கவிதை- வீடு வாங்கணும் இணையக்கால கவியரங்கம் 35 23/11/23
சென்னையில்தான் வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளம் வந்த ஏரியா வேண்டாம்
இடுகாட்டுக்குச் சவம் போகும் தெரு வேண்டாம்
தெருவின் கடைகோடி வீடு வேண்டாம்
சி எம் டி ஏ அப்ரூவல் கட்டாயம் இருக்கவேண்டும்
தண்ணீருக்குப்போரும் கழிநீர் சாக்கடையும்
சரியாக இருக்கவேணும்
வீட்டு வாசலில் டிரான்ஸ்ஃபார்மர் நிற்கக்கூடாது
வீடு கட்டி பத்து வருஷத்திற்குள்ளாவது இருக்கவேணும்
சொத்து டாகுமெண்ட் வில்லங்கம் இல்லாது
சரியாக இருக்கவேணும்
அடி மண் இரண்டாயிரம் சதுர அடி குறையக்கூடாது
டியூப்லெக்ஸ் வீடு வேண்டாம்
வாசப்படி வடக்குப் பாத்து இருக்கணும்
சந்து குத்து தெருக்குத்து வேணாம்
பக்கத்துல பஸ் ஏற ரயில் ஏற
சவுகரியம் இருக்கணும்
பள்ளிக்கூடம் ஆஸ்பத்ரியும்தான்.
வீட்டுக்கு நெருக்கமா சர்ச்சோ கோவிலோ
வேண்டவே வேண்டாம்
இன்னும் சில சொல்லி
கொஞ்சம் பாரேன் என்றான் பையன்
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்
எது கொஞ்சம்?.
No comments:
Post a Comment