Tuesday, August 29, 2023

என்னுரை- அம்மா எனும் மனுஷி

 

என்னுரை

வாழும் சமூகமே ஒரு எழுத்தாளனுக்குப்பள்ளி. அப்பள்ளியில் பயில்வதை அவன் தன் படைப்புகளில் கொண்டு தருகிறான்.கண்ணுக்கு நேராக நிகழும் சிறுமைகண்டு பதைத்துப்போகிறான். மனித நேய மாண்புகள் போற்றப்படுவது கண்டு நிறைவெய்துகிறான். மக்கள் சமூகம் ஒரு அங்குலமேனும்  பண்பில் தன்னை உயர்த்திக்கொள்வதைக்காண ஒவ்வொரு நொடியும் அவாவுகிறான்.

எப்படியும் பொருள் சேர்ப்பது என்கிற இழிநிலை மெத்தப் படித்தவர்களிடையே சர்வ சாதாரணமாக தொற்றிக்கொண்டு விட்டதை எண்ணிக்கவலைகொள்கிறான்.இவைகட்கு மத்தியிலும் தேர்ந்துகொண்ட நேர்மைப்பண்புகளுக்காக மட்டுமே வாழ்க்கை என்கிற உறுதிப்பாட்டோடு உலாவரும் மாந்தர்களைச் சந்தித்து மகிழ்கிறான்.

தனக்கு நேர்ந்த, தான் சந்தித்த சம்பவங்களைத் தான் கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை அவை தன் மனதில் எழுப்பும் வினாக்களை அவைகட்குத்தான் கண்ட சமாதானங்களை விடைகளை அவை தருவிக்கும் சவால்களை மனத்திரையில்  காட்சிப்படுத்தி அவைகளைச் சிறுகதைகளாக்கி வாசகத்தளங்களில் படைப்பாளி கொண்டு நிறுத்துகிறான்.

உங்கள் கரங்களில் தவழும் இந்த ‘அம்மா எனும் மனுஷி’ என்னுடைய பதினொன்றாவது சிறுகதைத்தொகுப்பு. இதில் உள்ள 19 சிறுகதைகளில் சில உங்களுக்கு முன்னே நிகழ்ந்துவிட்ட சம்பவங்களாகக்கூட அனுபவமாகலாம். எங்கிருந்தாலும்  நாம் எல்லோரும் மனிதர்களென்பதுதானே யதார்த்தம்.

இச்சிறுகதைகளை வெளியிட்டு என்னைப்பெருமைப்படுத்திய இதழ்கள் சங்கு திண்ணை விருட்சம் சொல்வனம்  சிறகு என்பன . இதழாளர்கள் அனைவரும் என் அன்புக்குறியவர்கள்.

இப்புத்தகத்தை சிறப்பாகக்கொண்டுவந்து என்னை நெகிழவைத்த பதிப்பாளர் உதயகண்ணனுக்கு எனது நன்றி.

ஆற்றல்மிகு எழுத்தாளர்கள்  அன்புநிறை வாசகர்கள்   இச்சிறுகதைப்படைப்பை வாசித்து விமர்சித்து என் எழுத்தை மேம்படுத்த வேண்டுகிறேன்.

                                                                                                                                                                                      அன்புடன்

23ஏ இரண்டாவது தெரு                                                                                                                                          எஸ்ஸார்சி

நேதாஜி நகர் பழைய பெருங்களத்தூர்

சென்னை 600063

9443200455

 

 

Sunday, August 6, 2023

கவிதைகள் சில

 

கவிதை வாசிக்கலாம்22/6/23 மெய்நிகர் அமர்வு/எஸ்ஸார்சி

பாழாய்ப்போன உலகம் இது
நல்லவர்களை ஐயப்படும்
அல்லவர்களைப்பஞ்சு மெத்தையில் பல்லக்கில்
தூக்கிச் சுமக்கும்
பிரார்த்தனைக்கூட்டத்தில்
தேசபக்தி காந்தியைச் சுட்டுக்கொன்ற தேசம் இது
மறப்போம் மன்னிப்போம்
எதனை மறப்பது
எதனை மன்னிப்பது
சீதையைநெருப்பில்
இறங்கிவா என்றவன்தானே
இங்கே புருடோத்தமன்
வண்ணாத்தி சொல்லுக்காகக்கருவுற்ற
மனைவியைகாட்டுக்
கனுப்பியகருணாகரனை
யாரப்பா கேட்பதுகேள்வி.

மனிதம்

மணிப்பூரில் என்னதான்
நடக்கிறது சொல்லுங்கள்
இந்தியா என் தாய்நாடு
இந்தியர் யாவரும் என் உடன்
பிறந்தோர் நீர்த்துப்போகிறதே ஏன்
படித்தவர்கள் பாவம் செய்கிறார்கள் எதுஎதனைக்கொண்டு
வரும் அறியாமலா சட்டங்களும்திட்டங்களும்
அமலாகும்
வேற்றுமையில் ஒற்றுமை
நீட்டி முழக்கியபுனித
பூமியில்
இனச்சண்டைதீவைப்புகொலை
சந்திரனுக்கு மனிதனை அனுப்பலாம் சாவுகாசமாய்
புண்ணிய பூமியில் மனிதனை காட்சிப்படுத்துங்கள்
முதலில்.

ஒரே கடவுள்

முட்டிக்கொள்கிறார்கள்
வரவில்லையே முடிவு
இருநாட்டாரும்
லட்சம் பேருக்கு மேல்
செத்துப் போனார்கள்
கொரானா கொள்ளைநோய்
வந்து கொத்துக்கொத்தாய்
செத்தபோது வானம்கேட்க
ஒப்பாரிவைத்து அழுதவர்கள் வாய்மூடி
மவுனம் காக்கிறார்கள்
யுத்த தளவாடங்கள் கோடானகோடிக்கு
மும்முரமாய் வியாபாரம்
பிரதானம் அது
புடினுக்கும் செலஸ்கிக்கும்
ஏசுநாதர் ஒரே கடவுள்.

பேசும் -கவிதை

 

பேசும்கவிதை/எஸ்ஸார்சி

கவிதை வாசிப்பு மெய்நிகர் கூடுகையில் வாசித்த கவிதை.

அழகிய சிங்கர்
மெய்நிகர்க் கூடுகையில் கலவாது
போயிருந்தால் நாரணோஜெயராமன்
எழுத்தை அறியாது போயிருப்பேன் நான்
அவை எளியகவிதைகள்
கண்சிமிட்டும் கருத்துக்கருவூலம்.
நாரணோஜெரராமனுக்கு
இது இரண்டாவது அசியின் பெருமைமிகுமெய்நிகர் அமர்வு
நல்ல கவிஞனின் உள்அழகை ஊர்க்குருவி சொன்னாலும் கையெடுத்துக் கும்பிடுவேன்
பேசும் கவிதையினும் பேரண்டம் கண்டபெருவிஷயம் ஏதுமில்லை அறிவாய் தோழா.

கவிதை- வாடகை வீடு

 

வாடகை வீடு/எஸ்ஸார்சி

கவிதை வாசிக்கலாம் வாங்க. 10வது நிகழ்வில் படிக்கவிருந்த கவிதை.

வாடகைக்குக்குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை
ஓயாமல் முறை வைப்பார்
வீட்டில் அது இல்லை இது இல்லை
எதுவும் சரியில்லை
வீட்டைக் காலிசெய்வது
உறுதியாகி வேறு வீட்டுக்கு
அட்வான்ஸ் கொடுத்தனரோ அவ்வளவுதான்
அவர்கள் பார்வை மேலே தான்
குடியிருந்த வீட்டின் உட்சுவரெல்லாம் பிஞ்சுகளின் கிறுக்கல் ஓவியங்கள்
சமையல் சிங்க் ஒழுகும் பாத்ரூம் டைல்ஸ் வழுக்கும்
டாய்லெட்டில் தண்ணீர் அழும் விழும்
ஸ்விட்ச் போர்டு
இளித்துச்சிரிக்கும்
எந்தக்குழாயும் திருகவராது
கேஸ் சிலிண்டரின் இழுவைக்கொடை
தரையில் அங்கங்கே உடைப்பு
கொடுத்தப் பூட்டுகள்
எதுவும் வாராது ஒத்த சாவியைத்திருப்பித்தருவார் பத்திரமாய்
சுவரில் சுண்ணம் கோவிந்தாவெனப் பல்லிளிக்கும்
ஏன் அச்சம்
கொடுத்த அட்வான்சில் கழி
உங்கள் யோசனை
மூன்று மாதமாய் வாடகை வரவில்லை
அட்வான்சில் எடு
கச்சிதமாய்க்கணக்கு சொன்னார் அகம்பாவமாய்
வாடகைக்குத்தான் விட்டுப் பாருங்களேன் உங்கள் வீட்டை .

கவிதை -மணிப்பூர்

 கவிதை வாசிக்கலாம் வாங்க  - விருட்சம்- மெய்நிகர்

21/7/23 நிகழ்வில்


மணிப்பூர் 

மலைமேல் கூகி

அடிவாரத்தில் மெய்டி

மணிப்பூர் தீப்பற்றி எரிகிறது
இனச்சண்டை
அரசு சலுகை மெய்டிக்கா
விடுவோமா
சண்டை ஆரம்பம்
வெட்டு வெட்டு
மனிதனை வெட்டு
உடை மண்டையை
துகிலுரி பெண்களை
நாசம்செய்
வாழ்விடம் சாம்பலாகட்டும்
ஆலயங்கள் தகர்
கத்தியொடு சுற்றிவா
என்னவும் செய்
சட்டம் ஒழுங்கா
வெங்காயம் போ.
பாராளுமன்றம் சலவைக்கல்லில்
செங்கோல்வெள்ளியில்
பசும்பால்குடி
வேறேதும் வேண்டாம்
வேதம் ஓது
இடை நிறுத்தாதே
அதை மட்டும்.