இணைய கால கவியரங்கம் 94
20/1/24
சிறகு
பதிவுத்தபாலில்
இலக்கிய இதழொன்று
என் முகவரி எழுதி
சரியாகவே வந்தது
இளக்கிய இதழென
பெயரிட்டிருக்கிறார் மனம் இளகி.
ஆசிரியர் சிறகு இரவிச்சந்திரன்
(மட்டும்) என்பது அடைப்புக்குள்.
துணை இணை உதவி
பகுதி பத்திஆசிரியர்
எல்லாமும் அவரேதான்.
வாரமா மாதமா காலாண்டிதழா எனக்கேட்டால்
அவ்வப்போது வரும் என்கிறார்
இதழுக்கு சந்தா கிடையாது
தன்னார்வ நன்கொடையாம்
நல்ல கண்டுபிடிப்பு
சிற்றிதழ் மட்டுமில்லை
அதற்கு இலவச இணைப்பாய் பெருங்கதை
நூலும் உண்டு
பார்த்த இதழில் சுரேஷ்
ராஜகோபாலின்
ஒருவரி உண்மைகள்
சிக்கெனப்பிடித்தது
சாவியை யாரோ தொலைக்க அடிவிழுவதோ
அப்பாவிப் பூட்டுக்கு.
No comments:
Post a Comment