மனசுப்போல
நானும் என் மனைவியும்
பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம் புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம்
இருந்தது. மைத்துனரின் பெண் குழந்தகள் இருவர்
உள்ளூர் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு
நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ இந்தத்தகவல் எங்களுக்கு வந்தது.
‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம்
வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’
‘தாராளமா செய்யிலாம்’
‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம்
காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’
‘ஓகே’ நான் சொன்னேன்.
ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர் அழைத்துவரத்தான் இந்த ஏற்பாடு.
நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம் புறப்பட்டோம்.
‘நாம எதுக்கு இப்ப
பொறப்படறம்’
‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு
வந்துடுவம். புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம்
பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம். தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’
‘காபி சூப்பரா
இருக்காமா’
‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும்
என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’
நாங்கள் இருவரும் எங்கள் குடியிருப்பு அருகே இருக்கும்
டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச்
சென்றுகொண்டிருந்தோம். என் பையன் தான் வீட்டைப்பூட்டி
விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள்
இருவரும் நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம்.
பையனும் வந்துவிட்டான்.
‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.
‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’
என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன்
தருவித்தருவி எங்களிடம் வந்து நின்றான்.
‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ், ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு. அதுவும் மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான். கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது
இல்லயாம். அது இன்னிக்கி பாத்துதான் முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க காராமணிகுப்பம் போயிருக்கு. அங்கதான் அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே.
நீங்க எங்க போவுணும் அத மொத சொல்லுங்க’
‘பஸ் ஸ்டேண்ட்’
’பத்து ரூவா குடுங்க.
மூனு பேரும் ஏறுங்க’
‘பத்து ரூவாயா’
‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும் முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’
‘ டவுன் பஸ்ல போனா
மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.
‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு
போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம் குரல் தாழ்த்திச்
சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது.
டவுன் வண்டி இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.
நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ
ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.
‘பத்து ரூவாயிக்கு
இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில்
விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.
பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல்
வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.
‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப் டீ ஃப்ரீ
அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’
என்றான்.
‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும்
குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான்.
நான் என் மனைவியைப்பார்த்தேன்.
‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’ அவள்.
நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும்
காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட் மட்டும் பித்தளையில் பள பள என்று இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன்.
பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.
‘நாம இன்னும் அந்த பஞ்சவடி
ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.
இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும் அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட
முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன். முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை
எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா
என்ன.
‘சரி போய் வந்துடுவம்’
இருவரும் திண்டிவனம்
செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப் பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி
சீட்டு என்றால் பேருந்துக்காரர்கள் ஏற்ற மாட்டார்கள்.
காசா லேசா அதுதானே இங்கு எல்லாமும்.
நானும் அவளும்
பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில்
கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்
வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது. பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று
கொண்டே பிரயாணம் செய்தார்கள்.
‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’
‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’
‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம மட்டும் இங்க வந்தது சரியா’
‘ ஒரு எடத்துக்கு அவனயும் அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க வர்ரம். அதுல ஒன்னும்
தப்புல்லவுடு’
பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக்
காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு
கொண்டார்கள்.
‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’
நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே
திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.
‘டிரைவருங்க ஊரு பேரு ஒரக்க சொல்லி ஜனங்கள வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’
‘எந்த டிரைவருக்கும்
அவுங்க குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’
நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.
வண்டி பாண்டிச்சேரி
பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள்
சிலர் ஏறிக்கொண்டார்கள்.
‘அடுத்தது பஞ்சவடிலதான்
நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத்
தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில்
இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால்
தரையோ மிகவும் பள்ளத்தில் இருந்தது.
‘பாத்து வா பள்ளமா இருக்குது தரை’
அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்
மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர்
நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார்.
வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக
இருந்தது.
‘என் மனைவி காலை நீட்டிய படியே உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ
முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.
ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும்
கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல்
கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன்.
என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ்
அவளை நிறுத்தினேன்.
‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார்
சேவார்த்தி ஒருவர்.
என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு
நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு
நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக வந்து
விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர்
என் மனைவி அருகே வந்து அவள் கா;லைத்தொட்டுப்பார்த்தார்.
தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.
‘சார் டாக்டர்ங்களா’
‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க. ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’
‘சரிங்க டாக்டர்’
‘எங்க போகணும்’
‘கடலூர்’
‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க.
நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’
மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.
‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’
அவர் சிரித்துக்கொண்டார். ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.
என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள்.
நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே
சென்றேன். நெடிய துளசி மாலை அணிந்த ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு
இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று அவரைக் கேட்டுக்கொண்டேன்.
அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம் வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை
வலம் வந்து தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம்
புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை. இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்
‘இது சரியில்லை’
‘கீழே என் மனைவி
உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’
பிரசாதம் வழங்கியின் கேள்விக்கு என்தரப்பு நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம்
சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.
‘’வலிக்குதா’
‘ஒரு டாக்சிய மட்டும் பாருங்க’
அவள் முகம் எட்டுக் கோணலாகியது.
‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’
‘ இதுதான் அது
பேசுற நேரமா’
‘எல்லாம்தான்’
‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’
நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர்
கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப்
போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன் அங்கே
வந்து சேர்ந்தான்.
‘ஏழு நூறு ஆகும்’
‘’ஐநூறு தர்ரேன்’
‘வேற ஆள பாருங்க’ நா
பொறப்படறன்’
‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால்
ஓட்டினாள்.
டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான்.
நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப் நீட்டாகப்படுக்க வைத்தோம்’.
‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’
‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது.
ஸ்டாப்பிங்குல லைட்டு இல்ல இருட்டு வேற’
‘நேரம்னு ஒண்ணு
வேல செய்யுதே. டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.
வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக
இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.
‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’
‘என்கிட்ட இல்லயே’
‘பெறவு’
‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட
குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’
‘’என் கிட்ட குடுக்கல. மறதியா சாவிய அவனே எடுத்து
கிட்டு போயிட்டான்.’
‘இப்ப என்ன செய்ய’
என் மனைவி ஓவென்று
அழ ஆரம்பித்தாள்.
‘வலில அழுவறயா, , வூட்டு சாவியக்காணும்னு அழுவுறயா’ நான் கேட்டேன்.
டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.
‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’
‘இதெல்லாம் அவரு கிட்டா யோசனை கேப்பாங்களா’
‘நானும் கேட்டுகிட்டுதான்
வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி
பூட்டு ஏதும் இருக்கா’
.திண்டுக்கல்லு பூட்டுதான்’
‘என்கிட்ட நாலு
பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு பாப்பம்.
கத ஒன்னும் ஆவுலன்னா. புது ஆக்சா பிளேடு
ஒன்னு இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன் பாத்துகுவம். கவல படாதீங்க’
‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.
‘காலு ரொம்ப வலிக்குதா’
என்றேன்.
என்னை ஒரு முறை முறைத்தாள். வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது.
மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.
ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட
இங்காண்ட எதாவது சொல்வாங்களா’
டிரைவர் என்னிடம்
மெதுவாகச்சொன்னான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.
‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு
எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’ டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள்
நுழைந்தது வண்டி. என் வீடு கீழ் தளத்திலேயே
இருந்தது.
‘வூடு கீழ் தளமா’
‘ஆமாம்’
‘அதுவும் சவுகரியம்தான். அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’
‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’
என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார்
போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து மெதுவாக
அழைத்துக்கொண்டு வந்தேன்.
‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’
‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு
பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.
‘அய்யோ அம்மா’
விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று
இருந்தது.
’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி
? பூட்டிய பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.
வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.
கதவைத்திறந்தது யார் என்கிறீர்கள் என் பையன்தான்.
‘பெண்ணாடம் போகலியா நீ’
‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன்.
பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு
சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது
என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள்
இரண்டு பேரும் எங்கே போனீங்க?’
‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான்
என்ன பண்ணுவேன்’
‘என்னம்மா ஆச்சு
உன் காலு வீங்கி கெடக்கு’
‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு
ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது. இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப்
போயிட்டுது. கீழ காலு வைக்கும் போது அந்த எடம் ஒரே
இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’
நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன்.
பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.
‘என் தம்பி பொண்ணுக வரும்னு ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’
‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது
கெடக்கட்டும்’
‘ஒங்க மனசுப் போலவே இப்ப ஆயிடிச்சில்ல.
அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க
அவள் அப்படித்தான் பேசுவாள்
------------------------------------------------------------
.

மனசுப்போல -எஸ்ஸார்சி

No comments:
Post a Comment