இணையக்கால கவியரங்கம்
எண் 56. 14/12/23
எஸ்ஸார்சி
லேசு பட்டதில்லை மனசு
கோபம்தான் மனிதப்பிரச்சனைக்கு
மூலகாரணம்
கோபம் வாராமல்
தடுக்க முடிகிறதா
என்றால் அதுதான் இல்லை
தான் நினைப்பதுவும்
செய்வதுவும் மட்டுமே சரி
அதுபோல் அடுத்தவனுக்கும்
நினைக்க உரிமை உண்டெனபதை
ஏற்க மறுக்கிறது பாழும் மனம்
மனம் விசாலமாகத்தான்
கற்றதும் பெற்றதும்
கை கொடுக்க வேண்டும்
மாறாக தான் என்கிற
கர்வம் மட்டுமே
கெட்டிப்பட்டால். துன்பமே
எஞ்சகிறது
துன்பம் சுற்றி வளைக்கின்ற போது
தானும் இதற்குக் காரணம்
என்பதை
மனம் லேசில்
ஏற்பதில்லை.
No comments:
Post a Comment