இணையக்கால கவியரங்கம்
4/11/23
வாசித்த கவிதை
செயற்கை அறிவு
எங்கெங்கும்
செயலாற்றத் தொடங்கிவிட்டதாம்
கற்ற அனைத்து ஊறும் அறிவு
மனிதர்க்குத் தெரிந்த குறள்
இயந்திரங்கள் செயற்கை
அறிவோடு
செயல்கள் பல ஆற்றக்
காத்துக்கொண்டிருக்கின்றன
கவிதை எழுதுமாம்
மொழிபெயர்ப்பு செய்யுமாம்
புனைகதை படைக்குமாம்
பிரச்சனை என்னால்
விடை கொடுக்குமாம்
கணிப்பொறியில்
ரோபோ ஒன்று பிணையக் கிடைக்குமாம் செயற்கை அறிவு
மக்களிடை புரட்சி செய்யத்தான்
கைகட்டி நிற்கிறது அது
சிந்திக்க ஒரு இயந்திரம்
வந்த பின்
மனிதன் உச்சமாய் செய்ய
எதுவுமில்லை
மனிதன் சிந்திப்பதை நிறுத்தினால்
செத்துப்போவானே.
No comments:
Post a Comment