Wednesday, April 4, 2018
Thursday, March 29, 2018
on akkalur ravi s' translation of india enum karuththaakka
சுனில் கில்நானியின் 'இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி: எஸ்ஸார்சி
சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது 'The idea of India' என்னும் அற்புதமான நூல். இதனை 'இந்தியா என்கிற கருத்தாக்கம்' என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது.
இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் கொண்டுசெல்லுதல் என்பன மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவிக்கு இலகுவாய் வசப்பட்டிருக்கிறது.மாலதி ராவ் ஆங்கிலத்தில் எழுதி சாகித்ய அகாதெமியின் விருதுபெற்ற நாவலைத் தமிழில் தந்தவர் இரவி
.சாகித்ய அகாதெமிக்கென ஜே கேயின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழில் தந்த ஆழமான சிந்தனையாளர்.மார்க்சிய நெறிகள்,அதனை செயல்படுத்துதலில் தொலைபேசி தொழிற்சங்க அரங்கில் வெகு அனுபவங்கள் அவருக்குண்டு.
சுனில் கில்நானியின் அந்த ஆங்கில நடை அது வாசகனை'The idea of India' என்னும் அவரின் மூல நூலை படிக்கின்றபோது சொக்கவைத்துவிடும்.அக்களூர் இரவியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் என்னும் தமிழ்மொழிபெயர்பை வாசிக்கின்ற போதும் அதே உணர்வினை வாசகன் கண்டுணர நிச்சயம் வாய்க்கும்.இதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி எனலாம்.தேவைப்படும் போதெல்லாம் மூல ஆசிரியரைத்தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்பை ச்செழுமைப்படுத்தியிருக்கிறார்.
இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வெளிவந்த நூல்களில் கவனம் பெற்ற ஒரு படைப்பு இது.
26 ஜனவரி 1997,அன்று எழுதப்பட்ட முன்னுரையில் கில்நானி இந்த நூல் 'இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் பொது வாழ்வை ப்பற்றியது' என்று மிகச்சரியாகவே குறிப்பிடுகிறார்.
2003 ஆம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுக உரையில் கில்நானி இப்படிப்பேசுகிறார்.
'வாழ்க்கையை மாற்றும்,வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்,வசீகரம் நிறைந்த, தினந்தினம் மாறும் தொழில் நுட்பத்தின் சாத்தியங்களை பம்பாயில் ஒருவர் உணர்ந்திருக்கலாம். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அந்தப்படுகொலைகளுக்கு உதவிய தொழில் நுட்பத்தின் ஈவிரக்கமற்ற மிருகத்தன்மையை குஜராத்தில் அவர் உணர்ந்திருக்கமுடியும்.இத்தகையச்சூழலில்,இவற்றில் எதைத்தேர்வு செய்வது என்ற தர்மசங்கடமான நிலையில் இந்தியா இருக்கிறது.'
இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கில்நானி எழுதியது. நாடும் நடப்பும் இன்று நமக்கு முன்னால் எப்படி என்பது நாம் உணர்கிறோம்.ஊழலில் மாட்டிக்கொண்டு நிர்வாணமாகிய அரசு இயந்திரத்தை ப்பார்க்கசகிக்காமல் இந்திய மக்கள் ஒரு மாற்றம் விழைந்தனர்.மாற்றம் மாற்றமாக இல்லை.ஏமாற்றமாகவே அனுபவமாதல் நிகழ்கிறது. மாவு எப்படியோ பணியாரம் அப்படி. அன்று நரி.இப்போது குரங்கு .இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இந்திய நாடு திண்டாடுகிறது.
2017 ஆம் ஆண்டு பதிப்புக்கான முன்னுரையில் 'மோடியும் அவரது கூட்டணி நண்பர்களும், அனைத்து அரசியல் எதிரிகளையும் துடைத்தெறிந்து,'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை' உருவாக்க விரும்புகிறார்கள்.விமர்சனங்களும் கருத்து மாறுபாடுகளும், தேசத்திற்கு எதிரானவை என முத்திரை குத்தப்படுகின்றன.'என்று சொல்லிப்போகிறார் கில்நானி.
மகாத்மா காந்தி விரும்பியது இந்திய விடுதலைக்குப்பின் காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்பதை.அதன் நோக்கம் புனிதமானது.நாசகார சக்திகள் புனிதமான விடுதலை இயக்கத்தின் விழுமியங்களை சொந்தம் கொண்டாடிச் சுய லாப வேட்டைக்காரர்களாக மாறிப்போவார்கள்.கொள்ளைக்கூடாரமாய் இந்த ப்புனித இயக்கம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் தேச பிதா.
ஆனால் அந்த விபரீதமும்ம அரங்கேறியது. மோடி வார்த்தை ஜாலக்காரர் ஆயிற்றே.காந்தி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விழைந்தார். எனவே அதைத்தான் தான் நிறைவேற்ற விழைவதாக க்குறிப்பிடுகிறார்.
கில்நானியின் அவதானிப்புக்கள் இரவியின் மொழி ஆக்கத்தில் சிறப்பாக வந்திருப்பதை முன்னுரைகள் வாசகனுக்குப்பறை சாற்றுகின்றன.
இந்நூலை வாசிப்பதற்கு கில்நானியின் முன்னுரைகள் மிகச்சிறந்த அடித்தளம் என்று கவனமாகக்குறிப்பிடுகிறார் மொழிபெயர்ப்பாளர். ஆகச்சரியே.
முன்னுரையின் இறுதியில் ஜவஹர்லால் நேரு(1946) குறிப்பிட்டதை கில்நானி நினைவு படுத்துகிறார்.
''இந்தியாவின் மனோபாவத்தையும் தோற்றத்தையும் மாற்றி அவளுக்கு நவீனத்துவ துகிலை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் கவலையுடனும் இருந்தேன்.இருப்பினும் என்னுள் சந்தேகங்கள் எழுந்துகொண்டுதான் இருந்தன.'
வேத மேத்தா (1970)ல் குறிப்பிட்டதுவும் உடனே அங்கு வருகிறது.சாராம்சம் இதுதான். ஆயிரக்கணக்கானோர் பட்டினியில் வாடும்போது தேசத்தின் தலைவர்கள் பெரிய விருந்தொன்று நடத்தினர்.சிலைகள் பல வைத்து ஆராதனை செய்தனர்.அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கையின் ஐந்துவிரல்கள் சுவரில் எதையோ எழுதின.அது இன்னது என்று கூடியிருந்த யாருக்கும் விளங்கவில்லை.
'எழுதப்பட்டிருப்பதை ப்படித்து அதன் பொருளைத்தெரியப்படுத்தக்கூடிய சந்தேகத்தை த்தீர்க்கக்கூடிய அறிவு வெளிச்சமும் புரிதலும் ஞானமும் கொண்டவர் எவரையுமே கண்டுபிடுக்க முடியவில்லை' இப்படி முடிகிறது அது.முடிச்சுக்கள் ஒரு நாள் அவிழலாம்.
புத்தகத்தின் பின் அட்டையில் அமர்த்தியா சென்னின் வாசகம் இந்நூலை ப்பற்றி வாசகனுக்கு கச்சிதமாக உரைக்கிறது.'எழுச்சியூட்டும் சீற்றம் மிகுந்த உள்முகப்பார்வை கொண்ட படைப்பு' இப்படி.
அறிமுகம் இதனிலிருந்து தொடங்கி இந்நூலை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.'பொருளாதார நவீனத்துவம் நோக்கிய விழைவு,பெருமளவில் இங்கு சமமற்ற சமுதாயச்சித்திரத்தைத்தீட்டியிருக்கிறது.பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு தோல்வியாகவே இது முடிந்திருக்கிறது.இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா.இக்காரணங்கள் பெரும்பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவை.அவை சிக்கல் நிறைந்தவை.சர்ச்சைகளுக்கு உட்பட்டவை என்று கூறமுடியும்.மறுக்கப்படும் வாய்ப்புகளும்,சமமற்ற விநியோக முறையும்தான் இவற்றிற்கான தர மாதிரிகள்' என்று சொல்கிறார் கில் நானி.
மிக உச்சத்தை எட்டியமேல்தட்டு மக்கள் ஒரு புறம்,அதல பாதாளத்தில் கிடக்கும் சாமானியர்கள் மறுபுறம் என்று இச்சமுதாயம் பிரிந்து பிரிந்து கிடப்பதை கில்நானி சரியாகவே எடை போடுகிறார். மகாத்மா காந்தி,ஜவஹர் லால் நேரு,வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய ஆளுமைகளைத்தொட்டுப்பேசுகிறார்.அவர்களின்றி இந்தியா என்பது ஏது என்று வாசகனும் ஒத்துப்போகவே செய்கிறான்.
இறுதியாக இந்த அத்தியாயத்தில் மிகச்சரியான ஒரு விஷயம் வருகிறது.'காந்திக்கு எதிராக அம்பேத்கர் மீண்டும் நிறுத்தப்படுகிறார்,நேருவிற்கு எதிரான யுத்தத்திற்காக பட்டேல் மீண்டும் தருவிக்கப்படுகிறார்.' அற்புதமாக இரவியின் மொழிபெய்ர்ப்பு..மொழிபெயர்ப்பாளர் நம்மைப்பேசவைத்துவிடுகிறார்.
பட்டேல் தருவிக்கப்படுகிறார் என்பதில் ஒரு விஷயம் பொதிந்து கிடக்கிறது. வரலாற்றுப்போக்கில் பட்டேலை மூட்டைகட்டி தூக்கிவைத்துவிட்ட ஒரு அரசியலையும் நமக்கு கில்நானி நினைவுக்குக்கொண்டு வருகிறார்.பட்டேல் இருட்டடிப்பு. தேசியக்கட்சிக்கு ஒரு அரசியல் இல்லாமலா இப்படி என்பதை வாசகன் எண்ணிப்பார்க்கிறான்.இன்று குஜராத்தில் பட்டேலின் ஆகப்பெரிய சிலைவைக்க ஏற்பாடு நடக்கிறது.சிலையின் உயரம் அச்சம் கொள்ள வைக்கலாம்.மனிதர்கள்தான் சிறுத்துப்போகிறார்கள்.
அடுத்த அத்தியாயம் 'ஜனநாயகம்'. பி. ஆர் அம்பேத்கரின் வாசகத்தோடு தொடங்கும் பகுதி.'முரண்பாடுகள் நிறைந்த இந்தவாழ்க்கையை எவ்வளவு காலம் தொடர்ந்து வாழப்போகிறோம்' என்னும் கனம் கூடிய அம்பேத்கரின் வாசகம் நம்மை த்தொட்டுப்பார்க்கிறது.அண்மையில் சென்னையில் ஆர் கே நகர் தேர்தலைப் பார்த்துவிட்ட நாம். அது நமது கண்கள் செய்துவிட்ட பாவம். எங்கே போய் முட்டிக்கொள்வது.இருக்கிற அமைப்பில் ஜனநாயகம் தேவலாம் என்போம்.அது நடுத்தெருவில் ஈனப்பட்டதை அதன் சிருஷ்டி கர்த்தாக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
'இந்தச் சமுதாயத்தை ஆட்சி செய்வது சுலபம்.ஆனால் மாற்றுவது கடினம்' என்று இந்தியாவில் நிலவும் சாதியையும் வருணத்தையும் பற்றி க்குறிப்பிடுகிறார் கில்நானி.மிகச்சரியான கணிப்பு இது.அப்படித்தான் அரசியல் அனுபவமாகிறது.
மெக்காலே வகுத்த கல்வி முறை பற்றி அழகாகக்குறிப்பிடும் கில்நானி இப்படி ச்சொல்கிறார்.
'நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியனாகவும், சுவைஉணர்வில்,எண்ணங்களில் நீதி நெறியில், அறிவுத்திறனில் ஆங்கிலேயனாகவும் இருக்கக்கூடிய மனிதனை உருவாக்குதல்' இதுவே கச்சிதமாக இங்கே சாத்தியமாகியது.கோட்டும் சட்டையும் போட்ட அடிமைகள் உருவாக்கப்பட்டார்கள்.ஆங்கிலம் பேசினார்கள்.கைகட்டி நின்றார்கள். அது ஒரு தொடர்கதை.
அரசியலில் தவறாக நடப்போருக்கு எதிராக மக்கள் தம் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு உபாயமே தேர்தல் என்கிற எளிமையான தட்டையான விவேகமற்ற புரிதல் நிலைபெற்று நடைமுறைக்கு வந்திருப்பதை இந்திய மக்கள் சரி என்று உணர ஆரம்பித்து வெகுகாலம் ஆகிவிட்டது. திறமான ஆளுமையும் பொருளாதார நாணயமும் நேர்மையும் நாட்டின் ஒட்டு வளர்ச்சியும் சமூக த்தரம் உயர்தலும் உலகம் பற்றிய சரியான புரிதலும் மறக்கப்பட்டுவிட்டன
.காசுபணம் சம்பாரிக்கக்கல்வியும்,காலை நீட்டி ப்படுக்க அமெரிக்காவில் ஒரு இடமும் வேண்டுமே என இறைவனிடம் மன்றாடும் இந்திய மக்களை மட்டுமே பெருவாரியாக பார்க்க வாய்த்திருக்கிறது. இதனை கில்நானி சரியாக அவதானித்து இது எப்படி எங்கே தொடங்கியது என்பதை இந்திரா அம்மையாரின் நெருக்கடி நிலமையும் அதற்குப்பிறகுமான நடப்புக்களும் என்பவைகளோடு தொடர்புபடுத்திப்பேசுகிறார்.
கில் நானியின் வார்த்தைகளில்'இந்திய அரசிற்கும தன் சமுதாயத்திற்கும் ஜன நாயகம் என்பதன் பொருளை திருமதி காந்தி மாற்றி அமைத்தார் என்று வருவதை க்காண்கிறோம்.ஜன நாயகம் என்றால் தேர்தலில் வெல்லுவது மட்டுமே என்கிற நிலமை பிரத்தியட்சமானது.
இந்திரா காந்தியின் சோக முடிவோடு, ராஜிவ் காந்தியின் கோர முடிவையும் கில் நானி ஆராய்கிறார்.சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டதையும் விவரிக்கிறார்.
மாயாவதியை பிற்பட்ட வகுப்பைச்சார்ந்தவர் என்று கில் நானி தவறாகப்பதிவு செய்கிறார். அட்டவணை இனத்தவரான மாயாவதியை ஏன் அப்படிக்குறிப்பிடுகிறார் என்பது சற்று நெருடலாகவே உள்ளது.
மூன்றாவது தலைப்பாக' எதிர்காலக்கோவில்கள்' என்கிற விஷயம் பேசப்படுகிறது. 'மனிதகுல நன்மைக்காக மனிதர்கள் வேலை செய்யும் இடங்கள்தான் மிகப்பெரிய கோவிலாக மசூதியாக அல்லது குருத்வாராவாக இந்நாட்களில் இருக்கமுடியும் என்று எண்ணினேன்.' என்று நேருபிரான் கூறியதைக்குறிப்பிட்டு இந்த அத்தியாயம் ஆரம்பமாகிறது.
பக்ரா அணை கட்டிய விவரணையை இந்நூல் சிறப்பாகச்செய்து இருக்கிறது.மைசூர் மஹாராஜாவிடம் பணிபுரிந்த விசுவேசுவரய்யா பற்றிய குறிப்பும் இந்த ப்பகுதியில் வருகிறது.'தொழிமயமாகு இல்லையேல் அழிந்துபோ' இது விசுவேசுரய்யாவின் கோஷம்.தேசபிதா கந்தியோ' தொழில் மய மாகு அழிந்து போ' என்று தொடர்ந்து வாதிட்டார்.
நேரு விரும்பிய பொதுத்றை நேரு விழைந்த மாற்றத்தை கொண்டு வரவில்லை.அவை நாட்டின் சுமைகளாக உருவெடுக்க ஆரம்பித்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் மட்டும் பொதுத்துறை காக்கப்படவேண்டும் என்பதில் குறியாகத்தான் இருந்தன.
மூன்றாவதாக 'நகரங்கள்' என்னும் தலைப்பு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதிக்கு நகரங்களில் வாழ்வதை நாம் காண்கிறோம்.விவசாயத்தின் மீதிருந்த கவர்ச்சி அல்லது மரியாதை தொலைந்துபோய்விட்டது.கல்விக்கூடங்களும்,தொழிற்கூடங்களும், மருத்துவ மனைகளும் நகரத்தை விட்டு நகர மறுக்கும்போது வேறு என்ன செய்வது? நகரங்கள் வீங்கிப்போய்க்கிடக்கின்றன.கில்நானி இந்திய நகரங்கள் குறித்து விரிவான அறிக்கை தருகிறார்.அகமதாபாத்,கொச்சி,சூரத் இவை பொருளாதார வர்த்தக மையங்கள்,பனாரஸ்,பூரி,மதுரை போன்றவை புனித நகரங்கள்,டில்லி,ஆக்ரா என்பவை நிர்வாக நகரங்கள் என எழுதிச்செல்கிறார். காசி நகரம் எப்படி நாறிக்கிடக்கிறது என்பதனை மகாத்மாவின் மேற்கொளோடு சுட்டுகிறார்.டில்லியைப்பற்றிய விவரணை விளக்கமாக உள்ளது.சண்டிகர் எப்படி பாகிஸ்தானின் லாகூருக்கு ஒரு மாற்றாக வடிவமைக்கப்பட்டது என்பதனை க்குறிப்பிடுகிறார். பம்பாய் நகரை சிவசேனா எப்படி க்கையாள்கிறது என்பதனையும் தவறாமல் கில்நானி குறிப்பிடுகிறார்.மைசூரும் பெங்களூரும் அவர் பார்வைக்குத்தப்பவில்லை. மொழிபெயர்ப்பாளர் இரவி சிறப்பாக இப்பகுதியை மொழிபெயர்த்து இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்பதையே மறக்க வைத்துவிடுகிறார்.
இந்தியன் யார்? என்பது நான்காவது அத்தியாயம்.1989ல் நிகழ்ந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் என்கிற முஸ்தீபு குறித்துத் தொடங்குகிறது.'
தங்களது நிலப்பரப்பை அந்நியர்கள் வெற்றி கொண்டார்கள்,காலனியத்திடம் அடிமைப்பட்டுப்போனோம் என்ற உண்மைதான்,தேசிய இனம் ஒன்றிற்கான சுய தேடலை இந்தியர்களுக்குச்சாத்தியமாக்கியது.'என்று சரியாகவே கில்நானி வரையரை செய்கிறார்.ஐநூற்று ஐம்பத்தாறு தேசங்கள் தாமே பண்டைய பாரதம்.தமிழ் மண்ணிலேயும் எத்தனையோ அரசு பிரிவுகள். ஓயாத சண்டை. அதிலே தமிழற்குப் பெருமை.காதலும் வீரமும் அவையே இரண்டு கண்கள். அதனைப்பேசிப்பேசி அகமும் புறமும் எமக்கு மூச்சு என்று முழங்கியது தமிழர் வரலாறு.
'பிளவற்ற ஹிந்து வரலாற்றைக்கடந்த காலங்களில் தேடியவர்களை மிகவும் வசீகரிக்கும் அரசியல் புள்ளியாக விநாயக் தாமோதர் சாவர்க்கர் இருக்கிறார்.இவரது படைப்புகளில் இருந்துதான் பிர்காலத்தில் பி.ஜே.பி.'ஹிந்துத்வம்' என்ற தனது மந்திரத்தின் இலக்கணத்தை எடுத்துக்கொண்டது.'என்று வரையறை தருகிறார் கில்நானி ஹென்றி மிஷா என்னும் பிரான்சில் குடியேறிய பெல்ஜியக்கவிஞர் இந்தியா பற்றிக்குறிப்பிடுவதை வாசகனுக்கு நினைவூட்டுகிறார் ஆசிரியர்.
'இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள் தொடக்கத்திலேயே இந்தியாவையும் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் கைவிட்டு விட்டனர்.இப்போது ஹிந்துக்கள் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளச்செய்ததுதான் ஆங்கிலேயர் செய்த மிக அற்புதமான செயல்' இதனை மறுத்திட முடியாது.
வள ஆதாரங்கள் மீதான கட்டுப்பாட்டை உன்மையான பரிசு என்று கருதும் அரசின் இருப்பும்,அந்தப்பரிசை அடைவதற்கான விளையாட்டில் பெரும்பாலான மக்களை ஈடுபட வைத்திருக்கும் உறுதியுடன் நீடித்திருக்கும் ஜன நாயக அரசியலும்தான் போட்டியின் பொருளாக அதனை வைத்திருக்கின்றன.இப்படிப்பேசும் கில்நானி இந்திய அரசியலை சமூகத்தை நிகழ்வுகளை எத்தனை ஆழமாக அலசியிருக்கிறார் என்பதை எண்ணி நாம் திகைத்து ப்போகிறோம்.
முடிவுரைக்கு வருவோம். நவீனத்துவம் என்கிற துகில். சற்று தூரத்திலிருந்து பார்த்தால்தான் பொருட்களைத்தெளிவாக ப்பர்க்கமுடியும் என்னும் ஏ.கே ராமானுஜனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது. அது இந்த நூலின் ஆசிரியருக்கும் கூடச்சரியாகவே பொருந்தும். அவரும் லண்டனில் இருந்து இந்தியாவைப்பார்த்துக்கருத்துக்கள் உரைக்க அதுவே இந்தியா என்னும் கருத்தாக்கமாக மலர்ந்து பெருமை பெறுகிறது..
சிதறுண்ட சோஷலிச அமைப்பு இந்திய ராணுவப்பாதுகாப்பின் கடையாணியாக இருந்த சோவியத் யூனியனைக்கழற்றிவிட்டது. இன்று சோஷலிசமா?சந்தைக்களமா?எது வென்றது எனில் சந்தைப்பொருளாதாரமே.இந்தியாவைச்சுற்றி ஜன நாயகம் மறந்த பாகிஸ்தான்,சீனா,பர்மா என அமைதி குலைக்கும் நாடுகள்.
இந்தியா இப்போது உலக அரங்கில் ஒரு நவீன தோற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய சரியான தருணம்.மனிதத்திறமைகளை மட்டுமே அது நம்பியிருக்கிறது என்கிறார் சுனில் கில்நானி.
அற்புதமான ஒரு நூல்.கடின உழைப்பு. ஆழ்ந்த சிந்தனை,சம தள ஆய்வு,எடுத்துக்கொண்ட பொருளில் இணையில்லா ஈடுபாடு,அழகு மொழி ஆளுமை இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த சுனில் கில்நானியை அடிமனதிலிருந்து பாராட்டுவோம். உயர்ந்த பொருள் கொண்ட புத்தகத்தை காலம் அறிந்து தேர்ந்து மொழியாக்கம்செய்து வென்று நிற்கும் அக்களூர் இரவி தமிழ் ச்சிந்தனை த்தளத்திற்கு சாதனை ஒன்றை நிகழ்த்தி ப்பெருமை கொள்கிறார்.
--------------------------------------------------
.
on paavannan stories10
10 பாவண்ணின் சிறுகதைகள்.
பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற பேச்சுக்கு இங்கே இடமில்லை.கதையின் கரு நம்மோடு ஒட்டிகொண்டு விடுகின்றது. ஒரு வாசகன் கண்கள் பனிக்காமல் அவர் எழுத்துக்களை படித்துவிடமுடியாது.
பாவண்ணனின் அந்தப் படைப்பு மனம் அது தானாக எழுதிக்கொண்டு போவதை வாசகன் படிக்கும்போது உணரமுடியும்.பாசாங்குத்தனம் அறியா எழுத்துக்கள் அவை. சாதாரண ஒரு எளிய மனிதனின் உள்ள நெகிழ்வை பாவண்ணனால் மிகச்சரியாக அவதானிக்க முடிகிறது. ஏதோ ஒரு சத்தியத்தின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அவர் எழுத்துக்கள் சொல்லிச்செல்கின்றன.
வாழ்க்கை பற்றிய படைப்பாளியின் அணுகுமுறை, அனுபவம்,படைப்பாற்றல், வாசகனுக்குத் தான்தெரிவிக்க விழையும் ஒரு செய்தி இவை அனைத்திற்குமான விடை அவரது படைப்புக்களில் பெற முடியும். பிரிக்கவேமுடியாத உறவு அவரின் பிறந்த மண்ணோடு இருப்பதை அவரின் எல்லாப்படைப்புக்களிலும் தரிசிக்கவும் வாய்க்கும்.
கால்களில் மிதிபடும் புல்லின் ஒரு இதழில் பிரபஞ்சத்தின் ரகசியம் ஒளிந்திருப்பதை நோக்குவது ஒப்ப, ஒரு எளிய மனிதன் பேசும் வார்த்தைகளில் மாகாவியங்கள் உணர்த்தப்போராடும் கனவிஷயத்தைச்சொல்லிவிட பாவண்ணனால் சாத்தியப்படுகிறது.
பச்சைக்கிளிகள்:
சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'பச்சைக்கிளிகள்' என்னும் தொகுப்புக்குள் நாம் இப்போது நுழைகிறோம்.13 கதைகளைக்கொண்ட ஒரு தொகுதி இந்த பச்சைக்கிளிகள்.
தீரா நதி,ஆனந்தவிகடன்,உயிர் எழுத்து,உயிர்மை,காவ்யா,அந்திமழை, அம்ருதா என இலக்கிய பிரக்ஞை கூடிய இதழ்களில் வெளிவந்தவை.இந்தப்பட்டியலில் இலக்கியப்பிரக்ஞை கூடியன என்பதில் முரண் இருக்கலாம்.ஆனால் பாவண்ணனின் படைப்பு வெளிருவதில் கொஞ்சம் கூடுதல் அக்கறையுள்ள இதழ்கள் என்கிறபோது இயல்பாக இவைகட்கு இலக்கிய மாற்றுக்கூடிப்போவதை ஏற்கத்தான் வேண்டும்.
வெளிச்சத்தைக்கொண்டு வருபவன்-என்கிற கனமிகு கதையிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.ரங்கநாதன் சார் என்னும் கிராமத்து ஆசிரியரின் கதை.ஆசிரியன் என்னும் ஒரு இலக்கணத்துக்கு பொறுத்தமான ஒரு பெரிய மனதுக்காரனின் கதை.
அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த வயிற்றுப்பிழைப்பு. கிராமப்புறங்களில் அதுவே பெரிய பாடு என்று வாழ்க்கை அனுபவ மாகின்றபோது ஒரு ஏழைக் குடும்பத்து மாணவன் எப்படிப் பள்ளியில் சேர்ந்து படிப்பது. பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிறார்களே பின் அதுதான் என்னவாம்.
செங்கல் சூளை வேலைக்குச்செல்லும் பள்ளிச்சிறார்கள். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..உழைத்தால் குடும்பம் பசி ஆற்றிக்கொள்ளும்.இல்லாவிட்டால் பட்டினி கிடந்து மடிவதைத்தவிற வேறு வழி என்ன என்பதுவே யதார்த்த நிலை. தன் பிள்ளையை செங்கல் சூளை வேலைக்கு அனுப்பும் தாய் ரங்கநாதன் சாரிடம் இப்படிப் பேசுகிறாள்.
'இங்க பாரு சார்.வீணா புடிவாதம் புடிக்காத.மத்த சார்மாருங்களாட்டம் நீயும் இருந்துட்டு போ சார்.எங்க ஊட்டுல ஒல கொதிக்கணும்னா அவனுங்களும் வேலை செஞ்சாதான் முடியும்.என் புள்ள மேல எர நூறு ரூபா அட்வான்ஸ் குடுத்திருக்காரு மொதலாளி.அதோ அந்த மாயாண்டி,காத்தமுத்து, குள்ளன்,வெளுத்தான்,கோணக்காதன்,அந்தத்தடியன்,மொட்ட, எல்லார் மேலயும் எர நூறு முந்நூறுன்னு இருக்குது சார்.வேல செய்யுறதனாலதான் நம்பிக்கையா கடன் குடுக்க்றாங்க சார்.செய்யலைன்னா யார் குடுப்பா? படி படின்னு சொல்றியே படிப்பு வந்து குடுக்குமா?' இப்படி இருக்கிறது ரங்கநாதன் சார் முன்பாக பிரத்யட்சமாக நிற்கும் கிராமம்.இந்த இருண்ட சூழலில் கல்வி என்னும் அறிவு வெளிச்சத்தை எப்படி ஒரு ஆசிரியர் கொண்டு வருகிறார் என்பதைச்சொல்லும் கதை இது.
பாவண்ணனுக்கு நேர் எதிரே அனுபவமான ஒரு விஷயமாக இருக்கவும் கூடும்
அமரர்.வே.சபாநாயகம் ஒரு நாவல் எழுதியிருப்பார்.'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' திண்ணைப்பள்ளிக்கூடத்தை தத்ரூபமாக வாசகனுக்கு அறிமுகப்படுத்திய ஒரே படைப்பு அது. ..திருமணமே செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி வாத்தியார் தன் இறுதிமூச்சுவரை எழுத்தாளர் சபாநாயகம் வாழ்ந்த அதே தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தில் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியராக பணி செய்து, அந்த மக்களுக்கு எண்ணும் எழுத்தும் அறிவித்து த் தன் வாழ்க்கையை முடித்துக்கொண் டுவிடுவார்.அந்த புதினத்தை வாசகனுக்கு நினைவுக்குக்கொண்டு வருகிறது பாவண்ணனின் இந்தச்சிறுகதை. ஆக அவ்வை சொன்னதை நாமும் ஆமோதிப்போம். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பதே சரி.
பாவண்ணன் சொல்கிறார்.'பக்கத்துக்காட்டில் ஆடு மாடு மேய்த்தவர்கள்,பன்றி மேய்த்தவர்கள்,கரும்பு வெட்டுக்குப்போனவர்கள்,சாணமெடுக்கச்சென்றவர்கள் என பிள்ளைகள் கூட்டம் ஒவ்வொரு திசையிலிருந்தும் தினமும் வந்து சேர்ந்தபடி இருந்தார்கள்'.அறிவுக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பதில் அத்தனை ஆழ்ந்த பிடிப்பும் கவலையும் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியரைக்காண்பதில் வாசகனுக்கு எத்தனை நிறைவு.அந்த ரங்கநாதன் ஆசிரியரின் நிழற்படத்துக்குப்போடப்பட்டிருந்த கண்ணாடிச் சட்டம் ஒரு நாள் உடைந்துபோய்விடுகிறது. அதனைச்சீர் செய்ய செல்லும் அவரின் ஒரு மாணவன் வாசகனுக்குச்சொல்லும் ஆழமான ஒரு செய்தியாக படைப்பு அமைகிறது இந்தச்சிறுகதை, படிக்கும்.ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நல்- ஆசிரியரின் நினைவை நிழலாகக்கொண்டுவரும். அவரோடு என்றோ ஒரு நாள் உரையாடிப்போனதை மீண்டும் மனத்திரையில் அனுபவிக்க வாய்க்கும்.
ஆங்கிலக்கவிதாயினி எமிலி டிக்கின்சன் எழுதியிருப்பார்.தான் இறந்து தன் சவ ஊர்வலம் தான் படித்த அதேபள்ளிக்கூட வீதி வழி செல்கிறது. அதுபோது அந்தப்பள்ளிப்பிள்ளைகள் அச்சத்தில் மூழ்குகிறார்கள். ஆக ஒரு படைப்பாளிக்குத் தான் படித்த பள்ளி என்பது மறக்கவே முடியாத பெரு விஷயமாகும்.
வெயில் -என்கிற தலைப்பு.அடுத்து வரும் சிறுகதை.மனிதன் நோயற்ற நல்வாழ்வில் வாழவே எப்போதும் விரும்புகிறான்.ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படுகிறதா என்ன? நோயிலும் மன நோய் என்கிற விஷயம் மிக மிக மோசமானது.தன்னையே மறந்து தடம் இறங்கிப்போய், பார்க்கும் எல்லோரும் பரிதாபப்படும் ஒரு ஜீவனாக மாறிப்போகிற அந்த வாழ்க்கை கொடுமையானது.மூன்றாம் பிறை திரைப்படத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு கதா நாயகியை வெள்ளித்திரையில் பார்த்து இருப்போம்.அந்த க்கதா நாயகிப்பெண்ணுக்கு குழம்பிய மனம் மீண்டும் ஆரோக்கியமாகும்.ஆனால் உயிருக்கு உயிராய் காதலித்தவனை மட்டும் அவள் மறந்து போய் நிற்பாள்.சோகம் கனத்துப்போவதை பார்வையாளன் இங்கு உணரமுடியும்.
அன்பைகொட்டிக்கொட்டி நேசித்த அந்தப்பெண்ணை வெளி நாடு சென்று தாயகம் திரும்பும் கதை சொல்லி தேடிவருகிறான்.எங்கே போனாள் அவள். அவனுக்கு அவன் குடியிருந்த வீட்டுச்சொந்தக்காரர் சொல்லிய செய்தி இது.அவள் குடும்பத்தில் எல்லோரும் ஒரு சாலைவிபத்தில் சிக்கி இறக்க அவளுக்கு த்தலையில் அடி. மூளை அனேகமாய் செயலிழுந்துபோயிற்று..பைத்தியம் பிடித்தவள் போல் காணப்பட்ட அவளை, தன்னை உயிருக்கு உயிராய் நேசித்த அந்த அவளை ,அவளின் உறவினர்கள் மன நல சிகிச்சைக்காக மா நகர மருத்துவமனை ஒன்றில் உட்புற நோயாளியாக சேர்த்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.கதை சொல்லி அவளைக்கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசையில் மன நல மருத்துவ மனைக்குச் சென்று தேடுகிறான். கடைசியாக பார்த்தும் விடுகிறான்.
'அவள் பார்வை.எங்கோ தொலைவில் வானத்தில் பதிந்து கிடந்தது.அந்தக்கண்கள்.அந்த உதடு.அக்கணமே புரிந்துவிட்டது.காவேரியேதான்.உயிரின் ஆற்றலை எல்லாம் அவை சுமந்திருந்தன.ஆனால் தோற்றம்தான் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.மொட்டை அடிக்கப்பட்ட தலையில் கொஞ்சம்போல முளைத்திருந்த முடி.ஒடுங்கிப்போன நெற்றி,குச்சியாகிவிட்ட கழுத்து,சுருங்கிப்போன தேகம்.நாலடி தோலைவில் நிற்பவள் நாலாயிரம் அடி தொலைவில் நிற்பவளைபோலத்தோன்றினாள்.என் உடலில் ஒரு தடுமாற்றமும் சோர்வும் படிவதை உணர்ந்தேன்.அவளை அழைக்க நினைத்த குரல் எழாமலேயே குரல்வளைக்குக்கீழே அடங்கி ஒடுங்கியது.'பாவண்ணன் இப்படிச்சொல்லி முடிக்கிறார்.
கதைசொல்லி அந்தப்பெண்ணைக்கண்டும் காணாதவன் என்கிறபடி மன நல மருத்துவமனை விட்டு மனம் கனத்து வெளியே வருகிறான்.வெயில் ஈட்டியாய் காய்கிறது.அவனை அவளால் நினைவில் கொண்டுவரமுடியவில்லை.அவனாலும் எதுவும் செய்யமுடியாத நிலை..அவனுக்கும் அவளுக்கும் இருந்த அன்பென்னும் சங்கிலி அறுபட்டுப்போய் அவள் வாழ்நலம் நொறுங்கிப்போய் ஒரு மன நோயாளியாய் கிடக்கிறாள்.இந்தப்பெண்ணின் அவலம் கொடுமையானது.பாவண்ணன் இதை ஒரு ஓவியமாகத்தீட்டி வாசகனுக்கு'பாரப்பா இப்படியும் ஒரு சோகத்தை' எனக்காட்டியிருக்கிறார்.சிறிய கதைதான்.பாவண்ணன் இப்படிச்சாதாரணமாக சிறிய சிறுகதை எழுதுவது வழக்கமில்லை. நெடியகதை என்பது தான் எப்போதும் அவர் சிறுகதைப்பாணி.
சாதாரணமாக ஆட்டோ ஓட்டிகள் எல்லோரும் கவிதை மாதிரிக்கு இரண்டு வரிகளை முதுகுப்புறம் எழுதிக்கொண்ட ஆட்டோக்களை ஓட்டுகிறார்கள்.சில வாசகங்கள் கனமான சிந்தனைக்கு இடம் அளிக்கவே செய்கின்றன.தமிழ் நாட்டில்தான் இப்படி.வேறு மாநிலங்களில் இது மாதிரிக்குப் பார்க்கமுடியவில்லை.மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்க இயக்கங்களில் இது போல் கவிஞர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுதி ஓங்கி ஓங்கி முழக்குகிறார்கள்.கவிஞர் பழமலய் ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டங்களில் பயிலப்பட்ட அனேக கோரிக்கை முழக்கங்களை, நாடகக்கூறுகளை,கதைப்பாடல் ஒத்த செவிக்கு உவந்த வரிகளைஅவற்றின் இலக்கிய ஈர்ப்புகண்டு 'நாங்கள் பாடினோம்' என்னும் ஒரு நூலாக வெளிக்கொண்டுவந்தார்.இந்த வகையில் போஸ்டர் எழுதி அவைகளை பிரதான வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கும் ஒரு சாதாரண தொழிலாளியின் சமூகப்பிரக்ஞையை வெளிக்கொணரும் சிறுகதையாக 'சுவரொட்டி' யை பாவண்ணன் எழுதியிருக்கிறார்.ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறந்த சிறுகதை இது.சிறுகதைகளூடே கூர்மையான விமரிசனங்களைச்செறுகி எழுதும் சமூகப்பொறுப்பும் பாவண்ணனிடம் இருப்பதை அனேக இடங்களில் காணமுடியும்.
'இந்த நாட்டுல கெட்ட வார்த்தங்க பேசுறதுல ஒரு போட்டி வச்சா,போலீஸ்காரங்களுக்குதான் மொத மெடல் கெடைக்கும்' என்று சவமாகக்கிடக்கும் அந்த பெரியப்பா என்னும் ஒரு சுவரொட்டி தயாரிக்கும் தொழிலாளி சொன்னதுவாகக்குறிப்பிடுகிறார்.
'மருந்து' என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ளது அடுத்து ஒரு கதை இந்தக்கதை, எளிய மனிதர்கள் படும் இன்னல்கள் அவைகளுக்கு இடையேயும் அவர்களின் ஒளிரும் மானுட நேர்மையை அழகாகப்படம் பிடிக்கிறது.பாவண்ணனுக்கு இயல்பாகவே அந்த மனிதர்களோடெல்லாம் நிறைந்த அனுபவங்கள் இருப்பதை அவர்தம் படைப்புக்களில் காணமுடிகிறது.பக்கத்திருப்பவர் துன்பம் அதைப்பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியாத எத்தனையோ மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களின் இருப்பை கதைகள்வழி கொண்டு நிறுவும் இந்த படைப்பாளி மனித நம்பிக்கையை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொள்கிறார் ஒரு .மனிதர் சக மனிதர் கொள்ளும் அந்த நம்பிக்கை புனிதமான ஒன்று.
இந்தக்கதையில் வரும் தாத்தா ஒரு நாட்டு மருத்துவர்.அவர் ஒரு சமுதாய மருத்துவரும் கூட.'இவன மொதல்ல மனுஷனாக்கனும்.அதுக்கப்புறம்தான் மருந்து தரணும்' என்கிற அவரின் வார்த்தைகளின் பாவண்ணனின் அடிமன வார்த்தைகள்தான். ஒருவரின் வியாதியை வைத்து பணம் எவ்வளவு ஈட்டுவது என்கிற ஈன வணிகக்கலை(?) பித்தாய்ப்பிடித்து ஆட்டுகிற அந்த மருத்துவத்தொழில் அல்ல இது.
மருத்துவர் தாத்தாவின் அணுகுமுறையில் எப்போதும் ஒரு விசித்திரம் இருக்கும்.'இந்த வேலிய தாண்டி உள்ள வந்துட்டா அது யாரா இருந்தாலும் அவுங்க நோயாளிங்க.அவுங்க நோய்க்கு மருந்து குடுக்கறது நம்ம கடமை,புரிஞ்சிதா?'என்கிற கம்பீரம் வாசகனைச்சிந்திக்க வைக்கும் அழகுச்சொல்லோவியம் பாவண்ணனின் இந்த மருந்து..
ஏதோ ஒரு மருந்து வாங்க மாணிக்கத்திடம் க்கொடுத்தனுப்பிய பணத்தை அது தேவைப்படாததுவாய்போய்விடவே அதனை நாணயமாக ஆனால் சற்று தமதமாக திரும்பவும் ஒப்படைக்கிறான். அதற்குள்ளாகவே அந்த மாணிக்கம் ஊர் திரும்பும் காலம் கூடிப்போனது. அது எப்படி எப்படி எல்லாமோ எளிய மனிதர்களை ப்பற்றித் தப்புதப்பாகக்கணக்குப்போடவைக்கிறது.
குடிப்பழக்கம் என்கிற நோயிலிருந்த மீட்ட மருத்துவர் தாத்தா மட்டும் அந்த மாணிக்கத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.நம்பிக்கை வீண் போகவில்லை. மீள்பயணத்தின் போது நிகழும் சில சமூகப்பிரச்சனைகள் அதுவே அவன் காலதாமத ஊர் திரும்புவதற்குக் காரணம் என்பதை அழகாகச்சொல்கிறது அந்த மருந்து என்னும் கதை.பாவண்ணனுக்கு நாட்டு வைத்திய சிகிச்சை முறைகளிலும் ஆழமான விஷயங்கள் அத்துப்படி என்கிற புதிய செய்தியையும் நமக்குச்சொல்கிறது..
படைப்பாளி என்பவனுக்கு பறவைகள் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு.அவை மனிதர்க்குச்சுதந்திரத்தை அறிவிப்பதாக அவன் உணருகிறான்.நினைத்த மாதிரிக்கு எல்லாம் அவை தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிடுவதாக என்ணுகிறான்.அவை தமக்கு பிடிபடாத எதனையோ சொல்லி நிற்பதாக அனுபவப்படுகிறான்.
வால்மீகி ஒரு பார்த்துவிட்ட குயில். அது அவனை மாகாவியம் எழுத வைத்தது.மயிலும் குயிலும் ஞானிகளின் தத்துவ அலசல்களில் தப்பாமல் இடம் பெறுகின்றன.அருணகிரியாருக்கும் கிளிக்கும் ஒருதொடர்பு. சுகப்பிரம்மத்தின் கிளிஉரு என அடுக்கிக்கொண்டே போகமுடியும். இலங்கை அரசன் ராவணன் சீதையைத்தூக்கிச்சென்றபோது சண்டையிட்ட சடாயு அறச்சீற்றம் எத்தனைப்பெரிய விஷயம்.
ஆங்கிலக்கவி ஷெல்லிக்கு அந்த வானம்பாடி,தமிழ்பாரதிக்கு ஒரு குயில் இன்னும் இந்த ரகத்தில் எத்தனையோ.தி.ஜானகிராமன் தன் நாவல் செம்பருத்தியில் எத்தனையோ பறவைகளின் விவரத்தை வாசகனுக்கு அள்ளி அள்ளி போடுவார். சொக்கிப்போவான் வாசகன்
.பாவண்ணனை கிளி அசைத்துப்பர்க்கிறது.பாவண்ணன் தன் கவிதைகளில் பறவையை மரத்தை நீர் நிலையை தொடாமல் அதனை முடித்துவிடமாட்டார். அப்படி ஒரு ஈர்ப்பு.இயற்கை த்தாயின் சித்திரங்கள் ஒரு படைப்பாளியை கிறங்கவே வைக்கின்றன.இந்தக்கதைத்தொகுப்புக்குத்தலைப்பாக வந்த கதை 'பச்சக்கிளிகள்'.கதையில் வரும் முத்துசாமி என்பானுக்கும் கிளிகள் கூட்டத்துக்கும் அத்தனை நெருக்கம்.அவனை கிளிகள் சுற்றி சுற்றி வருகின்றன.கொஞ்சுகின்றன.அந்தக்காட்சி பார்ப்போர் அனைவருக்கும் விந்தையாக அரிய விருந்தாக மாறி நிற்கிறது.பாவண்ணனின் வருணனை அக்காட்சியை அப்படியே கண் முன்னே கொண்டு வருகின்றது.
'என் இதயம் என்றுமில்லாதபடி வேக வேகமாகத்துடித்தது.பறப்பத்போல கையும் காலும் பரபரத்தன.மரத்தின் மீது தாவி,வானத்தை நோக்கித்தாவியப்படியே மேக மண்டலத்தின் மீது தாவிப்பறப்பது போல உல்லாச நினைவுகள் பொங்கி பொங்கி எழுந்தன.எந்த நிமிடத்திலாவது கண்ணுக்குத்தெரியாமல் அவை பறந்துவிடுமோ என்ற பதற்றத்தில் கிளிகள் மீது வைத்த பார்வையை எடுக்க யாருக்குமே மனம் வரவில்லை.முத்துசாமி அண்ணன் அந்தக்கிளிகளைத்தொட்டுத்தூக்கினார்.அவற்றின் சிறகுகளை வருடிக்கொடுத்தார்.கொஞ்சினார்.பறக்கவிட்டுப்பிடித்தார்.கன்னத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு முத்தமிட்டார்.' இவை அத்தனையும் கதாசிரியன் தனது அனுபவமாக இருக்க விழைவதையே வாசகன் அனுமானிக்க நேர்கிறது.
பறவைகளில் அந்த பச்சைக் கிளி. அதன் நாவை அன்றோ கலைவாணி இருப்பிடமாய்க் கொண்டாள். மாகவி பாரதியார் தனது வெள்ளைத்தாமரை பூவினில் இருப்பாள் பாடலில் இப்படிச் சொல்லிச்செல்வார்.வைணவ இறைமகள் ஆண்டாளுக்கும்,இறைவி மீனாட்சித்தாயுக்கும் பச்சைகிளியோடு எத்தனையோ பந்தம்.நாம் அறிந்த்வைதாம்.
'கண்காணிப்புக்கோபுரம்' என்னும் அடுத்த ஒரு சிறுகதைத்த்குப்புக்கு வருவோம்..பதாகை.காம் குறிப்பிட்டுள்ள பாவண்ணன் குறித்த ஒரு விவரணையை இந்த க்கதைதொகுப்பின் பின் அட்டை தாங்கி நிற்கிறது.அற்புதமான ஒரு இலக்கிய அளவுகோலின் துல்லிய கணிப்பு. அந்தப் பதாகையாருக்கு நன்றி சொல்லியாகவேண்டும்.
'உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவர் பாணி'என்று குறிப்பிடும் பதாகை.காம் அவருக்குப்பெருமை கூட்டி நிற்கிறது.மறைந்த அன்பர் கு.அழகிரிசாமிக்கு இந்தத்தொகுப்பை பாவண்ணன் சமர்ப்பணம் செய்துள்ளார்.சிறுகதைஉலகில் அழகிரிசாமியின் மரியாதைக்குரிய பணியை நாம் எங்கே மறப்பது.எளிய மனித மனங்கள் அழகிரிசாமிக்கு எழுத்துக்களம்.பாவண்ணனுக்கும் அப்படித்தான்.எளிய மனிதர்களின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிக்கொள்ளாத சொற்கட்டுக்களில் கோர்த்து க்கோர்த்து த்தமிழ் ச்சிறுகதைக்கு வளம் கூட்டியவர் பாவண்ணன்.
கண்காணிப்புக்கோபுரம்:
இந்தத்தொகுப்பில் முதல் கதை'கண்காணிப்புக்கோபுரம்'.அதுவே தொகுப்பின் பெயராக வந்துள்ளது. கண்காணிப்புக்கோபுரத்தின் பணியாள் அஜய்சிங்கா.அவனைப்பற்றிய சிறுகதை இது.அவன் ராணுவத்தில் சிப்பாய்.அங்கே நிகழும் அடக்குமுறைகள் குறித்து விவரமாய்ப்பேசுகிறது கதை.'மானம்,மரியாதை,கோபம்,ரோஷம் எல்லாத்தையும் காத்துல பறக்கவுட்டாதான் ராணுவத்துல சிப்பாய வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது.'கசப்பான அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம் ராணுவத்தில். பொதுவாக ஒரு ராணுவத்தின் செல்நெறி அப்படி.
'ஒரு நாளு துணிய உதறி கொடியில காயபோடும்போது அந்த ஈரம் தோட்டத்துப்பக்கமா மேஞ்சிட்டிருந்த அவுங்க வீட்டு நாய் மேல பட்டுட்து.உடனே மேடம் கீழே கெடந்த கம்பிய எடுத்தாந்து என் தோள்பட்டையிலயும் முதுவுலயும் அடியடின்னு அடிச்சிட்டா.அப்ப வாங்குன அடியில முதுகுத்தோல் கிழிஞ்சிட்டுது.ஆஸ்பத்திரியில போட்ட தையலோட தழும்புதான் அது'. என்றுசொல்லும் சிங்கா இந்திய ராணுவம் பற்றி நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறான்.
'சிலிகுரி ராணுவ முகாமில் வேலை செய்துகொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத்துடைக்கச்சொன்ன வேலையைச்செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக கீழ்படிய மறுத்தவன் என குற்றம் சுமத்தி இந்த குன்றிலிருந்த முகாமுக்கு மறு நாளே மாற்றிவிட்டதாகச்சொன்னான்.கசப்பான எத்தனையோ விஷயங்கள் ராணுவம் என்னும் குடையின் கீழ் தம்மை மறைத்துக்கொண்டு இருக்கவே செய்கின்றன.அந்த அப்பாவி ராணுவ சிப்பந்திக்கு மூன்று பெண் குழந்தைகள்.'பெரிய பொண்ணு டாக்டராவணும்.நடு பொண்ணு வக்கீலாவணும்.சின்ன பொண்ணு டீச்சராவணும்.நடக்குமா தோஸ்த்?' என்கிற அவன் மன விருப்பத்தைக் கதாசிரியனோடு பகிர்ந்துகொள்கிறான்.இப்படி எளிமையை எதார்த்தத்தை மனவலியை மானுட ப்பிரியத்தை வாசகனுக்கு தெரிவித்து ஒரு நிறைவு பெறுதல் பாவண்ணனுக்கு இயல்பாக அமைந்த எழுத்தாளுமை.
'அன்னபூரணி மெஸ்' என்னும் அடுத்த சிறுகதை. பாவண்ணனின் எழுத்து இங்கே மலராய் விரிகிறது.கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்ட அந்த ஒரு மெஸ் முதலாளி. அவரோ உழைதுப் பாடு படுவோருக்கு காசு கணக்குப்பார்க்காமல் உணவளித்து மெஸ் நடத்துகிறார்.அங்கே வேலை செய்யும் ராஜாராமன் என்னும் நல்ல ஊழியனும், காசு மட்டுமே பிரதானமாய் தீய தொழில்கள் பல செய்யும் பாலகுருவும் சந்திக்கிறார்கள்.தங்குவதற்கு அறை கேட்டு த்தேடிவந்த பாலகுருவுக்கு நல்லது சொல்லி திருத்த முயலும் அவன் தானே கெட்டு சீரழியத்தொடங்கி அறையைவிட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போகிறான்.நிர்கதியாக அந்த அறையில் விடப்பட்ட கெட்டவன் பாலகுரு ராஜாராமன் வேலை பார்த்த அந்த அதே அன்னபூரணி மெஸ்சில் வேறுவழியே இல்லாமல் வேலைக்குச்செல்லுகிறான்.
'பணத்தால சம்பாதிக்கிற மரியாதை பணமில்லாம போனதும் படுத்துடும்.தண்ணியில்லாத செடி மாதிரி.ஆனா நம்ப பண்பால சம்பாதிக்கிற மரியாத எப்பவும் பன மரம் மாதிரி நெலச்சி நிக்கும்' இப்படிப்பேசிய ராஜாராமன் காலியாகக்கிடக்கும் பாலகுரு அருந்திய அந்த மது பாட்டிலை எடுத்து தன் நாவில் சொட்டவிட்டு ருசி பார்க்கிறான்.பாலகுருவின் உடுப்புகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு அவன் கைப்பேசியையும் பர்சையும் திருடிக்கொண்டு அந்த பாலகுருவின் கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிவிடுகிறான்.தீயவை தீய பயக்கவே எப்போதும் காத்திருக்கும். தீமைகள் எப்போதும் சுறுசுறுப்பு கூடியவை. விதி வசமாகிய ராஜாராமன் தடம் இறங்கிப்போகிறான்.
ரூம் தேடி வந்த பாலகுருவோ சூழ் நிலைக்கைதியாகி அதே அன்ன பூரணி மெஸ்ஸில் வேலைக்கு சேர்கிறான்.மெஸ்சில் வியாபாரம் இப்போது ஓகோ என்று ஆகிவிட அவன் கை ராசிக்காரன் என்ற பெயர் வாங்குகிறான்.மெஸ் முதலாளியின் பாராட்டுச் சொற்கள் அவனை ஒரு ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வேலையில் சேர்ந்த ஒருவாரமாக' பணம் பணம் 'என்று முன்பு சதா நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பழைய பாழ் மனம் இப்போது எங்கோ போய்விட்டது.
மனித மனங்கள் படும் பாட்டை எழுத்துச்சித்திரமாய்க்கொண்டு வாசகனைக் கிறங்கவைக்கிறார் பாவண்ணன்.ஆனந்த விகடனில் பிரசுரமான அழகுக்கதை இது. மனிதர்கள் உயரிய பண்போடு வாழ்தலையும் பண்பைத்தொலைத்துவிட்டு அதன் மதிப்பு தெரியாமலேயே வாழ்க்கையில் உழன்று உலா வருவதையும் சிக்கலே இல்லாமல் எடுத்து வைக்கிறார்.
அடுத்துவரும் சிறுகதை'வைகுண்ட ஏகாதசி'.வைகுண்ட ஏகாதசி அன்று உயிர்விடும் ஒரு பெண். அந்த இறப்பு வீட்டு அமர்க்களங்கள் அவலங்கள் அனுசரிப்புக்கள் தெருவில் சாதாரணமாக ஒரிடம் சென்று வருவதற்கும் இடையூறாக அமைந்துவிடுகிறது.மனித மனம் தன் சக உயிர் ஒன்றின் இறப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.அதுவோ தனக்கும் நேர க்காத்திருக்கும் ஒன்று. மனித அறிவுக்குப்புரியாத விஷயம் புலப்படாத புதிர் அது.எப்படி இங்கு வந்தோம் எங்கு ஒரு நாள் போவோம் என்பது தெரியக்கூடிய எளிய விஷயமா என்ன?.
பாவண்ணன் அதனை எல்லாம் அசைபோட்டுக்கொண்டேதான் கதையை எழுதிக்கொண்டு போகிறார்.தான் சிறுவனாக இருந்த போது ஒரு சுடுகாட்டு வெட்டியான் ஒருவனின் தொடர்பும் தோழமையும் எப்படி இருந்தது என்பதனை ச்சொல்ல இந்தக்கதையைக்களமாக்குகிறார்.
அந்த குப்பாண்டி தாத்தா சுடுகாட்டுல பொணம் சுடுறவர் என்கிறார் கதைசொல்லி.
ஒரு பிணம் எரிக்க ரூபாய் நூறு தனக்குக்கூலியாக வேண்டும் என்பதில் கவனமாக கறாராக இருந்த குப்பாண்டி சுடுகாட்டுக்குப்பக்கத்திலிருக்கும் சினிமாக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து நூற்றுக்கணக்கில் அரைகுறையாக எரிந்து நாறிய பிணங்கள் தான் பணி ஆற்றும் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது நெஞ்சம் குமுறுகிறார். மெய்யான குப்பாண்டியை வாசகன் சந்திக்கிறான்.ஊர் கணக்குப்பிள்ளை பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்து ஒரு மேற்துண்டில் அதனை மூட்டையாய்க்கட்டி எடுத்து வருகிறார்.குப்பாண்டியைப்பார்க்கிறார்.'கொறவோ நெறவோ மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதின்னு சொன்னாரு கணக்கு புள்ள.என்கிறார் கதை சொல்லி.
குப்பாண்டி கணக்குப்பிள்ளையிடம் இப்படிப்பேசுகிறார்.'என்னிய என்ன கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா, செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா,அப்பா,அப்பா,அக்கா,தங்கச்சி,பேரன் பேத்தி மொறன்னா எனக்கும் அந்த மொறைதான் சாமி.இன்னும் என் ரத்தத்துடிப்பு அடங்கல.செத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவன் நான்.எங்கிட்ட எதுவும் பேசாத ,போயிடுசாமி.போயிடு.காசி பணம்லாம் ஒண்ணும் வேணாம் ,போயிடுன்னு அழுதுகினே சத்தம் போட்டாரு.கணக்குப்புள்ளயால ஒரு வார்த்த கூட பேசமுடியவிலை அப்படியே செலயாட்டம் நின்னுட்டாரு.யாரோ ஒருத்தவங்க அவருக்கு பதிலா பேச போனாரு.கணக்குப்புள்ள அவரு கைய புடிச்சி தடுத்துட்டு வாங்க போவலாம்னு திரும்பி எல்லாரயும் கூப்ட்டுக்னு போயிடாரு.'
கார்கில் யுத்தத்தில் இறந்துபோன ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கி காசு சம்பாரித்த கோட்டும் சூட்டும் போட்ட நெட்டை மனிதர்கள் குப்பாண்டி முன் சுருங்கித்தான் போவார்கள். இங்கே நம் எதிரில் சுடுகாட்டுக்கொட்டகைக்குக் கூரை வாங்கியதில் சுருட்டிக்கொண்ட பெரிய மனிதர்களும் குப்பாண்டி முன்னே தப்பமுடியாது. 'உண்மையிலேயே பெரிய மனுஷந்தான் அந்த தாத்தா'. பாவண்ணனின் குப்பாண்டி நம் நெஞ்சத்தை க்கொள்ளை கொண்டு விடுகிறார்.எழுத்து நிலை பெற்று நிற்கிறது.
'கடவுள் அமைத்து வைத்த மேடை' இந்த த்தொகுப்பில் சிறப்பாக க்காணப்படும் கதை.தினகரன் தீபாவளி மலர் 2015ல் இக்கதை வெளிவந்து இருப்பதை அறிய முடிகிறது.செத்துவிட்ட பழனி அண்ணனைப்பற்றிப்பேசும் கதை.பழனி அண்ணன் சோகமாய் இறந்து போகிறார். கதைசொல்லியின் மனம் இதை ஒப்ப மறுக்கிறது.ஏரிக்கரையின் பக்கம் போகும்போதெல்லாம் கதைசொல்லியை'அமைதியான நதியினிலே ஓடம்' பாட்டு பாடச்சொல்வார் இறந்துபோன பழனி அண்ணன். அந்த பழனி அண்ணன் தன் கண்களை மூடிக்கொண்டு இந்தப்பாட்டைக்கேட்பார்.அவர் முகம் அப்போது கனிந்திருக்கும்.தன் தந்தைக்கும் பிடித்த பாட்டு இது என்பார் பழனி அண்ணன். பழனி அண்ணனின் அந்தத் தந்தையும் கூட அருகில் எங்கோ அமர்ந்து இருந்து இந்தப்பாட்டை கேட்டுக்கொண்டு இருப்பாரோ என்றும் தோன்றும் என்கிறார் பாவண்ணன்.
மரமும் செடியும் ஏரியும் ஆறும் பாவண்ணனுக்கு மிகப்பிடித்த இடங்கள்.தன்னுடைய பிறந்த ஊர் தொடும் தென்பெண்ணையாக இருந்தாலும் சரி, பிழைப்புக்கு வந்த கர்நாடகாவில் பாய்ந்து ஓடும் துங்கபத்திரையானுலும் சரி பாவண்ணனுக்கு அவை உயிர் ஓட்டமுள்ள நதிகள்.அவை அவரோடு உறவாடுபவை.சம்பாஷிப்பவை.
'மரத்த பாக்கறன்,செடிய பாக்கறன்னு இட்ட வேலய மறந்துடாதடா.மொதல்ல ஒட்டட கோல எடுத்துகினு தென்னந்தோப்பு ஊட்டுக்கு போயி ஒட்ட்ட அடிக்கற வேலயபாரு.சுண்ணாம்பு அடிக்கற ஆளு பத்துமணிக்குலாம் வந்துருவாங்கன்னு ஒங்கப்பா சொன்னத மறந்துட்டியா?' அம்மாவின் சொற்கள் வழியாக அப்பாவே பேசுவதுபோல இருந்தது.நாக்கைக் கடித்தபடி அம்மாவைப்பார்த்து தலையசைத்துக்கொண்டே ஒட்டடைக்கோலுடன் வீட்டைவிட்டு வெளியே நடந்தேன் என்கிறார் கதை சொல்லி.
.பழனி அண்ணன் நட்டுவிட்டுப்போன முருங்கைக்கொம்பு முளைவிட்டு நிற்பதைக்கண்டு ப்பரவசமடையும் அந்தக்கதை சொல்லி,முருங்கையின் தளிர்கள்' கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் குருவி குஞ்சுகளின் அலகுகள்போல அவை குவிந்திருந்தன' என்று சொல்கிறார்.என்னே அற்புதமான உவமை.
பழனி அண்ணன் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு பாதி உடல் சிதைந்து கிடப்பதை நோக்கி'வெட்டிச்சாய்த்த வாழை மரமெனக்கிடந்தார்' என்று எழுதுகிறார் பாவண்ணன்.'கையில கேள்வித்தாளை வாங்கனதுமே அடுப்புல ரசம் கொதிக்கற மாதிரி மூள கொதிக்க ஆரம்பிச்சுடும்' என்று தொடங்கி 'கண்ணா மூச்சி ஆட்டத்துல புள்ளங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சிக்கும் தெரியுமா அந்த மாதிரி ஒவ்வொரு பதிலும் மனசுக்குள்ளயே ஓடி ஒளிஞ்சிக்கும்'என்று சொல்லிக்கொண்டே போகிறார்.அந்த ப்பழனி அண்ணன் ஒரு மரத்தில் சாய்ந்தபடி நிற்பார்.எதிரே புல் தரை.அதன் பச்சை பசுமை.அதன் மீது ஒரு மைனாக்குருவி தன்னந்தனியா நடந்து செல்கிறது. அப்போது அதனை நோக்கும் பழனி அண்ணன் மௌனத்தில் மூழ்கிவிடுவார்.காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தி பழனி அண்ணனை நம்முடன் பரிச்சயப்படுத்தும் பாவண்ணன் வென்று விடுகிறார்.
ஒரு வழியாக இப்படித் தீர்மானிக்கலாம்.
'வயசுல மனசு காக்கா மாரி நாலு பக்கமும் அலைபாயத்தான் செய்யும்,இல்லைன்னு சொல்லல.ஆனா நாமதான் கட்டுப்படுத்திக்கணும்.கட்டுப்படுத்தலன்னா நமக்கும் மிருகத்துக்கும் என்னாங்க வித்தியாசம் இருக்குது? கடவுள் அமைத்து வைத்த மேடைச்சிறுகதையில்இப்படிப்பேசும் எழுத்துக்கு எத்தனை எளிமை,எத்தனை உறுதி,எத்தனை பரிவு. எத்தனை ஆழம். பாவண்ணனின் எழுத்துக்களில் நேர்ப்படப்பேசும் அறம் தப்பாமல் ஓங்கி நிற்கும்
.பாசாங்குத்தனம் பயின்று -அறியா எழுத்துக்கள் அவை. அன்பின் மிகுதியால் வாசகனின் மனத்தோடு பேசுபவை.சமூக அக்கறை தொனிக்கும் இந்தக் குரல் பாவண்ணனின் எந்த படைப்பிலும் அடி நாதமாய் வெளிப்படும். அடக்கமாய் சொல்லவேண்டியதை அது வாசகனுக்குச் சொல்லி த்தன் கடமை முடிக்கும்.
-----------------------------------------------------------------------------------------.
thivasam
திவசம் எனும் தீர்வு -எஸ்ஸார்சி
அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான் திருமணம் செய்து கொடுத்தான்.மாப்பிள்ளையும் ஒரு ஆடிட்டர்.அது இருக்கட்டும்.
' தெவசம் நடத்திவைக்க வந்த அந்த புரோகிதர் போயாச்சா?'
'அவருக்கு வேறேங்கயோ ஒரு ஜோலி இப்பவே இருக்காம். அவர் போயிட்டார்'
'அந்த பிராம்ணன்'
'ரெண்டு பேருக்கு பிராம்ணார்த்த போஜனம் போட்டம்..ஒரு பிராம்ணன தெவசம் நடத்தி வச்ச அந்த வாத்தியார் தன் சுத்துகாரிய ஒத்தாசைக்கு வேணும்னு கையோட கூட்டிண்டு போயிட்டார். பாக்கி ஒண்ணு பெஞ்சில் உட்கார்ந்துண்டு பேப்பர் படிக்கறது.' அவன் மனைவிதான் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
'கொஞ்சம் மரியாதையா பேசு.அவர் காதுலயும் விழுமே'
'விழட்டுமே.தட்சணை கொடுத்தப்பறமா இங்க என்ன வேலை'
'வேல இருக்கறதானாலே அவர் உக்காந்துண்டு இருக்கார்' அவனின் தங்கை வெடுக்கென்று பதில் சொன்னாள்.
'இது என்ன ப்புதுசா ஒரு பதில்'
'ஆமாம் புதுசாதான்' அவள் தன் அண்ணிக்குப்பதில் சொன்னாள். அவன் குழம்பிப்போனான்.அவன் கண்கள் சிவந்து போனது.
அவனுக்கு சமீபமாய் அம்மாவும் இல்லை.அப்பாதான் எப்போதோ காலமாகிவிட்டார்.தங்கைக்கு அவன் தான் எல்லாமே. அவன் மனைவியும்தன் நகை நட்டுக்களை நாத்தனாருக்குக்கொடுத்து உதவினாள்.கல்யாணம் என்றால் சாமான்யமா என்ன? கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார் என்கிறார்களே சும்மா இல்லை அது. காரியங்கள் பிரயத்தனம் பண்ணி நிறைவேத்தி அனுபவித்தால் தான் அதன் அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும். எதுவும் இங்கு சுலுவான விஷயம் இல்லை...
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருக்கலாம்.ஒரு நாள் காலை ஐந்து மணி. வாயிலில் காலிங்க் பெல் அழுத்திடும் ஒலி.அவன் மனைவி வாயிற் கதவைத்திறந்தாள். அவன் தங்கைதான் நின்று கொண்டிருந்தாள் அவள் இப்படி ஒரு நாள் காலை அறக்க பறக்க வந்து நிற்பாள் என்று யார் எதிர் பார்த்தார்கள்..அவளை அடையாளமே காண முடியவில்லை. ' புகுந்த வீட்டிற்கு நாம் பார்த்து அனுப்பி வைத்த நாத்தனாரா இவள்' அவளுக்கு அய்யம் வந்தது..
'அண்ணி நானே தான்'
நாத்தனாரின் அதே குரல்.'யாரு?' அவனும் வாயிலருகே தயங்கியபடியே வந்தான்.'அண்ணா நான் தான் வந்துருக்கேன்'
'யாரு பாருவா' பார்வதி என்கிற அப்பா பாட்டியின் பெயரைத்தான் அவளுக்கு வைத்திருந்தார்கள்.
'ஆமாண்ணா உங்க பாருவேதான்'
அவளின் குரலே இது. தங்கை பாருவின் குரல்..
'என்னடி அம்மா ஆச்சு உனக்கு' தங்கையை க்கட்டிக்கொண்டு கோ வென்று கூச்சலிட்டான் தேம்பித்தேம்பி அழுதான்.கண்கள் நீரை அருவியாய்க்கொட்டின.அண்ணனும் அண்ணியும் அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துப்போனார்கள்.அவள் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
'அண்ணி எனக்கு ப்பசிக்கறது'
'டிபன் பண்ணித்தரேன்'
'இல்ல ரொம்ப பசி'
வீட்டில் இருந்த பழைய சோற்றைத் தட்டில் போட்டுக்கொண்டு அப்படி அப்படியே விழுங்கினாள்.தண்ணீர் குடித்தாள்.'நான் சித்த படுத்துகறேன் அண்ணி'
சொல்லிய அந்த பெஞ்சிலேயே உறங்கிப்போனாள்.அயர்ந்த உறக்கம்.
தங்கைக்கு பத்து வயதிலிருந்தே முதுகில் ஒரு சிறிய தேமல் இருந்தது. அண்ணன் அவளை த்தோல் மருத்துவர்களிடம் காண்பித்தும் இருக்கிறான்.அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர்.அதற்கு மேல் அதனில் ஒன்றும் இல்லை. ஆக பிரச்சனைய அத்தோடுவிட்டும் விட்டார்கள்.
அந்தத்தேமலை தங்கையின் முதுகில் கண்ட அந்தக்கணமே புது மாப்பிள்ளை'என்ன இது என்று கத்தி ஆர்பாட்டம் செய்து இருக்கிறார். சண்டை. சண்டை சண்டை.கணவன் மனைவி இருவருக்கும் பேச்சு வார்த்தையே நின்றுபோனது. அவள் வேறு எங்கேயாவது நிச்சயம் ஓடிப்போய்விடுவாள் என அவளை மாமியார் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்தனர். ஆயிரம் முயற்சிகள் செய்தாள். முடிந்தால்தானே. ஒரு நாள் மாலை அவள் எப்படியோ தப்பித்து அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அந்த ஊர்ப்பேருந்து நிலையம் வந்திருக்கிறாள்.
ஈரோட்டுக்கும் சிதம்பரத்திற்கும் செல்லும் நேர் வழிப்பேருந்தில் ஏறினாள். ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள். நடத்துனரிடம் கெஞ்சி இருக்கிறாள்.மனிதாபிமானம் வற்றிப்போய்விடவில்லை.அந்த நடத்துனர்' நம்ம ஊர் பொண்ணு.நானும் அடிக்கடி பார்த்தும் இருக்கேன். புதுசாக்கல்யாணம் ஆனது. குடும்பத்துல ஏதோ சிக்கல் சொல்லிக்கொண்டே ,சரி நீ போய் உக்காரும்மா என்று சொல்லி ஒரு சீட்டைக்கிழித்துக்கொடுத்து இருக்கிறான்
.'காசில்லை சார் என்னிடம்' என்று திரும்பவும் சொல்லியிருக்கிறாள்.' அது தெரியும்மா .அக்கா தங்கச்சிவ எனக்கும் இருக்கு' என்று அந்த நடத்துனர் அவளுக்குப்பதில் சொல்லி இருக்கிறான் .
பாரு அன்று அண்ணன் வீடு வந்தவள்தான். ஆண்டுகள் பத்து முடிந்து போனது.அந்த ஈரோட்டு மாப்பிள்ளை அவளைத்தேடி வரவேயில்லை.அவ்வளவுதான். காலம் அப்படியே போய்க்கொண்டிருந்தது.தங்கை அவனோடேயே இருந்தாள். இன்னும்தான் இருக்கிறாள்.
ஆண்டிற்கு இரண்டு திதிகள்:.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என வரும். இன்று அவன் வீட்டிற்கு பிராம்ணார்தத்திற்கு வந்த பிராம்ணன்தான். இதோ அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு இருக்கிறான்.இப்போது எழுந்து அவனிடம் வந்து நிற்கிறான்.கைகளைக்கட்டிக்கொண்டான்.
'சார். நான் உங்க தங்கயை என் ஆத்துக்காரியா ஏத்து கூட்டிண்டு போறேன். நேக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே வயசு நாற்பது தாண்டி ஆச்சு. உங்க தங்கை அவளுடைய அந்த பழைய சமாச்சாரம் எல்லாம் நீங்க என் கிட்ட சொல்லி இருக்கேள். எனக்கு நன்னாவே தெரியும்.நானும் மனப்பூர்வமா அவளை என் ஆம்படையாளா ஆக்கி அழைச்சிண்டு போறேன். அவளை நன்னா வச்சிப்பேன். அவளுக்கும் இதுல மனப்பூர்வ சம்மதம்னா எங்கூட அனுப்பி வையுங்கோ'.
அவன் தங்கை அவனிடம் போய் நின்றுகொண்டாள்.அவள் தன் சம்மதத்தைத்தெரிவித்து விட்டதாகவே அவன் உணர்ந்தான்.
'எங்க ஆத்து தெவசத்துக்கு நீங்க எத்தனை தடவை வந்து இருக்கேள்?'
'இது மூணாவது தெவசம்'
'உங்களை என் பித்ரு ஸ்தானத்துல வச்சிதானே நான் பாத்தேன்'
'அதுவும் சரிதான்' சொல்லிய அந்த பிராம்னன் தனது டூ வீலரை எடுக்கப்போனான்.தங்கை கூடவே போனாள்.ஒரு நிமிடம் அவனிடம் ஏதோ சொன்னாள்.திரும்பினாள்.
'அவர் கிட்ட என்ன பேச்சு' என்றாள் அண்ணி.
தங்கை பதில் எதுவும் சொன்னால்தானே.வீட்டின் உள்ளே சென்றாள்.எதுவுமே நடக்காதமாதிரி தன் காரியத்தை எப்போதும்போல் செய்துகொண்டு இருந்தாள்.'சரி விடு இது இத்தோடு போகட்டும்' என்றான் அவன் மனைவியிடம்.
மறு நாள் காலை எப்போதும்போல்தான் விடிந்தது.ஆனால் அவள் தங்கையைக்காணவில்லையே.இது என்ன விபரீதம்.
'எங்கடி போயிருப்பா'
'எனக்கு அந்த பிராம்ணன் மேலதான் சந்தேகம். அந்த தெவசம் பண்ணிவச்ச வாத்தியாரை இப்பவே புடிச்சிக்கேக்கணும்'
' ராத்திரி தாப்பா போட்டு இருந்த வாசக்கதவு இப்ப சும்மாதான் சாத்தி இருக்கு.அவ திறந்துண்டு போயிருக்கணும்.ஒரு பேக் இல்லே.அவ துணிமணி ஒரு பிட் கூட இங்க இல்லே'
அவன் டூத் பிரஷ் எடுத்துப்பல் விளக்கினான்.வழக்கம்போல் விபூதி எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ளப்போனான்.மரக்கட்டையில் செய்த விபூதி மடல்'அப்பா அவனுக்குக்கொடுத்துவிட்டுப்போனது.'அப்பாதுன்னு இது ஒண்ணுதான் என்னண்ட இருக்கு' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்.
அதனில் ஒரு கடிதம் அவனுக்காகக்காத்திருந்தது.
'அண்ணனுக்கும் அண்ணிக்கும்
என் நமஸ்காரம்.
பத்தாண்டுகளாக நீங்கள் இருவரும் கணவனாக மனைவியா வாழ்ந்ததை நான் ஒரு நாள் கூட பார்க்க வேயில்லை.என் வாழ்க்கை என் விதி அது எப்படி யாகவது. போகட்டும்.அதற்காக நீங்கள் சருகாகிப்போவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை அப்படி ஒரு மனக்கஷ்டம் உடன் பிறந்தவள் எனக்கும் இருப்பதை நீங்கள் உணர்ந்தும் இருக்கலாம்.
காலை .பல் துலக்கியதும் அப்பாவின் விபூதிப்பிறயைத்தொட்டு திரு நீறு பூசிக்கொள்வீர்கள். 'முருகா' என்று சொல்லி விபூதி இட்டுக்கொள்வதை நான் நீங்கள் குழந்தையாக இருப்பதுமுதல் நான் பார்த்தும் இருக்கிறேன்
.நான் அந்த பிராம்ணனோடு தான்போகிறேன்.வாழ்க்கை இனி நன்றாக அமையுமா அது எனக்கு எப்படித்தெரியும்.என்னைத்தேடவும் வேண்டாம்.என்னை மன்னித்து விடுங்கள்.வேறு வழி எனக்குத்தெரியவில்லை.அடுத்த முறை உங்களைப்பார்க்கும்போது நீங்கள் மூவராகி இருக்க அந்த முருகன் இனியாவது உங்களுக்கு அருளட்டும்' இப்படிக்கு உங்கள்,பாரு..' எனக்கு ஒரு உதவி.இப்படி நான் ஒரு பிராம்ணார்த்ததுக்கு வந்தவனோடதான் ஓடிப்போயிட்டேங்கற சேதி யாருக்கும் தெரிய வேண்டாம்.'
அவன் மனம் கனத்தது. கண்கள் இடுங்கின.அந்தக்கடிதத்தை மனைவியிடம் கொடுத்தான்.
-----------------------------------------------------------------------------
.
.
'
.
Friday, January 19, 2018
vellam4
சென்னையில் வெள்ளம் 4
பி எஸ் என் எல் லேண்ட் லைன் மட்டும் அங்கங்கே வேலை செய்தது. எப்பவோ போடப்பட்ட தாமிர கேபிள்.இன்னும் நன்றாகவே இருக்கிறது.மொபைல் போனில் எல்லாம் சார்ஜ் போயாயிற்று.மொபைல் போன், டவரும் படுத்துக்கொண்டது.
என் மருமகள் சேரன்மகாதேவிக்கு பி எஸ் என் எல் லேண்ட் லைனில் பேசிவிட்டுவந்தாள். அவளுக்கு ப்பிறந்தகம் அல்லவா. சின்ன அண்ணன் வீட்டுக்கு இரண்டு அபார்ட்மென்ட் தள்ளி ஒருவர் வீட்டில்தான் அந்த லேண்ட் லைனுக்கு உயிர் வந்து வந்து போனது.தொலைபேசி நிலையங்களில் தண்ணீர் புகுந்து அனேகமாக எல்லாமே பழுதாகி இருக்கலாம்.
தினசரி நாளிதழ்கள் வரவில்லை.டெலிவிஷன்கள் உயிரிழந்தன.யுபிஎஸ் ன் பேட்டரிகள் தமது மூச்சை இழுத்து இழுத்து விட்டு விட்டு போதும் அய்யா என்னை விடுங்கள் என சொல்லிப் படுத்துக்கொண்டன.
கலாபிளாட்சின் கோடியில் ஒரு கிணறு.ராட்டினக்கிணறு சென்னையில் மழையோ மழை ஆக அதனில் நம் நீட்டிக் கைவிட்டால் தண்ணீர் சேந்தலாம் இரண்டுமுழம் கயிறு அதிகம் என்கிறபடிக்கு அக்கிணறு இக்கணம் நிரம்பிக்கிடக்கிறது. கிணற்றிலிருந்து அபார்ட்மென்ட்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் எடுத்துப்போனார்கள்.சின்ன அண்ணன் மட்டும் நடு இரவில்தான் தண்ணீர் எடுப்பார். இதில் எல்லாம் என்ன வரட்டு க் கவுரமோ நானும் அவர் கூட கூட போய்வந்தேன்.பிளாஸ்டிக் பக்கெட்டும் குடமும் கிணற்றுக்குள் விட்டால் மொள்ள மறுத்து அவை தண்ணீரில் மிதக்கவே பார்க்கின்றன.
குடிப்பதற்குத்தண்ணீரோ அந்த வானத்து மழை நீர். இந்தக் கிணற்று நீர் மொண்டுபோய் பாத் ரூமுக்கு இன்னும் இத்யாதிகளுக்கு பயன் படுத்தினோம்.காமாட்சி விளக்குகள்தான் இரவில் வெளிச்சம் தந்தன.சின்ன அண்ணன் எங்கோ போய் லிட்டர் ரூபாய் நூறு என ஒரு லிட்டர் கிரெசின் வாங்கிக்கொண்டு வந்தார்.இரண்டு சிம்னி விளக்குகள் ஒளி தந்தன . ஒரு மூலையில் கிடந்தவை.இன்று அவைகளுக்கு வந்திருக்கிறது நேரம் .அவை பிரதானமாகி வெளிச்சம் கொடுத்துக்கொண்டு நிற்கின்றன.கன்னங்கறேல் என்கிற புகை அந்த சிம்னி விளக்கிலிருந்து வெளிப்பட்டது .ஏதோ ஒரு துர் நாற்றம்.சகிக்கமுடியாமல். எல்லாமே பழைய சமாச்சாரம்தான் இப்போதைக்குப் புதிதாக த்தெரிந்தது.
இந்த சிம்னி விளக்குகள் வைத்துக்கொண்டு அந்தக்காலத்தில் எங்கள் தருமங்குடி கிராமத்து வீட்டில் வாழ்க்கை நடந்தது.ஒரு சிம்னி விளக்கைச்சுற்றிக்கொண்டு நான்கு பேருக்கு உட்கார்ந்துகொண்டு படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கியது ஒரு காலம்.இப்போது சிம்னி விளக்கைப்பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.என் அப்பா ஒரு காலத்தில் டைனமோ இல்லாத சைக்கிளில் பட்டை நாடா திரி போட்ட விளக்கு (ஆமணக்கு) எண்ணெய் விளக்கு எரியவிட்டபடி இரவில் பயணம் போய் வருவார்.விளக்கின் முன்னே தடித்த வட்ட வடிவ சாதா க் கண்ணாடியும் மற்ற இரு திசைகளில் சிவப்பும் பச்சையுமென சிறு சிறு நீள்சதுரக் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருக்கும்.பார்க்க ப்பார்க்க வேடிக்கையாக இருக்கும். அந்த புராதன சைக்கிள் விளக்கு இன்னும் தருமங்குடியில் என் வீட்டு உள் அறையின் ஒரு பிறையில் தூங்கிக்கிடக்கிறது.பழங்கதையை தான்.மறக்கத்தான் முடிகிறதா என்ன.
'தி.நகர்'துரைசாமி சப் வே மழை நீரால் முற்றும்மூழ்கி இருக்கிறது. அது இருந்த இடம் தெரியவில்லை' சின்ன அண்ணன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
மாநகரத்தில் ரயில் இல்லை.பஸ் இல்லை. சென்னையிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
'பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்னையை ச்சுற்றிப்பார்க்கிறாராம். ராணுவ விமானத்தில் அரக்கோணம் கடற்படை விமானதளம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு வருவாராம். வெள்ளம் அதன் பாதிப்புகளை வானிலிருந்து பார்க்கிறார்' சின்ன அண்ணா சொல்லிக்கொண்டார்.
'அப்போதுதான் சரியாகப்பார்க்க வைக்கும்' என் பையன் அவருக்குச் சொன்னான்.
'குடிப்பதற்கு பாட்டில்- தண்ணீர் இங்கு வாங்கமுடியுமா?' நான் கேட்டேன்.
'எதிரே உள்ள சேட்டு பார்மசியில் விற்கிறார்கள்.கேள்விப்பட்டேன்.விலை தாறுமாறாக இருக்கலாம்'
'பரவாயில்லை நான் போய் பார்க்கிறேன்'
'நானும் வருகிறேன் வா' என்றார். இருவரும் ராமேஸ்வரம் சாலையில் கலா பிளாட்சுக்கு எதிரே இருந்த சேட்டுவின் பார்மசிக்குப்போனோம்.வீதியில் முழங்கால் அளவுக்குத்தண்ணீர். குமட்டும் துர் நாற்றம். மிதக்கும் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.பார்மசியில் நல்ல கூட்டம்.தண்ணீர் பாட்டில்கள் மும்முரமாக விற்பனை ஆகிக்கொண்டு இருந்தன .ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீர் முப்பது ரூபாய் என்றார்கள்.ஒரு நபருக்கு இரண்டு பாட்டில்கள் மட்டுமே என்கிற கட்டுப்பாடு. அது இல்லை என்றால் எல்லா குடி நீர் பாட்டில்களையுமே ஒரு ஆசாமியே வாங்கிப்போயிருப்பார்.சேட்டின் இந்த அகவிலை விற்பனையில்கூட ஒரு அப்படி இப்படி என்கிற ஒரு சப்பை நியாயமும் இருக்கவே செய்தது.
கலா பிளாட்ஸ் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளின் மீது நாய் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது.மழை கொஞ்சம் விட்டிருந்தது.திரும்பவும் மழை ஆரம்பித்துக்கொண்டது.நாய் ஓட்டம் பிடித்தது. திரும்பியது பின் கலா பிளாட்ஸ் வாட்ச்மேன் கட்டிலுக்குக்கீழாகப்போய் படுத்துக்கொண்டது.
தரை தளத்து வாட்ச்மென் அன்றிரவு சுமார் பன்னிரெண்டு மணி இருக்கலாம் குய்யோ முறையோ என்று அலறினார். அபார்ட்மென்ட்காரர்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள்.
'தோ தண்ணி ஏறுது ஏறுது' வாட்ச்மென் கத்திக்கொண்டே இருந்தார்.அவரின் கட்டிலை மூழ்கடித்துக்கொண்டிருந்தது வெள்ள நீர்.
'எல்லாம் அந்த அடையாத்து தண்ணீர்தான் சைதாப்பேட்டை தாண்டி உசுமான் ரோடால உள்ளார வருது' என்றார் சின்ன அண்ணன்.தரைதளத்துக்காரர்கள் முதல் தளத்துக்கு தஞ்சம் புகுந்துகொண்டிருந்தார்கள்.
'நந்தனம் பூரா வெள்ளம்.மெட் ரோ ரயிலுக்கு எடுத்த பெரும் பள்ளம் வழியா அந்த அடையாத்து வெள்ளத் தண்ணி புகுந்து போச்சி.மியாட் ஆஸ்பிடல் பூரா தண்ணி ஜெனெரேட்டர் ரூமுலயும் தண்ணீ. ஐசியுல இருந்தவங்க இருவது பேருக்கு காலிஆகிட்டாங்க..
பள்ளத்துல கட்டுன குலோபல் ஆசுபத்திரி பாதி தண்ணில மூழ்கி போச்சி பேஷன்ட்.எல்லாரையும் தூக்கிகிட்டு வெளிய வந்துட்டாங்க.குரோம்பேட்டை ஆசுபத்திரி,சானடோரியம் ஆசுபத்திரி எல்லாம்வெள்ள தண்ணி புகுந்துகிட்டு கட்டில்ல படுத்துக்கெடக்குற பேஷண்டை விரட்டுது.
ஏன் ஜெயா டிவி ஆபிசுல தண்ணி அங்கயும் ஒண்ணும் பாக்கி இல்ல' விடாமல் சொல்லிக்கொண்டே வாட்ச்மென் மாடிப்படி உச்சிக்கு ஏறி அமர்ந்து கொண்டார்.
'செம்பரம் பாக்கம் ஏரி தண்ணி தொறந்து விட்டதுதான் ஏகப்பட்ட பிரச்சனைக்கும் காரணம்'
சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.
'மரினா பீச்சுல மணல் இல்ல ஒரே தண்ணி வெள்ளக்காடு' என்றார் வாட்ச் மேன்.
'தி நகர் பஸ் ஸ்டாண்ட் ல எல்லாம் வெள்ளம். நின்னுகிட்டு இருந்த பஸ்ல எல்லாம் தண்ணி. அந்த பெரியார் சில கால தொட்டுகிட்டு வெள்ள த் தண்ணி
நிக்குது ,ஜியார் டி குள்ள எல்லாம் தண்ணி. நல்லி சில்க்ஸ் உள்ரதான் போவுமா வேண்டாமான்னு பாக்குது' என்றார் சின்ன அண்ணன்.
'எழுத்தாளரு விக்கிரமன்னு ஒரு அய்யரு எனக்கு தெரிஞ்சவரு செத்து நாலு நாளு ஆச்சி சவத்தை ஊட்டுக்கு கொண்டாருல .ஆசுபத்துரி அய்சு பொட்டில வச்சி இருக்குறாங்க' மீண்டும் தொடர்ந்தார் வாட்ச் மேன்.
'வானிலை அறிக்கை சொல்லுற ரமணன் ஊட்டுல வெள்ளமாம்.கேள்விப்பட்டேன்' சொன்னர் சின்ன அண்ணன்.
'இந்த வேளச்சேரி தான் ரொம்ப மோசம்.ஊரு மூச்சூடும் வெள்ளம்.பிட்டு எடம் பாக்கி இல்ல .எங்கயும் போட்டுலதான் வருலாம் போவுலாம்.விருகம்பாக்கம் வெம்புலியாயிதெருவுல வெள்ளம். அங்க சொடலையில பொணத்தை ஒரு சிமென்ட் மரத்துல கட்டிபுட்டு, வெட்டியான பாத்துக்கசொல்லிட்டு சாதி சனம் திரும்பிடுச்சி'
வாட்ச் மென் சொல்லிக்கொண்டே போனார்.
அவரின் வாயையே எல்லோரும் பார்த்துக்கொண் டே இருந்தனர்.
ஆதம்பாக்கத்து அண்ணனோடு பேசமுடியவில்லை.திருவல்லிக்கேணி அக்காவோடு பேச முடியவில்லை. முடிச்சூர் பகுதி எங்கும் ஹெலிகாப்டரில் உணவுப்பொட்டலம் போட்டார்களாம் பேசிக்கொண்டார்கள். சின்ன அண்ணன்
வீடு முழுவதும் சொதசொத என்று இருந்தது.வீதியில் வெள்ள நீரின் ஆட்சி.அங்கங்கே குப்பைகள் கூளங்கள் அருவறுப்பாய் மிதந்து கொண்டு கிடந்தன. தெருவில் சுற்றி வந்த நாய்கள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை.ஒன்றையும் கண்ணில் காணோம்.
என்ன கிடைத்ததோ அதுதான் அவ்வப்போது சமையல். காய்கறி .மார்கெட் எல்லாம் விலாசம் இல்லை.பசிக்கு ஏதேனும் கிடைத்தால் போதும் என்று இருந்தது.'இந்த மழை விடுமா விடாதா' என்று மனம் ஜபிக் கதொடங்கி விட்டது.வீட்டில் என்னதான் செய்வது? சில சமயம் எதுவுமே விளங்காமல் இருந்தது.போழுது போக்க எதுவும் இல்லை.மின்சாரம் இல்லை .ரேடியோ எல்லாம் கண்ணால் பார்த்து வெகுகாலம் ஆயிற்று. பின்னர் அதுவும் ஃப் எம் மட்டும்தான் அதற்கும் மின்சாரம்பேட்டரி வேண்டும்.டிரான்சிஸ்டர் வைத்துக்கொண்டு சிலோன் காரனின் தமிழ் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த பொற் காலம் எப்பவோ முடிந்து போனது.
எல்லாம் கைபேசிக்குள் என்றான பிறகு.அது இயங்க மறுத்தால் எங்கும் ஒரே இருள் பேரிருள் ..
'மழை விட்ட மாதிரி தெரிகிறது' என்றார் அண்ணன். வெளியில் வந்து ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.
எப்படியும் நேதாஜி நகருக்குப்போகமுடியாது. இனி அந்த வீட்டிற்குள் போக முடியுமா அப்படியே போனாலும் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது என்கிற அச்சம் தொற்றிக்கொண்டது.
'ஆதம்பாக்கம் ஆட்டோ ,பஸ் ஏதும் போகுமா?' என்னிடம் கேட்டாள் மனைவி.
'மின்சார ரயில்கள் ஒன்று இரண்டு ஓடுவதாகச்சொன்னார்கள்.தாம்பரம் போகாது பல்லாவரம் வரை போகும் என்றார்கள்.பாதை மூழ்கிக்கிடக்கிறது என்று அதற்கு மேல் போகவில்லை என்றார்கள்.எதுவும் உறுதியில்லை. மீனம்பாக்கத்தில் விமான ஓடுபாதைக்கு கீழாக செல்லும் ராட்சசனாய் விழித்திருக்கும் அந்த அடையாற்றின் மீது சிமென்ட் காங்கிரீட் மூடிகள் போட்டுத்தான் வைத்து இருக்கிறார்களாம். அந்த விஷயமே இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது.ஓடு பாதை எல்லாம் இடுப்பு அளவு தண்ணீர்.அங்கங்கே சேறும் சகதியும் நாறிக்கொண்டிருப்பதாகக்கேள்வி.
'ஆதம்பாக்கம் அண்ணன் வீட்டுக்குப்போகலாமா?' மீண்டும் மனைவி கேட்டாள்.
'தெருவெல்லாம் எப்படி இருக்கிறது என்ன சமாச்சரம் என்று பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு பேசுவோம்' என்றேன் அவளிடம்.
நானும் அண்ணனும் வீட்டைவிட்டு வெளியில் வந்தோம்.ராமேஸ்வரம் சாலை வழி போய் துரைசாமி சப்வே எப்படி எனப்பார்த்தோம்.ராமேசுரம் தெருவிலேயே முட்டி அளவுக்கு தண்ணீர் இருந்தது.எங்கும் ஒரே நாற்றம். மூக்கைப்பிடித்துகொண்டுதான் நடக்கவே முடியும்.துரைசாமி சப்வேயில் ஜெனெரட்டர் வைத்து தண்ணீர் இறைக்கிறார்கள்.இறைக்க இறைக்க தண்ணீர் குறைந்தால்தானே.தண்ணீர் இருந்த அளவுக்கே மீண்டும் மீண்டும் வந்து விடுகிறது.
தரைதளத்தில் இயங்கும் கடைகளில் எல்லாம் தண்ணீர் புகுந்துஅசுரனாய் ஆட்சி செய்தது.ஒரு ஜி ஆர் டி கடைக்குள் தண்ணீர் புகுந்து கடையின் உருக்குலைத்து ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதைப்பார்த்தேன்.அப்படியே தத்தி தத்தி தி நகர் நடந்து பேருந்து நிலையம் வந்தோம். பேருந்து நிலையத்துக்குள் சில பேருந்துகள் வெள்ள நீரில் நாறிப்போய் நின்றுகொண்டிருந்தன.பேருந்து இயக்கிகள் நடத்துனர்கள் சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள்.
'ஆதம்பாக்கத்துக்கு பேருந்து இருக்கா?'
'எது எங்க போவுது எப்ப போவுதுன்னு சொல்லமுடியாது. பஸ் வந்தா ஏறிகினுபோங்க.எதுவும் நாங்க சொல்லமுடியாது.ரோடு நல்லா இருந்தா வண்டி வுடுவம்.'
எனக்கு ப்பதில் சொன்னார்கள்.ஆட்டோக்காரர்கள் ஒருவர் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
''இண்ணைக்கு நாங்க சொல்றதுதான் ரேட்டு'
'ஆதபாக்கம் வருவீங்களா'
'கிண்டி போவுலாம்னு நெனைக்கிறேன்.அங்க போயிதான் ஆதம்பாக்கம் போவுறதா வேணாமான்னு சொல்லுலாம்'
'கிண்டி போயிட்டு பெறகு அந்தாண்ட போவுல்லன்னா'
'போவுலன்னா என்னா செய்வ திரும்பவும் தி நகருக்கே வந்துடவேண்டியதுதான்'
ஆட்டோக்காரன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.
'அண்ணே நாங்க எல்லாரும் ஆதம்பாக்கம் போறம்.இங்க வந்து அஞ்சி நாளாச்சில்ல'
'போவுணும்னு இல்ல.போனாலும் தப்பு இல்ல. அங்க கரண்டு தண்ணி எல்லாம் எப்படி இருக்கோ தெரியல. எதுக்கும் போயி பாருங்க' சின்ன
அண்ணன் எனக்குப்பதில் சொன்னார்.நானும் அண்ணனும் வீட்டிற்கு வந்தோம்.
'கெளம்புங்க நாம ஆதம்பாக்கம் போவுறம்'
'அங்க நிலமை எல்லாம் எப்படியாம் கேட்டிங்களா? கரண்டு இருக்குதா? கரண்டு இருந்ததாம், இப்பவும் இருக்கும்.இங்க எந்த ஏடிம்மும் வேல செய்யில செலவுக்கு .என்ன செய்றதுன்னு தெரியல்லே'
'எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை.என்னா செய்வ.' நான் என் மனைவிக்குப்பதில் சொல்லிப்புறப்பட்டேன்.
அண்ணிக்கு எங்களை அனுப்புவதற்கு மனசே இல்லை.நான் என் மனைவி, என் பையன் மருமகள், பேத்தி ஐவரும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக்கொண்டோம்.
'கிண்டி வரைக்கும் அறு நூறு ரூவா'
'என்னப்பா இப்படி சொல்ற. பஸ் கூட போவுதுன்னு சொன்னாங்க'
'ரயிலு பொவுலயே.அதான் சமாச்சாரம்.பஸ் ஒண்ணு ஒண்ணு போவும் அவ்வளவுதான்.உங்களுக்கு நானு வந்துருக்கேன். அத நினைச்சி பாருங்க'
' ஐநூறு போட்டுக்கலாம் கொஞ்சம் பாருங்க'
சரி ஒரு ஐம்பது தள்ளுங்க. ஐநூத்தி ஐம்பது கொடுங்க என்ன'
'சரி' அவனுக்கு பதில் சொல்லி நாங்கள் எல்லோரும் ஏறி அமர்ந்து கொண்டோம்.பெரிய ஆட்டோ கூட இல்லை. ஏதோ இருந்தது.
'அந்த பொண்ணுகிட்ட ஐநூரு ரூவா கொடுங்க' என் அண்ணனின் பெண்ணுக்குத்தான் என்மனைவி கொடுக்கச்சொன்னாள்.
'அதெல்லாம் எதுக்கு' என் சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார் .
'ஏடிம்மும் வேல செய்யுல அதான் சிக்கல்' சொல்லிக்கொண்டே ஒரு அய்நூறு ரூபாயை எடுத்து அண்ணன் மகளிடம் கொடுத்தேன்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.சின்ன அண்ணன் முகத்தில் சிறியதாக ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. பணப்புழக்கமே இல்லை.
சின்ன அண்ணன் குடும்பத்தோடு நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து கொண்டால் கஷ்டம்தானே.அதுவும் இந்த மழை வெள்ளத்தில்
எத்தனையோ விதத்தில் துன்பங்கள்.ஆதிவாசிகள் வாழ்க்கையாய் மாறிப்போனது இந்த சென்னை வாழ்க்கை.ஆட்டோ புறப்பட்டது.வழி நெடுகிலும் சேரும் சகதியும்.தரைதள வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து வாழ்க்கையை க்கந்தலாக்கி இருக்கிறது .மக்களைப்பார்க்கப்பார்க்க பாவமாக இருந்தது.
என்னுடைய செருப்பு ஒன்று இற்றுக்கொண்டு இம்சை கொடுத்தது.ஒரு நிமிடம் ஆட்டோவை நிறுத்தச்சொல்லி ஏதேனும் ஒரு கடை அதுவும் செறுப்புக்கடை திறந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.ஒரு குல்லா வைத்த பாய் மட்டும் அவரின் கடையைத்திறந்து ஆராய்ந்துகொண்டிருந்தார்.கடைஉள்ளே தண்ணீர் வெள்ளமாக இருந்தது.
'ஒரு செருப்பு வேணும்'
'என்னாப்பா பேஜாரு நானே நொந்துபோயி கெடக்குறன்'
'அவசரமா ஒரு செறுப்பு வேணும் ஆட்டோக்காரன் நிக்குறான்'
'சரி எவ்வளவு ரூபாயுல'
'ஒரு நூறு ரூவாயில'
'இந்தா இந்த செறுப்பு இது ஒன்பதாம் நெம்பரு உனக்கு சரியா இருக்கும்னு நெனக்குறன் என்ன'
'என்ன வெல'
'நூற்றி ஐம்பது'
'என்ன ங்க இது'
'உங்கிட்ட பேச எனக்கு நேரமும் இல்ல.காசு கொடு பொருள எடுத்துக'
ஒரு நூற்றி ஐம்பது ரூபாயை ஒப்படைத்தேன்.புதிய செறுப்பை காலில் மாட்டிக்கொண்டேன்.
'என்னா யோசனை.வேலய பாரு. பட்னத்துல ஐநூறு பேரு ஆயிரம் பேரு செத்துப்போனான். வெள்ளம் சிட்டிய பெறட்டி போட்டுடுச்சி'
அந்த பாய் தன்னுடைய வேலையைத்தொடர்ந்து கொண்டார்.
'உங்களுக்கு என்ன அழுவி போற பண்டமா'
'வந்துட்டாருடா பத்து நாளா கட தொறக்குல. இன்னும் எத்தினி நாளு ஆவும் வியாவாரம் தொடங்கறது .ஒண்ணும் சொல்லுறப்புலயே இல்லே.இதுல செத்த பேசுறாரு'
ஆட்டோக்காரன் ஹாரனை அடித்துக்கொண்டே இருந்தான்.தெற்கு உசுமான் ரோடெல்லாம் மரங்கள் முறிந்து விழுந்து கோரதாண்டவம் ஆடியிருந்தது.
.
பி எஸ் என் எல் லேண்ட் லைன் மட்டும் அங்கங்கே வேலை செய்தது. எப்பவோ போடப்பட்ட தாமிர கேபிள்.இன்னும் நன்றாகவே இருக்கிறது.மொபைல் போனில் எல்லாம் சார்ஜ் போயாயிற்று.மொபைல் போன், டவரும் படுத்துக்கொண்டது.
என் மருமகள் சேரன்மகாதேவிக்கு பி எஸ் என் எல் லேண்ட் லைனில் பேசிவிட்டுவந்தாள். அவளுக்கு ப்பிறந்தகம் அல்லவா. சின்ன அண்ணன் வீட்டுக்கு இரண்டு அபார்ட்மென்ட் தள்ளி ஒருவர் வீட்டில்தான் அந்த லேண்ட் லைனுக்கு உயிர் வந்து வந்து போனது.தொலைபேசி நிலையங்களில் தண்ணீர் புகுந்து அனேகமாக எல்லாமே பழுதாகி இருக்கலாம்.
தினசரி நாளிதழ்கள் வரவில்லை.டெலிவிஷன்கள் உயிரிழந்தன.யுபிஎஸ் ன் பேட்டரிகள் தமது மூச்சை இழுத்து இழுத்து விட்டு விட்டு போதும் அய்யா என்னை விடுங்கள் என சொல்லிப் படுத்துக்கொண்டன.
கலாபிளாட்சின் கோடியில் ஒரு கிணறு.ராட்டினக்கிணறு சென்னையில் மழையோ மழை ஆக அதனில் நம் நீட்டிக் கைவிட்டால் தண்ணீர் சேந்தலாம் இரண்டுமுழம் கயிறு அதிகம் என்கிறபடிக்கு அக்கிணறு இக்கணம் நிரம்பிக்கிடக்கிறது. கிணற்றிலிருந்து அபார்ட்மென்ட்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் எடுத்துப்போனார்கள்.சின்ன அண்ணன் மட்டும் நடு இரவில்தான் தண்ணீர் எடுப்பார். இதில் எல்லாம் என்ன வரட்டு க் கவுரமோ நானும் அவர் கூட கூட போய்வந்தேன்.பிளாஸ்டிக் பக்கெட்டும் குடமும் கிணற்றுக்குள் விட்டால் மொள்ள மறுத்து அவை தண்ணீரில் மிதக்கவே பார்க்கின்றன.
குடிப்பதற்குத்தண்ணீரோ அந்த வானத்து மழை நீர். இந்தக் கிணற்று நீர் மொண்டுபோய் பாத் ரூமுக்கு இன்னும் இத்யாதிகளுக்கு பயன் படுத்தினோம்.காமாட்சி விளக்குகள்தான் இரவில் வெளிச்சம் தந்தன.சின்ன அண்ணன் எங்கோ போய் லிட்டர் ரூபாய் நூறு என ஒரு லிட்டர் கிரெசின் வாங்கிக்கொண்டு வந்தார்.இரண்டு சிம்னி விளக்குகள் ஒளி தந்தன . ஒரு மூலையில் கிடந்தவை.இன்று அவைகளுக்கு வந்திருக்கிறது நேரம் .அவை பிரதானமாகி வெளிச்சம் கொடுத்துக்கொண்டு நிற்கின்றன.கன்னங்கறேல் என்கிற புகை அந்த சிம்னி விளக்கிலிருந்து வெளிப்பட்டது .ஏதோ ஒரு துர் நாற்றம்.சகிக்கமுடியாமல். எல்லாமே பழைய சமாச்சாரம்தான் இப்போதைக்குப் புதிதாக த்தெரிந்தது.
இந்த சிம்னி விளக்குகள் வைத்துக்கொண்டு அந்தக்காலத்தில் எங்கள் தருமங்குடி கிராமத்து வீட்டில் வாழ்க்கை நடந்தது.ஒரு சிம்னி விளக்கைச்சுற்றிக்கொண்டு நான்கு பேருக்கு உட்கார்ந்துகொண்டு படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கியது ஒரு காலம்.இப்போது சிம்னி விளக்கைப்பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.என் அப்பா ஒரு காலத்தில் டைனமோ இல்லாத சைக்கிளில் பட்டை நாடா திரி போட்ட விளக்கு (ஆமணக்கு) எண்ணெய் விளக்கு எரியவிட்டபடி இரவில் பயணம் போய் வருவார்.விளக்கின் முன்னே தடித்த வட்ட வடிவ சாதா க் கண்ணாடியும் மற்ற இரு திசைகளில் சிவப்பும் பச்சையுமென சிறு சிறு நீள்சதுரக் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருக்கும்.பார்க்க ப்பார்க்க வேடிக்கையாக இருக்கும். அந்த புராதன சைக்கிள் விளக்கு இன்னும் தருமங்குடியில் என் வீட்டு உள் அறையின் ஒரு பிறையில் தூங்கிக்கிடக்கிறது.பழங்கதையை தான்.மறக்கத்தான் முடிகிறதா என்ன.
'தி.நகர்'துரைசாமி சப் வே மழை நீரால் முற்றும்மூழ்கி இருக்கிறது. அது இருந்த இடம் தெரியவில்லை' சின்ன அண்ணன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
மாநகரத்தில் ரயில் இல்லை.பஸ் இல்லை. சென்னையிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
'பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்னையை ச்சுற்றிப்பார்க்கிறாராம். ராணுவ விமானத்தில் அரக்கோணம் கடற்படை விமானதளம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு வருவாராம். வெள்ளம் அதன் பாதிப்புகளை வானிலிருந்து பார்க்கிறார்' சின்ன அண்ணா சொல்லிக்கொண்டார்.
'அப்போதுதான் சரியாகப்பார்க்க வைக்கும்' என் பையன் அவருக்குச் சொன்னான்.
'குடிப்பதற்கு பாட்டில்- தண்ணீர் இங்கு வாங்கமுடியுமா?' நான் கேட்டேன்.
'எதிரே உள்ள சேட்டு பார்மசியில் விற்கிறார்கள்.கேள்விப்பட்டேன்.விலை தாறுமாறாக இருக்கலாம்'
'பரவாயில்லை நான் போய் பார்க்கிறேன்'
'நானும் வருகிறேன் வா' என்றார். இருவரும் ராமேஸ்வரம் சாலையில் கலா பிளாட்சுக்கு எதிரே இருந்த சேட்டுவின் பார்மசிக்குப்போனோம்.வீதியில் முழங்கால் அளவுக்குத்தண்ணீர். குமட்டும் துர் நாற்றம். மிதக்கும் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.பார்மசியில் நல்ல கூட்டம்.தண்ணீர் பாட்டில்கள் மும்முரமாக விற்பனை ஆகிக்கொண்டு இருந்தன .ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீர் முப்பது ரூபாய் என்றார்கள்.ஒரு நபருக்கு இரண்டு பாட்டில்கள் மட்டுமே என்கிற கட்டுப்பாடு. அது இல்லை என்றால் எல்லா குடி நீர் பாட்டில்களையுமே ஒரு ஆசாமியே வாங்கிப்போயிருப்பார்.சேட்டின் இந்த அகவிலை விற்பனையில்கூட ஒரு அப்படி இப்படி என்கிற ஒரு சப்பை நியாயமும் இருக்கவே செய்தது.
கலா பிளாட்ஸ் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளின் மீது நாய் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது.மழை கொஞ்சம் விட்டிருந்தது.திரும்பவும் மழை ஆரம்பித்துக்கொண்டது.நாய் ஓட்டம் பிடித்தது. திரும்பியது பின் கலா பிளாட்ஸ் வாட்ச்மேன் கட்டிலுக்குக்கீழாகப்போய் படுத்துக்கொண்டது.
தரை தளத்து வாட்ச்மென் அன்றிரவு சுமார் பன்னிரெண்டு மணி இருக்கலாம் குய்யோ முறையோ என்று அலறினார். அபார்ட்மென்ட்காரர்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள்.
'தோ தண்ணி ஏறுது ஏறுது' வாட்ச்மென் கத்திக்கொண்டே இருந்தார்.அவரின் கட்டிலை மூழ்கடித்துக்கொண்டிருந்தது வெள்ள நீர்.
'எல்லாம் அந்த அடையாத்து தண்ணீர்தான் சைதாப்பேட்டை தாண்டி உசுமான் ரோடால உள்ளார வருது' என்றார் சின்ன அண்ணன்.தரைதளத்துக்காரர்கள் முதல் தளத்துக்கு தஞ்சம் புகுந்துகொண்டிருந்தார்கள்.
'நந்தனம் பூரா வெள்ளம்.மெட் ரோ ரயிலுக்கு எடுத்த பெரும் பள்ளம் வழியா அந்த அடையாத்து வெள்ளத் தண்ணி புகுந்து போச்சி.மியாட் ஆஸ்பிடல் பூரா தண்ணி ஜெனெரேட்டர் ரூமுலயும் தண்ணீ. ஐசியுல இருந்தவங்க இருவது பேருக்கு காலிஆகிட்டாங்க..
பள்ளத்துல கட்டுன குலோபல் ஆசுபத்திரி பாதி தண்ணில மூழ்கி போச்சி பேஷன்ட்.எல்லாரையும் தூக்கிகிட்டு வெளிய வந்துட்டாங்க.குரோம்பேட்டை ஆசுபத்திரி,சானடோரியம் ஆசுபத்திரி எல்லாம்வெள்ள தண்ணி புகுந்துகிட்டு கட்டில்ல படுத்துக்கெடக்குற பேஷண்டை விரட்டுது.
ஏன் ஜெயா டிவி ஆபிசுல தண்ணி அங்கயும் ஒண்ணும் பாக்கி இல்ல' விடாமல் சொல்லிக்கொண்டே வாட்ச்மென் மாடிப்படி உச்சிக்கு ஏறி அமர்ந்து கொண்டார்.
'செம்பரம் பாக்கம் ஏரி தண்ணி தொறந்து விட்டதுதான் ஏகப்பட்ட பிரச்சனைக்கும் காரணம்'
சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.
'மரினா பீச்சுல மணல் இல்ல ஒரே தண்ணி வெள்ளக்காடு' என்றார் வாட்ச் மேன்.
'தி நகர் பஸ் ஸ்டாண்ட் ல எல்லாம் வெள்ளம். நின்னுகிட்டு இருந்த பஸ்ல எல்லாம் தண்ணி. அந்த பெரியார் சில கால தொட்டுகிட்டு வெள்ள த் தண்ணி
நிக்குது ,ஜியார் டி குள்ள எல்லாம் தண்ணி. நல்லி சில்க்ஸ் உள்ரதான் போவுமா வேண்டாமான்னு பாக்குது' என்றார் சின்ன அண்ணன்.
'எழுத்தாளரு விக்கிரமன்னு ஒரு அய்யரு எனக்கு தெரிஞ்சவரு செத்து நாலு நாளு ஆச்சி சவத்தை ஊட்டுக்கு கொண்டாருல .ஆசுபத்துரி அய்சு பொட்டில வச்சி இருக்குறாங்க' மீண்டும் தொடர்ந்தார் வாட்ச் மேன்.
'வானிலை அறிக்கை சொல்லுற ரமணன் ஊட்டுல வெள்ளமாம்.கேள்விப்பட்டேன்' சொன்னர் சின்ன அண்ணன்.
'இந்த வேளச்சேரி தான் ரொம்ப மோசம்.ஊரு மூச்சூடும் வெள்ளம்.பிட்டு எடம் பாக்கி இல்ல .எங்கயும் போட்டுலதான் வருலாம் போவுலாம்.விருகம்பாக்கம் வெம்புலியாயிதெருவுல வெள்ளம். அங்க சொடலையில பொணத்தை ஒரு சிமென்ட் மரத்துல கட்டிபுட்டு, வெட்டியான பாத்துக்கசொல்லிட்டு சாதி சனம் திரும்பிடுச்சி'
வாட்ச் மென் சொல்லிக்கொண்டே போனார்.
அவரின் வாயையே எல்லோரும் பார்த்துக்கொண் டே இருந்தனர்.
ஆதம்பாக்கத்து அண்ணனோடு பேசமுடியவில்லை.திருவல்லிக்கேணி அக்காவோடு பேச முடியவில்லை. முடிச்சூர் பகுதி எங்கும் ஹெலிகாப்டரில் உணவுப்பொட்டலம் போட்டார்களாம் பேசிக்கொண்டார்கள். சின்ன அண்ணன்
வீடு முழுவதும் சொதசொத என்று இருந்தது.வீதியில் வெள்ள நீரின் ஆட்சி.அங்கங்கே குப்பைகள் கூளங்கள் அருவறுப்பாய் மிதந்து கொண்டு கிடந்தன. தெருவில் சுற்றி வந்த நாய்கள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை.ஒன்றையும் கண்ணில் காணோம்.
என்ன கிடைத்ததோ அதுதான் அவ்வப்போது சமையல். காய்கறி .மார்கெட் எல்லாம் விலாசம் இல்லை.பசிக்கு ஏதேனும் கிடைத்தால் போதும் என்று இருந்தது.'இந்த மழை விடுமா விடாதா' என்று மனம் ஜபிக் கதொடங்கி விட்டது.வீட்டில் என்னதான் செய்வது? சில சமயம் எதுவுமே விளங்காமல் இருந்தது.போழுது போக்க எதுவும் இல்லை.மின்சாரம் இல்லை .ரேடியோ எல்லாம் கண்ணால் பார்த்து வெகுகாலம் ஆயிற்று. பின்னர் அதுவும் ஃப் எம் மட்டும்தான் அதற்கும் மின்சாரம்பேட்டரி வேண்டும்.டிரான்சிஸ்டர் வைத்துக்கொண்டு சிலோன் காரனின் தமிழ் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த பொற் காலம் எப்பவோ முடிந்து போனது.
எல்லாம் கைபேசிக்குள் என்றான பிறகு.அது இயங்க மறுத்தால் எங்கும் ஒரே இருள் பேரிருள் ..
'மழை விட்ட மாதிரி தெரிகிறது' என்றார் அண்ணன். வெளியில் வந்து ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.
எப்படியும் நேதாஜி நகருக்குப்போகமுடியாது. இனி அந்த வீட்டிற்குள் போக முடியுமா அப்படியே போனாலும் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது என்கிற அச்சம் தொற்றிக்கொண்டது.
'ஆதம்பாக்கம் ஆட்டோ ,பஸ் ஏதும் போகுமா?' என்னிடம் கேட்டாள் மனைவி.
'மின்சார ரயில்கள் ஒன்று இரண்டு ஓடுவதாகச்சொன்னார்கள்.தாம்பரம் போகாது பல்லாவரம் வரை போகும் என்றார்கள்.பாதை மூழ்கிக்கிடக்கிறது என்று அதற்கு மேல் போகவில்லை என்றார்கள்.எதுவும் உறுதியில்லை. மீனம்பாக்கத்தில் விமான ஓடுபாதைக்கு கீழாக செல்லும் ராட்சசனாய் விழித்திருக்கும் அந்த அடையாற்றின் மீது சிமென்ட் காங்கிரீட் மூடிகள் போட்டுத்தான் வைத்து இருக்கிறார்களாம். அந்த விஷயமே இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது.ஓடு பாதை எல்லாம் இடுப்பு அளவு தண்ணீர்.அங்கங்கே சேறும் சகதியும் நாறிக்கொண்டிருப்பதாகக்கேள்வி.
'ஆதம்பாக்கம் அண்ணன் வீட்டுக்குப்போகலாமா?' மீண்டும் மனைவி கேட்டாள்.
'தெருவெல்லாம் எப்படி இருக்கிறது என்ன சமாச்சரம் என்று பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு பேசுவோம்' என்றேன் அவளிடம்.
நானும் அண்ணனும் வீட்டைவிட்டு வெளியில் வந்தோம்.ராமேஸ்வரம் சாலை வழி போய் துரைசாமி சப்வே எப்படி எனப்பார்த்தோம்.ராமேசுரம் தெருவிலேயே முட்டி அளவுக்கு தண்ணீர் இருந்தது.எங்கும் ஒரே நாற்றம். மூக்கைப்பிடித்துகொண்டுதான் நடக்கவே முடியும்.துரைசாமி சப்வேயில் ஜெனெரட்டர் வைத்து தண்ணீர் இறைக்கிறார்கள்.இறைக்க இறைக்க தண்ணீர் குறைந்தால்தானே.தண்ணீர் இருந்த அளவுக்கே மீண்டும் மீண்டும் வந்து விடுகிறது.
தரைதளத்தில் இயங்கும் கடைகளில் எல்லாம் தண்ணீர் புகுந்துஅசுரனாய் ஆட்சி செய்தது.ஒரு ஜி ஆர் டி கடைக்குள் தண்ணீர் புகுந்து கடையின் உருக்குலைத்து ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதைப்பார்த்தேன்.அப்படியே தத்தி தத்தி தி நகர் நடந்து பேருந்து நிலையம் வந்தோம். பேருந்து நிலையத்துக்குள் சில பேருந்துகள் வெள்ள நீரில் நாறிப்போய் நின்றுகொண்டிருந்தன.பேருந்து இயக்கிகள் நடத்துனர்கள் சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள்.
'ஆதம்பாக்கத்துக்கு பேருந்து இருக்கா?'
'எது எங்க போவுது எப்ப போவுதுன்னு சொல்லமுடியாது. பஸ் வந்தா ஏறிகினுபோங்க.எதுவும் நாங்க சொல்லமுடியாது.ரோடு நல்லா இருந்தா வண்டி வுடுவம்.'
எனக்கு ப்பதில் சொன்னார்கள்.ஆட்டோக்காரர்கள் ஒருவர் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
''இண்ணைக்கு நாங்க சொல்றதுதான் ரேட்டு'
'ஆதபாக்கம் வருவீங்களா'
'கிண்டி போவுலாம்னு நெனைக்கிறேன்.அங்க போயிதான் ஆதம்பாக்கம் போவுறதா வேணாமான்னு சொல்லுலாம்'
'கிண்டி போயிட்டு பெறகு அந்தாண்ட போவுல்லன்னா'
'போவுலன்னா என்னா செய்வ திரும்பவும் தி நகருக்கே வந்துடவேண்டியதுதான்'
ஆட்டோக்காரன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.
'அண்ணே நாங்க எல்லாரும் ஆதம்பாக்கம் போறம்.இங்க வந்து அஞ்சி நாளாச்சில்ல'
'போவுணும்னு இல்ல.போனாலும் தப்பு இல்ல. அங்க கரண்டு தண்ணி எல்லாம் எப்படி இருக்கோ தெரியல. எதுக்கும் போயி பாருங்க' சின்ன
அண்ணன் எனக்குப்பதில் சொன்னார்.நானும் அண்ணனும் வீட்டிற்கு வந்தோம்.
'கெளம்புங்க நாம ஆதம்பாக்கம் போவுறம்'
'அங்க நிலமை எல்லாம் எப்படியாம் கேட்டிங்களா? கரண்டு இருக்குதா? கரண்டு இருந்ததாம், இப்பவும் இருக்கும்.இங்க எந்த ஏடிம்மும் வேல செய்யில செலவுக்கு .என்ன செய்றதுன்னு தெரியல்லே'
'எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை.என்னா செய்வ.' நான் என் மனைவிக்குப்பதில் சொல்லிப்புறப்பட்டேன்.
அண்ணிக்கு எங்களை அனுப்புவதற்கு மனசே இல்லை.நான் என் மனைவி, என் பையன் மருமகள், பேத்தி ஐவரும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக்கொண்டோம்.
'கிண்டி வரைக்கும் அறு நூறு ரூவா'
'என்னப்பா இப்படி சொல்ற. பஸ் கூட போவுதுன்னு சொன்னாங்க'
'ரயிலு பொவுலயே.அதான் சமாச்சாரம்.பஸ் ஒண்ணு ஒண்ணு போவும் அவ்வளவுதான்.உங்களுக்கு நானு வந்துருக்கேன். அத நினைச்சி பாருங்க'
' ஐநூறு போட்டுக்கலாம் கொஞ்சம் பாருங்க'
சரி ஒரு ஐம்பது தள்ளுங்க. ஐநூத்தி ஐம்பது கொடுங்க என்ன'
'சரி' அவனுக்கு பதில் சொல்லி நாங்கள் எல்லோரும் ஏறி அமர்ந்து கொண்டோம்.பெரிய ஆட்டோ கூட இல்லை. ஏதோ இருந்தது.
'அந்த பொண்ணுகிட்ட ஐநூரு ரூவா கொடுங்க' என் அண்ணனின் பெண்ணுக்குத்தான் என்மனைவி கொடுக்கச்சொன்னாள்.
'அதெல்லாம் எதுக்கு' என் சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார் .
'ஏடிம்மும் வேல செய்யுல அதான் சிக்கல்' சொல்லிக்கொண்டே ஒரு அய்நூறு ரூபாயை எடுத்து அண்ணன் மகளிடம் கொடுத்தேன்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.சின்ன அண்ணன் முகத்தில் சிறியதாக ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. பணப்புழக்கமே இல்லை.
சின்ன அண்ணன் குடும்பத்தோடு நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து கொண்டால் கஷ்டம்தானே.அதுவும் இந்த மழை வெள்ளத்தில்
எத்தனையோ விதத்தில் துன்பங்கள்.ஆதிவாசிகள் வாழ்க்கையாய் மாறிப்போனது இந்த சென்னை வாழ்க்கை.ஆட்டோ புறப்பட்டது.வழி நெடுகிலும் சேரும் சகதியும்.தரைதள வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து வாழ்க்கையை க்கந்தலாக்கி இருக்கிறது .மக்களைப்பார்க்கப்பார்க்க பாவமாக இருந்தது.
என்னுடைய செருப்பு ஒன்று இற்றுக்கொண்டு இம்சை கொடுத்தது.ஒரு நிமிடம் ஆட்டோவை நிறுத்தச்சொல்லி ஏதேனும் ஒரு கடை அதுவும் செறுப்புக்கடை திறந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.ஒரு குல்லா வைத்த பாய் மட்டும் அவரின் கடையைத்திறந்து ஆராய்ந்துகொண்டிருந்தார்.கடைஉள்ளே தண்ணீர் வெள்ளமாக இருந்தது.
'ஒரு செருப்பு வேணும்'
'என்னாப்பா பேஜாரு நானே நொந்துபோயி கெடக்குறன்'
'அவசரமா ஒரு செறுப்பு வேணும் ஆட்டோக்காரன் நிக்குறான்'
'சரி எவ்வளவு ரூபாயுல'
'ஒரு நூறு ரூவாயில'
'இந்தா இந்த செறுப்பு இது ஒன்பதாம் நெம்பரு உனக்கு சரியா இருக்கும்னு நெனக்குறன் என்ன'
'என்ன வெல'
'நூற்றி ஐம்பது'
'என்ன ங்க இது'
'உங்கிட்ட பேச எனக்கு நேரமும் இல்ல.காசு கொடு பொருள எடுத்துக'
ஒரு நூற்றி ஐம்பது ரூபாயை ஒப்படைத்தேன்.புதிய செறுப்பை காலில் மாட்டிக்கொண்டேன்.
'என்னா யோசனை.வேலய பாரு. பட்னத்துல ஐநூறு பேரு ஆயிரம் பேரு செத்துப்போனான். வெள்ளம் சிட்டிய பெறட்டி போட்டுடுச்சி'
அந்த பாய் தன்னுடைய வேலையைத்தொடர்ந்து கொண்டார்.
'உங்களுக்கு என்ன அழுவி போற பண்டமா'
'வந்துட்டாருடா பத்து நாளா கட தொறக்குல. இன்னும் எத்தினி நாளு ஆவும் வியாவாரம் தொடங்கறது .ஒண்ணும் சொல்லுறப்புலயே இல்லே.இதுல செத்த பேசுறாரு'
ஆட்டோக்காரன் ஹாரனை அடித்துக்கொண்டே இருந்தான்.தெற்கு உசுமான் ரோடெல்லாம் மரங்கள் முறிந்து விழுந்து கோரதாண்டவம் ஆடியிருந்தது.
.
Monday, May 29, 2017
kaayththamaram
காய்த்த மரம் -எஸ்ஸார்சி
அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது கொஞ்சமும்இல்லாமல் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்தார். பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் அவை கம்பீரமாக உலா வந்தன.
. தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் இலக்கியச் சிற்றிதழ் ' அழகுஇனியன்' அவர் எழுதிய அந்தக்கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவந்தது. அந்த சிற்றிதழின் ஆசிரியருக்கும் தெரியாமல் இல்லை இல்லை இது விஷயம் தெரியப்படுத்தாமலே அவைகளை எல்லாம் தொகுத்து குறிஞ்சிப்படி என்னும் கிராமுமில்லாத நகரமுமில்லாத ஒரு ஊரை மையமாக வைத்து இயங்கும் ஒரு பதிப்பகம் வெளியிட்டது.
இந்த விவகாரத்தில் விபாசவுக்கும் அந்த சிற்றிதழாசிரியருக்கும் சின்னதொரு மனத்தாங்கல்.'ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமுல்ல. கட்டுரைகள் புத்தகமாக வெளிவருகிறதுன்னு.எனக்கும் மகிழ்ச்சிதானே.புத்தகமா வந்த பிறகு யாரோ சொல்லித்தான் பாத்தேன்.' விபாசவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதித்தன் வருத்தத்தைக்குறிப்பிட்டிருந்தார். அந்த இனியனும் அவசர அவசரமாக இவ்வுலக வாழ்க்கை ப்போதுமென்று போய்ச்சேர்ந்தார்.
எழுத்தாளர் விபாச அந்த நூலை விருதுக்கு என்று அனுப்பிவைத்துவிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் காத்துக்கொண்டுதான் இருந்தார்.ஆனால் அரசாங்கம் விருது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் செய்யவில்லை.
அரசாங்கத்திற்கு என்று நொடிக்கு நொடி ஜனிக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் அவைதான் கொஞ்சமா என்ன, அங்கங்கே சொல்லி மாளாத ஆயிரம் சிடுக்குகள். சரிவுகள் சங்கடங்கள் இடிகள் பேரிடிகள் பூகம்பங்கள். ஒரு நிர்வாகம் என்பது லேசில்லை.அதுவும் ஒரு ராஜாங்கம் என்றால் சொல்லவா வேண்டும். 'இவைகளும் இல்லாதிருந்தால் விபாசவுக்குத்தான் எங்கே இந்த விருது கிடைத் திருக்க ப்போகிறது. யாராவது களை வெட்டி த்தான் இருப்பார்கள்' இப்படிக் கூட இலக்கிய அன்பர்கள் பேசிக்கொள்ளத்தான் செய்தார்கள்.
விபாச உயிரோடு இருந்து இந்த விருது வாங்கத் தலை நகர் சென்னைக்கும் வந்திருந்தால் எத்தனையோ மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.அவருக்கும் அத்தனை நிறைவு ஏற்பட்டிருக்கும். விருப்பங்கள் இல்லாமலா.ஆயிரம் இருந்திருக்கும். ஆனால் அப்படி எல்லாம் நிகழவில்லை. வினைதான் முடிந்த பின்னே ஒரு தினை போதும் இங்கே நில்லாது கண்டாய் என்கிறார்களே.அப்படித்தான் விபாச விடைபெற்றுக்கொண்டார்.
நான் போய் சடலத்தை பார்த்தேன்.பம்பரமாய் ச்சுழன்று ஆயிரம் செய்தி சொல்லும் சொல்லும் அவரது கண்கள் மூடிக் கிடந்தன.நெற்றியில் மூன்று குறுக்குப்பட்டை திருநீறு. வெற்றிலையை கசக்கிச்சுருட்டி உருண்டையாய் சடலத்தின் வாயில் வைத்திருந்தார்கள். நண்பர்களை ப்பார்த்துவிட்டால் ஓயாமல் நெகிழ்ந்து நெகிழ்ந்து பேசும் அந்த தெய்வம் அங்கே நீட்டிக்கிடந்தது.கால்கட்டைவிரல்களைக் கிழிந்த வெள்ளைத்துணியால் பிணைத்துக்கட்டியிருந்தார்கள். என் சக்திக்கு மாலை ஒன்று வாங்கிப்போட்டேன். பாதம் தொட்டு வணங்கினேன்.
விருதுக்கு அவர் த்தேர்வான சேதியும் அது தொடர்ந்து ஒரு இரண்டு நாட்களில் நிகழவுள்ள ஒரு சம்பிரதாய விருது வழங்கு விழாவும் சென்னையில் எங்கே எப்போது இது விஷயம் பதிப்பகத்தாரிடம் சொன்னர்கள்.எல்லாமும் அப்போது அப்போதேதான் தொலைபேசியில் சொன்னார்கள்.
'பதிப்பகத்தார் என்கிற முறையில நீங்க உங்க பரிச வாங்க வர்ரீங்க.ஏன் சார் அந்த நூலாசிரியர் விபாச ஏன் டெலிபோன போட்டா எடுக்கமாட்டேன்றாரு'
'அய்யா இப்ப இல்லயே'
'வெளி நாடு ஏதும் போயிருக்குறாரா' விருது வழங்கு அலுவலகத்து அதிகாரி மீண்டும் அந்த பதிப்பாளரைக்கேட்டார்.
'என்ன சார் இது. அந்த படைப்பாளி அய்யா இப்ப உயிரோட இல்ல. காலம் ஆயிட்டாங்க'
' அடடா விஷயம் என்ன கடைசியில இப்பிடி ஆயிடிச்சி. சாரி சார்.வேற எதாவது போன் நெம்பர் அவரு மனைவிக்கு இல்லை வாரிசுகளுக்கு உங்ககிட்ட இருந்துன்னா எனக்குக் கொடுக்க முடியுமா'
'அப்படி எல்லாம் நமக்கு பழக்கம் இல்லங்க.அவருகிட்டதான் பேசுவும் கொள்ளுவோம்.அவுரு உயிரோட இல்ல. அவுரு போன் நெம்பரு கட் பண்ணியிருப்பாங்க' பதிப்பகத்தார் பதில் சொன்னார்.
'சார் ஒரு உதவி. அவுங்க குடும்பத்துல அவுரு மனைவி இல்லன்னா அவுரு பிள்ளைங்க யாருக்காவது இந்த சேதி போயி அவுங்க வருவாங்களா'
'எனக்கு அந்த பக்கம்போற வேல ஒண்ணும் இருக்கு.நான் போயி கேட்டுப்பாக்குறேன்'
'ரொம்ப சந்தோஷம்.அப்படியே செய்யுங்க. வேற ஏதாவது விஷயம்னா உங்ககிட்ட தொடர்புகொள்றேன்'
'சரி சார்,நான் வச்சிடறேன்' பதிப்பகத்தார் முடித்துக்கொண்டார்.
அருகிலுள்ள சிறு நகரம். அங்கே படைப்பாளர் வாழ்ந் திட்ட இல்லம் பதிப்பகத்தாருக்குத்தெரியும். அவர் வீட்டருகே ஒரு பேருந்து நிறுத்தம்.அதனில் இறங்கி நடந்துபோனார்.அந்த ப்புறநகரின் பாரதியார் தெருவில் மையமாக எழுத்தாளர் விபாச வின் வீடு. ஒவ்வொரு பொருளையும் தானே பார்த்து பார்த்து வாங்கிக் கட்டிய அழகு வீடு. பார்க்க வெறிச்சென்று கிடந்தது.அவர் உயிரோடு இருக்கும்வரை அரவம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.ஏதாவது குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்.இல்லை அவரைப்பார்க்க யாரேனும் வந்து போவார்கள். பதிப்பாளர் விபாச வீட்டு வாயில் இரும்பு கேட்டினைத்தட்டினார்.
'ஆரு'
'அம்மா, நானு குறிிஞ்சிப்பாடி.பொஸ்தகம் போடரவரு'
'தெரியுமே.வாங்க. என் அய்யா இல்ல. அவுரு இல்லாம நீங்க வர்ரது இதுதாம் மொத நடை'
' இப்ப ஒரு நல்ல சேதி.அய்யா எழுதின ஒரு கட்டுரைப் புத்தகம். அரசாங்கப் பரிசுக்கு த்தேர்வு ஆகியிருக்கு'
'அப்படியா.சாரு இல்ல.இது கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு.அவுரு இல்ல.நா ஒரு மக்கு.அவுரு இருந்தவரைக்கும் அவர எங்க நான் புரிஞ்சிகிட்டன்' எல்லோரும் சொல்வது மாதிரியே அவரும் சொல்லி முடித்தார்.
'விருது மரியாதைங்க இதுக வாங்க அம்மா நீங்க சென்னைக்கு போய்வருவிங்களா'
'எந்த கதயை நா சொல்லுவன். அய்யாவுக்கு தல திதி குடுத்துப்பிறகுதான் இந்த ஊரை எல்லய தாண்டுலாம்.எங்க பழக்கம் அப்பிடி'.
'சரிதாங்க.உங்க பையன் வருவாருங்களா'
'அவன் ஒரு பேங்குல ஆபிசரு. அதான் அப்பா சாவுக்கும் பெற காரியத்துக்கும் லீவு எடுக்கவே பெரும் பாடு பட்டான்.வேணும்னா கேட்டுப்பாருங்க.அடுத்த வூடு.அய்யாதான் வீடு கட்டி குடுத்தாரு. பையனை பக்கத்துலயேகுடியும் வச்சீருக்குறாரு'
'சரி நானு அவரை பாக்குறன். பாப்பா எங்க இருக்குது?'
'அது எங்க இங்க இருக்கு. சாரு படிக்க வச்சி ஆளாக்கினாரு.இன்ணைக்கு அங்க பெரிய ரொபசரா வேலை பாக்குதுல்ல. கட்டிகுடுத்ததுலேருந்து அது மொரிஷிஸ் நாட்டுலதான இருக்கு. அய்யா சாவுக்கு வந்துது போச்சி'
'தெரியுங்க. நானும் கொழந்தயில பாப்பாவ பாத்து இருக்கேன்.
'தம்பிய கேட்டுபா க்குறன்' அவர் விடை பெற்றுக்கொண்டார்.வாயிற்கதவு மீண்டும் சாத்திக்கொண்டது. பதிப்பாளர் அடுத்த வீடு சென்று நின்றுகொண்டார்.அந்த வீடும் விபாச வீட்டு அந்த காம்பவுண்டுக்குள்ளேயே கம்பீரமாக இருந்தது.எழுத்தாளரின் மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து கையில் மாம்பழங்களோடு வாயிலுக்கு வந்தார். அருகிலுள்ள விவசாயப்பண்ணையிலிருந்து விபாச வாங்கி நட்டுவைத்து வளர்த்த அல்போன்சா மரம். பழுத்துத்தொங்குகிறது.
'சார் வாங்க'
'நீங்க யாருன்னு'
'சார் நாந்தான் உங்க அப்பா எழுதினத எல்லாம் புத்தகமா வெளியிடற பதிப்பாளர்'
'ஓ இந்த குறிஞ்சிப்பாடி அய்யாவா'
'ஆமாம் சார்.அய்யா எழுதின ஒரு கட்டுரை நூலுக்கு விருது கிடச்சிருக்கு.'
'அய்யாதான் காலமாயிட்டாரே' சட்டென்று பதில் சொன்னார்.விருது விபரம் எதுவும் கேட்கவில்லை.பதிப்பாளருக்கு இது ஒன்றும் அதிசயமாக இருந்திருக்காது. பெற்ற தகப்பன் செய்ததை எந்த மகன் ஆமோதித்து ஆகா மகிழ்ச்சி.என்று சொல்லிவிடப்போகிறான்.பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொற்கேளான் என்பதுதானே இவ்வுலகம்.
'இண்ணைக்கு ஆடிட் இருக்கு. நான் கொஞ்சம் மின்னடியேபோயி எல்லாம் சரியா இருக்குதான்னு பாக்குணும்.ஃபைனான்சு சமாச்சாராம். வேல பாகுறது வங்கியாச்சே.ஆர் பி ஐக்கு பதில் சொல்லுணும்'
'இல்ல அய்யா காலமா கிட்டதாலே.அந்த விருது வாங்க விழாவுக்கு தம்பி வந்தா ரொம்ப நல்லா இருக்கும்'
'இதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லே.அப்பா எழுதினாரு.அது அவுரு சொந்த வெஷயம்.'
'பேரப்புள்ளிங்க சென்னையிலதான படிக்குது' பதிப்பகத்தார் ஆரம்பித்தார்.
'அப்பாதான் பேத்தியையும் பேரனையும் நல்ல கல்லூரியா பாத்து சேத்தாரு. அவுரு இல்லேன்னா அந்தப்பெரிய காரியம் எனக்கு ஆகியிருக்காதுதான்'
விருட்டென்று சமையல் அறையிலிருந்து விபாச வின் மருமகள் வெளிப்பட்டார்.
'இன்னும் ஒரு பத்து நாளுக்கு பசங்க கிட்டயே பேசமுடியாது. செமஸ்டர் பிராக்டிகல். அதுவும் மெயின் சப்ஜெக்ட்ஸ்.அவுங்க கிட்ட இந்த சமாச்சாரம் யாரும் பேசவே கூடாது. அதுவுளுக்கு விழா அது இதுன்னு ஏதும் ஆச காட்டி கொழப்பிவுட்டுடாதிங்க. ஒரு மார்க்கு கொறஞ்சா நாம மெனக்கெட்டது எல்லாம் போச்சில்ல'
விபாசவின் மகனார் பெட்டி ப்பாம்பாக அடங்கிப்போனார்.
'நீங்க சொல்றதும் சரிதாங்க. காலம் அப்பிடி இருக்கு. நாம ஏதும் பேசமுடியாது'
பதிப்பாளர் விடைபெற்றுக்கொண்டார்.ஒன்றும் கதை ஆகவில்லை.அவர் மட்டுமே விருதுவிழாவுக்குப்புறப்பட்டுப்போனார்.
கூடிய கூட்டத்தை வைத்து விழா நிர்வாகிகள் காரியத்தை ஒப்பேற்றினர். அவருக்கு பதிப்பாளர் விருதுச் சான்றிதழும் சால்வையும் கொடுத்தார்கள்.
'சார் இறந்துட்டாரு. அந்த டெத் சர்டிபிகேட் வேணும். அந்த அம்மா தாசில்தாருகிட்ட அந்த லீகல் ஹேர் சர்டிபிகேட் வாங்கிட்டாங்களான்னு.தெரியுணும்.ஒரு நோட்டரிபப்ளிக் கிட்ட கையெழுத்து 'ஒண்ணும் இதுல எதுவும் பிரச்சனை இல்லன்னு' வாங்கிடணும். அப்புறம் அவுங்க கைப்பட மனு ஒண்ணு எழுதி அனுப்ப சொல்லுங்க. பாக்குலாம்' என்றனர் நிகழ்ச்சி க்குழுவினர்.
'வேற ஒண்ணும் இல்லயே' என்றார் பதிப்பாளர்.
'ஏன் விழாவுல எழுத்தாளருக்குன்னு போத்துற ஒரு சால்வ, சர்டிபிகேட்டு எல்லாம் இருக்கு நீங்க வாங்கிகிட்டு போயி அந்த விபாச மனைவிகிட்ட குடுங்க. உங்களமாதிரி இப்பிடி தன்மையா பதிப்பாளரு நாங்க பாத்தது இல்ல. நிகழ்ச்சியில எல்லாம் திருவிகிட்டுதான் ஒக்காந்து இருப்பாங்க. விழாவுல பதிப்பாளரும் படைப்பாளியும் உர்ரு உர்ரு ன்னுல்ல ஒருத்தரை ஒருத்தர் பாத்துகுவாங்க' என்றார் ஒரு நிகழ்ச்சிப்பொறுப்பாளர். விபாச உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வந்து சேர வேண்டிய சான்றிதழையும் சால்வையையும் பதிப்பாளர் அவரிடமிருந்து வாங்கி ப்பத்திரப்படுத்திக்கொண்டார்.
அடுத்தமுறை பதிப்பாளர், விபாசவின் ஊருக்குப்போகும்சமயம் ஞாபகமாக இந்த சமாசாரங்களை அவர் மனைவியிடம் ஒப்படைக்கவேண்டும்.
அவர்களும் இதைவாங்கிக்கொள்வார்களோ இல்லை 'இதுக எல்லாம் எதுக்கு சார்.வீணா வீட்டுல குப்பைய சேத்துகிட்டு' என்று சொல்லிவிடுவார்களோ என்கிற ஒரு அச்சம் முளைத்துக்கொண்டது.
அவர் குடும்பத்தாரிடம் அரசின் விருது ப்பணம் வாங்குவதற்கான வழிமுறையைச்சொல்லவேண்டும்.கொஞ்சம் தைர்யத்தை வரவழித்துக்கொண்டு அந்த விபாச மகனோடு பேசிவிட்டால் தேவலை. பாழும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை
ஒரு தபால் கார்டு வாங்கி அதனில் திருமதி விபாச விலாசம் எழுதி, விருதுத்தொகை பெற விபாசவின் டெத் சர்டிபிகேட்,லீகல் ஹேர் விஷயங்களை, இன்னும் நோட்டரி பப்ளிக் கையெழுத்து சமாசாரங்களை குறிப்பிட்டு அதனை அஞ்சலில் சேர்த்தார்.
மூன்றாம் நாளே ஒரு பதில் கடிதம் பதிப்பாளருக்கு வந்தது.அதில் என்ன எழுதியிருந்தது. அந்த பதிப்பாளரும் அதைத்தானே என்னிடம் இன்னும் சொல்ல வேயில்லை..
---------------------------------------------------
.
----------------
..
Monday, March 6, 2017
vellam3
சென்னையில் வெள்ளம்....3
'இது ரிசர்வேஷன் பொட்டி தெரியுமா தெரியாதா என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்த
அவரை சட்டை செய்யாமலேயே வண்டியில் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள்.என் மனைவி மட்டும் ஒரு இருக்கை பார்த்து அமர்ந்துகொண்டாள் .பேத்தியை அமர்ந்துகொண்ட மனைவியிடம் ஒப்படைத்தேன் நானும் என் பையனும் நின்றுகொண்டேதான் இருந்தோ ம் .வண்டியில் எங்கோ ஒரு மூலையில் இடம் இல்லாமல் இல்லை.வண்டியில் ஏறிவிட்டார்களே தவிர யாருக்கும் உட்கார்ந்துகொள்ளப் பிடிக்கவில்லை.மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதை ஒருமுறை பார்த்துக்கொண்டே ன்.வண்டியில் ஏறியவர்களை விரட்டிய முதியவர் தன் முகத்தைத்தூக்கிவைத்துக்கொண்டு இங்கும் அங்கும் விரைத்தபடி நடந்து கொண்டிருந்தார்.என்னோடு ஏறிக்கொண்ட இன்னொருவர் முதியவரிடம் பேச்சை ஆரம்பித்தார்.
'அய்யாவுக்கு எந்த ஊர் இப்ப எங்க போவுது'.
'பேச்ச மாத்தாதிங்க, இது ரிசர்வேஷன் கோச்சு இங்க நீங்க எப்பிடி வரலாம்'
'மழை கோட்டோ கொட்டுன்னு கொட்டுது.என்னா செய்யுறதுன்னு முழிக்கறம்.இந்த வண்டிதான் வந்துது.எங்களுக்கும் தெரியாதா ஏறுலாம் கூடாதுன்னு பெருசா சொல்ல வந்துட்டிங்க'
' வரட்டும் அந்த டி டியோ இல்ல யாரோ உங்களை என்னா பண்ணுறன்னு அப்ப பாருங்க'
எல்லோரும் அமைதி ஆயினர்.தாம்பரத்தைவிட்டு நகர்ந்தால் போதும் என்று ஆகிவிட்டது. வெளியில் எட்டிப்பார்த்தால் ஒரே வெள்ளக்காடாக இருந்தது.ஒன்றுமே புரியவில்லை. மாம்பலமாவது இந்த வண்டி செல்லுமா அல்லது இடையில் நின்றுவிடுமா அச்சம் தொண்டையைப்பிடித்தது.பேத்தி பாட்டியின் மடியில் கட்டை விரலை சப்பிக்கொண்டு கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருந்தாள்.மகனும் மருமகளும் ஏதோ முணுமுணு த்துக்கொண்டே வந்தார்கள்.ரயில் வண்டி தண்டவாளத்தில் போகிறதா தண்ணீரில் போகிறதா என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள்.
மின்சார ரயில்கள் எதுவும் ஓடவில்லை.நாங்கள் பயணிக்கும் ரயிலோடு சரி.பிறகு எந்த வண்டியும் நகரவில்லை.
நாங்கள் மாம்பலம் நிறுத்தத்தில் இறங்க இருப்பது எப்படியோ அறிந்து கொண்டுவிட்ட அந்த முதியவர் என்னிடம் வந்து நின்றுகொண்டார்.'இந்த வண்டி மாம்பலத்துல நிக்காது அது உங்களுக்கு த்தெரியுமா?' நான் என்ன பதில் சொல்வது என்று விழித்தேன்.மனம் கனத்துப்போய் இருந்தது.பசி வயிற்றை க்கிள்ளிக்கொண்டிருந்தது.'நின்றால் சரி நிற்காவிட்டால் எழும்பூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்வதுதான்'
'டிக்கட் மாம்பலம் வரைக்குந்தானே உங்ககிட்ட இருக்கு'
நான் அமைதியாக இருந்தேன்..'நீங்க உங்க வேலய பாருங்க.இந்த கவலயெல்லாம் உங்களுக்கு வேண்டாமே' சொல்லி முடித்தேன்.மாம்பலம் நிறுத்தம் வந்ததுஅந்த .வண்டியும் நின்றது.நாங்கள் அனைவரும் இறங்கி பிளாட்பாரத்தில் நின்றோம்.பிளாட்பாரட்தில் கடல் போல் மக்கள் கூட்டம்.
அந்த முதியவரை த்தேடினேன்.அவரைக்காணவில்லை/
.'எங்க அந்த பொல்லாத மனுஷன்' என்றான் என் பையன்.
'கிறுக்கனைக்காணவில்லை' பதில் சொன்னேன்.
'வக்கீல் தொழில் பாக்கிறவனா என்னன்னு தெரியல'
'இருக்கலாம்.ஆனா ஆளு இப்ப க்காணோ ம்'
'ரொம்ப வேகமா பேசுறாரு'
'சிலர் அப்படியே வாழ்ந்து முடிச்சுடுவாங்க'
இரும்பு ப் படிக்கட்டு எங்கே என்று தேடிக்கண்டுபிடித்தோம்.மேம்பாலம் அடைத்துக்கொண்டு மக்கள் சென்றுகொன்டிருந்தார்கள்.மழை விட்டபாடில்லை.ரெங்கனாதன் தெருவை எட்டிப்பார்த்தேன்.தெருவில் கால் முட்டிவரைக்கும் தண்ணீர் இருந்தது.ராமேஸ்வரம் சாலை முகப்பில் இருக்கும் தண்ணீரில் நடக்கவே முடியாது ஆக சுற்றிக்கொண்டுதான் அந்த கலா பிளாட்ஸ் சின்ன அண்ணன் குடியிருப்புக்குச்செல்லமுடியும் என்று சொன்னார்கள்.
;ஒரு ஆட்டோ பிடிங்கோ சுற்றிண்டு போயிடலாம்' என் மனைவி என்னிடம் மெதுவாகச்சொன்னாள்.ஓரு ஆட்டோ பிடித்து அதனுள் எங்களை ப்பொறுத்திக்கொண்டோம்.ஆட்டோ ஒரு படகு போல தண்ணீரில் சென்றுகொண்டிருந்தது.'இனி எந்த ரயிலும் கிடையாது.
'டிராக்கெல்லாம் தண்ணீ நிக்குதுன்னு சொல்றாங்க.மழை உடற மாதிரி இல்லே.இது எப்பிடி முடியுமோன்னு பயமா இருக்கு' ஆட்டோக்காரன் எங்களிடம் சொல்லிக்கொண்டான்.என்னோடு என் மனையாள் என் மகன் மருமகள் பேத்தி ஆக எல்லோரும் கலா பிளாட்ஸ் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பைய்ய நடந்து அண்ணன் வீடு நோக்கி போயிக்கொண்டு இருந்தோம்.வாட்ச்மேன். கலா பிளாட்சின் வாயிலில் மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்துகொண்டு இருந்தான்
.'தெரு தண்ணீ உள்ள பூந்துடுமே அதுக்குத்தான்' அவன் சொல்லிக்கொண்டான்.'இங்கயும் தண்ணி வருமா என்ன' என் மனைவி அவனிடம் கேள்வி வைத்தாள்.'மழை ஓயாம பேஞ்சா என்ன ஆவும் சொல்லுங்க' அவன் பதில் சொன்னான்.என் மனதிற்கு அச்சமாக இருந்தது.அண்ணன் எங்கள் கூட்டம் பார்த்து ஏதேனும் சொல்லிவிடுவாரா என்றும் கூட ஒரு அச்சம் இருக்கத்தான் செய்தது.'எல்லாரும்உள்ள வாங்க.ஈர துணிய மாத்திகுங்க.வெந்நீர மட்டும் குடியுங்க.பச்சதண்ணீ வேணாம்.கொழந்தை பத்திரம். எப்பவும் ஒரு சொட்டர போட்டுவைங்க' அண்ணன் எங்களிடம் சொல்லி நிறுத்தினார்.மின்சாரம் இல்லை.தொட்டியில் தண்ணிர் இல்லை.பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் குடங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தாள் அண்ணி.அண்ணன் மகள் வக்கீலுக்கு படிக்கும்பெண்தான் வீட்டில் அண்ணிக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள்... .
Subscribe to:
Posts (Atom)