Thursday, September 26, 2019

translated poems-Dharm panch





 Dharm-panch tamil poems.

Translation -essarci

Human body.

If one died  and burnt
Ashes we get.
Buried in the ground
Body turns soil again.
Human race
Negates the path of love
Where passion and hegemony rule.

Joy

On hard work
If every moment is spent
Every day will pass you joyously.

LIGHT
Wick of a lamp
Gives light turning to ashes.
Practise like that
Success waits at the border
Of every failure
Do you prepare
 to  accept filure.


Loss
Oh man
Having faith in fate
You forget to believe human effort.
Seed gets in to soil buried
Grows that to a big tree.
Have you not witnessed it.
Get  away from hard wok
You will lose life yours.
Losing confidence is losing success.

Oh youth
If a leaf is dropped
The branch is intact.
If a flower is dropped
The plant is intact.
Can a failure
Makes you to lose interest in life.
Losing confidence you struggle,
BUT not  to fall down.

Only once
Sweet time
Youth but once.
Get the target fixed
For every moment
 no grief will
Crush you in old age.

Haikoo

Rehearsal for death
Sleep is.
Enters through the eye
Hurts the heart
Love.

Stone becomes statue
Earth becomes pot
Seed becomes tree
Tree becomes door
Cotton turns to dress
Effort  if stopped not
Alone fetch you success.













Wednesday, September 11, 2019

kopiyin ' manakkannaadi'







கலியுகன் கோபியின் ’மனக்கண்ணாடி’ ஒரு பார்வை  -எஸ்ஸார்சி
’மனக்கண்ணாடி’ கவிஞர் கலியுகன் கோபியின் எட்டாவது கவிதைத்தொகுப்பு.கவிதைகள் வரிசையாய் எண்களிடப்படவில்லை.அவைகள் தலைப்புப்பெயர் இல்லாமலும் வந்திருக்கின்றன.எப்படியும் அவை எண்பதுக்கு மிகும்.எல்லாமே குறுங்கவிதைகள்.பளிச்சென்று செய்தி சொல்லும் புதுக்கவிதைகள். நேராக விஷயத்தை வாசகனுக்கு வெடித்துச்சொல்லும் கவிதைகள்தாம் அத்தனையும்.
முதல் கவிதையே இரு வேறு முரண்கள் பற்றிப்பேசுகிறது. அம்மா வறுமையில் அகப்பட்டு வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டாள். இன்மைதான் அனைத்திலும் கொடியது என்பார் திருவள்ளுவர். மனைவி பெருமையோடு வாழ்க்கையை அனுபவிக்கிறாள். நுகர்வில் நல்லதும் தீயதும் ஒரு கூரையின் கீழ். தாயின் உழைப்புத்தான் மருமகளை வளம்பட வாழவைத்துவிட்டுப்பின் இற்றுக்கொண்டது. கவிஞர் நல்ல தொடக்கத்தை கன சிந்தனையோடு தொடங்குகிறார்.
குழந்தையும் கவிதையும் ஒன்று என்று சொல்கிறது அடுத்தகவிதை .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதறிவோம்.கவிதையை அதனோடு மூன்றாவதாகச்சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார் கவிஞர்.
குருடர் பள்ளி முன் ஒரு மேடை.அதனில்கோரிக்கை முழக்கங்கள் எழுப்புகிறார்கள்.’ஒளி படைத்த கண்ணினாய் வா வா’ என்று.கவிஞர் ஒரு சோகமான அனுபவத்தைக்கவிதையாக்கியிருக்கிறார்.
காலம் தந்த தோல்விகள் என்கிற அற்புதமான சொல்லாடலை முயற்சியின் முதல் படி என்று தொடங்கும் கவிதையில் சந்திக்கிறோம்.தோல்விகள் வெற்றிக்கான காத்திருப்பு அன்றி வேறென்ன என்கிற வரி மந்திரம்போல்  வேண்டுமடா சொல் இன்பம் என்பார்களே அப்படி வாசகனுக்கு அனுபவமாகிகிறங்க வைக்கிறது.மனிதன் தானே தன் சமுதாய அமைப்பைக்கெடுத்துக்கொள்ளச் சாதியை வளர்த்து விட்டிருக்கிறான். பாரதி வேதம் நிறைந்த நாடென்பார் கோபியோ சாதிகள் நிறைந்த நாடென மனம் கொப்பளிக்கிறார்.
ஜன நாயக நாட்டில் தேர்தல் வருகின்றது.வேட்பாளர்கள் எறும்பாக உழைக்கின்றனர். நெல் மணியென வாக்கு சேகரிக்கப்படுகிறது.தேர்தல் முடிந்து அவர் வெற்றியாளர் ஆகிறார்.  இப்போது பாருங்கள் அவர் செயல்பாடுகளை. கொள்கைகள் நீர்த்துப்போன அவரின் நடவடிக்கைகளை .சுய நலமே இன்று அவரின் பிரக்ஞை அழகாகச்சொல்கிறார் கவிஞர்.
உப்பு நீராம்
வியர்வையில் குளித்தோம்
உழைப்பைச்சிலுவையாய் சுமந்தோம்’ என்று தொழிலாளியின் துயர் பற்றி யதார்த்தமாக ச்சொல்லிச்செல்கிறார். பெறுகின்ற ஊதியம் காற்றினிலே கரைந்த கற்பூரம் என்கிறார், இருக்கும் அது இல்லாமலே போய்விடும் ஒரு நாள் என்பதனை அற்புதமாகக்கூறுகிறார்.
பறவைகளே தரை இறங்காதீர். இந்த மண் மனிதனின் காலடி பட்டு தூய்மைகெட்டுக்கிடக்கிறது என உள்ளம் உழல்கிறார் கவிஞர். ‘மனக்கண்ணாடியில்’ கலியுகன் கோபி  மெய்யாக சாதனையாளராகிறார்..
’கொத்திச்சென்றுவிடும் கழுகுகள்
கோழிகளுக்குத்தெரிவதில்லை’ என்று பேசும் கவிஞர் அமெரிக்கக்கெடுமதியின் சூழ்ச்சியை சூசகமாக சொல்லித் தான் யார் பக்கம் என்பதை வாசகனுக்கு இயம்பிவிடுகிறார்.
அத்தனைக்கவிதைகளையும் நூலகர் சியாமளா  மொழிபெயர்த்துக்கொடுக்க அவை இதே புத்தகத்தில் கம்பீரமாகக்காட்சி தருகின்றன.  மொழிச்சிக்கல் இல்லாத எளிய நடை மொழிபெயர்ப்புக்கு மெருகு கூட்டுகிறது.மொழிபெயர்ப்பாளர் பாராட்டுக்கு உரியவர்.
‘poverty is the only
Case of hut’  என்பது நச்சென்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Blossoming and withering natures’ rule ?’ என்பது வாசகனைச்சிந்திக்க வைக்கிறது.
------------------------






Tuesday, September 10, 2019

sangu- interview




எஸ்ஸார்சி – நேர்காணல் கேள்விகள் சங்கு- வளவதுரையன்
கல்வி மற்றும் இளமைப்பருவம்
நான் கல்வி பயின்றது பற்றிச்சொல்லவேண்டுமென்றால் அது இப்படித்தான்.பள்ளிக்கல்வியை என் பிறந்த ஊர் தருமநல்லூர் அண்டையூர் வளயமாதேவி மற்றும் கம்மாபுரத்தில் என முடித்துக்கொண்டு கல்லூரிப்படிப்புக்கு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.
தருமநல்லூரில் அப்போது ஆரம்பப்பள்ளி தொடங்கியிருந்தார்கள்.என் தமக்கையர் மூவர் அண்ணன்மார்கள் இருவர்  இவர்கள் யாவரும் படித்தபோது உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லை.இரண்டு மைல்கள் வயல் வரப்பு ஏரிக்கரை வாய்க்கால் காட்டு அய்யனார்கோவில் என நடந்து சென்று விளக்கப்பாடி என்னும் சிறிய ஊரில்தான் படித்தார்கள்.
தருமங்குடி என்று என் எழுத்துப்படைப்புக்களில் குறிப்பிடுவது என் பிறந்த ஊரான தருமநல்லூரைத்தான்.என் கிராமத்துப்பள்ளி மாரியம்மன் கோவில் வாகன மண்டபத்தில் நடந்தது. நாட்டு ஓட்டு போடப்பட்ட வால் போன்ற கட்டிடம் அது. சித்திரை முழு நிலா நாளன்று யாதுமாகிய அந்த மாரித்தாயைச்சுமந்து வரும் வர்ணம் பூசிக்கொண்ட கட்டைச்சிம்மம்  ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கும்.மழை பெய்தால் மண்டபத்தில் அங்கங்கு ஒழுகும்.கட்டாந்தரையை ஒவ்வொரு சனிக்கிழமை  மாலை தோறும் மாணவர்கள்  வீதியில் பொறுக்கி வந்த சாணங்கொண்டு மெழுகுவோம். ஐந்து வகுப்புக்கள் இரண்டு ஆசிரியர்கள். கள்ளங்கபடமற்ற நல்லாசிரியர்கள்.
வளையமாதேவி எனது அண்டையூர். அங்கிருந்த எனது பள்ளி ராசாங்கம் என்பவரைத்தமிழாசிரியராய்க்கொண்டிருந்தது.அழகு தமிழையும் நல்லொழுக்கத்தையும் மனதில் விதைத்தவர் அவர். கருப்பு  நிறத்தில் தலைமுடியைத்தூக்கி வாரிக்கொண்டு வாட்ட சாட்டமாய் இருந்த அவர் வெள்ளை வெளேர் என வேட்டியுடன் முழுக்கைசட்டை போட்டிருப்பார். வள்ளலாரின் பெயர் கொண்ட அப்பள்ளி இன்றளவும் என் மனத்தில் அந்த வாடிய பயிரைக்கண்டுவாடிய வள்ளலைத்தொழக்கற்றுத்தந்தது.
நான்கு மைல் நடந்து சென்றால் கம்மாபுரம். வகுப்பு பதினொன்று வரை அங்கு பயின்றேன்.இலக்கிய மன்றச்செயலாளன் நான். பள்ளியின் இலக்கிய மன்ற விழாவுக்கு வந்து போன பெரியவர் குன்றக்குடி தெய்வசிகாமணியார் அவர்களையும் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களையும் என்றும் நினைவில் கொள்கிறேன்.
எனது முதல் தமிழ்க்கட்டுரை ‘பாரதிதாசனின் பனுவலில் சில’ அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆண்டு மலரில் வெளிவந்தது. பல்கலைக்கழக பெரிய நூலகம் என்னை ஆட்கொண்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
சிதம்பரம் வடக்கு வீதியிலிருந்த காந்தி அமைதி நிலையம் எனக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது. பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆதரவு தந்த  சாந்தி சேனா என்னும் அமைப்பில் நான் உறுப்பினராகச்சேர்ந்தேன். அகில இந்திய மாணவர்கள் சாந்தி சேனா அமைப்பு நடத்திய ஒரு முகாமில் கலந்துகொண்டேன். அது கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே கடோலி என்னும் கிராமத்தில் நடந்தது.
  நான் கல்லூரியில் படித்தபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்  ஒருமுறை சிதம்பரம் வந்திருந்தார். என்னை அருகிலுள்ள பறங்கிப்பேட்டை முகாமுக்கு வரச்சொன்னார். காஞ்சி மடத்து சுவாமிகள் என்னை சிதம்பரத்தில் இந்து சமய மன்றம் தொடங்கச்சொன்னார்கள். காந்திய சிந்தனைகளில் தோய்ந்து இருந்த நான்  எல்லா மதமும் ஒன்று எனப்பேசத்தொடங்கிய காலம் அது. அப்படிச்செய்ய முடியாது என  நான் விலகிப்போனேன்.
என் தந்தை குடுமி வைத்துக்கொண்ட புரோகிதர். ஆனால் தன் பிள்ளைகள் தருப்பைப்புல்லைத்தொடாது  தங்கள் பிழைப்பை வேறு எங்காவது மட்டுமே தேடிக்கொள்ளவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பா சுந்தரேசனுக்குத்தெரியாத உலகவிஷயங்கள் இருக்கமுடியாது.
தாய் மீனாட்சி பெரியதாகப்படித்தவரில்லை. என் தாய்க்கு மனிதாபிமானம் என்று ஒரு மறுபெயர் சூட்டலாம். அன்பின் திரு உரு அம்மா. என் அம்மா கையால் சாப்பிடாதவர்கள் தருமங்குடியில் யாரேனும் இருப்பார்களா என்ன?.
வேதியியல் பட்டம் பெற்று முதன் முதலில் வடலூர் சேஷசாயி  நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.பின்னர் தொலை பேசித்துறை.விருத்தாசலம் நகருக்கு வந்தேன். ஆங்கிலத்தில் எம் ஏ எம் ஃபில் இதழியல் பட்டயமும் பெற்றேன்.
நவீன இலக்கிய அறிமுகம் எப்படி?
பாரதியில் இருந்துதான் என் இலக்கிய நுகர்வு தொடங்கியது.ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாரதி பற்றி ஒரு பேச்சுப்போட்டியில் பங்குகொண்டு பாராட்டப்பெற்றேன்.கம்மாபுரம் உயர் நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றச்செயலர்.பணி. கல்விமாவட்ட கலைக்கழப்போட்டியில் முதன்மை பெற்றமை.அண்ணாமலைப்பல்கலைக்கழக நூலகத்தொடர்பு.பாரதிதாசன் எழுத்துக்களில் ஆர்வம் கொள்ளுதல். தி.ஜானகிராமனின் மோகமுள்,ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு,மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்,சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை,தா.பாண்டியனின் பாரதியும் சாதிகளும்,பொன்னீலனின் ஜீவா என்றொரு மானிடன்.இவை ஒத்த படைப்புக்களே என்னை ஈர்த்தவை.
திருக்குறளும்,திருவாசகமும்,திருமூலரின் திருமந்திரமும் வினோபாஜியின் கீதைப்பேருரைகளும் எப்போதும் நான் நேசிக்கும் நூல்கள். தொலைபேசித்துறையில் செர்ந்தபிறகு அங்கிருந்த என் எஃப் பி டி இ தொழிற்சங்கத்தொடர்பால் பொது உடமை ச்சிந்தனைகள் என் சிந்தனையை வெகுவாக பாதித்தன.
 தொடக்கத்தில் ஆசிரியப்பாவும் வெண்பாவும் எழுதியதுண்டு. இவை என்னை வெகுவாக பாதிக்கவில்லை. நவீன இலக்கிய யுக்திகளே எனக்கு நிறைவு தந்தன.
விருத்தாசலம் இலக்கியச்சூழல்
விருத்தாசலம் பகுதியில் நான் பணியில் சேர்ந்தபோதுஅருணா ஜவுளிக்கடையில் நண்பர் சதாசிவம் இருப்பார்.அவர் திருப்பூர்க்காரர்.அங்கு கூடி இலக்கியம் பேசுவோம்.அருகில் பணிபூண்டார் வீதியில் கவிஞர் பல்லடம் மாணிக்கம் இருப்பார்.விருத்தாசலம் ரயில் நிலயத்திலிருந்து உதயசங்கர் வருவார்.இன்றளவும் நான் பெருமையோடு தொடர்பு கொண்டுள்ள வே.சபாநாயகம் நட்பும் எனக்குக்கிடைத்தது. கவிஞர் கரிகாலன் அவர் தம்பி புகழேந்தி. கண்மணி குணசேகரன்,இமையம் கவிஞர் வின்செண்ட், ,தெய்வசிகாமணி.பட்டி செங்குட்டுவன்,தபசி,வடலூர் ஊ.செ.துளசி ஆகியோர் எல்லா நிகழ்வுகளுக்கும் கூடுவோம்.ஆயிஷா நடராசன்,அன்று குரல் நடராசன் விருத்தாசலம் நிகழ்வுகளுக்கு வந்துபோவார்.
இந்தப்பகுதியின் மகாகவிஞர் பழமலயின் நட்பு பற்றிப்பெருமிதத்தோடு குறிப்பிடவேண்டும். நானும் சபா சாரும் நெய்வேலி இலக்கிய நிகழ்வுகள் அனைத்திற்கும் சென்று வருவோம். நெய்வேலியில் சத்யமோகன், வேர்கள்: ராமலிங்கம்,ஜீவகாருண்யன்,பாரதிகுமார்,ஆகியோரிடம் இலக்கியம் பற்றி விவாதிப்போம்.பின்னர் வடலூர் ஜி .டி. போஸ்கோ இலக்கிய நண்பரானார்.அவர் தொடர்ந்து இலக்கியக்கூட்டங்கள் நடத்தினார். நானும் சபா சாரும் போகாத கூட்டமில்லை.தங்கர் பச்சான் முன்னிலையில் அவரின் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி விமரிசித்தோம்.அப்படியே குறிஞ்சிப்பாடி குறிஞ்சிவேலனின் நட்பு கிடைத்தது.யான் வாழ்க்கையில் பெற்றஒரு பேறு என்று அதனைக்குறிப்பிடவேண்டும்.
கரிகாலன் ஒரு தொடர் இலக்கிய அரங்கு விருத்தாசலத்தில் நடத்தினார். நட்சத்திர எழுத்தாளர்கள் கலந்துகொண்ட பெரு நிகழ்வு அது. ஜெயமோகனும் மனுஷ்யபுத்திரனும் ரவிசுப்ரமணியனும் சுப்ரபாரதிமணியனும் கலந்துகொண்டார்கள்.பிரபஞ்சனும் அ.மார்க்சும் அனேக இலக்கிய நிகழ்வுகளில் இங்கு வந்து கலந்துகொண்டனர்.இமயம் நடத்திய ஒரு இலக்கிய நிகழ்வுக்கு சுந்தரராமசுவாமி மனைவியோடு வந்திருந்தார். எழுத்தாளர் அம்பை, இமயம்  ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கரிகாலனின் துணைவியார் தமிழ்ச்செல்வி மகளிர் எழுத்தாளர்களைக்கொண்டு பல்லடம் மாணிக்கம் நூலகத்தில் ஒரு இலக்கிய அரங்கு நடத்தினார்.
சபா சார் எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ வெளியீட்டு நிகழ்ச்சி பல்லடம் மாணிக்கம் அவர்களால் அத்தனைச்சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.அப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை வேறு எங்கும் நான் இதுவரைகண்டதில்லை. நல்ல படைப்பாளிகள் இன்னும் பலரை தமிழ் இலக்கிய உலகிற்கு விருத்தாசலம் அளித்துப் பெருமைகொண்டது. ஒன்று மட்டும் சொல்லாமல் விட்டால் அது தவறு. அவ்வப்போது சாதியமும் தலைகாட்டி இப்பகுதியில் தன்னை நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்தான்.
தொழிற்சங்கம் அன்றும் இன்றும்.
பணியில் சேர்ந்தபோது நான் பார்த்த தொழிற்சங்கம் சமூகப்பள்ளியாக இருந்தது.இனம் மதம் மொழி தாண்டி எங்கள் சிந்தனையை வளமாக்கியது. மனித நேயற்றின் நாற்றங்கலாக அனுபவமானது.ஜீவாவின் சிந்தனைகள் எங்களைக்கட்டிப்போட்டன.சாதிய வெற்று விடயத்தை தொழிற்சங்கம் வெளிச்சமாக்கியது.பெண்களை மதிக்கக்கற்றுத்தந்தது.ஆரோக்கியமான விலாசப்பார்வை உறுப்பினர்களுக்குக்கிட்டியது. நல்ல எழுத்துக்கள் வாசிப்பு அனுபவமானது.புஷ்கினும் கார்க்கியும்,தாஸ்தாவாஸ்கியும்,டால்ஸ்டாயும் எங்களுக்கு நெருக்கமானார்கள்.
தலைவர்கள் ஜகனும்,ரகுவும்,ரெங்க நாதனும் இயக்கத்தில் எங்களுக்கு வழிகாட்டினார்கள்.இந்தப்பகுதியின் எழுத்தாளர் சிரில் அவரின் படைப்புக்களால் எங்களுக்கு அறிமுகமானார். நெய்வேலி கனேசன் மிக நெருங்கிய நண்பரானார்.அன்பே உருவான அந்தத்தோழர்தான் என்னை முதன் முதலில் கணையாழி இலக்கிய இதழைப்படிக்கச்சொன்னவர். விஎருத்தாசலத்தில் தோழர் மஜ்கர் எனக்கு நண்பரானார். இளமையிலே அவர் நோயுற்று இறந்துபோனது ஒரு சோகம்,
கவிஞர்கள் நீலகண்டனும்,கோவி ஜெயராமனும் இலக்கிய நண்பர்கள் ஆயினர். கடலூர் புகழ் சங்கு வளவதுரையனும், சிம்மக்குரல்




 சசியும் பேராசிரியர் பாசுகரனும், பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு  மு.ராமலிங்கமும் நெருக்கம் ஆயினர்.
தொழிற்சங்க அரங்கில் எண்ணற்ற போராட்டங்கள் எத்தனையோ தண்டனைகள். ஆனால் நியாயத்திற்கு ப்போராடிய பெருமை மட்டும் கூடிக்கொண்டே போனது. எதிரிகளால் அடியும் உதையும் கிடைத்தது.பதவி உயர்வு தள்ளிப்போனது.தண்டனைகள் தொடர்ந்தன.மனம் மட்டும் எப்போதும் நிறைவாகவே உணர்ந்தது.
தன்னை மட்டுமே முன் நிறுத்துதலும்,சாதி அரசியலும் தம் கடையை திறந்துகொண்டு வியாபாரம் செய்யத்தொடங்கிவிட்டதன் பாதிப்பு எல்லா சமூக இயக்கங்களையும் இன்று பீடித்து நிற்கிறது.ஆகத்தான் பொதுவுடகமை இயக்கங்களும் இலக்கிய அரங்குகளும் கூட த்தம் கம்பீரம் இழக்கின்றன. தொழிற்சங்கங்களை மட்டும் அவை விட்டு வைக்குமா என்ன?
கவிதை சிறுகதை நாவல் பற்றி
கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆங்கில இலக்கியம் பயின்றதால் மில்டனும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கீட்சும் என்னைப்பாதித்த கவிஞர்கள்.கோவை ஞானி என் கவிதைகளைப்பாராட்டி நிகழில் பிரசுரித்ததை நான் பெருமையாக எண்ணியவன்.
கவிதையை ப்போன்று ஆன்மாவைத்தொட்டுப்பெசும் வேறு ஒரு படைப்பு உண்டா என்ன? நான் மூன்று கவிதைத்தொகுப்புக்கள் வெளியிட்டேன். வல்லிக்கண்ணன் முன்னுரையோடு தேவகாந்தன் முயற்சியால் ‘ரணம் சுமந்து’ வெளிவந்தது. ஆங்கிலக்கவிதை நூல் ‘ரெயின் போ’ வெளியிட்டேன். பட்டுக்கோட்டை ராமலிங்கம் என்னுடைய ஆங்கிலக்கவிதைகளை த்தொடர்ந்து தன் ஷைன் இதழில் வெளியிட்டார்.
நான் இரு நூறு சிறுகதைகளுக்கு ப்பக்கமாக எழுதியவன் இன்னும் தொடர்கிறேன். ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன்.’ மண்ணுக்கள் உயிர்ப்பு புதினத்தை ராஜம் கிருஷ்னன் விமரிசனம் செய்து எழுதினார்.’கனவு மெய்ப்படும் நாவல் நான்கு பரிசுகளைப் பெற்றது. ‘ நெருப்புக்கு ஏது உறக்கம் நாவல் தமிழக அரசின் விருதினைப்பெற்றது. சேலம் தாரையார் விருதும் அதற்குக்கிடைத்தது.
நாவலில் மட்டுமே படைப்பாளிக்கு நிறைவு கிட்டும் என எண்ணுகிறேன். ஆக நாவலை  நான் அதிகம் விரும்புகிறேன்..
----------------------------ஏப் 2016 சங்கு

Friday, September 6, 2019

vellam 11




சென்னையில்வெள்ளம் 11



குரோம்பேட்டை வாடகைவீட்டில் சாமான்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு அண்ணன் விடை பெற்றுக்கொண்டார்.
‘ நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்’
‘மதிய உணவு கொண்டு வந்த ஆதம்பாக்கம் டப்பா இருக்கு’
‘அதுக்கு  இப்ப என்ன அவசரம்’ அண்ணா  என் மனைவியிடம் சொன்னார்.
‘இங்கேந்து ஸ்டேஷன் போகணுமே’ நான் கேட்டேன்.
‘எதாவது ஆட்டோ கெடைக்கும்ல நான் பாத்துகறன்’

‘ நீ இண்ணைக்கு ராத்திரி அடுப்ப பத்தவைக்காத நாளக்கு காலயில ஆறு மணிக்கு அத எல்லாம் வச்சிகொங்க. அப்பதான் நல்ல நேரம்’
‘ராத்திரிக்கு கையில இருக்கிறது போதும்’
என் மனைவி சொல்லி முடித்தாள்.

அன்று இரவே என் மருமகளும் பேத்தியும் ஆதம்பாக்கத்திலிருந்து குரோம்பேட்டைக்கு வந்துசேர்ந்தார்கள். இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல்தான் எப்போதும் என் பெரிய பையன் பணிமுடித்துவருவான்.எப்படியோ குரோம்பேட்டை வீட்டைக்  கண்டு பிடித்து வந்து சேர்ந்தான். தனது டூ வீலரை நிறுத்துவதற்குத்தான் இடம் சரியாக இல்லை என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
இப்போது வீடு கட்டுபவர்கள் எல்லாம் வீட்டின் தரைதளத்தினை கார் பார்க்கிங் என்று சொல்லி விட்டுவிடுகிறார்கள். அது ரொம்பவும் சவுகரியமாகவே இருக்கிறது. வண்டி நிறுத்துவதிற்குமட்டுமா, இல்லை இல்லை எது எதற்கோ அது உபயோகமாகிறது.
 மேல் தளத்தில் குடியிருப்பவர்கள் வீட்டில் விழும்  சாவு பின் தொடரும் எழவு கார் பார்க்கிங்கில் வைத்துத்தான் அச்சடங்கு முடிக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் அது எல்லோருக்கும் சவுகரியமாகவும் இருக்கிறது.

குரோம்பேட்டையில் வாழ்க்கை.பால் காய்ச்சி தொடங்கியாகிவிட்டது. இங்கெல்லாம் வெள்ளம் வந்த சென்னை திண்டாடிக்கொண்டிருப்பதே தெரியாதமாதிரிக்கு காலட்சேபம் போய்க்கொண்டிருக்கிறது. கடைத்தெரு அருகில். ஏ டி எம் அருகில். பால்கடையும் காய்கறிக்கடையும் பக்கமாகத்தான். தீபம் மருத்துவமனையும் கொஞ்ச தூரத்தில்தான். வண்டியொன்றும் வைக்கவேண்டாம். நடந்து போய் வரலாம்.எல்லாமே சவுகரியமாகத்தான் இருந்தது. என் மனைவிக்கு ரொம்பவும்  திருப்தி. 
நேதாஜி நகர் என்றால் தொட்ட தொண்ணூரறுக்கும் வண்டி சின்ன வண்டியாவது கையில் இருந்தால் தான் பஸ் நிறுத்தம் அந்த பார்வதி நகர் வரை போய் வரமுடியும். ஒரு முறை நடக்கலாம். இன்னொரு முறை நடக்கவேண்டும் என்றால் என்ன செய்வது கால் அசந்து வலி எடுக்க ஆரம்பிக்கும்.குரோம்பெட்டையில் அந்த பிடுங்கல் இல்லை.
        ‘காஸ் சிலிண்டர் தீர்ந்துபோனது. காலி சிலிண்டர் ஒன்று கொண்டுபோய் எந்த கேஸ் ஏஜன்சி என்று  பெயர் பார்க்கவேண்டாம்.அவர்கள் நமக்கு காஸ் நிரப்பிய சிலிண்டர் ஒன்றை வழங்குகிறார்கள். காசு வாங்காமல் எல்லாம் இல்லை. அதெல்லாம் சரியாகவே வாங்கிவிடுகிறார்கள். சென்னையில் வெள்ளம் ஆக  உங்களது எந்த ஏஜன்சியென்றெல்லாம் கேட்பதில்லை. அப்படி ஒரு காலி கேஸ் சிலிண்டரை எடுத்துப்போய் மாற்றி வந்தேன்.ஆட்டோ வைத்துக்கொண்டுதான் போய்வர சாத்தியமானது.. அதாவது முடிகிறதே என்கிற மகிழ்ச்சிதான்.
                           நகரம் என்பதன் தரம் கூடக்கூட குப்பையை எங்கே கொட்டுவது என்பது பிரச்சனை ஆகிப்போகிறது. குப்பையை தெருவில்  நகராட்சி நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் சிமெண்ட் தொட்டி ஒன்றில் கொட்டிவிட்டு நமக்கு என்ன என்று அவரவர் வீட்டுக்குப் போய்விடுவது குரோம்பேட்டையில் முடியவில்லை.குப்பையை பத்திரமாக வைத்து அந்த குப்பை வண்டிக்காரர்கள் வீதியில் வரும்போது போட வேண்டும். கணவன் நனைவி இருவரும் வேலைக்குப்போகும் வீட்டில் குப்பையை எப்படிபோடுவார்களோ. சிரமந்தான்.குப்பையை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று ரகம் பிரித்து மட்டுமே போடவேண்டும். இப்போது குப்பையில்.பிளாஸ்டிக் வகையறாக்கள் மீது ஒரு தனிக்கவனம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

குரோம்பேட்டை வாழ்க்கை அது ஒரு தினுசாக ஓடிக்கோண்டு இருந்தது,கடை கோவில் ஆஸ்பத்திரி இவை அருகில் என்பதில் என் மனைவிக்கு ரொம்பவும் திருப்தி. நேதாஜி நகருக்குபோகாமல் இங்கேயே தங்கிவிட்டால்கூட பரவாயில்லை என யோசிக்க ஆரம்பித்தாள். எனக்குத்தான் அச்சமாக இருந்தது. நேதாஜி நகர் வீடு என்னாவது என்கிற யோசனை. எனக்குத்தான் அது அதிகம் இருந்தது.
நான்  சென்னை தொலைபேசி நிர்வாகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். ஓய்வுபெறும்போது அவர்கள் கொடுத்த பணிக்கொடை இத்யாதிகளை என் பெரிய மகனுக்குக்கொடுத்து அவனும் வீட்டுக்கடன் வங்கியில் கடன் வாங்கி அதனையும் சேர்த்து ஒருவீடு வாங்கினான். அந்த வீடும் நேதாஜி நகருக்கு அருகில்தானே  இருந்தது. பெரிய பையன் வீட்டைசொல்ப வாடகைக்கு விட்டிருந்தான்.அந்த  வீட்டையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் குடும்பத்தோடு வீட்டைப்பூட்டி விட்டு மறைமலை நகருக்கு அருகே ஒரு உறவினர் வீட்டுக்குச்சென்றதாகச்சொல்கிறார்கள்.

என் பெரிய பையனுக்கு என் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு கிடைத்தது ஒரு பெரிய அதிர்ஷ்டமாக எண்ணியிருந்தேன். ஆனால் அருகிலே அடையாறு செல்கிற சமாச்சாரம் இந்த வெள்ளம் வந்த பிறகே என் மூளைக்கு எட்டுகிறது. நானும் என் பெர்ய பையனும் சென்னையில் அலையாத இடம் இல்லை. அவன் தனி வீடு வாங்கினால் பரவாயில்லை என்றான். தனி வீடு வாங்குவது என்பது லேசுபட்ட காரியமும் இல்லை.கையில் இருக்கும் பணமும் வங்கிக்காரன் கொடுக்கும் கடனும் வைத்து தனி வீடு வாங்கவேண்டுமென்றால் மறைமலை நகருக்கு அப்பால்தான் அது சாத்தியம் என்று சொன்னார்கள்.
                                          ஆனால் என் வீட்டருகே ஒரு தனி வீடு கிடைத்து அதனையும் வாங்கிவிட்டதை பெருமையாக எண்ணியிருந்தேன். இந்த மழை அந்த நினைப்பை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது. அவனுக்காவது வெள்ளம் வராத ஒரு மேட்டுப்பகுதியில் வாங்கியிருக்கலாம். தவறிவிட்டோம் என மனம் கனத்தது.  ரணமாகியிருந்தது. மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் அவன் சம்பளத்தில் பிடித்துக்கொள்கிறார்கள். இன்னும் இருபதாண்டுகளுக்கு இப்படித்தொடரலாம். கொடுத்த பணத்தைப்போல் மூன்று பங்குக்கு திரும்பவும் கட்டவேண்டும். வங்கிக்காரன்என்றால்  லேசு பட்டவன் இல்லை. இப்படி எல்லாம் வட்டி, இல்லை அதற்கு  இன்னொரு பெயர் எதுவும் சொல்லியோ   ஏழை நடுத்தர மக்களிடம்  வாங்கினால்தான் அவன்  ஏமாற்றுக்காரர்களுக்கு பெரியதொகையை  மொத்தக்  கடனாகக்கொடுத்துவிட்டு திவாலாகி விழிக்க முடியும். 
           அங்கே வேலைசெய்து பிழைக்கலாம் என்று  படித்துவிட்டு வந்தவனும் வேலையை தொலைத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்து அழ முடியும்.  எல்லாம்  இந்த அமைப்பில் உள்ள கோளாறுகள் இதனைஎல்லாம் நீங்களும் நானும்  சரிசெய்யத்தான் ஆகுமா? மனம்  என்னவெல்லாமோ எண்ணி எண்ணிப்பார்த்து ஓய்ந்து போனது.
‘                   நம்ம கையில என்ன இருக்கு. எது எப்படி நடக்கணும்னு இருக்கோ அப்படித்தான் நடக்கும்’ என் மனைவி அடிக்கடி சொல்வது என் நினைவுக்கு வந்து போகும். என் அம்மாவின் அக்கா என் பெரியம்மாதான் சொல்வார்கள்.’அண்ணைக்கு எழுதினவன் இப்புறம் அழித்துவிட்டா மீண்டும் எழுதப்போகிறான்’ என்று. அந்த பெரியஅம்மா சிதம்பரத்தில் இருந்தார்கள். என் பெரியப்பாவுக்கு அந்த அண்ணாமலை ப்பல்கலைக்கழகத்தில் எழுத்தர் வேலை. அங்குதான் என் பெரியம்மா வீட்டில் தங்கி நானும் பட்ட வகுப்பு பயின்றேன். எந்தகாலத்து சமாச்சாரம்.ஒரு ஐம்பதாண்டுகள் ஆகப்போகிறது. நேற்று பிறந்தமாதிரிக்கும் பள்ளிக்கூடம் போனமாதிரிக்கும் மனம் சொல்லிக்கொண்டு இருந்தால் என்ன நரை த்துவிட்ட தலை முடி கண்ணாடியைப்பார்க்கும்போதெல்லாம் ஆச்சுப்பா வயசு என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது,.
                        என் அம்மா கூட இப்படி அடிக்கடி சொன்னது நினைவுக்கு வரும்.’ நேத்துதான் சிதம்பரம் ராமசாமி  செட்டியார் ஸ்கூலுக்கு படிக்க ப்போனதுமாதிரி இருக்கிறது. அதுக்குள்ள இத்தனை காலம் ஓடிப்போய்விட்டது.’ என்பார்கள். என் தந்தை தான் சொல்ல்க்கொண்டிபுப்பார்’ வாழ்க்கைன்னா ஒண்ணும் பெரிசா இல்லேடா கண்ண தொறந்து மூடிப்பாத்தா கட கடன்னு ஓடி முடிஞ்சியே போகும்’’ அதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது
                            நல்லவை மட்டுமே சிந்தித்து நல்ல  மனிதனாய் மட்டுமே  வாழவேண்டும்.யார் எப்படி இருந்தாலும் அதுபற்றி  நமக்கொன்றுமில்லை என்பதை. என் அப்பா எத்தனைமுறையோ  சொல்லியிருக்கிறார்.
‘                                 நேதாஜி நகர் வீட்டை ப்போய் பார்த்துவிட்டு வரலாம் எனத்தீர்மானித்தேன். அங்கே என்னவானது என்கிற கவலை சதா இருந்துகொண்டே இருந்தது. என் பேத்தியை என் மனைவிதான் பார்த்துக்கொள்கிறாள். மருமகள் வேலைக்குச்செல்வதால் வேறு வழியில்லையே. என் பெரிய மகனும் அவன் மனைவியும் தங்கள் தங்கள் பணிக்குச்சென்று குரோம்பேட்டை வீட்டுக்கே திரும்பினார்கள்.
                                   பெங்களூரில் இருக்கும் சின்னவன் சென்னைக்கு வந்து வெள்ள சமாசாரங்கள்  நேரில் அறிந்து கொள்ளவேண்டும் என்று செய்திசொன்னான்.அவன் மனைவியும் குழந்தையும் திருச்சி சம்பந்தி வீட்டில் இருக்கிறார்கள். பிரசவத்துக்குப்போனவள். அவர்களின் ஜாகைதானே என் வீட்டுக் கீழ் தளத்தில் இருந்தது. என் பையன் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிடுவான் என்றும் நாங்கள் எண்ணியிருந்தோம். அது ஒன்றும் நடக்கிறகதையாகத்தெரியவில்லை. அவன் குடியிருந்த அந்தப்   பகுதிதான் இந்த சென்னை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானது. என்ன என்ன போய் எது எது  பாக்கி எனக்கணக்குப் ப்பார்க்க  அவன் சென்னை வருகிறான்.
                              நானும் நேதாஜி நகர் செல்வதாகச்சொல்லிப்  புறப்பட்டேன்.என் சின்ன பையன் பெங்களூரிலிருந்து நேராக அங்கு வருவதாக ச்சொல்லியிருக்கிறான்.
                 ‘வேலையை முடித்துக்கொண்டு வந்து சேருங்கள் என் மனைவி’ கட்டளை யிட்டிருக்கிறாள். சென்னை கொஞ்சம் கொஞ்சமாகப் பெருவெள்ளம் மழை என்கிற சோகத்திலிருந்து  மீள ஆரம்பித்தது. வெள்ளப்பாதிப்பே சற்றுமில்லா குரோம்பேட்டையிலிருந்து கொண்டு அப்படிச்சொல்லக்கூடாது.
                     குமரன்குன்றத்திலிருந்து குரோம்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு வரவேண்டும்.அங்கிருந்து ஏதோ ஒன்றை பிடித்து தாம்பரம் பிறகு இந்த முடிச்சூர் சாலைக்கு இன்னொரு வண்டி என்று நேதாஜி நகருக்குபோய்ச்சேரவேண்டும். தேசிய நெடுஞ்சாலை நடந்து போகிற தூரம் இல்லை.பஸ் ஒன்றும் வருவதாகவும் தெரியவில்லை. சாலையில் நடக்க ஆரம்பித்தேன். சாலை குண்டும் குழியுமாக இருந்தது. மழை எப்படியெல்லாமோ சாலையை தன் இஷ்டத்துக்கு உருமாற்றி இருக்கிறது.ஆட்டோக்கள் சாலையில் செல்லாமல் இல்லை.ஒன்று இரண்டு என ச்செல்கிறது.எதுவும் காலியாக இல்லை.ஜனங்களை நிறைவாக ஏற்றிய ஆட்டோக்கள் விரைத்துக்கொண்டு பறந்தன. போக்கு ஆட்டோ என்பார்களே அது ஏதும் வரலாம். ஆட்களை இறக்கி விட்டுவிட்டு க்காலியாக ஸ்டேண்டுக்கு த்திரும்புவன.
                    ‘திரும்பி வரகுள்ள நா காலியத்தான் வருணும். யாரு வரப்போரா என்று அதற்கும் சேர்த்து க்காசு வாங்கிய ஆட்டோக்காரர்கள் திரும்புகையில் சாலையில் யாராவது ஆட்டோவுக்கு காத்துருக்கிறார்களா என்று நோட்டம் விடுவார்கள்.அப்படி ஒரு ஆட்டோக்காரன் எதிரில் தெரிந்தான்.
‘சார் வரீங்களா’
நான் அந்த ஆட்டோக்காரனிடம் விரைவாகச்சென்றேன்.
‘தலைக்கு இருவது ஏறுங்க’
‘பத்துதான் கொடுக்கறது’
‘ரோடு எப்பிடி இருக்கு கண்ணால பாக்குற  டயரு வண்டி என்னாத்துக்கு ஆவுறது.என் திரேகம் படுற பாடு வண்டி படுற பாடு. மெக்கானிக்கு இருக்கான் அவன் எங்கள வச்சி பொழக்கிறான். போலிசுகாரன் அப்புறம் சங்கத்துக்காரன் கோவில் திருவிழாக்காரனுவ பேட்ட தலைவருவ அப்பிடி இப்ப்டி போனா ரவ போட்டுக்குவம் அந்த கருமம்தான் வேற என்னா செய்வ.  காத்தாடிகு கீழ குந்திகினு உத்தியோகம் பாக்குறமா’
‘குடும்பம் இருக்குதா’
‘சாமி இருக்கு. ரெண்டு பொட்ட புள்ள  இருக்கு.  ரோசக்காரி பொண்டாட்டி இருக்கா. ஆயி அப்பனுவ எல்லாம் அது அத போய் சேந்தாச்சி’
நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். வேறு ஒருவருமே நான் வந்து கொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தி ஏறவில்லை. டூவீலர்கள் ஏகத்துக்கு ச்சென்றவண்ணம் இருந்தன.
                         தேசிய நெடுஞ்சாலையில் அனேக இடங்களில் மேம்பாலங்கள் கட்டியிருக்கிறார்கள். குரோம்பேட்டையிலும் அப்படி ஒன்று இருக்கிறது. பிரம்ம ராக்‌ஷஸ் என்று சொல்லும்படிக்கு அது  சாலையை அடைத்துக்கொண்டு கிடந்தது. அது  போக்குவரத்துக்கு வசதியாத்தான் இருக்கிறது. அதன்மீது நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை. விரையும் வண்டிகள் மட்டுமே மேம்பாலம் மீது ஏனோ  ஊர்ந்து செல்கின்றன. சைக்கிள்காரர்கள் ஒருவரையும் பார்க்கமுடிவதுவில்லை.  நான் குரோம்பேட்டை பேருந்து நிலையம் இறங்கித்  தயாராக நின்றிருந்த ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டேன்.
                    தாம்பரம் சானிடோரியத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய  பெரிய கோவில்களை சாலையோரம் கட்டிருக்கிறார்கள். இரண்டு கோவில் கதவுகளும் பூட்டிக்கிடந்தன. நெடிய கதவுகள் வண்ணமடிக்கப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.  பெரிய திண்டுக்கல் பூட்டுக்கள் கதவில் தொங்கிக்கொண்டு இருந்தன. பூட்டு தாழ்ப்பாள் எல்லாம் அரிச்சுவடி வகுப்புத்திருடர்களுக்கு என்று பிறந்தவை,
                பெரிய பெரிய திருடர்கள் அடுக்கு மாளிகையில் வாழ்ந்துகொண்டு ஏரோப்ளேனில் பறப்பவர்கள்..அவர்கள் திருடுவதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுபிடிக்கமுடியும்.அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் நபர்கள் இங்கு இருக்கமாட்டார்கள். அவர்களை பிடித்து க்கொண்டு வருவதற்குள் பல நூறு கோடிகள் அரசாங்கம் செலவுசெய்ய வேண்டும்.
                அல்பத்திருடர்கள்  நடுரோட்டில்  மணி பர்ஸ்திருடி கழுத்துமணிகள் அறுத்து செருப்படிபட்டு ஜெயிலுக்குப்போவார்கள். அவரவர்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது..திருடர்களுக்கும் அஷ்டமத்துச்சனி  அர்த்தாஷ்டமசனி  நீசபங்க ராஜ யோகம் கஜ கேசரியோகம் ஒன்பதாம் இடத்துல  குரு எல்லாம்தான் தன் தன் வேலையைச்செய்தாகவேண்டும்.
               ஷேர் ஆட்டோ தாம்பரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தாம்பரத்தில் எப்போதும் மக்கள் கூட்டம்.சுற்றுப்பட்டில் ஏகத்துக்கு கிராமங்கள்.இன்று எல்லாம் மாநகரங்களாகி இருக்கின்றன. மழையும் வெள்ளமும் வந்து கொஞ்சம் மக்களை சிந்திக்கத்தான் வைத்தன. நமக்கு மிஞ்சி இங்கு யாருமில்லை என்கிற அகம்பாவத்தை சற்று ஆட்டித்தான் பார்த்திருக்கின்றன.
              பெங்களூரிலிருந்து வரவேண்டிய சின்ன மகன் தயாராக தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டு என்வருகையை எதிர்பார்த்தபடி இருந்தான்.
‘வா அப்பா’
ஷேர் ஆட்டோவைவிட்டு இறங்கிட நான் யாரது அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்கிற யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தேன்.
‘’இங்க  நிக்கறது தெரியல’ சிக்னல் கம்பம் அருகே நின்றிருந்தான். நான் அவனருகே சென்றேன்.
‘ நீ எப்ப வந்தே’
‘ நா வந்து ஒரு மணி நேரம் ஆச்சி. உனக்கு போன் போட்டேன்.கிடைக்கில’
‘அது என்ன கோளாறோ.ஒண்ணும் சொல்லிக்க முடியல. எதோ நடக்கறது’
‘அத விடு இப்ப நேதாஜி நகர்ருக்கு எப்படி போறம்’
’55 ந்னு  நெம்பர் போட்ட ஒரு பஸ் வரணும் இல்லன்னா ஷேர் ஆட்டோ தான்‘
‘முடிச்சூர் முடிச்சூர் மண்ணினாக்கம்’ ஒரு ஷேர் ஆட்டோக்காரன் கத்திக்கொண்டு வந்து நின்றான்.
‘எங்க போவுணும்’
‘பார்வதி நகர்’
‘’ஜோரா ஏருங்க நா அங்கதான் போறன் ஆனா டிக்கட் முப்பது ரூவா’
‘இது என்ன ரொம்ப அநியாயம்’; என்றேன்.
அதற்குள்ளாக என் பையன் வண்டியினுள் ஏறி அமர்ந்துகொண்டுவிட்டான். நானும் ஏறி அமர்ந்தேன். வண்டியில் இருக்கைக்கு மூன்று பேராக அமர்ந்துகொண்டிருந்தனர்.
‘எடம் குடு ஏறுர ஆளுக்கு இடம் குடு அட்ஜஸ்ட் பண்ணு இல்ல எறங்கிக’ ஷேர் ஆட்டோக்காரன் அதட்டலாகப்பேசினான்.
‘ ஒரு சீட்டு முப்பது ரூவா ஒரு நெடுக்கு சீட்டுல ஏன் நாலு பேரு உக்காரணுமா’
நான்தான் கோபமாய்க்கேட்டேன்./
‘ நீ எறங்கிக தாம்பூலத்தட்டு வச்சி  உன்ன நா கூப்புட்டு  நீ வருல’
என் பையன் ‘ நீ செத்த சும்மா இரு’ என் பையன் என்னை நெறிப்படுத்தினான். வண்டி நிறைந்து போனது. தாம்பரம் இந்து மிஷன் ரவுண்டானா தாண்டி சென்று கொண்டிருந்தோம்/
வெள்ளைசட்டை போட்ட ஒரு உயரமனிதர் வண்டியை நிறுத்தினார். அவரிடம் ரெண்டு நூறு ரூபாய் நோட்டிக்களை எடுத்துக்கொடுத்தார் ஷேர் ஆட்டோவின் ஓட்டுனர்.
‘போவுலாம்’
வெள்ளை சட்டைக்காரர் நகர்ந்து கொண்டார்.
‘இதெல்லாம் தெனப்படி மாமுலு. இது கட்டியாவுணும்.போலிசு  ஆபிசுன்னு இன்னும் எம்மான் கத கெடக்கு. மீசை வச்ச கட்சிக்காரனுவ இருக்கான் மீசை வழிச்ச  கோவிலு ஆசாமிவ இருக்கு.. ரோடு கண்றாவியா இருக்கு. டயரு காலியாவுது. வண்டிகார சேட்டுக்கு  தெனம் காசு போவுணும். வண்டிக்கு  மெக்கானிக் செலவு  இருக்கு. பெட்ரோல் போடுணும் நாங்க சோறு திங்கணும் குடும்பம் ஆயி அப்பன் ஓடம் பொறப்பு  காயிலா கருப்பு  எம்மானோ இருக்கு . முப்பது ரூவா அது இது ந்றே’ என்றான் ஆட்டோ ஓட்டுபவன். நான் என் மகனைப் பார்த்துக்கொண்டேன்.
                     சாலை கன்னாபின்னா என்று உடைந்தது கிடந்தது.குண்டும் குழியுமாக கோரமாகக்காட்சி அளித்தது. பன்றிக்குட்டிகளும் நாய்களும் மூலைக்கு ஒன்றாய் நின்று ஆகாயம் பார்த்தன.  ஒரு நாய் நரி போல் ஊளையிட்டது. ஆக இன்னும் மழை வரும் என்று சொல்கிறதோ என்னவோ.. மனம் அச்சப்பட்டது. பெங்களூர் செல்லும் மேம்பாலத்தில் வரிசையாக வண்டிகள் சென்று கொண்டிருந்தன.
            கிருஷ்ணா நகரில் இன்னும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை.சாலையோரக்கடைகளில் தண்ணீர் புகுந்து நாசமாக்கி இருந்தது.கடை முதலாளிகள் என்ன பாடு பட்டிருப்பார்களோ. ஆந்திரா வங்கி முன்னாடி பெரிய பள்ளமாக இருந்தது. சாலையில் செல்லும் வண்டிகள் வளைந்து நெளிந்து சென்றன.
‘பாரதி நகர் எறங்கு’
ஆட்டோ ஓட்டி கத்தினான்/’ நீங்க எறங்குலயா’ என்னைப்பார்த்து க்கேட்டான்.
‘ நாங்க  பார்வதி நகர் எறங்குறம்’
பார்வதி நகரையும் பாரதி நகரையும் குழப்பிக்கொள்ளாதவர்கள் ஒருத்தர் கூட இல்லை.அன்னை அருள் மருத்துவ மனை தாண்டி பத்மா கல்யாண மண்டபம் அது தாண்டி சேட்டு ஒருவர் கட்டியுள்ள கல்யாண மண்டபம் வேஷம் கட்டும்  நடுத்தரவகுப்பாருக்கும் மேல்தட்டு மக்களுக்குமென அவை இயங்கி வருகின்றன. ஏழை மக்களின் திருமணங்கள்  திருக்கோவில்களின் பிரகாரங்களில் மட்டுமே நடந்து முடிகின்றன.  கையில் இருக்கும் பொருள் எத்தனை  கனம் என்பதுதான் நாம் எப்படி வாழ்வது என்பதனைத்தீர்மானிக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பிறகு யார்தான்  என்ன செய்ய?
                   பெருங்களத்தூரில்  வடக்கு நோக்கி நிற்கும் அம்பேத்கர் சிலை முன்பாக வண்டி நின்றது. நானும் என்னும் பையனும் தவிர எல்லோரும் இறங்கி விட்டனர்.
‘பார்வதி நகர் வண்டி போவாது நீங்க எறங்கிகலா’ம்
‘ஏன் போவாது’
‘இப்ப நீயி எறங்கப்போறயா இல்ல உன்ன தாம்பரத்துக்கு இட்டுகினு ப்பூடலாமா’
என் பையன் இறங்கிவிட்டான்.  சண்டை சச்சரவு வம்பு  இதற்கெல்லாம் அவன் தயாரில்லை. எப்போதும் அப்படித்தான். எனக்கு  ஆத்திரம்தான்.
‘துட்டு குடுத்துட்டு போ’
 அறுபது ரூபாயை இருவருக்குமாகக்கொடுத்துவிட்டு அந்த பழைய பெருங்களத்தூர் நிறுத்தத்திலிருந்து  பார்வதி நகருக்குள் நடக்க ஆரம்பித்தோம்.
                       வெள்ளத்தில் மாட்டாதவர்கள் அவரவர்கள் தங்கள் தங்கள் வேலைகளைக்கவனித்துக்கொண்டிருந்தனர். வெள்ளத்தில் மாட்டிய எங்களைப்போன்றவர்கள்தான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தோம்.
               எங்கு வீடு வாங்கினாலும் மனை வாங்கினாலும் அந்தப்பகுதிக்கு நல்ல மழைக்குப் பிறகு ஒருமுறைபோய் ப்பார்த்து வந்துவிடவெண்டும். மழைத் தண்ணீர் எப்படி நிற்கிறது போகிறது என்பது தெரிய வேண்டும் நல்ல வெயில் காலத்தில் அங்கு தண்ணீர் சரியாகக்கிடக்கிறதா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.  வாங்குமிடத்திற்கு போக்குவரத்து வசதி பற்றி ஒரு தெளிவு இருக்கவேண்டும். இது எல்லாம் இப்போது பேசி யொசித்து என்ன ஆகப்போகிறது.
‘என்ன யோசனை?’
‘ஒன்றுமில்லையப்பா’’
இருவரும் பேசிக்கொண்டே நேதாஜி நகருக்கு வந்து சேர்ந்துவிட்டோம். வீட்டு வாயிலில் உள்ள இரும்புகேட் திறந்துகிடந்தது. யாராவது உள் நுழந்து  பழைய இரும்பு சாமான்கள் கிடைக்குமா என்று பார்த்து சென்றிருக்கலாம்.
‘ரெண்டு டூவிலரும் கண்றாவியா நிக்குது’
‘அதுக்கும் ஒரு வழி பண்ணணும்’
 என் பையனுக்கு ப்பதில் சொன்னேன். அவன் கீழ்வீட்டின் கதவைத்திறந்தான். உள்ளே நுழைந்தான்.. படுக்கும் அறை சமையல் அறை ஹால் எல்லாம் ஆராய்ந்து பார்த்தான். பிரோவைத்திறந்து பார்த்துக்கொண்டான். கண்கள் ஈரமாகியதைக்கவனித்தேன்.
 வருஷக்கணக்கா ‘கஷ்டப்பட்டு வாங்குன இந்த சாமானுவ எல்லாம் இப்ப எதுக்கும் தேறாது போல’’
‘எல்லாம் குப்பைக்குத்தான் என்ன செய்வ’ நான் பதில் சொன்னேன். சட்டையைக்கழட்டி ஒரு ஆணியில் மாட்டினான். எது தேறாது என்று முடிவு கட்டினானோ அவற்றை த்தெருவுக்கு க்கொண்டு போனான். நானும் கூட மாட அவனோடு ஓடி ஓடி முடிந்தவரைக்கும் உதவிக்கொண்டிருந்தேன்.
                 அவனது புத்தகங்கள் என்று இப்போது ஏதுமில்லை. லேப்டாப். பெரிய டிவி ஃப்ரிஜ் வாஷிங் மெஷின் கிரைண்டர் ஏ சி  மிக்சி சீலிங் ஃபேன்கள் சுவிட்சுகள் வீட்டில் இருந்த ஆல்பங்கள் மளிகை சோபா செட் துணிமணிகள் படுக்கைகள் போர்வைகள் பாய் என இவற்றோடு கீழிருந்த போர்வெல் மோட்டார்  ஈ பி மீட்டர் என எல்லாம் போயிற்று. கேஸ் அடுப்பு மஞ்சள் நிறத்தில் காட்சி தந்தது.  சகதி துரு எதைச்சொல்வது. முன்னமே கொஞ்சம் சுத்தம் செய்து விட்டதனால் வீட்டினுள் நின்று பார்க்கவாவது முடிகிறது.
               எல்லாம் எப்படியும்.மூன்று லடசத்திற்கு நஷ்டமாகியிருக்கலாம். வீடு சுத்தம் செய்து பையிண்டிங் கொடுத்தால்தான் குடியிருக்க முடியும். எல்லாவற்றையும் என் சிறிய பையன் பார்த்துக்கொண்டான்.
        இருவரும் மேல்வீட்டுக்கு சென்றோம்.அதுவும் என்னமோ வீச்சமடித்துக்கொண்டிருந்தது. இன்னது அது என்று சொல்லமுடியவில்லை. சுவரெல்லாம் பச்சை பச்சையாய் பாசி மாதிரிக்கி ஏதோ  தெரிந்தது.. மழை என்னவெல்லாமோ செய்துவிட்டிருக்கிறது. ஃபிரிஜ் செத்துக்கிடந்தது. சிலிண்டர் அடுப்பு மட்டும் எரியும் நிலையில் இருந்தது. சமையல் அறையில் ஒரு பிரத்யேக துர் நாற்றம்.மளிகை சாமான்கள் எல்லாம் இனி உபயோகப்படுத்தமுடியுமா என்றால் அதுவும் சொல்வதற்கில்லை.
            ‘கரண்ட் வந்த பிறகுதான் எதுவும்’
‘ஆமாம் மின்சாரம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பதாய் முடிந்துபோய்விட்டோம். ஆதிவாசிகள் மலைமேல் இருப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பார்களோ என்னவோ’ என்றான் பையன்
‘அவர்களையும் நாம் கெடுத்துக்கொண்டுதான் வருகிறோம்’
‘அது கெடுதல் என்று சொல்லமுடியாது அப்படித்தான் சமூக மாற்றம் என்பது அமையும்.கல்வி கற்க கற்க அது செயலை மாற்றத்தை கொண்டுவரத்தானே செய்யும்’
‘என்னமோ பேசிக் கொண்டோம்.
‘’பேருந்து நிறுத்தம் சென்று ஒரு டூ வீலர் மெக்கானிக்கை பார்ப்போம்.சின்ன வண்டியாவது சரிசெய்து வைத்தால்தான் உனக்கு   குரோம்பேட்டையிலிருந்து வர போக செளகரியப்படும். பெரிய வண்டியை பிறகு பார்க்கலாம்‘
‘சரி’ என்றேன்.
இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினோம்.சின்ன வண்டியை அவன் உருட்டிக்கொண்டு வந்தான்.
ஈ பி தொழிலாளர்கள் ஆங்காங்கே மரத்தை சரி செய்துகொண்டு இருந்தார்கள் டிரான்ஸ்ஃபார்மர் மாற்றிக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.
‘கரண்டு எப்பவரும்’
‘வந்துடும் ஆனா ஆளுவு இல்லை வெளியூர் ஆளுவதான் நாங்க, புதுக்கோட்டையிலிருந்து வந்துஇருக்கம். எங்கள மாதிரி ஏகப்பட்ட ஆளு வந்து இருக்கு. சாமானுவ இல்லை மரங்க இல்லை கம்பி இல்ல டிரான்ஸ்ஃபார்மருவ இல்லை பீங்கான் சாமானுவ இல்லை என்ன செய்வ. மொத்தமா இப்படி கொள்ள போனா யருதான் என்ன செய்ய’
              ஈ பி காரர் சொல்லிக்கொண்டே போனார்.
‘வீட்டுல கரண்டு வர நாங்க என்ன செய்யுணும்’ நான் தான் கேட்டேன்.
‘;வீடு செவுறூவ காஞ்சி இருக்கா ச்விச்சு போர்டு  ஃபேனுங்க உள்ள ஈரம் இருக்கா  தண்ணி மோட்டர்  தொடச்சி காயவச்சி இருக்குதா   கரண்டு மீட்டரு பாக்சு எப்பிடின்னு பாக்குணும். ஆயிரம் இருக்கு. எலக்ட்ரீசியன் ஒருத்தரு பாத்துட்டுதான் எதயும்  சொல்லுணும்’

‘பாக்கலாம்’ என்றான் பையன்.
இன்னும் எத்தனையோ வேலை தலைக்குமேல் இருப்பது சுள்ளென்று உரைத்தது.
ரேஷன் கடை வழியாக இருவரும் நடந்து முடிச்சூர் சாலைக்கு வந்து ஒரு டூவீலர் மெக்கானிக்கைத்தேடினோம்.
‘அங்க அம்பேத்கார் செலயிண்ட ஆளு இருக்கு’
தெருவில் நடந்து செல்லும் ஒரு சிறுவன் எங்களுக்கு ஆறுதலாகச்சொன்னான்.
இருவரும் நடந்தே அம்பேத்கார் சிலைக்கு வந்தோம். அவன் தான் வண்டியை உருட்டிக்கொண்டு வந்தான்.
அம்பேத்கார் சிலை எதிரே மோட்டர்  வண்டி மெக்கானிக் வண்டிகளை சுற்றிலும்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தான். அவனுக்குத்துணைக்கு இருவர் கூட இருந்தனர்.
‘என்ன வெள்ளத்துல மாட்டுனதா’
‘ஆமாம்’
‘வண்டிய சேஃப்டி பண்ணி இருக்கணும். உட்டுட்டிங்க. இங்க ஆயிரம் வண்டிங்க கெடக்கு. அர்ஜெண்டுன்னா ரெண்டாயிரம், ஆர்டினரின்னா ஆயிரம் எப்பிடி சவுகரியம்’
’உடனே வேணும்’
‘ஒரு சேதி இப்ப பாக்குறது தெறமான ரிப்பேர் ஆவாது அப்புறமா சுகுரா ஒரு தபா பாக்குணும் இப்ப வண்டி ஓடும்’ மெக்கானிக் என்னிடம் சொன்னான்.
 வண்டியை மேலும் கீழும் தூக்கி தூக்கி ஆட்டினான். மோட்டர் கார்புரேட்டர் பகுதியை கழட்டினான். தூசு மண் தண்ணீர் எல்லாம் துடைத்தான்.தண்ணீர் சொட்டு கூட இல்லாமல் துடைத்து ப்ளொயர் போட்டான். நாசிலை சரிபார்த்தான். வண்டியைப்பூட்டி ஒரு உதை கொடுத்தான். வண்டி ஜிவ்வென்று ஓசை கொடுத்து ச்சரியானது.
‘இப்ப போவுலாம்’
என் சிறிய பையன் ரூபாய் ரெண்டாயிரத்தை மெக்கானிடம்கொடுத்தான்/
‘ஒரு நூறு கொறச்சிகலாம்’
மெக்கானிக் சிரித்தான். ‘லட்சம் வண்டிங்க கெடக்கு நாயாட்டம். நா உங்க வண்டியை பாத்து குடுத்தேன். இதுல என்னா பேச்சு இருக்கு. கெளம்புங்க’
‘வீட்டுல பெரிய வண்டி கெடக்கு அதுவும் வெள்ளத்துல மாட்டுனதுதான் அதயும் சரிபண்ணணும்.உங்களுக்கு எங்க வீடு தெரியும்ல’
‘தெரியாமலா எத்தினி தபா வந்துரக்கன் போயி இருப்பன்’
‘அத எப்ப சரி பண்ணுறது’
‘சாரு போயி எடுத்தாற இப்ப எங்கிட்ட ஆளு இல்ல. கொஞ்சம் பொறுங்க. நானு சீர் பண்ணி தர்ரேன்’
என்னிடம் மெக்கானிக் சொன்னான்.
இருவரும் வண்டியில் ஏறிக்கொண்டு குரோம்பேட்டைக்குப்புறப்பட்டோம்.
‘’ஹெல்மெட் எதுவும் வேணுமா’
‘இந்த மழயில அந்த ரூல்ஸ் எங்க பாக்கறது. இன்னும் நிலமை சரிஆவுல. அதுவரைக்கும் யாரும் அத கேக்கமாட்டாங்க. நீ போவுலாம்’ நான் சொல்லி முடித்தேன்.
வண்டி சரியாகி ஓடியது பெரிய ஒத்தாசையாக உணர்ந்தேன். இருவரும் குரோம்பேட்டை ஜாகைக்கு ச்சென்றோம்.
என் மனைவி தன் சிறிய மகனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். சில லட்சங்களாவது அவனுக்கு இழப்பு இருக்கும்.
‘லேப்டாப் டீவி மிக்சி கிரைண்டருன்னு எல்லாம் காப்பாத்தி இருக்கலாம் அதலகொஞ்சம் தவறிப்போனோம்’
நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அவன் அப்படிச் சொல்வதில் தவறில்லை. இன்னும் கொஞ்சம் யோசனை வேண்டும்.  ஆனால் உயிர் தப்பித்தால் போதுமெனப்  புறப்பட்டு வந்தது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டும் வேறு வேறு நிலை.
அவனுக்கு அவன் அம்மா எதோ டிபன் தயாரித்துக்கொடுத்தாள். சாப்பிட்டான்.
‘’உன் மனைவியும் குழந்தையும் நலமா எப்போது பார்த்துவந்தாய்’
‘இல்லை அப்பா போகவேண்டும். போய் நாளாகிறது’
‘தினம் போனில் பேசுவாய்’
‘ஆமாம்’ அவன் பதில் சொன்னான்.
‘ நீ சென்னைக்கு வருவது என்ன ஆனது’
அவன் அம்மா கேட்டாள்.
‘குழந்தையும் அவளும் சென்னைக்குத்தான் வருவார்கள். நான் தான்  இங்கு வர முயற்சி செய்யவேண்டும் முயற்சி செய்யாமல் இல்லை,. இன்னும்  ஒன்றும் சரியாக அமையவில்லை’/  அவன் பதில் சொன்னான்.
‘அண்ணாவும் அண்ணியும் எப்போது வருவார்கள்’
‘இரவ ஆகிவிடும்’
‘சிறுசேரியில் தானே வேலை’
‘ஆமாம் இருவருக்கும் அங்குதான் வேலை. கணிப்பொறி ஆட்களின் ஆளுகைக்கு உட்பட்டதே அந்த பழைய மகாலிபுரம் சாலை. நெடுக சாஃப்ட் வேர் நிறுவனங்கள்’ அவள் அவனுக்கு ச்சொல்லிக்கொண்டாள்.
‘ நீ தான் சாஃப்ட்வேர் வேண்டாம் என்பாய். நீ மெக்கானிகல் சாஸ்த்ராவில் படித்துக்கொண்டிருந்த  சமயம் கணிப்பொறி  மென்பொருள் துறையில் ஒரு வீழ்ச்சி. நேர்ந்தது. மென்பொருள் வேலை பார்த்தவர்கள் வீதிக்கு வந்து கண்ணீர் விட்ட சோகக்கதைகள் ஏராளம்.லட்சக்கணக்கானவர்கள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இங்கே  நம் ஊரில் பட்டினி கிடக்க நேர்ந்தது’ எனக்குத்தெரிந்ததைச்சொன்னேன்.
‘                             ’நீ கோர் சப்ஜெக்ட்டில் வேலைக்குப்போ’ என் அண்ணன் தான். எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.. நான் சாஃப்ட்வேர்  கேம்பஸ் ரிக்ரூட்மெண்ட் என்றால் அங்கு எட்டியே பார்க்கமாட்டேன்’‘ அவன் சொல்லிக்கொண்டான்.
‘அது சரி இந்த பக்கம் வா. பெங்களூர் வேண்டாம்‘
               ‘என்னம்மா இத்தனை வெள்ளம் பார்த்தும் இந்த சென்னைதான்’ வேண்டுமா . நீயு ம் அப்பாவும்  பெங்களூர் வந்துவிடுங்கள்’
‘தமிழ் நாட்டை விட்டு வர என்னால் முடியும் என்று தோன்றவில்லை’ நான் பதில் சொன்னேன். அவன்  பெங்களூருக்கு க்கிளம்பினான். மறு நாள் காலை அவனுக்கு வேலைக்குச்செல்லவேண்டும்.
-----------------------------------------





.
  



.




.
.



Wednesday, September 4, 2019

translated poems essarci




Poems by panch dharm
TO DAY                                 Translation by- Essarci
Children finish their play
With in mobile phones
hold they in their palm.
Mobile phone enquiries shrink
Kith and kin links we have.
Sits simply a passive mobile
In our palm gently.

NEW YEAR
Let the new year be dawn
With sweet candy taste.
Bring many more success
Paddy grains gathered a lot.
All you should prosper
Get away evil at once.
The whole world witness this year
Fetching uninterrupted goodness.

BOON SOUGHT
A drop from my daddy
In your womb
Slept I  well for ten months
Made me you see the universe.
Your lullaby still I lingringr
In my both ears.
Voice of infant might have
Made you smile.
Wondered you on seeing me trottle.
Eveyday  you  suffererd
For me a lot.
Let any can look down upon you
I admire you ever.
Seeing me a babe
Might have pleasure dwelt in you.
Followed me in all my walks of life..
My wife I will ask her
To treat you as her mother.
Keeping you in my heart
Salute I my mother.
Let yourself reborn to me as my daughter
That boon I crave for.


WAITING IN A GAVE.
Wiped out my pocket money
Enjoyed I your love
To you I lose my heart.
But married you some one
Grieved much I.
Turned slim grown beard walks as corpse.
No more I am. Wait I in grave
As a lover of you in a tomb.

HERE AND THERE
Toiling countrymen you are.
Day dawn with sweat.
You urbanites hold umbrella in sunshine.
For a heavy downpour from sky
Villagers hold no umbrella.
Town troublesome and village is healthy..

MONEY DECIDES

Father draws monthly pension
Sons respect him without tension.
------------------------------------------


  











Monday, September 2, 2019

vellam 10


சென்னையில்வெள்ளம்-10

என் பெரிய மகனும் மருமகளும் ஆதம்பாக்கத்திலிருந்து  ஓ எம் ஆர் மென்பொருள் பணிக்குச்சென்று வந்தார்கள். என் பேத்தியை அண்ணி மட்டுமே பார்த்துக்கொண்டாள். 
அண்ணனிடம்  போய் நின்றேன் 
‘அண்ணா நான் பழைய பெருங்களத்தூர் செல்கிறேன். கீழ் வீட்டை சுத்தம் செய்து கழுவி விட வேண்டும்.குரோம்பேட்டையில் ஒரு வாடகை வீடு பார்த்து இருக்கிறேன்.அங்கு நாங்கள் சென்று தங்கினால்தான் நேதாஜி நகர் வீட்டை ச்சரி செய்து ஒருவழிக்குக்கொண்டு வர முடியும்’
‘அதற்குள் என்ன அவசரம். இங்கிருந்து மெதுவாக ச்செல்லலாம் தானே’
‘வீடு சரிசெய்ய  நாங்கள் அருகிலிருந்தால்தான் சாத்தியப்படும்.தினம் தினம் இங்கிருந்து நேதாஜி நகருக்குப்போய்வர சிரமம் ஆகத்தான். இப்படி.இங்கிருப்பதில் எங்களுக்கு  வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை.’
’‘எப்படி வீட்டைச்சுத்தம் செய்வாய் அதற்குத் தண்ணீர் வேண்டுமே’
‘மழைத்தண்ணீர் அங்கங்கே நிற்பதை வைத்துதான்’
‘அங்கே உனக்கு  அந்த வெள்ளத்தண்ணீர் சுத்தமாக இருக்குமல்லவா’
‘டவுனுக்குள்  இருக்கும் அளவுக்கு தண்ணீர் மோசம் இல்லை’
‘ நானும் உன்னுடன்  வருகிறேன்’
’உனக்கு சிரமம் ஏன். நான் மட்டுமே போய் வருகிறேன்’
‘ நானும் வருகிறேன்’ என் மனைவி ஆரம்பித்தாள்.
‘உன்னைத்தான் குரோம்பேட்டை போகச்சொன்னேனே’
‘ நேதாஜி நகருக்கு நான் உடன் வந்தால் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்.அங்கு வேலை தலைக்கு மேல் இருக்கும்’
’ நீ சொல்வதும் சரி’
ஆக நாங்கள் மூவரும் பழையபெருங்களத்தூருக்கே ப்புறப்பட்டோம். காலை உணவு முடித்தாயிற்று.
‘மதியத்திற்கு என்ன செய்வீர்கள். நான் மதியத்திற்கும் உணவு தருகிறேன் எடுத்துப்போய் அங்கேயே சாப்பிட்டுவிட்டு குரோம்பேட்டைக்கு கிளம்பலாம்’
மன்னி யோசனை சொன்னார். அதுவும் சரி என்று தோன்றியது.மதியத்திற்கு ஒரு பெரிய டப்பாவில்  மதிய உணவு தந்தாள்.
‘இதை திரும்ப கொண்டு சேர்க்கவேண்டுமே’
என் மனைவி மன்னியிடம் சொல்லிக்கொண்டாள்.
‘அதற்கென்ன அவசரம்.எப்ப வேணும்ன்னாலும் எடுத்துகறம்’
‘அது ஒரு விஷயமே இல்லை’ என்றார் அண்ணா.
ஆக என் அண்ணன் என் மனைவி நான் என்று மூவரும் காலையிலேயே கிளம்பி நேதாஜி நகருக்குச்சென்று வேலையை த்தொடங்கிவிடுவதாக முடிவாகியது.
‘குரோம்பேட்டை ஜாகை என்றாயே,அது எப்படி இருக்கிறது.சவுகரியமாக இருக்குமா போய் போய் வரவேண்டுமே. உன் மகன் மருமகள் என்ன சொல்கிறார்’
‘ நேதாஜி நகரில் அடுத்த வீட்டில் குடி இருந்த பரணிதான் குரோம்பேட்டை வாடகை வீட்டை பார்த்துக்கொடுத்து இருக்கிறார் ’
‘போய்பார்த்து வந்தாயா’
‘ நன்றாக இருக்கிறது.குமரன் குன்றம் போகும் தெரு வழியில்தான் ஒரு மாடி போர்ஷன்’
‘எப்படி குரோம்பேட்டையில் தண்ணீர் கஷ்டம் இருக்குமே
‘  'இந்த வெள்ளத்திலும் இப்படிக்கேள்வி வருகிறது தண்ணீர் வசதி  எல்லாம்  நன்றாகவே இருக்கிறது’
‘கொஞ்சமாய் பொருட்களை எடுத்துப்போ. கொஞ்ச நாள் ஜாகைதானே’
‘அப்படித்தான்’ பதில் சொன்னேன்.
மூவரும் காலை உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டோம்.அண்ணன் எங்கள் கூட வருவது பெரிய ஒத்தாசை
‘பேத்தி இன்னும் தூக்கத்தில் இருக்கிறாள்.மருமகளுக்கு இன்று அலுவலகம் செல்ல வேண்டாம்.ஆஃப் தான்.ஆக பேத்தியை ப்பார்த்துக்கொள்ள வசதியாகப்போயிற்று. மருமகளும் தூக்கத்தில்தான் இருந்தாள். மென் பொருள் வேலை என்பது மனிதர்களை இயந்திரமாகக்கருதி வேலை வாங்குவதே.
 எப்பொழுது வேலை எப்பொழுது ஓய்வு என்கிற நியதி கிடையாது.எல்லோரும் இயந்திர அடிமைகள். காசு மட்டுமே வாழ்க்கை என்றாகிய பின் வாழ்க்கையில்  ஒழுங்கு அழகு என்பதற்குப்பொருள்தான் என்னவோ?
ஒரு ஆட்டோ பிடித்து மவுண்ட் ஸ்டேஷன் வந்தோம். பிளாட்ஃபாரத்தில் மக்கள் கூட்டம் இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது.
‘அடுத்த வண்டி செங்கல்பட்டுன்னு போட்டு இருக்கான்’
‘தாம்பரம்னு போட்டு வர்ர வண்டியில ஏறுவோம்’ என் மனைவி யோசனை சொன்னாள்
‘ஏன்’ என் அண்ணன் கேள்வி வைத்தார்.
‘தாம்பரம் வண்டின்னா பிளாட்ஃபாரம் ஒண்ணு ரெண்டுல நிக்கும்.மாடிப்படி ஏறவேண்டி இருக்காது’ அவளின் பிரச்சனை என்றும் ஒயாதது 
‘அப்படிச்சொல்லவும் முடியாது.தாம்பரம் வண்டிகூட சில நேரம் மூணு நாலுல நிக்கும்’
‘’அது எப்பவாவதுதான். பெரும்பாலும் ஒண்ணு ரெண்டுலதான் தாம்பரம் வண்டி நிக்குது’
ஆக தாம்பரம் வண்டிக்கே செல்லலாம் என முடிவோடு இருந்தோம்.
கூட்டம் கொஞ்சம் அதிகமாகியது.அந்த செங்கல்பட்டு வண்டியே இன்னும் வரவில்லை. அதற்குப்பிறகுதானே தாம்பரம் வண்டி வரும். மழை வெள்ளம் வந்த சூழ்நிலையில் எது எப்படியோ சொல்லவும் முடியாதுதான்.
‘வண்டி வந்தா ஏறிடுங்க செங்கல்பட்டு தாம்பரம்னு பாக்கவேண்டாம்.எதையும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.இப்பத்தான் ஒவ்வொண்ணா சீர் பண்றாங்க’
கொடியை கையில் பிடித்துக்கொண்ட நிலைய அதிகாரி எங்களுக்கு யோசனை சொன்னார்.
‘இன்னும் நிலமை சரியாக எவ்வளவு நாள் ஆகும்’ என் அண்ணன் விசாரிக்க ஆரம்பித்தார்.
‘அந்த கிண்டி ஸ்டேஷன் தாண்டி அடையாற்று எறக்கத்துல மண்ணு அரிப்பு ரொம்ப. பள்ளம் விழுந்து போச்சி டிராக் டேஞ்சர்ல இருக்கு வண்டிவ இஞ்ச் இஞ்சா நவுறுது’ சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டிருந்த அந்த வெண்தாடி ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லிக்கொண்டார்.
வண்டி தாம்பரம் என்றுதான்  ஒரு பலகையை தொங்க விட்டுக்கொண்டு உறுமி உறுமி  பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றுகொண்டது.
எல்லோரும் எச்சரிக்கையாக ஏறி இறங்க வேண்டும் என்பதைச்சொல்லி போலிஸ்காரர் ஒருவர் நெடிய விசில் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். எப்போதும் நான் வெண்டர்களுக்கான கம்பார்ட்மெண்டை த்தேடி ஏறுவேன். அங்குதான் இடம் தாராளமாக இருக்கும். நிற்பது நடப்பது சவுகரியமாக இருக்கும்.
இனி பழவந்தாங்கல்,மீனம்பாக்கம்,திரிசூலம்.பல்லாவரம்,குரோம்பேட்டை தாம்பரம்,சானடோரியம் தாண்டித்தாண்டி அந்த தாம்பரம் வரும். வண்டி மெதுவாகவே சென்றது. வேடிக்கை பார்த்துக்கொண்டே வண்டியில் அமர்ந்திருந்தோம். தாம்பரம் நிலையம் வந்தது. என் மனைவி விரும்பிய படி முதல் பிளாட்ஃபாரத்திலேயே வண்டி நின்றது. எல்லோருக்கும் சவுகரியம்.
‘ஆவின் பூத்துல ஒரு பால் சாப்புடலாம்’ நான் சொன்ன யோசனைக்கு எல்லோரும் ஆமாம் போட்டனர்.
‘பசியா இருக்குதா’
யாரும் பதில் சொல்லவில்லை.
என் அண்ணனையும் என் மனைவியையும்  இருப்புப்பாதை போலிஸ் நிலையம் வாயிலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்துவிட்டு நான் பால் பூத்துக்கு சென்றேன். நான் ஒரு மசாலபால் குடித்துவிட்டு இன்னும் இரண்டு என கையில் வாங்கிக்கொண்டு முதல் பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலின் பெட்டி வழியே இந்த பக்கம் எளிதாக வந்துவிட்டேன்.
‘வண்டி இன்னும் நிக்குது’
‘ஆமாம் அது ஒரு சவுகரியம்’’ அவளுக்கு நான் பதில் சொன்னேன்.
அனைவரும் தாம்பரம் மேற்கு ஸ்டேஷனின் நுழைவுப்பகுதிக்கு வந்தோம்.
‘ஐம்பத்தைந்து எண் கொண்ட நகரப்பேருந்து செல்ல ஆரம்பித்துவிட்டதா’ என விசாரித்தேன். ஒன்றிரெண்டு செல்வதாக அங்கிருந்தவர்கள் எனக்குப்பதில் தந்தார்கள்.அப்படியெல்லாம் சென்னைவாசிகளிடம் நாம் பதில் எதுவும் வாங்கிவிடமுடியாது. இந்த மழை வெள்ளம் கொஞ்சம் அவர்களை மாற்றித்தான் வைத்திருக்கிறது.
‘எதாவது வாங்கணுமா’
‘குடிக்கறதுக்கு  தண்ணி பாட்டில் வாங்கிகலாம்.அங்க கெடைக்குமோ’ என் மனைவி உஷாராகப்பதில் சொன்னாள். நான்கைந்து பாட்டில்கள் வாங்கி வைத்துகோண்டோம்.
‘தண்ணீர் கையில் இல்லாவிட்டல் தாகம் அதிகம் எடுக்கும்.இருந்துவிட்டால் அவ்வளவு தெரியாது’ என் அண்ணா சொல்லி சிரித்துக்கொண்டார்.
ஐம்பத்தைந்து எண்  போட்டுக்கொண்ட பேருந்து ஒன்று ஊர்ந்து ஊர்ந்து வந்து சாலை ஓரமாக நின்றது. ஒரே மூத்திர நேடி. எந்த பேருந்து நிலையமும் இப்படித்தான் நாறுகிறது.இதை எல்லாம் மாற்றமுடியுமா  இல்லை அது முடியாதா என்றுதான் தெரியவில்லை. மூக்கைப்பிடித்துக்கொண்டே பேருந்தில் ஏறிவிட்டோம்.
‘வண்டி பார்வதி நகர் போகுதா’
‘ நீங்க எங்க போவுணும்?’
கண்டக்டர் எங்களைக்கேட்டார்.
‘ நாங்க பார்வதி நகருதான் போவுணும்’
‘அப்ப ஏறுங்க சட்டுனு’ என்றார். மூவரும் ஏறி அமர்ந்துகொண்டோம்.அனேக இருக்கைகள் காலியாகக்கிடந்தன. மீன் கூடைக்காரிகள் இருவர் மீன்களை கூடையில் நிரப்பிக்கொண்டு வந்திருந்தனர்.
‘இதுகள் நாங்க ஏத்த மாட்டம்’
‘எப்பிடி நாங்க எடுத்துகினு போவுறது’
அவர்கள் கேள்வி வைத்தார்கள்.
‘அத யாருகிட்ட கேக்குறது’
‘ஏன் ஒங்கிட்டதான். மீனு திம்பியா மாட்டியா இல்ல  நான் கேக்குறன்’ ஒரு மீன் கூடைக்காரி கண்டக்டரிடம் கேள்வி வைத்தாள்.
கண்டக்டர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவர் அவரின் பணியைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
‘பாப்பார சனமே கெனமா மீனு திங்குது. ஆனா வெளியில. வூட்டுல வாங்கி ஆக்கறதுதான்  இல்ல.’
ஒருகூடைக்காரி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
‘ஏன் மீனுவ சமச்சி சம்மணம் போட்டுக்கிட்டு திங்குற பாப்பார சனம் கூட  இருக்கு அது .கலுகத்தாவுல. நானு ஒரு மொற போய்வந்தன்’ 
‘ நீ ராச்சியம் சுத்தி இருக்குற’ அடுத்தவள் பதில் சொன்னாள். வண்டி கிருஷ்ணா நகர் தாண்டிக்கொண்டிருந்தது. பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் பேருந்துகளும் சுமையுந்துகளும் வரிசையாக சென்றுகொண்டே இருந்தன. கிருஷ்ணா நகர் சாலையில் இன்னும் வெள்ள நீர் வழிந்தபாடில்லை. பேருந்து தத்தி தத்தி சென்றது.
‘இந்த எரியா ரொம்ப பள்ளம்.ரவ மழை பேஞ்சாலும் ரோடுவ நாஸ்தி.எப்பவும் இந்த பிரச்சனை உண்டு.’
என் மனைவி சொல்லிகொண்டிருந்தாள்.
‘ நாம அடையாத்துக்கு பக்கத்துல வீடு கட்டினது. நம்ப தப்பு’ என் அண்ணன் ஆரம்பித்து வைத்தார்.
‘ நாம என்ன செய்யறது. எங்க  நாம குடி இருக்குணும்னு விதி இருக்கோ அங்கதான் அத அத செய்யமுடியும்’ என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பாரதி நகர் வந்தது. பெரிய நகரங்களில் ஊர் பெயர் குழப்பம் மிகையாக அதனை அனுபவிக்கலாம். நாங்கள் பார்வதி நகர் இறங்க வேண்டும். பாரதி நகருக்கும் பார்வதி நகருக்கும் இடையே குழப்பம் வந்து சிலர் விழிப்பதைப்பார்த்து இருக்கிறேன். பார்வதி நகருக்கு வரவேண்டியவர்கள் பாரதி நகரில் இறங்கி ஆட்டோகாரனோடு தகறாறு செய்துகொண்டு நிற்பதைப்பார்த்து இருக்கிறேன்.
ல‌ஷ்மி புரம் என்று ஒரு நிறுத்தம் ஷ்மி  நகர் என்று இன்னொரு நிறுத்தம்.இதற்கும் அதற்கும் குழப்பிக்கொண்டு நிற்கும் வெளியூர்க்காரர்கள் இதே சாலையில் எத்தனையோ பேர்.
 மொபைல் தொலைபேசி வந்த பிறகு  ஆட்டோக்காரன் சண்டை வெகுவாக  குறைந்துதான் இருக்கின்றது. ஆனாலும் சண்டைகள் இல்லாமல் இல்லை. கை தொலை பேசி இல்லாத அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த திருச்சிக்காரர்கள் என் சொந்த ஊர் தருங்குடிக்கு ப்பதிலாக  பத்து கிலோமீட்டருக்கு தூரமாக இருக்கும்                                                                        (நெய்வேலி ) தர்மல் ஸ்டேஷன் நிறுத்தம் போய் திரு திரு என்றுவிழித்துவிட்டுப் பின் எங்கள் கிராமம் தருமங்குடிக்கு வந்து சேர்ந்த கதை அடிக்கடி என்  நினைவுக்கு வந்துபோகும்.
  பழைய பெருங்களத்தூர் தாண்டி பார்வதி நகரில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ரேஷன் கடை இருக்கும் தெரு தான் நாங்கள் எப்போதும் வழக்கமாக செல்லும் தெரு.ரேஷன்கடை பூட்டிக்கிடந்தது. இந்த மழை வெள்ள க்காலங்களில் என்ன பொருள் வரப்போகிறது யார் வாங்கப்போகிறார்கள். பிள்ளையார் கோவில் தெரு தாண்டினோம்.
நேதாஜி நகர் வந்தது.  இரண்டாவது தெருவில் இருக்கும் என் வீட்டிற்கும் வந்தாயிற்று.தெருவில் இன்னும் சேரும் சகதியும் வீச்சமடித்துக்கொண்டேதான் இருந்தது.என் அண்ணன்  வீடுகளையெல்லாம் மேலும் கீழுமாக பார்த்தபடியே ஏதோ யோசனையில் இருந்தார்.
‘என்ன யோசனை’
‘ஏன்தான்  இங்கே வீடு  நமக்கு அமைந்து போனது. நீ இப்படி எல்லாம் அவஸ்த்தை படத்தான் வேண்டுமா யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.யார் யாருக்கு எங்கே எப்படி  குப்பை கொட்டவேண்டும் என்று விதித்து இருக்கிறதோ அப்படித்தானே’ அண்ணன் தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். 
                     அந்தப்   பரணிதான் அண்ணா  பையன் வீட்டில் குடியிருந்தார். இப்போது வீடு பரிதாபமாய் பூட்டிக்கிடந்தது. யாரும் இல்லை. அண்ணன் அத்தனையும் நோட்டம்விட்டு  பார்த்துக்கொண்டார்.
கீழ் வீட்டைத்திறந்து என்மனைவி உள்ளாக பார்த்துக்கொண்டே இருந்தாள். மூக்கை மூடி மூடித்திறந்து அனுபவிக்கும் துர் நாற்றத்தை அறிவித்தபடி இருந்தாள்.
‘ரெண்டு ஆளு இருந்தாதான் இந்த வேலைக்கு சரியா இருக்கும். ஆளு கெடைக்குதான்னு பாருங்க’
’ நம்மால ஆவுற கதை ஒண்ணும் இல்லயா’
நான்தான் என் மனைவியைக்கேட்டேன்..
‘யாராவது செஞ்சா கூட மாட நிக்கலாம். வேற ஒண்ணும் செய்ய முடியாது.ஒரே சேறு சகதி குப்பை நாற்றம்.வேற சொல்ல என்ன இருக்கு’
நான் தெருவுக்குச்சென்று ஆட்கள் ஏதும் கிடைப்பார்களா என தேடிக்கொண்டே இருந்தேன். தூரத்தில் இரண்டு பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
‘அம்மா இங்க வர்ரீங்களா’
‘வீடு சுத்தம் பண்ணணுமா’ அவர்கள் எதிர் கேள்வி வைத்தார்கள்.
’ஆமாம் ஆளுவ உடனே வேணும். வாங்க’
‘தோ வர்ரம்’ அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.பிரச்சனை ஒருவிதமாக தீர்ந்துவிடும் என முடிவு செய்தேன்.
அண்ணன் தன்னால் முடிந்த வேலைகளை விடாமல் செய்துகொண்டே இருந்தார். அவர் சுபாவம் அது. எங்கள் தந்தையும் இப்படித்தான் இருப்பார். உறங்குகின்ற நேரம் தவிர்த்து ஏதும் செய்துகொண்டேதான் இருப்பார்.யார் வீடு யார் செய்யும் வேலை இதெல்லாம் அவருக்கு ஒருபொருட்டே இல்லை
‘வூட பாக்குறம் மொதல்ல அதுக்கு தக்கன கூலி பேசிக்குவோம்’
இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
என் மனைவி அவர்களுக்கு கீழ் வீட்டை க்காட்டிக்கொண்டு இருந்தாள்.
‘வூடு சின்னது ஆனா வேல கெனம்’ குள்ளமானவள் சட்டமாக சொன்னாள்.
‘மொதல்ல பேசிக்கறம் ஆளுக்கு ஆயிரம்னு ரெண்டாயிரம் குடுங்க. நாங்க வேலய தொடங்கறம்’
 நான் யோசிக்க தொடங்கினேன்.
’‘இதுல என்னா யோசனை’ என் மனைவி மெதுவாகச்சொன்னாள்.
‘ஒண்ணும் தப்பில்ல வேல ஆவுறதுதான் நாம பாக்குணும்’ என் அண்ணன் முடிவாகச்சொன்னார்.
இரண்டு பெண்களும் வேலயை ஆரம்பித்தனர். இருவரும் கையில் வைத்திருந்த பையிலிருந்துபழந்துணி  ஒன்றை எடுத்து மேலாகச்சுற்றிக்கொண்டனர். அழுக்குப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடு இது.
 நனைந்த சாமான்கள் எல்லாம் சேறு பூசிகொண்டு காட்சி அளித்தன. என் சின்ன மகனின் புத்தகங்கள் ஒரு அம்பாரம் இருக்கும்.அது கொழ கொழ என்று குவியலாகக்கிடந்தது.ஸ்டீல் பீரோ வில் இருந்த துணிமணிகள் எல்லாம் நொத நொத என காணப்பட்டன.மளிகை சாமான்கள் கன்னா பின்னாவென்று நாற்றமெடுத்துக்கொண்டு சமையல் அறையில் நாறிப்போய்க்கிடந்தது. இரண்டு பெண்களும் பம்பரமாக வேலை செய்தார்கள்.
எங்கள் வீட்டின் அடுத்த மனை காலியாகத்தான் கிடந்தது.அங்கே ஒரு மாமரம் நின்றுகொண்டிருக்கும் முதல் வீட்டு  ராஜசேகர் சார் வைத்ததுஅது. இந்த ப்பகுதி சிறுவர்களுக்கு  தின்னக்காய் மாங்காய் கொடுத்து உதவியது. அதன் கீழாக வெள்ள நீர் நின்று கொண்டிருந்தது.அந்த நீரை த்தான் வாளி வாளி யாக மொண்டு வந்து ரெண்டு பெண்களும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.பாத்திரங்கள் துணிமணிகள் சுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எறியப்படவேண்டிய குப்பைகள் ஏகத்துக்கு இருந்தன.அவை தெருவுக்கு வந்தன. புத்தகங்கள் ஏதேனும் தேறுமா எனப்பார்த்துக்கொண்டிருந்தேன்.என் சின்ன பையனின் புத்தகங்கள் என்ஜினீரிங் புத்தகங்கள் கோவிந்தா ஆகியிருந்தது.ஃப்ரிஜ் செத்துப்போயிருந்தது.சாம்சங் டிவி வெளி நாட்டிலிருந்து சின்னவனின் நண்பன் அனுப்பியிருந்தது கொழ கொழத்துக்கிடந்தது.மடிக்கணினி லெனொவா ஜலசமாதியாகிக்காட்சி தந்தது. மின் விசிறிகள் சேறு பூசிக்கொண்டு காட்சி தந்தன. எல்லாவற்றிலும் தண்ணீர் புகுந்து மொத்தமாய் பெறுத்த நஷ்டத்தை கொண்டு வந்திருந்தது. தரையில் இரண்டு அங்குலத்திற்கு மண் படுக்கை. நண்டும் நத்தையும் பூரானும் அதன் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.எல்லாவற்றையும் சரியாக அந்த இரண்டு பெண்களும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
என் அண்ணன் கூடமாட ஒத்தாசை செய்துகொண்டே இருந்தார்.என் மனைவி அசந்துபோய் உட்கார்ந்து விட்டாள்.
தெருவில் ‘சார் சார்’ என அழைக்கும் ஒலி கேட்டது. யாரென்று எட்டிப்பார்த்தேன்.
‘இங்க ரெண்டு பொம்பள ஆளுவ வேல செய்யுதா’
‘ஆமாம்’
‘அதுவுள கூப்பிடுங்க’
தலையில் முண்டாசுகட்டிய ஒருவன் என்னை விரட்டிக்கொண்டு இருந்தான்.
‘ நீங்க யாரு ஏன் அவுங்கள் கூப்பிடுறீங்க’
நான்தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்பதாகக்காட்டிக்கொண்டேன்.
‘யாரு அண்ணனா’ கேட்டுக்கொண்டே இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
’வா வா வெளியில வா’
நான் வாயடைத்துப்போய் நின்றுகொண்டிருந்தேன்.ஏன் இப்படி இவர்களை க்கூப்பிடுகிறான்?
இரண்டு பெண்களும் கைகளைக்கட்டிக்கொண்டு அந்த ஆள் முன்னே வந்து நின்றனர்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘ஆர கேட்டுகிட்டு இந்த வேலைக்கு வந்தீங்க’
‘தெருவுல போனம் கூப்புட்டாங்க வந்தம்’
இருவரும் கோரஸாக  பதில் தந்தனர். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
‘இப்ப என்ன செய்யுணும்’ என் அண்ணன் அவனைக்  கேட்டுவிட்டார்.                           அண்ணனுக்கு எதிலும் சட்டென்று கோபம் வந்துதான் விடுகிறது. எங்கள் தருமங்குடி வாழ்க்கையின் போது என் அம்மா எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தாள். அண்ணன் அம்மாவை இந்த விஷயத்தில் மாத்திரம் லட்சியமே செய்யமாட்டார்.அம்மாவை தெய்வம் என மதித்தவர் தான்.ஆனால் சில விஷயஙளில் மொரட்டு பிடிவாதக்காரர்.
‘இந்த வூட்டுக்கு முன்னாடி அட்வான்சு வாங்கன வூட்டு வேல கெடக்குது. இங்க வந்து புது வேல தொட்டுகிட்டு நிக்குறீங்க.அவவுளுக்குவதில் சொல்லுறது எப்பிடி.சரி அது என் சோலிகெடக்குட்டும்.இங்க என்ன பேசிக்கிட்டு வந்து வேலய தொட்டிங்க’
‘ஆளுக்கு ஆயிரம்னு பேசி இருக்கம்’
‘அடி செருப்பால. ஆளுக்கு ரேண்டாயிரம்னு பேசி இருக்கணும். பேசத்தெரியாம பேசிபுட்டு வேலய தொடுறீங்க யாரு செமக்குறது. இந்த கசமாலத்தை எல்லாம் கழுவுரதுன்னா சும்மாவா. நாளைக்கு சொரம் வாந்தின்னு வந்தா இவுங்க பின்னாடி தொறத்திகிட்டு போவியா. கைகாலு கழுவ மூணு சோப்பு ஆவும் அத்தினியும் நரவ. அதுவுளுக்கு வேல ஆனா போதும்னு நிக்கும். நாம தெனம் வேலக்கிபோவுணும். ஒரு நாளய கூத்தா ஆடிபுட்டு மூலையில மொடங்கிகறதா தெரிய வேணாம்’
அந்த பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு நின்றார்கள்.
‘ஒன்னால நான் கெட்டன் என்னால நீ கெட்ட சமாச்சரம் இல்ல’ வந்தவன் விரட்ட ஆரம்பித்தான்.
நான் இதை எப்படி சமாளிக்கலாம் என யோசனையில் இறங்கினேன்.’ என் மனைவி என்னிடம் வந்தாள். வந்தவனுக்கு என்ன வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.
‘’இப்ப எப்பிடி வேல ஆவுறது’
‘சாரு அந்த பொம்பளவ ரெண்டாலும் கெட்டது. வேல உங்களுக்கு பட்டுன்னு ஆவுது அது பெரிசு. இன்னும் ஒரு ஆயிரம் ரூவா குடுத்துடுங்க ஒண்ணும் பாக்காதிங்க.’
‘இது ஒண்ணும்  சரியா தெரியல’
‘சாரு எவ்வளவோ போவுது எவ்வளவோ வருது இப்ப வெள்ளம் வரும்னு யாரு கண்டா.ஆச்சி போச்சி எம்மானோ ஆயிபோச்சி.ரடசக் கணக்குல நஸ்டம்னு தெரிஞ்சிதான் பெறவு சீரு பண்றம். அப்படியே உட்டுடமுடியுமா சொல்லுங்க இதுல கணக்கு பாக்காதிங்க’
அந்த பெண்கள் இருவரும் வேலையைத்தொடர்ந்துகொண்டனர்.
‘ நீங்க போயி ஆவுற கதையை பாருங்க. சாரு கொஞ்சம் யோசனை பண்ணுறாரு அதுல என்னா இருக்கு.ஒரு குடும்பஸ்தன்னா இது கூடம் இல்லன்னா என்னா ஆவுறது. ஆருக்கும் இருக்குறதுதான’
அவன் சொல்லிக்கொண்டே போனான். நான் ஒன்றும் பதில் பேசவில்லை.என் அண்ணன் அவர் வேலையை ஏதோ பார்க்க ஆரம்பித்தார். என் மனைவி அந்தப்பெண்களோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.வந்து சத்தம் போட்ட அந்த ஆசாமியும் இடத்தைக்காலிசெய்து புறப்பட்டார்.
‘ நாங்க எங்க வேலைக்கு போனாலும் அந்த அசாமிக்கு ஒரு நாளைக்கு அய்நூறு ரூவா குடுத்துடணும்,ரெண்டு பேருக்கும் தலா அய்நூறுன்னு ஆயிரமாவுது அதான் கணக்கு.இந்தக்கழுத எங்கயோ ஊருக்குப்போயிருக்குன்னு யாரோ சொன்னாங்கன்னு நாங்க கெளம்பிவந்தம்.அது தான் இமுஷை.'என்றாள்  வந்த இருவரி;ல் உயரமான பெண்.
அனேகமாக வந்த வேலை அனேகமாக முடிந்தும் விட்டது. சும்மா சொல்லக்கூடாது. பம்பரமாகவே வேலை செய்து ஒருவழியாக அதை அதை அசமடக்கிவிட்டார்கள்.ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவி வீடு சுத்தமாகிவிட்டது.வீடு பளிச்சென்று இருந்தது.
ரெண்டாயிரத்தோடு ஆயிரம் கூட்டி மூவாயிரம் கொடுத்து அந்த பெண்கள் இருவரையும் அனுப்பிவைத்தோம்.
‘ஆயிரம் அவுருக்கு ப்பூடும்’ என்றாள் அந்த உயரமானவள்.’
‘அதுக்கு என்ன வெட்டிப்பியா  குத்திப்பியா கெளம்பு கெளம்பு’ என்றாள் அடுத்தவள்.
வீதியில் ஐந்து பேருக்கு நின்று வெள்ளச்சேதம் கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். தூரத்தில் அரசாங்க ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. வீட்டுக்கு வீடு ஒருவிண்ணப்பம் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.அந்த விண்ணப்பம் பூர்த்திசெய்து அதனொடு ரேஷன் கார்டு செராக்ஸ் வங்கிக்கணக்கின் புத்தக முதல் பக்க செராக்ஸ் இணைத்து அதனை அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கும் ஒரு விண்ணப்பம் வந்தது. வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
அரசாங்க ஜீப்பிற்கு பின்புறமாக ஒரு வேன் வந்து நின்றது. அங்கிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. ஒலி பெருக்கி வைத்து இருந்தார்கள்.’உணவுப்பொட்டலங்கள் வேனில் அடுக்கி வைத்திருந்தார்கள்.தமிழ் நாடு தொலைபேசி ஊழியர் சங்கம் என்று சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட பேனர் ஒன்று வேனில் மய்யமாய் கட்டப்பட்டிருந்தது.அதனிலிருந்து நான்கு பேருக்கு இறங்கி உணவுப்  பொட்டலங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார்கள்.
‘’ நீங்க எல்லாம் எந்த ஊர் காரங்க’
என் அண்ணன் அவர்களை க்கேட்டார்.
‘ நாங்க கடலூர்ல இருந்து வர்ரோம். கடலூர் டெலிபோன் ஆபிசுல வேல செய்யுறவங்க’
‘ நீங்க இவ்வளவு தூரம் வந்து எங்களுக்கு உதவி செய்றீங்களே’
‘’மனுஷங்க எங்க கஷ்டப்பட்டாலும் ஒண்ணுதானே.கொஞ்சம் தூரம் வந்து இருக்கம் அவ்வளவுதான். எங்க ஊர் கடலூர்ல சுனாமி வந்துது.   அப்ப யாரு யாரு எல்லாம் எங்க எங்கேந்தோ வந்து உதவினாங்க. நாங்களும் அப்பிடி எங்கயாவது கஷ்டம்னா போயிடுவோம்.’
‘உங்க சம்பளம் போனசுன்னுதானே நீங்க தெருவுக்கு வருவீங்க இப்படி க்கூட வருவீங்களா’’
‘இல்ல நாங்க அப்பிடி இல்லே. இந்த சமுதாயத்தை நேசிக்கணும்னு எங்க தலைவருங்க சொல்லிகொடுத்து இருக்காங்க.சுய நலமா வாழுறது வாழ்க்கை இல்லேன்னு  எங்களுக்கு சொல்லிதான் குடுத்து இருக்காங்க.’
உயரமான ஒரு மனிதர் சொல்லிக்கொண்டிருந்தார். வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் கட்டியிருந்தார்.அவரின் கட்டளைகளை அவரோடு வந்திருந்த அனைவரும் கேட்டு நடந்துகொள்வதாகவே தெரிந்தது.
என் அண்ணன் எங்களுக்கு நான்கு பொட்டலங்களை வாங்கி வந்தார். தண்ணீர் பாட்டில்களும் தந்தார்கள் கருணைமிக்க அந்த தொலைபேசி ஊழியர்கள்.
என் அண்ணன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்.
‘ நம்பிக்கை இருக்கு அவ்வளவு சீக்கிரம் ஒண்ணும் ஒலகம் அழிஞ்சிடாது’ சொல்லிக்கொண்டே எல்லோரும் உணவு சாப்பிட்டோம்.
அண்ணி மதிய உணவுக்கென நாங்கள் கிளம்பும்போது எங்களோடு அனுப்பியது அப்படியே இருந்தது.
‘அந்த உணவு நாம் ஆதம்பாக்கத்திலிருந்து கொண்டுவந்தது குரோம்பேட்டைக்கே எடுத்துச்சென்றுவிடலாம்’ நான்தான் சொன்னேன்
‘அதுவும் சரி’ என் அண்ணன் ஆமோதித்தார்.
வீதியில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் நிரப்பிய பைகளை இரண்டு கைகளிலும் வைத்துக்கோண்டு கொடுத்துக்கொண்டே ஒரு சொட்டைத்தலை மனிதர் போனார்.தலை சொட்டையாக இருந்தது அப்படிச்சொல்வதினால்.அவர் மீது எனக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் நீங்கள் ஒரு தப்புக் கணக்குப்போட்டுவிடாதீர்கள்
‘இந்தாங்க மூணு பேருன்னா மூணு பாக்கெட்டு’ எங்களிடம் கொடுத்துப்போனார்.
‘ நீங்க யாருன்னு தெரியல’ நான்தான் கேட்டேன்.
‘’உங்க ஒறவு க்காரந்தான்’ சொல்லிவிட்டு போய்க்கோண்டே இருந்தார்.இப்படி எத்தனையோ பேர் உதவி செய்துகொண்டே போனார்கள். தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் ஷண்முகக்கடவுளை வணங்கிப்பாடுவார் வள்ளலார். 
இந்த மழை வெள்ளம் வந்து சென்னை மக்களின்  மனம் எத்தனைப்பெரியது என்பதை உலகுக்கே அறிவிப்பு செய்தது.துணிமணிகள் சோப்புக்கள் தின்பண்டங்கள் ஆயத்த ஆடைகள் போர்வைகள் கம்பளிகள்  கோரைப்பாய்கள் வேட்டிப்புடவைகள் மருந்துப்பொருள்கள் என கொடுத்துக்கொண்டே இருந்தனர். 
வீட்டுக்கு மின்சாரம் வந்துவிட்டது என்றால்தான்  நிலமை சரியாக த்தொடங்கிவிட்டது எனக்கொள்ளமுடியும். அது என்று வருமோ மின்கம்பங்கள் மின்மாற்றிகள் வயர்கள் இன்சுலேட்டர்கள் என்று இருக்கும் தேவைகள் சொல்லிமாளாது. நிலமையைச்சீர்செய்ய  நுணுக்கம் அறிந்த மனிதர்கள் எங்கிருந்தோ வந்து ஆகவேண்டும்.அதற்கான அரசு உத்தரவுகள்: வெளிவந்து அவை அமல் ஆகவும் வேண்டும்.
என் அண்ணனிடம் சொன்னேன் ,’ நீ பார்வதி நகர் பேருந்து நிறுத்தம்வரைக்கும் போ. ஒரு குட்டியானை கிடைக்கிறதா என்று பார். நமக்கு அவசரத்துக்கு த்தேவையான பாத்திரங்கள் மளிகை சாமான்கள் அடுப்பு சிலிண்டர் கொஞ்சம் துணிமணிகள் ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை வீட்டுக்குச்சென்றாகவேண்டும்’
‘அது என்னப்பா குட்டியானை’
‘மினி லாரியைவிட இன்னும் கொஞ்சம் சின்ன வண்டி உனக்குத்தெரியாதா’
‘இருந்தாலும் கேட்டுக்கொள்ளலாம் என்றுதான்’
‘பெரிய பேரம் ஒன்றும் பெசவேண்டாம்.வண்டி கிடைத்தால் போதும்’
‘சரி நான் போய் வருகிறேன்’ அண்ணன் கிளம்பினார்.
என் மனைவி தேவையான பாத்திரங்களையும் மளிகை சாமான்களையும் ஒரு ஓரமாக அடுக்க ஆரம்பித்தாள் நான் கேஸடுப்பை சிலிண்டரைக்கொண்டுவந்து அவைகளோடு சேர்த்தேன். இன்னும் என்ன என்ன தேவையோ அவைகளை அவள் கொண்டு வந்து கொண்டு வந்து அடுக்கினாள்..
‘ நாம வச்சிருந்த ஆல்பம் எல்லாம் போயிடுச்சி பாத்தியா’
‘அதை பார்த்தேன்’ என்றாள் நான்கைந்து ஆல்பங்களுக்கு இருக்கலாம்.என் திருமண ஆல்பமும் அதனில் இருந்தது.என் தய் தந்தையர் என்னுடன் பிறந்தோர் நண்பர்கள் என எல்லோரும். போட்டோக்கள் எண்ணிக்கை  ஐநூறு இருக்கலாம்.எல்லாம் கொழ கொழ என்று இருந்தன.
‘இவைகளை மொட்டை மாடியில் முதலிலேயே காயவைத்து இருக்கலாம்’
‘கடைசியாகத்தானே அவைகளை ப்பார்த்தோம்’
‘மேல்தள வீட்டினுள்ளேயே அவைகளை பிரித்து பிரித்து வைத்துவிட்டு சென்றும்  இருக்கலாம்’
’அவை போனது போனதுதான்’
‘முயற்சி செய்வோம் பார்க்கலாம். பஸ் ஸ்டாப்பிங் அருகே ஒரு ஸ்டுடியோக்காரன் இருக்கிறானே'’
என்றாள் மனைவி.
வெள்ளம் எத்தனையோ விழுங்கியிருக்கிறது.. கடலூரில் சுனாமி வந்தபோது இவை எல்லாம் பார்த்த விஷயங்கள். வரலாற்றில் தமிழ் நாட்டை எத்தனையோ கடல் சீற்றங்கள் பாதித்து இருக்கின்றன. முதல் சங்கம் இரண்டாவது தமிழ் சங்கம் குமரிக்கு தெற்கே இருந்த நிலப்பரப்பு  காவிரி கடல் சேரும் பூம்புகார் நகரம் இன்னும் எத்தனையோ. திருச்சி அரியலூர் பகுதியே ஒரு காலத்தில் கடலாக இருந்ததென்று ஆராய்ச்சிக்காரர்கள் அங்கு கிடைக்கும் சுண்ணாம்புக்கல்லை வைத்துச்  செய்திசொல்கிறார்கள். பிரபஞ்சத்தை நோக்க இந்த மனிதன் ஒரு கொசு மாதிரிதான் மனம் சொல்லிக்கொண்டே போனது.
‘என்ன யோசனை’
‘ஒன்றுமில்லை’ அவளிடம் பொய்தான் சொன்னேன்.
அதற்குள்ளாக மினி லாரி யை அழைத்துக்கொண்டு அண்ணன் வீட்டுவாசலுக்கு வந்து விட்டார்.மினி லாரியின் டிரைவர் வண்டியைவிட்டு கீழே இறங்கி’ சாமானுவுள ஏத்துங்க பட்டு பட்டுன்னு ஆவுட்டும் வேல’
சத்தம் போட்டார். அண்ணன் தயாராக இருந்த சாமான்களை ஒவ்வொன்றாக லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார்.  எடுத்துச்செல்ல வேண்டிய எல்லாசாமான்களும் ஏற்றிமுடித்து அண்ணன் லாரியின் பின்னே ஏறி அமர்ந்துகொண்டார். நானும் என் மனைவியும் டிரைவர் பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டோம்.
‘வண்டிக்கு என்ன பேசியிருக்காரு உங்க அண்ணன்’
என் மனைவி என்னிடம் கேட்டாள்.
‘அவரத்தான் கேட்கணும்’
‘ நீங்க  குடுக்கறத குடுங்க நா ஒண்ணும் கூட கேட்டுடமாட்டன்’ வண்டியின்’ டிரைவர் சொல்லிக்கொண்டான்.
நாங்கள் இருவரும் உட்கார இடம் பத்தவே இல்லை. அண்ணன் வண்டியின் பின்னே சாமான்களோடு சாமான்களாக உட்கார்ந்து வந்துகொண்டிருந்தார்.
வண்டி குரோம்பேட்டை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.குமரன் குன்றம் போகும் வழியில்தான் அந்த மேல் போர்ஷன் வீடு.  வெள்ளம் புகுந்த நேதாஜி நகர் என்  வீட்டுக்குப்பக்கத்து வீட்டுக்காரர் அந்த பரணிதான் பார்த்துக்கொடுத்து இருக்கிறாரே அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறோம். .
----------------------------------------------------




 ...





 .



.


.