திரு நாடு
காசு வேண்டுமென்றோ
கவுரவம் வேண்டுமென்றோ
காட்சிகள் காணத்தான் வேண்டுமென்றோ
விமானமேறி
வெளி நாடு போனவர்கள்
நொந்து கிடக்கிறார்களங்கே
உலகெங்கும் பெருந்தொற்று
பிணைக்கைதியாய்க்கிடக்கிறான்
மனிதன் அங்கங்கு
பாரத நாடு தடுப்பூசியை
உலகெங்கும் அனுப்பி
அனுப்பி
புகழ் மலையெனக்கூடுகிறது
விரல்விட்டெண்ண
உலக அரங்கில்
வேறு நாடேது
இலவசமாய் மருந்தனுப்பி
தானே மனித இனக்காவலன்
அறிவிக்கிறது பாரதம்
காட்டு மிராண்டிகளென
தூற்றியவர்கள்
திரும்பிப்பார்க்கிறார்கள்
இப்படியுமா ஒரு
திருநாடு.
-----------------------------------
No comments:
Post a Comment