Sunday, December 10, 2023

கவிதை சென்னை 2023

 

இணையக் காலகவியரங்கம் 46

சென்னை 2023

4/12/23

என்னவெல்லாமோ செய்தார்கள்
அடையாற்றை ஆழப்படுத்தினார்கள்
கட் அண்ட் கவர் கால்வாய்
அமைத்தார்கள்
ஆற்றின் கரையை
உயர்த்தினார்கள்
புதுப்புது ஷட்டர் அமைத்தார்கள்
சிமெண்ட் சாலை போட்டார்கள்
வண்ணமடித்தார்கள்
இரும்புக் கம்பி வேலி போட்டார்கள்
விளம்பரப்பலகை வைத்தார்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
புயல் வருகை
போயிற்று
எல்லாம் .
தெருவில் இடுப்புவரைத் தண்ணீர்
வீடுதரைத் தளமெல்லாம்
சாக்கடைத் தண்ணீர்
மின்சாரம் இல்லை
குடிதண்ணீர் இல்லை
போக்குவரத்து
வசதியில்லை மக்கள் தத்தளிக்கிறார்கள்
வீடு கட்டாதே இங்கு
சிஎம்டிஏ சொன்னதுண்டா
இங்கு வீடு வாங்காதே
எந்த வங்கியும் சொன்னதில்லை
யார் சந்தி சிரித்தால்
இவர்களுக்கென்ன?
கொண்ட ஆசைக்கும்
வாங்கும் சம்பளத்திற்கும்
இடையே போராடித்தவிக்கும்
சிறு துரும்பாய் எளிய மனிதனின் வாழ்க்கை
எப்போதும்.

No comments:

Post a Comment