Friday, January 3, 2025

கவிதைகள்

 எஸ்ஸார்சி கவிதைகள்


1. பேய் மழை


வடகிழக்குப் பருவமழை

திக்குமுக்காட வைக்கிறது மனிதனை

என்று எவ்வளவு எங்கே

பெய்யும் யாரறிவார்

எத்தனையோ கணக்குகள்

அத்தனையும் பொய்யா கிறது 

ஆண்டு முழுவதற்குமான மழை

கொட்டித் தீர்க்கிறது

ஒரே போதில்

வாழ் புவியில் கரியமிலவாயு

கூடிப் போனது கடல்நீர்

வெப்பமடைகிறது

கணிக்க முடியாது எதையும்

அறிவியல் ஆளைவிடு என்கிறது

பூமியைச்சூடாக்குபவர்கள்

அடுக்க கத்தில் கும்மாளமடிக்கிறார்கள்

ஆற்றோரத்து அன்றாடம் காய்ச்சிகள்தாம்

அவஸ்தை யில் எப்போதும். 


2. நாடாளுமன்றம்


ஓய்வூதியம் உறுதி

மாதச் சம்பளம் கணிசமாய்

விமானப் பயணம் ஓசியில் 

விதம்விதமாய்க் கேடண்டீன் உண்டு

தங்கவும் தூங்கவும் குளிர் சாதன அறையுண்டு

தொலைபேசி வசதியோ இலவசமாய்

எப்போது முண்டு

அறிவு ஊற ஆகப்பெரிய

நூலகம் பக்கமாய். 

டில்லித்தலைநகரில்

நாடாளுமன்ற இரு அவைகளிலும்

நடப்பது என்னவோ

குடுமிப்பிடிச் சண்டை

கூச்சல் கும்மாளம் எப்போதும்

அரசியல் சாசனம் அற்புதமாய்

அதன் ஆசியோடுதானே

அத்தனையும்.



























































No comments:

Post a Comment