வாடகை வீடு/எஸ்ஸார்சி
கவிதை வாசிக்கலாம் வாங்க. 10வது நிகழ்வில் படிக்கவிருந்த கவிதை.
வாடகைக்குக்குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை
ஓயாமல் முறை வைப்பார்
வீட்டில் அது இல்லை இது இல்லை
எதுவும் சரியில்லை
வீட்டைக் காலிசெய்வது
உறுதியாகி வேறு வீட்டுக்கு
அட்வான்ஸ் கொடுத்தனரோ அவ்வளவுதான்
அவர்கள் பார்வை மேலே தான்
குடியிருந்த வீட்டின் உட்சுவரெல்லாம் பிஞ்சுகளின் கிறுக்கல் ஓவியங்கள்
சமையல் சிங்க் ஒழுகும் பாத்ரூம் டைல்ஸ் வழுக்கும்
டாய்லெட்டில் தண்ணீர் அழும் விழும்
ஸ்விட்ச் போர்டு
இளித்துச்சிரிக்கும்
எந்தக்குழாயும் திருகவராது
கேஸ் சிலிண்டரின் இழுவைக்கொடை
தரையில் அங்கங்கே உடைப்பு
கொடுத்தப் பூட்டுகள்
எதுவும் வாராது ஒத்த சாவியைத்திருப்பித்தருவார் பத்திரமாய்
சுவரில் சுண்ணம் கோவிந்தாவெனப் பல்லிளிக்கும்
ஏன் அச்சம்
கொடுத்த அட்வான்சில் கழி
உங்கள் யோசனை
மூன்று மாதமாய் வாடகை வரவில்லை
அட்வான்சில் எடு
கச்சிதமாய்க்கணக்கு சொன்னார் அகம்பாவமாய்
வாடகைக்குத்தான் விட்டுப் பாருங்களேன் உங்கள் வீட்டை .
No comments:
Post a Comment