Monday, March 11, 2019

vellam 7

சென்னையில் வெள்ளம் 7

               குரோம்பேட்டையில் ஒரு வீடு  வாடகைக்குத் தயார் என செய்தி கிடைத்தது.பரணியிடம் சொல்லிவிட்டு வந்தது வீண் போகவில்லை
-ஆதம்பாக்கத்தில் பெரிய அண்ணன் வீட்டில் சவுகரியமாகத்தான் இருந்தது. ஒரு வாடகை வீட்டில் ஒரு பத்து பேர் இருப்பது என்பது எத்தனை நாட்களுக்கு சரியாகவரும்.என் பெரிய பையனும் மருமகளும் வேலைக்குச்சென்று வரவேண்டிய பொறுப்பும் இருக்கிறது.ஆக ஆதம்பாக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் புறப்பட்டு குரோம்பேட்டை வீடு பார்த்து பரணியிடம் சாவி வாங்கி வந்து விடுவது முதல் வேலை எனப்புறப்பட்டோம்.
‘இங்கிருந்துட்டு அப்புறமா சொந்த வீட்டுக்கே போய்விடக்கூடாதா வாடகைக்கு வேற ஒரு வீடு எடுக்கணுமா’
அண்ணன்  என்னை அன்பாகத்தான் கேட்டார்.எனக்கும் மனம் என்னவோ செய்தது.இந்த பேய்மழையும் வெள்ளமும் வராதிருந்தால் இந்த சகோதரர்களோடு  எல்லாம் ஒரு பத்து நாட்கள் எங்கே ஒன்றாக இருக்கப்போகிறோம் என எண்ணிப்பார்த்தேன்.
தருமங்குடியில்பெரிய அண்ணன் குடும்பம் இருந்தது.என் பெற்றோர்கள் அண்ணனோடுதான் இருந்தனர்.அண்ணன் தருமங்குடிக்கு அண்டையூர் வளையமாதேவியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அம்மாதான் பெரியண்ணனுக்கு ஊருக்குப்பக்கத்திலேயே வேலை வரவேண்டும் என துளசிமாடத்தை சுற்றி சுற்றி வந்தவள்.
 அம்மா ஒரு தீபாவளிக்கு தான் பெற்ற குழந்தைகள் எல்லாம் தருமங்குடிக்கு ஒருமுறை வந்து போகவேண்டும் என ஆசைப்பட்டார்.ஆக எல்லோருக்கும் செய்தி சொன்னோம். நானும் என் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.என் இரு அண்ணன்களும் தருமங்குடிக்கு வந்து இருந்தனர்.அம்மா அடுத்த தீபாவளிக்குள்ளாக தன்னை முடித்துக்கொண்ட அந்தக் கதை எல்லாம் மனதிற்குள் நிழலாக ஓடியது.
’பரணிய பாத்து அந்த வீட்டு சாவி வாங்கணும்.பரணிகிட்ட பேசணுமே.அவரு போன் வேல செய்யணும். நமக்கு அது கிடைக்கணும். ஆதம்பாக்கம் அண்ணன் வீட்டுல என் மொபைல்ல சார்ஜ் போட்டேன்.ஆனா பைசா இல்ல.ரீசார்ஜ் போடணும்.போட்டாதான் முயற்சி பண்ணி பாக்கவாவது முடியும்.’
குரோம்பேட்டையில குமரன் குன்றத்துக்கு போற பாதையில் இருக்குற கார்ப்பொரேஷன் எலிமெண்ட்ரி ஸ்கூலுக்கு எதிர் வீடுதான் பரணியோட அம்மா வீடு. ஸ்டேசன் லேந்து ஒரு ஆட்டோ புடிச்சி போயிடலாம் பெறகு அவரை பாத்துட்டு எதுவும் செய்யுலாம்’
என் மனைவி எனக்கு கச்சிதமாக ஒரு வழி சொன்னாள்.இனி மொபைல் கிடைப்பது பேசுவது எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகியது. இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து மவுண்ட் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம்.
‘பெருங்களத்தூருக்கு ரெண்டு ரிடேன்னு சொல்லி டிக்கட் எடுக்கணும்’
‘’கொரோம்பேட்டதானே போறம்’
‘பரணி பாக்குற வேல சட்டுன்னு முடிஞ்சிதுன்னா அப்படியே நம்ப நேதாஜிநகர்  வீட்டுக்கும் போய் வந்துடலாம்’
‘அந்த  வீட்டு சாவி’
‘எல்லாம் கொண்டாந்து இருக்கன்’
‘எல்லாம் உசாராத்தான் வந்து இருக்க’
‘முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவம்’ மனைவி பதில் சொன்னாள்.
அவள் சொன்னபடியே இரண்டு பெருங்களத்தூர் ரிடேன் டிக்கட் வாங்கினேன்.
‘ஆ ஒரு வண்டி வருது போல’
‘அது பீச்சு ஸ்டேசன்போறது’
‘நம்ப இப்ப தாம்பரம் பக்கம் போவுணும்.அதான் தெக்க போவுணும்’
‘இந்த கெழக்கு மேற்கே எனக்கு சரியா புடிபடல’
‘அது அனுபவத்துல வர்ரது.இண்ணைக்கு நெனச்சா வராது’ நான் பதில் சொன்னேன்.
மவுண்ட் ஸ்டேஷனில் நல்ல கூட்டம்.மாநகரப் பேருந்துகள் அவ்வளவாக செயல்பாட்டுக்கு வரவில்லை. நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நொண்டி அடித்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.சந்தித்துக்கொள்பவர்கள் எல்லோரும் வந்துபோன பேய்மழை வெள்ளம் பற்றியே பேசிப் பேசி ஆற்றிக்கொண்டார்கள்.
‘மெட்ராஸ்  ஊரு  இந்த கடலுக்கும் தாழ்வா இருக்குறமாதிரில்ல இருக்கு. நானு மெரினாவுக்கு ப்போவும்போது எல்லாம் இத கவனிச்சு இருக்கேன்’
‘அப்படி தோணும்’ நானும் என் மனைவிக்குப்பதில் சொன்னேன்.பிளாட்பாரத்திற்கு இறங்கும் படிக்கட்டுக்களில் இரண்டு நாய்கள் கவலையே இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தன.தாம்பரத்திலிருந்து ஒரு மின்சார ரயில் வந்து முதல் பிளாட்பாரத்தில் நின்றது,மக்கள் அவ்வளவாக இறங்கிடவில்லை.
‘கிண்டி  மாம்பலம் அதவுட்டம்னா எக்மோர்  செண்ட்ரல்ங்கிற பார்க்   இங்கதான் சனம் கெனமா ஏறும் இல்ல எறங்கும்.பாக்கி ஸ்டேசன்ல எல்லாம் அப்படி சொல்லமுடியாது’
‘அது சரிதான். மெட்ரோ ட்ரைன் வேலயும் மும்முரமா நடக்குது.பாருங்க ஆலந்தூரு ஸ்டேசன் கட்டிமுடிச்சி மேல வந்துடுச்சி பாருங்க’
‘பறக்கும் ரயிலுன்னு வேளச்சேரி பக்கமா வுட்டு இருக்கான்.இங்க மெட்றோ ரயிலுன்னு வரப்போவுது. பூமிய கொடையறான் இல்ல பாலம் கட்டி கொண்டுபோறான்.தண்டவாளம் அதுல வரப்போவுது.இன்னும் என்னமோ எல்லாம்  வரப்போவுது’
‘எல்லா ஜனமும் இங்க வந்து வந்து ஏறிப்போனாங்க நரள் தாங்க முடியல’
‘எல்லாருக்கும் இங்க வேல இருக்குதே.சும்மா யாராவது வருவாங்ளா’
செங்கல்பட்டு செல்லும் மின்சாரரயில் வந்தது.இரண்டாவது பிளாட்பாரம் மும்முரமாகியது. இந்த மின்சார ரயில்கள் பாம்புபோல் ஓசையே இல்லாமல் பிளாட்பாரத்தில் வந்து நின்றுவிடுகின்றன.அவை இருக்கின்ற பளுவுக்கும் நீளத்திற்கும் இன்னும் கூட ஓசை வரலாம்.ஆனால் அப்படி வரக்காணோம்.
நானும் என்மனைவியும் ஒரு பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம்.அமர்ந்துகொள்ள இடம் கிடைத்தது. இந்த சென்னைப்புற நகர் ரயில் என்பதை பிச்சை எடுப்பவர்களுக்கும்சேர்த்து த்தான் விட்டிருப்பார்கள். ஒரு யோசனை  இப்படி எனக்கு வருவதுண்டு.ஒரு தொடர் வண்டிக்கு எப்படியும் ஐம்பது பிச்சைக்காரர்களாவது இருப்பார்கள்.அதில் பாதி பேர் கண்தெரியாதவர்கள்.அனேகமாக பார்வை அற்ற பிச்சைக்காரர்கள் தம்பதிகளாகவே காட்சி தருகிறார்கள்.மெய்யாகவே அவர்கள் கணவனும் மனைவியுமா என்கிற அய்யம் வருகிறது. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அலியாய்ப்பிறந்து புடவைகட்டிக்கொண்டு ஆண்போலும் பெண்போலும் சேஷ்டைகளோடு பட் பட் என்று கைதட்டிக்கொண்டு பிச்சைக்கு வருகின்ற மக்களைப்பார்க்கின்றபோது மனம் கனத்துப்போகிறது.படைப்புக்கடவுள் எதற்கு இப்படியெல்லாம் இரக்கமே இல்லாமல் மக்களைப்பிறப்பிக்கின்றானோ?
‘அடுத்த ஸ்டேஷன் குரோம்பேட்டதான்’
அவள் தன் கால்களில் செருப்பை ச்சரிசெய்துகொண்டாள். நாங்கள் இருவரும் இறங்கத்தயாரானோம்.எங்களுக்கு முன்பாக கூடையில் நிரப்பிக்கொண்டு ரயிலில் பழம் காய் வியாபாரம் செய்பவர்கள் இறங்க முண்டி அடித்து நின்றார்கள்.
‘எல்லாரும் இறங்கத்தான போறம்.எதுக்கு முண்டி அடிச்சிகிட்டு’
‘ நீங்க வூட்டுக்கு போவுற சனம் நாங்க எங்க பொழப்ப பாக்குணும்’ எனக்கு ஒரு மீன்கூடைக்காரி பதில் சொன்னாள்.
‘ஒண்ணு குடுத்து ரெண்டு வாங்கிகணுமா’
என் மனைவி எனக்கு எச்சரிக்கை சொன்னாள்.
‘இப்ப என்னத்த மொழங்கிப்புட்டம்னு அப்பிடி பேசுற பெரியம்மா’
என் மனைவியை ப்பர்த்துச்சொன்னாள்.குரோம்பேட்டை ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்தாயிற்று.
‘மொபைல்ல காசு போடணும்’
‘இங்க கடை எதாவது இருக்கா’
இருவரும்  போனுக்கு ரீசார்ஜ் போடும் கடை எங்காவது இருக்கிறதா எனத்தேடி அலைந்தோம்.ஒரு கடையும் இல்லை.அப்படியே இருந்தாலும் ரீசார்ஜ் வசதி எதுவுமே இல்லை.மாநகரமே திரு திரு என விழித்துக்கொண்டுதானே இருந்தது.
‘இப்ப அந்த பரணிகிட்ட பேசுணும்.அப்பதான் அந்த வீடு போய் பாக்க முடியும்’
‘குமரன் குன்றம் போற தெருவுல விசாரிச்சம்னா தெரியும்.ஸ்கூலுகிட்ட வீடுன்னு சொன்னாரே’ தெம்பாகமனைவி பதில் சொன்னாள்.
ஆட்டோக்காரனை தேடிப்பிடித்தோம்.குரோம்பேட்டை குமரன்குன்றம் இருக்கும் தெருவுக்கு கொண்டுபோய்விட அவனுக்குச்சிறிய கட்டளை தந்தோம்.ஆட்டோக்காரன் வெறிபிடித்த மாதிரிக்கு வண்டியை ஓட்டினான்.வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.கொண்டுபோய்  நம்மை இறக்கிவிடுவானா இல்லைமாட்டானா என்கிற அச்சம் வந்துவிட்டது./சாலையில் எதனையும் கவனிக்கக்கூட சாத்தியபடவில்லை.
‘செத்த மெதுவா போகலாம்
‘வேற ஒரு எடம் போவுணும் அதான்’
‘போவணும்  சரி அதுக்கு நாம நல்லா இருக்கணும்ல’
‘ஓவரா பேசாதிங்க. எறக்கிவுட்டுடுவன் தெரியுமா’ எனக்கு பதில் சொன்னான்.
‘குமரன் கோவில் தெரு இதுதான் எறங்கு’
‘இல்லப்பா அந்த கார்பொரேஷன் ஸ்கூலண்ட போவுணும்’
‘எறங்கிக.குமரன்குன்றம் தெருதான பேசுனது’ என் மனைவிக்குக்கட்டளை தந்தான்.
அவனிடம் பேசிய பணத்தக்கொடுத்துவிட்டு கார்ப்ரேஷன் பள்ளி எங்கே எனத்தேட ஆரம்பித்தோம்.
‘வாங்க வாங்க இங்க நேரா வாங்க’ பரணிதான் வேறுயாருமில்லை.
‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாச்சு’ சொல்லிக்கொண்டேன்.
‘இது தான் என் வீடு வாங்க போலாம்’
 நானும் அவளுமாக மெல்ல மெல்ல நடந்து அவர் வீட்டருகே சென்றோம்.கார்ப்ரேஷன் பள்ளி பூட்டிக்கிடந்தது.மழை ஆர்ப்பாட்டம் எல்லாம் இன்னும் முடிந்து சரியாக எத்தனை நாட்கள் ஆகுமோ?பள்ளிக்கூடம் அப்போதுதானே திறப்பார்கள்.
பரணியின் புது வீடு நன்றாகவே இருந்தது.வாடகை வீடுதான். இது எப்படி காலியாய்க்கிடந்ததோ தெரிடவில்லை.
‘பள்ளிக்கூடம் பக்கத்துல அதனாலதான் இந்த வீடு  காலி’ பரணி சொன்னார்.
‘ஏன் பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்தா சவுகரியம்தானே’
‘என்ன சாரு ஒரே ரப்சரால்ல இருக்கும்.குப்பவ நாத்தம் வேற’
‘ஆனா உங்க வீடு நல்லா இருக்கு.எல்லா வசதியும் இருக்குது’
‘ஏதோ என் அவசரத்துக்கு இது கெடச்சிது.’பரணி பதில் சொன்னார்.
‘எங்களுக்கு வாடகைக்கு வீடு பாத்து தர்ரேன்னு சொன்னீங்களே’
என் மனைவி ஆரம்பித்தாள்.
‘ நாந்தானே வரச்சொன்னதே’’
‘அங்க போவுலாம்’
‘என் வீட்டு மாடியிலதான். ஒரு ரூமு. பெரிய ரூமு.பாத்ரூம் டாய்லெட் எல்லாம் இருக்குது. சின்ன ஒதுக்கம் சமையலுக்குன்னு வுட்டு இருக்காங்க’’
‘ நாலு பேரு படுக்கலாமா’ நான் கேட்டேன்.
‘தாராளமா படுக்கலாம்’
பரணி பதில் சொன்னார்.அவரின் மனவி மக்களைக்காணவில்லை.
‘வீட்டுல யாரையும் காணுமே’
‘உங்களுக்குதெரியாதா தனியார் ஸ்கூல்ல அவுளுக்கு வேல.பள்ளிக்கூடம் இல்லன்னாலும் வேல இருக்கும்.அதான் போயிருக்கா’ கொழந்தய பாட்டி வீட்டுல விட்டுட்டு போயிருக்குறா’ நா பாக்குறது எலக்ட்ரிகல் வேல எங்கனா சுத்திகிட்டு கெடப்பன்.அதுவும் இந்த மழைக்கு பின்னால வெளியிலேந்து இன்னும் ஆயிரம் பேருன்னு எலக்ட்ரிசியனுவ வந்தாகூட முடிக்க முடியாத வேலங்க சென்னையில கெடக்கு’
‘யூ பி எஸ் சர்வீசு பாக்குறதுதான் உங்க மெயின் வேல’
‘ஆமாம் சாரு சென்னையில லட்சக்கணக்குல அந்த பேட்டரிங்க போயி கெடக்கு.மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. கரண்டு சுத்தமா இல்ல என்னா செய்வ’
‘மோட்டருங்க காயிலு போயிருக்கும்’
‘ஆமாம் சாரு காரும் டூவிலரும்கூட மல மலையா ரிப்பேரா கெடக்கு’
பரணி சொல்லிக்கொண்டேபோனார்.கையில் ஒரு சாவியோடு புறப்பட்டார்
‘வாங்க படிக்கட்டு வெளிப்புறமா இருக்கு அது ஒரு சவுகரியம்’
‘தண்ணிவசதி மேல எப்படி’
‘ஒருகொழாய் இருக்கு. அத வச்சி புடிச்சிகலாம். நல்லா ஃபோர்சா தண்ணி வரும்’
‘ நாங்க என்னா டெம்ப்ரவரியா மிஞ்சி மிஞ்சிபோனா ஒருமாசம் இங்க இருப்பம்’
நான் பரணிக்கு சொன்னேன்.
மேல்தளத்திற்கு வந்தாயிற்று. ரூமை த்திறந்து காட்டினார் பரணி. இரண்டு மின்விசிறிகள் பெரிய அறை.ஒரு நிச்சயதார்த்தம் காதுகுத்தி கூட செய்துவிடலாம் போன்று இருந்தது  அந்த அறையின் விஸ்தீரணம்.
‘இது போதும் எங்களுக்கு’
‘மருமொவ எதாவது சொல்லுமா’
‘அதயும் கேட்டுகுவம்.கொஞ்ச நாளுதான் இங்க இருப்பம்’
‘அதான் எனக்கு தயக்கம்.ரூமு இல்லயேன்னு’ பரணி ஆரம்பித்தார்.
’வாடகை என்னா சொல்வாங்க’
‘அது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல.மேல்தளத்துல வயரிங் வேல     பாக்க சொல்லி வூட்டுக்காரரு சொல்லி இருக்காரு.இது மார்கழி மாசம் யாரும் புதுசா வாடகைக்கு வரமாட்டாங்க.பொங்கல் கழிச்சி வாடகைக்கு வுடலாம்னு அவுரு முடிவு.அதுக்குள்ளாற. நீங்களும் நேதாஜி நகர்ல உங்க வீடு சரியாக்கிகிட்டு போயிடலாம். நா சொல்றது எப்பிடி’
‘வாடகை’
‘அது ஒரு பிரச்சனை இல்ல’
‘அது எப்பிடி’
‘அவுரு மார்ச்சு மாசம்தான் இந்தியா வருவாரு.வரும்போது அத பேசிக்கலாம்’
‘இப்ப’
‘சிங்கப்பூர்ல வேலமேல இருக்காரு.குடும்பமும் அங்கதான் இருக்கு’
மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என முடிவு செய்தோம்.பரணி சாவி கொடுத்துவிட்டு அவர் வேலைக்குப்போய்விட்டார்,
நானும் என் மனைவியும் மருமகளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்.அதற்குப்பிறகு இது பற்றி முடிவுசெய்துவிடுவோம் என்றுதீர்மானித்தோம்.
மருமகளுக்கு ஃபோன் போடவேண்டும்.போனில் சார்ஜ் இருக்கிறது.ஆனால் ரீசார்ஜ் போட்டால்தான் அது வேலைக்கு ஆகும்..இருவரும் ரூமை பூட்டிவிட்டு க்கிளம்பினோம்.சாவி எங்களிடம்தான் இருந்தது.அது பற்றி ஒன்றும் கவலை இல்லை
.மருமகள் இந்த இடத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை இருக்கத்தான் செய்தது.  வீட்டின் அருகிலிருந்த கார்ப்ரேஷன் பள்ளி வாயிலில் ஒரே குப்பையும் கூளமும் பார்க்க முடிந்தது.
‘’ நம்ப போவகுள்ள இத காணும்.இப்ப வந்து இருக்கு’
‘யாராவது வந்து கொட்டிட்டு போயிருப்பாங்க’
நகரத்தில் குப்பையை நிர்வாகம் செய்வதே பெரும்பிரச்சனை.குப்பையை தரம் பிரிப்பது அதனை க்கொண்டுபோய் சேர்க்கவேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் சேர்ப்பது மட்டுமில்லை ஒரு விஷயம் அதனைச்சரியாக பொட்டலமாகக்கட்டி இடம் மாற்றுதல் என்பது மிக முக்கியம்.. 
குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் கேட் அருகே பி எஸ் என் எல் ரீசார்ஜ் கிடைப்பதாகச்சொன்னார்கள்.அங்கே போனால்தான் மொபைலுக்கு ரீசார்ஜ் சாத்தியப்படும்.குரோம்பேட்டையில் சின்னதாக ஒரு ஜாகை பார்த்தது மருமகளுக்கு ச்சொல்லி அவளும் அதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும்.
‘ஒரு ஆட்டோ பிடிச்சி ரயில்வே ஸ்டேசன் போயிடலாம்’
‘சரி’ என்றேன்.தெருவில் ஒரு ஆட்டோக்காரனையும்காணோம்.
‘வந்தா ஒண்ணு பின்னால ஒண்ணா வருவானுவ.இல்லன்னா வரவே மாட்டானுவ’
‘மினி பஸ் வருது பாருங்க’
பஸ் சை யாரும் பேருந்து என்று அழைப்பதில்லை.மினி பஸ் சை எங்கே சிற்றுந்து என்று அழைத்துப்பழகுவது. ஆங்கிலமும் அதன் ஆட்சியும்  இத்தமிழ் மண்ணில் கூடிக்கொண்டேதான் போகிறது.
பச்சை வண்ணத்தில் அழகான மினி பஸ் எங்களருகே நின்று எங்களை ஏற்றிக்கொண்டது.பேருந்து  இப்பேருந்தில் ஓட்டுனரும் நடத்துனரும் இதமாக நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது.
’வெள்ளம் மழையில ஜனம் கொஞ்சம்  மாறியிருக்கலாம்’
நான் சொல்லிக்கொண்டேன். சிற்றுந்திலும் நல்லகூட்டம்.எந்த வசதி செய்தாலும் அதுவும் போதவில்லை என்பதுதான் அனுபவம். வண்டி மேம்பாலத்தில் ஏறி இறங்கி குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டது.
மொபைலுக்கு ரீசார்ஜ் போடும் கடையைத்தேட ஆரம்பித்தோம்.பல்லாவரம் பக்கமாக நடக்க ஆரம்பித்தோம்.குரோம்பேட்டை ஸ்டேஷனில் இரு சக்கர வாகன வாடகை நிறுத்தத்தில் ஒருவர் கன்னா பின்னா என்று கத்திக்கொண்டு இருந்தார்.
‘’எல்லாம் வண்டியும் நிக்குது என் வண்டி எப்படி காணோம போகும். என் வண்டி புது வண்டி அதான் திருடிகிட்டு போயிட்டானுவ. என் வண்டிக்கு வண்டி குடுத்தாதான் ஆச்சி.இல்லன்னா நா உட மாட்டன். ஒண்ணுல ரெண்டு பாத்துட்டுதான் மறுவேல’
‘ஸ்டேஷன்ல போயி கம்ப்ள்யிண்ட் குடு.என்னா ஆவுதுன்னு பாக்கலாம்’
இருசக்கர வாடகை நிறுத்தத்துக்காரர் வண்டி தொலைந்துபோன ஆசாமிக்குப் பதில் சொன்னார்.
சண்டை தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது.
ரயில்வே கேட் சமீபமானது. மொபைல் போன் கடை ஒன்றும் திறந்து இருக்கவில்லை. அருகில் ஒரு செறுப்புத்தைப்பவன் அமர்ந்து வேலை செய்துகொண்டு இருந்தான்.
‘’என்னா தேடுறீங்க சாரு.செறுப்பு ஏதும் தைக்கணுமா’ அவன்தான் என்னைப்பார்த்து க்கேட்டான்.
‘இல்லப்பா மொபைல் ரீசார்ஜ் கடை எங்க இருக்குன்னு பாக்குறன்’
‘இந்த ஊரு ஒலகமே மொபைலுகார அவாளதான் தேடுது.ரவ செத்த மின்னாடி வந்து இருந்தா ஆள பாத்தும் இருக்கலாம்.இந்நேரம் அந்த குரோம்பேட்டை பஸ் சாண்டு மய்யமா இருக்குற புள்ளயா கோவுலுக்கு போயிருப்பாரு. அங்க அவுருதான்சாமி படைக்கிறாரு.பெறகு கடைக்கும் வருவாரு.அங்கயும் கைசெலவுக்கு காசி வரும்.இங்கயும் தொழிலு இருக்கு’
செறுப்பு ரிப்பேர் செய்பவன் சொல்லிமுடித்தான்.
‘ரீசார்ஜ் கடை முன்பாக நானும் என் மனைவியும் நின்று என்னசெய்வது என்றயோசனையில் இருந்தோம்..’
‘இது ஒண்ணும் வேலைக்காவாது’
 நேதாஜி நகருக்கு போயி நம்ப வீட்டபாத்துட்டு வரலாம். நீ என்னா சொல்லுற’
‘பஸ்ஸை புடிச்சி போவோம். ஆனா பஸ் போவுதான்னு பாக்குணும்’
‘தாம்பரம் போயி அப்புறமா யோசனை பண்ணலாம்’
ஒரு ஷேர் ஆட்டோக்காரன் அருகே வந்து’அய்யா எங்க போறிங்க’
என்றான்.இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டோம்.ஆட்டோவில் முன்னமே இருவர் அமர்ந்து இருந்தார்கள்.
‘ நீங்க தள்ளி ஒக்காருங்க நாங்க சித்தாவுல இறங்கிகறம்’
அதற்குள்ளாக சித்தா மருத்துவ மனையே வந்துவிட்டது.ஷேர் ஆட்டோக்காரன் வண்டியை நிறுத்தினான்.
‘எங்க ஏறினாலும் எங்க எறங்கினாலும் ஆளுக்கு இருவது ரூவா’ ஆட்டோக்காரன் கட்டளைதந்தான்.தேசிய நெடுஞ்சாலையில் நிறைத்துக்கொண்டு வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தனஆட்டோ விரைந்துகொண்டிருந்தது.
‘குரோம்பேட்டை கவுர்மென்ட் ஆஸ்பத்திரியிலேந்து பேஷண்ட்களை கட்டிலோட வெளியே தூக்கிகிட்டு  தள்ளிகிட்டு வந்து காப்பாத்தி இருக்காங்க.அந்த டி பி ஆஸ்பத்திரியிலேந்தும் அதே கதைதான். இந்த சேதி தெரிஞ்சி இருக்கும்’.
‘கேள்விபட்டம்’’ நான் பதில் சொன்னேன்.
‘என் வீடு குரோம்பேட்டை ஏரிக்கு அங்காண்ட தண்ணியில முங்கிடுச்சி’
ஆட்டோக்காரன் சுய அனுபவத்தைச்சொல்லிக்கொண்டான்.
‘குடும்பம்’’
‘எல்லாம் விருத்தாசலம் போயிடுச்சிங்க. ஒண்ணும் சரிபட்டுவராதுன்னு கெளப்பிவுட்டுட்டன்.அங்க ஏகத்துக்கு எங்க ஜனம் இருக்கு.பிரியமான ஜனங்க.சொந்த பந்தம்தான் வேற என்னா செய்வ?’
எனக்கு பதில் சொன்னான்.
‘’இப்ப என்ன பண்ணுற’
‘ நா என்னா பண்ணுவன். இந்த வண்டி இருக்கு. இதுலயே மொடங்கிகுவேன்.ஓட்டல்ல சாப்பாடு. வூடு என்னாச்சின்னுதான் தெரியல. அநேகமா ஒண்ணும் தேறாது.என்னா செய்யப்போறனோ’
‘மண்ணு சொந்த மண்ணா’
‘இல்ல சாரு பொறம்போக்குதான் ஆனா மண்ணு காசு போட்டு வாங்குனன். அம்பதுக்கு இருவது.வூட்டுவரி கட்டியிருக்கன்.கரண்டு இழுத்து இருக்கன்’
‘ஏரி ஒட்டா’
‘அதான் ஒரு பெரிய தப்பு’ நான் பதில் சொன்னேன்.
 ‘நீர் நிலைவ பொறம்போக்கெல்லாம் காலி பண்ணிடணும்னு  கவுர்மெண்ட்டு உத்தரவு வருதாம் நமக்கு .மாத்து வூடுஒண்ணு  எனாம  எங்கனா எட்டக இருக்குறது தருவாங்களாம்.அது வேற ஒரு தல வலி சனம் பேசிக்குது.’
‘ஆரும் வந்து பாத்துட்டு போனாங்களான்னுதெரியல  நா என்னாத்த கண்டன். இந்த ரோட்டுல கெடந்து மடியுறன்’
ஆட்டோக்காரன் முடித்துக்கொண்டான்.
தாம்பரம் வந்தாயிற்று.மழை வெள்ளம் அடித்து ஓய்ந்து போன சோகம் இன்னும் சென்னையை விட்டபாடில்லை.இது எத்தனை நாட்கள் தொடருமோ.
பெரிய சாலையை  பாதாசாரிகள் கடப்பதற்காக ஒரு சிக்னல் கம்பம் வைத்திருந்தார்கள்.அதன் அருகே நானும் என் மனைவியும் நின்று கொண்டிருந்தோம்.
திருபெரும்புதூர் செல்லும் பேருந்துகள் சாலையில் நின்று கொண்டிருந்தன,இவை பார்வதி நகரைத்தாண்டிக்கொண்டுதான் வழக்கமாகச்செல்லும்.
‘வண்டலூர் வழியா போவுது. முடிச்சூர் மணிமங்கலம் யாரும் ஏறாதே’
திருபெரும்புதூர் பேருந்தின் கண்டக்டர் கூவிக்கொண்டிருந்தார்.
‘அப்ப இன்னும் கிருஷ்ணா நகரு தண்ணீ சரியாவுலன்னு தோணுது’
‘ஷேர் ஆட்டோக்காரன் போவானான்னு தெரியணும்’
இருவரும் காத்துக்கொண்டிருந்தோம்
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோகாரனை விசாரைத்தோம்.அவன் சொன்னான்.’இந்த ரோட்டைகெராஸ் பண்ணி ஆங்காண்ட போயி நில்லுங்க. அந்த சீவா செலயண்ட ஆட்டோகாரனுவ நிப்பானுவ. இண்ணைக்கி காலையிலேந்து ஆட்டோ போவுதுன்னு சொன்னாங்க’
‘எதுத்தாப்புல அம்பேதகாரு செல இருக்கு.ஆனா சீவான்னு  சொல்றீங்க’
‘சாரு கொஞ்சம்தூரம்  நாலு தப்படி நடக்கணும் அவ்வளவுதான்’
‘ நானு பாத்தது இல்ல.
‘ பெருங்களத்தூரு ஆசாமிதான.இது தெரியாதா’
‘தெரியலயே’
‘சீவாவ எல்லாம் யாருக்கும் தெரியாது. நாங்க இங்கயே கெடந்தம்.பாத்து இருக்கம்.’
அந்த ஆட்டோக்காரனுக்கு தலை வழுக்கி இருந்தது.வயது எழுபது இருக்கலாம் என்று தோன்றியது.சிக்னல் கம்பத்தில் விளக்கு ஒளி எதுவுமே எரியவில்லை.ஒரு அய்ம்பது பேருக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும், நின்று கொண்டிருந்தார்கள்.ஒரு போலிசுகாரர் சிக்னல் அருகில் வந்து நின்று கொண்டிருந்தார்.
‘போ போ சட்டுன்னு ஆவுட்டும்’ ஜாடை காட்டினார் போலிசுகாரர்.கட கட என சாலையை மக்கள் கடக்க ஆரம்பித்தார்கள். நானும் என் மனைவியும் அம்பேத்கர் சிலை அருகே வந்தோம்.
 ஆட்டோக்காரர்கள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டு நின்றார்கள்.அவர்களின் வாழ்க்கைக்கான வருமானம் நிலையில்லாததுவாகவே இருந்தது. எப்போதும் போராட்டமானதொரு வாழ்க்கைக்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டியுள்ளது.சொந்தமாக ஒருவண்டியில்லாதவர்களின் நிலமை இன்னும் மோசமானதுதான். தினம் தினம் வண்டியின் முதலாளிக்கும்  வண்டிக்குப்போடும் டீசல் பெட்ரோலுக்கும்இடையே  அவர்கள் திண்டாட வேண்டியுள்ளது.மக்களை ஏற்றிச்செல்வதில் அவர்களோடு பேசிச்சமாளிப்பதில் எத்தனையோ வித்தைகளை கைக்கொள்ள வேண்டிய சூழல்.சக ஆட்டோக்காரர்களோடு இணக்கமாய்ப்போதல் அல்லது சண்டை பிடித்தல். எத்தனையோ வித்தைகள் பழக வேண்டிய கட்டாயம். காவல்துறை அதிகாரிகள் அரசியல் வாதிகள் எல்லோருடனும் தினசரி உரசல்கள்.
‘முடிச்சூர் போற ஆட்டோவ எங்க நிக்குது’ ஒரு ஆட்டோக்காரனைக்கேட்டேன்.
‘’அந்த மீன்கார அம்மா பக்கமா போங்க.இண்ணைக்குத்தான முடிச்சூருக்கு வண்டிவ வுட ஆரம்பிச்சி இருக்குறானுவ’
ஆட்டோக்காரன் எனக்கு ப்பதில் சொன்னான். நான் ஜீவாவின் சிலை எங்கே இருக்கிறது எனத்தேடினேன். அந்த சிலைக்குக்கீழாகத்தான் ஒரு மீன்காரி தன் மீன்களை அடுக்கிவைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இந்த ஜீவாவின் சிலையை இதுனாள்வரை நான் எங்கே பார்த்தேன்.இப்படி ஒரு சிலை இங்கு நிற்பதை நான் எப்படியோ கவனிக்காமல்தான் சென்றிருக்கிறேன் என்பது உறுதியாகிவிட்டது.ஜீவாவின் தமிழ் மீது எனக்கு வணக்கத்திற்குறிய மரியாதை உண்டு, மாகவிபாரதியோடும்  வியர்வை சிந்தும் பாட்டாளியோடும் தன்தாய்மொழித்தமிழோடும் அவருக்கு இருந்த பந்தம் ஆழமானது.
‘வா வா முடிச்சூர் போறது எல்லாம் இங்க வா’
ஆட்டோக்காரன் கூவிக்கொண்டிருந்தான்.
‘எங்க எறங்கினாலும் ரூவா இருவது ஏறு ஏறு சட்டுனு ஏறு’’ என்றான்.வேறு ஒரு ஆட்டோக்காரனையும் அங்கே காணோம்.
நானும் என் மனைவியும் முடிச்சூர் செல்லும் அந்த  ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டோம்.வண்டி கிளம்பியது.வசந்தபவன் ஓட்டலுக்கு ப்பின்புறமாக இருக்கும் கடைத்தெருவழியாகச் சென்று ராஜாஜிசாலையைக்கடந்து காந்திசாலையில் ஒரு ஏடிஎம் அருகே ஆட்டோ நின்றது.
‘ஒரு சவத்தை ச்சுமந்த ஊர்தி மெது மெதுவாக எதிரே ஊர்ந்து வந்துகொண்டிருந்ததைக்காணமுடிந்தது.வாண வெடிக்கார்கள் வாணத்தைத்தொடர்ந்து விட்டுக்கொண்டிருந்தார்கள். நல்ல கூட்டம்சவ வண்டியைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.கூட்டத்தில் பாதி பேருக்குமேல் குடித்துவிட்டு வருவதைக்காண முடிந்தது.குடிப்பழக்கமுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தமதாக்கிக்கொண்டு ஒய்யாரமாய் ஊர்வலத்தில் நடக்கிறார்கள்.குறவன் குறத்தி நடனம் போடும் குழு அது தன் பாட்டுக்கு த்தோன்றியதைஎல்லாம் சொல்லி சொல்லி ஆடிக்கொண்டே நடந்துபோனது.
‘ஏன் நாம போவலாம்ல’’
‘ஒரே நிமிசம். இந்த வண்டி ஓனருக்கு உறவு சாவு.அவரும் நடந்தே சொடலைக்கு போவாறு அதான் எனக்கு யோசனை’ ஆட்டோக்காரன் சொன்னான்.
மதுரவாயில் பைபாஸ் சாலைக்குக்கீழாக ஆட்டோ சென்றது. ஒரே துர் நாற்றம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.ஏது ஏதோ அழுகிய வீச்சம் சகிக்கமுடியாமல் இருந்தது.இரு மருங்கிலும் இருந்த கடைகள் தரைதளம் சில இடங்களில் முதல்தளம் முற்றாக நனைந்து  பொருட்கள்கள் சொதசொதப்பில் கூழாகி சாலை எங்கும் சிதறி அறுவறுப்பாகக்காட்சியானது.
‘ரோட்டை பாருங்க பள்ளம் பள்ளம் பள்ளம் தண்ணி தண்ணி தண்ணி’
‘ரொம்ப கேவலம்’ என்றேன்’
என் மனைவியைப்பார்த்தேன். அவள் முகம் வாடிப்போய் இருந்தது.’இந்த கஷ்டம் நமக்கு விடுதலையாகுமா’ என்கிற ஐய்யத்தை அது எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தது.
கண்ணன் அவென்யு,பாரதி நகர்,கந்தி நகர்,பத்மாவதி கல்யாண மண்டபம் என வரிசையாகக் கடந்துபோனது.சாலையை தாண்டி பிறவெளி எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வெள்ளக்கதை பேசிக்கோண்டிருந்தார்கள்.
பழைய பெருங்களத்தூர் வந்தது.அம்பேத்கர் சிலை முன்பாக வண்டி நின்றது.
‘எல்லாரும் எறங்கு’
‘இல்ல நாங்க பார்வதி நகரு போவுணும்’
‘’அதான் பார்வதி நகரு. நாலு தப்படி நடந்தா நல்லது உடம்புக்கும்’
ஆட்டோக்காரன் அதிர்ந்து சொன்னான்.
பழைய பெருங்களத்தூர் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
இதுவரைக்கும் அவன் ஆட்டோவில் கொண்டு வந்துவிட்டது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
பார்வதி நகருக்குள் ஜீப்பும் காருமாக சென்றவண்ணம் இருந்தன.
மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் என் எழுதிக்கொண்ட ஜீப்புக்கள் வேன்கள் போலிசுவண்டிகள் பார்வதி நகர் பக்கம் வேகமாகச்சென்றன.
பார்வதி நகர் முதல் மூன்று தெருக்கள் விட்டுப் பிற அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளம் தன் ஆட்சியைச்செலுத்திச்சென்றுவிட்டிருப்பதைக்காண முடிந்தது.அரசாங்கத்தின் பொதுவி நியோகக்கடைவரை வெள்ள நீர் வந்து நின்று’எப்படி இருக்கிங்க நீங்க’ என்று கேட்டுவிட்டுச்சென்றதைக்காணமுடிந்தது.
பார்வதி நகரின் மையமாக உள்ள பிள்ளையார் கோவில் முன்பாக என் நண்பர் வெங்கடாசாலம் நின்றுகொண்டிருந்தார். நானும் அவரும் வடலூர் சேஷசாயி பீங்கான் தொழிற்சாலையில் சூப்பர்வைசர்களாகப்பணியாற்றியவர்கள்.அவர் பார்வதி நகரில் வந்து குடியேறி இருக்கிறார்.அவரின் மனைவி பங்கஜம் என்னோடு தொலைபேசி இலாகாவில் பணியாற்றியவர்.அந்த அம்மாவும்  இப்போது உயிருடன் இல்லை.
‘வாங்க சாரு இப்பதான் பாக்க வர்ரீங்களா’
‘வணக்கம் வெங்கடாசலம் சாருதானே.’
‘அதே சாருதான். பங்கஜம் வூட்டுக்காரருன்னு நீங்க சொல்வீங்க’
‘என்னையும் இன்னைக்கும் பானு வீட்டூக்காரருன்னுதான் எம்மைத்துனர்  வீட்டுல பேசிக்குவாங்க’
‘இங்க  நம்ப சக்திவிநாயகரு அஞ்சி நாளைக்கு வெள்ள த்தண்ணில கெடந்தாரு. போயிபாருங்க கோவில’
‘இந்த தெருவுல மொத மாடி தப்பிச்சிது. தரைதள குடியிருப்புவ பூரா காலி ஆயிட்டுது.ஜனம் இப்பதான் அது அது வந்து பாக்குது’
‘ நாங்களும் அப்பிடித்தான் வந்து இருக்கம்’
‘என் வீட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் காலி ஆயிட்டுது.மேல் தளத்தில் வாடகைக்கு ஒரு டீச்சர் குடியிருந்தாங்க.அவுங்களுக்கு ஒண்ணும் எடஞ்சல் இல்ல’
‘ நாம் போவுலாம்’ என்றாள் மனைவி.
அவளின் முகம் வாட்டமாகவே இருந்தது.
‘சரி நீங்க போயிபாருங்க என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ வெங்கடாசலம் ஒதுங்கி வழிவிட்டார்.
பார்வதி நகர் பூங்கா குடிதண்ணீர் விநியோகிக்கும்அலுவலகம்,ராஜாஜி தெரு கண்ணதாசன் தெரு.வாஞ்சி நாதன்தெரு முவ தெரு என வரிசையாக வந்தது.வீதிகள் சேரும் சகதியுமாக இருந்தன. அங்கங்கே தெருவில் மின்சாரக்கம்பங்கள் சில சாய்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன,தெருக்கள்  எல்லாம் குப்பையும் கூளமுமாகக்காட்சி அளித்தன.
மாவட்ட ஆட்சியரின் ஜீப்புக்கள் வேன்கள் திரும்பி ப்பிரதான சாலைக்கு மீண்டுகொண்டு இருந்தன,
மகாலட்சுமி நகர் தாண்டி நேதாஜி நகரை  கண்டுபிடித்து வந்து விட்டோம்.அதுதானே எங்கள் வீடு இருக்கும் பகுதி. நேதாஜி நகரில் மொத்தம் நான்கு தெருக்கள். நேதாஜி நகருக்கு விரிவு என்கிற வால் பகுதியும் உண்டு. அதுதான் அடை ஆற்றின் கரையில் உள்ள பகுதி.அங்கே நான்கு தெருக்கள் இருக்கலாம்.
நேதாஜி நகருக்கு முன்பாக ஒரு ஓடைமாதிரிக்குச்சென்றுகொண்டிருந்தது.அதனில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அது கால் முட்டிவரைக்கும் வெள்ளத் தண்ணீரைக்கொண்டிருந்தது.
என் மனைவியின் கையை ப்பிடித்துக்கொண்டேன்.மெதுவாக மெதுவாக நடந்து நடந்து எங்கள் இரண்டாவது தெருவுக்கு வந்துவிட்டோம்.
வீட்டின் கேட் திறந்துகிடந்தது.வீட்டின் முன்பாக ஒரே குப்பை.
‘ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜசேகர் அவருக்கு ப்  பூர்வீகம் திருவாரூர் பக்கம் எட்டுக்குடி  நேதாஜி நகரில் எங்கள் தெருவில் முதல் வீட்டில் குடியிருந்தார்.அவருக்கு ச்சொந்தமான வீடுதான் அது. அவர் எங்களைப்பார்க்கவந்தார். அவரின் வீட்டு வாயிலில் வீட்டு சாமான்கள் இறைந்துகிடந்தன.தெருவில் நடக்கவே முடியவில்லை. ஒரே சேரும் சகதியும்.
எல்லோரும் மொட்டை மாடியில் வீட்டு சாமான்களை காயவைத்துக்கொண்டு இருந்தார்கள்.யார் வீட்டிலும் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை.குடிப்பதற்கும் எங்கிருந்தேனும் கொண்டு வந்திருந்தால் குடிக்கலாம்.வே\று வழிதான் ஏது.
இரண்டு டூவீலர்களும் பரிதாபமாகச் சாய்ந்துகிடந்தன.மூலைக்கொன்றாக செறுப்புக்கள் பிய்ந்தவை.பிய்யாதவை எனக்கிடந்தன.
‘கீழ் வீட்டு சாவியை எடு’
என் மனைவி தரைதள ப்பகுதி வீட்டின் சாவியை என்னிடம் நீட்டினாள்.பூட்டைத்திறந்துவிட்டேன்.கதவு எனக்கு இந்த முறையும்  திறக்க வரவில்லை.கூடிய மட்டும் பலம் கொண்டு தள்ளிப்பார்த்தேன்.தட்டிப்பார்த்தேன்.கதை ஒன்றும் ஆகவில்லை.கால்களால் பலம் கொண்டமட்டும் உதைத்தேன்.
‘சாரு வர்ராரு ராஜசேகர் சாரு அவுருகிட்ட கொஞ்சம் கேப்போம்’
என் மனவி சொன்னாள்.
‘ நான் தோ வர்ரேன். பாக்குலாம் நனைஞ்ச கதவு புடிச்சிகிட்டு கெடக்கும்.என் வீட்டு கதவும் அப்பிடித்தான் புடிச்சிகிட்டு கெடந்தது.அப்புறம் என் பையன் பலமா தட்டினான். எப்பிடியோ திறந்து வுட்டான்’
‘வுடுங்க அவுருகிட்ட’
நான் சற்று த்தள்ளி நின்றுகொண்டேன்.என் மனைவி சுவர் ஓரம் நிற்கும் மோட்டார் எப்படி என்று பார்த்தாள்.
மோட்டார் மீது மூடியிருக்கும் தகரக்குவளையை க்காணோம்.வெள்ளம் அதனை எங்கு கொண்டு சேர்த்ததோ தெரியவில்லை.
ராஜசேகர் சார் இன்னும் அந்த கதவோடு மல்லுகட்டிக்கொண்டு இருந்தார்.கதவு அசையக்கூட இல்லை.
‘வேதாரண்ய ஈசன் திருக்கோவில் கதவு ஒரு தேவாரம் பாடத்திறந்துகொள்ளுமாம்’ என்றேன்.
சேகர் சார்’ நான் அப்பரும் இல்லை அந்த சம்பந்தரும் இல்லை’ சொல்லிக்களங்கமில்லாமல் சிரித்தார்.
-----------------------------------------------------------

   .
.

 a வெள்ளம் 7

குரோம்பேட்டையில் ஒரு வீடு  வாடகைக்குத் தயார் என செய்தி கிடைத்தது.பரணியிடம் சொல்லிவிட்டு வந்தது வீண் போகவில்லை
-தம்பாக்கத்தில் பெரிய அண்ணன் வீட்டில் சவுகரியமாகத்தான் இருந்தது. ஒரு வாடகை வீட்டில் ஒரு பத்து பேர் இருப்பது என்பது எத்தனை நாட்களுக்கு சரியாகவரும்.என் பெரிய பையனும் மருமகளும் வேலைக்குச்சென்று வரவேண்டிய பொறுப்பும் இருக்கிறது.ஆக ஆதம்பாக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் புறப்பட்டு குரோம்பேட்டை வீடு பார்த்து சாவி வாங்கி வந்து விடுவது முதல் வேலை எனப்புறப்பட்டோம்.
‘இங்கிருந்துட்டு அப்புறமா சொந்த வீட்டுக்கே போய்விடக்கூடாதா வாடகைக்கு வேற ஒரு வீடு எடுக்கணுமா’
அண்ணன்  என்னை அன்பாகத்தான் கேட்டார்.எனக்கும் மனம் என்னவோ செய்தது.இந்த பேய்மழையும் வெள்ளமும் வராதிருந்தால் இந்த சகோதரர்களொடு ஒரு பத்து நாட்கள் எங்கே ஒன்றாக இருக்கப்போகிறோம் என எண்ணிப்பார்த்தேன்.
தருமங்குடியில்பெரிய அண்ணன் குடும்பம் இருந்தது.என் பெற்றோர்கள் அண்ணனோடுதான் இருந்தனர்.அண்ணன் தருமங்குடிக்கு அண்டையூர் வளையமாதேவியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அம்மாதான் பெரியண்ணனுக்கு ஊருக்குப்பக்கத்திலேயே வேலை வரவேண்டும் என துளசிமாடத்தை சுற்றி சுற்றி வந்தவள்.
 அம்மா ஒரு தீபாவளிக்கு தான் பெற்ற குழந்தைகள் எல்லாம் தருமங்குடிக்கு ஒருமுறை வந்து போகவேண்டும் என ஆசைப்பட்டார்.ஆக எல்லோருக்கும் செய்தி சொன்னோம். நானும் என் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.என் இரு அண்ணன்களும் தருமங்குடிக்கு வந்து இருந்தனர்.அம்மா அடுத்த தீபாவளிக்குள்ளாக தன்னை முடித்துக்கொண்ட கதை எல்லாம் மனதிற்குள் நிழலாக ஓடியது.
’பரணிய பாத்து அந்த வீட்டு சாவி வாங்கணும்.பரணிகிட்ட பேசணுமே.அவரு போன் வேல செய்யணும். நமக்கு அது கிடைக்கணும். ஆதம்பாக்கம் அண்ணன் வீட்டுல என் மொபைல்ல சார்ஜ் போட்டேன்.ஆனா பைசா இல்ல.ரீசார்ஜ் போடணும்.போட்டாதான் முயற்சி பண்ணி பாக்கவாவது முடியும்.’
குரோம்பேட்டையில குமரன் குன்றத்துக்கு போற பாதையில் இருக்குற கார்ப்பொரேஷன் எலிமெண்ட்ரி ஸ்கூலுக்கு எதிர் வீடுதான் பரணியோட அம்மா வீடு ஸ்டேசன் லேந்து ஒரு ஆட்டோ புடிச்சி போயிடலாம் பெறகு அவரை பாத்துட்டு எதுவும் செய்யுலாம்’
என் மனைவி எனக்கு கச்சிதமாக ஒரு வழி சொன்னாள்.இனி மொபைல் கிடைப்பது பேசவது எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகியது. இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து மவுண்ட் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம்.
‘பெருங்களத்தூருக்கு ரெண்டு ரிடேன்னு சொல்லி டிக்கட் எடுக்கணும்’
‘’கொரோம்பேட்டதானே போறம்’
‘பரணி பாக்குற வேல சட்டுன்னு முடிஞ்சிதுன்னா அப்படியே நம்ப வீட்டுக்கும் போய் வந்துடலாம்’
‘அந்த சாவி’
‘எல்லாம் கொண்டாந்து இருக்கன்’
‘எல்லாம் உசாராத்தான் வந்து இருக்க’
‘முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவம்’ மனைவி பதில் சொன்னாள்.
அவள் சொன்னபடியே இரண்டு பெருங்களத்தூர் ரிடேன் டிக்கட் வாங்கினேன்.
‘ஆ ஒரு வண்டி வருது போல’
‘அது பீச்சு ஸ்டேசன்போறது’
‘நம்ப இப்ப தாம்பரம் பக்கம் போவுணும்.அதான் தெக்க போவுணும்’
‘இந்த கெழக்கு மேற்கே எனக்கு சரியா புடிபடல’
‘அது அனுபவத்துல வர்ரது.இண்ணைக்கு நெனச்சா வராது’ நான் பதில் சொன்னேன்.
மவுண்ட் ஸ்டேஷனில் நல்ல கூட்டம்.மாநகரப் பேருந்துகள் அவ்வளவாக செயல்பாட்டுக்கு வரவில்லை. நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நொண்டி அடித்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.சந்தித்துக்கொள்பவர்கள் எல்லோரும் வந்துபோன பேய்மழை வெள்ளம் பற்றியே பேசிப் பேசி ஆற்றிக்கொண்டார்கள்.
‘மெட்ராஸ்  ஊரு  இந்த கடலுக்கும் தாழ்வா இருக்குறமாதிரில்ல இருக்கு. நானு மெரினாவுக்கு ப்போவும்போது எல்லாம் இத கவனிச்சு இருக்கேன்’
‘அப்படி தோணும்’ நானும் என் மனைவிக்குப்பதில் சொன்னேன்.பிளாட்பாரத்திற்கு இறங்கும் படிக்கட்டுக்களில் இரண்டு நாய்கள் கவலையே இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தன.தாம்பரத்திலிருந்து ஒரு மின்சார ரயில் வந்து முதல் பிளாட்பாரத்தில் நின்றது,மக்கள் அவ்வளவாக இறங்கிடவில்லை.
‘கிண்டி இல்ல மாம்பலம் அதவுட்டம்னா எக்மோர் இல்ல செண்ட்ரல் இங்கதான் சனம் கெனமா ஏறும் இல்ல எறங்கும்.பாக்கி ஸ்டேசன்ல எல்லாம் அப்படி சொல்லமுடியாது’
‘அது சரிதான். மெட்ரோ ட்ரைன் வேலயும் மும்முரமா நடக்குது.பாருங்க ஆலந்தூரு ஸ்டேசன் கட்டிமுடிச்சி மேல வந்துடுச்சி பாருங்க’
‘பறக்கும் ரயிலுன்னு வேளச்சேரி பக்கமா வுட்டு இருக்கான்.இங்க மெட்றோ ரயிலுன்னு வரப்போவுது. பூமிய கொடையறான் இல்ல பாலம் கட்டி கொண்டுபோறான்.தண்டவாளம் அதுல வரப்போவுது.இன்னும் என்னமோ வரப்போவுது’
‘எல்லா ஜனமும் இங்க வந்து வந்து ஏறிப்போனாங்க நரள் தாங்க முடியல’
‘எல்லாருக்கும் இங்க வேல இருக்குதே.சும்மா யாராவது வருவாங்ளா’
செங்கல்பட்டு செல்லும் மின்சாரரயில் வந்தது.இரண்டாவது பிளாட்பாரம் மும்முரமாகியது. இந்த மின்சார ரயில்கள் பாம்புபோல் ஓசையே இல்லாமல் பிளாட்பாரத்தில் வந்து நின்றுவிடுகின்றன.அவை இருக்கின்ற பளுவுக்கும் நீளத்திற்கும் இன்னும் கூட ஓசை வரலாம்.ஆனால் அப்படி வரக்காணோம்.
நானும் என்மனைவியும் ஒரு பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம்.அமர்ந்துகொள்ள இடம் கிடைத்தது. இந்த சென்னைப்புற நகர் ரயில் என்பதை பிச்சை எடுப்பவர்களுக்குத்தான் விட்டிருப்பார்கள் என்கிற ஒரு யோசனை எனக்கு வருவதுண்டு.ஒரு தொடர் வண்டிக்கு எப்படியும் ஐம்பது பிச்சைக்காரர்களாவது இருப்பார்கள்.அதில் பாதி பேர் கண்தெரியாதவர்கள்.அனேகமாக பார்வை அற்ற பிச்சைக்காரர்கள் தம்பதிகளாகவே காட்சி தருகிறார்கள்.மெய்யாகவே அவர்கள் கணவனும் மனைவியுமா என்கிற அய்யம் வருகிறது. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அலியாய்ப்பிறந்து புடவைகட்டிக்கொண்டு ஆண்போலும் பெண்போலும் சேஷ்டைகளோடு பட் பட் என்று கைதட்டிக்கொண்டு பிச்சைக்கு வருகின்ற மக்களைப்பார்க்கின்றபோது மனம் கனத்துப்போகிறது.படைப்புக்கடவுள் எதற்கு இப்படியெல்லாம் இரக்கமே இல்லாமல் மக்களைப்பிறப்பிக்கின்றானோ?
‘அடுத்த ஸ்டேஷன் குரோம்பேட்டதான்’
அவள் தன் கால்களில் செருப்பை ச்சரிசெய்துகொண்டாள். நாங்கள் இருவரும் இறங்கத்தயாரானோம்.எங்களுக்கு முன்பாக கூடையில் நிரப்பிக்கொண்டு ரயிலில் பழம் காய் வியாபாரம் செய்பவர்கள் இறங்க முண்டி அடித்து நின்றார்கள்.
‘எல்லாரும் இறங்கத்தான போறம்.எதுக்கு முண்டி அடிச்சிகிட்டு’
‘ நீங்க வூட்டுக்கு போவுற சனம் நாங்க எங்க பொழப்ப பாக்குணும்’ எனக்கு ஒரு மீன்கூடைக்காரி பதில் சொன்னாள்.
‘ஒண்ணு குடுத்து ரெண்டு வாங்கிகணுமா’
என் மனைவி எனக்கு எச்சரிக்கையாக சொன்னாள்.
‘இப்ப என்னத்த முழுங்கிப்புட்டம்னு அப்பிடி பேசுற பெரியம்மா’
என் மனைவியை ப்பர்த்துச்சொன்னாள்.குரோம்பேட்டை ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்தாயிற்று.
‘மொபைல்ல காசு போடணும்’
‘இங்க கடை எதாவது இருக்கா’
இருவரும்  போனுக்கு ரீசார்ஜ் போடும் கடை எங்காவது இருக்கிறதா எனத்தேடி அலைந்தோம்.ஒரு கடையும் இல்லை.அப்படியே இருந்தாலும் ரீசார்ஜ் வசதி எதுவுமே இல்லை.மாநகரமே திரு திரு என விழித்துக்கொண்டுதானே இருந்தது.
‘இப்ப அந்த பரணிகிட்ட பேசுணும்.அப்பதான் அந்த வீடு போய் பாக்க முடியும்’
‘குமரன் குன்றம் போற தெருவுல விசாரிச்சம்னா தெரியும்.ஸ்கூலுகிட்ட வீடுன்னு சொன்னாரே’ தெம்பாகமனைவி பதில் சொன்னாள்.
ஆட்டோக்காரனை தேடிப்பிடித்தோம்.குரோம்பேட்டை குமரன்குன்றம் இருக்கும் தெருவுக்கு கொண்டுபோய்விட அவனுக்குச்சிறிய கட்டளை தந்தோம்.ஆட்டோக்காரன் வெறிபிடித்த மாதிரிக்கு வண்டியை ஓட்டினான்.வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.கொண்டுபோய்  நம்மை இறக்கிவிடுவானா இல்லைமாட்டானா என்கிற அச்சம் வந்துவிட்டது./சாலையில் எதனையும் கவனிக்கக்கூட சாத்தியபடவில்லை.
‘செத்த மெதுவா போகலாம்
‘வேற ஒரு எடம் போவுணும் அதான்’
‘போவணும் அதுக்கு நாம நல்லா இருக்கணும்ல’
‘ஓவரா பேசாதிங்க. எறக்கிவுட்டுடுவன் தெரியுமா’ எனக்கு பதில் சொன்னான்.
‘குமரன் கோவில் தெரு இதுதான் எறங்கு’
‘இல்லப்பா அந்த கார்பொரேஷன் ஸ்கூலண்ட போவுணும்’
‘எறங்கிக.குமரன்குன்றம் தெருதான பேசுனது’ என் மனைவிக்குக்கட்டளை தந்தான்.
அவனிடம் பேசிய பணத்தக்கொடுத்துவிட்டு கார்ப்ரேஷன் பள்ளி எங்கே எனத்தேட ஆரம்பித்தோம்.
‘வாங்க வாங்க இங்க நேரா வாங்க’ பரணிதான் வேறுயாருமில்லை.
‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாச்சு’ சொல்லிக்கொண்டேன்.
‘இது தான் என் வீடு வாங்க போலாம்’
 நானும் அவளுமாக மெல்ல மெல்ல நடந்து அவன் வீட்டருகே சென்றோம்.கார்ப்ரேஷன் பள்ளி பூட்டிக்கிடந்தது.மழை ஆர்ப்பாட்டம் எல்லாம் இன்னும் முடிந்து சரியாக எத்தனை நாட்கள் ஆகுமோ?பள்ளிக்கூடம் அப்போதுதானே திறப்பார்கள்.
பரணி வீடு நன்றாகவே இருந்தது.வாடகை வீடுதான்.இது எப்படி காலியாய்க்கிடந்ததோ தெரிடவில்லை.
‘பள்ளிக்கூடம் பக்கத்துல அதனாலதான் இந்த வீடு  காலி’ பரணி சொன்னார்.
‘ஏன் பள்ளிக்கூடம் பக்கத்துல இருந்தா சவுகரியம்தானே’
‘என்ன சாரு ஒரே ரப்சரால்ல இருக்கும்.குப்பவ நாத்தம் வேற’
‘ஆனா உங்க வீடு நல்லா இருக்கு.எல்லா வசதியும் இருக்குது’
‘ஏதோ என் அவசரத்துக்கு இது கெடச்சிது.’பரணி பதில் சொன்னார்.
‘எங்களுக்கு வாடகைக்கு வீடு பாத்து தர்ரேன்னு சொன்னீங்களே’
என் மனைவி ஆரம்பித்தாள்.
‘ நாந்தானே வரச்சொன்னதே’’
‘அங்க போவுலாம்’
‘என் வீட்டு மாடியில ஒரு ரூமு.பெரிய ரூமு.பாத்ரூம் டாய்லெட் எல்லாம் இருக்குது. சின்ன ஒதுக்கம் சமையலுக்குன்னு வுட்டு இருக்காங்க’’
‘ நாலு பேரு படுக்கலாமா’ நான் கேட்டேன்.
‘தாராளமா படுக்கலாம்’
பரணி பதில் சொன்னார்.அவரின் மனவி மக்களைக்காணவில்லை.
‘வீட்டுல யாரையும் காணுமே’
‘உங்களுக்குதெரியாதா தனியார் ஸ்கூல்ல அவுளுக்கு வேல.பள்ளிக்கூடம் இல்லன்னாலும் வேல இருக்கும்.அதான் போயிருக்கா’ கொழந்தய பாட்டி வீட்டுல விட்டுட்டு போயிருக்குறா’ நா பாக்குறது எலக்ட்ரிகல் வேல எங்கனா சுத்திகிட்டு கெடப்பன்.அதுவும் இந்த மழைக்கு பின்னால வெளியிலேந்து இன்னும் ஆயிரம் பேருன்னு எலக்ட்ரிசியனுவ வந்தாகூட முடிக்க முடியாத வேலங்க சென்னையில கெடக்கு’
‘யூ பி எஸ் சர்வீசு பாக்குறதுதான் உங்க மெயின் வேல’
‘ஆமாம் சாரு சென்னையில லட்சக்கணக்குல அந்த பேட்டர்ங்க போயி கெடக்கு.மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. கரண்டு  சுத்தமா இல்ல என்னா செய்வ’
‘மோட்டருங்க காயிலு போயிருக்கும்’
‘ஆமாம் சாரு காரும் டூவிலரும்கூட மல மலையா ரிப்பேரா கெடக்கு’
பரணி சொல்லிக்கொண்டேபோனார்.கையில் ஒரு சாவியோடு புறப்பட்டார்
‘வாங்க படிக்கட்டு வெளிப்புறமா இருக்கு அது ஒரு சவுகரியம்’
‘தண்ணிவசதி மேல எப்படி’
‘ஒருகொழாய் இருக்கு. அத வச்சி புடிச்சிகலாம். நல்லா ஃபோர்சா தண்ணி வரும்’
‘ நாங்க என்னா டெம்ப்ரவரியா மிஞ்சி மிஞ்சிபோனா ஒருமாசம் இங்க இருப்பம்’
நான் பரணிக்கு சொன்னேன்.
மேல்தளத்திற்கு வந்தாயிற்று. ரூமை த்திறந்து காட்டினார் பரணி. இரண்டு மின்விசிறிகள் பெரிய அறை.ஒரு நிச்சயதார்த்தம் காதுகுத்தி கூட செய்துவிடலாம் போன்று இருந்தது அறையின் விஸ்தீரணம்.
‘இது போதும் எங்களுக்கு’
‘மருமொவ எதாவது சொல்லுமா’
‘அதயும் கேட்டுகுவம்.கொஞ்ச நாளுதான் இங்க இருப்பம்’
‘அதான் எனக்கு தயக்கம்.ரூமு இல்லயேன்னு’ பரணி ஆரம்பித்தார்.
’வாடகை என்னா சொல்வாங்க’
‘அது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல.மேலதளத்துல வயரிங் வந்தது போனது பாக்க சொல்லி வூட்டுக்காரரு சொல்லி இருக்காரு.இது மார்கழி மாசம் யாரும் புதுசா வாடகைக்கு வரமாட்டாங்க.பொங்க கழிச்சி வாடகைக்கு வுடலாம்னு அவுரு முடிவு.அதுக்குள்ளாற. நீங்களும் நேதாஜி நகர்ல உங்க வீடு சரியாக்கிகிட்டு போயிடலாம். நா சொல்றது எப்பிடி’
‘வாடகை’
‘அது ஒரு பிரச்சனை இல்ல’
‘அது எப்பிடி’
‘அவுரு மார்ச்சு மாசம்தான் இந்தியா வருவாரு.வரும்போது அத பேசிக்கலாம்’
‘இப்ப’
‘சிங்கப்பூர்ல வேலமேல இருக்காரு.குடும்பமும் அங்கதான் இருக்கு’
மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என முடிவு செய்தோம்.பரணி சாவி கொடுத்துவிட்டு அவர் வேலைக்குப்போய்விட்டார்,
நானும் என் மனைவியும் மருமகளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்.அதற்குப்பிறகு இது பற்றி முடிவுசெய்துவிடுவோம் என்றுதீர்மானித்தோம்.
மருமகளுக்கு ஃபோன் போடவேண்டும்.போனில் சார்ஜ் இருக்கிறது.ஆனால் ரீசார்ஜ் போட்டால்தான் அது வேலைக்கு ஆகும்..இருவரும் ரூமை பூட்டிவிட்டு க்கிளம்பினோம்.சாவி எங்களிடம்தான் இருந்தது.அது பற்றி ஒன்றும் கவலை இல்லை.மருமகள் இந்த இடத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை இருக்கத்தான் செய்தது.  வீட்டின் அருகிலிருந்த கார்ப்ரேஷன் பள்ளி வாயிலில் ஒரே குப்பையும் கூளமும் பார்க்க முடிந்தது.
‘’ நம்ப போவகுள்ள இத காணும்.இப்ப வந்து இருக்கு’
‘யாராவது வந்து கொட்டிட்டு போயிருப்பாங்க’
நகரத்தில் குப்பையை நிர்வாகம் செய்வதே பெரும்பிரச்சனை.குப்பையை தரம் பிரிப்பது அதனை க்கொண்டுபோய் சேர்க்கவேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் சேர்ப்பது மட்டுமில்லை ஒரு விஷயம் அதனைச்சரியாக பொட்டலமாகக்கட்டி இடம் மாற்றுதல் என்பது மிக முக்கியம்.. குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் கேட் அருகே பி எஸ் என் எல் ரீசார்ஜ் கிடைப்பதாகச்சொன்னார்கள்.அங்கே போனால்தான் மொபைலுக்கு ரீசார்ஜ் சாத்தியப்படும்.குரோம்பேட்டையில் சின்னதாக ஒரு ஜாகை பார்த்தது மருமகளுக்கு ச்சொல்லி அவளும் அதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும்.
‘ஒரு ஆட்டோ பிடிச்சி ரயில்வே ஸ்டேசன் போயிடலாம்’
‘சரி’ என்றேன்.தெருவில் ஒரு ஆட்டோக்காரனையும்காணோம்.
‘வந்தா ஒண்ணு பின்னால ஒண்ணா வருவானுவ.இல்லன்னா வரவே மாட்டானுவ’
‘மினி பஸ் வருது பாருங்க’
பஸ் சை யாரும் பேருந்து என்று அழைப்பதில்லை.மினி பஸ் சை எங்கே சிற்றுந்து என்று அழைத்துப்பழகுவது.ஆங்கிலம் அதன் ஆட்சி இத்தமிழ் மண்ணில் கூடிக்கொண்டேதான் போகிறது.
பச்சை வண்ணத்தில் அழகான மினி பஸ் எங்களருகே நின்று எங்களை ஏற்றிக்கொண்டது.பேருந்து  இப்பேருந்தில் ஓட்டுனரும் நடத்துனரும் இதமாக நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது.
’வெள்ளம் மழையில ஜனம் கொஞ்ச மாறியிருக்கலாம்’
நான் சொல்லிக்கொண்டேன். சிற்றுந்திலும் நல்லகூட்டம்.எந்த வசதி செய்தாலும் அதுவும் போதவில்லை என்பதுதான் இங்கு அனுபவம். வண்டி மேம்பாலத்தில் ஏறி இறங்கி குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டது.
மொபைலுக்கு ரீசார்ஜ் போடும் கடையைத்தேட ஆரம்பித்தோம்.பல்லாவரம் பக்கமாக நடக்க ஆரம்பித்தோம்.குரோம்பேட்டை ஸ்டேஷனில் இரு சக்கர வாகன வாடகை நிறுத்தத்தில் ஒருவர் கன்னா பின்னா என்று கத்திக்கொண்டு இருந்தார்.
‘’எல்லாம் வண்டியும் நிக்குது என் வண்டி எப்படி காணோம போகும். என் வண்டி புது வண்டி அதான் திருடிகிட்டு போயிட்டானுவ. என் வண்டிக்கு வண்டி குடுத்தான் ஆச்சி.இல்லன்னா நா உட மாட்டன். ஒண்ணுல ரெண்டு பாத்துட்டுதான் மறுவேல’
‘ஸ்டேஷன்ல போயி கம்ப்ள்யிண்ட் குடு.என்னா ஆவுதுன்னு பாக்கலாம்’
இருசக்கர வாடகை நிறுத்தத்துக்காரர் வண்டி தொலைந்துபோன ஆசாமிக்குப் பதில் சொன்னார்.
சண்டை தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது.
ரயில்வே கேட் சமீபமானது. மொபைல் போன் கடை ஒன்றும் திறந்து இருக்கவில்லை. அருகில் ஒரு செறுப்புத்தைப்பவன் அமர்ந்து வேலை செய்துகொண்டு இருந்தான்.
‘’என்னா தேடுறீங்க சாரு.செறுப்பு ஏதும் தைக்கணுமா’ அவன்தான் என்னைப்பார்த்து க்கேட்டான்.
‘இல்லப்பா மொபைல் ரீசார்ஜ் கடை எங்க இருக்குன்னு பாக்குறன்’
‘இந்த ஊரு ஒலகமே மொபைலுகார அவாளதான் தேடுது.ரவ செத்த மின்னாடி வந்து இருந்தா ஆள பாத்தும் இருக்கலாம்.இந்நேரம் அந்த குரோம்பேட்டை பஸ் சாண்டு மய்யமா இருக்குற புள்ளயா கோவுலுக்கு போயிருப்பாரு. அங்க அவுருதான்சாமி படைக்கிறாரு.பெறகு கடைக்கும் வருவாரு.அங்கயும் கைசெலவுக்கு காசி வரும்.இங்கயும் தொழிலு இருக்கு’
செறுப்பு ரிப்பேர் செய்பவன் சொல்லிமுடித்தான்.
‘ரீசார்ஜ் கடை முன்பாக நானும் என் மனைவியும் நின்று என்னசெய்வது என்றயோசனையில் இருந்தோம்..’
‘இது ஒண்ணும் வேலைக்காவாது’
 நேதாஜி நகருக்கு போயி நம்ப வீட்டபாத்துட்டு வரலாம். நீ என்னா சொல்லுற’
‘பஸ்ஸை புடிச்சி போவோம். ஆனா பஸ் போவுதான்னு பாக்குணும்’
‘தாம்பரம் போயி அப்புறமா யோசனை பண்ணலாம்’
ஒரு ஷேர் ஆட்டோக்காரன் அருகே வந்து’அய்யா எங்க போறிங்க’
என்றான்.இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டோம்.ஆட்டோவில் முன்னமே இருவர் அமர்ந்து இருந்தார்கள்.
‘ நீங்க தள்ளி ஒக்காருங்க நாங்க சித்தாவுல இறங்கிகறம்’
அதற்குள்ளாக சித்தா மருத்துவ மனையே வந்துவிட்டது.ஷேர் ஆட்டோக்காரன் வண்டியை நிறுத்தினான்.
‘எங்க ஏறினாலும் எங்க எறங்கினாலும் ஆளுக்கு இருவது ரூவா’ ஆட்டோக்காரன் கட்டளைதந்தான்.தேசிய நெடுஞ்சாலையில் நிறைத்துக்கொண்டு வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தனஆட்டோ விரைந்துகொண்டிருந்தது.
‘குரோம்பேட்டை கவுர்மென்ட் ஆஸ்பத்திரியிலேந்து பேஷண்ட்களை கட்டிலோட வெளியே தூக்கிகிட்டு  தள்ளிகிட்டு வந்து காப்பாத்தி இருக்காங்க.அந்த டி பி ஆஸ்பத்திரியிலேந்தும் அதே கதைதான். இந்த சேதி தெரிஞ்சி இருக்ககும்’.
‘கேள்விபட்டம்’’ நான் பதில் சொன்னேன்.
‘என் வீடு குரோம்பேட்டை ஏரிக்கு அங்காண்ட தண்ணியில முங்கிடுச்சி’
ஆட்டோக்காரன் சுய அனுபவத்தைச்சொல்லிக்கொண்டான்.
‘குடும்பம்’’
‘எல்லாம் விருத்தாசலம் போயிடுச்சிங்க. ஒண்ணும் சரிபட்டுவராதுன்னு கெளப்பிவுட்டுட்டன்.அங்க ஏகத்துக்கு எங்க ஜனம் இருக்கு.பிரியமான ஜனங்க.சொந்த பந்தம்தான் வேற என்னா செய்வ?’
எனக்கு பதில் சொன்னான்.
‘’இப்ப என்ன பண்ணுற’
‘ நா என்னா பண்ணுவன். இந்த வண்டி இருக்கு. இதுலயே மொடங்கிகுவேன்.ஓட்டல்ல சாப்பாடு. வூடு என்னாச்சின்னுதான் தெரியல. அ நேகமா ஒண்ணும் தேறாது.என்னா செய்யப்போறனோ’
‘மண்ணு சொந்த மண்ணா’
‘இல்ல சாரு பொறம்போக்குதான் ஆனா மண்ணு காசு போட்டு வாங்குனன். அம்பதுக்கு இருவது.வூட்டுவரி கட்டியிருக்கன்.கரண்டு இழுத்து இருக்கன்’
‘ஏரி ஒட்டா’
‘அதான் ஒரு பெரிய தப்பு’ நான் பதில் சொன்னேன்.
‘பொறம்போக்கெல்லாம் காலி பண்ணிடணும்னு  கவுர்மெண்ட்டு உத்தரவு வருதாம் நமக்கு .மாத்து வூடுஒண்ணு  எனாம  எங்கனா எட்டக இருக்குறது தருவாங்களாம்.அது வேற ஒரு தல வலி சனம் பேசிக்குது.’
‘ஆரும் வந்து பாத்துட்டு போனாங்களா’
‘ நா என்னாத்த கண்டன். இந்த ரோட்டுல கெடந்து மடியுறன்’
ஆட்டோக்காரன் முடித்துக்கொண்டான்.
தாம்பரம் வந்தாயிற்று.மழை வெள்ளம் அடித்து ஓய்ந்து போன சோகம் இன்னும் சென்னையை விட்டபாடில்லை.இது எத்தனை நாட்கள் தொடருமோ.
பெரிய சாலையை  பாதாசாரிகள் கடப்பதற்காக ஒரு சிக்னல் கம்பம் வைத்திருந்தார்கள்.அதன் அருகே நானும் என் மனைவியும் நின்று கொண்டிருந்தோம்.
திருபெரும்புதூர் செல்லும் பேருந்துகள் சாலையில் நின்று கொண்டிருந்தன,இவை பார்வதி நகரைத்தாண்டிக்கொண்டுதான் வழக்கமாகச்செல்லும்.
‘வண்டலூர் வழியா போவுது. முடிச்சூர் மணிமங்கலம் யாரும் ஏறாதே’
திருபெரும்புதூர் பேருந்தின் கண்டக்டர் கூவிக்கொண்டிருந்தார்.
‘அப்ப இன்னும் கிருஷ்ணா நகரு தண்ணீ சரியாவுலன்னு தோணுது’
‘ஷேர் ஆட்டோக்காரன் போவானான்னு தெரியணும்’
இருவரும் காத்துக்கொண்டிருந்தோம்
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோகாரனை விசாரைத்தோம்.அவன் சொன்னான்.’இந்த ரோட்டைகெராஸ் பண்ணி ஆங்காண்ட போயி நில்லுங்க. அந்த சீவா செலயண்ட ஆட்டோகாரனுவ நிப்பானுவ. இண்ணைக்கி காலையிலேந்து ஆட்டோ போவுதுன்னு சொன்னாங்க’
‘எதுத்தாப்புல அம்பேதகாரு செல இருக்கு.ஆனா சீவா செலன்றீங்க’
‘சாரு கொஞ்சம்தூரம்  நாலு தப்படி நடக்கணும் அவ்வளவுதான்’
‘ நானு பாத்தது இல்ல.
‘ பெருங்களத்தூரு ஆசாமிதான.இது தெரியாதா’
‘தெரியலயே’
‘சீவாவ எல்லாம் யாருக்கும் தெரியாது. நாங்க இங்கயே கெடந்தம்.பாத்து இருக்கம்.’
அந்த ஆட்டோக்காரனுக்கு தலை வழுக்கி இருந்தது.வயது எழுபது இருக்கலாம் என்று தோன்றியது.சிக்னல் கம்பத்தில் விளக்கு ஒளி எதுவுமே எரியவில்லை.ஒரு அய்ம்பது பேருக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும், நின்று கொண்டிருந்தார்கள்.ஒரு போலிசுகாரர் சிக்னல் அருகில் வந்து நின்று கொண்டிருந்தார்.
‘போ போ சட்டுன்னு ஆவுட்டும்’ ஜாடை காட்டினார் போலிசுகாரர்.கட கட என சாலையை மக்கள் கடக்க ஆரம்பித்தார்கள். நானும் என் மனைவியும் அம்பேத்கர் சிலை அருகே வந்தோம்.
 ஆட்டோக்காரர்கள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டு நின்றார்கள்.அவர்களின் வாழ்க்கைக்கான வருமானம் நிலையில்லாததுவாகவே இருந்தது. எப்போதும் போராட்டமானதொரு வாழ்க்கைக்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டியுள்ளது.சொந்தமாக ஒருவண்டியில்லாதவர்களின் நிலமை இன்னும் மோசமானதுதான். தினம் தினம் வண்டியின் முதலாளிக்கும்  வண்டிக்குப்போடும் டீசல் பெட்ரோலுக்கும்இடையே  அவர்கள் திண்டாட வேண்டியுள்ளது.மக்களை ஏற்றிச்செல்வதில் அவர்களோடு பேசிச்சமாளிப்பதில் எத்தனையோ வித்தைகளை கைக்கொள்ள வேண்டிய சூழல்.சக ஆட்டோக்காரர்களோடு இணக்கமாய்ப்போதல் அல்லது சண்டை பிடித்தல் என்பதிலும் எத்தனையோ வித்தைகள் பழக வேண்டிய கட்டாயம். காவல்துறை அதிகாரிகள் அரசியல் வாதிகள் எல்லோருடனும் தினசரி உரசல்கள் கூடிய வாழ்க்கை.
‘முடிச்சூர் போற ஆட்டோவ எங்க நிக்குது’ ஒரு ஆட்டோக்காரனைக்கேட்டேன்.
‘’அந்த மீன்கார அம்மா பக்கமா போங்க.இண்ணைக்குத்தான முடிச்சூருக்கு வண்டிவ வுட ஆரம்பிச்சி இருக்குறானுவ’
ஆட்டோக்காரன் எனக்கு ப்பதில் சொன்னான். நான் ஜீவாவின் சிலை எங்கே இருக்கிறது எனத்தேடினேன். அந்த சிலைக்குக்கீழாகத்தான் ஒரு மீன்காரி தன் மீன்களை அடுக்கிவைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இந்த ஜீவாவின் சிலையை இதுனாள்வரை நான் எங்கே பார்த்தேன்.இப்படி ஒரு சிலை இங்கு நிற்பதை நான் எப்படியோ கவனிக்காமல்தான் சென்றிருக்கிறேன் என்பதுமட்டும் உறுதியாகிவிட்டது.ஜீவாவின் தமிழ் மீது எனக்கு வணக்கத்திற்குறிய மரியாதை உண்டு, மாகவிபாரதியோடும்  வியர்வை சிந்தும் பாட்டாளியோடும் தன்தாய்மொழித்தமிழோடும் அவருக்கு இருந்த பந்தம் ஆழமானது.
‘வா வா முடிச்சூர் போறது எல்லாம் இங்க வா’
ஆட்டோக்காரன் கூவிக்கொண்டிருந்தான்.
‘எங்க எறங்கினாலும் ரூவா இருவது ஏறு ஏறு சட்டுனு ஏறு’’ என்றான்.வேறு ஒரு ஆட்டோக்காரனையும் அங்கே காணோம்.
நானும் என் மனைவியும் முடிச்சூர் செல்லும் அந்த  ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டோம்.வண்டி கிளம்பியது.வசந்தபவன் ஓட்டலுக்கு ப்பின்புறமாக இருக்கும் கடைத்தெருவழியாகச் சென்று ராஜாஜிசாலையைக்கடந்து காந்திசாலைடில் ஒரு ஏடிஎம் அருகே ஆட்டோ நின்றது.
‘ஒரு சவத்தை ச்சுமந்த ஊர்தி மெது மெதுவாக எதிரே ஊர்ந்து வந்துகொண்டிருந்ததைக்காணமுடிந்தது.வாண வெடிக்கார்கள் வாணத்தைத்தொடர்ந்து விட்டுக்கொண்டிருந்தார்கள். நல்ல கூட்டம்சவ வண்டியைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.கூட்டத்தில் பாதி பேருக்குமேல் குடித்துவிட்டு வருவதைக்காண முடிந்தது.குடிப்பழக்கமுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தமதாக்கிக்கொண்டு ஒய்யாரமாய் ஊர்வலத்தில் நடக்கிறார்கள்.குறவன் குறத்தி நடனம் போடும் குழு அது தன் பாட்டுக்கு த்தோன்றியதைஎல்லாம் சொல்லி சொல்லி ஆடிக்கொண்டே நடந்துபோனது.
‘ஏன் நாம போவலாம்ல’’
‘ஒரே நிமிசம். இந்த வண்டி ஓனருக்கு உறவு சாவு.அவரும் நடந்தே சொடலைக்கு போவாறு அதான் எனக்கு யோசனை’ ஆட்டோக்காரன் சொன்னான்.
மதுரவாயில் பைபாஸ் சாலைக்குக்கீழாக ஆட்டோ சென்றது. ஒரே துர் நாற்றம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.ஏது ஏதோ அழுகிய வீச்சம் சகிக்கமுடியாமல் இருந்தது.இரு மருங்கிலும் இருந்த கடைகள் தரைதளம் சில இடங்களில் முதல்தளம் முற்றாக நனைந்து  பொருட்கள்கள் சொதசொதப்பில் கூழாகி சாலை எங்கும் சிதறி அறுவறுப்பாகக்காட்சியானது.
‘ரோட்டை பாருங்க பள்ளம் பள்ளம் பள்ளம் தண்ணி தண்ணி தண்ணி’
‘ரொம்ப கேவலம்’ என்றேன்’
என் மனைவியைப்பார்த்தேன். அவள் முகம் வாடிப்போய் இருந்தது.’இந்த கஷ்டம் நமக்கு விடுதலையாகுமா’ என்கிற ஐய்யத்தை ச்செய்தியாக அது எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தது.
கண்ணன் அவென்யு,பாரதி நகர்,கந்தி நகர்,பத்மாவதி கல்யாண மண்டபம் என வரிசையாகக் கடந்துபோனது.சாலையைக்கடந்த பிறவெளி எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வெள்ளக்கதை பேசிக்கோண்டிருந்தார்கள்.
பழைய பெருங்களத்தூர் வந்தது.அம்பேத்கர் சிலை முன்பாக வண்டி நின்றது.
‘எல்லாரும் எறங்கு’
‘இல்ல நாங்க பார்வதி நகரு போவுணும்’
‘’அதான் பார்வதி நகரு. நாலு தப்படி நடந்தா நல்லது உடம்புக்கும்’
ஆட்டோக்காரன் அதிர்ந்து சொன்னான்.
பழைய பெருங்களத்தூர் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
இதுவரைக்கும் அவன் ஆட்டோவில் கொண்டு வந்துவிட்டது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
பார்வதி நகருக்குள் ஜீப்பும் காருமாக சென்றவண்ணம் இருந்தன.
மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் என் எழுதிக்கொண்ட ஜீப்புக்கள் வேன்கள் போலிசுவண்டிகள் பார்வதி நகர் பக்கம் வேகமாகச்சென்றன.
பார்வதி நகர் முதல் மூன்று தெருக்கள் விட்டுப் பிற அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளம் தன் ஆட்சியைச்செலுத்திச்சென்றுவிட்டிருப்பதைக்காண முடிந்தது.அரசாங்கத்தின் பொதுவி நியோகக்கடைவரை வெள்ள நீர் வந்து நின்று’எப்படி இருக்கிங்க நீங்க’ என்று கேட்டுவிட்டுச்சென்றதைக்காணமுடிந்தது.
பார்வதி நகரின் மையமாக உள்ள பிள்ளையார் கோவில் முன்பாக என் நண்பர் வெங்கடாசாலம் நின்றுகொண்டிருந்தார். நானும் அவரும் வடலூர் சேஷசாயி பீங்கான் தொழிற்சாலையில் சூப்பர்வைசர்களாகப்பணியாற்றியவர்கள்.அவர் பார்வதி நகரில் வந்து குடியேறி இருக்கிறார்.அவரின் மனைவி பங்கஜம் என்னோடு தொலைபேசி இலாகாவில் பணியாற்றியவர்.அந்த அம்மாள் இப்போது உயிருடன் இல்லை.
‘வாங்க சாரு இப்பதான் பாக்க வர்ரீங்களா’
‘வணக்கம் வெங்கடாசலம் சாருதானே.’
‘அதே சாருதான். பங்கஜம் வூட்டுக்காரருன்னு நீங்க சொல்வீங்க’
‘என்னையும் இன்னைக்கும் பானு வீட்டூக்காரருன்னுதான் எம்ம்மச்சான் வீட்டுல பேசிக்குவாங்க’
‘இங்க  நம்ப சக்திவிநாயகரு அஞ்சி நாளைக்கு வெள்ள த்தண்ணில கெடந்தாரு. போயிபாருங்க கோவில’
‘இந்த தெருவுல மொத மாடி தப்பிச்சிது. தரைதள குடியிருப்புவ பூரா காலி ஆயிட்டுது.ஜனம் இப்பதான் அது அது வந்து பாக்குது’
‘ நாங்களும் அப்பிடித்தான் வந்து இருக்கம்’
‘என் வீட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் காலி ஆயிட்டுது.மேல் தளத்தில் வாடகைக்கு ஒரு டீச்சர் குடியிருந்தாங்க.அவுங்களுக்கு ஒண்ணும் எடஞ்சல் இல்ல’
‘ நாம் போவுலாம்’ என்றாள் மனைவி.
அவளின் முகம் வாட்டமாகவே இருந்தது.
‘சரி நீங்க போயிபாருங்க என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ வெங்கடாசலம் ஒதுங்கி வழிவிட்டார்.
பார்வதி நகர் பூங்கா குடிதண்ணீர் விநியோகிக்கும்அலுவலகம்,ராஜாஜி தெரு கண்ணதாசன் தெரு.வாஞ்சி நாதன்தெரு முவ தெரு என வரிசையாக வந்தது.வீதிகள் சேரும் சகதியுமாக இருந்தன. அங்கங்கே தெருவில் மின்சாரக்கம்பங்கள் சில சாய்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன,தெரு எல்லாம் குப்பையும் கூளமுமாகக்காட்சி அளித்தன.
மாவட்ட ஆட்சியரின் ஜீப்புக்கள் வேன்கள் திரும்பி ப்பிரதான சாலைக்கு மீண்டுகொண்டு இருந்தன,
மகாலட்சுமி நகர் தாண்டி நேதாஜி நகரை க்கண்டுபிடித்துவிட்டோம்.அதுதானே எங்கள் வீடு இருக்கும் பகுதி. நேதாஜி நகரில் மொத்தம் நான்கு தெருக்கள். நேதாஜி நகருக்கு விரிவு என்கிற வால் பகுதியும் உண்டு. அதுதான் அடை ஆற்றின் கரையில் உள்ள பகுதி.அங்கே நான்கு தெருக்கள் இருக்கலாம்.
நேதாஜி நகருக்கு முன்பாக ஒரு ஓடைமாதிரிக்குச்சென்றுகொண்டிருந்தது.அதனில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அது கால் முட்டிவரைக்கும் வெள்ளத் தண்ணீரைக்கொண்டிருந்தது.
என் மனைவியின் கையை ப்பிடித்துக்கொண்டேன்.மெதுவாக மெதுவாக நடந்து நடந்து எங்கள் இரண்டாவது தெருவுக்கு வந்துவிட்டோம்.
வீட்டின் கேட் திறந்துகிடந்தது.வீட்டின் முன்பாக ஒரே குப்பை.
‘ஓய்வுபெற்ற ஆசிரியர்ஒருவர் பெயர் ராஜசேகர் பூர்வீகம் திருவாரூர் பக்கம் எட்டுக்குடி  நேதாஜி நகரில் எங்கள் தெருவில் முதல் வீட்டில் குடியிருந்தார்.அவருக்கு ச்சொந்தமான வீடுதான் அது. அவர் எங்களைப்பார்க்கவந்தார். அவரின் வீட்டு வாயிலில் வீட்டு சாமான்கள் இறைந்துகிடந்தன.தெருவில் நடக்கவே முடியவில்லை. ஒரே சேரும் சகதியும்.
எல்லோரும் மொட்டை மாடியில் வீட்டு சாமான்களை காயவைத்துக்கொண்டு இருந்தார்கள்.யார் வீட்டிலும் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை.குடிப்பதற்கும் எங்கிருந்தேனும் கொண்டு வந்திருந்தால் குடிக்கலாம்.வே\று வழிதான் ஏது.
இரண்டு டூவீலர்களும் பரிதாபமாகச் சாய்ந்துகிடந்தன.மூலைக்கொன்றாக செறுப்புக்கள் பிய்ந்தவை.பிய்யாதவை எனக்கிடந்தன.
‘கீழ் வீட்டு சாவியை எடு’
என் மனைவி தரைதள ப்பகுதி வீட்டின் சாவியை என்னிடம் நீட்டினாள்.பூட்டைத்திறந்துவிட்டேன்.கதவு திறக்க வரவில்லை.கூடிய மட்டும் பலம் கொண்டு தள்ளிப்பார்த்தேன்.தட்டிப்பார்த்தேன்.கதை ஒன்றும் ஆகவில்லை.கால்களால் பலம் கொண்டமட்டும் உதைத்தேன்.
‘சாரு வர்ராரு ராஜசேகர் சாரு அவுருகிட்ட கொஞ்சம் கேப்போம்’
என் மனவி சொன்னாள்.
‘ நான் தோ வர்ரேன். பாக்குலாம் நனைஞ்ச கதவு புடிச்சிகிட்டு கெடக்கும்.என் வீட்டு கதவும் அப்பிடித்தான் புடிச்சிகிட்டு கெடந்தது.அப்புறம் என் பையன் பலமா தட்டினான். எப்பிடியோ திறந்து வுட்டான்’
‘வுடுங்க அவுருகிட்ட’
நான் சற்று த்தள்ளி நின்றுகொண்டேன்.என் மனைவி சுவர் ஓரம் நிற்கும் மோட்டார் எப்படி என்று பார்த்தாள்.
மோட்டார் மீது மூடியிருக்கும் தகரக்குவளையை க்காணோம்.வெள்ளம் அதனை எங்கு கொண்டு சேர்த்ததோ தெரியவில்லை.
ராஜசேகர் சார் இன்னும் அந்த கதவோடு மல்லுகட்டிக்கொண்டு இருந்தார்.கதவு அசையக்கூட இல்லை.
‘வேதாரண்ய ஈசன் திருக்கோவில் கதவு ஒரு தேவாரம் பாடத்திறந்துகொள்ளுமாம்’ என்றேன்.
சேகர் சார்’ நான் அப்பரும் இல்லை அந்த சுந்தரரும் இல்லை’ சொல்லிக்களங்கமில்லாமல் சிரித்தார்.

. .

No comments:

Post a Comment