இரண்டாவது அலை
என்னத்தைச்சொல்ல
கொரானாக்காலமிது
வந்துவிட்டதப்பா
இரண்டாவது அலை
அனுதினம் மூன்றரை
லட்சம் மக்கள்
பெருந்தொற்றுக்கு
ஆளாகிறார்கள்
பாரதம் புண்ணியபூமி
ஆயிரமாயிரமாய்
இறப்புக்கள்
மயானம் மருத்துவமனைகள்
கூட்டமான கூட்டம்
ஒலமிடும் அவலத்தில்
மானுடம்
நேசித்த அன்பின்
எச்சம் இப்போது
வெள்ளை சாக்குப்
பொட்டலத்தில்
பெற்றுக்கொள்கிறது
விடை..
மருத்துவத்துறை
விழிக்கிறது
விழுகள் பிதுங்கி.
உலகம் இந்தியாவை
ஓரங்கட்டியாயிற்று
சர்வதேச விமானங்கள்
வரவே மறுக்கின்றன
உயிர் வளி இல்லை
மூச்சு முட்டுகிறது
ரெம்டெசிவிர் மருந்து
இல்லை
படுக்கை இல்லை
மகள் பேசுகிறாள்
நெல்லைவாழ் தந்தையோடு
டில்லித் தலை நகரில்
மருமகனுக்கு நான்கு
நாளாய் க்காய்ச்சல்
மருத்துவமனை வாயிலில்
தவங்கிடக்கிறோம்
ஒரு படுக்கைக்காக
உலக அளவில் பாரதமே
உச்சம்
பெருந்தொற்று ப்பீதியின்
கிடுக்கிப் பிடியில்
தேர்தலுக்கு ஏனோ
இப்படி அவசரம்
வந்தன மாநிலத்தேர்தல்கள்
யாரும் அழவில்லைத் தேர்தல்
அவசரமாய்த் தேவையென்று
தினம் தினம் மனித
மரணங்கள்
காணும் காட்சி
வங்கத்தில் எட்டுத்
தவணையாய்
மாநிலத்தேர்தல்
தேர்தல் கமிஷனில்
மனிதர்கள் அருகினர் போலும்
விழி மூடா தேவர்களோ
அவர்கள்
கும்பமேளா வந்தது
அரித்துவாரில்
லட்சம் லட்சமாய்
கோவணாண்டிகள்
கங்கைப்புனிதத்தில்
விழுந்தும் எழுந்தும்
விவசாயிகள் தொடர்
போராட்டம்.
டில்லியைச்சுற்றி
மாதங்கள் பல கண்டும்
மனம்தான் இல்லை
யாருக்கும்
அச்சம் கக்கிய
டிராக்டர்கள் பேரணி
குடியரசு நந்நாளில்
ஏங்குகிறது ஏழைமனம்
மனித உயிர்களை
மதிக்கும்
ஆட்சியாளர்களுக்குத்தான்
எங்கேபோவது
-----------------------------------------------------------
No comments:
Post a Comment