க. நா. சு
நினைவு கவிதைப்போட்டி
எஸ்ஸார்சி
எழுத்து நிஜம்
கவிதைக்கனலோ
கைவசம்
சொல்லிமாளாது
நெஞ்சுரம்
ஆகப்பெரியவர்கள்
ஆரையும் தன்
இலக்கியத்தராசிலிட்டு
இது உம் இடம்
உரைப்பார்
பார்ப்பதில்லை
அவர் முகம்.
விழைவு ஏதுமிலி
இலக்கணம் ஆயுதமாய்ப்
பிடித்த நக்கீரர்
வழி
இலக்கியச்செங்கோல்
கைப்பிடித்த
செம்மல்
கந்தாடை நா சு.
நாடாளும்
இறை
புலவர் முகம்
பார்த்துத்
கொடாப்பரிசு
தொடோம்
யாம்
மறுத்திட்டப் புறநானூற்றுப்
பெருஞ்சித்திரனார்
வழித்தோன்றல்
வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன்
மெய் கூறுவல்
உரைத்திட்ட
மருதன்
இளநாகனார் வார்த்தைக்கு
வலு சேர்த்து
வாழ்ந்திட்ட
எழுத்து
நிஜம்.
No comments:
Post a Comment