Tuesday, August 11, 2026

அவரவர் நியாயங்கள்- முன்னுரை

 

 

 

வணக்கம்  வாசகர்களே

’பிரம்ம முடிச்சு’   அழககியசிங்கர்  நடத்திய  அசோகமித்திரன் நினைவுச்சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதை.’அவரவர் நியாயங்கள்’

இது என்னுடைய 13 வது சிறுகதைத்தொகுப்பு.  சிறுகதை யின்  வடிவமோ உருவில் சிறியது. செயல்பாட்டால்  சிறந்தது. எழுத்தாளன் தான் சொல்ல நினைப்பதை நறுக்குத்தெரித்தாற்போல்  ஒரு சிறு கதையில்  மட்டுமே சொல்லி விடமுடியும்.  ஒரு  எழுத்தாளன்   வாசகனோடு  ஒன்றிப் பயணிப்பதற்குப்  பொறுத்தமான தளமிது.  எதிர்கொள்ளும் சம்பவங்களை மனிதர்களை நிகழ்வுகளை நாம் எப்படிப்பார்த்தோம் என்ன தெரிந்துகொண்டோம்  அடுத்தவர்க்கு எதைச் சொல்ல விழைகிறோம் என்பதே இங்கு மையமாகிறது.  ஒரு விடயத்தைச் சொல்லுகிற விதம் வாசிப்பவனை மேலும் மேலும்  வாசிக்கத் தூண்டுவதாய் அமைதல் படைப்புத் தளத்தில்  செய்நேர்த்தி எனலாம். ஒரு படைப்பு   எழுதப்பட்டகாலத்தைப் பிரதிபலிப்பதாகவும்  மக்கள் சமூகத்திற்கு எது சரி  எது நெறி என்பதை சிறு குறிப்பாலேனும் சுட்டிக் காட்டி நிற்பதாய்  அமைதல் படைப்பு நெறியாகும். இச்சிந்தனைகள் தோய்ந்த பிரக்ஞையோடுதான் எழுத்துக்களத்தில் எனது முயற்சிகள் யாவுமே.

இத்தொகுப்பில் வரும் பதினாறு கதைகளுமே அப்படித்தான் உருப்பெற்றன. இச்சிறுகதைகளை வெளியிட்ட  இலக்கிய இதழ்கள் சொல்வனம், தினமணிக்கதிர், திண்ணை,  குவிகம், விருட்சம் ,பேசும்புதியசக்தி ஆகியவற்றிர்க்கு நன்றியுடையேன்.

 

இத்தொகுப்பு பொருத்தமாய்  வெளிவர உதவிய பதிப்பாளர் நண்பர்  நாற்கரம் நல்லுவுக்கு நான் கடப்பாடுடையேன்.

என்  படைப்புக்களை வாசித்து தனது எண்ணங்கள் பகிரும் எனது மூத்த சகோதரி

 ஜெ. தருமாம்பாளுக்கு  இந்நூல்  எனது  அன்புக்காணிக்கை.                                                                                                                            

                                                                                                                                  எல்லோருக்கும் எனது  பணிவும் நன்றியும்  

                                                                                                                                                                                எஸ்ஸார்சி                        

23 ஏ இரண்டாவது தெரு, நேதாஜி நகர், பழைய பெருங்களத்தூர், சென்னை 600063

9443200455                                                                                                                                          

                                                                                                                                              

No comments:

Post a Comment