இணைய கால கவியரங்கம் 92
18/1/24
அசடு
முட்டிவலி யோடிருக்கும்
மனையாளை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு
அழைத்துப் போனேன்
மணிரெண்டு சாப்பாட்டு நேரம்
நல்ல கூட்டம்
கேண்டீனைத்தேடி உட்கார்ந்தேன்
இருநூறு ரூபாய் காஷியரிடம் கொடுத்தேன்
இரண்டு சாப்பாடு போக பாக்கி பன்னிரெண்டு ரூபாய் தந்து ஒரு ரூபாய் இல்லை சாரி என்றான்
ஆக சாப்பாடொன்று ரூபாய் தொண்ணூற்று மூணரை
என்ன சித்திரா புத்தன் கணக்கோ
மதிய சாப்பாட்டை
சில்வர்
தட்டொன்றில் வைத்து
குழம்பு ரசம்
முட்டைக்கோசிலேயே பொறியலும் கூட்டுமெனக்
கொடுத்தான்
தண்ணீர் ஜக் மட்டும் இருந்தது டம்ப்ளர்கள் இல்லை
அப்படியே தூக்கிக் குடியுங்கள் என்றான்.
ஜக்கையோ தூக்கமுடியவில்லை பளு.
மோரோ தயிரோ இல்லையே என்றேன்
குழம்பே மோர்க்குழம்பு
அப்புறம் எதுக்கு தனியா
தயிரு மோரு என்கிறான்
சாப்பாடு முடித்து
ரெஸ்ட் ரூம் எங்கே தேடினேன்
'அதுக்கு
ஆஸ்பத்திரிக்குள்ளே தான்
போவணும்' அவன் சொன்ன பதில்.
அசடு நானே தான்.
No comments:
Post a Comment