அகங்காரம்
நான் என்னும் அகங்காரத்தைக்
கொரோனா பெருந்தொற்று
அசைத்துத்தான்
பார்க்கிறது.
எதுவும் என்னல்
முடியும்
என்பது பழங்கதை
கண்முன்னே காட்சியாவது
முகக்கவசம் சமூக இடைவெளி
இவை இல்லாமல்
வாழ்க்கை இனி ஓடுமா
தெரியவில்லை விடை
தள்ளி த்தள்ளி
ஓரம் போகும்
வாழ்க்கை யதார்த்தமாகி
அனுபவமாகிறது அனைவருக்கும்
கண்டுபிடித்த தடுப்பூசி
ஆகச்சரி அறிவிப்பில்லை
உத்திரவாதமில்லை
போகப்போகத்தெரியும்
எது மீளும் எது
மாளும்
தலைக்கனம் இறங்கிட
மனிதச்சாதிக்குத்
தேவைதான் சூக்குமப்பேரிடர்கள்.
------------------------------------
No comments:
Post a Comment