அமெரிக்க அனுபவம்
1. அமெரிக்க வாழ்க்கை
2. கலிபோர்னியாவில் கடைக்குப்போனேன்
3. அமெரிக்க அழகு
4. மால் அனுபவம்
5. அமெரிக்க வீடுகள்
6. அமெரிக்க தேர்தல் 2024
7. அமேசானில் தமிழ்
8. சக்கர வாழ்க்கை
9. கிரகண விசேஷம்
10. அங்கங்கும்
11. திருப்புதல் அனுபவம்
12. அன்பே சிவம்
13. ஜனநாயகம்
14. அனுபவம் 1
15. அனுபவம் 2
16. அனுபவம் 3
17. பெட்டைமண்
18. விடுதலை தேவி சிலை
19. அமெரிக்க உத்யோகம்
20. கோணல் நடப்பு
21. லாசேஞ்சலிசில் தீ
22. டிரம்பின் பதவி
23. கிராண்ட் கேன்யென்
24. பழைய புத்தகக்கடை
25. தெய்வம் ஒன்று
26. காலிகோ நகரம்
27. ராடசச தெர்மாமீட்டர்
28. சாண்ட மொனிகா
1.
அமெரிக்க
வாழ்க்கை
சிகரெட் பிடிப்பதும்
சாராயம் அடிப்பதும்
சகஜமாகிய பெண்கள் நடப்பு
பளிச்சென்ற சாலையில்
வலதுபுறமாய்
வாகனங்கள் வரிசை
வாகனங்களில் இடது
புறம்
ஓட்டுனர் அமர்ந்து மட்டுமே பயணம்
நாம்
மறந்துபோன பவுண்டும்
அவுன்சும் காலனும்
அடியும் இஞ்ச்சும்
அங்கங்கும் அளவைகளாய்
நாய்கள் முன்னே
போக
பின்
தொடரும் மனிதர்கள்
நாயுக்கும் பூனைக்கும்
டே
கேர் உண்டு
எமர்ஜென்சி ஐசியு
எல்லாமும்
பள்ளிப் பிள்ளைகள்
தரம்
பார்த்துப்பார்த்து
ஒரே
வகுப்பில்.
பள்ளிப் பிரிவினைகளோ ஏராளமாய்
கேனில்
பாலை
வாங்கி
மாதமொன்றுக்கு
வைத்துக் கொள்கிறார்கள்
அவரவர்
சமையல்
கட்டில்
மாடுகள் கறந்த
பாலில்லை நிச்சயமாய்
கனக்காசு வைத்துக்கொண்டு
கடவுளைப் நேரம்
பேசும்
மக்கள்
ஊர்
முச்சூடும்.
2.கலிபோர்னியாவில்ஒரு கடைக்குப் போனேன்
கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்கக் கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ
உணவே
பிரதானம் அதிலும் மாட்டுக்கறி
டப்பாக்களில் அடைத்துக் கொண்டு.
கறி
காய்களை
நறுக்கி நறுக்கி விற்கிறார்கள்
இடுக்கில் இந்தியப் பொருள்
விற்கும் கடைகள்
மளிகைக்கடை ஆனாலும்
அங்கே சாராயம் விற்பனை
வண்ண
வண்ண
பாட்டில்கள் பெண்களின்
படங்களோடு.
மூலைக்கு மூலை
அலெக்சா வசதி
என்ன
பொருள்
தேவை
கிடைக்குமா அது
? கேட்டறியலாம்
நான்கு
இணாக்கு கறிவேப்பிலைஒண்ணரை டாலர்
விலைவாசியைக் கணக்குப்
போடலாம் ரூபாயாய்.
கடைக்கு வரும்
குழந்தைகட்கு
ஆரஞ்சு
ஆப்பிள் வாழைப்பழம்
இலவசமாய்த் தருகிறார்கள் அவ்வளவுதான்.
3.அமெரிக்க அழகு
லாஸ் ஏஞ்சலிசில்
இன்று
கெட்டிஸ் பூங்காவும்
கெட்டிஸ் மியூசியமும்
பார்க்க வாய்த்தது
மலைச்சரிவில்
டிராமில்
பயணித்துப் பார்க்க
இயற்கை
அழகு
கொட்டிக் கிடக்கிறது
அபரிமிதமாய்.
மலையும் வனமும்
கொள்ளை
கொள்கிறது
கண்களை.
இத்தாலிய ஓவியங்களின்
அழகோ
அழகு
எகிப்திய ஐரோப்பிய
சிலைகளின் மறு
உருக்கள்
தத்ரூபமாய் நின்று
நின்று
பேசுகின்றன பார்வையாளர்களோடு.
காலைமுதல் மாலைவரை
சுற்றி
சுற்றிப் பார்த்தோம் குடும்பத்தோடு
எண்ணிக்கையில் சிலைகள் ஆயிரம்
இருக்கலாம் ஆனாலும்
தமிழ்
நிலத்துக் கோவில்
சிலைகளில் ஒன்றை
நினைக்க
அத்தனையும்
நீர்த்துத் தான்
போயின.
4.மால் அனுபவம்
லாஸ் ஏஞ்சல்ஸில்
வெஸ்டேர்ன் டோபங்கா
ஷாப்பிங் மாலுக்குப்போனேன்
நீளமும் அகலமும்
மைல்
ஒன்றுக்கு இருக்கலாம்
பெருங்கட்டிடம்
எத்தனையோ அடுக்குகள்
எல்லாமே கடைகள்
கடைகள்
மாதர்
அணிகலன்கள்
மணிகள்
மாலைகள்
செருப்பொடு
ஷூ
க்கடைகள்
பை
பையாய்
சாக்லைட் விற்கும் கடைகள்
கைப்பைகள் விற்கும் கடையோடு கண்ணுக்குக்
கண்ணாடி விற்கும் கடைகள்
ஆயத்தத்துணிமணிகள்
இசையொடு கலை
உருக்கள்
உணவுகள் அனைத்துமே
இத்தாலி நாட்டுப் பெருமிதம்
சொல்லிக்கொண்டு.
உண்பது
நாழி
உடுப்பை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்
ஒக்கும்மே
புறநானூற்று வரியை
கொட்டை
எழுத்துக்களில்
மால்
வாயிலில்
எழுதி
வைத்தால் தேவலை
சாத்தியமா என்ன?
5.அமெரிக்க வீடுகள்
எல்லார் வீடுகளிலும்
எந்தக்
குழாயிலும்
தண்ணீரும் வெந்நீரும்
இப்படி
அப்படித்
திருகினால் மாறி
மாறி
வரும்
கண்ணாடிச்சுவர்களோ
அனாயாசமாய்
தரையோ
மரப்பலகை
மின்சாரம் பொய்க்காது
இருபத்து நான்கு
மணிநேரமும்.
அனைத்து வீடுகளிலும்
ஹீட்டரும் உண்டு
ஏர்கண்டிஷனும்தான்.
ஆண்டுக்கு மூன்றுமுறை
கடிகாரத்தைத் திருத்தி வைக்கிறார்கள்
பள்ளிப் பிள்ளைகளுக்குப்
புத்தகச் சுமையில்லை
எல்லாமே பள்ளியில்
வீட்டுப்பாடம் இல்லை
விடுப்பு மிகையாய்
மொழி
ஒன்று
ஆங்கிலம் மட்டுமே
பஞ்சாங்கம் இல்லை
ராசிபலனும் இல்லை
வார
சூலை
இல்லை
குடைச்சல் ஏதுமிலா நிம்மதி.
6.அமெரிக்கத் தேர்தல் 2024
இந்தியாவில் மட்டுமா
அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்
ஜோபைடனனா
டிரம்ப்பா
ஜனநாயகக்கட்சி
குடியரசுக் கட்சி
இரண்டுக்கும் இடையே
போட்டி
ஜோபைடன் தலைவராய்ப்
பதவியேற்கும் சமயம்
பதவி
விலகும் டிரம்பால்
வன்முறை
துப்பாக்கிச்சூடு உயிர்ப்பலி எல்லாமும்.
மக்கள்
தீர்ப்பை
மதிக்காத டிரம்ப் மீண்டும்
ஜனாதிபதிக்குப் போட்டியாம்
உக்ரைன் ருசியப் போரிலும்
பாலஸ்தீன இஸ்ரேல் போரிலும்
பொறுப்பற்று நடந்துகொண்டார் ஜோபைடன்
மக்கள்
வருத்தத்தில் மொத்தமாய்.
ஜோபைடன் செய்தது தவறு
டிரம்ப் செய்ததும் தவறு
எது
தேவலாம் என்பதே
இன்றைக்கிங்கு தேர்தல் பகடை
மக்களுக்கு இலவசங்கள்
வழங்குவதில் போட்டியில்லை.
7.அமேசானில் தமிழ்
அமெரிக்காவில்
அமேசான் ஃப்ரெஷ்
கடைக்குப் போனேன்
மனைவி
புடவையில்
நான்
வேட்டிச் சட்டையோடு
தானாகத் திறந்துகொண்ட
வாயிலைத் தாண்டினோம்
‘வாங்க
வணக்கம் ‘
வெள்ளைக்காரி எங்களை
வரவேற்றாள்
‘ வணக்கம் இது
என்ன
அதிசயம் தமிழ்
‘என்றேன்
வேண்டிய சாமான்கள்
சிலது
கிடைத்தது
சிலது
இல்லை
இந்தியன் ஸ்டோருக்குப்
போங்கள் என்றாள்
சென்னைப் போரூரில் ஏழு
ஆண்டுகள்
குடியிருந்தேன்
உஸ்மான் சாலையில்
திரிந்தவள் நான்
என்றாள்
அசீஜா
என்று
பெயர்
சட்டைப் பாட்சில் படித்துப் பார்த்தேன்
வாசல்
வரை
வந்து வழியனுப்பினாள்
சென்னை
வாசம்
கொள்ளை
கொண்ட
தாய்க்
கூறிப்
போனாள்
செந்தமிழில்.
8.சக்கரவாழ்க்கை
என் அப்பாவின் அப்பா
பெலாக்குறிச்சி
ராயம்பரம் வனங்களிடை
வாழ்ந்து முடித்தார்
அம்மாவை மணம்
முடித்து
தருமங்குடிச் சமவெளிக்கு
வந்தார் அப்பா
நானோ
தருமங்குடியைத்
தொலைத்தேன்
முதுகுன்றம்
கடலூர்
சென்னை
எனச்
சுற்றி
வந்தேன்
என்
மகனோ
கலிபோர்னியாவில்
உத்யோகமென அமெரிக்கா போனான்
என்
பேரனோ
அமெரிக்கப் பிரஜையானான்
அமெரிக்க
பாஸ்போர்ட் டோடு.
பெற்ற
தாயும்
பிறந்த
பொன்னாடும்
நற்றவ
வானினும் நனி
சிறந்தனவே என்றேன்
வசு
தெய்வகுடும்பகம்
என்கிறானே பெற்ற
பிள்ளை.
9.கிரகண விசேஷம்
அமெரிக்காவில்
சூரிய
கிரகணம்
இங்குமே அது
அமாவாசையன்று தான்
தர்பைப்புல் இல்லா
தர்ப்பணம் நடந்தது
எத்தனை
மணிக்குப்பிடித்து
எத்தனைக்கு விடுகிறது
பெங்களூர் சின்ன
மருமகள் நாசா
அறிக்கையை
அனுப்பி வைத்தார்
வாட்ஸ்ஆப்பில்.
கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி
போட்டவர்கள்
அமெரிக்க சாலையில்
உலா
வந்தார்கள்
சன்னலுக்குத் திரையிட்டு
அமெரிக்க வீட்டில்
கிரகண
சவுகரியம்
செய்து
கொண்டோம்
சேரன்
மாதேவி
சம்பந்தி
தன்
மகள்
நட்சத்திரத்திற்கு
ஆகாது
நவக்கிரகப்ரீதி செய்
சேதி
சொல்ல
பையன்
குடும்பம்
மல்லிபு சிவன்கோவில்
நவக்கிரகம் சுற்றிவர
இம்பாலா காரில்
புறப்பட்டது.
10.அங்கங்கும்
இந்தியப் பொருள்கள்
கிடைக்குமென
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியாவில்
பயோனியர் என்னும்
கிராசரிக்கடை ஒன்றிர்க்குப்
போனேன்
நம்மூர் உருண்டை
பன்
பத்தும் ஆறரை
டாலர்
போட்டிருந்தார்கள்
இந்திய
மதிப்பில் பத்து
பன்னும் ரூபாய்
ஐநூறு.
வாங்க
மனம்
யோசித்தது
கடையின் ரெஸ்ட்
ரூம்
அருகே
டூ
டாலர்
டூ
டாலர்
என
பிச்சை
கேட்கும் வெள்ளைக்காரனின் குரல்
அதுவும் சரிதான்
அவர்
அமெரிக்க
பிச்சைக்காரர்.
11. திருப்புதல் அனுபவம்
பச்சைக் கொத்துமல்லி
ரசம்
வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப் போனேன்
சிறு
கத்தை
டாலர்
ஒன்றுக்கு வாங்கி
வந்தேன்
பார்த்த மருமகள்
இது
பார்ஸ்லே என்றாள்
வாயில்
போட்டுப் பார்த்தேன்
சுவையில் ஏதோ
ஓர்
நெடி
திரும்பக் கொண்டு
கொடு
கடையில் என்றாள் மனைவி
உரிய
பில்லோடு
கடைக்குப் போனேன்
அமேசானில் அதே
உபசரிப்பு
அதே
மரியாதை
கொத்துமல்லிக் காசோடு
அதற்கு
எத்தனை
வரி
போட்டிருந்ததோ இரண்டையும் கூட்டி
திருப்பிக்கொடுத்தாள்
புன்னகைத்தாள் கடைக்காரி
நன்றி
பல
சொன்னாள்
திரும்பக்கொடுத்த டாலருக்கும் பில்
தந்தாள்
நம்மூரில் தங்கமே
வாங்கினாலும் இதுவெல்லாம்
இப்படிச் சாத்தியமேயில்லை.
12.அன்பே சிவம்
லாஸ் ஏஞ்சலிஸில்
கிரிபித்
விண்
ஆய்வகத்தில்
எழுதியிருந்தது
டெலஸ்கோப் வழி
விண்
வெளியைப் பார்த்துவிட்ட
எந்த
மனிதனும் அடுத்தவனோடு
சண்டைக்கு நிற்பதை
ஆதரிக்கவே மாட்டான்
ஆண்டொன்றுக்கு முந்நநூறு
டிரில்லியன் டாலர்
உலக
ராணுவச் செலவென்பது
ஆணவத்தின் விசுவரூபம்.
டிரில்லியன் என்றால்
கேட்கக் கூச்சமாயிருக்கும்
சொல்லிவிடுகிறேன்
மில்லியன் மில்லியன்
ஒன்று
போட்டு
பன்னிரெண்டு
பூச்சியங்கள்
புத்தனைக் கும்பிடுவோம்
ஏசுவை
காந்தியைத்
தெய்வ
மென்பதில்
எமக்கு
எத்தனையோ சவுகரியம்
விட்டுவிடுவோம் அத்தோடு.
13.ஜனநாயகம்
அமெரிக்க பூர்வீகக் குடிகள்
அரைக்
கோடிபேர்
அமெரிக்க மொத்த
ஜனத்தொகையில்
ரெண்டு
சதவிதம் இது
98 சதவிதம் வந்தேறிகள்
சமூகம்தான் இது
அமெரிக்காவில்
326 நிலத்திட்டுகளில்
வாழட்டும் அவர்கள்
ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்
ரிசர்வேஷன் நிலம்.
சட்டம்
ஒழுங்கு
நிதி
ஆளுகையென
பூர்வீக குடிகளின்
அத்தனைப் பிரச்சனைக்கும்
மொத்தமாய் அரசாங்கமே
பொறுப்பு
மக்களால் மக்களுக்காக
மக்களுடைய
என்ன
விளக்கம்
தருவார்களோ.
14 .அனுபவம்
1
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியா நகரில்
உடுப்பி ஹோட்டலும்
நல்லி
சில்க்ஸ் ம்
சென்று
பார்க்கலாம்
காசு
கனமாக
வேண்டும்
உடுப்பி ஹோட்டலில்
சைவம்
மட்டுமே மாற்றமில்லை
வண்ணப்
பாட்டிலில்
சாராயம்
வயது
வந்தோர்க்கு மட்டுமே
தின்பதில் மீதமா
டப்பா
தருவார்கள்
சின்னதும் பெரிசுமாய்
எடுத்துப் போகலாம் வீட்டிற்கு.
அஞ்சப்பர் உண்டு
அசைவம்
உண்டு
அச்சம்
வேண்டாம்
கைரேகை
சோசியர்
யுவராஜ் ரூம்
போட்டு
விஜயம்
கூட்டம் அதிகம்தான்
சீனா
அமெரிக்கா எதிரியாம்
தோற்ற
மாயை
பிரதானமாய் அவர்களே
அனைத்திலும்
இரண்டாவதாய் இந்தியர்கள்
தமிழர்கள் காவடி
எடுப்பதும்
தேர்
இழுப்பதும்
கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் எல்லா
முண்டு
எழுத்தாணி கொண்டெழுதிய திருக்குறளைத் தூக்கிப்பிடித்து
தமிழ்
அமைப்புகள்
தலை
நிமிர்ந்து
உலாவருகின்றன.
15.அனுபவம்
2
இந்தியப் பொருட்கள்
அமெரிக்க கடைகள்
புளி
வாங்கப்போனால்
கொட்டைகள் சகிதம்
விற்பனை
உப்புக் கடலைக்கு ஆசைப்பட்டால் தொலும்பு
முக்காலுக்கு இருக்கும்
பலாப்பழம் விற்கிறார்கள்
ஆனை
விலையில்
வாசனையே இல்லை
கர்டு
கிடையாது கடையில் யோகர்ட்தான்
யோகர்ட் பிளெயின்
சொல்லி
வாங்கவேண்டும்
தவறவிட்டால் ஏதேனும்
ஒரு
நெடியொடு
தயிர்
போன்றது கிடைக்கும்
பாலில்
பலரகமுண்டு
குழம்பித்தான் போகணும்
புதிதாய்ப்போனவர்கள்
ஆனால் எங்கேயும் மனிதர்கள்.
16 அனுபவம் 3
பூர்வீகமாய்
இருந்த
இந்தியரை
ஒழித்தாயிற்று
கொசுறு மட்டுமே பாக்கி
எல்லோரும் வந்தேறிகள்
அமெரிக்காவில்
ஐநூறு
ஆண்டுகள்
முன்னம் வந்தவர்கள்
ஆட்சி
செய்கிறார்கள்
உலகத்தையும் சேர்த்து
உழைத்துக்கொடுக்க
ஆசிய
இந்தியர்கள்
லட்சம்
லட்சமாய் வரிசையில் நின்றுகொண்டு.
இந்தியத்திருநாட்டைக் கொள்ளை
அடித்தவர்கள்
ஏராளமுண்டு வரலாற்றில்
இந்தியர்கள் வயிற்றுப்பசிக்கு வந்திறங்கி
இருபத்து நாலு
மணிநேரமும்
உழைத்துத்தர உறுதியேற்கிறார்கள் நாளும்.
17 பெட்டை மண்
லாஸ்
ஏஞ்சலிசில் பையன்
வீட்டைச்சுற்றி
பெயர்
தெரியாத மரங்கள்
வானம்
தொட்டு
பச்சைப்பசேல்
என்ற புல்வெளி
வரிசை
வரிசையாய்
வாசமில்லா
அழகுமலர்கள்
வெகுளியாய்ச்
சிரித்துக்கொண்டு
வீட்டுக்கு
வீடு
சட்டை
போட்ட
குள்ள
ஜாதி சடை நாய்
ஆங்காங்கே
நீச்சல் குளங்கள்
ஜிம்
கூடங்கள்
டென்னிஸ்
கோர்ட்டுகள்
வாலிபால்
மைதானங்கள்
தென்னை
வாழை மல்லி முல்லை
முருங்கை கறிவேப்பிலை
துளசி
தக்காளி வெண்டை கொய்யா
கத்திரி
எதுவுமே முளைக்காத மண்
நம்மூர் பெட்டை மண்ணை
நினைத்துக்கொண்டேன்
மா
பலா வாழை என முக்கனி கொடுக்குமே
கொடுத்து
வைத்தவர்கள் நாம்.
18. விடுதலை தேவி சிலை
துப்பாக்கியால்
சுட்டனர்
ஜோபைடனின்
காதருகே
அமெரிக்க
அதிபர் கோலாகலத் தேர்தல் பணி
அமெரிக்க
மக்கள் தொகையோ
முப்பது
கோடி
இங்கிருக்கும்
துப்பாக்கிகள் எண்ணினால்
நான்கு
மடங்குக்கு இருக்கும்
கத்தரிக்காய்
கம்மர்கட் மாதிரி
துப்பாக்கி
வாங்கலாம்
துப்பாக்கிக்கலாசாரம்
ஒழிக்க முடியாதாம்
துப்பாக்கி
கொண்டுதான் விடுதலை வாங்கினார்களாம்
காந்தியின்
ராட்டை நினைவுக்கு வரலாம் நமக்கு.
மன்ஹாட்டனில்
விடுதலை தேவிக்குச்
சிலை
வானாளவ வைத்திருக்கிறார்கள்
ஜபர்தஸ்துக்கும்
ஜம்பத்துக்கும்
குறைவேயில்லை.
19.அமெரிக்க
உத்யோகம்
படிப்பு
முடித்தோமா
அய்
டியில் வேலை வாங்கி
அமெரிக்கா
போகவேண்டும்
அமெரிக்கா
வந்த பின்னே
க்ரீன்
கார்டு வாங்க வேண்டும்
ஆண்
என்ன பெண் என்ன
இந்தியாவுக்குத்
திரும்பிப்போகாமல்
பிழைப்பைக்
காத்துக்கொள்
அப்படியே
போய் விட்டால்
பார்க்கின்ற
உத்யோகம் நீடிக்குமா
விடை
பெற்றுக்கொள்ளும்
சந்திக்கு
வந்து விடுவாய் நீ
நித்ய
கண்டம் பூர்ண ஆயுசு
அய்.
டி. உத்யோகம்
ஆயிரம்
தடவை ஜாக்கிரதை ஜாக்கிரதை.
20.
கோணல் நடப்பு
சென்ற முறை அமெரிக்க தேர்தலில்
வென்றது ஜோ பைடன்
அவர்
பதவி யேற்புக்குமுன்
எத்தனைக்
கலகம்
எத்தனை
உயிர்ப்பலி
அமெரிக்க
காங்கிரசில்
அவர்கள்
நிழ்த்திய அத்தனை அக்கிரமத்திற்கு
சிறையில்
இருந்தார்கள்
பதவிக்கு
வந்த மறுநாளே
அத்தனை
பேரையும்
மன்னித்து
விடுதலை செய்கிறார்
டொனால்ட்
டிரம்ப்
என்ன
அமெரிக்க மக்களோ
யாரைத்தேர்ந்தெடுத்து
அரியணைக்கு
அனுப்பியிருக்கிறார்கள்
மக்களாட்சியின்
மகத்துவத்தில்.
21.
லாஸேஞ்சலிசில் தீ
அங்கங்கே எரிகிறது தீ
காட்டுத்தீ
கலிஃபோர்னியாவில் பூகம்பம் வரும்
அது
மனித உயிர்களை விழுங்குமென்று
மரத்தாலான
வீடுகளை
பெரும்பாலும்
அமைத்திருக்கிறார்கள்
காட்டுத்தீ
பற்றி எரிகிறது
காற்றும்
அடிக்கிறது செமையாய்
ஆயிரம்
தீயணைப்பு வண்டிகளை
வானூர்தியை தீயணைக்க அனுப்பியிருக்கிறார்கள்
லட்சம்
லட்சமாய்
மக்கள்
தங்க வைக்கும் கூடாரம் நோக்கிப்
பயணிக்கிறார்கள்
கனடாவை
இணைக்கலாம் மெக்சிகோவை பணிய வைக்கலாம்
பனாமாவைக்
கைப்பற்றலாம்
ஓயாமல்
கொக்கரிக்கிறார்
டொனால்ட்
டிரம்ப்.
22.
டிரம்பின் பதவி.
பாலஸ்தீனத்துக்கும்
இஸ்ரேலுக்கும்
போர்
ஒயாத போர்
காசாவில்
ஹமாஸ்
பாலஸ்தீனத்துக்கு
மற்றுமொரு தலைவலி
இசுரேலியர்கள்
நூற்றுவரைக்
கடத்தி
காசாவில் சிறையடைப்பு
இசுரேலுக்கு
அடங்காத கோபம்
ஆயிரம்
ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்
மருத்துவமனைக்
கட்டிடங்கள்
காசாவில்
நாசமாயின
கொன்றுபோட்ட
குழந்தைகள்
எத்தனை
எத்தனை
டொனால்ட் டிரம்ப் கூவுகிறார்
அரியணையில்
யான் ஏற
இசுரேல்
சண்டை
தானாக
நிற்கும் பாரென்று
அக்கிரமங்கள்
அனைத்திற்கும் சாவி
அமெரிக்காவின்
கரங்களில் எப்போதும்.
23. கிராண்ட் கேன்யென்
அமெரிக்காவின்
அரிசோனா மாநிலம்
கிராண்ட்
கேன்யென்
என்னும்
உலக அதிசயம்
பல
லட்சம் ஆண்டுகள் முன்னர்
புவியின்
பாறைகள் எப்படி எல்லாம்
விளங்கின
என்பதற்குச்
சாட்சியாகி
நிற்கின்றன
வண்ண
வண்ணப் பாறைகளின் அணிவகுப்பு
பாறைகளின்
இடையே
மைல்
கணக்காய்ப் பள்ளத்தாக்கு
அதன்
அதல பாதாளத்தில்
வெள்ளை
வெளேர் என்றொடும்
கொலரேடோ
ஆறு
பாலைவனத்தின் நடுவே
புரியாத
புதிராய்ச்
சுழித்துக்கொண்டு
ஓடும் பாதாள நந்நீர் பிரவாகம்
பல
லட்சம் ஆண்டுகள்
முன்னே
நிகழ்ந்துபோன
பூகோள
வரலாறு
சொக்கி
நிற்கலாம் சுற்றுலாப்பயணிகள்
ஈகல் பாயிண்ட்
ஸ்கை
வாக் கண்ணாடி மேடையில்
உலா
வரும்போது.
உலக
அதிசயங்களில் ஒன்றினைக்
காணலாம் கட்டாயமாய்.
24. பழைய புத்தக வியாபாரம்
லாஸேஞ்சலிசில்
பிரதான
கடைத்தெருவில்
பழைய
புத்தகக்கடைகள்
‘தெ லாஸ்ட் புக் ஸ்டோர்’ ( The last book store)
என
விலாசமிட்டு
புத்தகங்களை
மொழி
வாரியாய்ப்
பிரித்துப்
பிரித்து
அடுக்கி
வைத்திருக்கிறார்கள்
விலை
நிலவரப்படி அவைகளை
செங்குத்தாய்
நிற்க
வைத்திருக்கிறார்கள்
எல்லா
புத்தகங்களும்
உங்களுக்குக்
கிடைக்கும்
கவலையே
வேண்டாம்
ஒத்தாசைக்கு
ஆட்கள்
வளைய
வளைய வருகிறார்கள்
கார்
இல்லாமல்
அன்றாட
வாழ்க்கையே
அமெரிக்காவில்
சாத்தியப்படாது.
வாங்கும் புத்தகங்கள்
விலைபோல்
பன்மடங்கு
புத்தகக்கடை
பார்க்கிங்கில்
உங்கள்
கார் நிறுத்தக்கட்டணமாய்
வசூலிக்கப்படும்.
எமிலி
டிக்கின்சன் ஆர். எல். ஸ்டீவன்சன் எமர்சன்
புத்தகங்கள்
வாங்கியது மறந்துபோய்
கார்
பார்க்கிங் கட்டணமே மனதில்
உறுத்திக்கொண்டு
நிற்கும்.
25. தெய்வம் ஒன்று
தெய்வம்
ஒன்றெனக் கண்டவர்கள்
நம்மவர்கள்
வேறு
வேறு பெயர்கள் இருக்கலாம்
சக்தி
விநாயகர் வீர ஆஞ்சனேயர்
மஹாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர்
வெங்கடாசலபதி
பார்வதி பரமேஸ்வரன் நவக்கிரகங்கள்
எந்தக்
கோயில்தான் இல்லை
எந்தப்
பிரசாதம்தான் கிடைக்கவில்லை
கலிஃபோர்னியாவில்
கோவிலைச்
சுற்றி வாருங்கள்
இது
நம்மூரில்லை
யாரேனும்
சொன்னால்தான்
அமெரிக்கா
வந்திருப்பதே
நினைவுக்கு
வரும் நமக்கு.
26.
காலிகோ நகரம்.
காலிகோ
பைண்டிங்
இங்கே
நாம் கேள்விப்பட்டிருப்போம்
காலிகோ
பேய் நகரம்
கலிஃபோர்னியாவில்
உள்ளது
கோடை
வெயில் கொன்றுவிடும்
வெப்பக்காற்று
உலர்த்திவிடும் மனிதர்களை
வெள்ளிச்
சுரங்கங்கள்
இருந்ததாம்
இங்கு
சுரங்கப்பணியாளர்கள் மட்டுமே
ஆக்கிரமித்த
ஊரிது
இப்போது
யாருமில்லை
பொருட்காட்சியாய்
மாறிக்கிடக்கிறது ஊர்
புராதனப்
பொருட்கள் பலவுடன்
சுரங்கத்தொழிலாளர்கள்
இங்கு பட்ட பாட்டினை
கல்வெட்டில்
எழுதி வைத்திருக்கிறார்கள்
மதியுங்கள்
இவைகளை
மனிதாபிகள்
நமக்குத்தரும் செய்தி.
27. ராட்சச தெர்மா மீட்டர்
லாஏஞ்சலிசிலிருந்து
லாஸ்வெகாஸ் செல்லும் வழியில்
பேகர்
என்னும் ஊரில்
தனியாருக்குச்சொந்தமான
உலகின்
மிகப்பெரிய
தெர்மா
மீட்டரைத் தரிசிக்கலாம்
முப்பத்தைந்து
டன் எடை
நூற்று
முப்பத்து நான்கு அடி உயரம்
ஜுலை
10, 1913ல் பதிவான
அதிகபட்ச
வெப்ப நிலை 57 டிகிரி C
உலகின்
உச்சபட்ச வெப்பநிலை
அனுபவிக்கணுமா போய் வாருங்கள்
டெத்
வேலி என்னும் பாலைவனம் அருகிலுள்ளது.
28. சாண்ட
மொனிகா
லாஸேஞ்சலிசில்
உள்ள கடற்கரை
நகரம்
சாண்டாமோனிகா
குப்பை
ஏதுமில்லா
சுத்தக்
கடற்கரை
ஆடவர்
பெண்டிர் அனேகமாய் அம்மணம்
ஏசு
புகழ் பாடும் சிறு சிறு கூட்டங்கள்
இடையே
ஸ்ரீகிருஷ்ணருக்கும் பாட்டும் நடனமும்
ஆடித்திரியும்
இளசுகள்
குழந்தைகள் மகிழ ஆயிரம் ஜையிண்ட் வீல் அமைப்பு
சிற்றுண்டிக்கடைகள்
மூலைக்கு மூலை
இலவசமாய்த்
தருவோரும் அனேகருண்டு
பசிஃபிக் பெருங்கடலில் நடக்கும் மேடை
வெகுதூரம்
நீண்டு
கீழிறங்கிக் கடற்கரை மணலில் நடக்கலாம்
சூடு
தெரியாது
மணல்பாய்
வசதியாய் விரித்திருக்கிறார்கள்
சோழியும்
கிளிஞ்சலும் முட்டு முட்டாய் விற்பனை
சோழி
மாலை ஆயிரம் வகை
காலும்
கையும் நனைத்து மகிழலாம்
பசிஃபிக்
கடல் நீரை
சுவைப்பது
கூடாது
கடலோசை மட்டும்
யாருக்கும் கேட்கவே கேட்காது.
-----------------------------------
No comments:
Post a Comment