Friday, January 3, 2025

கவிதைகள்

பணம்


 பணம் பண்ணுவது எப்படி

அதுவேதான் வாழ்க்கை

பணம் செய்து விடும் எதனையும் பணத்தைச் சேர். 

பணத்தைச் சேர்ந்தவர்கள் பேசு மொழி வேறாக இருக்கிறது ஆகவே அவர்கள் கடவுளும்

வேறாகவே தெரிகிறார்

எல்லோரும் ஒன்றென

ஓயாமல் சொல்லிக்கொள்

புத்தகங்கள் ஆயிரமுண்டு  தூக்கம்

வராத நேரங்களை

எப்படித்தொலைப்பாய் நீ. 



4. கூர்க்கா


பச்சைக் காக்கி உடுப்பிலே கயிறு கட்டிய தடியோடு மாசம் பிறந்தால் வாசலில் கூர்க்கா ஒருவன் வருகிறான். 

வீட்டுக் கேட்டை தட்டிவிட்டு 

சாப் நமஸ்கார் என்கிறான் பத்து ரூபாய்

அவனுக்குப் பதினைந்து

வருஷமாய்த் தருகிறேன்

தந்யவாத் சொல் லிடுவான் புன்னகைத்து

விடை பெறுவான்

அவனும் கூட்டிக் கேட்கவில்லை

நானும் கூட்டிக் கொடுக்கவில்லை அந்த

இதனைத்தான்.




No comments:

Post a Comment