தேசத்தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன்.
3.இந்திரனுக்கும் லட்சுமணனுக்கும் ஒரே திறமையும் ஆற்றலும் இருக்க, இந்திரன் ஏன் தோற்றுப்போனான்? இந்திரனுக்கு அறம் துணைக்கு வரவில்லையே ஆகத்தான்.
4.பூசாரிகளே மொத்த பேராசைக்கும் உபயதாரர்கள்.
5.விசித்திர வார்த்தைகளுக்கு அலைவதும் அவற்றின் உச்சரிப்புகளைச் சொல்லியே காலம் கடத்துவதுமா கற்றவர் வாழ்க்கை.
6.1914 ஆம் ஆண்டு இந்தியாவில் காலராவும் பிளேக்கும் விழுங்கிய மனித உயிர்கள் 46,49,663
7.'நான் மீண்டும் ஜென்மம் எடுப்ப்து என்றானால் தீண்டத்தகாதவனவே நான் பிறக்கவேண்டும்'.
8.உலகில் ஏற்படும் தண்ணீர்ப்பஞ்சம்
வெள்ளக்கொடுமைகள்
பூகம்பங்கள் இவை இயற்கை தருபவை.
மனிதனின் ஒழுக்கத்திற்கும் அவைகட்கும் ஒரு தொடர்புண்டு என்பது என் அபிப்ராயம்.
9.தீண்டாமை பாவத்துக்காக பூகம்பம் தெய்வத்தின் கோபத்தின் அறிகுறியாக இருக்கலாம்.( 30/09/1893 மகாராஷ்ட்ரா சாவு 40,000)
10. தருமர் தன்னுடைய நாயையும் அனுமதித்தாலன்றி சுவர்க்கம் தனக்கு வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment