கடலூரில் சிரில்
நினைவு அறக்கட்டளை நடத்திய தமிழ் விழா.
கடலூர் தொலைபேசி மாவட்ட என் எஃப் டி ஈ தொழிற்சங்கம் ஆண்டுதோறும் நிகழ்த்தும்பெருவிழாவு இது.
இவ்வாண்டு- 2025 , செப்டம்பர் 3 ஆம் நாள் கடலூர்
பி. எஸ் என். எல் பொதுமேலாளர் அலுவலக
வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. கடந்த சில ஆண்டுகளாக இவ்விழா இயற்கைப்பேரிடர்
வந்துற்ற காரணத்தால் நடைபெறாமல் இருந்தது. அமரர்
சிரில் அவர்களின் நினைவு போற்றும் வகையில் கடந்த இருபது ஆண்டுகளாக
இவ்விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். நமது கடலூர் தொலைபேசி மாவட்டத்தில் பத்து பன்னிரெண்டு வகுப்புகளில் பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் சிறந்து விளங்கிய
பிஎஸ் என் எல் ஊழியர்கள் அலுவலர்களின் செல்வங்களுக்குச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் ஆண்டுதோறும் வழங்கி சிறப்பு செய்து வருகிறோம். அவ்வமயம்
தமிழ் மொழிக்கு உழைத்திட்ட சான்றோர் ஒருவரை அழைத்து அவருக்குத் தக்க பாராட்டு
செய்வதையும் இவ்விழாவில் தொடர்ந்து நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
தமிழ்ப்பாடத்தில் சிறந்து விளங்கிய பி எஸ் என் எல் ஊழியர்களின் செல்வங்களின் பெற்றோரிடமிருந்து ( பணி ஓய்வு
பெற்றோ ர் உட்பட) சங்க வேறுபாடு எதுவுமின்றி
விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசுக்குறிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இவ்வாண்டு
நிகழ்வின் சிறப்பு அமிசமாக கடலூர் அரசுப்பள்ளிகளில் தமிழில் சிறந்து விளங்கிய பொது மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டின் முக்கியத்துவம் என்னவென்றால் இது மறைந்த தோழர் சிரில் அவர்களின் நூற்றாண்டு இந்தப்பகுதியில் தொழிற்சங்கத்தைக் கட்டிவளர்த்ததோடு
தமிழ் இலக்கியத்தின் மீது மிக உயர்ந்த மதிப்புகொண்டவராய் சிரில் விளங்கினார்.தமிழில்
சிறுகதைகள் கவிதைகள் நாடகங்கள் கட்டுரைகள் என
எழுதிக்குவித்தவர் சிரில். வேலைகொடு
பாலம் என்பவை அவரது சிறுகதைத் தொகுப்புகள். கடலூர் மண்ணின் பெருமைமிகு ஜெயகாந்தனால் பாராட்டப்பட்டவர் தோழர் சிரில். இலக்கியப்பணியோடு தமிழக அளவில் தொழிறசங்க
அரங்கில் தலைவர்களாய் விளங்கிய ஆற்றல்மிகு
தோழர்கள் ஜகன் தமிழ்மணி ரெங்கநாதன் ரகுநாதன்
ஜெயராமன் சென்னைத்தொலைபேசியின் தோழியர்
ஏ. டி ருக்மணி, தோழர் சிவா போன்றவர்களை உருவாக்கிய பெரும் வர்க்கப் பள்ளியாக சிரில்
திகழ்ந்தார். அவரின் நூற்றாண்டு இது என்பதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.
வழக்கம்போல் கடலூர் பகுதியின் அனைத்து இலக்கிய அமைப்புக்களும்
இவ்விழாவில் பங்கேற்றன. சுற்றுப்புறத்துத்
தமிழ் ஆர்வலர்கள் நமது ஓய்வுபெற்ற ஊழியர்கள்
என அனைவரும் வருகை தந்தார்கள். பேராசிரியர் பாஸ்கரன், வளவதுரையன் கடல் நாகராஜன் கவிஞர்
சிங்காரம் கவிமனோ …………………………… கவிஞர் பால்கி
உள்ளிட்ட இலக்கிய அன்பர்கள் வந்திருந்தார்கள். தோழர். கே. சீனுவாசன்
சிரில் அறக்கட்டளையின் தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அறக்கட்டளையின்
செயலர் வி. லோகநாதன் வரவேற்புரை நிகழ்த்த முன்னாள்
அறக்கட்டளைப் பொறுப்பாளர் எழுத்தாளர் எஸ்ஸார்சி
துவக்க உரை ஆற்றினார். சிரில் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
செலுத்தித் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழும் பரிச்சுத்தொகையும் பொதுமேலாளர் ……… அவர்களால் வழ ங்கப்பட்டது. முன்னாள் என் எஃப் டி ஈ சங்கத்தின் தேசிய செயலர் கோவி. ஜெயராமன், கடலூர் மண்ணின் என் எஃப் டி ஈ தமிழ் மாநிலச்செயர் குழந்தைநாதன், ஒப்பந்த ஊழியர்கள் மாநிலச்செயலர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சங்கு வளவதுரையன், ஓய்வுபெற்றோர் சங்கத் தோழர்
பி. ஜெயராமன், தமிழ்மணி ஆகியோர் விழாவை வாழ்த்திப்பேசினர்., பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பொதுமேலாளர்
சிறப்பாகப்பேசினார். கடலூர் தொலைபேசி மாவட்டச் சங்கத்தின் தமிழ்ப்பணியைப் பாராட்டினார்.
தமிழின் சிறப்புகள் குறித்துப் பொது மேலாளர் பேசியது அனைவரையும் பெருமை கொள்ள வைத்தது.
நெய்வேலி பாரதிக்குமார் தமிழகம் அறிந்த எழுத்தாளர், இடதுசாரி சிந்தனையாளர்
விழாவில் கெளரவிக்கப்பட்டார். மனிதன் வாசிக்கும்
நேரமே வாழ்கின்ற நேரம் என்கிற தலைப்பில் செறிவு நிறைந்த உரை ஆற்றிப் பார்வையாளர்களை
நெகிழ வைத்தார்.
கடலூர் மாவட்டச்செயலர் தோழர். ………. நன்றி கூற தேசிய கீதத்தோடு விழா நிறைவுக்கு வந்தது.. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர்
அனைவருக்கும் இரவு உணவு வழங்கியது விழாவுக்கு சிறப்பு சேர்த்தது.
சிரில் நினைவு போற்றுதல் நம்மை மேலும் ஒற்றுமைப்படுத்தி
வலு சேர்க்கட்டும். நல்லவை பெரிதாகட்டும்.
பரிசு பெற்ற மானவர்களின் பெயர் விபரங்கள்.
No comments:
Post a Comment