
கல்வி கொள்ளை போனது
பண்ணையார் பிள்ளையும்
யானும் அரசுப்பள்ளியில்
காலணா செலவில்லாமல்
கற்றோம் கல்வி.
காமராஜரும் கக்கனும்
ஆண்ட காலமொன்று
இருந்தது.
நம்பத்தான் மாட்டார்கள்.
மருத்துவச்செலவுக்கு
மூட்டை மூட்டையாய்
ரொக்கம் வேண்டும் இப்போது. .
வந்தே மாதரம் அடிமனதிலிருந்து
வரவேண்டுமாம் கோஷம்
ஞாபகமில்லை
ஞாபகமில்லை
எங்கோ
படித்தது.
தோழமை
.
பழமலய் அய்யாவை
நேரில்
பார்த்துக்காலங்கள்
பல ஆயிற்று.
கடலூர் வாசியாய்
இருந்தபோது
அய்யாவோடு பழகி
மகிழ்ந்திருக்கிறேன்
பல காலம்.
பேசுவதே கவிதையென
அனுபவமானது அவரின்
வார்த்தைகள்.
நேர்மை என்றால்
அப்படி ஒரு நேர்மை
எளிமை என்றால்
அப்படி ஒரு எளிமை
தெளிவு என்றால்
அப்படி ஒரு தெளிவு
எங்கு போய்த் தேடுவது
தோழமையின் திரு
உருவை.
சென்னையிலா தேடத்தான்கிட்டுமா
பழமலய்க்கு ஓர்
இணை.
என்றேனும் ஒரு
நாள்
விழுப்புரம் சென்று
அய்யாவைக்
கண்டுவந்தால் தேவலாம்.
தமிழரின் பெருமை
வடலூர் ராமலிங்க
வள்ளலை
வடலூர் மண் மீது
நெஞ்சு விழ வணங்கவேண்டும்.
பழமலய் சொன்னது.
சபா என் சகிருதயர்
பழமலய்க்கு ஆசான்.
என்னுள் என்றும்
இனியர்
பழமலயை
வணங்குவேன்
எதிர்பார்ப்பு
. எதிர்பார்த்து
ஏமாந்தோம்
மழை இல்லாமலே போனது
இரண்டாயிரத்து
பதினெட்டு
வந்துவிடுமா பெருவெள்ளம்
சென்னையில் மீண்டும்
அடிவடிற்றில் புளிகரைக்கக்காத்திருந்தோம்
அக்டோபர் நவம்பர்
டிசம்பர்
என ஓடியேபோனது
ஆறுகளை த்தூர் வாரினேன்
ஏரிகளை ஆழப்படுத்தினேன்
எனக்கதை சொன்னார்கள்
சில நடந்தன பல
கடந்தன
கல்லா கட்டியவர்கள் பலர்
கல்லா கட்டியவர்கள் பலர்
மராமத்து நடந்ததைச்
சோதித்துப்பார்க்கலாம்
மழை வந்தால்தானே
அது வரவில்லை
மழை கூட காசு பார்த்தவர்களுக்குச்
சாதகமாய் ஒதுங்கி நிற்குமா என்ன?
சாதகமாய் ஒதுங்கி நிற்குமா என்ன?
பருவ நிலை மாற்றம்
சென்னைப்பெரு நகரை
ப்புரட்டி புரட்டி
பொழுது கழிக்கிறது.
கோடை சமீபிக்கிறது
சென்னைக்கோடை சொல்லவே
வேண்டாம்
அனல் பொழியும்
சித்திரைக்காத்துக்கிடக்கிறது.
சென்னை எனக்கு வாழிடம்.
நண்பர் பி எஸ்
தொலைபேசிச்சங்கத்து
கடலூர் தோழர்
எங்கள் பி எஸ்
மறைந்து போனார்
முதுகுன்றத்துத்தோழர்களில்
முத்திரை பதித்தவர்
மாவட்டச்செயலராக
வரவேண்டும் அவரென
கடலூருக்கு அனுப்பி
வைத்தோம்
நல்ல தோழனுக்கு
உடல்
ஆரோக்கியம் ஒத்துழைக்க
மறுத்தது
இதயத்தில் கோளாறு
எங்கள் பி எஸ்
மனம் கரும்பின் இனியது.
சமுதாயத்தின் அடித்தட்டு
மக்களிடை மலர்ந்த
மகரந்தத்தோழர்
அவர்.
விருதை ரகுவோடு
வங்கிக் கந்தசாமி வர
தோழர் பூத உடல்
கண்டு கலங்கினோம்.
நட்புக்கருவூலத்தில்
பெரு நட்டம் கண்டு
ரகு தேம்பித்தேம்பி
அழுதார்.
தோழமையின் அழகு
தொலைந்து
போனது உணர்ந்தோம்.
.
புத்தக நட்பு
தேடித்தேடி வாங்கிய
புத்தகங்களோடு எனது வாழ்க்கை
நேற்றா இன்றா
நினைவு தொடங்கிய
நாள் தொட்டு
இப்படியேதான்
கணினி இல்லை கைபேசியோடு
என்பதுவாய் மனித
வாழ்க்கை
இலக்கணம் காண்கிறது
இலக்கணம் காண்கிறது
யாரிடம் இல்லை
கைபேசி.
எல்லோரும் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள்
கைபேசியில்
துழாவிக்கொண்டே
இருக்கிறார்கள்
கைபேசியில்
பயணிப்பவர்களில்
பாதிக்கு மேல்
கைபேசியோடு-மீதியும்
காதில் எதையோ செறுகி
எதையோ
கேட்டபடியே நகர்கிறது
வாழ்க்கை
முகமலர்வதும்
கனிந்த பார்வையும்
அகம் தெரிய மொழிதலும்
அருகிப்பொனது.
நல்ல விஷயமாக மட்டுமே
அறிவியல் மலர
கவனம்
கொள்வது எப்போது?
No comments:
Post a Comment