அடக்கி வாசிக்கலாம்
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா
இல்லைவே இல்லை
ஆயினும் யான் கற்றுத்தெரிந்த
அறங்கள் சிலவுண்டு
முற்றும் தோற்றுத்தான்
போயின அவை இக்கணம்
கொரோனா காலம் என்னை
திருப்பி போட்டு
உலர்த்திப்பார்க்கிறது
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
பொய்யாகிப்போனதே
பிறர்தர வருவன
நிறையவே
ஆகத் திணறிப்போகிறதே
மக்களினம்
விருந்தோம்பல்
அதனை
உச்சிமேல் வைத்துப்
பேசியது திருக்குறள்
எதுவுமே சாத்தியமில்லை
கொரோனா சுருக்கிப்போட்டிருக்கிறது
மனித உறவுகளை
சுற்றமும் நட்பும்
வேளிறிபோயின.
அன்பே சிவமென்றார்
பேரிடர் வருங்காலை
அறத்தை நிலை நாட்ட
நானே வருவேன் நிச்சயமாய்
சொன்ன கீதையின்
ஆசானை
எங்கே போய்த்தேடுவாய்
நீ
கொரோனா காலம் பொல்லாதது
மனையாளை த்தனியறையில்
தள்ளி க்கதவு அடைத்த
வைத்த சோகம்
இன்பத்திலும் துன்பத்திலும்
சரிபாதி தெய்வங்கள்
முன்பாய்ச்
செய்த சத்தியம்
ஏளனமாய்ப்பார்க்கிறது.
என்னை
திருநீறும் குங்குமம் கொடுக்க ஆளில்லை
வாங்குபவரும் இல்லை
தில்லைக் கூத்தன்
சந்நிதியில்
கோவிலுக்குள் அச்சம்
மென்னிபிடித்தது
போய்தான் வந்தேன்
சுவரிடமாவது சொல்லி
அழவேண்டுமே
தெய்வமிருப்பதை
இல்லாததை
தெளிந்துகொண்டு
விடுவோமா நாம்
அத்தனை எளிதா அது
யார்க்கும் பிடிபடா
பெருவிஷயம் பலவுண்டு.
எல்லாவற்றிர்க்கும்
நம் கையிருப்பு
அறிவாலே விடைகாண
பேரவாதான்
ஆட்டுக்குமே வால்
உண்டு அளவுமுண்டு.
-----------------------------------------------------
No comments:
Post a Comment