Sunday, September 22, 2013

sabaa sir kuriththu innum sila




ºÀ¡ º¡÷  ÌÈ¢òÐ þýÛõ º¢Ä

±ÉÐ ¾Á¢Æ¸ «ÃÍ À¡¢Í ¦ÀüÈ ¿¡Åø '¦¿ÕôÒìÌ ²Ð ¯Èì¸õ'. þÐ ÀüȢ ´Õ Å¢Á¡¢ºÉò¨¾  §Å.ºÀ¡¿¡Â¸õ  ±Øò¾¡Ç÷ º¢ò¾¨É  ¬º¢¡¢Âá¸ì¦¸¡ñÎ ¦ÅÇ¢ÅóЦ¸¡ñÊÕó¾¾ Ô¸Á¡Â¢É¢ þÄ츢ÂüÈ¢¾Æ¢ø ¦ÅǢ¢ð¼¡÷.  '«ì¸¢Ã†¡Ãò¾¢ø þýÛ¦Á¡Õ «¾¢ºÂôÀ¢ÈÅ¢'  ±ýÛõ Å¢Á¡¢ºÉò¾¨Äô§À  ±ÉìÌ Á¢¸ô¦À¡¢Â À¡Ã¡ð¼¡¸ «¨ÁóÐ º¢ÈôÒ §º÷ò¾Ð.  ¿¡ý ¦Áö¡¸§Å ¦¿¸¢úóÐ §À¡§Éý.  §ÀÃÈ¢ï÷«ñ½¡ «ì¸¢Ã†¡Ãò¾¢ø ´Õ «¾¢ºÂõ ±ýÚ Å.á ÀüÈ¢ ìÌÈ¢ôÀ¢ð¼¨¾ ¿¡õ  «¨ÉÅÕõ «È¢§Å¡õ.
 ±ÉÐ ¿¡ÅÄ¢ø   ¿¡ý À¢Èó¾ ±ÉÐ ¸¢Ã¡Áò¨¾ ¾ÕÁíÌÊ ±ýÚ «¨Æò¾¢Õô§Àý. «ùçÕìÌ ¾ÕÁ¿øæ÷ ±ýÀÐ ¯ñ¨Á¢§Ä§Â ¯ûÇ ¦ÀÂáÌõ. ±ÉÐ þøÄò¾¢ø ±ý ÌÎõÀò¾¢ø ±ÉÐ ¾¡ö ¾ó¨¾Â÷ ÅÆ¢ À¢Èó¾ ´Õ º§¸¡¾Ãô ¦Àñ  ( ¾ÕÓ)«§¾  ¾ÕÁíÌÊ ¸¢Ã¡ÁòÐ ¾¡úò¾ôÀð¼ þÉòÐ ´Õ  þ¨Çï¨É ( ÀÆÁÄö) ò ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡ñÎ  ÒÃ𺢸ÃÁ¡É Å¡ú쨸 ¿¼ò¾¢ ´Õ ±ÎòÐ측ð¼¡ö Å¡úž¡¸ì ¸¨¾Â¢ø «¨Áó¾¢Õô§Àý.ºÀ¡ º¡÷ ±ýÉ¢¼õ ¦º¡ýÉ¡÷ 'þôÀÊ ò¾ý ÌÎõÀò¨¾§Â  ¸¢Ã¡ÁòÐ츨¾Â¢ý  Áö  µð¼òмý þ¨½òÐ   ±Ø¾¢ô§À¡Å¾üÌ ´Õ À¨¼ôÀ¡Ç¢ìÌ  Å¢º¡Ä  ÁÉÐõ  ±ó¾ ±¾¢÷ôÀ¢¨ÉÔõ ºÁ¡Ç¢ì¸ ò¾Â¡Ã¡Ìõ  ´Õ «º¡¾¡Ã½òн¢îºÖõ §ÅñÎõ'.
þùšȡ¸ ÁÉõ ¾¢ÈóÐ ´Õ  À¨¼ôÀ¡Ç¢¨Â ôÀ¡Ã¡ðÎõ ÀñÒ Å¡öì¸ô¦ÀÚÅÐ «¡¢¾¢Ûõ «¡¢Ð.ºÀ¡ º¡ÕìÌ «Ð þÂøÀ¡¸§Å «¨Áó¾¢Õò¾¨Ä ¿¡õ ¸¡½ÓÊÔõ.

´Õ ºÁÂõ 'ÁÚ Àì¸õ' ±ýÛõ º¢Ú¸¨¾ ´ý¨È ±Ø¾¢ ±ÎòÐ즸¡ñÎ ºÀ¡ º¡÷ «Å÷¸¨Çô§À¡öôÀ¡÷òÐ   «Å¡¢¼õ «À¢ôáÂõ §¸ð¸ ¬¨ºôÀð§¼ý.ºÀ¡ º¡÷ «¾¨É º¢Ãò¨¾§Â¡Î ÀÊòÐ ¯ûÇý§À¡Î À¡Ã¡ðÊÉ¡÷.±ýÛ¨¼Â Ó¾ø º¢Ú¸¨¾ò ¦¾¡ÌôÀ¢üÌ «¾¨É§Â ¾¨ÄôÀ¡¸  ¨Åì¸×õ º¢À¡¡¢Í ¦ºö¾¡÷.«ó¾ º¢Ú¸¨¾ ¦¾¡ÌôÒô Òò¾¸ò¾¢ý §ÁÄ𨼨 ºÀ¡ º¡¡¢ý  À¢Èó¾ °÷ ¦¾üÌ Å¼ìÌ Òòà÷ «öÂÉ¡÷  §ƒ¡Ê째¡Å¢ø ̾¢¨Ã¸û «Äí¸¡¢ò¾É.«ó¾ôÀ¼ò¾¢¨É «ö¡¾¡ý ±ÉìÌ ÅÆí¸¢  ¬º¢ ¦º¡ýÉ¡÷¸û.¿¡ý À½¢§Å¡Î ±ÉÐ ¿ýÈ¢¨Â ºÀ¡ º¡ÕìÌ «ó¾ôÒò¾¸ò¾¢§Ä§Â ÌÈ¢ôÀ¢ðÎÓû§Çý.
 ±ÉÐ Ó¾ø º¢Ú¸¨¾ò ¦¾¡ÌôÒ áÖìÌ  ºÀ¡ «ö¡§Å¾¡ý ÓýÛ¨ÃÔõ ÅÆí¸¢ ô¦ÀÕ¨Á ¦ºö¾¡÷¸û.«ò¾¨Éì¸îº¢¾Á¡¸ ´Õ Óýۨà  ÅÆí¸¢Â¨¾ þýÚõ ¦ÀÕ¨Á§Â¡Î ±ñ½¢ôÀ¡÷츢§Èý.±ÉÐ Ó¾ø ¸ðΨà áÖìÌõ 'º¢Ä ¬ö׸û Á¾¢ôҨøû Å¢Á¡¢ºÉí¸û' ±ýÛõ ¦À¡Õò¾Á¡É ¦À¨à «ö¡§Å¾¡ý ÝðÊÉ¡÷¸û.  Å¢Õò¾¡ºÄõ  ¿¸¡¢ý  áÄÃñ ÀøÄ¼õ Á¡½¢ì¸õ  «¾üÌÓýۨà  ¾óÐ º¢ÈôÒ §º÷ò¾¡÷¸û.  þùÅ¢ÃñÎ Òò¾¸í¸¨ÇÔõ ¿¡§É  ±ý ¦º¡ó¾ ¦ºÄÅ¢ø «îº¡ì¸¢§Éý. þ¾ü¸¡¸ òÐÅí¸¢Â ±ý À¾¢ôÀ¸ò¾¢üÌ ºÀ¡º¡÷¾¡ý  À¡Ûºó¾¢Ãý ±ý¸¢È ¦ÀÂ÷ ¨Åò¾¡÷¸û. ±ý Á¨ÉŢ¢ý ¦À¡¢Ä¢ÕóÐõ ±ý¦À¡¢Ä¢ÕóÐõ À¡¾¢ À¡¾¢ ±É ±ÎòÐ «Ð ¾ÕÁ ¿øæ÷ ' À¡Ûºó¾¢Ãý À¾¢ôÀ¸õ' ±ý§È ¬ÉÐ. þùÅ¢ÃñÎ  áø¸ÙìÌõ Å¢Õò¾¡ºÄò¾¢ø ÀøÄ¼õ Á¡½¢ì¸ò¨¾ô¦À¡ÚôÀ¡Çá¸ì¦¸¡ñ¼ þÄ츢 «¨ÁôÒ ¬ö×ìÜð¼õ ¿¼ò¾¢ ¯üº¡¸õ ¾ó¾Ð. ÀøÄ¼õ Á¡½¢ì¸õ, ¸Å¢ï÷ ÀÆÁÄö ºÀ¡º¡÷ «Õ½¡¦¼ìЍ¼øŠ º¾¡º¢Åõ, ÀðÊ ¦ºíÌðÎÅý, ¸¡¢¸¡Äý, ÌȢﺢ§ÅÄý,ÌÃø ¿¼Ã¡ºý ¬¸¢§Â¡÷ «ó¾ ¿¢¸úìÌ Óý ¨¸ ±ÎòÐ ¯¾Å¢Â¨¾Ôõ  þí§¸ ÌÈ¢ôÀ¢¼ §ÅñÎõ.
                                                                                 ¸¡ïº¢ÒÃò¾¢ø ¦Å.¿¡ ±ý¸¢È ¦Å.¿¡Ã¡Â½ý ´Õ þÄ츢 «¨ÁôÒ ¿¼ò¾¢ì¦¸¡ñÊÕó¾¡÷¸û. þô§À¡Ð «Å÷ ¸¡ÄÁ¡¸¢Å¢ð¼¡÷. «Å¨Ãò¦¾¡¢Â¡¾Å÷¸û  «§É¸Á¡öò ¾Á¢ú þÄ츢 «Ãí¸¢ø ¡Õõ þÕì¸ÓÊ¡Ð.ºÀ¡ º¡ÕìÌ «Å÷ Á¢¸ ¦¿Õí¸¢Â ¿ñÀ÷.±ýÛ¨¼Â áø ÁÚ Àì¸ò¾¢üÌ ´Õ Å¢Á¡¢ºÉìÜð¼õ ´ý¨È ¸¡ïº¢ ÅýÉ¢Â÷ ¯Â÷ ¿¢¨ÄôÀûǢ¢ø ²üÀ¡Î ¦ºö¾¡÷¸û.ºÀ¡º¡Ã¡ø «ô§À¡Ð ¸¡ïº¢ ¦ºøÄ ÓÊ¡Áø ²§¾¡ «ºó¾÷Àõ ¬¸ò¾¡ý ¿¡ý ¸¡ïº¢ ¦ºýÚ ¦Å ¿¡ ¨Å îºó¾¢ìÌõ Å¡öôÒ ¦Àü§Èý ±ýÀÐ ¯ñ¨Á.  ¦Å.¿¡ §Å¡Î «í̾¡ý þÄí¨¸ ±Øò¾¡Ç÷ §¾Å¸¡ó¾¨É ºó¾¢ò§¾ý.À¢ýÉ÷ ±ÉÐ 'ýõ ÍÁóÐ' ¸Å¢¨¾ò¦¾¡ÌôÀ¢¨É  Á¨Èó¾ ±Øò¾¡Ç÷ ÅøÄ¢ì¸ñ½ý  «üÒ¾Á¡É Óýۨç¡Π§¾Å ¸¡ó¾ý¦ÅǢ¢ð¼¡÷ ±ýÀÐ×õ þí§¸ ¿¡ý ÌÈ¢ôÀ¢¼§Å ñÎõ
' Á£ðÒ' ±ýÛõ ´Õ ÌÚ ¿¡Å¨Ä Á¢¸ «ú¸¡¸ ±Ø¾¢ÂÅ÷ ºÀ¡.¸¢ðÎ «öÂ÷ «ó¾ ìÌÚ ¿¡ÅÄ¢ø ÅÕõ ¸¾¡À¡ò¾¢Ãõ.«Å÷  Ò¾¢Â¾¡ö Å¡í¸¢Â §Á¡ð¼¡÷ ¨ºì¸¢¨Ç м¡ð ¦ºöÂÓÊ¡Áø ¾¢ñ¼¡Ê§À¡Ð м¡ð ¦ºöоո¢§Èý ±É  ¯¾Å¢ìÌ ÁðΧÁ Åó¾Åý  «ó¾ Åñʨ§ ¸¼ò¾¢ì¦¸¡ñÎ §À¡öŢθ¢È¡ý.¸¢ðÎ «öÂ÷ À¢ýÉ÷ Àð¼ «ÅŠ¨¾¨Â ±ò¾¨É «Æ¸¡ö  ºÀ¡ Ţš¢òÐ þÕôÀ¡÷ ±ýÀÐ ¸¨¾ ÀÊìÌõ§À¡Ð  ÁðΧÁ ¿¡õ ¯½Ã ÓÊÔõ.
' ¡¨É þ¨Çò¾¡ø' ±ýÛõ ÌÚ ¿¡Åø  ƒÀ÷¾ŠÐ  ÁðΧÁ ¸¡ðÊ Àð¼¡ÇòÐ측Ãý ´ÕÅý º£ÃÆ¢óЧÀ¡ö  ¾¡ý Å¡úó¾ «ó¾ ¸¢Ã¡Áò¾¢ø ´Õ Ë ÌÊì¸ Â¡÷ ¯¾×Å¡÷¸û ±ýÚ ²í¸¢ ¿¢ýÈ ¸¨¾. ±ÉìÌôÀ¢Êò¾ ´ýÚ.
ºÀ¡¿¡Â¸õ ±Ø¾¢Â '«ºø  ¾¢¢ÕõÀÅ¢ø¨Ä' ÌÚ ¿¡Åø ¾¡ý ±ÉÐ ¿¢¨ÉÅ¢ø ¿¢ýÚ þýÚõ «¨º§À¡¼ ¨Å츢ÈÐ.ºÀ¡ º¡¡¢ý ¾¡Â¡÷¾¡ý þó¾ì¸¨¾Â¢ø ¬îº¢Â¡¸ ÅÕ¸¢È¡÷. Á¡Î §ÁöìÌõ  ´Õ °Ã¡¸¡Ä¢Ô¼ý ¬îº¢ ºõÀ¡„¢ìÌõ Å¢¾§Á ÍšÊÂÁ¡ÉÐ.¸¡¨Ä¢ø «Åý Á¡Î§Áöì¸ ÅÕõ§À¡Ðõ ¯ÕÁòÐìÌ ÅÕ¸¢È¡É¡õ Á¡¨Ä¢ø Á¡Î¸¨Ç §ÁöòÐò ¾¢ÕõÒõ§À¡Ðõ ¯ÕÁòÐ째 Á¡Î¸§Ç¡Î ¾¢ÕõÀ¢Å¢Î¸¢È¡É¡õ.¬îº¢ ±ýÉ ¿¢¨É츢ȡ÷¸§Ç¡ «ÐÅ¡¸§Å ¿¢ü¸¢ÈÐ  ¸¡Äîºì¸Ãõ. ¬îº¢Â¢ý ¬Ù¨¸ ÁðΧÁ À¨¼ôÒ ±íÌõ. ÁÈ츧ŠÓÊ¡Рšº¸É¡ø.
¸¼æ¡¢ø áƒÁ¡½¢ì¸õ ±ýÛõ þÄ츢 ¿ñÀ÷ ´Õ «¨ÁôÒ ´ýÈ¢üÌ ¦À¡ÚôÀ¡¸ þÕóÐ ¦ºÂøÀðÎ즸¡ñÊÕó¾¡÷. þô§À¡Ð «ÅÕ§Á ¸¡ÄÁ¡¸¢ Å¢ð¼¡÷. «Å÷¾¡ý  ºÀ¡×ìÌ ¸¨½Â¡Æ¢ þ¾¨Æ «È¢Ó¸õ ¦ºö¾Å÷ ±ýÚ ºÀ¡ ±ô§À¡Ðõ «Ð ¦º¡øÄ¢ «Å¨Ã ¿¢¨É× ÜÚÅ¡÷. «ó¾ì  ¸¼æ÷«¨ÁôÀ¢§Ä¾¡ý ºÀ¡ º¡ÕìÌ 'º¢Ú¸¨¾îº¢üÀ¢ '±ýÛõ Àð¼õ ÅÆí¸¢ ¸×ÃÅ¢ò¾¡÷¸û.«ó¾ þÄ츢 ¿¢¸ú ¸¼æ÷ ¼×ý †¡Ä¢ø ¦ÅÌ º¢ÈôÀ¡¸ ¿¨¼¦ÀüÈÐ.
'¦¾ýȨÄò§¾Ê' ±ýÛõ ºÀ¡Å¢ý ÌÚ ¿¡Åø ¦¾¡ÌôÒ «üÒ¾Á¡É¦¾¡Õ À¨¼ôÒ.«¾É¢ø ¦Àñ¸û Ţξ¨Ä §ÀÍõ ºÀ¡
''¬ñ¸û ±ý¸¢È º÷Å¡¾¢¸¡¡¢¸Ç¢ý ¸¡ÄʸǢø -«Å÷¸ÇÐ Å¡÷ò¨¾îº×ì̸ÙìÌì¸ðÎôÀðÎ ¸¢¼ì¸¢ÈŨÃ-¾¡õÀòÂõ ±ý¸¢È Å¢Äí¨¸ Á¡ðÊ즸¡ñÊÕ츢ÈŨÃ- ¦Àñ¸ÙìÌ Á£ðº¢ þø¨Ä. ÌÎõÀõ,À¡ºõ,ÀüÚ,ÌÆó¨¾¸û-±øÄ¡§Á ¦Àñ¸¨Çì¸ðÊô[§À¡¼§ÅñÎõ ±ý§È À¢ýÉôÀð¼ Ýú¸û.' ±ýÚ ¾ÉÐ  ÒÃðº¢ì¸Õò¨¾ ¨Å츢ȡ÷.'¸¢Ã¸Š¾¡ŠÃÁõ' ±ýÛõ ¸¨¾Â¢ø ÓÕ¸ý §¸¡Å¢ø §À¡Ä¢îº¡Á¢Â¡¡¢ý ƒÀ÷¾ŠÐ¸û ÀüÈ¢ ¾òåÀÁ¡¸ Ţš¢ì¸¢È¡÷. þÇõ Å¢¾¨Å º¢Å¡Éó¾ò§¾¡Î §À¡Ä¢îº¡Á¢Â¡÷ µÊô§À¡ÉÐ «Å¢úÀÎõ ¸¨¾ÂÐ «ò¾¨É §¸Ä¢¸û ¦À¡¾¢óЦ¸¡ñÎ Å¡º¸¨É츢Èí¸¨ÅìÌõ'.º¢¨È Á£Ùõ º£¨¾¸û' ¸¨¾Â¢ø «ï͸ò¾¢ý ¿¡ìÌîº×ìÌ  ¬½¡¾¢ì¸ §Å÷ «ÚìÌõ §¸¡¼¡¢Â¡ö Å¡º¸ÛìÌ «ÛÀÅÁ¡Ìõ.
Å¡º¸¨É «¨ÆòÐ즸¡ñÎ Óý§É ¦ºøÖõ  ºÀ¡Å¢ý ±Øòп¨¼ À¢ø¦¾¡Úõ ͸õ ¾Õž¡Ìõ.
ż桢ø §À¡Š§¸¡ ±ýÛõ ´Õ ¿ñÀ÷ ´Õ þÄ츢 «¨ÁôÒ ¿¼ó¾¢ì¦¸¡ñÊÕó¾¡÷. «¾üÌ ¿¡Ûõ ºÀ¡ º¡Õõ ¾ÅÈ¡Áø ¦ºýÚ ÅÕ§Å¡õ.¾í¸÷Àý  ±Ø¾¢Â '¦Åû¨ÇÁ¡Î'' ´ýÀÐ åÀ¡ö §¿¡ðÎ' ¬¸¢Â À¨¼ôÒ¸ÙìÌ «í§¸ ¬ö×ìÜð¼õ ¿¨¼¦ÀüÈÐ.¾í¸÷ Àý ¿¢¸ú¸ÙìÌ Åó¾¢ÕóÐ Å¡º¸÷¸Ç¢ý §¸ûÅ¢¸Ù즸øÄ¡õ À¾¢ø ¦º¡ýÉ¡÷..þó¾ôÀ̾¢Â¢ý ¦ÀÕ¨ÁìÌ¡¢Â ´Õ Á¡¦ÀÕõ º¢É¢Á¡ì¸¨Äïý  ¾Â¡Ã¡¸¢ ôÀǢÎŨ¾ «ô§À¡Ð ¿¡í¸û ¯½÷󧾡õ.
ż桢ø ¨ÅòÐ ¯.¦º. ÐǺ¢ ±ýÛõ ¸Å¢ïý ±í¸ÙìÌ ¿ñÀáɡ÷.þÇõ ž¢§Ä§Â ¸¡ÄÁ¡¸¢Å¢ð¼ ¯.¦º. ÐǺ¢ «üÒ¾Á¡É ¸Å¢¨¾¸¨Çò¾ó¾Å÷. żæ÷ «Õ§¸ÔûÇ ¯ûÁÕÅ¡ö «Å¡¢ý §º¡ó¾ °÷.«Å÷ ±Ø¾¢Â ¸Å¢¨¾¸û ´Õ¦¾¡ÌôÀ¡ö ÅçÅñÎõ. þýÛõ «Ð ¸É¢ÂÅ¢ø¨Ä .¾¡ý Á¨ÈžüÌ ÓýÀ¡¸ ºÀ¡º¡¨Ã «Å÷ Å£ðÊø ºó¾¢òÐ §¾ ¿£÷ «Õó¾¢ ¦ÅÌ §¿Ãõ «ÇÅǡŢ Å¢ðΦºýÈÅ÷ ÐǺ¢. «Å÷  Á¨Èó¾ «ýÚ «ó¾ Ì츢áÁõ ¦ºýÚ «ïºÄ¢ Å¢ðÎ ¾ý §º¡¸ò¨¾ ±ý§É¡Î À¸¢÷óЦ¸¡ñ¼¡÷ ºÀ¡. ÅÂÐ ´Õ Å¢„§Á þø¨Ä. ¯½÷׸û  ÁðΧÁ Ó츢Âõ ±ýÀÐ ¯½÷òÐÀ¨Å ºÀ¡Å¢ý ¦ºÂøÀ¡Î¸û.
ºÀ¡ º¡§Ã¡Î ¿¡ý «§É¸ °÷¸ÙìÌ À½õ ¦ºöÐ þÕ츢§Èý.¦ºý¨É, ¾ï¦ºö,¸¼æ÷, ¦¿ö§ÅÄ¢,ÀñÕðÊ,Å¢ØôÒÃõ ±É ôÀÄÓ¨È
¦ºýÚ Åó¾¢Õ츢§Èý.±ý «ÛÀÅí¸û þÉ¢¨Á¡ɨÅ.«Å÷ º¢í¸ôâ÷ ¦ºýȧÀ¡Ðõ, ¾ý Á¸û  ¾í¸¢Â¢ÕìÌõ «ó¾º£„øŠ ¦ºýȧÀ¡Ðõ ±ý§É¡Î ¦¾¡¼÷Ò ¦¸¡ñ§¼ ¢ÕôÀ¡÷.¿¡ý «ö¡§Å¡Î §Àº¡¾ ¿¡ð¸§Ç þÕì¸ÓÊ¡Р±ý¸¢È Å¢¾Á¡ö þÕó¾Ð ±í¸û þÄ츢 ¿ðÒ.
 .



sabaa saar kuriththu innum sila


Wednesday, August 14, 2013

aakavae

ஆகவே                                                                                                                     -எஸ்ஸார்சி

மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது.  வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால்  பிறகு  அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் தோழர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு நூறுபேருக்கு இருக்கலாம். எல்லாரும் எப்படியோ  ஒரு விதத்தில் இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள். நீங்கள் நினைக்கும்  அந்த அதே இயக்கம்தான்.
என்னை ப்பொருளாதாரம் பற்றிய விரிவுரைக்கு மட்டும் அழைத்திருந்தார்கள்.ஏழு நாட்கள் தொடர்ந்து வகுப்பு காலை மாலை என இரண்டு பகுதிகள்.ஒரு நாள் காலை முழுவதும் பொருளாதாரம் பற்றிப்பேசினேன்.பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை. யாவருக்கும் அனுபமாகும் பெரு விஷயம். பொருளாதாரப் பிதாமகன் ஆடம்சுமித் தொடங்கி கொல்கத்தாவின் அமர்த்தியா சென் வரை சொல்லிமுடித்தேன். பாடம்தான் எப்போதும் இருக்கவே இருக்கிறது. இடையே நான் போட்ட  பிட்(இடையுள்)ஒன்று உண்டு. அது மட்டும் உங்களோடு காதும் காதும் வைத்தமாதிரி சொல்லிவிட்டால் தேவலை என்பதாய் எனக்குள் சின்ன அபிப்ராயம்.
ஆ ஒன்று பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.வெள்ளைக்காரன் ஆட்சியேலேயே  ராணுவத்தில் வேலை.எத்தனை பெரிய  உத்தியோகம் விமானப்படையில்  ஒரு லெப்டினெண்ட்.அந்தப் பணியின் ஆகிருதி பற்றியெல்லாம் புரிந்துகொள்வது என்பது இப்போது கொஞ்சம் சிரமம்தான்.
சிவப்பு அட்டைபோட்டுக்கொண்ட புத்தகங்கள் நான்கினை எங்ககேயோ எப்படியோ   தன் பெட்டி படுக்கையோடு  யாரோ ஒரு புண்ணியவான் மறைத்து வைத்துவிட  அந்த மாபெரும் குற்றத்திற்காகத்தான்  ஆ ஒன்றுக்கு தண்டனைப் பணி நீக்கம். அரைகாசு பெற்றாலும் அரசாங்கச்சனம்பளம் என்கிற அந்த ஜிகினா  பந்தா போய்விட்டபிறகு வேறு வழி  ஒன்றும் தெரியாமல் இந்தபொதுவுடமைக்காரர்களோடு தொடர்பு வந்தது. கதை போட்டுக்கொண்ட பாதை அப்படி.. அந்தத்
தொடர்பு மொட்டாகி ப்பூவாகி காயாகி க்கனியானது. தன்னைமுன்னிறுத்திக்கொள்ளும் வித்தை கைவசம். ஆகத்தான் பொதுவுடமை தத்துவங்கள் சரியாய்ப் பயில  நாடு விடுதலை அடைந்த பின்னே மாஸ்கோ இத்யாதி நகரங்கள் சென்று  ஆண்டுக்கணக்காய்த்தங்கிப்படித்து தாய்நாடு திரும்பியவர்  இந்த ஆ ஒன்று.எத்தனையோ பேர் லெனின் பூமிக்குப்போனார்கள். பாட்டாளி வர்க்க அரசியல் படிக்கப்போனார்கள், உடல் சுகமில்லாதவர்கள் மருத்துவம் பார்த்துக்கொள்ளக்கூடத்தான் போனார்கள்சிவப்பு வண்ணத்தில் அட்டைப்போட்டுக்கொண்ட புத்தகங்கள் தயார் செய்து  ஒரு ஊர்விட்டுவிடாமல் உலகம் முழுவதும் மூட்டை மூட்டையாய் அனுப்பி அனுப்பி வைத்தே திவாலாகிப்போனவர்கள்  வாசம் செய்த   திருப்பதிதானே அந்த மாஸ்கோ.
ஆ ஒன்று இருக்கிறாரே அவர் சிவப்புத் தத்துவங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.மார்க்சீய  அறிவியல் என்றால்  அவருக்குச்சொல்லவே வேண்டாம்.கல்வி இலாகாவுக்கு அவரே பொறுப்பானார்.எத்தனையோ தத்துவ வகுப்புக்கள். மாவோயியமா,பவுத்தமா,திராவிடமா,பாசிசமா,எதுவானால்தான் என்ன பேச ஆரம்பித்தால் இடையில் நின்றது என்கிற வார்த்தையேது.குறிப்புக்கள் எடுத்துக்கொண்டே போகலாம்.அவர் வெளியிட்ட புத்தகங்கள் எத்தனையோ.எல்லாம் அவ்வப்போது டபக்  டபக்கென்று விற்றும் விடும்.அவர் எழுதி ஒரு பத்திரிகையில் வெளி வராத கட்டுரை என்று எதுவும் உண்டா என்ன.எது பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள்.ஆ ஒன்று எதிர்கொள்ளாத கேள்விதான்  ஏதும் உண்டா  புதிதாக என்னத்தை அய்யா கேட்டுவிடப்போகிறீர்கள்.
ஆனால் ஒரு விஷயம் ஆ ஒன்று  இன்று நம்மோடு இல்லை.வெறும் தத்துவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என்னசெய்ய, செயல்பாடு  என்பதுவோ பூச்சியம் ஆகவே.

ஆ இரண்டு பற்றியும்சொல்லவேண்டும்.போராட்டம் போராட்டம் போராட்டம். ஆ இரண்டுக்குப்போராடாத அந்த நாள் எல்லாம் பிறவா நாளே.
சுற்றி ச்சுற்றி வரும் எத்தனைத்தோழர்கள்.மறியல் என்றால் மெய்யாலுமே மறியல்.முற்றுகை என்றால் மெய்யாலுமே முற்றுகை,புரட்சி என்றால் மெய்யாலுமே புரட்சி.உதவி செய்வது என்றால் வீழ்ந்து புரண்டு உதவி செய்வது,இயக்கத்துக்கு நிதியா வேண்டும் தேனீயாய் உழைத்து நிதி திரட்டித்தருவார்,கோஷம் போடணுமா இல்லை கொடிதான் ஒட்டணுமா இல்லை  கொடி கட்டணுமா சொன்னால் போதும் இயக்க காரியம் முடிந்து விட்ட மாதிரிதான்
ஆனால் ஒரு விஷயம் ஆ இரண்டு இன்று நம்மோடு இல்லை.வெறும் செயல்பாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்ய, தத்துவ ஞானம் என்பது பூச்சியம் ஆகவே.

ஆ மூன்று பற்றி உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்.இவர் சிறைக்குப்போனமாதிரி யார் அய்யா  போனார்கள்.  இந்திய மண்ணின் அத்தனைச்சிறையும்  பரிச்சயம். பாரத நாட்டு விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற ப்பெரிய மனிதன் ஆயிற்றே.ஓடி ஒளிதல் அறியாப் பிறவி. அஞ்சுதலென்பதுதான் இவர் அகராதியிலேது. நாட்டை ஆண்டுவிட்டுப்போன அந்த வெள்ளைக்காரன் தடியால் அடித்து ஒரு கால் ஊனம் ஆனது. வெள்ளைக் கதரோடுதான் தன் கட்டை போகும் பின் வேகும் என்கிற  அவரின் உறுதி பிரமிக்கத்தான் வைக்கிறது.
ஆனால் ஒரு விஷயம் ஆ மூன்று இன்று நம்மோடு இல்லை. வெறும் தியாகத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்ய, தான் பிறந்த  அந்தசாதி மீது கொண்ட பற்று  அவரை அவ்வப்போது ஆட்டி ப்படைக்கிறதே. ஆகவே.

ஆ நான்கு பற்றிக்கட்டாயம்சொல்லிவிடவேண்டும். இந்திய நாடு ஒரு விவசாய நாடல்லவா. விவசாயிகள்  பிரச்சனை பற்றி இவரைவிடத்தெரிந்தவர்தான் இங்கே உண்டோ. இந்திய நதிகள் தேச உடமை ஆக வேண்டும் என்று உரத்துக் குரல் தந்தார்.நதி நீரை நுகர்வோர் எல்லாரும்தான்  மொத்தமாய்ச்சண்டைக்குத்தான் வந்தனர் அவரோடு.சர்வதேசியம் பேசியது எல்லாம்  ஒரு வழியாய் மூட்டைக்கட்டி வைத்தாயிற்றா என்று அவர் கேட்டது பெரும் பிரச்சனை ஆனது.பெரிய இடத்திற்கே கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
ஆனால் ஒரு விஷயம் ஆ நான்கு இன்று நம்மோடு இல்லை. வெறும் வேளாண் அறிவு மட்டுமே  எப்படிப் போதும், சாதாரண  நடைமுறைத்தந்திரம் அறியாத ஒருவரை வைத்துகொண்டு இயக்கத்தில் என்னதான் செய்வது. ஆகவே.
ஆ ஐந்து பற்றி  நீங்கள் அறிவதும் நல்லதே.இலக்கியம்  மொத்தமும்  கரைத்துக்குடித்தவர்.  இது அந்த அவர்கள் மட்டும்  சொன்னால்  தவறாகிவிடும். ஊரே சொல்கிறதே.ஆகத்தான்  நீங்களும் நாங்களும் சொல்ல வேண்டிய கட்டாயமும் வருகிறது.கம்ப ராமாயணத்தைப்பாழும் கடல் கொண்டு போனாலும் முற்றாய்ச்சொல்லிவிட ஒரு ஆள் உண்டு என்றால்  அது இந்த இவர்தான். அத்தனை ப்பாடலும்  மனப்பாடம் ஆகி இருக்கிறது என்றால் பிறகு என்ன சொல்வீர்கள்.
இலக்கிய உலகில் எல்லாமே அத்துப்படி.யார் இல்லை எங்கிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம்.ஆ ஐந்து இன்று நம்மோடு இல்லை.வெறும் தமிழ் அறிவு வைத்துக்கொண்டு எப்படி, கைசுத்தம் இல்லை  அதோடு மட்டுமா கொஞ்சம்  அந்தக்கோளாறும் உண்டு என்று குசுகுசுக்கிறார்கள்.ஆகவே.

ஆ ஆறு பற்றியும் சொல்லிவிட்டால் தேவலை.எத்தனையோ தியாகங்கள் செய்தவர்தான். சும்மா உட்கார்ந்து  கை நிறைய சம்பளம்  வாங்கும் ஒரு அரசாங்க வேலையை தூக்கி எறிந்துவிட்டு தெருத்தெருவாக அற்புதமாய்ப் பிரச்சாரம் செய்து கூட்டணிக்கட்சிக்காரருக்கு இறைவன் கொடுத்த பெரிய மனதில் சட்டசபைக்கு தேர்வு பெற்றுப்போனதுண்மை.இன்ன ஆள் என்பதாலேயே இந்தத்தொகுதி   இவருக்குக்கொடுத்தார்கள் என்று மேலிடம் சொல்ல அதில் என்ன சந்தேகம் என்றபடிக்கு சுற்றி இருந்தவர்கள் ஆமாம் புசாலி போட ரோசப்பட்டு  இன்னார் இந்த இனம் என்று சொல்லக் கூடாது என்றுதான் இங்கே  வந்தது என்று  ஆ ஆறு சொல்லாமல் இருந்திருக்கலாம். விதி வலியது யார்தான் என்னசெய்துவிட முடியும்.
ஆனால் ஒரு விஷயம். ஆ ஆறு இன்று நம்மோடு இல்லை. வெறும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் யுக்தி  மட்டும்  படித்து வைத்துக்கொண்டு எப்படி,  தான் வாழும் சூழல் இன்னும் விளங்கிக்கொள்ளாமலே என்ன ரோசம் அது இது எல்லாம்.ஆகவே.
ஆ ஏழு பற்றிச்சொன்னால் ஓரளவு எல்லாம் தெரிந்து விட்டமாதிரிதான்.ஆ ஏழு ஒரு தோழியர்.தோழர் என்பது பொதுப்பால் என்கிறீர்களா அது கிடக்கிறது விடுங்கள். வந்து விட்டது மகளிருக்கு இட ஒதுக்கீடு அங்கே பார் இங்கே பார் என்று பேசலாம். ஒரு பதவிக்கு மட்டுமாவது பெண் கட்டாயம் இருக்கட்டும் என்று கருவேப்பிலையாய்ச் சேர்த்துக்கொள்ள பட்ட பாடு கடவுளுக்கே வேளிச்சம். போயும் போயும் அடிமரத்தை வெட்டுவதற்குக்கோடரி எடுக்கும் வேலையையா அந்தப்பெண் செய்வது.
ஆனால் ஒரு விஷயம். ஆ ஏழு இன்று நம்மோடு இல்லை.பெண் என்பதால் மட்டும் பதவி கொடுத்து வைத்திருப்பது எப்படி.உலகமே கோணலாய் இருக்கலாம் அதை விடு. ஆனால் நீ எப்படி இப்படி இருக்கலாம் என்கிறார்களே.விடை யார் சொல்வது.ஆகவே.
அமர்ந்திருந்த மாணாக்கர்களில் ஒருவர் எழுந்தார்.
'ஆனால் ஒரு விஷயம் ஆ எட்டு இன்று நம்மோடு இல்லை. அரசியல்பாடம் சொல்லும் திறமை ஒன்று மட்டுமே  இருந்தால் எப்படி.   தொழிற்சங்க வகுப்பு எடுக்கும் ஆசிரியர் எதைச்சொல்வது எதை விடுவது என்கிற ஞானம் வேண்டாமா விதி வலியது , கடவுளுக்கே வெளிச்சம், இறைவன் கொடுத்த பெரிய மனது என்று எல்லாம் பேசவா இங்குவருவது.ஆகவே.' சொல்லிவிட்டு அமர்ந்தார். அவரை அழைத்து ப்பாராட்டினேன்.
''சரியாகவே நான் பாடம் நடத்தியிருக்கிறேன் என்பது எனக்கு நிறைவு. எனக்கு ப் பின்னே நீரே கட்டாயம்    அந்த ஆகவே.' சொல்லிய நான்   இடையுளை(பிட்) நிறைவு செய்தேன்.
------------------------------------------------------------------------------------------------
























Sunday, April 21, 2013





வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்                                    - எஸ்ஸார்சி

ஒரு நாள் என்  அலுவலக நண்பன் என்னிடம் ,
            'நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
            வித்தகர்க்கல்லால் அரிது'. என்னும் குறளில் நத்தம் என்பதற்கு ப்பொருள் என்ன என்று  என்னிடம் கேட்டான்.அவன் பள்ளி செல்லும் மகளின் ஐய்யம் அவனிடம் வந்து என்னிடம் வந்துவிட்டது.எனக்கும் பொருள் சரியாக சொல்ல முடியாதுபோகவே சபாநாயகம் சாரைக்கேட்கலாம் என்று  அவனே  அவருக்கு ஒரு போன் போட்டான்.அப்போதுதான் எனக்கு திடீர் என்று 'அசல் திரும்பவில்லை' என்று குறுநாவல் கணையாழியில் எழுதிய வே.சபாநாயகம் பற்றிய ஞாபகம் வந்தது. ஒருக்கால் இவர் தானோ அவர் என்று கணக்குப்போட்டேன்.  ஆமாம் அது சரித்தான். ரிசீவரை நானும் வாங்கி ப்பேசினேன்.'ஆமாம்  நான் அதே சபாநாயகம் தான்' என்றார்.  கணையாழியில் நானும் நிறைய எழுதிய ஒரு காலம். அன்றுதான் அவரும் நானும் ஒரே ஊரில்  குடி இருப்பது தெரிய வந்தது.அன்று மாலையே  நேரில் சென்று அய்யாவப்பார்த்தேன். நெகிழ்ந்து போனேன்.ஆழ்ந்த ஒரு இலக்கிய ச்செறிவுக்கு அங்கே அன்பும் எளிமையும் அணிகலன்களாயிருந்தன.அன்று தொடங்கிய  இலக்கிய நட்பு இன்றும் நாளையும் என்றும்  அப்படித்தான்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்  மணிமுத்தாறு வலஞ்செய்து செல்லும் விருத்தாசலம் பகுதி  தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் வளமான மண். இன்று பழமலய், இமயம், கரிகாலன், கண்மணிகுணசேகரன் பல்லடம் மாணிக்கம், தெய்வசிகாமணி, பட்டிசெங்குட்டுவன், பல்லவிகுமார், ரத்தினகரிகாலன், சிலபல ஆண்டுகட்கு முன் இவர்களோடுரயில்வேத் துறை உதயசங்கர் என வரிசையாக படைப்பாளிகள் பலரை க்குறிப்பிட முடியும்.
 பிரதானமாக  எழுத்தாளர் வே.சபாநாயகமும் கவிஞர் பழமலயும் விருத்தாசலம் பகுதியைச்சேர்ந்தவர்கள்.புதுமைப்பித்தன் எழுத்தாளராய் மலர்வதற்குமுன் அவரின் இயற்பெயர் விருத்தாசலம். புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் விருத்தாசலம் நகரில் பணியாற்றி  ச்சென்றவர்  என்பது  இலக்கிய நண்பர்கட்குத்தெரிந்த வரலாற்றுச் செய்தி.
விருத்தாசலம் என்று அழைக்கப்படுகின்ற  பாடல் பெற்ற பழம் பதியாம் திருமுதுகுன்றம் நகரில்  வாழ்ந்து  வருகின்ற  வே.சபாநாயகம் புகழ்பெற்ற எழுத்தாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர்.  கவிஞர்  த.பழமலயின் பள்ளிக்கூட ஆசிரியர். தன் பள்ளி வகுப்பிலேயே பழமலயைக்கவிஞராய் முதன் முதலில் கண்டு சொன்ன ஒரு கணித ஆசிரியர்.
 வே.சபாநாயகம் 1950ல்  'ஆனந்தபோதினி' இதழில் 'எங்கள் வாத்தியார்' என்னும் முதல் சிறுகதை எழுதியவர். இலக்கிய இதழ்கள் தீபத்தோடும் கணையாழியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.கணையாழியின் பரிணாம வளர்ச்சி என்னும்  கட்டுரையைப்பல ஆண்டு காலம்  அதே இதழில் தொடர்ந்து எழுதிய  மூத்த எழுத்தாளர்.
 நா. பா,   வல்லிக்கண்ணன், திகசி,சுந்தர ராமசாமி, கோவை ஞானி,சிற்பி,திருப்பூர்கிருஷ்ணன், மாலன் ஆகியோருடன் நட்பு கொண்டவர்.எந்த  இலக்கிய சிற்றிதழுக்கும் முதல்  இதழ் தொடங்கி  அத்தனை இதழ்களையும் தன் நூலகத்தே காத்துவருகின்ற தமிழ் அரண்.
விளக்கு இலக்கிய அமைப்பின் விருது தேர்வுக்குழுவில் சபாநாயகம் சிறப்பாக அங்கம் வகுத்து இலக்கிய தரம் கூட்டிவருபவர்.
திண்ணை இலக்கிய இணைய இதழில் இன்றும் பளிச்சென்று வரும் தன் தொடர் கட்டுரையால் வளம் சேர்ப்பவர்.
மு.ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலிருந்து கொண்டுவரும் இலக்கிய இதழின் ஆலோசகர். தனது முத்திரைப்படைப்புக்களின் மூலம் இலக்கியச்சிறகு இதழுக்கு அணி சேர்ப்பவர்.
தனது குயிற்குஞ்சு என்னும் சிறுகதையால் ஆன ந்தவிகடனில் ஜாக்பாட் பரிசு பெற்ற எழுத்தாளர்.அண்ணாமலை ப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது மாணவப்பத்திரிகையாளனாய் ஆனந்தவிகடனால் அன்றே தேர்வுசெய்யப்பட்டவர்.
 நா. பாவோடும்,  தீபம் திருமலையோடும் சபாநாயகம் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
தொடர்ந்து கணையாழி இதழ் நடத்திய தி.ஜா. குறு நாவல் போட்டியில் மூன்று ஆண்டுகள் பரிசு பெற்ற ஒரே படைப்பாளி.
வே.சபாநாயகம் 'விதியை வென்றவள்' என்ற ஹெலன் கெல்லரின் வாழ்க்கைவரலாற்று நூலுக்காக ஏ வி எம் அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளர்.
'ஸ்காலர்ஷிப்' என்னும் குறு நாவலை தீபத்தில்  வைர வரிகளாய் எழுதி  இலக்கிய அரங்கில் பேசப்பட்ட  படைப்பாளி.
சபாநாயகம் எழுதிய 'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' என்னும் புதினம் பின்னர் வெளிவந்தது. அப்புதினம் கோவை கஸ்தூரி சீனுவாசன் அறக்கட்டளையின்   பரிசு பெற்றது.பின்னர் தமிழ அரசின் விருது,திருப்பூர் இலக்கிய ச்சங்க விருது,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சிறந்த எழுத்தாளர் விருது எனத்தொடர்ந்து பல விருதுகள் அவரை த்தேடி வந்தன.
தஞ்சையில் சுந்தர சுகன் வீட்டில் வைத்து ஒரு இலக்கிய விழா நடந்தது. நானும் சபாசாரோடு அந்நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன்.தஞ்சை பிரகாஷ், காதம்பரி, பொதியவெற்பன், ஜாகிர்ராஜா இவர்களோடு பட்டுக்கோட்டை மு.ராமலிங்கமும் வந்திருந்தார்கள். அங்கு வைத்துதான் ராமலிங்கம் அய்யாவை எனக்கு சபா நாயகம் சார் அறிமுகம் செய்து வைத்தார்கள்.இலக்கிய இதழ் 'இலக்கிய சிந்தனை' மற்றும் ஆங்கில இதழ் 'ஷைன்'  இவைகளை ராமலிங்கம்  பட்டுக்கோட்டையிலிருந்து தொடங்க இருப்பதை  சுகன் இல்லத்தில் அறிவித்தார்.இன்றுவரை அவை கம்பீரமாய்  இலக்கிய உலகில்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.வடலூர் வள்ளல் ராமலிங்கர் சன்னதிமுன் துவங்கிய இலக்கியச்சிறகின் தொடக்கியவிழாவில் ஆரம்பித்து இன்றுவரைஅதன் ஆக்கத்திற்கு சபாநாயகம் உற்றதுணையாக  இருந்துவருதல் மகிழ்ச்சிக்குறிய  விஷயமாகும்.
சபாநாயகம் எழுதி விகடன் பரிசு பெற்ற 'குயில்குஞ்சு' சிறுகதை என்றும் நம் நினைவில் நிற்கின்ற ஒரு படைப்பாகும். வேத வித்தாகி நிற்கின்ற கோயில் குருக்கள் ஒருவரின் மனைவிக்குக் கோவில்  வேலைக்காரனோடு  வைத்துக்கொண்ட கள்ளத்தொடர்பில் பிறந்த ஒரு குழந்தை அத்தனை அறிவோடு  வளர்கிறது. குருக்களுக்குத்தெரிந்த ஆன்மீக  விஷயங்கள் அத்தனையும் அந்தக்குழந்தைக்கு மட்டுமே எளிதில் வந்து கூடுகிறது. உயிர்பிரியப்போராடும் குருக்களின் மனைவியின் இறுதிக்கணங்கள்  தன் கணவருக்கு அவள் செய்துவிட்ட குற்ற உணர்வென்னும் தீயில் கிடந்து  புழுவாய்த்துடிக்கின்றது. வேத ஞானம் கற்றுத் தெளிந்த குருக்களோ  இந்த எல்லா விஷயமும்  எப்போதோ அறிந்துகொண்டுவிட்டு  தன்மடிகிடக்கும் அவளுடன் அன்போடும் வாஞ்ச்சையோடும் பரிந்து பேசுகிறார். குருக்களின் மனைவி தான் செய்துவிட்ட துரோகத்தைச்சொல்லி மன்னிக்க வேண்டுகிறாள். மன்னிக்க எதுவுமே இல்லை. அவன் மட்டுமே என் வேதவாரிசு என்கிறார் குருக்கள்.  கண்ணீர் சொரிய அவளின் உயிர் உடனே விடைபெற்றுக்கொள்கிறது என்பதனைச் சொல்லும் அற்புதக்கதை.
'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' அந்தக்காலத்துத் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கையோடு விறுவிறுப்பாய் நகர்ந்துபோகும் ஒரு கிராமத்து க் கதை.திண்ணைப்பள்ளிக்கூடங்கள் எப்படியெல்லாம் இயங்கின என்பதற்கு  நம்  முன்னே  சாட்சி ஆவணமாய்த்திகழும் ஒப்பற்ற படைப்பு.
தனது எழுத்துக்கும் கல்விப்பணிக்கும் ஆதாரமாய் இருந்த ஆசான் தன் இறுதிக்காலத்தில் வறுமையும் முதுமையும் வாட்ட விருத்தாசலம் கடைவீதியில் செத்துக்கிடந்த சோகத்தை வாசகனுக்குச்  சொல்லும் புதினம்.
இந்தப்படைப்பைப் பழமலய் 'கூடலை ஆற்று இலக்கியம்' எனப்பெருமையோடு அழைக்கிறார். மணிமுத்தாறும் வெள்ளாறும்  சங்கமிக்கும் நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கையைக்கூறும் படைப்பு என்பதால் இது மிகச் சரியானதே..
'இனியொருதடவை' என்னும் குறு நாவல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.தன் வீட்டுத்தோட்டத்தில் கூலிக்கு   முற்றிய இலவம் பஞ்சுக்காய் அடித்து உருப்படி செய்து கொடுப்பபவனோடு மல்லுக்கு நிற்கும் அந்தக்  கதாஆசிரியர் படுகின்றபாடு.  குறிஞ்சிவேலனின் 'திசை எட்டும்' மொழிபெயர்ப்பு இதழ் இக்கதையை திக்கெட்டும் பரவ வேண்டிய தமிழ்க்கதையாகத்தேர்வுசெய்து பெருமை சேர்த்திருக்கிறது.
'கணையாழித்தொகுப்பு' முதல் பாகம் சபாநாயகம்  பொறுப்பில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டது.கஸ்தூரிரங்கன் கேட்டுக்கொண்டதன் பேரில் இதனை சபாநாயகம் செய்து முடிக்க கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.
'தீபம் இலக்கியத்தடம்' தொடர்ந்து சுந்தரசுகனில் எழுதிய சபா அந்தத் தொகுப்பினை வெளியிட்டு  தீபம் நேயர்களுக்கு ப்பெரும்பங்களிப்பு செய்தார்.
ஜெயகாந்தனின் 'ஞானரதத்தில் ஜெயகாந்தன்' , மற்றும் 'ஞானரதம்' தொகுப்பினை  சபாநாயகம் தொகுக்க எ எனி இந்தியன் வெளியிட்டது.தென்னாற்காடு மாவட்ட  சிறப்பு மலரை தினமணி வெளியிட்டபோது விருத்தாசலம் பகுதியைப்பற்றிய தகவல்களை சபாநாயகம்  அவர்களே  எழுதி இந்தப்பகுதிக்குச் சிறப்பு சேர்த்தார்.
ஒரு நல்ல ஓவியரான சபாநாயகம் தன் தாய் தந்தையர் ஓவியங்களை  அற்புதமாய் வரைந்து தன் வீட்டுக்கூடத்துச்சுவரில் மாட்டியிருப்பதை அவர் இல்லம் சென்றவர்கள் பார்த்து அனுபவித்திருக்கலாம்.
 சீஷல்ஸ் நாட்டில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்த போது  தன்னுடைய  ஓவியத்தைத்தானே தத்ரூபமாக வரைந்து வெளியிட்டார். சபாநாயகம் ஒரு நல்ல போட்டோகிராபரும் ஆவார். அவர் எடுத்த அனேக நிழற்படங்கள் எழுத்தாளர்கள்  பலரின் புத்தகங்கள் பலவற்றுக்கு மேலட்டைகளாகி   படைப்புக்கு   வலிமை கூட்டியிருக்கின்றன.
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 'மறு பக்கம்' அவரின் முன்னுரையோடும் அவர் எடுத்துக்கொடுத்த நிழற்படத்தை மேலட்டையில் அலங்கரித்துக்கொண்டும்  வெளிவந்து வெற்றிப்படைப்பாகியது.
எண்பதைத்தொட இருக்கும் வே.சபாநாயகம் அறுபத்துமூன்று ஆண்டுகட்கும் மேலாக எழுதிவருகின்றார்.
அவரின் தமிழ் இலக்கியப்பணி போற்றுதலுக்குறிய ஒன்று.அவரை வணங்கி நாம் பெருமை கொள்வோம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------





 




Sunday, March 10, 2013


வணக்கத்திற்குறிய வாசக நண்பர்க்கு,

நீங்கள் அறிந்த விஷயம்தான். இருப்பினும் சில பகிர்தல் உங்களோடு.

சிறுகதைகள் படைப்பாக்கத்தில் அதி நுட்பம் வாய்ந்தவை. ஓவியன் ஒருவனின்  ஓவியம் தீட்டுவதற்கான மனகதிக்கு  ஒப்ப  மனம் அமைவதுவே படைப்பாளிக்குச் சிறுகதையொன்று எழுதிமுடிப்பதற்கான உகந்த நேரம்.
 சிறுகதைகள் உயிர்ப்புள்ளவை.அவை வாசகனோடு உரையாடுவன.கண்கள் சிமிட்டிச் செய்தி சொல்வன.சிரிக்க வைப்பன.ஞான ஊற்றாகிச் சிந்திக்க விளிப்பன.கண்கள் கசிய  வாசக மனத்தை உலுக்கி எடுப்பன.படைப்பாக்கத்தில் சிறுகதைகள்  செய் நேர்த்தி கூடியவை.வாசகனோடு உரையாடும் எழுத்துச் சித்திரங்கள் அவை. வாசகனோடு  கொஞ்சிப்பேசும் அழகு மழலைகள். மனம் உருகிப் பாசம் பொழிவன.  மனம் பிழிந்து  அவை உடன் ஏசவும் பேசவும் வைக்கும். உணர்வு மேடையில் எதையும் விட்டுவைக்காதன அவை.
சிறுகதை எப்போது  எப்படி  எங்கே உயிர்க்கும் என்பது படைப்பாளி ஒருவனால் சொல்லவும் வைக்காது.எது  ஒன்று கதையாகும் என்றுவரை அது மனச்சிறையில் பள்ளி கொள்ளும் அது பின் எச்சமயம் சிறுகதையாகிச் சித்திக்கும் என்பதுவும்  அவனால் சொல்லிவிட முடியாது.
 வீட்டு வாசல் நிலைக்கதவொன்றில் குளவி ஒன்று கூடு கட்டி ரீங்கரிக்கலாம்.தென்னை மரக் கீற்று மட்டையொன்றில்  கட்டிய தேன் கூடொன்று தொங்கித் தொங்கி ஆடலாம். நேற்றுவரைப்பார்க்க வைக்காத பைங்கிளி ஒன்று தோட்டத்து வேப்பமரக்கிளையில்  சொந்தமாய் அமர்ந்து  உங்களோடு பேசலாம் ஆடிப் பாடலாம்.இவை இக்கணம் சாத்தியமாயின. இப்படித்தான் இப்போதில் இவை. இவை என்றுமே இவ்விதம் தான் என்கிறபடி யாரேனும் விடை தர  இயலுமா அப்படித்தான்  சிறுகதைகள்.
இருபது  முப்பது ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்து விட்ட ஒன்று என்று இல்லை இன்னும் ஆயிரம் ஆண்டு  முன்னே   கூட நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம் கதைக்குக்கருவாகி மனப்பத்தாயத்தில் கண்களை மூடி மூடித் திறக்கலாம். ஆயினும் அது சிறுகதை என்னும் உருவுகொண்டு வெளிப்பட  மனகதியில் எதுவோ  முகிழ்த்து முட்டுக்கட்டையொன்றைப் போடும். எது அப்படி படைப்பைத் தடுக்கிறது என்பதுவும் ஏன் அப்படியெல்லாம்  நிகழ்கிறது என்பதுவும் சொல்லிவிடுதல்   சாத்தியப்படாது.
இன்று பார்த்த ஒரு நிகழ்வு இன்றே கதையின் கருவாகி இப்போதே சிறுகதையின் உருவும் ஆகி வாசகனைத்தேடிக்கொண்டுபோயே சேர்ந்துவிடும்.அங்கீகரிக்கப்படும் ஒரு படைப்பாகவும் அது உருக்கொண்டு படைப்புத்தளத்தில்  கம்பீரமாய் உலா வரும்.அவை அவைகட்கு பிரம்ம லிபியின் திருவிளையாட்டுண்டு போலும்.
எனக்கு அனுபவமான விஷயங்களே என் கதைகளின் ஆதாரம். சில வாசகர்கட்கும் நேர்ந்துமிருக்கலாம். பட்டதில் சிலவற்றையேனும் வாசகனுக்குச்சொல்லிவிட வேண்டும் என்று என் மனஞ்சொல்லச் சிறுகதைகளாய் அவை இப்போது உங்களோடு.
சிறுகதைகளை வாசித்து  அவைகளை  என்னோடு சாலப்பகிர்ந்து பின்னும் என்னையொரு தகுவிடம் ஆற்றுப்படுத்திய பாசமிகு எழுத்தாளர்,எஸ்.ஷங்கர நாராயணன் அவர்கட்கு என் நன்றி.
தேசம்- எனது ஆறாவது சிறுகதைத்தொகுப்பு. நட்பின் ஆலாபனையே இது தொகுப்பாய்  வெளிவர ஆதாரம். திரு.உதய்கண்ணனுக்கு என் நன்றி.
                                                                                                                 வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
                                                                                                                                   அன்புடன்
                                                                                                                                    எஸ்ஸார்சி
23 அ, நேதாஜி நகர்
பெருங்களத்தூர்( முது)
சென்னை 600063.

செல் 9443200455

Thursday, February 21, 2013




 விதி                                                                                        - எஸ்ஸார்சி

ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன். ராவணேசுவரன் என்கிற  அந்த ஈசுவர பட்டம்  பெற்று விட்ட இலங்கை  அரசன். எப்போதும் உடல் முழுவதும் அவன்  இட்டுகொள்வதோ பட்டை பட்டையாய் அணிசெய்யும் அந்த ஆலவாயான் திரு நீறு.  நம சிவாய ஐந்தெழுத்துத் திருமந்திரத்தை அவன் நா ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தது.
 நான்கு வேதங்களில்  அந்த சாமத்தை அவன் கரை கண்டவன். சாம கானத்தை அவன்  மெய்மறந்து  வீணை கொண்டு மீட்டத்தொடங்கினான்  வானுயர்ந்த அந்த இமய கிரி  உருகி நின்றது அவன் விரல் எழுப்பிய தந்தியின் இசைப்பிரவாக மகிமை அப்படி. அருகே  இருந்த பாறை ஒன்றின் மீது  தன் வீணையை வைத்துவிட்டு இரண்டு கைகள் எடுத்துச்  சிரம் குவித்து  நம சிவாய என்றான். இசைக்கருவியின் அடிப்பாகமோ உருகிய கற்பாறையில்  மாட்டிக்கொண்டு பின் உறைந்துபோயிற்று. எப்படித்தான் இசைக்கருவியை மீண்டும் வேளியே எடுப்பது.  ராவணன் திணறிப்போனான். தயாபரன் அந்த சிவ பெருமான்தான்  ராவணனுக்கு  ஒரு யோசனை சொன்னார்.  தெய்வ ஆணைப்படி மீண்டும்   மீண்டும்  அதே சாமகானத்தை   சிறிது வெளித் தெரிந்த அந்த வீணையின் கம்பி வழி வாசித்தான்..  சாம வேதத்தை அவன்  கை மீட்ட  மீட்டக் கைலாய மலை  இளக ஆரம்பித்தது. இசைக்கருவியை அவன் டக்கென்று லாகவமாய்    எடுத்துக்கொண்டான்.
 ராவணனுக்கு நீண்ட காலமாக ஒரு அய்யம். ஏன் இந்த கடவுள்கள் வரிசையில்  அந்தச் சிவபெருமான் மட்டும் சுடலையில் குடிகொள்ள வேண்டும். அப்படி என்னதான் கட்டாயம் வந்தது. போயும் போயும் சுடலையிலா படி அளக்கும் என் பெருந்தெய்வம் சிவன் குடி இருப்பது.இது என்னப்பா கொடுமை. சுடலையில் என்ன பிணஞ்சுடு புகை. துர் நாற்றம். ஓயா நரிகள் ஊளை ஒலி.  வாம பாகத்து அன்னை பராசக்தியிடம் ஒருமுறை கேட்டுப்பார்த்தான்.  ராவணனிடம் பராசக்தி அவள் பேச ஆரம்பித்தாள்.
'கழுத்தில் பார்த்தாயா ராவணா,  கொடுமையை அவருக்கு ச்சீறும் நச்சுப் பாம்பு, இடுப்பில் பார் கவிச்சை நெடி வீசும் கிழிந்துபோய்விட்ட  புலித்தோல் மான் தோல், எப்போதேனும்  அங்கே ஆனைத்தோல். சுடலைப்பொடி விரவிய திரு மேனி. கழுத்திலோ நீல கண்டம் என்னும் நஞ்சு. எதைச்சொல்வது நான். என் விதியின் எழுத்து அப்படி. இந்த லட்சணத்தில் யாம் எங்கு குடியிருந்தால்தான் என்ன போ'
'கௌரி விரதமிருந்துதானே அய்யனை மணம் முடித்தீர்கள் தாயே'
பெண் தெய்வம் லேசாகப்புன்னகைத்தாள்.
''அவர் புத்தியில் கொஞ்சம் உனக்கும் இருக்காதா என்ன. அந்த நீலகண்டத்துச் சிவனை ஓயாமல் ஆராதிப்பவன் ஆயிற்றே நீ'
'தாயே விடை கொடுங்கள்' என்றான் ராவணன்.
இது இங்குபோய் சரிப்பட்டு வருமா வராதுதான்.சாட்சிக்கரன் காலில் வீழ்வதற்கு அந்த சண்டைக்காரன்   காலில் வீழ்ந்துவிடுவது  எவ்வளவோ மேல். ஆகக்கைலாசபதி சிவபெருமானிடமே சென்று இதற்கு விடையைக் கேட்டுத்தெரிந்து கொள்வது என  ராவணன் முடிவு செய்தான்.
நந்தியின் அனுமதி பெற்றுக்கொண்டு   சிவபெருமானைச்சென்று பார்ப்பது என முடிவாகியது. நந்திக்கோ நிரந்தரமாக கைலாயத்தில் இடம் ஒதுக்கி இருக்க கைலாயத்தின் எஜமானன் சிவபெருமானுக்கோ  பிணம் எரியும் சுடுகாட்டில் மட்டும் நிரந்தர இடம்
இது எந்த நியாயத்தில் சேர்த்தியோ அந்த ராவணனுக்கு மட்டுமென்ன யாருக்கும் விளங்கினால்தானே.
 'அண்ட சராசரங்களை ரட்சித்துக்காத்து நிற்கும் தனிப்பெருங்கருணையே என் பெருந்தெய்வமே சிவபெருமானே  உம்மை ஒன்று கேட்டுவிடவேண்டும் என்பதாக அடியேனுக்கு  நீண்ட காலமாகவே ஒரு ஆதங்கம்.  இதுவே எனக்கு வாய்த்த சந்தர்ப்பம் கேட்கட்டுமா. நீர் ஏன்  பூரணமாய் ஒளிரும் ரத்தின மாளிகையொன்று கட்டிகொண்டு த்  தங்க சிம்மாசனத்தில்  அங்கே அமர்ந்து   பெருங் கம்பீரமாய் வதியக்கூடாது.சுடுகாட்டில் என்ன  உமக்கு  அப்படி  ஒரு கீழான வாழ்க்கை' ராவணன் சிவ பெருமானிடம் கேட்டே விட்டான்.
'நல்ல யோசனை சொன்னாய். ராவணா, என் மைத்துனன் வைகுண்ட வாசன் கரிய திருமாலுக்கும் நான் இம்மாதிரி இருப்பதில் வருத்தம் உண்டு. அவன் தங்கை பார்வதிக்குப்பார் எவ்வளவு சிரமம். ஆக நீயோ வந்து கேட்டும்விட்டய் ஆக  எனக்கு ஒரு மாளிகை உன் விருப்பப்படியே கட்டு.நான் உனக்கு  இக்கணமே அனுமதி தந்தேன். போ'
சிவபேருமான் சொல்லிவிட்டு கடகட என ஒருமுறை நகைத்தார்.
' தெய்வமே ஏன் நகைக்கிறீர்கள்'
'ஒன்றும் இல்லை.எதுவோ நினைத்தேன்.அதான்'
 ராம அவதாரம் எடுக்கபோகும் கரிய திருமேனியான். எச்சரிக்கை தந்தான். 'அய்யனே சிவபெருமானே யான் ராம அவதாரம் எடுத்து அந்த ராவணனைச்சம்காரம் செய்யப்பணிக்கப்பட்டு இருக்கிறேன். விதி அது.நீர் எதுவும் வாக்கு க்கொடுத்துவிட்டு எப்போதும் போல் மாட்டிக்கொண்டு விடாதேயும். அடியேனின் சிறு எச்சரிக்கை,  என்னை மன்னியுங்கள்' திருமால் முடித்துக்கொண்டார். அய்யனின் நகைப்புக்கு க்காரணம் அதுவே.
'என்ன நினைத்தீர்களோ அது சொல்லிவிட்டால் என்மனம் மகிழும்'
'ராவணா எனக்கு என் மைத்துனன் திருமால் அளவுக்கு  எப்போதும் விஷயங்கள் எட்டுவதே இல்லை. ஆகத்தான் இப்படி. சரி  விடு  அதை. நீ மாளிகை ஒன்று எழுப்பி விட்டுப்பின் வாயேன் பேசுவோம்'
'உங்களுக்கு ஒரு மாளிகை எழுப்பும் எனக்கு ஒரு சிறு விண்ணப்பம். தட்டாமல் அது அருள வேண்டும்.  உங்கள்   தெய்வக்கையால் மட்டுமே எனக்கு மரணம் சம்பவிக்க  வேண்டும்'
' எதிலும் இப்படி ஒரு அவசரம்தான் உனக்கு. ராவணா எனக்கு நீ கட்டப்போகும் அந்த மாளிகையை   முதலில் எழுப்பி முடி. நீ கேட்கும்  வரம் பற்றிப்பிறகு  பேசுவோம்'
சிவபெருமான் முடித்துக்கொண்டார்.
ராவணன் இலங்காபுரியில் பரமனுக்கு ஒரு ரத்தின மாளிகை எழுப்பினான்.தங்க சிம்மாசனம்
அமைத்து முடித்தான்.  விண்ணுலகத்து மயனும் விசுகர்மாவும் பம்பரமாய்ச்சுழன்று சுழன்று இலங்கையில் திருப் பணி முடித்தனர்.இந்திரனுக்கு த்தான் பொறுக்க முடியவில்லை.நாம் போய் சிவபெருமானிடம் இப்படி மாளிகை  ஒன்று  அய்யனுக்கு க்கட்டித்தருகிறேன் என்று  விண்ணப்பித்தால் ஒத்துகொள்வாரா.  போயும்  போயும் அசுரன் ராவணனிடமா போய் இதனை எல்லாம் கேட்பது.கரிய திருமாலுக்கு தெரிந்த அளவுக்கு சிவ பெருமானுக்கும் சரி படைப்புக்கடவுள் அந்த பிரம்மனுக்கும்  சரி  பிரச்சனையின்  அந்த க்கனம்தான் எப்போதேனும் விளங்குகிறதா.ஆனால் நாம்  அவ்விடம் போய்  இவை  இவை இப்படி என்று சொல்லத்தான் முடியுமா. புலம்பியே தீர்த்தான் இந்திரன்.
 லங்காபுரியில் ராவணன் கட்டிய பிரம்மாண்ட மாளிகையைப்பார்த்து வான் வதியும் கதிரோனும் நிலவுக்கடவுளும் அயர்ந்துதான் போனார்கள்.
பணி முடிந்து போயிற்று.  அந்த லங்காஅசுரன் ராவணன், சிவபெருமானிடம் போய் வேண்டிக்கொண்டான்.
'நான்  அனுதினமும் திருப்பாதம் பணியும் என் கருணைக்கடலே பெருந்தெய்வமே. தங்கள் திரு ஆணைப்படி  மாளிகை கட்டும் திருப்பணியை முடித்து நான் தங்கள் திருமுன் வந்து நிற்கிறேன். லங்காபுரி த்திருமாளிகையில் அய்யன்  எழுந்தருளி அங்கே குடிகொள்ள வேண்டும்.   சிரம் தாழ்ந்த  இந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டு  எனக்கு அருள் புரிய வேண்டும் இக்கணமே'
'மிகவும் சரி ராவணா சொல்லைக்காப்பாற்றுவாய் நீ என்பதிலெனக்கு  அய்யமே இல்லை'
' அய்யனே என் வரம்'
'என்ன கேட்டாய் நீ'
'தங்கள் திருக்கரம் கொண்டு மட்டுமே நான் மரணிக்கவேண்டும். அய்யனே என் இந்த அசுரப் பிறவித்துயர் களைய  ஒரு பேராசை இச்சிறுவன் ராவணனுக்கு'
'ஒன்றை மறந்துபோய் விட்டாய் ராவணா நீ. பஞ்சாட்சர மந்திரம் அல்லவா அந்த நம சிவாயம். அது சொல்வதை மட்டுமே  நீ  உன் உயிர் மூச்சாக்கி  விட்டு என்னைக்கொல் கொல் என்கிறாய். உன் உடல் முழுவதும் மணக்கிறதே திரு ஆலவாயான் திரு நீறு. எப்படி  ராவணா உன்னைக்கொல்வது. எனக்குச் சொல்லேன் பார்க்கலாம் நீ.'
'அய்யனே என்ன சொல்கிறீர்கள். அவைதாம் என் வாழ்முதல். அறிவீர்கள்தானே என் தெய்வமே. பின் எப்படி அவைகளை யான் துறப்பது.  அது சொல்லவும்  அஞ்சி நடுங்குகிறது பாரும்   இப்போதே என் நெஞ்சம்'.
'ஆக என்னால்   உன்னைக்கொல்வது ஆகும் காரியமா'
' பேரருளே எனக்கு வழி சொல்லுங்கள். என் அசுர ப்பிறவி கடை சேர வேண்டும். தாங்கள் எனக்குத்தாரும் வரம்'
' நீ  எனக்கு எழுப்பிய அந்த ரத்தின மாளிகையில் நீயே வாசம் செய். என் சுடலைதான் எனக்கு  சாசுவதம்.  பெரு விதி யின் கட்டளை அது. உனக்கும் எனக்கும் மேலாக பெருவிதி எப்போதும்  .'
' பரம் பொருளே  என்  இப்பிறவிக்கதிக்கு ஒரு விமோசனம் சொல்லுங்கள்.'
'எனக்குக்கட்டிய  லங்காபுரி  ரத்தின மாளிகையில் நீ போய்  தங்க சிம்மாசனம் ஏறி  அந்த  உத்தமிப்பத்தினி மண்டோதரியோடு வாழ்.உன்னை இப்பிறவித்துயரிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய அந்த ப்பெருங் கடமை என் பொறுப்பு.  நீ  அரண்மனைக்குப்போ. தெய்வம் வேறு  அதனினும் உயர்ந்தது  அந்த தெய்வ விதி. '
 பிணஞ்சுடு  மண்  தரையில்  கீழே விழுந்து வணங்கிய ராவணன்.நம சிவாய ச்சொல்லிப்புறப்பட்டான்.
 கணம் கூட அங்கே  நிற்காமல் அகன்று போனான் ராவணன்.
அயோத்திப்பெரு மன்னன் தசரதனின் பளிங்கு அரண்மனையில்  தனிமையில் இருந்த அரசப் பேரழகி கைகேயின் அந்தப்புற பட்டு மஞ்சத்தில் போய்  மந்தரை என்னும் கூனி அமர்ந்துகொள்கிறாள்.   லங்காபுரியில்  எங்கும் திரு விழாக்கோலம்.   அந்தக் கடவுளுக்குக்கட்டிய கட்டிய   திருமாளிகையில்   ராவணக்குடும்பம் குடியேற  புகு விழா ஏற்பாடுகள்  உடன் தொடங்கி விட்டன.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------