Friday, December 22, 2023

கவிதை-ப்ராப்தம்

 இணையக் கால கவியரங்கம் 64


22/12/23



ப்ராப்தம்


அது ஒரு கனாக்காலம்

இளமை ஊஞ்சல் ஆடிற்று  அவன் என்னவெல்லாமோ

நினைத்துக் கொண்டிருந்தான்

என்ன என்னவோ ஆனது

சாண ஏற முழம்

சறுக்கிற்று

போட்ட கணக்குகளுக்கு

விடைகளோ தப்புத்தப்பாய்

யாரும் உதவிக்கு வரவில்லையே

எதிர்பார்ப்புகள் ஏமாற்றி

நகைத்தன

மனச்சோர்வு ஜீரணிக்கும்

ஞானமாவது கிட்டியிருக்கலாம்

சற்றேனும் ஆறுதலாயிருக்கும்.

எதற்கும்  ஒரு ப்ராப்தம்

வேண்டுமென்கிறார்கள்

விஷயம் தெரிந்தவர்கள்

 காலமோ எதனையும்

சட்டை செய்யாமல்

அதன் போக்கில் அது.


No comments:

Post a Comment