மாவட்ட செயலாளர் செல்பேசி எண்: 9443212300
மாவட்ட சங்க அலுவலக தொலைபேசி எண்: 04142-284647
Monday, March 31, 2014
தோழர் எஸ்ஸார்சி பணி ஓய்வு
நம்மால் எஸ்ஸார்சி என்று அன்போடு
அழைக்கப்படுகின்ற தோழர் S ராமசந்திரன் அவர்கள் 31-03-2014 -ல் சென்னை
தொலைபேசியில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார். கடலூர் மாவட்டத்தில் பல
ஆண்டுகள் பணியாற்றியவர். தோழமையோடும் மனித நேயத்தோடும் நம்மோடு பழகுபவர்.
தொழிற்சங்கத்தில் பல பொறுப்புகளை ஏற்று செயல்பட்டபோதும், தொழிற்சங்க
பொறுப்புகள் இல்லாதபோதும் நமக்கெல்லாம் தொடர்ந்து வழிகாட்டியாக இருந்தவர்.
தொலைபேசி தோழனில் தொடர்ந்து எழுதியவர். பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே
என்று நடந்து கொண்டவர்.
புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை,
மொழியாக்கம் என பல தளங்களில் படைப்புகளை தந்து வருகின்றவர். ஆங்கில
மொழியிலும் கட்டுரை கவிதை படைப்புகள் வந்துள்ளன. இவர் எழுதிய நெருப்புக்கு
ஏது உறக்கம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
1999-ல் மாவட்ட செயலராக தோழர் R
ஸ்ரீதர் பணியாற்றிய பொது கடலூரில் நடைபெற்ற NFTE வெள்ளிவிழா மாநாட்டில்
தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை துவக்கப்பட்டது. தோழர் எஸ்ஸார்சி
தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலம் அதன் பொதுச்செயலராக சிறப்பாக பணியாற்றியவர்.
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் - நாம் பார்க்கின்றோம்
பணி ஓய்வு காலம் மேலும் சிறக்கட்டும்
No comments:
Post a Comment