Thursday, October 7, 2021

கவிதை. தேர் தெளி

 தேர்- தெளி                

 

சாதிகள் எத்தனை

யார் கொண்டு தந்தார்

பச்சை த்துரோகிகள்

பாவி மனிதர்கள்

மானுடப்பதர்கள்

போடு கோஷத்தை

கிழியட்டும் தொண்டை

சாதிதான் அரசியல்

சாதிதான் சாதிக்கும்

சாதி மட்டுமே முகவரி

சாதியைப்பிடித்துத்தொங்கு

சாதியை மறந்தோன்

நடுத்தெரு நாயாகிக்

படுவான் கல்லடி

வைத்திடு நெஞ்சத்தில்.

எத்தனை பேர் உன்னோடு

துணை நிற்பர் எப்போதும்

எண்ணிக்கை அரசியல்

நிர்ணயிக்கும் மந்திரம்

பிறவெல்லாம் பீற்றல்கள்..
-----------------------------

 


No comments:

Post a Comment