Monday, September 19, 2022

கடலூர் ஸ்ரீதருக்கு.

 

 

 

பேரன்புடைய தோழர்களே, தோழியர்களே

உங்கள் அனைவருக்கும்  எமது   நெஞ்சார்ந்த வணக்கத்தினை காணிக்கையாக்குகிறோம்.

நமது  சேவை  அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்தது.  இந்த நாட்டின் வளர்ச்சியில், பாதுகாப்பில் அதன் புத்தாக்கத்தில்  நமது பங்கு  என்றுமே மகத்தானது.

அரசாங்கம் நமது  தொலைபேசி சேவையை மக்கள் சேவையாக பார்க்கத்தவறியதன் காரணமாகச்  சொல்லொணா  இடர்பாடுகளுக்கிடையே  நமது ஊழியர்கள் தங்கள் பணியை  ஆற்றிக்கொண்டு வருகிறார்கள்.  அவர்களை வாழ்த்துகிறோம்  வணங்குகிறோம்.

இவைகட்கு மத்தியில்   அக்டோபர் 12-2022ல்  வருகிறது  தொழிற்சங்க  சரிபார்ப்புத்தேர்தல் என்கின்ற பணி. இப்போது  நமக்கு முன்னால் இது  9 வது  சரிபார்ப்புத்தேர்தல்.

என்றும் நமது  வழிகாட்டியும்  தொழிற்சங்கப் பேராசானுமாகிய  தோழர். ஓ.  பி. குப்தா நமக்கு சொல்லிச்சென்ற  கடமையை  தொடர்ந்து  ஆற்றிக்கொண்டு வருகிறோம்.  நாம் அறிவோம்.   வதியும்  நாடும்  ஆற்றும் சேவையும்  நமது இருகண்கள்.

இச் சேவை  1-10-2020ல் பி. எஸ். என். எல்  நிறுவனம்  என்று ஆனது. பணியாற்றும்  ஊழியர்களின்  பதவி உயர்வு, பணி நிரந்தரம் என்கிற  ஒட்டுமொத்த நலன்களையும்   பணியாற்றி ஓய்வு  பெறுவோர்க்கு மத்திய அரசின் உறுதிசெய்யப்பட்ட  ஓய்வூதியம் மற்றும் பலன்களையும்   சாதித்துக்காட்டி நம்மை ஆற்றுப்படுத்தியது ஒப்பற்ற தலைவர்,ஓ பி குப்தா.

அந்தப்பெருந்தலைவரின்  அடிச்சுவட்டில்  தொடர்கிறோம். இன்னும்  இப்பேரியக்கத்தின்   பெருமையைக் கடுகளவும் குன்றாது காக்கவேண்டிய கடமை நமக்கு முன்னே நிற்கிறது.

சங்கத்தை வளர்ப்பதோடு மட்டுமில்லை நாம். மக்களுக்குக்கிட்டும் சேவையில்   என்றும் கருத்தாயிருப்பதுவே  நமக்கு மிக முக்கியம்.

தேர்தல் களப்பணி தொடங்கிவிட்டது. 13-09-22 அன்று   தேர்தல் சிறப்புக்கருத்தரங்கம் நமது கடலூரில்

அகில இந்திய பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங்  உரையாற்றுகிறார்.

பெருமை சேர்க்கிறார்.

பெருந்திரளாய்ப் பங்கேற்போம்.

தேர்தலை எதிர்கொள்ள   இத்தொழிற்சங்கம்   தோழர்களாகிய உங்களையே  என்றும் நம்பியுள்ளது.    N F TE  -BSNL-   உங்களது.  ஆகத்தான்.

சேவையில் உள்ளோர்         .        ரூ……..

மாநில மாவட்டச்சங்க பொறுப்பில் உள்ளோர் ரூ………

பணி ஓய்வு பெற்றோர் அவர்களால் தாம் இயன்றதுவும்  தேர்தல் நிதியாய் வழங்கிடப் பணிவோடு வேண்டுகிறோம்.

இச்சங்கத்தின் வெற்றி உறுதி. அவ்வெற்றிக்கு ஓய்வென்பது அறியாது உழைப்பது  நமது அனைவரின்  தேர்தல் கடமை.

வெற்றி நமதாகட்டும்.

                                                              வாழ்த்துகளுடன்  தோழமையுடன்

 

   நாள்:                                                 ……………………………………………………………………    

தேர்தல் நாள்…………………

வெற்றிச்சின்னம்        : …………………………………….                                                

 

 

 


No comments:

Post a Comment