மங்கையராக பிறப்பதற்கே/எஸ்ஸார்சி
பெண்மைக்கு இரங்கிக்
கவிதை பாடியது
அன்றொரு காலம்
வரதட்சணைக் கொடுமை
மாமியார் தர்பார்
நாத்தனார் பிடுங்கல்
அப்படியும் இப்படியும்
திருமணத்திற்குப் பெண்தேடி
ஆண்மக்கள் இன்று
தலை நரைத்துப்போகிறார்கள்
பெண் சிசு பிறப்பே
அருகிப்போனது
இயற்கையின் சிட்சை.
‘திருமணமா? அது என் பாடு
நீ உன் வேலையைப் பார்’
ஆக்ரோஷமாய் விடைதருகிறாள் பெண்
வீட்டுக்கு வீடு
நாற்பதைத்தாண்டும்
முதிர் காளையர் கள்
மரித்துப் போவார்கள்
கன்னி கழியாமலே.
அதிசயமாய் மணமானாலும்
மணவிலக்கு என்னும் தண்டனை
அனாயசமாய்ப்பெறுகிறாள் பெண்
மூத்தோர் பற்றிக்கவலையுமில்லை
சிறார் மீது அன்புமில்லை
மானிட வாழ்க்கை
ஜீவனற்றுப்போக
‘லிவிங் டு கெதர்:
வீட்டு வாயிலைக் தட்டிப் பார்க்கிறது
வணங்கிய தெய்வங்கள்
ஊமையாகி
ஆனது காலம் எத்தனையோ
No comments:
Post a Comment