Tuesday, February 4, 2020

தேடு




தேடு

ஈசன் சிரசில் கங்கைப்புனல்
இந்திய சிரசில் காசுமீர் அனல்
அனல் மூட்டியவர்கள்
முனைந்தால் முடியலாம்
அவர்கள் மனமோ
தாழிட்டுக்கொண்டிருக்கிறது
தகவல் தெரிந்தவர்கள்
தமாசு பழகுகிறார்கள்.
மும்பைக்குக்கனத்துப்போனது தலை
வடக்கத்தியர் விரட்டப்பட்டு
தலை நிமிர
ஆட்டுகிறது வாலை

குசராத்தில் பணம் பெருத்தவர்கள்
மனம் சிறுத்து
மதப்பேயொடு
தேன் நிலா போகிறார்கள்
கீழை இந்தியாவில்
விதம் வேறு
மண்ணில் பிறந்தவர்களோடு
யாரெல்லாம் கூடுவது
கூடியவர்களின் எண்ணிக்கைக்
கூடிக்கொண்டே எப்படி?
ஒரிசாவிலும் மைசூரிலும்
சாமிச்சண்டை
எந்த சாமியப்பா அதிகம் போணி
வோட்டுக்கள் வேண்டுவோர்
வேட்டுக்கள் வேண்டுவோர்
நாட்டுக்குள் மலிந்தனர்
எப்படிப்பொறுக்கும்  இறை
இலங்கையில்
நித்தம் குண்டு மழை
தமிழ் ரத்தம் யாருடம்பில்
வீர்யமாய் ஓடுகிறது
முஸ்தீபு நடக்கிறது . 
பொன்விழா காணலாம்
உள்ளூர் நட்பிங்கு. 
’சந்திராயணம்’ தயாராகட்டும் சந்தோசம்
வல்லரசுக்கு அறிகுறி வரலாற்றில்.
நல்லரசு வேண்டும்
நாம் எங்கே போவது
தொலைந்துவிட்ட
தேசபிதாவைத்தேடிக்கண்டுபிடி
தெரியவரும் விடை..  (இலக்கியச்சிறகு 15/2009)
------------------------------------------------

ஈழம் மலரும்

வரலாறு மன்னிக்காது
என்றும் எம்மை
முள்ளிவாய்க்கால் சோகங்கள்
சொல்லி முடிவதுவா
ஆயிரம் ஆயிரம் சொந்த சோதரர்கள்
குருதிச்சேற்றில்
எத்தனை அழுகுரல்கள் அவலங்கள் அவமானங்கள்
அம்மணமாக்கிப்பொசுக்கித்தள்ளினர்.
லங்கையின் ராட்சதன் ராஜபட்சே
ஆணைதந்தான் தெய்வங்கள் ஊமையாயின
ரோசம் தொலைத்து
மோசம் போனது மொத்தமாய் யாம்
இலவசங்கள் பெருவதும்
இளித்து நிற்பதுவும் நடைமுறையாகி
தடித்துபோனது தமிழன் தோல்
இந்துவின்  ராம் வழிகாட்டுவதா எமக்கு.
இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழ்கிறோம் யாம்
அகங்காரம் விண்ணைமுட்ட
கொலைகள் கொலைகள் கொலைகள் மட்டுமே
புத்தரின் வழியில் ரத்தக்காட்டேறிகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர் சொல்லிக்
கண்ணை மூடிக்கொண்ட கயவர்கள் யாம்
தன்னினத்தான் மடிய சாட்சிகளாய் நிற்கும்
தமிழனை எப்படிப்பேசினால் என்ன
எருமைத்தமிழர்கள் யாம்  
வள்ளுவர்க்கோவாரிசு
நாட்டின் சொந்த மக்களையே
கொன்று குவித்த மோசக்காரனுக்குப்
பாசம் காட்டும் நீசர்கள்
சத்மேவ ஜயதே சொல்கிறார்கள்
அம்மணமாய் நிறுத்திவைத்து
அறுசுவை உண்டி தந்தால்
யார் எக்கேடு கெட்டால் என்ன
மீசைதான் யமக்கெதற்கு?
கொலைகள் முடிந்து கோரம் நிகழ்ந்தபின்னே
கண்ணைத்திறந்துகொண்டான்
அமெரிக்கன் அய்யோ போர்க்குற்றம் போர்க்குற்றம்
மலை மீதுஏறி முழங்கினான்
சங்கு பிடித்து..
ராஜபட்சேயை சொல்லாதே அப்படி
சுருங்கிப்போகிறார்கள்
கங்கையின் மைந்தர்கள் கீதை படித்தபடி
சங்கையில்லாது யாம்தான்
சட்டைபோட்டுக்கொண்டு உலா வருகிறோம்.
கிரிக்கெட்டு விளையாட லங்கைப்பயணம்
நேற்றும் இன்றும்
தாயை சகோதரியை அம்மணமாக்கி
சிதைத்த வெறி நாய்
கிலுகிலுப்பை ஆட்டிக்காட்டுகிறது
வழித்துக்கொண்டு வாயைப்பிளக்கிறோம் யாம்
இப்படியே போய்விடாது காலம்
கணக்கு நேர் செய்வோம் யாமும்
சாம்பலில் எழும் பீனிக்ஸ் பறவை
தருகிறது எமக்குப்பாடம். 
மண்ணுக்குள் உயிர்ப்பாகி மறைந்து கிடக்குது
எங்கள் தன்மானம்
இப்போ சொரணைகெட்டுக்கிடப்பதற்கு
வெட்கித்தலைகுனியும்
நாள் ஒன்று வராமலா போகும்
அன்றெங்கள் தமிழீழம் மலரும்.
---------------------------------------------( கலை இலக்கிய முகாம் கடலூர் NFTE 27/7/2012)
அது
வரவிருக்குது யுத்தம்
நான் எந்த ஆயுதம்
எடுக்கவேண்டுமென்று
என் எதிரி தீர்மானிக்கிறான்.
யார் எதிரி எனக்கு
எப்போதும் நானே
தீர்மானிக்கிறேன்- அது.

தேசபிதாவுக்கு
மாலைபோட
மண்டை உடைந்தது
நீயா அது நானா.
சண்டை ஏனாம்
சரியாப்போச்சு
பாற்கடலைக்கடைந்தபோதே
பங்கிடுதலில் கோளாறு.
வேண்டுமொரு
விசாரணைக்கமிஷன் -அது.


இல்லாத ஒன்றை
இருப்பதாய்ச்சொல்லு
இருப்பதொன்றை
இல்லாததுவாய்ச்சொல்லு.
உள்ளதைச்சொல்பவன்
உட்கார்ந்திருக்கட்டும்.
சும்மா இருந்தானே…
உண்மையின் கால்களைச்
சிதைத்துப்
பொய்மைக்குச்
சிறகு செய்யும் தருணம்-அது. (யுகமாயினி-1/2008)

அரக்கச்சிரிப்பு

பாசத்தால்
பாதரட்சைகள்
ஆட்சிக்கட்டிலில் ஏறிய
எம்மண்ணில்
ஆர் டி எக்ஸ்களின்
அமோக விளைச்சல்
மும்பை ரயில்கள்
மனிதக்குருதி
மனித நிணங்கள்
சுமக்கும் சுமை வண்டிகளாய்
பெற்றன மாற்றம்
எட்டு குண்டுகள்
தொடர்ந்து வெடித்தன
வாழைத்தோலாய்
இருப்புப்பெட்டிகள்.
மனிதர்கள் ஆயிரமாய்
குருதிச்சேற்றில்.
மும்பை நகரில்
இரண்டாம் முறை
அரக்கச்சிரிப்பு.
தொடருமோ இன்னும்!
மும்பாதேவிக்கும்
தொந்திக்கணபதிக்கும்
எட்டினால்தானே விஷயம் .
எறும்புகள் மிதிபடக்கூட
மனம் ஒப்பா
எம்மண்ணில்
எப்படிச்சாத்தியமிது
தத்துவத்தின் மூலக்கோளாறு
செயல் பாட்டில் வக்கிரமம்
ஆண்மையின் அம்மணம்
நெறிகள் கற்பிழந்தன.
யாருக்குப்பிரச்சனை
யார் சாவது?
ஏதும் அறியா
அப்பாவிகளைக்
கிழித்துப்போட்டது
மானுட அசிங்கம்.
அவமானம் அச்சம் 
பேடித்தனத்தின் உச்சம்
காறி உமிழலாம் கழுகுகள் கூட!
பூமித்தாயின்
வயிறு பற்றி
எரிகிறது
புத்தன் ஏசு
காந்தியையும் பெற்றிட்ட
பூமித்தாயின்
வயிறு பற்றி எரிகிறது.
--------------------------------------------------- (இலக்கியச்சிறகு 12/2006

குறுங்கவிதைகள்

மலையேற்றப் பயணம்
புழுக்கை புழுக்கையாய்ப்பேருந்துகள் வரிசை
இயேசு அழைக்கிறார்
எதிரே எழுதிச்சிரிக்கும் கல்.

மார்கழி வந்தால்
மந்தமாகின்றன காதுகள்
புளித்துப்போய்விட்ட 
அதே பக்திப்பாடல்கள்


அவிழ்வதில் சிக்கல்
உச்சிக்குப்போனபின்னே
விடுதலை நாள்  
கொடியேற்றம்.

கால் ஒடிந்த அம்மா.
கிராமத்துக்கொட்டகையோடு  
மாடிவீட்டு வாழ்க்கை
பட்டினத்தில் அவனது.---------------
-
அடிபட்டுக்கிடப்பவனை
கண்ணு உனக்கு எங்க பொடரியிலா
கேள்வி கேட்டார் ஆட்டோ ஓட்டி. 
காந்தி பொம்மை யொன்று 
பொக்கைச் சிரிப்போடு 
அவருக்கு முன்னால் 
காலை மடித்தபடி.. 
.
வாழிடத்தே மனிதக் குருதியோடை 
கண்களை மூடிக்கடந்தார்கள்
கையில் பெரிய பகவத் கீதை.

அவன் பொருளைப்பார்க்க
நான் எடைக்கல்லை
கடவுள் பொதுவாமே.

ஆண்குழந்தைக்கு ஐநூறு
பெண் குழந்தைக்கு இருநூறு
பிரசவ வார்டில் சமூக நீதி.

இவன் கழுத்தை அவனும்
அவன் கழுத்தை இவனும்
பாசிச வேர் அறுப்பு கூடித்தான்.

விற்பதற்கும்
கொள்முதலுக்கும்
அளக்கும் படிகள் வேறு வேறு
சரியளவோ ஆயுதபூசைப்பொட்டு..

அவள் கைவிட்டாள் அதே இடத்தில் நானும்
தபால் பெட்டி.

சாமியைக்காணோம்
எல்லோரும் ஆனார்கள் சாமியாய்
சாமியே சரணம்.


தெளிதல்

.அயல்மொழி ஆண்டமொழி
அவ்வாண்டை மொழிகொண்டு
எழுதியிருக்கிறார்கள் சுவரெங்கும்
நல்லதுகள் பயிராகவேண்டும்.
மா நகராம் பெங்களூரு ராமமூர்த்தி நகரில்
தேவாலயம் மய்யமாய்
கிறித்துவின் பிறந்த நாள் கூட்டம்.
பலவண்ண பொம்மைகளின் குவியல்.
இயேசு குழந்தையாய் மாட்டுத்தொழுவமொன்றில்
ஒளிர்ந்து தருகிறார் காட்சி .
மின்சார விளக்கு தெய்வீகக்காட்சியாய்க்
கனம்கூட்டிக்காட்டியது.
மண்டியிடுகிறார்கள் மன்றாடுகிறார்கள்
மகிழ்ந்து நிற்கிறார்கள்
புத்தாடை அணிகலன் புதுமலர்கள் எனத்
தின்பண்டங்கள் பரிமாறியபடி மக்கள்
ஆசிவழங்கும் வெள்ளைச்சீருடை
சிரம் தொட்டு த்தொட்டு ஓய்ந்துபோனது சரிதான்
ஆலய வாயிலில்
‘அம்மா அப்பா அண்ணா’
தமிழ்க்குரல் கேட்கிறது காய்ந்த தலையோடு.
ஈராயிரம் ஆண்டுகள் முடிந்துபோனது
ஏசுவை என்று சரியாய்த்தெளிவது நாம்..

மக்களாட்சி

. மக்களாட்சி இன்று
எங்கேபோய் முடிந்திருக்கிறது
மக்களைப்பிரித்து ப்பிரித்து
ஒருவரை ஒருவர்
புரிந்துக்கொள்ளவே முயலக்கூடாது
என்பதுவாக
இந்தியா என்பதில்லை
அமெரிக்கா என்று சொன்னாலும்
இழிக்குணம் இதுவே.
வோட்டுக்கள் பெறுவதெப்படி
என்பதுவே ஒரே யுக்தி.
மக்களாட்சி என்பது
கணக்குப்போடுவதாய் 
சுருங்கிப்போனது.
அரசியல் என்பது தொழிலாக
அனுபவமாகிறது.
தியாகமும் சேவையும்
விலாசம் தொலைத்து நிற்கச்
சாதியும் இனமும் மதமும் தோல் நிறமும்
நடத்துகின்றன பேரம்
மக்களாட்சி பாரெங்கும்
நீர்த்துத்தான் கிடக்கிறது
மக்களை  மெய்யாக மதிக்கும்
முறையொன்று மலரத்தான் வேண்டும் மாற்றாக.

மொழியுறவு

.ஆங்கிலம் படித்து
அல்லலுற்றதாக பாரதி சொன்னார்
கதையும் கட்டுரையும்
அம்மொழியில் எழுதிப்படைத்தவர் பாரதி.
கணினி வந்த பின்னே
தமிழ் எழுத்துக்கள் திரையில் வர
ஆங்கில எழுத்துக்கள் வினையாற்றி
தமிழாய்ப்பிறப்பெடுக்கின்றன.
ஏ எம் எம் ஏ ஏ ஆங்கில எழுத்துக்கள்  ஒன்றாய்க்  கூடி 
‘அம்மா’ என்று திரை காட்டுகிறது அழகாய்.
தமிழின் படைப்புகள்
எல்லாம் இன்று ஆங்கில எழுத்தைத்
தடவித்தடவி தமிழில் பிரசவமாகின்றன.
வசதிகள் ஆயிரம் கணினியில்
உலகம் சுற்றுகின்றனவே கவிதைகள்.
இணைய வழியில் ஆங்கில எழுத்தின்
ஆதாரம் தமிழுக்குத்தோழமை
விடைபெற்ற  தலைமுறைக்கு இது பழக்கமில்லை..
தனித்தமிழ் இயக்கம்
பிடிவாதமாய்த்  
துவங்கினால்கூட ஆங்கில அறிவு
அவசியமென்பது அனுபவமாகிறது.
வேறு ஏதும் அக அரசியல் 
உண்டென்று  யூகித்தாலும் 
மொழிகள் ஒன்றையொன்று
நேசிக்கின்றன மெய்யாக.



எல் நினோ

.பருவ நிலை மாற்றங்கள்
பாடாய்ப்  படுத்துகின்றன.
இந்திரபிரஸ்தமான டில்லி
அவத்தையின் தலமானது
புகையும் புழுதியும் மூச்சை
இறுக்கத்  திணறிப்போகிறார்கள் மக்கள்.
சுனாமி இந்தோனிசியாவை
விழுங்கிவிடப்பார்க்கிறது.
எரிமலைகள் எதிர்பாராமல் கீழை தேசத்தில்
வெடித்துச்சிதறி வேதனைதருகின்றன.
பனிப்புயல் புழுதிப்புயல் அனல் காற்று
பேய்மழை எதைப்பேச முடிகிறது.
வாழ்க்கை முறையை கோணலாக்கி
ஆரோக்கியத்தை க்கரியாக்கி நிற்கிறோம்.
மருந்தும் மாத்திரைச்சிலவும்
மக்களை ஏலம் போடுகின்றன மொத்தமாய்.
கல்விக்கட்டணங்கள்  புளியமரப்  பிசாசாகி 
எவ்வளவோ காலமானது.
சூழல் நம்மைக்கைதியாக்கி
கைகொட்டிச் சிரிக்கிறது.
பொறுப்பற்ற வாழ்க்கைக்கு
மனிதகுலம் பெருவிலை தருகிறது.

 வாழும் பூமியில்

அத்தனை இன்னல்களையும்
மனிதன்தானே முயன்று
வெற்றிகொள்கிறான்.
வக்கணையாய்ப் பேசவும் எழுதவும்
இசைபாடவும் ஓவியம் தீட்டவும்
கற்றுக்கொண்டான்.
அறிவியலால் ஆயிரம் சாதனைகள்
அடுக்கடுக்காய் சாதித்து நிற்கிறான்.
மருத்துவத்தில் வானியலில்
வேளாண்மை உற்பத்தியில்
அறிவியல் தொழில் நுட்பத்தில்
தகவல் அரங்கில் இமயமலையென
சாதித்தவை எத்தனையோ.
பிரபஞ்ச ரகசியம்  அது பிடிபடாவொன்று
விடுவிக்க முனைந்து
தொடர்ந்து தோற்றுப்போகிறான்.
விடுவதாயில்லை மனிதக் குலம்
படைப்பின் ரகசியம்
அறியத்துணியும் பயணம்
வாழ்க்கையொரு கோணலாய் அரும்பி 
முன்னும் பின்னும் இன்னும்
காரிருள்தான் எஞ்சி நிற்கிறது.
அவை விடுபட வேண்டுமா
இல்லை வேண்டாவா 
அறிதல் அத்தனை எளிதுமில்லை.
தோற்றலில் நிறைவு மனிதனுக்குத்
தோல்வியோ வெற்றித்தடத்தில் ஒரு படி
மொத்தமாய்ப்படிகள் எத்தனையுண்டு 
யார் அறிவார்.

அனுபவி

. சென்னை வாழ்க்கை
பெயருக்குத்தான் அது
மய்ய சென்னையில்
இசையும் நாடகமும் இயலும்
கொட்டிக்கிடக்கிறது.
மார்கழி மாதம் சொல்லவே வேண்டாம்.
சென்னையைச்சுற்றிய
சிற்றூருக்கு வாய்ப்புகள் 
அந்தப்படிக்கு  இல்லை.
நகரின் ஆக்கிரமிப்பு நச்சு 
எளியவர்களின் ஏக்கங்களுக்கு
இரக்கம் காட்டாது.
வெள்ளைக்காரன் போட்ட
மா நகர ரயிலும்
இல்லாமல் போனால்
ஏழை எளியோர்க்கு சென்னை வாழ்க்கை
ருசிக்கச்  செய்யாது துளியேனும்
பேருந்தில் ஏறி  மா நகரில் 
ஓரிடம் சென்று திரும்ப
இரண்டு மணி நேர அவகாசம்
போதவே போதாது.
போவதற்கும் மீள்வதற்கும்
நான்குமணி நேரம் அனர்த்தமாய்ப் போய்விடும்.
கையில் காசும்
மய்யமாய் குடியிருப்பும்
இல்லா மா நகர வாழ்க்கை
எளியோர்க்கு என்றும் 
விதிக்கப்பட்டே கிடக்கிறது.
யார் கேட்கப்போகிறார்கள்
நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

 நல்ல சினிமா

.பரியேறும் பெருமாள்
படம் பார்த்தேன் நல்ல படம்
பத்தாண்டுகளுக்கு மேலாக
படமொன்றும் பார்க்கவில்லை.
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜின்
மனதைத்திரை கொப்பளிக்கிறது.
நீர்த்துப்போகாத
கனமான சிந்தனை
பாடல்கள் வசனங்கள்
படமெடுப்பு அத்தனையும்
அற்புதமாக வந்திருக்கிறது.
தமிழிலா இப்படம் என்று
நெகிழ்ந்து போனேன்
கதா நாயகனும் அவனுக்கு நண்பனும்
மனதை கொள்ளை கொண்டார்கள்.
கொலைகாரப்பெரியவரும்
தந்தையாய்வரும் நாயகச்சாயல்
பெரிய மனிதரும்
கதையின் நாயகியும்
கல்லூரி முதல்வராய்வரும் டை கட்டிய
செருப்புத்தொழிலாளியின் வாரிசும்
நெகிழத்தான் வைத்தனர்.
‘ நீங்க மாறணும்’ சுடும் உண்மை.
காலம் இருண்டுதான் கிடக்கிறது
எத்தனை யுகத்திற்கு அய்யா 
சொல்லிக்கொண்டே போவதிப்படி.
9. இரண்டரை லட்சம் கொடுத்தால்
பேரப்பிள்ளையை  எல் கே ஜி யில் சேர்ப்பார்கள்.
மருமகள் சொல்கிறாள்
பெங்களூரு வாசம் சின்ன மகன்.
சென்னையில் ஒண்ணரை லட்சம்
போதும் எல் கே ஜி க்கு
பெரிய மகன் சொன்னான்.
கல்வி முடித்து ஒரு குழந்தை
நிறைவாய் வெளிவர
எத்தனை லட்சங்கள்
கொட்டிக்கொடுப்பார்கள்.
பெற்றோர் இக்காலத்தில்
கல்வி கொள்ளை போனது
பண்ணையார் பிள்ளையும்
யானும் அரசுப்பள்ளியில்
காலணா செலவில்லாமல்
கற்றோம் கல்வி.
காமராஜரும் கக்கனும்
ஆண்ட காலமொன்று இருந்தது.
நம்பத்தான் மாட்டார்கள்.
மருத்துவச்செலவுக்கு
மூட்டை மூட்டையாய்
ரொக்கம் வேண்டும்  இப்போது. .
வந்தே மாதரம் அடிமனதிலிருந்து
வரவேண்டுமாம் கோஷம் 
ஞாபகமில்லை
எங்கோ படித்தது.


தோழமை
.
பழமலய் அய்யாவை நேரில்
பார்த்துக்காலங்கள்
பல ஆயிற்று.
கடலூர் வாசியாய் இருந்தபோது
அய்யாவோடு பழகி
மகிழ்ந்திருக்கிறேன் பல காலம்.
பேசுவதே கவிதையென
அனுபவமானது அவரின் வார்த்தைகள்.
நேர்மை என்றால் அப்படி ஒரு நேர்மை
எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை
தெளிவு என்றால் அப்படி ஒரு தெளிவு
எங்கு போய்த்  தேடுவது
தோழமையின் திரு உருவை.
சென்னையிலா தேடத்தான்கிட்டுமா
பழமலய்க்கு ஓர் இணை.
என்றேனும் ஒரு நாள்
விழுப்புரம் சென்று அய்யாவைக்
கண்டுவந்தால் தேவலாம்.
தமிழரின் பெருமை
வடலூர் ராமலிங்க வள்ளலை
வடலூர் மண் மீது நெஞ்சு விழ வணங்கவேண்டும்.
பழமலய் சொன்னது.
சபா என் சகிருதயர்
பழமலய்க்கு ஆசான்.
என்னுள் என்றும் இனியர்
பழமலயை வணங்குவேன்



எதிர்பார்ப்பு

. எதிர்பார்த்து ஏமாந்தோம்
மழை இல்லாமலே போனது
இரண்டாயிரத்து பதினெட்டு
வந்துவிடுமா பெருவெள்ளம்
சென்னையில் மீண்டும்
அடிவடிற்றில் புளிகரைக்கக்காத்திருந்தோம்
அக்டோபர் நவம்பர் டிசம்பர்
என ஓடியேபோனது
ஆறுகளை த்தூர் வாரினேன்
ஏரிகளை ஆழப்படுத்தினேன்
எனக்கதை சொன்னார்கள்
சில நடந்தன பல கடந்தன
கல்லா கட்டியவர்கள் பலர் 
மராமத்து நடந்ததைச்
சோதித்துப்பார்க்கலாம்
மழை வந்தால்தானே அது வரவில்லை
மழை கூட காசு பார்த்தவர்களுக்குச் 
சாதகமாய் ஒதுங்கி நிற்குமா என்ன?
பருவ நிலை மாற்றம்
சென்னைப்பெரு நகரை ப்புரட்டி புரட்டி
பொழுது கழிக்கிறது.
கோடை சமீபிக்கிறது
சென்னைக்கோடை சொல்லவே வேண்டாம்
அனல் பொழியும்
சித்திரைக்காத்துக்கிடக்கிறது.
சென்னை எனக்கு வாழிடம்.


நண்பர்   பி எஸ்

தொலைபேசிச்சங்கத்து
கடலூர் தோழர்
எங்கள் பி எஸ் மறைந்து போனார்
முதுகுன்றத்துத்தோழர்களில்
முத்திரை பதித்தவர்
மாவட்டச்செயலராக
வரவேண்டும் அவரென
கடலூருக்கு அனுப்பி வைத்தோம்
நல்ல தோழனுக்கு உடல்
ஆரோக்கியம் ஒத்துழைக்க மறுத்தது
இதயத்தில் கோளாறு
எங்கள் பி எஸ் மனம் கரும்பின் இனியது.
சமுதாயத்தின் அடித்தட்டு
மக்களிடை மலர்ந்த
மகரந்தத்தோழர் அவர்.
விருதை ரகுவோடு வங்கிக் கந்தசாமி வர
தோழர் பூத உடல் கண்டு கலங்கினோம்.
நட்புக்கருவூலத்தில் பெரு நட்டம் கண்டு
ரகு தேம்பித்தேம்பி அழுதார்.
தோழமையின் அழகு
தொலைந்து போனது உணர்ந்தோம்.
.
புத்தக நட்பு

தேடித்தேடி வாங்கிய
புத்தகங்களோடு  எனது வாழ்க்கை
நேற்றா இன்றா
நினைவு தொடங்கிய நாள் தொட்டு
இப்படியேதான்
கணினி இல்லை கைபேசியோடு
என்பதுவாய் மனித வாழ்க்கை
இலக்கணம் காண்கிறது 
யாரிடம் இல்லை கைபேசி.
எல்லோரும் பேசிக்கொண்டே
இருக்கிறார்கள் கைபேசியில்
துழாவிக்கொண்டே
இருக்கிறார்கள் கைபேசியில்
பயணிப்பவர்களில் பாதிக்கு மேல்
கைபேசியோடு-மீதியும்
காதில் எதையோ செறுகி எதையோ
கேட்டபடியே நகர்கிறது வாழ்க்கை
முகமலர்வதும்
கனிந்த பார்வையும்
அகம் தெரிய மொழிதலும்
அருகிப்பொனது.
நல்ல விஷயமாக மட்டுமே
அறிவியல் மலர
கவனம் கொள்வது எப்போது?


Saturday, January 25, 2020

paavannan- nallanayellaamtharum 1





1 பாவண்ணனின் எழுத்துலகம் 

தற்காலத்தமிழ் இலக்கிய படைப்பாளிகளர்கள் வரிசையில் படைப்பு மொழிபெயர்ப்பு என இருபெரும் தடங்களில் தனக்கென ஓர் தனியிடத்தைப்பெற்றுள்ளார் பாவண்ணன். தனது இலக்கியப்பங்களிப்பால் தமிழ் நாட்டு வளவனூர் சார்ந்த தனது மண்ணின் மனிதர்களை அனேக இடங்களில் உயிர்ப்போடு உலவவிட்டு சாதனைகளைத் தனதாக்கியுள்ளார்.
 ஆகப்பெரிய அறிவியல் தொழில் நுட்ப சாகசங்களை தான் பணியாற்றியதுறையிலே அனுபவமாய்க்கண்ட பாவண்ணன் கல் உடைக்கும் மண்சுமக்கும் சாதாரண மனிதர்களின் அனுபவங்களைப்படித்து அவதானிப்பதிலே தனிக்கவனம் செலுத்திய யதார்த்த எழுத்தாளர்.
           அனேக தருணங்களில் மனித மனம் ரணமாகி நிற்பதை அப்பட்டமாய் க்காட்டுவன அவரின் எழுத்துக்கள்.  .மனிதர்களின் வளமையும் வாழ்முறையும் அவர்களை ஏற்ற இறக்க சமுதாயத்தட்டுக்களில் அடைத்து, இறுக்கி, விறைப்பாக்கி நிறுத்தியிருப்பதை வேதனையோடு காண்பவர். தான் வாழும் சமுதாயத்தில் .அன்பு என்னும் சொல் நீர்த்துப்போன,தைப் பாசத்திற்கு ஏங்கித்தவிக்கும் மனித உள்ளங்களை சமூகத்தின் பல் வேறு தளங்களிருந்து சிறுத்துச் செயல்படும் அடிமன அலைகளை த் தனது எழுத்தில் பாவண்ணன் ஓவியமாகத்தீட்டிக்காட்டுகிறார். இலக்கிய சிந்தனை ப்பரிசுபெற்ற ‘முள்’ தொடங்கி  பாவண்ணனின் சிறுகதைகள் வாசகனை அப்படித்தான் சிந்திக்கவைக்கின்றன..
பெண்மையின் பேதமையும் மேன்மையும் பேசும் ‘கல்’ எனும் சிறுகதை வாய்வீச்சாளர்கள் பம்மாத்து செய்ய மேலட்டை மட்டுமே வைத்து நிகழ்த்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வை ச்சித்தரிக்கும் ‘வேஷம்’ என்னும் சிறுகதை  பச்சை மரங்களை நேசிக்கும் படைப்பாளியாய் வாசகனுக்குத்தன்னையுணர்த்தும் ’’‘மரங்களின் கதை இவை’ நம் நெஞ்சைவிட்டு அகன்றுவிடுமா என்ன?
அடிப்படையில் ஒரு கவிஞனாய்  பாவண்ணன் இருப்பதை அவருடைய படைப்புக்கள் நமக்குச்சொல்கின்றன. ’‘திரும்பி வராத குருவிகள்’ என்னும் ஒரு கவிதை பாவண்ணனின் மன கன பரிமாணத்தை அறிவிப்பு செய்வதாய் விளங்குகிறது. குருவிகள் ஏனோ தாம் வாழ்ந்த கூட்டிற்குத்திரும்பி வரவில்லை. ஏன் அவை திரும்பவில்லை என்பதற்காய்ப் பல் வேறு வினாக்களை த்தானே வைத்துக்கொள்கிறார் பாவண்ணன். அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. அவை அமர்ந்த தத்தித்தாவிய பேசிக்கொஞ்சிய இடங்களையெல்லாம் வரிசையாகக்கண்டும் அவை இல்லாமையின் வெறுமை அவரைச்சுண்டுகிறது.. இனி அவை வாரா என்கிற முடிவோடு அவை வாழ்ந்து காலியாய் விட்டுச்சென்ற குருவிக்கூட்டைப்பார்த்து ஆறுதல் பெறுகிறார்.  அவரின் கவிமனத்திற்கு அவை விட்டுச்சென்ற காலிக்கூடு சற்று இதம் அளிக்கிறது என்கிறார் பாவண்ணன்.
பாவண்ணன் விடைபிடிபடா  ஒரு கேள்விஒன்றிற்கு விடை தேடுவதைத்தன் படைப்புக்களில் காணமுடிகிறது.  மானிட வாழ்வுக்கு பொருள் என்ன என்பதை, வாழ்க்கை என்னும் புதிருக்கு அவிழ் முடிச்சு ஏதும் இருக்குமோ என்பதை ஆராயும் மனவெளி அகழ்வாராய்ச்சியில் பாவண்ணனுக்கு இசைவு இருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. மெளனியின் எழுத்துக்களில் உறையும் அடர்வு கூடிய அமைதி. இவரின் எழுத்துக்களிலும் காணவாய்க்ககிறது.
‘தஸ்தாயெவ்ஸ்கி என்னும் ருசிய படைப்பாளி  மனித வாழ்க்கை ஒரு புதிர் அது அவிழ்க்கப்படும் வரை படைப்பாளியின் தேடுதலுக்கு ஓய்வில்லை என்பார்.
ஏதோ ஒரு மின்னல்  சிந்தையில் தென்படுவதும்  நொடியில் அது  தன்னை மறைத்துகொள்வதுவும் இப்பிரபஞ்சப்புதிருக்கான விடையின் ஓர் அணுவோ என்று படைப்பாளி யோசிப்பதுண்டு.
பாவண்ணனின் எழுத்துக்கள் வாசகனை எப்படியெல்லாமோ சிந்திக்கவைத்து வாசகனோடு சித்துவிளையாட்டு  விளையாடுகின்றன.
பிற நாட்டுப்பல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் ஆக்கம் பெறவேண்டும் என்னும் பெருங்கவிஞன் விண்ணப்பத்திற்குச் செவி சாய்ப்பதாக அவரின் மொழிபெயர்ப்புக்கள் விளங்குகின்றன. தமிழ் மண்ணில் சாதியக்கொடுவிஷத்தை அரசியல் ஆதாயத்திற்கு ஆதாரமாக்கி இலகு அரசியல் நடத்தும் கயமை தொடர்ந்துகொண்டிருக்க தலித்திய கன்னட படைப்புக்களைத்தேர்வு செய்து அவைகளைத் தமிழில் கொண்டு தருவதைத்தன் முழுமுதற்கடமையாகக்கொண்டு இயங்கும் படைப்பாளியவர்.

ஆங்கிலக்கவிஞர் கீட்சின் கவிதைவரிகளில்.’Heard melodies are sweet,but those unheard are sweeter’ என்கிற

 விஷயமாய் பாவண்ணனிடமிருந்து இன்னும் இலக்கிய அற்புதங்கள் தொடர்ந்து

பெறப்படவேண்டும். தமிழ் இலக்கிய உலகில் ஆரோக்கியமான  இலக்கியச்சூழல் ஆங்காங்கு

 இருக்கவேசெய்கின்றன. அவை பாவண்ணனின் படைப்புக்களை எப்போதும் சிரத்தையோடு

 அலசுகின்றன.             

Friday, January 24, 2020

enakkuppitiththa kathaikal-paavannan 2




எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்




பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு நிகழ்வினை ஒரு சிறுகதைப்படைப்பின் மூலத்தோடு உரசிப்பார்க்கின்ற ரம்மியமான அனுபவமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. இது விமர்சனமாய் படைப்பாய் ஏன் ஒருபடைப்புச் சந்திப்புமாகி வாசகனுக்கு முன் விரிந்து நிற்கிறது. எந்தச்சிறுகதையையும் அப்படிப்படிப்பார்க்கிற புதிய வெளிச்சத்தை தந்து நிறைவு செய்கிறது .பாவண்னனின் நினைவுத்தோயலுக்கும் இது ஒருவகையில் சரி வெளிப்பாடாய்க் கொள்ளலாம். ஆகப்பெறும் படைப்புச்சிகரங்களை தரிசிக்க வாய்ப்பு ஏற்படுவதோடு படைப்பாளியின் சொந்த அனுபவங்கள் இடை இடையே விரவி நெகிழவும் வைக்கிறது. அன்பெனும் பிடியுள் அகப்பட்டுக்கொள்கிறது மலை.
தமிழ் நாட்டுச்சிற்றூர் பாவண்ணனின் வளவனூர். இங்குதான் எத்தனைபேர் பாசத்தால்
இந்த படைப்பாளியைக்கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சாதாரண மனிதர்கள். அம்மனிதர்கள் சரிப்பொருத்தமாய் பாவண்ணனோடு இயைந்து வளவனூரை வலம் வந்தவர்கள் என்கிற விஷயம் படைப்பில் அவிழ்த்துக்கொள்கிறது
எந்தரோ மகானுபாவுலு- என்று நம்மை சொல்ல வைத்து விடுகிறார் பாவண்ணன்.. பாவண்னன் அவர்கட்கெல்லாம் உறவென்றால்
நமக்கும்தான் என்கிறது வாசக மனம். நாமும் அவர்களின் பெயர்களைச்சொல்லிப்பார்க்கலாம். இந்த அத்தனை பேரும் சேர்ந்து நமக்கு
பாவண்ணனாய் க்காட்சி அளித்திடலாம்.
வளவனூரின் திருக்குறள் கழகம், ஏரிக்கரை,ரயில்வேநிலையம்,சைக்கிள் பயணத்தின் போது
திருவக்கரையின் சாலைக்காட்சி, இவைஇவைகளோடு ,தையல்கார சித்தப்பா,சித்தி, வளவனூர் தபால்க்காரர்,படைப்பு சமர்ப்பணம் பெறும் திருஞானசம்பந்தம்.ரோஜாமண ,தங்கப்பா,மதிவாணன்,சுப்பிரமணியன்,பழனி ,பண்ணையார், அவர்மனைவி ,தியாகராஜன்,
குமாரசாமி உ,டற்பயிற்சி ஆசான்செல்வராஜ் கணேஷ¤, அவன் அக்கா ஓவிய ஆசிரியர் ,ரவி, கலைக்டருக்கு ப்படித்த உள்ளூர்க்காரர், டூங்கிலிசு ரங்கனாத அய்யர் அறிவியல் குலசேகரன் சரித்திர சுப்பையா, தமிழரசிஅக்கா ,குறள் ரங்கனாதய்யா,காத்தவராயன், ஓணான் பிடிக்கும் ஜெயபாலன், வேலு பெரியப்பா ,நட்பு- பாட்டி இந்த இரண்டுமான ஆயா ராஜாராமன் கணேசனார் அபசு ,பொன்னம்பலம் துரைசுந்தரமூர்த்தி, துரக்கண்ணு பழனிச்சாமி, தாமு கிருட்டினன், என எத்தனை மனிதர்கள் படைப்பாளியின் பாச வலையில்சிக்குண்டு நிற்கிறார்கள்.
இந்த நூலுக்கு நினைவில் பதிந்த சித்திரங்கள், என்கிற முன்னுரை தரும் பாவண்ணன் ஏரிக்கரை பற்றி தான் ஆரம்ப கால புராணம் எழுதியதைச்சொல்கிறார் .பழனி என்கிற நண்பனோடு தான் பேசுகின்ற வாசகம் , ‘ இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம் இ,ப்படி இருக்க முடியாமையின் அவத்தைதான் இலக்கியமோ’ ராமாயணமும் சிலப்பதிகாரமும் பாவண்ணனுக்குத் துணைக்கு வருகின்றன. எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க முடியாமையின்வரவு செலவுகளாகவே அக்காப்பியங்களை நாம் இன்றும் உணர்கிறோம்.
புதுமைப்பித்தனின் ‘மனித இயந்திரம்,’ பாவண்ணனின் ‘கழிமுகம் ஒ ’ப்பிட்டுக்காண வாய்ப்பு தருகிறார் ஆசிரியர்.
கிளிகள் ஒன்றையன்று சண்டையிட்டுக்கொண்டு ஜோடி பிரிதல் நிகழ்கிறது .பறத்தல் ஒன்றன் சுதந்திரமாய் க்காண முடியாமல்
சோகம் விஞ்சுகிறது. தவிப்பு தவிர்க்கமுடியாதது புதுமைப்பித்தனின் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அலசிப்பார்க்கிறார் பாவண்ணன்.
வரவும் செலவுமே வாழ்க்கை, மானுட சுவாசம் அய்ந்தரைப்பெட்டி மணியமே ஒரே பணி என்பதாய் கழிந்துபோகிறது மனித வாழ்வு. யந்திரம் போலவா பிள்ளை யந்திரமேதான் பிள்ளை.
சிறு பிசகு செய்து தப்பித்தல் இங்கே; ஏது அதனைத் தாங்கும் திறம் கொண்டவரா பிள்ளை. இல்லை மீன்டும் விலங்கிட்டுக்கொள்வதே அவருக்குசாத்தியமாகிறது .’நடுத்தெருவுக்கு வந்து நாறிப்போகாமல் மத்திய தர வர்க்கம் தன்னை க்காத்துக்கொள்ள யந்திரமாகி இயங்குதல் பயில்கிறது புதுமைப்பித்தனை வாழ்க்கையும் ஏமாற்றித்தானே விட்டது.
ஒவ்வொரு கதை அலசலுக்கும் முன்பாக அந்த படைப்பாளியின் அழகு கோட்டுச்சித்திரம். ஆகப்பெரிய மரியாதை . அவ்வாசிரியரைப் பற்றிய சில குறிப்புகள் கூட. ..தனக்கு நேர்ந்ததோடு எதனையும்பொருத்திப்பார்க்கிறார் பாவண்ணன். அனுபவம் தரும் அருஞ்செல்வம் இது.
ந. பிச்சமூர்த்தியின் படைப்பு  ‘தாய்’ அற்புதமாய் இங்கே எடையிடப்படுகிறது. விமர்சகனாய் இங்கே பாவண்ணனைக் காணமுடியாது ஒரு படைப்பு தந்து வாசகனை நெஞ்சம் நெகிழவைக்கிறார். இலக்கிய சம்பந்தம் உள்ளவர்கள் பாவண்ணனைப் படித்து ரசித்து வசப்பட வேண்டிய இடம் இது. விமர்சகனுக்கு கட்டுப்படாமல் படைப்பு ஊற்று துருத்திப்பார்க்கிறது. ஞானப்பழம் கிடைக்க வாகனமும், பயணித்தலும் தேவைஓடும் ரயிலை ஞான ரதமாய்க்காட்டுகிறார் பாவண்ணன் . பிராந்திபாட்டிலைத்திறந்து இருமலால் அல்லல் படும் குழந்தைக்குப்பால் கொடுக்க முற்படும் முட்டாள் தந்தையைப் புறந்தள்ளி, தாயை இழந்த அக்குழந்தைக்கு தன் முலைச்சுரப்பை அளிக்க ஆவேசமாய் எழும் தாய்மையை வாசகனுக்குத் தருகிறார் பிச்சமூர்த்தி. ஞானப்பால் கொடுத்தவள் பராசக்தி. கண்கள் பிசைந்து அழும் கழுமலச் சம்பந்தனை சிரிக்கவைத்தவள் மாகாளி. யாதுமாகி இப்படி நிற்கமுடியும் ஒருதாயால்.. நாயுடு ப்பெண் தன் குழந்தக்கு மட்டுமே தாய் என்கிற நிலையிலிருந்து பசியால் அழும் இன்னுமொரு குழந்தைக்கு தாயாக தன்னை நகர்த்திக்கொள்வதைபிச்சமூர்த்தி காட்டுகிறார். பிரபஞ்சத்தில் பயணமே இப்படி மேதமை வளர்க்கிறது அது நிதர்சனமாய் என்கிறார் பாவண்னன். ஒரு ரயில் பயணமே மோகன்தாசு காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் தர்மாவேசம் தருவித்தது, ஞானவிளக்காம் ரமணரை திருவண்ணாமலைக்கு ரயில் பயணமே கொணர்ந்தது., ரவீந்திரரின் கப்பல்பயணமும் விவேகாநந்தனின் சிகாகோ பயணமும் மனத்திரைக்கு வருகின்றன. சொல்லப்போனால் குறிஞ்சி வேலனை , பாவண்ணனை, சுப்பிரபாரதிமணியனை
பயணங்கள் மட்டுமே மேதமை தந்து ஆழ அகல சிந்திக்க வைத்திருக்கின்ன.
மெளனியின் சிறுகதைபடைப்பு பற்றி, ‘ படிக்க நேரும் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் பெறுவதைக்குறிப்பிடுகிறார் பாவண்னன்.
உபநிடதங்கள் படிக்கும்போது ஏற்படும் அனுபவம் இது. பன்னரும் உன்னத நூல்கள் அவை. அதுவா குப்பை என்று சொல்லி இறுமாந்து போவது மெருகிட்ட அகம்பாவம் மட்டுமே. திருக்குறளும் ,திருவாசகமும் படிக்கும் தோறும் பெறும் சுகானுபவத்தை வள்ளல் வடலூரார் வாய் சொல்லி கேட்டுப்பார்க்க ஓரளவு நமக்குத் தெரியலாம். கீட்சின் கவிதைகள் ஷெல்லியின் கவிதைகள் எப்போதும் அப்படித்தான். வயதான கணவர் இளைய மனைவி இந்தப்பொறுத்தப்பிசகு பற்றிப்பேசுகிறார் பாவண்னன். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’யோடு இதனை ஆய்கிரார், புகைவண்டி நிலைய பிளாட்பாரத்தில் மூன்றுமணி அடித்தலையும், இரண்டு மணி அடித்தலையும் மெளனியின் கதை வழி ச்சென்று மணவாழ்வின் படிமமாக தான் பார்த்தலை வாசகனுக்குச்சொல்கிறார் பாவண்ணன். நன்மைக்கும் தீமைக்கும் இடை மனிதன் அல்லல் படுவதைச்சுட்டுகிறார்.
தள்ளாத வயது அப்பர் பெருமானுக்கு அந்திமகாலத்து ஈசனின் காட்சி. வழுக்கைத்தலையில் ஒரு வைர ராக்கொடி. இன்று ஞானபீடமாம் ஜெயகாந்தனுக்கு. அதுவேறு.கதை பாவண்ணனும் ஜெயகாந்தனும் பக்கத்து பக்கத்து ஊரார்கள். அந்த வளவனூரும், கடலூரும். பக்கம் பக்கம்.
மனிதனின் இடது பக்க சிந்தனையை அழகாய் மீட்டி ஆலாபனை செய்யத்தெரிந்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் குருபீடம் படித்துப்பேசுகிற பாவண்ணனை அடையாளம் காணாதவர்கள் மன்னிக்கப்படுதல் சிரமமே. க்ரீஷ் கர்னாட்டின் பலிபீடம் மொழியாக்கம் செய்தபாவண்ணனை புரிந்துகொள்ள தமிழ் இலக்கிய உலகுக்கு ஏதோ தடை இருக்கிறது. தடை உடைபடலாம். நேரும்போது பலருக்கு விலாசம் இல்லாமல் போகவும் கூடும்.
ஞானம் என்பது ஆழமும் எல்லையும் காணமுடியாத கடல். ஒவ்வொருவர் நெஞ்சிலும் சேகரமாவது ஒரு துளி மட்டுமே. துளி
கடலின் பகுதி மட்டுமே எப்போதும் அது கடலாவதில்லை.. ஆனால் தன் அடர்த்தியைப்பெருக்கிக்கொள்ளவே ஒவ்வொரு
துளியும் விழைகிறது. பாவண்ணன் இங்கு காலடி சங்கரரின் கடாகாசம் பேசுகிறார் .கற்றலும் ஞானமும் எல்லைகள் அற்றவை .
பிரமிக்க வைக்கும் உன்னதங்கள் அவை.
கி. ராஜநாராயணின்’கன்னிமை’ பாவண்ணனின் கண்களில் பட்டு வாசகனைக்கட்டிப்போடுகிறது. கன்னிப்பெண்ணும் ,மணமாகிய
பெண்ணும் என்கிற விசயங்கள் இந்தியக்கலாசாரத்திற்கே உரித்தான பொக்கிஷங்கள் .மக்களை ஈரம் காயாப்பசுமையோடு மட்டுமே
பார்ப்பவர் கி.ரா. பேச்சுமொழிக்கு மகுடம் சூட்டக்குரல் கொடுத்தவர் கி .ரா.. குக்கிராமத்து ஆதி திராவிடத் தாய்மார்கள் மத்தியில் பொதிந்து கிடக்கும் தூய தமிழ்ச்சொல் பற்றி என்றும் பெருமைப்பட பேசும் கி.ரா. ,கன்னிமையை கி.ரா ஆராதிக்க வழி மொழிகிறார் பாவண்னன்.
தாசுதாயெவ்சுகியின்’நாணயமான திருடன்’ பாவண்ணனுக்கு ஹாஸ்பெட் வாழ்க்கையில் தான் சந்தித்த ஒருவரை நினைவுக்குக்கொண்டுவருகிறது. நண்பன் கொடுத்து வைத்திருந்த பணத்தை இல்லை என்று சாதித்து விட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு மரணம் வரும் தருவாயில் குற்றம் உலுக்கி எடுக்க கட்டிலில் சயனித்து இருக்கும் ஒரு நடுத்தர விவசாயி பற்றிய வாழ்வானுபவத்தை எடுத்து வைக்கிறார் பாவண்ணன். மரணத்தின் முன்னால் தன் அகங்காரங்களையும் பெருமைகளையும் மறந்து ஒருவன் மண்டி இடுகின்ற தருணம் முக்கியமானது.மரணத்தை இருளாய்ப்பார்க்கும் தாழ்ந்த தளம் தவிர்த்து மரணம் என்பது அழுக்குகளைப்பொசுக்கி மனிதனை நெறிப்படுத்தும் நெருப்புக்கோளமாய் ஒர் சூரியனாய் வாசகனைக்காணவைக்கிறார் பாவண்ணன்.
நடு இரவில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று தன் அம்மாவிடமே ரெண்டு ரூபாய் கடன் வாங்கி சாராயம் வாங்கிக்குடித்து சரிந்து கிடக்கும் தந்தையின் முன்னால் குழந்தையின் சவம். நேரில் தான் கண்ட அனுபவத்தை பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி’யோடு எண்ணிப்பார்க்கிறார். மாமனாரும், மகனும் பிரசவத்தில் இறந்துபோன மருமகளின் பிணைத்தைக்காட்டி காசு பெற்று சாராயம் குடித்துவிட்டு அந்தச்சவத்தை இருட்டியபின் அம்மணமாய் அடக்கம் செய்கிறார்க:ள். பிரேம்சந்த் மாபுருடன்தான். கட்டிக்கொண்டவளை சூதாட்டத்தில் தோற்று மானபங்கம் செய்ய அலிகளாய் நின்ற மாபாரத வீரர்களை நினைவு படுத்திப்பார்க்கிறார்பாவண்ணன்.
முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய’குழந்தை மனம்’ பாவண்ணனைத் தொட்டுப்பேசுகிறது. இலக்கியச்சிந்தனை விருது பெற்ற ‘முள்’ பாவண்ணனின் படைப்பு. இந்து நாளிதழில் மொழியாக்கமாய் வந்தது. அவரின் குழந்தை மனம் அதனில் வெளிப்பட்டது.
வீட்டுச்சாமான்கள் அளவுக்கு நான்கைந்து சாக்கு மூட்டைகள் விளையாட்டுச்சாமான்கள் குழந்தைக்கு வாங்கி ஆனந்தப்படும் நண்பர் ஒருவரைப்பற்றிச்சொல்கிறார். முல்க்ராஜின் கதையில் பெற்றோர்கள் அருகிருக்கும்போது பர்பி ,பூ ,பலூன் ,குடைராட்டினம் என்று அடம் பிடிக்கும் குழந்தை அவர்கள் தொலைந்துபோன சமயம் அவை எதுவும் வேண்டாம் என அழுது அடம் பிடிப்பதைப்பார்க்கமுடிகிறது.
சிறு கதைகள் எழுதுவதில்’ அந்தோன் செகாவ். இணை இல்லாச்சிகரம் என்றே எழுதுதல் தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். வான்கா
என்கிற சிறுவன் பற்றிய செகாவின் கதையை தான் சந்தித்த ஒரு ஏழைச்சிறுமியோடு ஆசிரியர் இணைத்துச் சிந்தித்துப்பார்க்கிறார்.. ஒரு சட்டை எடுத்துத் தர வேண்டும் என நினைத்து கொடுக்காமலேயே அந்த ஊரைவிட்டு வந்துவிட்டதை நினைத்து மனம் ரணமாகிறது பாவண்ணனுக்கு. கவிஞர் பழமலய்ஒரு கவிதையில் ராமசாமி என்கிற சொந்த ஊர் காரனுக்கு சட்டை எடுத்து தருவதாய் வாக்குக்கொடுத்து அடுத்தமுறை வாயேன் என்பார். அடுத்த முறை ராமசாமி வரவில்லை. இறந்து போகிறான். மேற்சட்டை கேட்டவன் மெய்ச்சட்டை தொலைத்த சோகம் சொல்வார். எத்தனையோ ராமசாமிகள் எல்லோர்க்கும். மொழி தேசம் இனம் கடந்து வறுமையின் முகவிலாசம் தெரிந்தவன் மட்டுமே படைப்பாளி யாகிறான். பாவண்ணனுக்கு இது சாத்தியப்படுதல் அனுபவமாகிறது.
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் படைப்பு’ மசுமத்தி. ‘அது ஒரு கிழவன் வரைந்த ஒவியம். முற்றுப்பெறா ஒன்று. படம் வரைந்து முடிப்பதற்குள்ளாய் ஊர்க்கோட்டையில் அந்நியன். ஆம் அந்த ஒவியம் பாதியில் நின்று போகிறது. குழந்தைக் கண்ணன். அவன் அருகே பசுவின் ஒவியம். முற்றுப்பெறாமல், வயிற்றுப்பசியால் ஓடிவந்த கன்று. கண்ணன் குழல் கேட்டு மெய்மறந்து நிற்கிறது. வயிற்றுப்பசியை தாயின் மடியும் ஆன்மப்பசியை கண்ணனின் குழலும் ஓவியத்தில் சுட்டுகிறது.
நண்பர் ஒருவருக்கு மரச்சாமான்கள் வாங்கப்போய் ஒரு பெரியவரையும், புராதன வேலைப்பாடு மிகுந்த அவரின் பொருட்களையும் கண்டு எதுவுமே வாங்காமல் திரும்பிவிடுதல் நிகழ்கிறது .பாவண்னனுக்கு மரச்சாமான்கள் உயிரோடு இருப்பதாய் இங்கு அனுபவமாகிறது.
‘பாழடையத்தொடங்கிய ஒன்று என ஆள்ஆளுக்கு இடிக்கத்தொடங்கினால்,’ என்னும் மாஸ் தியின் வார்த்தைகளை பாவண்ணன் ஓங்கி வழி மொழிகிறார்.
எனக்குப்பிடித்த கதைகள் கனமானது. படைப்பாளிகள் படிக்க பாவண்ணன் உதவி செய்துள்ளார் வாழ்த்தலாம்.. மனம்தான் வேண்டும்.

paavannan- thungkapaththirai-kottikkitakkuthu azaku 3




3 பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு


எஸ்ஸார்சி

துங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுப்பு வழி பாவண்ணன் மானுட உறவுகளின் ஆழத்தை ஆளுகையை ஆகிருதியை பல்வேறு வண்ணங்களில் காட்சிப்பொருளாக வாசகனுக்குக் கொண்டுதருகிறார். பவண்ணனின் எழுத்து துங்கபத்திரையின் தண்ணீராகப் பிரவாகித்துச் சுழித்துக்கொண்டு ஒடுகிறது, துங்கபத்திரையின் ஓட்டத்தை அனுபவித்தவர்களுக்கு நன்கு உணரமுடியும் பாவண்ணன் எழுத்துக்களும் அப்படித்தான் என்று
அழகின் அலைகள் கும்மாளமிடும் ஆற்று நீர். அன்பின் விசை உந்த ப்புறப்பட்டு ஓடோடி வருகிறது. ஆற்றின் கரை பொதிந்து கிடக்கிறது ஒரு கூழாங்கல். ‘இனிய நீரே இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் இப்போது மட்டும் எப்படித்தான் என்முன் வந்தாய் ‘ என ஊடி நிற்க துங்கபத்திரை த்தண்ணீர் கூழாங்கல்லிடம் கெஞ்சி க்கொஞ்சுகிறது. கரைவாழ் கல் மீது இப்போது இதோ பொழிகிறதுஓடோடி வந்த நதி நீரின் முத்தமழை. முத்தம் சொரியும் முத்தம். ஆற்றின் கரை கிடந்த கூழாங்கல் நதி நீரோடு சினந்து புரண்டுதிரும்பிக்கொள்கிறது. காதல் வயப்பட்டுவிட்ட துங்கபத்திரை விடுவாதாய் இல்லை. கோபக்கனலில் தகிக்கும் கல்லைக் கட்டிப்பிடித்து அதன் மோகம் அழித்து முடிக்கிறது.. கல்லும் நீரும் உலகின் தோற்றத்தை ஒருமுறை நம்முன் நிகழ்கதை யாக்குகின்றன. பாவண்ணனின் ஆழ்மனம் அழகொழுக எழுதிய உயிர் ஓவியத்தைத்தான் இங்கே வாசக அனுபவமாக்குகிறார்.
பிள்ளைகள் எல்லாம் ஒரு வகையில் தெய்வங்கள் என்னும் வரியில் பாவண்ணன் குழந்தைகளை பாலழும் பிள்ளைக்கு நல்கிய பேரருளின் அம்சமாய்க்காண்கிறார். கண்ணன் என் தெய்வம் என்பான் பாரதி.. தெவிட்டாப் புன்சிரிப்பு உதிர்க்கும் பிள்ளைகளும் மண்மீது வீழும் வான்மழையும் கடவுள் இருப்பதற்கு நித்திய சாட்சிகளாய்க் கொள்ளும் மரபு நம்ஆன்றோர்களது. நிலம்தொட்டு ஓடும் தண்ணீர் அனைத்துமே மறு உருவாய் கங்கை. பாவண்ணனின் துங்கபத்திரைக் கட்டுரையில் வரும் ஓர் சிறுமிக்கும் கங்கைதான் இந்தத் துங்கபத்திரை.
பறவைகள் மீது எப்போதும் காதல் கொள்வான் கவிஞன். கானப்பறவையின் கல கல எனும் ஓ சை. மயில் குயிலாகும் பரவித்தை புக்குள் பறவையின் இருப்பு வால்மீகியின் வசந்த கோகிலம், அண்ணாமலை கோபுரம் அமர்ந்த ஞானப்புள் மேலைக்கவிஞர்களின் பாடிக்கொண்டே விண்ணுயர் வானம்பாடி, நிலையாமை பேசும் தோட்டத்துப் புறா, இன்னும் எத்தனையோ உண்டு பறவை உறவுகளாய்..
அறிவு அன்பு இரு இறக்கைகள் மேலே மேலே பறக்கிறது புள். இறக்கைகளில் ஒன்றின் எடையே மற்றதின் எடை. ஆக பறத்தல் சுகம் புள் பறந்து பறந்து வான் வதியும் அந்த வெண் நிலாவிடம் செல்லமுடியும் வடலூர் வள்ளல்பெருமானார் விருப்பமும் அது.
அலுவலக வளாகத்தில் ஒர் கணம் பார்த்து விட்டுவிட்ட பச்சைப்பறவைக்காக ஏங்கும் பாவன்ணன். பறவையின் பெயர்தான் தெரியவில்லை. பறவைக்கு என்ன பெயராக இருக்குமோ, யாருக்கேனும் அப்பெயர் தெரியுமோ என்ன விபரீதம் இது மனதை கிறங்கவைக்கும் ஆனந்தலகரியை வர்ஷிக்கும் அதன் பெயர் தான் என்ன பாவண்ணன் மனம் குடைந்து குடைந்து பெயர்தேடிப் போகிறது. பெயர் தேடும் முயற்சி இவண் ஈசன் அடி முடி தேடிய முடியாக் காரியமாகிறது. புள்ளின் பெயர் எட்டவில்லையே. ஒரு பெயர் ஒரு உருவம் இல்லார்க்கு பல் உருவம் பல் பெயர் சார்த்தி இன்புறும் மன்பதைக்கு எதற்கும் ஒரு பெயர் வைத்து விட்டால் தேவலைதான். கைக்கு ஒன்று அகப்பட்டால் அத்தனை மகிழ்ச்சி. கைக்குள் அகப்பட்டாலோ இன்னும் மகிழ்ச்சி.. ஆனால்
கிட்டாதிருத்தல் மட்டுமே சுகம் அது மட்டுமே ஒருவனைத்தேடல் வசம் ஒப்படைக்க பேருதவி செய்கிறது
கன்னடத்து ஷராவதி நதி பாவண்ணனின் முன்னர் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை பிரவாகித்துக் கொட்டுகிறது நீர். ஊழிக்கூத்து புரியும் கங்காதரன் அல்லவா தெரிகிறான். உலகமே நாத மண்டலமாகி பாவண்ணனைக் கிறங்க வைக்கிறது கண்ணனுக்கு யமுனா நதியே விளையாடும் பிருந்தாவனம். மாயக் கண்ணனுக்கு வாயைத்திறந்தால் வையகம் தெரிகிறது. ஆனால் அவனோ சிறு நங்கை ஒருத்தியின்பின்னலை பின் நின்று இழுக்கின்ற வம்பல்லவா செய்து சிரிக்கின்றான். பாவண்ணன் இங்கே இப்படித்தான் பேசுகிறார்.
‘ சக்தியின் காலடியில் நிற்பவனைப்போல் உணர்ந்தது என் மனம் .மானசிகமாக என் நெஞ்சிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்து அவள் காலடியில் வைத்தேன். அந்த இசை நேராக உடலைக்கிழித்துக்கொண்டு ரத்தத்தோடு ரத்தமாகக்கலந்தது. இசையின் ஒவ்வொரு துணுக்கிலும் அளவற்ற மென்மை. பரவசமான சுகம். அப்படியே என் இடுப்பைத்தூக்கிக்கொண்டு பறப்பதுபோல இருந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் கட்டியது’
இது பற்றி ச் சரியாகச்சொல்ல வேண்டும் என்றால் அது ஒருவனுக்கு அகம்பாவத்தில் முடியலாம். ஆக அடக்கித்தான் வாசிக்க வேண்டும். அழகை ஆராதிக்கும் ஆங்கிலக்கவி கீட்சாகவே தெறிகிறார் பாவண்ணன்.
புதிய பெற்றோர்கள் என்னும் தலைப்பிட்டு வரும் கட்டுரையில் கனம் மிக்க எழுத்துக்களை மீண்டும் பாவண்ணன் மீட்டிக்காட்டுகிறார். ‘கனவுகளை யாரும் ஊட்டிவிடமுடியாது. அவை தானாகவே ஊறி வரவேண்டும்,,,,,,,கனவை வரித்துக்கொள்கிறவர்களுக்கு அதை அடையத்தேவையான திட்டங்களும் உழைப்பும் தாமாகவே வடிவமுறுகின்றன.’
அந்த வளவனூர் ஏரி. அதுவே இந்த எழுத்தாளனுக்கு என்றும் நெருங்கிய உறவு. அந்த ஏரி பற்றிப்பேசாத நாள் எல்லாம் பாவண்ணனுக்குப்பிறவாத நாளே. ஏரிமீது கண்ணுக்குத் தெரியும் அந்த செத்து செத்துப்பிழைக்கின்ற அம்மாக்கள் அடுப்புக்காகக்குச்சி பொறுக்கும் வளவனூர் அம்மாக்கள். அவர்களின் உலா காணும் ஏரிப் பெருவெளி. குடித்துவிட்டு ராஜகதியில் வரும் கணவன்மாருக்கு திருஅமுது படைப்பதுதான் எப்படி. ஆகத்தான் குச்சிகள் அம்மாக்கள் வசம்..
. ஒரு உதவிகேட்டு வந்த அந்த லட்சுமி சின்னம்மாவுக்கு உதவாமல் போய்விட்ட பாவண்ணன் குற்ற உணர்வோடு இக்கட்டுரையில் மனத்தை அசைபோடுகிறார்.  ஒரு பழைய சட்டைகேட்டு வந்த தன் கிராமத்து ராமசாமிக்கு அடுத்த முறை பார்க்கலாமே போய் வா  ராமசாமி என்று அனுப்பிவிட அந்த ராமசாமியும் உடன் இறந்து போகிறான். அது கொடுத்த வருத்தம் பற்றி பழமலய் கவிதை ஒன்றில் பேசுவார் மிகப்பெரிய விஷய ஞானத்தை இங்கே வாசகனுக்குச்சொல்லிவிடுகிறார் பாவண்ணன்..
‘ மாபெரும் சக்தியின் ஒரு துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக்கிடைக்கிறாள். அந்தச்சக்தியை அறிவதற்கு
முன்பாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்தி வந்துவிடுகிறது ஆணுக்கு.’
லட்சுமி சின்னம்மா கால் பட்ட வளவனூர் ஏரிக்கரையும் வனக்கத்திர்குறியதுவாகவே வாசகன் தெரிந்துகொள்கிறான்.
‘வாழ்க்கை அதிருஷ்டம் ஒரு இழையாகவும் துரதிருஷ்டம் இன்னொரு இழையாகவும் வைத்து நெய்யப்பட்ட விரிப்பல்லவா என்கிறார் பாவண்ணன். கட்டுரை சொர்க்கத்தின் நிறம் இப்படிஎழுதிப்போகிறது. சிலருக்கு வாழ்க்கை எனும் விரிப்பில் அதிருஷ்டமே நீளத்திலும் அகலத்திலும் இழையாக அமைவதும் மறுதலையாய் வேறு சிலருக்கோ துரதிருஷ்டம் மட்டுமே அவ்விரண்டு இழைகளாக அமைந்துவிடுவதும் சாத்தியமே என்கிறார் பாவண்ணன். செவ்வியான் கேடு இன்னும் வள்ளுவன் தொடங்கி பிடிபடா விஷயமே. அது பிடிப்படத்தான் வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். இப்படியாகக் கட்டுரைகள் அலங்கரிக்கும்   பாவண்ணனின் துங்கபத்திரை தமிழுக்கு எழுத்து முத்திரை. .