தோழர் எஸ்.ஆர்.சி என்று அனைவராலும் அன்போது அழைக்கப்படும் தோழர்.ராமச்சந்திரன் இன்று பணி ஓய்வு
இங்கு அவர் மாற்றலில் வந்து NEPP செக்ஷனில் பொறுப்பேற்று நான்காம்பிரிவு தோழர்களுக்காக துரித கதியில் வேலை செய்தவர். தொழிற்சங்கத்தில் பல பொறுப்புகளை ஏற்று செயல்பட்டபோதும், தொழிற்சங்க பொறுப்புகள் இல்லாதபோதும் கம்யூனிச கட்சி போராட்டங்களில் பங்கேற்றவர். குறிப்பாக சென்னை தொலைபேசியில் நடைபெற்ற் போராட்டத்தில் பங்கேற்று FR 17A தண்டனைக்கு உள்ளானவர். சிறந்த எழுத்தாளர். தமிழக அரசின் விருது பெற்றவர். தாமரை பத்திரிக்கையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதியவர். .அவரி எழுதிய கதைகள் “திண்ணை” வலைதளத்தில் வந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் பாராட்டை பெற்றது.
புதினம்,
சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழியாக்கம் என பல தளங்களில் படைப்புகளை தந்து
வருகின்றவர். ஆங்கில மொழியிலும் கட்டுரை கவிதை படைப்புகள் வந்துள்ளன.
இவர் எழுதிய நெருப்புக்கு ஏது உறக்கம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
அவர் தனது
ஓய்வு கால்த்தை தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் கழிக்க
காஞ்சி மாவட்டதின் சார்பாக வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment