Thursday, March 20, 2014

vaazka nii emmaan







வாழ்க நீ எம்மான் (2) -எஸ்ஸார்சி


1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் enak கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர்.

2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார்.
3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும்.
4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் தொடமாட்டேன்.இவ்வழி மத வெறியர்கள் மதம் என்கிறார்களே அந்த மதத்தைவிட என் மதம் மேலானது என்று நிரூபிக்க முடியும் என எதிர்பார்க்கிறேன்.
5.தனக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறானோ அதே தன் சகோதரனுக்கும் அவன் விரும்பினாலன்றி எந்த மனிதனும் உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவனாகமாட்டான்.
6.மனிதன் பிற பெண்ணுடன் விபச்சாரம் செய்யும் போது சத்தியம் அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு விடுகிறது.
7.1916 ஆம் ஆண்டிலிருந்து ஜனவ்ரி 26 ஐ சுதந்திரதினமாக நாம் கொன்டாடி வருகிறோம்.
8.ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பதினெட்டு வயது குறைந்தவர்கட்கும் வாக்குரிமை அளிப்பதை நான் விரும்பவில்லை.
9.பாண்டவர்களுக்கும் கவுரவர்கட்கும் போர் நடந்தது. தீமை தோல்வி யுற்றது உண்மை. ஆனால் வெற்றி பெற்ற கதையைப்பேசிக்கொள்ள எழுவரே பாக்கியிருந்தார்கள். 10.உண்மைத்தொண்டு அவன் மறைந்தபின்னரும் அவன் பெயரை அமரத்துவம் பெறச்செய்கிறது.
11.மதம் செத்தால் இந்தியாவும் செத்துவிடும்.
12.ஒரு சீக்கியர் மன வலிமையில் ஒன்றரை லட்சம் நபர்கட்கு ச்சமமானவர்.
13.ஆடம்பரமான பெயர்கள் அதனை வைத்திருப்போருக்கு பெருமை தந்துவிடாது.
14.1946ல் பிகாரில் 10000 பேர் ஹிந்து முசுலிம் கலவரத்தால் மாண்டுபோயினர்.
15.நோவகாலியில் 500 பேர் மாண்டு போயினர்.
16.மேற்கு பஞ்சாபிலிருந்து 57 மைல் நீளத்திற்கு சீக்கியர்கள் கிழக்குப்பஞ்சாபிற்கு வந்துகொண்டிருந்தார்கள்.(28/09/1947 யங்க் இந்தியா)
16.இன்று நான் பழசாகப்போய்விட்டேன்.(05/10/1947 ஹரிஜன்)
17.மனிதன் பிரமாதமாக எதையும் செய்து விடமுடியாது.
18.பொது ஜன அபிப்ராயம் சில சமயங்களில் தாமதமாக உருவாகும். அது ஒன்று மட்டுமே எல்லாவற்றிற்கும் தீர்வாகும்.
19.தாயின் பாசத்தைப்பற்றிக்குழந்தைகள் வாதப்பிரதிவாதம் செய்வது முறையாகாது.
20.இந்தியாவில் புதிதாக ரயில் பிரயாணம் செய்யுன் ஒருவன் ரயில் நிலையங்களில் ஹிந்து நீர்,முசுலிம் நீர், ஹிந்து தேனீர்,முசுலிம் தேனீர் என்று கூவி வினியோகிக்கப்படுவதை அறிந்து அதிர்ந்து போய்விடுவான். .

No comments:

Post a Comment