எது கவிதை? 5/12/23
கலைகளில் கவிதை தனித்தது
கஷ்டம் வரும்போதுதான்
கவிதை வரும்
கிரவுஞ்சப்பறவையின்
ஆண் துணை அம்பு எய்தப்பட்டு
அழிந்ததைக்கண்டுதான்
மலர்ந்தது வான்மீகி ராமாயணம்
பூவுலகில் அதை மீறிய காவியம்
இன்றளவும் இல்லைதான்
காவியங்களில் துன்பவியல் பாராட்டப்படுவது
மனிதச்சோகம்தான் கவிதையின் ஊற்றுக்கண்
மெய்யாய் கவிதை எழுதுபவர்கள்
குஷிப்படுத்தவோ கும்மாளமடிக்கவோ எழுதவில்லை
கண்ணீர்ப்பூக்கள் கவிதை வரிகள்
படைப்பாளி அறியாததுவா என்ன?
குந்தியின் சோகம்தான்
வியாசனின் பாரதம்
கஷ்டத்தில் மலர்வதுதானே கவிதை.
No comments:
Post a Comment